கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மலர்களும் வெட்கி தலைகுனிந்தன அவை கண்டது உந்தன் மலர்முகம். தனிமையில் முழுநிலவும் தகிக்கிறது திருடிப்போனாய் தண்மையெல்லாம். நேற்றுப்போலவே இன்றும் இனிக்கிறது உன் நினைவுகள் காதல். அவள் திறந்து பார்த்தது கடிதமல்ல என் இதயம். தூங்கும் போதும் விழித்தே இருந்தது இடம்மாறிய மனசு. முட்கள் குத்திய போதும் வலிக்கவில்லை - அது காதல். வல்வையூரான்.
-
- 2 replies
- 3.9k views
-
-
இணங்கி வாழ்வதிலும் இன்றே இறந்து போ Jun 27, 2013 நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டது. பாய்ந்து செல்லும் காலத்திற்குத்தான் எத்தனை வேகம் வைகாசி மாதமென்றால் தார் ரோட்டில் நெருப்பெரியும் நிலவும் சுடும் காற்றில் தேகம் தகிக்கும் இன்றும் தேசக்காற்றில் வெம்மை சொரிகிறது நாலாண்டாய் தவிக்கும் நினைவுகளும் பெருமூச்சுகளும் புழுங்கித் தவிக்கிறது கார்ப்பெற் வீதிகளால் எமது கனவுகளை புதைக்கமுடியவில்லை கைத்தொலைபேசி மணியோசைகளால் கதறல்களை மறைக்கமுடியவில்லை மலைகள் இல்லையென்றோ ஆறுகள் இல்லையென்றோ அந்திரிக்காமல் ஆழக்கிணறு தோண்டி அமிர்தம் உண்ட இனம் இன்று மினரல் வாட்டர் பருகி மீளா உவகை கொண்டோம் அக்கிரமங்கண்டு ஆர்ப்பரிந்த காலம் மலையேறிவிட்டது. உன் அயல் வீட்டில் களவா …
-
- 2 replies
- 882 views
-
-
எப்போதும் நான் அப்படியே இருக்கிறேன் மற்றவரைப் புரியமுடியாது உற்றவரின் துயரம் அறியாது கற்பனை வானில் பறந்துகொண்டே கடிவாளமற்ற சிந்தனையோடு என்னைக் காயப்படுத்துவோரை கழற்றி எறிய முடியாதவளாய் மீண்டும் மீண்டும் மனதில் விழுப்புண் தாங்கியபடி விழுங்க முடியாதைதை எல்லாம் எப்படியோ விழுங்கியபடி ......... எப்படி மீண்டு வருவேன் நான் பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழ மனம் ஆசை கொள்கின்றது ஆனாலும் சூழ எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் வீரியத்தில் கைகொடுக்க யாருமேயற்று காணும் இடம் எங்கும் தீ நாக்குச் சூழ செய்வதறியாது தவிக்கிறேன் நான்
-
- 2 replies
- 720 views
-
-
( படம் முகநூல் ) இன்பத்துக்கும் துன்பத்துக்கும் வித்தியம் தெரியாத விடலைக் குழவி நான் . இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அகண்ட நீர்வீழ்சியில், இன்று நான் பட்ட இன்பம் என் வாழ்வில் கண்ட முதல் இன்பம் . அம்மாவும் அப்பாவும் எனக்கில்லை இயற்கையே எனக்கு அம்மா . அவள் மடியில் செல்லக் குழவி நான் . என்ற போதிலும் !!!!!!!!! மனிதன் கையில் நான் பட்டால் என் இன்பம் தொலைந்து விடுமே !!!!!!!!
