Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by வர்ணன்,

    செத்தவீட்டில் சிரிப்பாய்...... கல்யாண நாளில் நீ அழுவாய்........ வயிறு கிழியும் வரை ... கத்து கத்து ... தவளையே..... வரம்புகள் எதுவென்றே ... தெரியா உமக்கு............. நெடுக்கால போக .. எப்படித்தான் முடியுமோ? எரிகிறவீட்டுக்கு.... தீயணைக்க வழியும் சொல்லாய்...... தேம்பி அழுகிறவருக்கு .. ஆறுதலும் சொல்லாய்... மிருக உலகே....உலகே......... உறவுகள் உடல் கருகும் வாசம் வேண்டியா புலம்பல்? வேணுமா....... வேணுமா........... வேணுமென்றால்... இந்த இந்த உதவாகரைகளையும் உச்சிமுகர்ந்து தத்தெடு!!

  2. சிந்தனையில் தீ வை...!!! தமிழகம் என் தாய் வழி உறவடா...!!! தம்பிகளா நீங்களெல்லாம் எங்களின் தொப்புள்கொடி உறவடா...!! வேண்டாம் இந்த தீக்குளிப்பு போதும் இதுவரை கண்ட இழப்பு இனியும் தாங்கமுடியாது இனியொரு உரியிழப்பு..!! முத்துக்குமார் இட்ட தீயை - உன் நெஞ்சினில் ஏந்து உன் மேனியில் அல்ல..!!! உன் மேனியில் இட்ட தீ ஒரு வீரத்தமிழனை அழிக்கும்... உன் கண்களில் தீயை வை உன் நெஞ்சினில் விடுதலை தீயை பற்ற வை -அது ஆயிரம் தமிழனை வாழவைக்கும். உயிரை விடாதே உன் உணர்வை தா...!!! என் சகோதரா தீக்குளிக்க வேண்டியவன் நீயல்ல...!!! நில் சிந்தனையில் தீ வை...!!! உனக்கே புரியும் எரிக்க வேண்டியது உன்னையல்ல...!!! தமிழ்ப்பொடியன் 23.03.20…

    • 3 replies
    • 807 views
  3. காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை காலத்தால் தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை காலத்தால் குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும் நின்று போர்களம் பார்த்தவன் உண்ட சோறு தொண்டை உள் நுழையு முன் நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர் இளவேனில் நாளில் உதிர்ந்தார் தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால் மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்குமையா ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால் தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர் நடந்த கால் தடமிருக்கும் தமிழ் மாந்தர் உள்ள…

  4. Started by வர்ணன்,

    என் முகம் தீய்ந்து போனாலும் மோசமில்லை - மோட்சமே உழைக்காமல் வரும் ஊதியமே சொர்க்கம் என்று ஆனாயேடா மொக்கா மொக்கா! என்ன சொல்ல ........... எரியும் சிதையினிடையே கைவிட்டு ..தகனம் கொள் பிணத்திடையிருந்து தங்கம் உருவ நினைக்குது மானிடம்! காலை எழுந்தவுடன் தேநீர் வேண்டும் கை கால் அமுக்கவும்.. அவளே வேண்டும்.. அடடா அடடா கை கால் அலம்பியதும் துடைக்க துண்டும் தந்து நீ கலையாத அழகு கொள்ள சுருங்கா ஆடையும் தந்து... நீ கல்யாணம் கொள்கையில் காலில் விழவும் செய்து... யோசி ... யோசி மலரை கசக்கி எறிய மடி நிறைய .. பொருள் கேட்குது..மானிடம்!! அடுப்படியில் ஒருத்தியை குந்த வைக்க... முற்பணமாய்- ஐம்பது இலட்சம் கேட்பது …

    • 3 replies
    • 1.5k views
  5. ஏன் பேச புலி போச்சு....??? மீண்டும் ஒரு ஜெனிவாவில பேச்சு.... அங்கு புலி காண்பதுவோ என்னவென்று போச்சு....??? முன்னர் நடந்த பேச்சுக்கென்ன ஆச்சு....??? இன்று அமைதி கிழித்து போரங்கு மூண்டு போச்சு.... இல்லை தீர்வு எண்ணு உருவாகி ஆச்சு.... அப்புறமா மீண்டும் பகையோடு வேங்கை ஏன் பேச போச்சு....??? வன்னி மைந்தன்

