Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அடியே பெண்டாட்டி நீதான் என் உலகமடி வாடி பெண்டாட்டி நீதான் செல்லக்குட்டி நீ போனா போகும் என் உசிரும் சேர்ந்து உன்னைவிட்டா எனக்கு யார் இருக்கா சொல்லு (அடியே பெண்டாட்டி நீதான் ...) கண்ணை கட்டி நடந்தா பாதையை காட்டு பாதை மாறி போனா செல்லமா குட்டு உன்னை மட்டும் தானே நெஞ்சு மேல வைச்சு தூங்கவேணும் நானே பிள்ளை போல கொஞ்சு. (அடியே பெண்டாட்டி நீதான்.... ) சத்தியமா நீதான் சாகும் வரை எனக்கு மொத்தமா என்னை தந்துவிட்டேன் உனக்கு கண்ணுக்குள்ள நுழைஞ்சு காலம் வரை உறங்கு சாகும் வரை என்னை மடியில தாங்கு (அடியே பெண்டாட்டி நீதான் .....) சின்ன சின்ன கோபம் செல்ல செல்ல சண்டை போட வேணும் நாளும் என்கூட நீயும் ஊட்டி விடு சோறு உனக்கே என் உயிரு வாழ்கையில பாதி உங்கிட்ட தானே என் உசிரே போகும் உன…

  2. ஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா????? ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் தேச விடுதலைக்கென போராடும் இதயங்களை வெளியே எடுத்து - நீ தானே.. நீ தானே… என கண்டம் துண்டமாய் வெட்டி வெட்டி அடுப்பு விறகிற்கு மத்தியிலேயிட்டு வெற்றி வெற்றி என கர்ஜிப்பாய்……………… நீ போராளி? நான் தீவிர வாதியா?????? பாருங்கள் உலகத்தீரே.. எங்களின் கண்களிலென்ன கண்ணீரா வடிகிறது அப்படி வேடிக்கை பார்கிறீர்களே, ரத்தம் உலகத…

  3. கோகிலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு ..... இந்த பாடல் தேவையாகவுள்ளது. கடைகளில் அலைந்தும் கிடைக்கமாட்டேன்கிறது... யாராவது உதவிசெய்ய முடியுமா????

    • 3 replies
    • 1.3k views
  4. கனவுகளின் தொலைவு எனும் வலைப்பதிவில் தாயகத்து அனுபவங்களை கதை, கவிதைகளாக படைத்துவரும் அகிலனின் வலைப்பதிவில் இணைக்கப்பட்ட ஒலிப்பதிவு கவிதையா? கதையா? அல்லது ஒலிசித்திரமா? எதுவாக இருந்தாலும் அவர் பேசும் பொருள், அவரது குரல்வளம்.... உங்களுடன் பகிரவேண்டும் போல் இருந்தது. பகிர்ந்துகொள்கிறேன். http://agiilankanavu.blogspot.com/2007/06/blog-post_28.html

  5. உங்கள் வீரம்...... இனத்தின்நெஞ்சை நிமிர்த்தியது உலகின் புருவங்களையும் உயர்த்தியது சொந்த ஆசைகளைத் துறப்பது ஒன்றுதான் உங்கள் ஆசையா? வித்(து)த‌கரே சிந்தனைக்குள் விடுதலை வெப்பம் செறிந்த‌ மின்சாரம் பாய்ச்சிய‌ தலைவனை மட்டுமல்ல உலக‌ தமிழனையும் தலைநிமிர்த்திய உங்கள் செயல்களின் ஒவ்வொரு அசைவிற்கும் தலைவணங்குகின்றோம் உயரிய இலட்சியத்திற்காக‌ உயிரை உருக்கிய‌ உன்னத்த்தினை, உலகம் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் பொருள் கொடுத்ததுதான் பாரிய பயங்கரவாதம் உயரிய தீவிரவாதம் கனவுகள் அழிந்திடுமோ என்று அழும் உங்கள் ஆன்மாக்களின் குரலால் அதிருகின்றது எங்கள் உணர்வு பத்ருகின்றது உள் மனது கவலை விட்டு உறங்கிடுங்கள் கண்மணிகள…