-
- 2 replies
- 746 views
-
-
சார்ள்ஸ் அன்டனிக்கள் களத்தில்தான் வீழ்ந்தார்கள் உன் பெயரை தன் மகனின் முகவரியாக்கினார் எம் தேசியத்தலைவர். அவர் வீட்டில் தினம் ஒலிக்கும்... உன் நாமம் ... சார்ல்ஸ் அன்டனி. மனம் தளர்ந்து ஒதுங்க நினைத்தவரை இழுத்து வந்து நிமிர்த்தியவன் நீ. அதைப் பெருமையாகக் கூறுவான் உன் தலைவன். அவருக்குத் தெரியாத விடயமெல்லாம் நீ கூறுவாயாம். பெருமைகொள்...அதையும் வெளிப்படையாய் கூறும் பரந்த மனமுடையோன் உன் தலைவன். உன் ஆளுமை பற்றிப் பேசுகையில் குழந்தை போலாகிவிடுவார் எம் தலைவன். நண்பனாய், தோழனாய்,சேவகனாய், மந்திரியாய், முதல் படைத்தலைவனாய் வாழ்ந்தாய். தலைவனின் போராட்ட வாழ்விற்கு சரியான அத்திவாரமடா நீ. உறுதிதளரா நெஞ்சங்கள் முதல் வித்துக்களாகி, இறுதிவரை போராடும் பேராளுமையை அளித்தீர். …
-
- 2 replies
- 862 views
-
-
குழந்தைகளுக்கு மட்டுமே மழையின் மொழி புரியும் மழையே வா வா மழையே வா பூக்களின் மேலே வந்து உன் புன்னகையை கொட்டிப் போ ஒரு கவி சொல்லக் காத்திருக்கிறேன் நீ பூவோடு பேசிய காதலை மௌனமாக வந்து என் காதோடு பேசி விட்டுப் போ வா மழையே வா . -பா.உதயன்
-
- 2 replies
- 763 views
-
-
இந்த வானவில்,முன்பொரு பொழுதில் வண்ணங்களற்றுப்போய் வெறுமனே நீண்டு போய் கிடந்தது. என் தூரத்துக் காதலியின்,அள்ளமுடியாக் காதலை தான் வாங்கி வந்து தருவதாய் சொல்லி போன வானவில்,என் மீதான அவளின் காதலை பெற்றதும்,அழகிய வண்ணங்களை கொண்டதாய் மாறிற்று. என் மீதான அவளின் காதலை சுமக்க முடியாமல்,வளைந்தும் போயிற்று. என்னிடம் எனக்குரிய காதலை சேர்ப்பதற்க்கு முன்னரே இவ்வனர்த்தங்கள் நிகழ்ந்து விட்டதால்,அவளுக்கு மிகப்பிடித்த மழைப்பொழுதுகளில் மட்டும் தலை காட்டி,என்னிடம் அவளின் காதலை சேர்ப்பதாய் சொல்லி, நான் காணுமுன்னரே ஒழிந்து மறைந்து விடுகிறது
-
- 2 replies
- 655 views
-
-
உள்ளதை மறைத்து உள்ளவரோடே உறவாடும் ஊடக நரிகளின் உஷ்ணப் பேருமூச்சோ . வள்ளலார் வாக்கையே வசைபாடிய - நம் வம்சம் போக்கற்ற போலிச்சாமியார்களின் புகலிடம் ஆனது கண்ட பூமித்தாயின் கனல் முச்சோ மாட்டுக்கே நீதி தந்ததோன் - மண்ணில் மட்டற்ற மாசு புரிந்தார் பணம் செய்யும் மாயத்தால் மண்புளோராய் மாறி மானமின்றித் திரிதல் கண்டு வெட்கித் தன் விழி மறைத்த நீதித் தாயின் சின மூச்சோ சுழலத் தொடங்கிய மின்விசிறி என் சிந்தனைக்கு சுவரிடவே வழமை வாழ்க்கைக்குத் திரும்பியவளாய்...... …
-
- 2 replies
- 900 views
-
-
நிலா முஸ்லீம் பெண்ணா? முகில் பர்தாவுக்குள் அடிக்கடி முகம் மறைக்கிறதே!