  6. Started by nunavilan,

    நீ சிந்திய சிரிப்புகளையெல்லாம் சேமித்துவைத்திருந்தேன் இரண்டுவருடசேமிப்பை எடுத்துப்பார்க்கிறேன். எதிலுமே என் பெயரில்லை என் பக்கத்தில் நின்றவர்களை பார்த்து சிரித்தது பல என் முன் நின்றவர்களுக்காய் சில பின் நின்றவர்களுக்காய் சில எவரையோ எண்ணியபடி எனை பார்த்து சிந்தியவை சில எல்லாவற்றையும் கழித்தபோது எஞ்சியவை எனக்காக சில ஏளன புன்னகைகள் என் மனக்காயங்களுக்கு-அவை மருந்தா, திராவகமா தெரியவில்லை ஆனாலும் அள்ளி அள்ளி பூசிக்கொள்கிறேன். இதயதில் உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! சிலம்பூர் யுகா, துபாய் [yughas@yahoo.com]

    • 3 replies
    • 1.3k views
  7. அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு! உள்ளத்தில் உறைந்தவளே றிசானா..! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே! உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா..? எல்லாம் முடிந்து விட்டது. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை! என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம். றிசானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ.. அதைக்கூடத் தாங்காமல் உன்பெற்றோர் தீயில் விழுந்த புளுவாய் தீய்ந்து போனதை நாம் அறிவோம். இப்போது இறந்துபோனதை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..! உன் மரணச் செய்தி கேட்டவுடன் தாய் மொழிந்த வார்த்தைகள் 'எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?' இன்னும் …

  8. ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய அந்த மாபெரும் கவிஞனை சும்மா புதுவையென்றாலே தமிழ்த் தேசியவாதிகள் யாவருமறிவர். 2009 இலிருந்து காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்ட அக்கவிஞனை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையை இங்கு பதிவிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆ…

    • 3 replies
    • 1.2k views
  9. Started by இலக்கியன்,

    உன் முகம் காணாது என் மனம் வாடுதம்மா கண்களின் ஈரம் அது என்னை நனைக்குதம்மா உன் இமைகள் மூடுகையில் என் கண்கள் ஏங்குதம்மா பாசக் கயிற்றினாலே என் இதயம் நோகுதம்மா உன் குரல் கேட்கையிலே என் உள்ளம் ஆறுதம்மா வாழ்க்கையின் வழியில் முள்கள் குற்றுதம்மா வலியின் நோவுகள் இங்கு உன் நினைவு ஆற்றுதம்மா

  10. ஒரு .... தலை காதலர்களே .... காதலில் தோற்றவர்களே .... கவலையே வேண்டாம் .... காதல் கவிதையை .... ரசியுங்கள் .... காதல் நிச்சயம் .... வெற்றிபெறும் .... கவிதை காதலின் தூதுவன் ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

  11. நீயும் நானும் ஒன்றுதான் அங்கே மண்ணை நேசித்தவர்கள் மண்ணுக்குள் பிணம்களாய் இங்கே மண்ணை நேசித்தவர்கள் மண்ணின்மேல் பிணம்களாய் ஆராய்சி செய்வோம் இதயம் இல்லாதவர்களுக்கு எவ்வாறு ரத்த ஓட்டம்

  12. காலநதியின் வேகமென்ன? பனிக்காலக் காலைப்பொழுது பகலவன் இல்லாமலேயே விடிந்தது வழக்கம்போல, இறக்கைகளற்ற கடிகாரப்பறவை சிறகடித்துப் பறக்க காலக் கண்ணாடியில் என் முகம் பார்க்க முயன்றேன் கண்ணுக்குள் கலைந்திட்ட பல நூறு கனவுகள் நினைவுத் திரையில் நிழற்படமாய் காட்சிகள் மணித்துளிக்குள் கூவின எத்தனையோ மனக்குயில்கள் அருகே'அம்மா"என்ற அழைப்பொலி பக்கத்தே பள்ளிச் சீருடையில் என் பருவ மகள் என் நினைவப் புத்தகத்தின் பக்கங்கள் படபடக்க பள்ளிச் சீருடையில் துள்ளும் இளமையுடன் நான் அந்த மின்சாரக் கனவை மெல்ல உதறிவிட்டு பக்கத்தில் நிற்கும் பதினாறு வயதுப் பருவப் பெண்ணை நோக்கினேன் ஓ....நாளை இவளும் என்னைப் போல..... வீதிக் கடவையில் விசிலடிக்கும் மின்ச…