  6. தூக்கு காயிறு எனக்கேன்....??? நீதி மறந்தாய் நீதி மறந்தாய் நீதி சபையேன் நீதி மறந்தாய்....??? நீதியிழைத்து நின்னையேன் நீயும் இழித்தாய்....??? குற்றமேதும் புரியவில்லை குற்றவாளி நானும் இல்லை.... சட்ட மன்றம் முன்னாலே சாக்கடையில் நான் ஏன்...??? தப்பேதும் புரியவில்லை தண்டனை எனக்கேதுக்கு.....??? வழக்காடு வல்லுனரும் வழக்காடி வென்று விட்டார்..... பொய் சாட்சி அரங்கேற்றி பொல்லாதார் வென்றிட்டார்..... துரோகியாய் என்னை தூக்கிலிடப் போகிறார்கள்.... ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.... இதுவரைக்கும் யானிட்ட குற்றமென்ன தெரியவில்லை.... சந்தேகப் பேர்வளியாய் …

    • 3 replies
    • 1.1k views
  7. Started by eezhanation,

    உதிக்கையிலே மெல்லெனச்சிரித்தது உச்சியிலே சுள்ளென முறைக்கும் சாய்ந்தாடும் மரஞ்செடியும் சலனமின்றி விறைக்கும். ஊரெல்லாம் புழுங்கும் உடல்களெல்லாம் வியர்வை வெள்ளம்விழுங்கும். அடர்மர முற்றமதில் சுற்றமொன்றாய்க்கூடும் சிறுசுகளும் பெருசுகளும் விசிறிகொண்டு வீசும் நாசியிலே புழுதிமணம் புதுச்சேதி ஒன்றுபேசும். காய்ந்த புல்லை மேய்ந்தபசு தாகசாந்தி தேடும் நட்டுவைத்த பயிர்களெல்லாம் தலைகுனிந்தே வாடும். வாய்பிளந்த பூமியது நீலவானை நோக்கும் பொறுமையன்றோ உனது பண்பு என்று வானம் கேட்கும். தூரவான இடியோசை காற்றின் சிறை உடைக்கும் சில்லென்றதென்றல் வந்து புதிய யுகம்…

  8. இரு வேறுபட்ட இல்லத்தில் .... பிறந்து ஒரு வேறுபாடும் .... தெரியாமல் வாழ்வது ... நல் இல்லறம் ....!!! ஆயிரம் கிளைநதிகள் .... சங்கமிப்பது சமுத்திரத்தில் .... ஆயிரம் எண்ணங்கள் .... சங்கமிப்பது , வாழ்வது.... நல் இல்லறம் ....!!! + கே இனியவன் இல்லறக்கவிதைகள்

  9. ஒருகணம் வழித்தடம் திரும்பி... வீறுகொண்டெழுவோம்! 2010.. இது புத்தாண்டு! வாசல் திறந்து வரவேற்கின்றோம். ஆனால்... வண்ணக்கோலமிட முடியவில்லை. வளைதோரணம் கட்டவும் இயலவில்லை. வாசல் தொலைத்து வாடிக்கிடக்கின்றோம். அந்நியன் வாசலில் யாசகம்செய்து – ‘புத்தாண்டே வாராய்!’ என்று இரு கரம்நீட்டி அழைக்கின்றோம். பத்தோடு பதினொன்றாக ஆண்டுகள் வருவதுண்டு. வந்தவழியே திரும்பிப் போவதுமுண்டு. நாங்களும் வரவேற்போம் - முந்நூற்றறுபத்தைந்து நாட்கழித்து ஒவ்வோராண்டும் கடந்து சென்றுவிடும். 2009 வந்தது. உள்ளம் பட்டாம் பூச்சியாக சிறகு விரித்துப் பறந்தது. கண்கள் அகலத்திறந்து வாசல் நோக்கி விரிந்தது. இது எங்கள் ஆண்டு! இது எங்களுக்கான ஆண்டு! என்றன்றோ அப்பொழுது திளைத்தோம்?…

