கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தமிழ் ஈழம் தாரீர்!.. கடலிடைக் கிடந்த தீவின் கவின்மிகு கரைகள் எங்கும் படர்ந்துநல் வாழ்வு கொள்ளும் பைந்தமிழ் வம்சம் காண்மோ! இடரிடைப் படுமோ? எங்கள் ஈழமண் இழப்ப தாமோ? மடமதிக் காடையோர் முன் மறத்தமிழ் தோற்ப தாமோ? இலங்கையின் ஏறத் தாழ இரண்டிலோர் பகுதி யான நிலங்களை உடைமை கொண்டு நிமிர்ந்துவாழ் தமிழர் தம்மைக் கலங்கிட வைக்கும் நீதிக் கயவர்கள் நம்கண் முன்னே விலங்கினம் என்ப தல்லால் வேறெது சொல்வ தற்கே? இந்திய நாடே! மற்றும் ஏனைய நாட்டோரே! நீர் தந்திட வாரீர், உங்கள் தார்மிகக் கருணை எம்மேல்! மந்திகள் மேயும் எங்கள் மண்ணினை மீட்டுத் தாரீர்! சிந்நிய குருதி போதும்: செந்தமிழ் ஈழம் தாரீர்!.. செந்தமிழா, நம் தமிழீழம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
அன்னை மண் சிந்திய கண்ணீர் .. அணையாது காக்கப்படும் தீபம் .... அண்ணனவன் ஆளும் காலம் .. அனைவரும் இணைவோம் பலமா .. ஆளான ஆலமரங்கள் .. ஆழியில் அகப்பட்ட துரும்பு போல் .. ஆழமா உள் இழுக்ப்படும் மூச்சு .. ஆணிதரமா முகத்தில் அறைந்தது .. இலை என்று நினைத்தவர் எல்லாம் .. இல்லை இது இமயம் என்று வியக்க .. இன்னொருவன் வருவான் எமக்கு .. இனத்தின் இருளை போக்க .. ஈ ஆக பறந்து போகாது .. ஈட்டி போல பாய்வோம் நாம் .. ஈனர் செயல் அறுத்து வீழ்த்த .. ஈன்றவள் பெரு மகிழ்வு கொள்ள .. உலகம் ஒருநாள் புரியும் எம்மை .. உண்மை அறிந்து தலைகள் குனியும் .. உன்னத இலட்சியம் வெல்லும் காலம் .. உணர்வுடன் நாம் மாவீரம் போற்றுவோம் .
-
- 2 replies
- 697 views
-
-
நீ செத்துவிட்டதாய் அறிந்தபோது நம் தோழிகளில் ஆயிரக்கணக்கான ஒருத்தி இறந்துவிட்டாள் என்றிருந்தது நீ படுகொலை செய்யப்பட்டாய் என்றறிந்தபோது படையினரிடம் சரணடைந்தபின் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தோழிகளில் நீயும் ஒருத்தியாகிவிட்டாய் என்று வேதனையாய் இருந்தது. ஆனால் இன்று..... நீயேகூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத அரசபடையின் கோரமுகத்தை நேரில் கண்டவள் நீயாகி உலக மனச்சாட்சிகளை உலுக்கும் பேரொலியாகிவிட்டாய். உன் வெற்றுடம்பில் சூடுகண்ட பிசாசுகளையும் அதன் பின்னணியில் இருக்கும் மனிதமுகம் போர்த்திய அரக்கர்களின் முகமூடிகளையும் கிழித்தெறியும் சக்தி உன் அம்மணத்திற்கும் இருக்கிறது. கதிர்காம அழகி மன்னம்பெரியை அவமானப்படுத்துவதாய் எண்ணிய சிங்களவர்கள் தம்மீது அழிக்க ம…
-
- 2 replies
- 708 views
-
-
தூக்கமில்லாத இரவுகளோடு போராடித் தோற்றுப்போனபோதும் கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்! நினைவுகளும் ஞாபகங்களும் ஒவ்வொரு இரவிலும் என்னைக் கொன்று போட்டாலும், உன் நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன் ... அதிகாலைகளில்...! இப்பொழுதெல்லாம்... அதிவிரைவுச் சாலைகள் எனக்கு , பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது ! வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை! சதா ரணமுமாய் சாவதைவிட செத்துப்போனால் பரவாயில்லை என்று தோன்றும்போது, சில அசாதாரணங்கள் கூட.... சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ? நான்.... செத்துத் தொலைந்தால் நன்றாய் இருக்கும்!
