கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தொலைந்து போகும் அடையாளங்களை தூக்கிநிறுத்துவதற்கு புலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும் மகிந்த வள்ளலானார் இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி…. செயலிறங்கத் துடிக்கும் புலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திட தூதுவராலயத்து தூதுவர்கள் அபிவிருத்திக் குச்சிகளோடு ஊரோடு உறவாட வருகிறார்கள் ஊர்சார் அமைப்புக்களே உசாராகுங்கள் குண்டுமணியளவேனும் எங்கள் சொந்தப்பலத்தில் நிகழட்டும் எங்கள் சொந்தநிலத்திற்கு சேரட்டும் புதிதாய் முளைக்கும் ஊர்ப்பற்றாளரிடம் விழிப்பாயிருங்கள் இயற்கைவளமே எங்கள் பலமென்று வாழ்ந்தவர் நாம் கடலும் வயலும் பனையும் தென்னையும் கனிதருமரங்களும் எங்கள் சொந்தம் எங்கள் நிலத்தில் மூச்சுவிட்டு இருக்கவிடு இராணுவ அரண…
-
- 1 reply
- 805 views
-
-
எனது ஆன்மா காணாமல் போய்விட்டது... நேற்றுவரை என்னுடன்... இருந்த ஆன்மா.. இன்று தூக்கத்தால் எழுந்து பார்த்தபோது காணாமல் போய்விட்டது... இரவில் உறங்கும்போது தொலையக்கூடிய என் ஆன்மா பார்ப்பதற்கு பின்வருமாறு இருக்கும்... அன்பானது... அறிவானது... அமைதியானது... இனிமையானது... இரக்கம் மிக்கது... குழந்தை போன்றது.. குழப்பம் விளைவிக்காதது... விளக்கங்கள் கேட்காதது... ஆன்மா கடைசியாக உடுத்தியிருந்த உடை பேரன்பில் நெய்த நிறமற்ற ஆடை... அன்பனின் ஆன்மாவை ஒன்லைனில் கண்டவர்கள் ஒப்படைக்கவேண்டிய முகவரி... கலைஞன், ஆண்டவன் சந்நிதி.... தேடிக் கண்டுபிடித்து தருபவரிற்கு குடியிருக்க இதயம் ஒன்று பரிசாகத் தரப்படும்... ஓடிவிட…
-
- 13 replies
- 3.3k views
-
-
-
- 1 reply
- 814 views
-
-
களனி கங்கையின் இசை நிலவிலே பெளத்த நாட்டிளம் பெண்களுடனே சுந்தர சிங்களத்தில் பாட்டிசைத்து ரயில்,பஸ் ஒட்டி விளையாடிடுவோம் யாழ்ப்பாணத்து செம்மண் புறத்து பனம்பண்டம் புளத்சிங்கள வெத்திலைக்கு மாறு பண்டம் முஸ்லிம் மக்களின் கவிதை கொண்டு அரபிய தொப்பிகளை பரிசளிப்போம் புலத்து தமிழருக்கோர் பாலம் அமைப்போம் இணையத்தை பலப்படுத்தி உறவு சமைப்போம் மகாவலியில் ஒடிவரும் நிரின்மிகையால் எல்லா மாவட்டங்களிலும் பயிர் செய்திடுவோம் மலையகத்தில் தேயிலை பயிரிடுவோம் வெளிநாட்டுக்கு ஏற்றியிடுவோம் மட்டுநகரில் கருவாடு காயவைப்போம் தொப்புள் கொடி உறவுகளுக்கு பார்சல் பண்ணிடுவோம் ஆயுதம் செய்வோம் நல்ல குடியேற்றம் செய்வோம் விகாரைகள் வைப்போம் அகதி முகாம் வைப்போம் ச…
-
- 15 replies
- 2.3k views
-
-
நான் கேட்காமல் கிடைத்த ஆலயம் என் தாய் நான் கேட்டதும் கிடைத்த தெய்வம் என் தாரம் * இறைவனிடம் வரம் கேட்டேன் அவன் தன்னை கேட்டதாய் நினைத்து தானே என் மனைவியானான் * எல்லோரும் ஆறுதல் தேடி ஆலயம் போவார்கள் நான் உன்னைத் தேடி வருவேன் * என் கவிதைக்குள் யாரும் இல்லை கிறுக்கல் ஆனது என் காதலுக்குள் நீ இருக்கிறாய் கவிதையானது என் வாழ்க்கை -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 770 views
-
-
