கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உன்னை கண்டேன் ஓவியனானேன் உன்னிடம் கண்டேன் ஒளி(ழி)ந்தவன் ஆனேன் உன் கண்ணை கண்டேன் கவிஞனானேன் உன்னை கண்ணால் கண்டேன் காதலானேன் உன் உரைகள் கவனித்தேன் பேச்சாளன் ஆனேன் உன் உடைகள் கலைந்தேன் சிற்பி ஆனேன் உன் மனதை கண்டேன் மகிழ்வானேன் உன் மார்பு கண்டேன் மழலையானேன் உன் கழுத்தை கண்டேன் முத்து குளித்தேன் ( முத்து குளித்தேன் . சங்குதான் கிடைத்தது ) உன் கவின் மேனி கண்டேன் காம ராஜன் ஆனேன். உன்னதை வில(ள)க்கி வித்தகனானேன் விலகி விடாதே காவியமே . வில்லனாகி விடுவேன்
-
- 4 replies
- 1.1k views
-
-
இழப்புக்கள் பிறந்தது அவைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றது காலத்தால் தேற்றமுடியாத காயங்களில் குருதி வழிந்துகொண்டே இருக்கின்றது அன்றும் அசுரர்களை அழிக்க கடவுள்தான் வேண்டும் இன்றும் எம்மை அழிப்பவனை யாரோ ஒருவன் அழிக்கவேண்டும் அப்படி நடந்தால் கொண்டாடுவோம் எமது பெருவிருப்பங்களுக்காக சிலுவை சுமந்தவர்கள் கல்வாரிக்குள் இருந்து எழவே இல்லை இலக்கை அடையமுடியாதவர்களின் மோட்சத்தை நாமே பிரகடனப்படுத்திவிட்டு இலக்கை நோக்கி போரை மீண்டும் தொடர்கின்றோம் போரின் முடிவு இம்முறை நிறைவாக இருக்கவேண்டும் சூரனின் வயிற்றுக்குள் சேவலை மட்டுமே விடுவது வழக்கம் இம்முறை மயில்க்குஞ்சையும் சேர்த்து விடவேண்டும் கடசியாக முருகன் வேலெறிந்து சூரன் பாட்ட…
-
- 20 replies
- 2.3k views
-
-
என் தாயே மனையாண்ட என் மணிமகுடத்தாயே உனை வாழ்த்த எனக்கு அருள் தாரே கருவில் எனைத் தாங்கி கண்மணி போல் காத்தவளே உருவில் உனைப் போல் வந்த என்னை- உன் குருதி கொடுத்து வளர்த்தவளே- நான் ஒரு நூறு பிழை செய்தாலும் உன் உயிர் போல் எனைக் காத்தவளே கள்ளிப் பாலூற்றிக் கருவழிக்கும் மா நிலத்தில் பிள்ளைப் பாலூட்ட மறுதலிக்கும் மானிடத்தில் துள்ளி வரும் குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டித் தாலாட்டி வெள்ளிப் பால் நிலவை அள்ளித் தருவேன் என்று அமுதூட்டி பெண்குழந்தையென்றாலும் பொன்குழந்தை எனப் பாராட்டி கண்ணின் இமை போல் காலமும் நீராட்டி மண்ணின் பெருமையை மனத்தினில் இசையாக்கி பண்பின் சிகரமாய் எனைப் பாரினிலே வேராக்கி விண்ணில் நின்றும் இன்றும் எனைச் சீராக்கும் எ…
-
- 3 replies
- 686 views
-
-
போதுமடா சாமி! கட்டிய கோவில்களும் போதும் வெட்டிய புதைகுழிகளும் போதும் அமைத்த ஆலயங்களும் போதும் தொலைத்த உறவுகளும் போதும் எரித்த தீபங்களும் போதும் எரிந்த சடலங்களும் போதும் படித்த பஜனைகளும் போதும் வடித்த கண்ணீரும் போதும் எடுத்த காவடிகளும் போதும் கடித்த குப்பிகளும் போதும் இழுத்த சப்பரங்களும் போதும் இழந்த சரித்திரங்களும் போதும் படைத்த படையல்களும் போதும் கிடைத்த வெகுமதிகளும் போதும் சாமியால் பிழைத்த மனிதர்களும் போதும் மனிதரால் பிழைத்த சாமிகளும் போதும் போதாமல் இருப்பதின்று மனிதருக்காய் வாழும் மனிதர்கள் http://gkanthan.wordpress.com/index/saami/