-
- 2 replies
- 812 views
-
-
தாயாகி.... தந்தையாகி...! இந்த ரோஜாப்பூ மலர்ந்ததைக்கண்டு சிரித்த முதல் தோட்டக்காரன் நீ! பெண்ணாய் நானும் பிறந்திடவே முகம் சுழித்த பேதையர்க்கு மத்தியிலே பூரிப்புடன் எனைத் தூக்கி முதன்முதலில் கொஞ்சியதும் நீதான்! அம்மாவின் அங்கலாய்ப்பும் இதுவேதான்...! பல்லு முளைத்து சிரிக்கையிலே தலையில் பயறு கொட்டி வாழ்த்தியதும் நீயே தான்! தத்தித் தாவி உருண்டு விழுந்து நடக்க முயலுகையில்... முன்னாடி வந்து நின்று என் விரல் பிடித்து நடை பழக்கியதும்நீ தான்! உன் தோளே என் அரியணையாய்..... எனை அதில் சுமந்துகொண்டு உலகை சுற்றிக் காட்டியதும் நீ... பயத்தோடு என் விரல்கள் உன் தலை மு…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஏன்... சிந்திக்கிறாய் ..? பூ தருவதா ....? பூ வளையம் தருவதா ...? என்றா .....? @@ கொத்து கொத்தாக ..... இருந்த காதல் ஏன் ..... தனி இதழாக..... வந்துவிட்டது ...??? @@ காதல் பூ போன்றது .... தூரம் நின்று பார்த்தல் ... அழகு .... தொட்டு பார்த்தால் .... ஆபத்து ....!!! @@ & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................
-
- 2 replies
- 1.3k views
-
-
கலைஞனுக்கு ஒரு மடல்.. அயல் நாடாம் தாய்த்தமிழ் திரு நாட்டின் மூத்த கலைஞனே.... வயதில் மூத்தோனே....'' தமிழ் நாட்டின் தறுதலையே..'' இத்தாலிக்காரியின் செருப்பே...'' தாய் நாடு - உன் தமிழ் நாடு கூட உன் மறைவிற்காய் கண்ணீர் வடிக்காது......'' கடல் நீரில் கூட - உன் சாம்பல் கரையாது...'' உன் இறப்பின் அன்று..... கண்ணீர் என்ற ஒன்று இருந்ததாய்... எவருக்கும் ஞாபகம் இருக்காது...'' அமைதிப்படை அன்றும்.... முகநூலில் இருந்து
-
- 2 replies
- 785 views
-
-
சங்கமம் ஒற்றுமை உயர்வில் சங்கமம், ஆத்திரம் அழிவில் சங்கமம், நதி கடலில் சங்கமம், கதிரவன் மேற்கில் சங்கமம், கற்பனை கவிதையில் சங்கமம், பிரிவு சோகத்தில் சங்கமம், ஐயம் தோல்வியில் சங்கமம், வசந்தம் இளமையில் சங்கமம், காதல் இதயத்தில் சங்கமம், மனிதநேயம் பண்பில் சங்கமம், நல்மணம் அன்பினில் சங்கமம், பிறப்பு இறப்பில் சங்கமம், படிப்பினை மனதில் சங்கமம், ஊக்கம் உற்சாகத்தில் சங்கமம், உழைப்பு உயர்வில் சங்கமம், முயற்சி வெற்றியில் சங்கமம்.