  10. Started by kavi_ruban,

    இரவாய் இருந்த எம் வாழ்க்கை பகலாய் விடிய வந்துதித்த தலைவா வாழீ நீ! முதலாய் வந்த குடியின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட போது உனக்கு மீசை கூட முளைக்கவில்லை! ஆசை அரும்புகின்ற அந்த வயதில் ஆயுத பாஷையன்றி வேறெதுவும் இவர்க்குப் புரியாதென உணர்ந்தவன் நீ! துவக்கை கைகளில் எடுத்தவன் நீ! தமிழின விடுதலைக்குப் புது துவக்கம் கொடுத்தவன் நீ! உலகில் தமிழின இருப்பை எதிரொலிக்கச் செய்தவன் நீ காந்திய வழியில் நடந்து சோர்ந்தவர்களுக்கு நீ பிறந்தது பெரும் தெம்பு! ஏந்திய துவக்கின் வாய் திறந்து பேசிய வார்த்தையால் தான் பேச்சு வார்த்தை கூட நடந்தது! உன் வேர்கள் ஆழமானது நீ பரப்பி…

    • 3 replies
    • 1.3k views
  11. [color=darkred] தப்பி ஓடிய படைகள்..... பறையடித்து படையெடுத்த பகை அழிந்தது.... பனிச்சங்கேணி பறிக்க வந்த படை சிதைந்தது.... அடியெடுத்து வைக்கையிலே அடி விழுந்தது.... எண் கணக்கில் ஜம்பதுகள் அங்கு முடிந்தது..... பொறுத்திருந்த புலியணிகள் பொங்;கி எழுந்தது.... போர் முரசு கொட்டி பகையை பிணமாய் எடுத்தது.... உயிரோடு ஒருவனையும் உடனெடுத்தது.... போர் கருவிகள் போட்டெறிந்து படை ஓட்டம் எடுத்தது.....!!! - வன்னி மைந்தன் - பனிச்சங்கேணி போர் ... 06- 10-06 :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

  12. உலகத்தின் இயக்கத்தில் இதுவுமோர் நாடக மேடையாம் உயிர்களை வைத்தே காட்டுவாரிங்கு வேடிக்கையாம் பாரே! நீ வேடிக்கை பார்! விசித்திர ரசிகன் நீ! அவர்கள் சிரித்தால் நீ அழுவாய்! அவர்கள் அழுதால் நீ சிரிப்பாய்! உணர்வுகளின் கூடாரங்களுள் கருத்தரித்த சுதந்திரப் பிண்டங்கள் சருகுகள் போலிங்கு கருகிப்போகும் குருத்தான செண்டுகள்! இரவுகள் தோறும் மடியல்கள் இரத்தத்தில் தோய்ந்த விடியல்கள் மரண ஓலங்களின் மறைவில் மரணித்துப்போகும் மனிதநேயங்கள்! மாண்பு மிகு உலகே மறைந்திருந்தே வேடிக்கை பார்...! வீடு வாசல்கள் தோறும் இழவுகள் தினந்தோறும் காடுகள் மேடுகள் எங்கும் கல்லறைகளே நிறைந்து போகும்! வாழும் மண்ணில் வாழ வாழ்க்கை கேட்டு நின்றோர் பாழும் உலகில் இன்று பய…

    • 3 replies
    • 1.1k views
  13. சயனைட் குப்பி...... கவிதை...... எங்கள் கோவில்களில் தெய்வமாய் வணங்குதற்கு தாராள தகுதிபெற்ற தனியொரு ஆயுதம் நீர்..... எதிரியிடம் பிடிபட்டு சிதைவழிந்து சாகாமல் கெளரவமாய் மரணத்தை வளங்கும் கொடை வள்ளல்..... காற்றாக உள் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் மூச்சை நிறுத்திவிடும் உன்னதப் படைப்பு நீங்கள்.... குட்டி எமன்களாக - வீரர் கழுத்திலே தொங்கிடுவீர் பாசத்தின் கயிற்றினாலே மரணத்தை மறுக்காமல் தந்திடுவீர்.... வீரர்களின் மனத்திடத்தை உரைத்து நிற்கும் உன்னதமாய் அன்று முதல் இன்று வரை ஆட்சி செய்யும் செங்கோல் நீர்..... உன் தொழில் அழித்தல் மட்டுமல்ல ஆக்கும் கடமை உண்டு இரசாயனவியல் துறையில் உனக்…

