Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மஞ்சள் வெயிலாய் சிரித்தாய் , கொஞ்சும் குயிலாய் சிலிர்த்தாய் நெஞ்சில் புயலாய் அடித்தாய் மிஞ்சும் செயலை தடுத்தாய் . அடடா உன்னை பார்த்ததும் மனசெல்லாம் பறக்குதே அடியே ஒன்னும் புரியல என் அழகெல்லாம் மறக்குதே வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... உன் பேரில் என் பேரும் சேரத்தான் வேணும் தமிழ் மொழி கொஞ்ச கவிதைகள் மிஞ்ச ஆகாயம் தூளாகும் நீ பார்த்தால் என்காயம் இங்கு ஆறாதே நீ சிரித்தாலே என்ன மாயம் தனை செய்தாய் ஏ பெண்ணே கானலாய் மிதக்கிறேன் உன்னாலே உடைகிறேன் ஆலென்று இருக்கிறாய் வேராக துடிக்கிறேன் . வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... …

  2. காதலைப்பிழிந்து பிழிந்து கவிதை வடிப்போம்..! மென்மனசுக்காரர் நாமெனப் பீற்றித் திரிவோம்..! எம்மைக் கடிக்கும் எறும்பையும் தடவிக்கொடுக்கும் வள்ளலார் ஆவோம்! மிருகவதைக்கு எதிரானவர் என்று கோஷமிடுவோம்..! ஏட்டில் எல்லாமே எழுதி வைப்போம்! சொல்லில் வாள் வீச்சு நடத்துவதே நம் செயலாக்கி மகிழ்வோம்! துடித்து அழும் என் இனம்.. உயிர் வதையில் வலி கொள்ளும்.. என் உதரம்.. முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள எம் உறவுகள்.. ம்ஹீம்.. அவர் விழிநீர் துடைக்க கூட விரல் கொடுக்கமாடோம்.. ஏனெனில் நாம் மனிதாபிமானிகள்..! - அஞ்சனா மூலம்: கரும்பு வலைப்பூ

  3. அன்னை மண் மீட்க அவதரித்த புத்திரரே! தாயைப் பிரிந்து தந்தையையும் விட்டகன்று பாசப் பிறப்புகளையும் பகலிரவாய் பாராது தேசத்தின் கடமைதனை சிந்தைமேற் கொண்டீரே! எம் மண் மீட்பதற்கு எதிரியுடன் போரிட்டு புண்பட்டு வந்தாலும் புலிப்படைக்கு பேர் சேர்த்த்Pர். இடிபோல் துன்பங்கள் எத்தனைதான் ஏற்படினும்; மலைபோல் நிமிர்ந்து நின்று தமிழர் மானம் காத்தீரே! உங்கள் வீரத்தால் - தமிழர் உலகெங்கும் புகழ் பெற்றார். தோளை நிமர்த்தி நின்று கோழை நாமும் தமிழரென்றோம். நீங்கள் இடியாய் மின்னலாய் கந்தகமாய் நெருப்பாய் எதிரியின் பாசறைக்குள் ஏவுகணையாய்; புகுந்தீர்கள். நிலத்திலே வீழ்ந்தாலும் இரத்தத்தால் ஈரமாக்கி சதையை உரமாக்கி எம் சந்ததிக்கே வளமானீர்! …

  4. காலை வந்தது காபி வந்தது நா இனிக்கவில்லை! சேதி கேட்டதும் உள்ளம் உடைந்தது யாருக்கும் புரியவில்லை! ஆதி முதல் தலைவன் கூட இருந்த ஒருவன் பாதி வழியில் போவான் என்று யார் அறிவான்? பாவி ஒருவன் செய்த செயல் ஆவி துடிக்க வைத்ததம்மா! சிரிக்கின்ற ஒரு புலி எரிகின்ற தீயில் வேகுதம்மா! தெரிகின்ற ஈழத்துவாசல் பார்க்குமுன் விரிகின்ற சிரிப்படக்கி பறந்தாயே செல்வா...! முதலில் ஒரு சிங்கம் போனது இப்போது ஒரு புலியும் போகுது வலியும் வஞ்சகமும் எம் ஈழப்பாதை எங்கும் விரிந்தே கிடக்குது! தமிழ்ச் செல்வா... வலிக்குது நெஞ்சம்... கோபத்தின் கொந்தளிப்பில் எரியுது உள்ளம்... ஏய்! பகையே அடாது செய்தாய் விடா…

  5. தேர்த் திருவிழா ----------------- நினைத்து பார்க்கிறேன்.... கோயில் திருவிழாவை.... பத்து நாள் திருவிழாவில்.... படாத பாடு பட்டத்தை ...! முதல் நாள் திருவிழாவிற்கு.... குளித்து திருநீறணிந்து.... பக்திப்பழமாய் சென்றேன்... பார்ப்பவர்கள்..... கண் படுமளவிற்கு....! இரண்டாம் நாள் திருவிழாவில்... நண்பர்களுடன் கோயில் வீதி..... முழுவதும் ஓடித்திரிவதே வேலை..... பார்ப்பவர்கள் எல்லோரும்..... திட்டும் வரை ....! மூன்றாம் நாள் திருவிழாவில்.... நண்பர்கள்மத்தியில் .... மூண்டது சண்டை ..... கூட்டத்துக்குள்..... மறைந்து விளையாட்டு ....! நாளாம் நாள் திருவிழாவில்.... நாலாதிசையும் காரணமில்லாது.... அலைந்து திரிவேன் ...! ஐந்தாம் நாள் த…