அடிமைச் சங்கிலி அறுப்போம்...! -கவிஞர் தணிகைச்செல்வன் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், காவியக் கவிஞர் வாலி தலைமையில் "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தை கவிஞர் மு.மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் பழனிபாரதி, பா.விஜய், தணிகைச் செல்வன், இளம்பிறை, உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் உள்ளிட்டோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர். ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு கோணத்தில் வாசித்த நிலையில், ஈழத்தைப் பற்றி அதிகம் பேசிய தணிகைச்செல்வனின் கவிதை வரிகள், திரண்டிருந்த மக்களிடம் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது கவிதையிலிருந்து... முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிம…
-
- 1 reply
- 1.5k views
-
-
எப்போதும் நான் ஜன்னல் ஒன்றை தூக்கிக்கொண்டு பயணிக்கின்றேன் அவ்வப்போது கம்பிகளினூடாக காலைக் கருக்கலையும் பொழுதுபடுதலையும் பார்ப்பேன் போறவாற ஆக்களையும் பார்ப்பேன் கம்பிகளினூடாக பர்க்கும் பேதே என்னால் எதையும் எவரையும் புரிந்துகொள்ள முடிகின்றது போற போற இடங்களில் தற்காலிக வீடுகளிலெல்லாம் இருக்கும் ஜன்னலோடு என்ர ஜன்னலையும் பிணைத்துவிடுவேன் வேற ஆட்கள் செய்த ஜன்னலால் பார்த்த மாதிரி இருக்காது ஊரில் தொலைத்த வீடுகள் வளவுகள் உறவுகள் தென்னைமரங்கள் அவை எல்லாம் இல்லாத குறையின்றி ஜன்னல் என்னை பாதுகாக்கின்றது. என் ஜன்னலால் பார்க்கும் போது coniferous மரங்களும் பனைக் கூடல்களாக தெரியும் நான் ஒரு நாடோடி ஆனால் …
-
- 8 replies
- 1.1k views
-
-
ஓல்(O/L) பரீட்சையில் ஓல்(all) எவ்(F) வந்ததும் தலை கிறுகிறுக்க அலைந்த போது.. இயக்கத்துக்கு ஓடிடுவானோ.. பயந்தாள் அம்மா. ஊருக்க வைச்சிருந்தா உவங்கள் வந்து இழுத்துக் கொண்டு போயிடுவாங்கள் உங்கால உள்ள காணியை வைச்சிட்டு அனுப்பிவிடு இவனை கொழும்புக்கு.. புத்தி சொன்னார் அப்பா. கொழும்பில போய் பொடி கெட்டிடும் உந்த ஊரெல்லாம் போகுது கனடா அனுப்பிவிடு அங்க.. பத்தாக்குறைக்கு பத்த வைத்தார் மாமா..! நானும் சோதனையில் பெயிலான (fail ஆன) சோகம் தீர புறப்பட்டேன் தாண்டிக்குளம் தாண்டி ரொராண்டோ. வருசம் ஒரு 5 போய் இருக்கும் நாலு காசு நாய்படா பாடுபட்டு வெள்ளைத் தோலிடம் ஏச்சும் இழிவும் வாங்கி உழைச்சது தான்..! அம்மா கேட்டாள் பொம்…
-
- 32 replies
- 3.6k views
-
-
ஈழத் தமிழன் இன்று மறத்தமிழர் வீழ்ந்து போயினர் ஆயினும் தமிழரின் வீர சரித்திரமாயினர் வீரன் வீழ்ந்தாலும் வாழ்வான் பல தமிழர் அகதி ஆயினர் வரலாறில் யூதரும் அகதி தான் அகதி என்பது அகதியின் இழுக்கல்ல யார் அகதி ஆக்கினர் என உரத்து சொன்னால் பல தமிழர் மாண்டு போயினர் யாரேனும் காப்பார் என இறுதி வரை காத்திருந்து சிலர் எதிரியிடம் அகப்பட்டு மறைந்து போயினர் எல்லோருமே ஒருவகையில் சீரழிந்தனர் மேலும் பலர் வேறு வழியின்றி அடக்குமுறைக்குள் வாழப் பழகினர் மனித உரிமை பேசியோர் எல்லாம் தூர ஓடினர் சீனா காரன் பலம் கண்டு சிலர் எல்லாம் மறந்து சேர்ந்து வாழ்வோம் அடுத்த முறை அரசு அடிக்கும் வரை என்றனர் வெகு காலம அடிவாங்கி பழகிய இனம் சோழன்…
-
- 0 replies
- 614 views
-
-
http://www.youtube.com/watch?v=29KnF92oRog&feature=player_embedded பார்த்ததில் விரும்பி ரசித்தது.உங்களுக்காக இங்கே இணைகிறேன். நன்றி : முகநூல்
-
- 6 replies
- 1k views
-
-
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! குறள் நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள் …
-
- 5 replies
- 1.8k views
-
-