  13. பச்சை இரத்தம் இயக்குநர் சேரன் அன்று பிஞ்சுக் குழந்தையின் பெருவிரல் நகக்கண்ணில் அழுக்கால் புண்ணு வந்து வெடீர் வெடீரென புடுங்க அழுது துடிச்சிருச்சே.. ராவெல்லாம் தூங்கலையே.. தாயார் காலையிலே திண்ணையிலே இருக்கையிலே ஸ்கூல் வாத்தியார் கடைக்கார செட்டியார் நாட்டாமை பெரியவுக காதுவளர்த்த கிழவின்னு எல்லாரும் கேட்டாக.. என்னடி வீட்டுல இம்புட்டு சத்தமுன்னு.. அம்புட்டு பேருக்கும் மனசு துடிச்சிருச்சாம் மறுகி நின்னாகலாம் விஷயம் தெரிஞ்சுக்க விடியிற வரைக்கும்.. இன்று இங்கே திருந்தாத நாடெல்லாம் திமிராலே ஒன்றுசேர்ந்து இரக்கமின்றி ரத்தக்குளியல்.. ரத்தம்னா ஆட்டு ரத்தம் மாட்டு ரத்தம் அப்பன் ரத்தம் ஆத்தா ரத்தம…

    • 3 replies
    • 1.9k views
  14. Started by yaal_ahaththiyan,

    முதல் முதலாக நீ என்னை எழுத்துக்கூட்டி வாசித்து முடித்தபோது எல்லாக் கவிதைகளைப் போலவும் நானும் உன் வாழ்த்துக்காய் காத்திருக்க முன்னமே "என்றும் நீ எனக்குப் பிடித்த கவிதையாக இருந்துவிட முடியாது ஏனெனில் எழுத்துப் பிழைகள் அதிகம் நிறைந்த கிறுக்கலாய் இருக்கிறாய்" என நீ கூறிவிட்டு என்னை கசக்கி எறிந்த இடம் இன்றும் என்னை கண்ணீரால் கவி எழுத வைக்கிறது -யாழ்_அகத்தியன்

  15. உயிர்கள் அற்ற உடல்களோடு உறங்கி இருக்கிறேன் பிணங்கள் எரியும் வெளிச்சத்தில் நிலாரொட்டி உண்டிருக்கிறேன் குண்டு மழைக்குள்ளும் குடையோடு இடம்பெயர்ந்திருக்கிறேன் அசைக்கமுடியாத ஆணிவேரின் உச்சியிலிருந்து சுனாமியால் தப்பியிருக்கிறேன் இருபத்தி நான்கு மாதங்கள் இருட்டறையில் சிவராத்திரி மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன் பெயர் தெரியாத பனிமலை தேசத்தில் பிணமாய் உருண்டிருக்கிறேன் கைப்பாசை உதவியோடு ஐந்துநாள் பட்டினியை பிச்சை எடுத்து முடித்திருக்கிறேன் விழுந்தால் மீனுக்கு நான் பாய்ந்தால் எனக்கு நான் தெரிந்தும் கப்பல்விட்டு கப்பல் பாய்ந்திருக்கிறேன் ஆனால்..... என்னை மூச்சுவிட்டுக் கொண்டே முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால் மூ…

  16. மழை எப்போது எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பது காற்று எதிரியே நீ எதுவரை வரவேண்டும் எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் விடுதலைப் புலிகள் புலிகள் முன் நகராது இருக்கும் வரைதான் வெற்றிக்களிப்பில் கர்ஜனை செய்வீர்கள் பொன்சேகா படைகளே ஒன்றன் பின் ஒன்றாய் ஏவுங்கள் எறிகணைகளை பறந்து வந்து போடுங்கள் குண்டுகளை பொறுத்துக் கொள்கின்றோம் எமது தேசத்தின் அமைதி குலைத்த சிங்களமே… எங்கள் தலைவனின் மௌனம் கலையும்போது வதைபடுவாய் பொறுத்துக்கொள்… எதிரியே உன் தளத்தில் வந்து நின்றவாறு புலிகள் ஏவும் உனது எறிகணைகள் உன் தலையில் வீழ்ந்து வெடிக்கும் என்பதைக் கருத்தில்க்1கொள் குதித்து வ…