-
- 2 replies
- 1.1k views
-
-
அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள் அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது சிதைமேட்டில் அழிக்க முடியாத உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது உடைத்தெறியப்படுவதும் சிதைத்து புதைக்கப்படுவதும் யாரோ ஒருவருடைய பிள்ளையை. நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்? எதிலும் நிரப்ப முடியாத எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள் உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா? அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா? பெற்றவர்கள் யாரோ எல்லாம் இருதயத்திற்குள் அடித்தழுது புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன. யாரோ ஒருவருடைய பிள்ளை ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில் உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கி…
-
- 2 replies
- 644 views
-
-
1987 யூலை 5 …. --------------------------------- இது வெறும் நினைத்து மறந்திடும் நினைவுநாளல்ல எம் தேசம் மீட்டிடத் தீயென வாழ்ந்தவர் தீரத்தைப் பாடிடும் வீர நாளன்றோ! விடுதலைப் பாதையின் தடைகளை வீழ்த்திட வெடிகளாய் மாறிய வேதங்களன்றோ! இவர் பாதம் பதிந்த நிலங்களின் மீதிலே பூக்களைத் தூவிடும் காலத்தைப் படைப்போம்! மக்கள் வாழ்வினை நெஞ்சிலே சுமந்தவர் தம்முயிர் வீசிடும் வேளையிற் கூடத் தாயக விடுதலை கீதம் பாடிடும் பெரும் ஞானிகளானோர்! ஞாலம் மீதிலே வாழ்கின்ற வரையிலே இவர் நாமத்தை எங்கள் நெஞ்சிலே சுமப்போம்! - நொச்சி -
-
- 2 replies
- 908 views
-
-
மன்னிப்பு என்பது .. ஏரோது மன்னன் தேடிய இயேசுவே எங்கே போகின்றீர் ? பாரிலே வாழ்ந்தவர் பாவிகள் தானய்யா தேவனே ஏகி நின்றீர் ! நீரோடை போலே நீர் சொன்ன வேதங்கள் நீர்க் குமிழ் ஆனதுவோ ? வேரோடு மானிடர் வீழ்ந்திட்டார் .. பாவத்தில் வேதனை தானதுவோ ? அன்புடன் நேசித்த அப்போஸ்தலன் இராயப்பன் அறியேன் .. என்றுரைத்தான் முப்பது வெள்ளிக் காசுகள் வேண்டி யூதாசும் முத்தமிட்டான் அன்றாடம் உம் நிழலில் அலைந்த இச் சீடர்கள் வென்றார்களா விதியை ? இறைவா .. எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்மை புரிந்து கொண்டேன் எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்ம…
-
- 2 replies
- 1.4k views
-
-
இன்று face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது ... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்! பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! அம்மா வருவதாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள் ஓடி ஒளியும்போது... கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது... உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது... பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது... அப்போதுதான் போர் என்பது புரியும் எனில், அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள். அடுத்த தேர்தல் வந்துவிட்டது வரிசையில் நின்று வாக்களியுங்கள். ---------------------------------------------- பயணத்தில் உங்கள் இருக்கையில் இன்னொருவர் அமர்ந்துகொண்டு எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்? சாலையில் உங்கள் வாகனத்தை இன்னொரு வாகனம் இடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர் காயம…
-
- 2 replies
- 1.3k views
-
-
எங்கே போகிறாய்? வெளிநாட்டில் தமிழனுடனும் தமிழில்பேச வெட்க்கப்படுகிறாய் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... வேற்று மொழிபேசி நீயும் உன் தாய்மொழி மறந்து நீ எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... காதில தோடுபோட்டு எடுப்பாக நடந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தலைமுடிக்கு சாயம்பூசி குதிரைகால் செருப்புபோட்டு எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... வெளிநாட்டில் வந்து உன் பண்பாடு மறந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தமிழின் சமயம் விட்டு தாவிக்குதித்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்..…
-
- 2 replies
- 1.3k views
-
-
வறுமையின் பிடியில் உயிர்கள் துடிக்க கடவுளுக்கு வேண்டுமா பாலாபிஷேகம்?????????? சிலைகள் விலைகள் கேட்பதில்லை கடவுளை மனிதன் பார்க்கவில்லை...... உதவும் உள்ளமே கடவுளடா,,,,,,,,,, உனக்கு மேலாக இருப்பது என்றும் உன்னுடயதில்லை பகிர்ந்து கொடு பட்டினிச்சாவு பறக்கட்டும்.............. ***** நன்றி முகநூல்
-
- 2 replies
- 659 views
-
-
சிவப்பு ஒற்றை ரோஜாவை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் காதல் வரவில்லை என் அன்புத் தோழியே என்னினம் சிந்திய குருதியின் விம்பங்கள் பட்டுத் தெறிக்கும் இதை இனிமேல் காதல் சின்னம் என்று சொல்லாதீர்கள்
-
- 2 replies
- 887 views
-
-
மொழிக்கு உயிர் எழுத்துப்போல என் உடலின் உயிர் நீ தான் பெண்ணே? நீ கண்களால் பேசும் அந்த மொழிக்கு இவ்வுலகில் வரிவடிவம் உண்டா பெண்ணே? உன்னுடய சிரிப்புக்கு நிகரான சொல் எந்த மொழியில் உண்டு பெண்ணே? நீ பேசுகின்ற குரலின் இனிமை எந்த இசைக்கருவியில் தோன்றும் பெண்ணே ? கருமுகில் போன்ற உன் கூந்தல் நறுமணம் எந்த மலரில் உண்டு பெண்ணே? உன் இதயதின் துடிப்பு என் பெயர்தான் சொல்கிறதா பெண்ணே? உன் சுவாசத்தின் பிரணவாயு நான் தானா பெண்ணே?