கரும்புலிகள்..... கரும்புலிகள் நினைவுக் கவிதை.... கவிதை - இளங்கவி தமிழீழக் கடலின் ஒவ்வோர் நீர்த்துளியும் தன்னில் எரிந்த கரும்புலியின் கதை சொல்லக் காத்திருக்கு........ எதிரியிடம் சிக்கி மானம் இழந்ததனால் அது விடும் கண்ணீர்த்துளிகள் சேர்ந்து ஆழிப்பேரலையாகக் காத்திருக்கு...... நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து அதிலே எதிரியைப் பலிகொடுத்து எங்கள் கடலை எதிரி தொடாமல் எங்களுக்காய் வைத்திருந்த இரும்பு மனிதர்கள் எங்கள் கரும்புலிகள்........ பிரயாணம் தொடங்கிவிட்டால் அவனுக்கு புரிவதெல்லாம் ஈழ விடுதலை...... தெரிவதெல்லாம் எதிரியின் இலக்கு....... அவன் இலட்சியம் தான் எரிந்து எதிரியை எரிப்பது..... தன் வாழ்வுக்காய்…
-
- 12 replies
- 8.6k views
-
-
கல்லையும் கடவுளென்பர் - தாவும் குரங்கையும் கும்பிடுவார் மாட்டையும் மாதாவென்பர் - அதன் மலத்தையும் மதித்திடுவர் பாவிகளையும் பகவானென்பர் -பகைப் பாம்புக்கும் பால்விடுவர் சனியையும் சாமியென்பர் - சுடும் சூரியனையும் சிறப்பிப்பர் தர்மத்தைத் தொலைத்திடுவர் - தவிக்கும் தமிழரைத் தவிர்த்திடுவர் http://gkanthan.wordpress.com/index/pakthar/
-
- 1 reply
- 927 views
-
-
கொடூர முகங்கள் கவிதை - இளங்கவி புலியாய் பாய்ந்தவள் பிணமாகிய பின்னும் அவளின் அம்மணத்தை ரசிக்கும் கொடூர முகங்கள்..... தமிழ் மானம் காக்க தன்னுயிர் தர நினைத்தவள் என்றோ நினைத்திருப்பாள் தன் உயிர்தான் முதலில் போகுமென்று.... உயிர் போனபின்னும் பிணம் தின்னிக் கழுகுகள் சுற்றி நின்று தன் பிணத்திலும் பெண்மையை ரசிக்கும் கூட்டத்தின் நடுவே தன் குருதி ஈழமண்ணை நனைக்க கருகிய பூக்களாய் கிடப்பாளென்று கனவிலும் நினைத்திருக்காள்......! மாவீரர் கல்லறையில் மரியாதையாய் துயில்கொள்ள நினைத்தவளுக்கு மானமில்லா கொடூர முகங்களின் கையடக்க தொலைபேசியில் புகைப்படமாய் கிடப்பாளென்று நினைத்திருக்கவே மாட்டாள் தான்....... பூப்படைந்த நாள…
-
- 14 replies
- 2.2k views
-
-
1987 யூலை 5 …. --------------------------------- இது வெறும் நினைத்து மறந்திடும் நினைவுநாளல்ல எம் தேசம் மீட்டிடத் தீயென வாழ்ந்தவர் தீரத்தைப் பாடிடும் வீர நாளன்றோ! விடுதலைப் பாதையின் தடைகளை வீழ்த்திட வெடிகளாய் மாறிய வேதங்களன்றோ! இவர் பாதம் பதிந்த நிலங்களின் மீதிலே பூக்களைத் தூவிடும் காலத்தைப் படைப்போம்! மக்கள் வாழ்வினை நெஞ்சிலே சுமந்தவர் தம்முயிர் வீசிடும் வேளையிற் கூடத் தாயக விடுதலை கீதம் பாடிடும் பெரும் ஞானிகளானோர்! ஞாலம் மீதிலே வாழ்கின்ற வரையிலே இவர் நாமத்தை எங்கள் நெஞ்சிலே சுமப்போம்! - நொச்சி -
-
- 2 replies
- 908 views
-
-
அகோர கோரம் மரணத்தின் ஓலங்களினாலானதாயிருக்கிறது அங்கு படர்ந்திருக்கும் கனத்த இருள் குருதியின் கருஞ்சிவப்பாயிருக்கிறது அந்த இருளின் நிறம் ரத்த மயமான அந்நிலம் சூழ் ஆழியிலிருந்து அலைகளுக்கு பதிலாய் பிரேதங்களெழும்பிக் கொந்தளித்து கொடும்மரணத் தடம் பதிக்கின்றன காலூன்ற இடமின்றி நிலமெங்கும் உறைந்த ரத்தப் புள்ளிகளிட்டு தெறித்துச் சிதைந்த மனித நரம்புகளால் அகோர கோலம் இட்டிருக்கும் துப்பாக்கியேந்திய கொடுங்கரங்கள் உணர்வின் வேள்வி குண்டத்திலிருந்து ரணங்களின் பெரும் ஓலம் எதிரொலிக்க அக்கினியில் ஆகுதியாயின மரித்த சடலங்கள் யுத்தச் சரித்திரங்களின் சிதிலக் குவியல்களிலிருந்து மரணத்தின் மஹாகுரூர முகம் தனது ஆட்காட்டி விரலால் உதட்டை …