-
- 5 replies
- 1.1k views
-
-
அண்டம் சதிராட பிண்டமாய் நான் பிண்டத்தில் குடியிருந்து பிண்டமும் பிண்டத்தைச் சுமக்க நீரினுள் குடியிருந்தேன் நான். முக்கிலும், வாயிலும் நிணமும் நீரும் சூழ்ந்துருக்க நாபியில் சுவாசித்துப் பிண்டமாய் நான், தவிக்கின்ற பிண்டமாய் நான் கையும் காலும் சுருட்டிக் கொள்ள அசைய முடியா சூழலில் அசைந்தாடும் பிண்டமாய் நான் ஓசையின்று அழும் பிண்டமாய் நான் தவிர்ப்பு ஏறி. இடம் போதாமல் கை,கால் அசைத்து உதைத்து எழும்பிப் பிண்டமாய் சுழன்று உதைத்து உதைத்து பிண்டம் வெளி வர பனிக்குடம் உடைத்து வெளிவர பிண்டத்தில் இருந்து உயிர்ப்பு நிலை எய்திப் பிண்டமாய் நான், எடுத்துக் கொஞ்சிய கைகளில் குழந்தையாய் நான். நான் வளர்ந்து,வாழ்ந்து நரை,திரை எய்தி மரணி…
-
- 2 replies
- 758 views
-
-
என்றென்றும் நன்றியுடன்..... முப்பாலுக்கு அப்பாலும் முதற்பாலாய் தாய்ப்பாலுடன் தமிழ்ப்பாலும் ஊட்டி நோய் ஏதும் அணுகாது நோன்பிருந்து சேயாய் எமை எல்லாம் செம்மையாய் வளர்த்தெடுத்த தாயே உனை வாழ்த்த தமிழில் வார்த்தையில்லை நீ தண்ணீர் ஊற்றி வளர்த்திருந்தால் நாம் தறுதலையாய் வளர்ந்திருப்போம் நீயோ கண்ணீர் ஊற்றி எம்மைக் கண்ணியமாய் வளர்த்ததனால் உன் கண்ணின் நீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராய் மாறியது கண்ணீரோடு விதை விதைப்போர் கம்பீரத்தோடு அறுத்திடுவார் என்று சொன்ன வேதமொழி என்றும் பொய்ப்பதில்லை எத்தனை இரவுகள் நீ உறக்கத்தைத் தொலைத்து விட்டு எம் இரவுகளைப் பகலாக்க உன் இரவுகளை இழந்திருந்தாய் எத்தனை தடவைகள் நீ உன் கனவுகளைத் தொலைத்து விட்டு எம் எதிர் க…
-
- 9 replies
- 2.1k views
-
-
எனக்கொரு அம்மா இருக்கிறாள். பத்து மாதம் சுமந்து பெற்று பால் ஊட்டி சீராட்டி தாலாட்டி பள்ளிவரை அனுப்பி வைத்தாள் கல்வியோடு ,கண்டிப்பும் பரிவும் பாசமும் ஊட்டியவள் . எது கேடாலும் பெற்று தருவாள் பள்ளிக்கு பணமா? சுற்றுலாவுக்கு அனுமதியா தோழிகளோடு ஊர் சுற்றலா? கடல் கடந்து நான் வெளி நாடு வந்த போதும் என்னுடன் ...வாழும் அம்மா பள்ளிக்கு செல்ல நேரமானால் காலைச்சாபாடு ..ஊட்டி விடும் அம்மா சகோதரிகள் இருவர் ..மணமுடித்து வெளிநாட்டில் கடைக்குட்டி நானும் பல்கலைக்கல்லூரியில் மணமுடித்து நான் மறுவீடு சென்றாலும் மறக்காமல் என்னுடனே வந்து விடு...... வெள்ளைக்காரர் நாட்டில் அன்னையர் தின விழாவாம் எனக்கு தினமும் என் அன்னை தின விழா தான்
-
- 6 replies
- 1.1k views
-
-