-
- 2 replies
- 1.1k views
-
-
குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே! உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே! ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக் காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே! எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ? வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம். ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும், பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும், கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும், ஈர்ப்பு இருக்கிறது,.... எனினும் இப்போது முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க, உப்புக் க…
-
- 2 replies
- 1.3k views
-
-
என் அன்புக் கவிஞன் சே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”புலவனும் வறுமையும் பிரிக்க முடியாதவை” என்று சொன்னதாக கனடா சென்றிருந்தபோது விஜயன் சொன்னான். இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர்கள் கலைஞர்களால் சொல்லப் பட்டு வருகிற வார்த்தைதான். சில நாட்க்களின் முன்னம் பாவைக்கூத்து கவிதையை எழுதி முடித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கவிதையை எழுதியபின்னர் என்னை துக்கம் சூழ்ந்தது. என் அப்பா அம்மா இருவருக்குமே கவிதைப் பைத்தியம் பிடித்திருந்தது. இரு துருவங்களான அவர்களைக் கவிதை மட்டும்தான் சேர்த்து வைத்திருந்தது. நான் பிறந்தபோது ஜாதகம் எழுதிய அப்பாவின் நண்பர் சிறீபதி மாஸ்ட்டர் என் பெற்றோரை மகிழ்விக்கவோ என்னவோ . இவர் கவிஞராவார் என எழுதி வைத்திருந்தார்.…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழிலும் இனிது உன் தேன்மதுர குரல். மனக்கண்களிலும் இனிது முகம். சிறு குழந்தையின் மழழை புன்னகை உன் கண்வழிய, பார்க்கும் கண்கள் மயங்கும்நிலை தாண்டியும் உரக்கம் மாண்டு >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> சிறு வெற்றிகளும் இமைய மலை உச்சி கொண்டு சென்றது, நீ அருகில் இருந்ததால். சிறு தோழ்விகளும் ஆழ்கடலின் இருளை காட்டியது. நீ இல்லாபோது சேரும்போது கண்ட மகிழ்ச்சியும் பிரியும்போது கண்ட உணர்ச்சியும் …
-
- 2 replies
- 1.3k views
-
-
நினைவுகளின் எச்சங்கள்...... கவிதை..... வானத்தை பார்த்தவண்ணம் மறைவுக்காய் இடம்தேடி கால்வலிக்க ஓடுகிறேன்..... என் தலைமேலாய் விமானங்கள் பறந்து குண்டுமழை பொழிகிறது..... உயிர்காக்கும் பந்தயத்தில் ஒலிம்பிக்போட்டி வைத்தால் தங்கப்பதக்கம் வெல்லும்; முதல் தமிழீழத் தமிழன் நான்; ஆனாலும் ஈழத்தின் கொடியின்னும் ஒலிம்பிக்கில் பறக்கவில்லை இளவயதுக் காரணத்தால்; அங்கே அனுமதியும் எனக்கில்லை..... கல்லுத் தெருக்களிலே நான் ஓடும் வேகத்தால் காலில் குருதிவந்து வெள்ளைமண் கூட செம்மண்ணாய் மாறிவிட.... நெருஞ்சி முள்ளெல்லாம்; கால் நிகங்களிலே வேல் பாய்ச்சி விட முடிவில்லாத் தூரத்துக்கு முடிந்தவரை ஓட்டம்.... எ…
-
- 2 replies
- 822 views
-
-
காலைக் கடிக்கமுன் கையைபலமாகக்கடித்தது புதுச்செருப்பு @ நித்தம் போனபோதும் முகம் சுழிக்கவில்லை மணிமுள் @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.3k views
-
-
என் உற்ற; என் துயரங்களில் பங்குகொண்ட, எனக்கு பிரச்சனை என்றால் தானும் கலங்கும் என் இனிய நண்பனின் எம் நிலமை பற்றிய பாடல் பாடல் ""யாருக்கும் அடி பணியாது....ஈழமே எம் நாடு"...