-
- 2 replies
- 1.2k views
-
-
எல்லாம் உயிர்பெறும் ச.ச.முத்து எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். வன்னிமண்ணின் மொத்தஅழகும் நந்திக்கடலின் அலைவடிவும் அழகான என் தேசத்து எழில்அனைத்தும் அவன் இல்லாமல் எப்படியாய் உறைந்து கிடக்குது பாருங்கள்.-கால் படர்ந்த கல் எழுந்து அகலிகை ஆனதுபோல் அந்தக் கவிஞன் எழுதி என் தேசம் எழுந்து வரட்டுமே. மூச்சும் பேச்சும் இன்றி ஒரு மூலையில் கிடந்துவி;ட்டு போய்விடலாம்.-ஆனால் அவன் பாட்டும் சந்தக் கவியும் இன்றி எப்படியாய் காலம் இனிக் கரையும்.? எதிரிராணுவத்தில் சின்னஓய்வுப்பொழுதில் …
-
- 2 replies
- 933 views
-
-
சாம்பல் பூக்களின் கண்ணீரை திருடும் தேசமிது .. வெந்து வடியும் ஊழியின் பெருமூச்சுக்களை தின்று களிக்கும் கூட்டமுமிது இயலாமையின் ஓலங்களின் மீது வக்கிரக்குறிகளால் புணரும் அரசுமிது.. ஒ கட்டியக்காரர்களே.. எங்கு போனீர்கள் ? சாவுப் பட்டியலில் புள்ளடியிடுகிறீர்களா ஜெனிவாவில்? கண்ணீரால் நிரம்பிய எங்கள் வாசல்களில் கால் நனைத்தீர்களே.. நீரருந்தி நிமிர்ந்து நல்ல உணவருந்தி இன்னும் ஓராண்டு உள்ளக விசாரணைக்கு ஒப்புதல் அளியுங்கள்.. பிணங்களைப் புணர்ந்தவர்கள் காவலில் தேவதைகள் சிறகு விரிப்பதாக வரைவுகளை எழுதுங்கள்... இருள் மூடிக்கிடக்கிறது எங்கள் வானம் நட்சத்திரங்களையும் சூரியனையும் தொலைத்துவிட்டு.. பேரமை…
-
- 2 replies
- 745 views
-
-
[size=5]தமிழினம் தலை நிமிர்ந்து வாழ தம்மையே அர்ப்பணித்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள்[/size] [size=3][size=4]தமிழினம் தலை நிமிர்ந்து வாழ [/size] [size=4]தம்மையே அர்ப்பணித்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள்[/size] [size=4]கடலிலும் தரையிலும் பகைவரை அழித்த[/size] [size=4]காவிய மறவர்கள் கரும்புலிகள்[/size] [size=4]அன்னை தந்தையை பிரிந்து[/size] [size=4]அடிமை நிலையை போக்கிய வீரத்திலகங்கள் இவர்கள்[/size] [size=4]தலைவர் காட்டிய வழியில் பகைவர் பாசறையை[/size] [size=4]தகர்த்தெறிந்தான் மில்லர் முதற் கரும்புலியாய்[/size] [size=4]ஆயிரமாயிரம் கரும்புலிகள் அவன் வழியில் [/size] [size=4]ஆகுதியாக்கினர் தம்முயிரை[/size] [size=4]ஈழமெனும் பயிர் வளர[/size] …
-
- 2 replies
- 479 views
-
-
தீப திரு நாளில் ..... தீய எண்ணங்கள் தீயாகட்டும்..... தீய செயல்கள் தீயாகட்டும்..... தீய குணங்கள் தீயாகட்டும்......!!! தீயை போல் நிமிர்ந்து நிற்ப்போம்....... தீயவற்றுக்கு தீயை மூட்டுவோம்...... தீண்டாமைக்கு தீயூட்டுவோம்......!!! தீபாவளி அன்று...... தீனி இல்லாதோருக்கு ..... தீனி போடுவோம்.... தீபத்தை ஏற்றும்போது .... ஒளிரட்டும் அகம்...... அகம் மட்டுமல்ல உள்ளகமும் ...... ஒளிரட்டும்.............!!! & இனிமையான....... இன்பமான....... இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இனியவன்