-
- 1 reply
- 1.1k views
-
-
அறிவுமதி அண்ணனின் க(அ)ண்ணன் பாட்டு ------------------------------------------------------------------------------------------------ என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான்! வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் கண்ணன் வருவான்! நேர்க்கோடு வட்டம் ஆகலாம் நிழல்கூட விட்டுப் போகலாம்! தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான்! அவன் வருவான் …
-
- 2 replies
- 1.5k views
-
-
“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய கருணாநிதி ஸ்ரீமச்சாசனம் ஊர்வச சிரோபபிஷசேகரி…” இச்செப்பேடு செப்புவது யாதெனில், “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!” என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு விடாது கடிதமெழுதியதோடு, அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட மணித்துளியில் அன்ன ஆகாரம் உண்ண மறுத்து, ஈழத்தமிழர் செத்த பின்பு போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன் கருணாநிதிச் சோழனின் மற்ற கைங்கர்யங்களாவன: சோழநாடு சோறுடைத்ததைப் பின்னுக்குத் தள்ளி ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்! பகை முடித்தார்! வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு, மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி, மகப்பேறு உதவித்தொகை… …
-
- 2 replies
- 1.4k views
-
-
அகதித் துயர்வெளி 01. மழைநாளில் இடம்பெயரும் தெருவொன்றில் வெட்டப்பட்ட குழியைப்போலிருக்கும் கூடாரங்களுக்குள் பாலஸ்தீனக் குழந்தைகள் வந்து ஏன் ஒளிந்திருக்கின்றனர்? அகதிகளாக சனங்கள் வெற்றிக்கொள்ளப்பட்ட நாளில் உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன சிறுவர்கள் துப்பாக்கிகள் பிடிக்கும் நாளில் தாய்மார்கள் பொதிகளை சுமந்தலையும் காடுகளின் வெளியில் எல்லோருமே ஏதோ ஒரு நடவடிக்கையில் துரத்தப்பட்டனர் வீடு அழித்துத் துடைக்கப்பட்டதையும் நகரம் சிதைத்து உரு மாற்றப்பட்டதையும் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதையும் இந்த அகதிச் சனங்கள் தாங்க முற்படுவர் அகதிகளின் காலங்கள் அலைச்சலால் நிரம்பியிருக்கின்றன மீண்டும் மீண்டும் பொருட்களைக் தூக்கிக்கொண்டு …
-
- 2 replies
- 675 views
-
-
இன்று மீண்டும் அகதி முகாமில் கருணாகரன் அலைக்கழிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட அந்தக் காலை நேரத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டோம் இலக்கங்களாக எதுவும் தெரியாது அடுத்துவரும் கணங்கள் எப்படியென நீண்டவரிசை வழங்கப்பட்ட இலக்கங்கள் அவரவரக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அவரவர் அவரவர்க்கருகில் நகராப் பொழுதுகளோடு பிணைக்கப்பட்ட படுக்கை படுக்கையைச் சுற்றி முள்வலைகள் முப்பத்தி ஆறாவது தடவையும் இன்னொரு ஒப்பனை புதிய இடத்தில் பழைய அகதி அகதிகளின் நிழலைக் கண்காணிக்கும் முள்ளரண்கள் பழைய அகதிக்கு புதிய இலக்கங்கள் பழைய இலக்கங்களுக்கும் புதிய இலக்கங்களுக்குமிடையில் முடிவுறாத குழப்பங்களுடன் தூங்கும் கண்களில் துடித்துக்கொண்டிருக்கு…
-
- 0 replies
- 710 views
-
-