வரலாற்றுப்பழி ஏற்காதீர் இரா. செம்பியன் மகேந்திரன் எட்டப்பராசன் எழுதியது சற்றெண்ணிப் பாருங்கள் தமிழ்ச்சான் றோரே! சரிதானா கோவையிலே மாநா டின்று? வெற்றிடமா யாக்கிவிட்டே ஈழ நாட்டை வெற்றிவிழாக்கொண்டாடப் போகின் றீரா? வெற்றார வாரத்தில் மிதப்போ ரெல்லாம் விலைகொடுத்து வாங்குகின்றபொருளா நீங்கள்? மற்றவர்க்கு வழிகாட்டும் மாண்புள் ளோரே வரலாற்றுப் பழி ஏற்றுக் கொள்ளா தீர்கள்! குன்றனைய குறையுடலார் முள்வே லிக்குள் கொட்டிவைத்துக் கிடக்கின்றார் தமிழீ ழத்தில் சென்றங்கே கண்டவர்கள் இங்கு வந்து சிறப்பாக நடத்துவதாய்ச்செப்பு கின்றார்! என்னையடா கொடுமையிது! சொல்லக் கூசும் இழிநிலையில் நடத்துவதை மறைக்கு மிந்…
-
- 0 replies
- 921 views
-
-
வித்து காசு பாத்துறாதண்ணே எம்புட்டு நேரம் நிற்கிறது சீக்கிரமா படமெடுண்ணே அம்மாக்கு ஒத்தாசையா செங்கல் தூக்கனும் அழுக்குத் துணி மாத்தி கலைஞ்ச முடியை வாரி பூச்சுடி அழகா போஸ் கொடுக்க வருச பொறப்புக்கு வாண்ணே இந்த படத்தை எங்கயும் வித்து காசு பாத்துறாதண்ணே பள்ளிக்கூட போற வயசில்ல பக்கபலமா அம்மாக்கு இருக்கேன் குழந்தைத் தொழிலாளினு சொல்லி பொழப்பை கெடுத்துராதண்ணே உழைச்சாத்தான் பசிக்கிற வயிறும் சந்தோசப்படும் இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே! http://www.greatestdreams.com/2010/03/blog-post_04.html
-
- 5 replies
- 1.2k views
-
-
-
முள்ளிவாய்க்கால் முழங்கிய போது மெளனித்துக் கிடந்தாரே... முத்துக்குமார்கள் தீப் பிடித்து எரிந்த போதும் சும்மா கிடந்தாரே.. பூமிப்பந்தில் புனிதராம் மனித உரிமை காப்பவராம்.. வெள்ளாடு வேடம் போட்டு சமாதானம் பேசியே கழுத்தறுக்க அலையும் அந்தக் குள்ள நரிகள் அவர் தம் கொட்டம் அடக்க வெடித்தேன். வன்னி மக்களை சொந்த உறவுகளை விடுதலை.. எரிமலை என்று உசுப்பேத்தி.. போர்க்களம் ஏவிவிட்டு அவர் தம் கதை முடித்து தாம் அசைலம் அடித்து.. இன்று... எதிரி வானில் அவன் விமானத்தில் உல்லாசம் போக நினைத்த ஈனத்தமிழர்களின் ஈவிரக்கமற்ற செயல் கண்டு நெஞ்சு குமுறி வெடித்தேன்.. போட்ட ரிக்கட்டுகளுக்கு பொக்கட் காசு கூட கிடைக்கக் கூடாதென்றே. பூமி …
-
- 4 replies
- 1.1k views
-
-
கோப்பையில் குடியிருக்கும் என் வாழ்வு பற்றிய புரிதல் நிரப்பி முடிக்க இனி ஒன்றும் இல்லை எல்லா glass களிலும் நிரம்பித் தளும்புகின்றது மது முதலில் சின்ன எரிச்சலுடன் இறங்குகின்றாள் தேவதை ஆடை கழற்றி அணங்கு ஆடுவது போன்ற பிரமை உடலின் நரம்பெங்கும் உலவுகின்றது ஒவ்வொரு முடிச்சுகளிலும் சொர்க்கம் ஒவ்வொரு உறிஞ்சல்களிலும் அற்புதம் வெற்று glass களிலும் மிச்சமிருக்கின்றது ஒருவனின் வாழ்வு பற்றிய புரிதல் ************ கடந்த வருடம் என் glass களில் இன்னேரம் மரணம் நிரம்பியிருந்தது மரணச் செய்தியால் என் வாழ்வுக் கிண்ணம் நிறைந்திருந்த காலம் அது என் நண்பர்கள் என் மருமக்கள் என் உறவுகள் என்று கொத்தாய் அழிந்த காலம்…
-
- 7 replies
- 1.1k views
-
-