-
- 2 replies
- 997 views
-
-
நல்ல கற்பனை. பலர் வெளிச்சத்தில் நிற்பதற்காய் சிலர் இருட்டில் நிற்கவேண்டியது அவசியமாய் இருக்கிறதே. மணிவாசகன்
-
- 2 replies
- 1.1k views
-
-
திரைகடல் ஓடி திரவியம் தேட மூழ்கிய இடத்தில் நங்கூரம் இட்டு நிற்க்கும் கப்பல்-நாம் தலைமேல் பிரச்சனையும்-பொறுப்பும் சகோதரர்களில் கனவும் சுமந்து வந்தோம்- நாம் மூழ்கியதில் மூச்சுத்தினர வத்தது புலம்பெயர் நாடுமூச்செடுக்க முட்யாது தினறியதை அன்பு உடன்பிறப்புக்கு சொல்லவில்லை-நாம் உயிர் கொடுத்து உடன் பிறப்பை காப்பாற வந்தோம் உயிரின் பிரிவும் உறவின் பிறரிவு சமம் என்று அறியா- நாம் திரைகடல் ஓடி தமிழ்முகம் தேடி ஆறுதல் அடைந்தோம் கடைசியில் -நாம் http://www.tamil.2.ag/
-
- 2 replies
- 1.5k views
-
-
கூனி குறுகி நிற்கிறேன் மாமா என் ரத்தத்தில் நானே குளிக்கிறேன் மாமா ஒரு சில நிமிடங்களில் என் உயிர் போய்விடுமே அந்த பாவத்திற்கு நீங்கள் தான் காரணம் மாமா நான் சின்னஞ்சிறு சிறுமி என்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா மாமா நாளை நான் கல்வியில் சிறந்து நிற்பேன் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா மாமா உங்கள் சுகயீனங்களை கவனிக்கும் வைத்தியர் நானாக இருப்பேன் என்று ஒருவேளை தெரிந்தால் இன்று என்னை வதைக்காமல் விட்டிருப்பீர்களா மாமா உங்களுடன் சின்னவயதில் விளையாடிய தங்கை நான் தானே மாமா உங்களுடன் ஆதரவாக என்றும் காத்த அக்காளும் நான் தானே மாமா சோறு ஊட்டி தாலாட்டி வளர்த்த அம்மாவும் நான் தான் மாமா…
-
- 2 replies
- 986 views
-
-
போகின்ற தமிழகம் எலி நிகர்த்த நெஞ்சினாய் போ போ போ ஏழ்மை தன்னில் மிஞ்சினாய் போ போ போ பழி முடிக்க அஞ்சினாய் போ போ போ படையிலாது துஞ்சினாய் போ போ போ வலி மிகுந்த தமிழரை நம்பாது வடவர் தன்னை நம்பினாய் போ போ போ கிலி மிகுந்த மதியினால் மென் மேலும் கீழ்மையில் உழன்றனை போ போ போ விதி கெடுத்த மதியினாய் போ போ போ வீணிலே உறங்கினாய் போ போ போ சதி நிறைத்த உறவினாய் போ போ போ சாவிழிம்பில் நின்றனை போ போ போ பொதி நிறைத்த பொய்மைகள் மேல் ஆர்வம் போக்கி நின்று தேங்கினாய் போ போ போ எதிரி தன்னை நம்பினாய் போ போ போ இழிமை வாழ்வு கூட்டினாய் போ போ போ பலமிழந்த தோளினாய் போ போ போ பழமை பேசு தொழிலினாய் போ போ போ குலமிழந்த நிலையினாய் போ போ போ குருதி கண்டு…
-
- 2 replies
- 893 views
-
-
புதிய இசையின் பதற்றம் பீறிட்டெழும் என் பதற்றத்தின் பார்வை அமைதி அமைதி என பச்சைப் புல் தேடுகிறது அவலங்களின் நாவுகள் பயணித்த சுவை வழியே மௌனம் யாசிக்கிறது நடுக்கம் சிவப்புக் கம்பளம் விரித்த கூடமொன்றிலிருந்து நிர்வாகவியல் குறித்த வரைவுகள் தொடங்குகின்றன குளிரூட்டப்பட்ட சதுரங்கள் உரையாடலை வாசிக்கின்றன உணவுகளின் வரிசையில் எண்ணிக்கைகள் தொடர்கின்றன பசி மட்டும் சாசுவதம் கழிப்பறை சுவர் சிரித்த இசை கனவுப் பிரதேசமாய் விரிகிறது நடுநிசியளவு அல்லது பகலா ஏதோ ஒன்றிலிருந்து எழும் ஓலம் ஞாபகங்கள் மீது நதி நீரற்ற தனிமையை வீசுகிறது நடவடிக்கைகளின் ஒழுங்கு படுத்தலை ஒளி அறைகிறது நெஞ்சுப் பலகை மீது விழிகளின் அச்சம் வினாக்குறிகளை உமிழ்கிறது பழைய கேள்விதான் …
-
- 2 replies
- 1.1k views
-
-