  14. வன்னிமண்ணே வன்னிமண்ணே வானைப்பிழக்கும் உன்குரல் வந்து என்னை வாட்டுகிறது தன்னிச்சையாய் போர் தொடுத்து தருணம் பார்த்து உன்னுயிர் பறிக்க தென்னாசியச்சிங்களங்கள் தோளோடு தோள் சேர்ந்து செறிந்து நிற்கின்றனவாம் உலகத்தமிழன் உறங்காமல் எப்போதும் உனக்காக குரல் கொடுத்தும்- சிங்களவன் அடங்காமல் நிற்கிறானாம் ஆணவத்துடன் குடிக்க நீருமில்லை குழந்தைக்குப்பாலுமில்லை பசிக்குப்பஞ்சமில்லை படுக்க நிழலுமில்லை-அதை கடிந்து கேட்க யாருமில்லை மருந்துப்பொருளுமில்லை மயக்க ஊசியில்லை மரணத்தை தடுக்கவும் யாருமில்லை வணங்காமண் வருகிறான் உனக்காக இணங்காமல் அழிக்கலாம் உந்தச்சிங்களங்கள் கணம் போகும் போதும் காத்திரு- உன்னை பிணம் தின்னும் பேய்கள் சூழ்ந்திருக்கின்றனவாம் …

  15. மழைபோல் வந்த குண்டுகளால் மண்ணோடு மண்ணாக மாண்டுபோன மக்களைத்தான் மறக்க முடியுமா! மானம் தான் வாழ்வில் மகத்தானெதென்று மண்ணுக்காக மாண்டுபோன மாவீரர்களை மறக்க முடியுமா! முள்ளீவாய்க்கலில்,முழுவதும் தொலைத்துவிட்டு வட்டுவாய்க்கால் பாலத்தால் வானரக் கூட்டத்தின் வாய்க்குள் நுழைந்ததை மறக்க முடியுமா! தண்ணீர்த் தாகத்தால் தண்ணீர் கேட்டபோது தண்ணீர் குழாயினால் நீரைப் பீச்சிஅடித்ததை மறக்க முடியுமா! தலையால் வடிந்த தண்ணீரை நாக்கால் நனைத்து தாகம் தீர்த்ததைத்தான் மறக்க முடியுமா! நீர்த் தாகம் தீர்ந்தது அன்று இன்னும் தீரவில்லை நாம்கேட்ட சுதந்திர தாகம்.

  16. [size=5]மழைச்சத்தம் [/size] [size=5]தர்மினி[/size] முன்னொரு காலம் மழை சத்தமிடுவதைக் கேட்டேன். ஓலைக் குடிசையொன்று மூடக்கதவில்லை சன்னல்களற்றுச் சுற்றிவரச் செத்தைகள் அதிலே குறைச்சுருட்டு, பாதிப்புழுக்கொடியல், பற்பொடிப்பைக்கற் சொருகிக்கிடப்பன. சாரைப்பாம்பும் சரசரக்கும். ஓலைக் கூரையில் மழைக்குதியோசை. நடுக்கூரை மழையொழுக டப்…தொப்…டப்…தொப் சட்டியிலும் சத்தம் . தாழ்வாரம் குந்திக் கை நனைக்க முற்றத்தில் குமிழ்கள் ஓடி வெடிக்கும் என் முகத்திலடிக்கும் சாரல். மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி கிணறு தழும்ப நெல்லி முறிந்து முருங்கை சரியும் மாம்பிஞ்சுகள் உதிர்ந்து பரவ பள்ளத்து வெள்ளங்களில் தவளைகள் கத்தும் சற்று நேரத்தில…