நந்தவன நாட்கள் தந்தையுடன் வாழ்ந்த அந்த நந்தவன நாட்களின் சிந்தையுடன் என் பாசமுள்ள தந்தைக்கும் அனைத்து தந்தையர்க்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் அன்னையெனும் ஆலயத்தின் அழகான கோபுரமாய் தன்னையே உருக்கி எமைத் தரணியிலே உருவாக்கி கண்ணிலே கனவு பொங்க காலமெல்லாம் எமைச் சுமந்து பண்புடன் பாசமதும் பரிவுடன் எமக்கூட்டி அன்புடன் அறிவூட்டி ஆசையாய்க் கதைபேசி உறுதியாய் நாம் நிற்க உறுதுணையாய்க் கல்வி அறிவுடன் அமுதூட்டி அறநெறிதனைக் காட்டி பிறர் நலம் பேணுவதைப் பெருமையாய் எடுத்தோதி வறுமையிலும் எம்மை வளமையாய்த் தினம் பேணி குடும்பமே கோவிலெனும் கொள்கையுடன் போராடி அடுத்தவர் நலம் பேணி அயலவர் துயர் போக்கி அறிவூட்டும் ஆசானாய் அகிலத்தில் தொழிலாற்றி மௌனமே வேதமதாய் மனது…
-
- 7 replies
- 1.5k views
-
-
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு... ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை எல்லாம் தலைகீழா நடக்குதோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... புலம்பெயர் தேசத்தில எல்லாமே புதிரா இருக்குது புரிஞ்சு கொள்ள புத்தி மட்டாக்கிடக்குது புதுசு புதுசா கனக்க முளைக்குது எது விதை?எது களை எண்டு எவருக்கேனும் தெரியுமோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... தமிழர் பேரவை என்றோம் உலகமெல்லாம் தமிழர் ஒருகுடை என்றோம் ஓங்கி குரல் கொடுப்ப…
-
- 7 replies
- 2.3k views
-
-
எம் தேசம் மீட்டெடுத்தே... ------------------------- உலகின் கண் திறக்க உயிரை விதையாக்கி பெரும் சபதம் எடுத்தவரே மரணம் வருகையிலும் தமிழர் வாழ்கவென உரைத்தவரே உம் பாதம் தொழக்கூட அருகதையற்றோனாய் அன்னியத் தெருக்களில் அலையும் நிலையினிலும் உங்களை மறவோமே! தலைவன் வாழுமிடம் தமது இருப்பிடமாம் என்று அணியம் செய்தவரே பெரும் மனிதப் புதிர்கள் ஐயா மானம் மண் மீட்பில் என வாழ்ந்த தமிழ் மானிடரே உங்கள் பாதம் தொழுகின்றோம்! எமக்கும் சேர்த்தே நீவிர் ஒரு தேசம் படைக்கவென உயிர் தானம் செய்தீரே உமைச் சுமக்க முடியவில்லை! உம் நினைவைச் சுமந்தபடி எம் தேசம் மீட்பதென உறுதி எடுக்கின்றோம்! வலியின் துயர் சுமந்து உம் நினைவின் கருச்சுமந்து எம் தேசம் மீட்ட…
-
- 4 replies
- 978 views
-
-
அன்பு பெருக்கும் கனிவு வேண்டும், துன்பம் உதிர்க்கும் உறவு வேண்டும், ஊக்கம் கொடுக்கும் உளம் வேண்டும், ஏக்கம் தணிக்கும் பரிவு வேண்டும், வீழ்வு தடுக்கும் உறுதி வேண்டும், தாழ்வு போக்கும் விரிவு வேண்டும், சஞ்சலம் நீக்கும் தெளிவு வேண்டும், அஞ்சாமன மாக்கும் பக்தி வேண்டும், வேற்றுமை விலக்கும் வலிவு வேண்டும், ஒற்றுமை படைக்கும் புத்தி வேண்டும், வாழ்வு பெருக்கும் சக்தி வேண்டும், ஈழம் அமைக்கும் பலம் வேண்டும்! தமிழ் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்!! - சயனி
-
- 25 replies
- 2.5k views
-
-
உயிரை வருத்தி நீங்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடக் கூடாதேயென நித்தம் நித்தம் ஏங்கியேங்கி நாங்கள் இப்போது மூச்சுத்திணறி நிற்கின்றோம்! தாயகம் சுமந்துவரும் உங்கள் நினைவுகள் எம் ஒவ்வொருவர் மூச்சுக்காற்றிலும் கலந்து மண்ணை மீட்பதில் நாம் கண்ணாயிருக்க ஆன்ம பலத்தை எங்களுக்கு தரட்டும்! http://karumpu.com/wp-content/uploads/2010/song.mp3 தகவல்: நிதர்சன் | வன்னித்தென்றல்
-
- 1 reply
- 1.1k views
-