அன்னையர் தினம் அண்மித்துவரும் இந்நாட்களில் நான் அண்மையில் படித்துச் சுவைத்த அன்னையர் தினக்கவிதை ஒன்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எழுதியவர்: வி.ஜீவகுமாரன் அன்னையர்தினம் கொஞ்சம் ஓவரடா! உங்கள் அம்மா பாசங்கள் கொஞ்சம் ஓவரடா! உங்கள் அம்மா பாட்டுக்கள் அதனால்தான் சொல்லுகின்றேன் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் எதுவரை இந்தப் பாட்டுக்கள்...உனக்கொருத்தி வரும்வரைதானே... "அம்மா கொஞ்சம் பேசாமல் இருக்கிறியளே! அவள் சொல்லுறதையும் கேளுங்கோவன்" இங்குதான் அம்மா உறவு ஆட்டம் காணும்! அம்மணியின் அரசாட்சி கோலோச்சும்! ஜயா நீ அவுட்...! நீ எழுதிய கவிதைகளும் அவுட்!! மீறினால் தலையணை நனையும்! சாப்பாட்டில் உப…
-
- 5 replies
- 1.1k views
-
-
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை உன் மீது எனக்குப் பொறாமை உன் பதவி மீதும் எனக்கு ஆசை நீ வாழும் மாளிகை எனக்கு வேண்டும் என உரைத்தான் ஒரு மானிடன் காது கொடுத்துக் கேட்டேன் கதைத்தது தமிழன்தான்.... எனக்குச் சுதந்திரம் வேண்டும் நீ அழிந்தால்தான் எனக்குக் கிடைக்கும் என்னுடைய உரிமை வெல்லுவேன் உன்னுடைய உரிமையைப் பறித்து இங்கும் ஒரு குரல், இவன் உரைப்பதெல்லாம் தன்னைக் கொன்றுவிட்டு, ஏனெனில் எமக்கென்று நினைக்க மாட்டா அவனும் தமிழனே.... தமிழனுடன் சேர்ந்திடின் சோர்வு எனக்கு ஒன்று சேர நினைப்பதெல்லாம் சிங்கம் ஈன்ற பரம்பரையுடனே செத்திடினும் சோறு போடுவர் அவர்கள் இந்தக் குரலுக்குரித்தவன் வ…
-
- 0 replies
- 705 views
-
-
தமிழ் நிலவன் கைக்கூ கவிதைகள்: காதல், தமிழ் தேசியம், தமிழின உரிமை.... சூரியனா உன் விழிகள் அது சுட்ட வலி என் இதயத்தில் தெரிகிதே..... -------அவள் பார்வை... --------------- நீ என்ன பாண்டியனின் வாரிசா நீ இதயத்தில் அடித்த வலி என்முழுதும் ரணத்தின் தடங்களாய்.... -------காதலினால் மனவலி.... -------------- நீ பார்த்தாய் பரவசமானேன் நீ பேச வானில் பறந்தேன் இன்றோ பள்ளத்தில் நீ எனை நீங்கியதால்... ------காதல் தோலவி.... ---------------- ஓட்டியை தொலைத்துவிட்டு பல தலை(வர்)களின் உரிமைப்போரில் சிக்கித் தவிக்கும் ஓடம் -------தமிழ்த் தேசியம்... --------------- ஒரு வரி தமிழிலக்கியம் உரிமைப் ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
மேலும் ஒரு முயற்சி தமிழ் நிலவன் - கைக்கூ கவிதைகள் புத்தர் சிலைக்கு நடுக்கல் நடாதீர்கள் நாம் கீழே புதைந்து கிடக்கிறோம்.. -----முள்ளிவாய்க்கால் புதையுண்ட குழந்தைகள் ------------------------ மாவீரர் கல்லறைக்கென்று பெருமைப்பட்டோமே நாம் இன்று அங்கே ஆடுகள் உறங்க்குகிறதே...! ------கார்த்திகைப்பூ ----------------------- புதைந்த உடல்களுக்கருகில் எங்களால் உறங்கமுடியவில்லை எமை சிறைமீட்க வாருங்கள்....! ------துப்பாக்கிகள் தமிழ் நிலவன்....