  17. சத்தியம் செய்வோம் இந்த நாளிலே! ------------------------------------------------------ சுக்குநூறாக வெடித்துப் பறக்கும் இதயங்களான எம் தமிழ் உறவே துயரம் நிறைந்த இந்த நாட்களை எப்படி மறப்போம் எங்கே தீர்ப்போம்! மனிதாபிமானம் பேசிடும் உலகோ மனித அழிவுக்கு மகிழ்வு பகிருது தமிழர் குருதியில் கைகளை நனைத்து விருந்தினையுண்டு சிரித்து மகிழுது ! சிறுமை நிறைந்த சீரற்ற உலகை நம்பியதாலே எம் தாயகமிழந்தோம் தாயகம் வாழ்ந்த உறவுகளிழந்தோம் உலகை நம்புதல் நன்மையல்லவே என்பதையல்லவா உலகு சொன்னது எம்மை நம்புவோம் தாயகம் மீட்க தாயமல்லவோ நாம் செய்யும் காணிக்கை மண்ணுள் புதைந்தோர் வேண்டுதல் அதுவே ! கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !…

    • 3 replies
    • 1.1k views
  18. பரந்த வெளியிலே ஒற்றை மரமாய் தனித்து நின்றாலும் இரைதேடும் பட்சிகளுக்கு தங்குமிடமாகிறது மேற்கே மறையும் சூரியனும் தெளிந்த நீரோடையும் மெல்லென் தழுவிச் செல்லும் காற்றும் நீரிலே தோன்றும் சூரிய ஒளியும் இரவை நோக்கி நகர்ந்து சென்று உனக்கும் எனக்குமாய் நாளை எனும் உதயம் ஆழ்ந்த் நம்பிக்கையோடு விடிவு பிறக்கும்.

  19. Started by nedukkalapoovan,

    1993 தைத்திங்கள் 16ம் நாள் இந்திய மத்திய அரசின் நயவஞ்சகச் சதிக்கு வங்கக்கடல் நடுவே தன்னை அர்ப்பணித்த கிட்டு மாமா உள்ளிட்ட வேங்கைகள் நினைவாக..! வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை மு…

    • 3 replies
    • 2.4k views
  20. நினைவுகள் வலியிருக்கும்-உன் நினைவுகள் என்னவோ.... அப்படியில்லை இதுதான்..... உண்மை காதலின் ...... அடையாளம்....!!! வாழ்க்கையில் .... எல்லாம் இழந்துவிட்டேன்..... உன் நினைவையும் இழந்தால்...... அனாதையாகி விடுவேன்...... ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

  21. ஈழத்து அன்னை மடியில் அழகழாய் பூத்த பூக்கள் தேசத்து மண்ணைக் காக்க செங்குருதி குளித்த பூக்கள் கார்த்திகைப் பூக்களே -எங்கள் மா வீரர்களே! கல்லறையில் உறங்கும் எங்கள் கார்த்திகைத் தீபங்களே! கையில் பூக்கள் கொண்டு வந்து கல்லறையில் பணிகின்றோம் கண்ணீரில் கவிவடித்து காவியங்கள் பாடுகின்றோம் கல்லறையில் முகம் புதைத்து கதறிக் கதறி அழுகின்றோம் கரிகாலன் பிள்ளைகளே கண்திறந்து பாருங்களேன்! உங்களுக்கு மட்டும் தானா இப்படியோர் மனத்துணிவு மரணத்தைக் கூட இங்கு மண்டியிட்டு அழைப்பதற்கு! உம்மைப் பெற்ற அன்னை முகமோ இறுதிவரை பார்க்கவும் இல்லை உம்மைப் பெற்ற அன்னை மடியில் இறுதி மூச்சும் போனதில்லை அண்ணன் வழி சென்றவரே அடிமை விலங்கை அறுத்தவரே…