  17. கோடைத் தாக்குதலில் உதடுகள் உலர்ந்த இலைகளை வாரி யணைத்துக் கொண்டது ஒரு ஆலமரம். பீறிட்ட ஞாபங்கள் ஒன்று சேர மெல்ல கிளைமேல் படர்ந்தேன் ஒரு பாம்புபோல. ஒரு கிளையினுள் நுழைந்த அக்கணமே கண்டேன். அங்கே பல சிற்பங்கள் செதுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சிறு வலியோடு தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. முன்பொருநாள் எனக்கும்.. "நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?" அதே அதிகாரத் தோரணையில் கேள்வி கேட்கப்பட்டது. என் பதிலை எதிர்பாராது உளியை கையில் எடுத்துக்கொண்டான் என்னையும் செதுக்கிய சிற்பி. நான் ஞாபகங்களுடன் வெளியேறினேன். அன்று அழுத விழிகளுடன் அதே கிளையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதால்தான் இன்று அழகிய சிற்பமாய் ஆதவனாய் நான்....…

    • 3 replies
    • 1.2k views
  18. தமிழனுக்கு தமிழன் ஆளும் கட்சி எதிர்க் கட்சி கைவிடப்பட்டு கடித்துக் குதறிய சமாதான தீர்வுகளும் சமரச பேச்சக்களும்....... கொதித்தென்ன? குமுறியென்ன? பட்டினியும் சித்திரவதைகளும் மரணமும் . . முலைப்பால் இல்லாது முடிந்துபோன சிசுக்களும் . . அநாதை குழந்தைகளும் . . அபலைப்பெண்களும் - தான் எங்கள் தலைவிதியென வாழும் மக்கள் . . . . . பௌத்த மொட்டையர்களும் இனவெறி அரசியல்த்தலைவர்களும் கூடிச்சேர்ந்து அலசி ஆராய்ந்து . . . தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்காத மலட்டுச் சிங்களத்தின் மதியிழந்த அரசியல்த்தீர்வுகள் . . . . . . இதையும் ஆதரித்து. . சிலர் நீளமான யுத்தத்தின் நிழலிலே குளிர்காயும் நேற்று வந்த எட்டப்பர்கள் நேத்த…

  19. சாப்பாட்டுப் பயணங்களில்...! பசியின் ஆற்றாமையில் கவளம் கவளமாய் தொடங்கிய சாப்பாட்டுப் பயணம் இடவலமாய் கை சுழற்றி வீசுகிறது இடையிடையே கிழிந்த இலையில்! இறுதிவரை நிகழவேயில்லை பசி மாற்றம்! பசியின் துவக்கத்தில் பருக்கைகளின் மேல் துளிர்க்கும் வேட்கையும் விருப்பும் ஆசையும் ஆர்வமும் உள்ளிறங்கும் போது முற்றிலும் நீர்த்துப்போகிறது ருசியின் சுவைகளின்றி! எல்லாப் பந்தியின் நிறைவிலும் உள்நுழைவதில் பரபரப்பு வியாதியாய்! ஒரு முறையாவது பந்தியில் முதலில் உட்கார வேண்டும் சங்கல்பம் தோன்றி மறைகிறது வழக்கம் போல முட்டி மோதி இறுதியாய் இடம் பிடிக்கையில்! http://nejamanallavan.blogspot.com/

  20. கஸல் கவிதைகள் 1) கடவுளே என்னை மன்னித்துவிடு நான் காதலை கும்பிடுகிறேன் 2) நீ அழகுக்கு நேர்ந்துவிடப்பட்டவள் 3) உனக்கான அரிதாரத்தை மான்களே கொண்டுவருகின்றன 4) உண்மையாகச் சொல் நீ தேவதைகளின் அசலா! நகலா! 5) உன்னை சுவைபட சொல்ல வேண்டும் என்றால் நான் சோகப்பட வேண்டும் 6) இரவு நதியில் உன் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது 7) நீ தாவணி அணிந்தபோதுதான் என்னில் பிரபலமானாய் 😎 உன் ரகசியத்தை அறிந்ததால் நான் அம்பலமானேன் 9) என் இதயத்தில் நீ தங்காவிட்டாலும் பரவாயில்லை வந்தாவது போ 10) விளக்குகள் அணைக்கப்பட்டால் நீ எரிகிறாய் 11) அவளைப் பிரிந்துவிட்டாயா பரவாயில்லை தேடாதே நீ கவிஞன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவ…