நான் படித்தவனல்ல படிபிக்கப்பட்டவன் அனுபவங்களால். உங்க ஊர் பள்ளியில்தான் நீங்கள் பட்டம் பெற்று இருப்பீர்கள் நான் ஏடு துவக்கியதுதான் சொந்த ஊர் பள்ளியில் ஆரம்ப கல்வி படித்ததே மூன்று பாடசாலையில். யுத்தம் என்பதை நீங்கள் பாடத்தில் படித்திருப்பீர்கள் அனால் நான் யுத்தத்துக்குள் பள்ளி சென்றவன். குடை இல்லை என்பதற்காக பள்ளி சென்று இருக்க மாட்டீர்கள் நான் குண்டு மழைக்குள்ளும் பள்ளிவரவை அதிகரித்திருக்கிறேன். நீங்கள் காகிதத்தில் செய்த ரொக்கேற்றுகளைத்தான் வகுப்பறையில் பறக்கவிட்டு இருப்பீர்கள் நான் குண்டு விமானங்கள் சுற்ற சுற்ற படித்திருக்கிறேன். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்னைப்போல் அயுத வெடிசத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆமணக்கும் நெருஞ்சியும் பூவரசும் பனங்கூடல்களும் இயல்பிழந்து போக அரசமரங்கள் எழில் கொள்கின்றது, மின்குமிழ்களின் பின்னும் தொலைபேசிக் கோபுர அடிகளிலும் தொடரூந்து தண்டவாள இடைவெளிகளிலும் யாருமறியாமல் நிறைந்துகிடக்கிறது பேரிருள் சூழ்ந்த மௌனமொன்று.. வீதிகளும் விளம்பரத்தட்டிகளும் விடுதிகளும் வங்கிகளும் வடுக்களின் மேல் வர்ணம் பூசிப்போக, அடிப்பிளவுகளில் உயிரடங்கி வெதும்பிக் கிடக்கிறது தலைமுறைக்கனவு கிராமத்து முனைகளில், சுடுகுழல்களில் ஒளிந்திருக்கும் குறிகள் விரகம் தீர்க்கும் வன்மத்துடன் அலைகின்றன. நகரத்து ஒழுங்கைகளில் தேரவாத காவிகள் தம்மபததின் பக்கத்தில் இனவாதத்தை எழுதி ஓதுகின்றனர். அதிகாரங்களும் அடையாளங்களும். நிர்வாணிகள் மீது குறிகளைப் புதைத்துவிட…
-
- 2 replies
- 595 views
-
-
கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம். போராடித் தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் - ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட - ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி - மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம் எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ? விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல் எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ? வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில் துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும் மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே.. சிரிக்கும் சிரிப்பில்…
-
- 2 replies
- 1.3k views
-
-
என்னுடன் பேச .... துடிக்கும் இதயங்கள் .... ஆயிரம் ஆயிரம் .....!!! உன்னோடு மட்டும்... பேசத்துடிக்கும் என் .... மனசை ஒருமுறை .... நேசித்துப்பார் ....!!! என்னை விட உன்னை ... அப்படி நேசிக்க யாரும் .... இருக்கமாட்டார்கள் .... உனக்காக பலர் வாழலாம் .... நானோ ..... உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 970 views
-
-
*.மனம் சுமக்கு’மே ‘ வலிகள். * (மே பதினெட்டு - கவிதை) ******************************************* *இருளும் -ஒளியும் இரவும் -பகலும் என்பதுபோல், இழப்பும் -ஏற்பும் கொண்டோம் இதனால் எம் வாழ்வில் என்பதுண்டு! – இதில் சில எண்களும் உண்டு! “அவ் வெண் பதினெட்டு!” *பதினெண்கீழ் கணக்கு” - பதினெட்டு நூல்களின் தொகுப்பு! தமிழுக்கு இதனால் சிறப்பு! *பதினெட்டு ‘மே’ என்பதிலோ எண்ணற்ற கணக்கு!.... - இங்குண்டு தமிழரின் இறப்பு! தமிழுக்கும் இழப்பு!.... *வைகாசி, புத்தம் ஞானம் பெற்ற மாதம் ! - இருந்தும் சுத்தம், மொத்தமாக மதம் இழந்த மாதம் - நித்தம் யுத்தம் செய்த மாதம்! … *நாமோ,.. சுற்றம் த…
-
- 2 replies
- 828 views
- 1 follower
-