    • 3 replies
    • 1.3k views
  22. தீயில் எரியுது டோறா..... வம்பிழுக்க வந்த பகை டோறா... வாங்கி கட்டி இழந்து போச்சு (இரண்டு )டோறா.... சுற்றி வந்து சூழன்டடித்த டோறா.... சுக்குநுறாய் போச்சுதின்று நுறா..... பாயும் புலி பகைக்க வந்த டோறா.... துண்டு பாதியாகிப் போச்சு இன்று வேறா.... திமிர் ஆட்டம் போட்டு ஆடி நின்ற டோறா... தீயில் எரியுது பார் இன்று தமிழா நீறா.... 01-09-06 அன்று பருத்துறைகடலில் இரண்டு டோறா அழிப்பின் போது....

    • 3 replies
    • 1.6k views
  23. வரவேற்ற உன் விழிகளால் வைகறை தெரிந்தது வலிகள் மறைந்துதொரு வாசமெழுந்தது, உருவேற்ற முடியாவுருவங்கள் உருவாகி உயிர்வதைத்தது _மறுகணம் விளைவுகளறியாத மலர்வுகள் மகிழ்வை விதைத்தது . களைப்பறியா பயணங்கள்..... சலிப்படையா காத்திருப்புக்கள் ....... அலுக்காத நினைவுநீட்சிகள் ...... அசைமீட்பில்_ உன் மீதான நினைவிசைமீட்பில் நிகழ்காலங்கள் கரைந்தழிந்துபோக , பகிராத வார்த்தைகள் தேடி ஞாபகங்கள் உலா போயின ............ பொருளற்ற பேச்சுக்களால் நழுவிய சமயங்களை மீளுருவாக்களில் நாட்கள் நகர , புரிந்தும் எல்லாம் அறிந்தும் வார்த்தையாடுதலில் வாகாய் தவிர்த்தெனை வதைத்துரசிக்கும் வகையறிந்து உன்முகமறிந்தேன் _கொண்ட காதல் தரமறிந்தேன். எனக்கும் பிடி…

  24. 7ம் ஆண்டு வகுப்பறை மேசையில் முதல் முதலாக கிறுக்க ஆரம்பித்தேன் இன்றும் கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன் கண்ணில்படும் கரும்பலகையிலும் விளம்பர சுவர்களிலும் பேருந்து இருக்கையிலும் பிடித்த மரங்களிலும் ரசித்த உலக அதிசயங்களிலும் கிடைக்கும் வெற்றுக் காகிதங்களிலும் உன் பெயரோடு என் பெயரை எனினும் இன்றுவரை என் பெயர் கிறுக்கலாகத்தான் தெரிகிறது நான் கவிஞனான பிறகும் ஆனாலும் உன் பெயரே எனக்கு பிடித்த கவிதையாகவே இன்றும் இருக்கிறது -யாழ்_அகத்தியன்

  25. தொலையும் நின்மதியே நிரந்தரமாகி நிற்கதியாக்கி விடுகின்றது உரிமையற்ற நிலைகளின் ஈடாட்டம் கண்டு ஏதுமற்றதாக ஆசை கொள்கிறது மனது மனதில் கூடுகட்டும் குப்பைகளும் ஆற்றாமைகளில் அழுந்தும் எண்ணங்களுமாய் எல்லாவற்றையும் எதிரியாய் நோக்க எந்நேரமும் எதுவுமாகிவிடாதிருக்க எனக்கே நான் எதிரியாகிறேன் செய்கைகளும் செயற்கையாய்க் கோர்க்கப்படும் வார்த்தைகளும் எந்நேரமும் செயல்களின் பிரதிபலிப்பை எதிர்மறை எண்ணங்களின் பிரதிநிதியாக்க பகுக்கப்படும் சிந்தனையின் செயல்களில் பக்கவிளைவாகின்றன வார்த்தைகள் உண்மையற்ற புரிதலற்ற அன்பும் காரணங்களுக்கானதான செயலும் எங்கோ ஓரிடத்தில் ஏதுமற்றதாகிவிடுகிறது உண்மை அன்பு எந்தவித எதிர்பார்த்தலுமின்றி என்றும் வற்றாத நதியாய் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.