  21. தனித்த பெருவெளியில் வீரிட்டு அழுகின்றது வேலைக்காரனின் குழந்தைகள் அள்ளி அணைக்க முற்பட்டு தோற்றுப் போகின்றது புதையுண்ட கைகள் எலும்புகளில் இருந்து சதைகள் கரைந்து நரம்புகள் கரைந்து இத்து மக்கிவிட்டது கண்காணிகளே வாருங்கள் என் சடலக் குழிமேல் முருங்கை மரத்தை நடுங்கள் செழித்து வளர நான் உரமாக இருக்கின்றேன் காய்களை தின்று முறுகித் திரியுங்கள் முடியாது யாராவது பயிரிட்டு காய்களை மட்டும் அனுப்புங்கள் பணம் தருகின்றோம் யாரும் இல்லை இங்கே பறவாயில்லை நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் உங்களால் எழுந்து வந்து வாங்கித் தர முடியுமா? வேலை செய்ய விருப்பந்தான் ஆனால் முடியாது எலும்புகளும் இத்துப்போகும் நிலமைக்கு வந்துவிட்டது. …

    • 3 replies
    • 1.1k views
  22. Started by nochchi,

    ஆடிப்பிறப்பு விடுதலையைத் தேடி... ... எத்தனையோ ஆடிகளை கடந்து போயிற்று என் வாழ்க்கை. இன்னமும் நானும் சேர்ந்துபாடிய பாட்டின் மகிழ்ச்சிக்குள் இருந்த விடுதலையை நான் அனுபவித்ததேயில்லை. நாளைகள் கடந்து நிரம்ப நாட்களாயிற்று. இப்போ என் தோழர்களுமில்லை. ஆனந்தமுமில்லை. கொழுக்கட்டையும்..கூழும்.. கனவாகிப் போன வாழ்க்கைகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது மனசு. இப்போதும்.. பற்கள் விழுந்து போன என் தாய்.. என்னையும் நினைத்தபடி தன் சுருக்கம் விழுந்த கைவிரல்களால் கொழுக்கட்டைக்கு பற்கள் பதித்துக் கொண்டிருப்பாள். எமது கனவுகளைப் போலவே குமிழிகளாய் வந்து வந்து வெடித்து வெடித்துப் போகிற கொதிக்கும் தண்ணீருக்குள் கூழுக்காக மா உருண்டைக…

    • 3 replies
    • 2.9k views
  23. சின்னவனா இருக்கேக்க சூழ்ந்திடுவார் முதியவர்கள் ஆண்டு சில உருண்டோட பிரிந்து அவரும் சென்றனரே போகுதுபார் வாழ்நாளும் புயல் போன வேகத்திலை ஏறிடிச்சு என் வயதும் நானும் இப்போ கிழவனப்பா மூட்டுப் பிடிப்பிருக்கு மருந்தெடுக்க போகணுமே முட்டுக் கொடுத்தா தான் மூணு அடி நான் மிதிப்பேன் கால் நடக்க முடியாட்டா பாடை கட்ட முந்திடுவார் ஏக்கம் தாளாமை போக்கத்து நிக்கிறனே பங்கைப் பிரிக்காட்டி பால் வார்க்க மாட்டாராம் நான் சேத்த சொத்துக்கு எட்டுக்கால் வாரிசுகள் நாலெழுத்து படிக்காமை நாசமாய் போனதுகள் வீட்டையும் புடுங்கிட்டு நாட்டுக்கு அனுப்புதுகள் இண்டைக்கோ நாளைக்கோ போற உயிர் இது தானே நன்றியுள்ள நாய் இருந்தா-என் கஷ்டத்தை அது கேக்கும் பணத…

  24. Started by marumakan,

    அடிக்கடி இனிப்பு வாங்கித்தந்த யமுனா அக்கா அண்ணனுக்கு அண்ணியானதால் என்னைக்கண்டுக்கிறதே இல்லை. (பி.கு: இந்த யமுனாஅக்காவும், யாழ் கள யமுனாவும் ஒருவரல்ல. இல்லை இருவரும் ஒருவர்தான் என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.)

    • 3 replies
    • 1.2k views
  25. Started by கறுப்பி,

    • 3 replies
    • 832 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.