-
- 0 replies
- 938 views
-
-
ஸ்ரீலஸ்ரீ (இரானிய) கிருஷ்ண பகவானுக்கும், திரு (தமிழ்) குளவிக்கும் இடையில் ஒரு உரையாடல். (நான் என்பாட்டில் பறந்து திரிந்த போது, எனக்கு முன்னாள் தமிழ் கடை காலண்டராக பார்சி கிருஷ்ணர் தோன்றினான்) "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது" 'அப்ப உண்ட 6 வயசு மகளை ஒம்பது காடையர் சேர்ந்து கற்பழித்தால் நல்லது எண்டு சொல்லுவியே?' "எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது" 'அப்ப உண்ட பேர்ல(ஸ்ரீ) சிங்களவன் நாற்பது இலட்சம் திராவிடரை அழிப்பது நல்லா நடக்கிறது என்று சொல்லுறியே?' "எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்" 'கெட்டது இருந்தால் தானே நல்லதும் இருக்கும்? எப்படி நல்லது மட்டும் எப்பவும் நடக்கும் எண்டு சொல்லுவாய்?' "உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழ…
-
- 4 replies
- 1.5k views
-
-
உன் கூந்தலுக்கு அழகு என வாங்கினேன் மல்லிகைப்பூ, தென்றலே நீ கொடுத்தாய் ஒரு மாபெரும் வெறுப்பு நீ நடந்தாய் அழகாக நான் சொன்னேன் என் விருப்பு, நடந்த உன் பாதம்தனில் நீ எடுத்தாய் செருப்பு உன் முத்துப் பல் தெத்துப் பல் அழகினை காட்டியதுன் சிரிப்பு, எடுத்துச் சொன்னேன், உன் அப்பன் கொண்டுவந்தான் பிரம்பு. நீ பிறந்த அந்நாளில் யாவருக்கும் நீ கொடுத்தாய் இனிப்பு, எனக்கு மட்டும் நீ கொடுத்தாய் நா தாங்கா ஒரு உறைப்பு. என் காதல் நீ அறிய நான் மிதித்தேன் நெருப்பு, நீ சொன்னாய் உன்னிடம் இதுவெல்லாம் வேகாத பருப்பு. உன் மீது நான் கொண்ட காதலால் அடைந்தேன் வெறுப்பு நீ உணர்ந்தாய் காதலையே நான் அடைந்தேன் மலைப்பு. எம் காதல் கதை…
-
- 0 replies
- 589 views
-
-
நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்…
-
- 4 replies
- 1.3k views
-
-
http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiNwz-JI/AAAAAAAAFAc/ft_g-a6Ut8Y/s1600-h/image001-728569.jpg http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiWfivZI/AAAAAAAAFAk/d0PWZLF74GI/s1600-h/image002-729153.jpg
-
- 2 replies
- 1.1k views
-
-
பா.விஜயின் கவிதை நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை ! முட்களில் மோதிக் கிழியாதவனுக்குப் பூக்களைத் தடவும் தகுதி கிடையாது ! மகிழ்ச்சியாய்ச் சிரி கவலைகளைப் பிய்த்துக் காற்று மண்டலத்திற்கு அப்பால் வீசு ! எதைக் கண்டும் பிரமிக்காதே பிரமிப்பைப்போல் ஒரு பின்னடைவே கிடையாது ! தோல்வி என்பது சிந்திக்கத் தெரியாதவனின் சித்தாந்தம் ! நிலாவைத் தொட்டது மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் ! நீ எழுந்தால் ஒரு எட்டு வந்து பார்க்காதவன் நீ விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி ! இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையையும் காலியாக விடாதே ! நடக்குமா என்ற கேள்வி- உன் நம்பிக்…