-
- 2 replies
- 790 views
-
-
''கண் மூடி தாக்குதல்'' கண்ணை மூடி வந்து இங்கு கண் மூடி தாக்கிறியே.... கஸ்ரப் பட்டு நான் வடித்த கவிதைகளை வெட்டுறியே... காரணங்கள் கேட்டு வந்தால் சொல்ல நீயும் மறுக்கிறியே.... உன் மனசில் என்ன வைத்து என்னை வந்து தாக்கிறியோ...??? விதி முறைகள் மறந்து வந்து வீண் பழியை வீசிறியே.... காரணங்கள் இன்றி வந்து கண் மூடி தாக்கிறியே.... கோரமதை வந்து ஏனோ இன்று என்னை சாடுறியோ....??? அட என் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அடைத்துவிட துடிக்கிறியோ....??? அதனாலோ வந்து என்னில் கண் மூடி தாகிறியோ....??? நன்றி வன்னி மைந்தன் :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: …
-
- 2 replies
- 1k views
-
-
அகத்தியன் என்பவர் தற்போது சிறையில் இருக்கும் போராளி அவர் எழுதிய கவிதைகளை இந்த தொகுதியில் இணைக்கிறேன்; தேடல்...! கிழித்தெறியப்பட்ட இதயத்தாளின் ஒரு புறத்தில் அடைத்துவைக்கப்பட்ட எங்கள்-அழுகையொலியும்,வேதனையும்.., அருகதையிழந்த மக்களின் குருதிச்சாயமும் குரூரத்தின் கோரத்தனமுமே மிஞ்சிக்கிடக்கிறது.....! எடுத்தவர்கள் எவராயினும்- காணாமல் போனவர் சங்கத்தில் காட்டிப்பதியுங்கள் எங்களின் இருப்பையும் எங்களின் இழப்பையும் நாங்கள்- காணாமல் போவதற்குள்..! நன்றி அகத்தியன்
-
- 2 replies
- 1.1k views
-
-
வாழ்த்துக்கள்...! இது தான் நம் நாடு கலந்து கொள்ளாத கடைசி மாநாடு....! அடுத்தமுறை ஒன்பதாம் நாடாக கண்டிப்பாய் எம்மை வரவேற்பீர்....! அங்கே: இன்று நீங்கள் செய்வது போல் குடும்பக்கதை பேசோம்...! தொழில்நுட்பம் உரைத்து - உமை வியப்பில் ஆழ்த்துவோம்....! தீவிரவாதத்துக்கு - உண்மை இலகணம் சமைப்போம்....! நாம்நாட்டின் வளம் கொண்டு நாம் வாழும் இரகசியம் உங்களுடன் பகிர்ந்தே மகிழ்திருப்போம்....! முடியும் என்பாதே நம் தாரக மந்திரமாய் ஆங்கு உரத்தே ஒலிக்கும்....! வேண்டும் என்றால் இருந்து பாரும் நடக்க இருப்பதை உரைப்பது தான் நம் பரம்பரைப் பழக்கம்....!
-
- 2 replies
- 1.1k views
-
-
காகித எழுதி. தேர்ந்த கவி ஒருவனின் கைகளில் சிக்கிக்கொண்ட காகித எழுதி கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது காகிதத்தின் வெற்றிடங்களை கனமான பொருளோடு... சிறந்த சிந்தனாச் சிப்பியின் கைகளில் சிக்கிய சிறிய தூரிகை கிறுக்கிய அகண்ட நெடிய ஓவியத்தைப்போல் நிறைத்து வழிந்தன கவிதைகள் வெற்றிடத்தில் இருந்து வெற்றிடத்தைப் பற்றியதாக... சூனியத்தில் இருந்து வெறுமையில் இருந்து பிறந்துகொண்டிருந்தது பெருமைகளின் சிந்தனை பிரசவிக்கும் தாயின் முக்கலும் முனகலும் இல்லாமலே பிரசவித்துக்கொண்டிருந்தது காகித எழுதி கவிதையை நியாங்களில் இருந்து நிஜங்களில் இருந்து வெறுமையை நிரம்பிக்கொண்டு பிறந்துகொண்டிருந்தது அந்தக் கவிதை தேன் நிறைந்த பூவின் வாசமாக கிறங்க வைத்தன வெற்றிடத்தைப் பற்றி …
-
- 2 replies
- 723 views
-