-
- 12 replies
- 21.2k views
-
-
கொதிக்கும் கல்லறைகள்...... கவிதை - இளங்கவி.... வன்னி முற்றத்தின் வெண்ணிலவைப் பார்த்து வான் குருவி சொன்னது.... உன்னைப் பார்த்து சோறு உண்ண இங்கே குழந்தைகள் இல்லை... இரத்தத்தில் தோய்ந்தும் கந்தகத்தில் எரிந்தும்... மண்ணிலே புதைந்தும்; அவர்கள் இறந்து பல மாதங்களாகிவிட்டது..... உன்னைப் பார்த்து சோறூட்ட இங்கே தாயுமில்லை அவர் மடியில் சேயுமில்லை.... ஆனாலும் உனக்கு வேலையொன்று இருக்கிறது... இலட்சியத்துக்காக உயிர் நீர்த்த மாவீரர் புதைகுளிகளுக்கு மேல் உன் குளிர்வையும் ஒளிர்வையும் காட்டு தலைவர்கள் எனும் பெயரில் தமிழ் தேசியத்துக்கு சேறு பூசுபவர்கள் செயல்கண்டு கொதித்துப் போயிருக்கும் கல்லறைப் பூக்களின் ஆன்மாவாவது சாந்த…
-
- 0 replies
- 682 views
-
-
எண்ணம் எண்ணம் உயர்வாய் எண்ணம் கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்! உன்னை நீயே அறிந்து கொண்டால் பெறலாம் விரைந்து வெற்றிக் கிண்ணம்! உள்ளில் இருக்கும் கள்ளம் அகற்றி கொள்வாய் உந்தன் பக்கம் வெற்றி! விழிகள் திறந்து உன்னைச் சுற்றி நடப்பது தெளிந்தால் நாளும் வெற்றி! எதுவிங்கு வெற்றி தெரிந்தவர் இல்லை? தன்னை உணர்தலே வெற்றியின் எல்லை! பொய்மை என்னும் போர்வை அகற்றி உண்மை நெறியினில் செல்வது வெற்றி! அடுத்தவர் முதுகில் ஏறிச் சவாரி செய்வது அல்ல உண்மை வெற்றி! அடுத்தவர் கண்ணீர் துடைக்க நீளும் விரல்கள் கொள்வதே உண்மை வெற்றி! சொல்லிலும் செயலிலும் நன்றே உரைத்து அடையும் வெற்றி உனக்கே உரித்து! நல்லோர் என்று உலகம் போற்றும் அதுவே என்றும் மாறா வெற்றி! …
-
- 3 replies
- 913 views
-
-
_______________________________________ தூக்கம் கண்களை நிறைத்த பொழுது குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும் பூங்காவுக்கு வருகின்றனர். கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய் மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான். கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான். சிதைக்கப்பட்ட முகத்தையும் பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும் புகைப்படங்களாக்கி உதவி கோரிக்கொண்டிருக்கிறான். எல்லாமே எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தச் சிறுவன் கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான். பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி மிருகங்களாகிய படைகளால் வன்புணரப்படுகையில் இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில் உறங…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 14 replies
- 1.7k views
-