  6. ஆனந்த விகடனில் இந்த வாரம் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி" என்ற எனது கவிதை தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ளது, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மனசுக்குள் பனித்துளி ஒரு குழந்தையைக் கைப்பிடித்துக் கூட்டிவருவதைப்போல் இந்தக் குளிர்க்காலத்தை என்னிடம் கொண்டுவந்துவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது மழைக்காலம். நெற்பயிரின் நுனியில் ஒரு பனித்துளி முழு வயலையும் வானத்தையும் தலைகீழாகப் பிரதிபலிக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக கதிரின் வெம்மையில்ஆவியாகிறது. மறுநாளும் அதே நெற்பயிரில் அதேபோல் பனித்துளி …

  7. ஆகாயக் கூரையின் கீழ் அலைபாயும் நினைவுகளை அலையவிட்டு அலையவிட்டு ஆனசுகம் தேடுகின்றேன். காயம்பட்ட நினைவுகளை கண்ணீரில் தோய்த்தெடுத்து நாளைவரும் தலைமுறைக்கு நல்லகவி பாடுகின்றேன். தண்ணீரில் துன்பம் கரையாது என்றே கண்ணீரில் மையெடுத்து கவியெழுதப் பார்க்கின்றேன். மேகம்போல் நெஞ்சில் முன்னோடும் நினைவுகளை முன்னிறுத்தி முன்னிறுத்து முகவரியை தேடுகின்றேன். முன்நிலாக் காலத்தில் - என் முதிராத பருவத்தில் கண்டதெல்லாம் கனவாமோ ? கண்டறியத் துடிக்கின்றேன். இந்தநிலாக் காலத்தில் யாருமில்லா பக்கத்தில் அந்தநிலா ஒளியெறிந்து - என்னை விளையாட அழைக்கிறதே. உள்ளசுகம் அத்தனையும் அடைந்துவிடத் துடித்தாலும் வந்ததெல்லாம் வலி…

    • 2 replies
    • 1k views
  8. அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு விலைக்குறைப்பு ஊ…

  9. Started by கோமகன்,

    பசியின் வலி பார்வையில் தெறிப்பு முல்லையின் மைந்தர்கள் மற்றவர்களுக்கு பசி போக்கிய காலம் போய் ஒரு பிடி சோறுக்காய் நாலுகால் பிராணிபோல் ஆணவத்தின் பின்னால் ஆரோகணிக்கும் அவலம்தான் என்ன ? புலத்திலே புறணி படிக்காமல் பேச்சைக் குறைத்து செயலை கூட்டினால் நாலுகால் இருகாலாக வருமே!! ஒருநாளிற்கு ஒரு யூறோ போக்கிடுமே என் இனத்தின் இழிநிலையை ஒருவேளை சிங்கவம்சங்களுக்கும் நாளை இதே நிலை வரலாமோ ?? இப்பொழுது சிங்கங்கள் சிங்காரமாய் எம் நிலைகண்டு சிரிக்கலாம் அவர்களுக்கும் பசி ஆழிப்பேரலையாய் வந்தபொழுது கைகொடுத்தோமே ஏனெனில் நாங்கள் தமிழர் !!!!!

    • 6 replies
    • 1k views
  10. களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட சின்னாவும், வடிவேலும், சிலுக்கோட கூத்தாட குத்தாட்டம் போட்டபடி கு. சாவும் தள்ளாட கானத்துப் பிரபாவும், கதை எழுதும் மணிப்பயலும் கதவோரம் நின்று நின்று களத்துக்குள் கல் பொறுக்க வானவில்லும் வெண்ணிலாவும் வக்கணையாய் பேச்செடுக்க பொக்கைவாய் திறந்து யம்மு போயிலை சாறுமிழ விண்ணான டங்குவுடன் விம…

  11. "பகை வந்த வாசலில், சிறையுண்ட வாழ்வில் பயம் வந்து சேரும். தடை வென்ற பூமியில், நிமிர்கின்ற போதில் பலம் வந்து சேரும்." (ஈழத்தில் பல சந்திகளில் இப்படிப்பட்ட வாசகங்கள் உள்ளன.)

    • 2 replies
    • 1k views
  12. Started by nunavilan,

    காதலி மலர்களிலும் சிறந்தவளே என் கரம் மறுத்த கனிமொழியே - உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வஞ்சி உன்னிடம் நான் கெஞ்சி நிற்க வெஞ்சினம் கொண்டு வெறுத்து சிவந்;தவளே செவ்வானமும் சிறகடிக்கும் புள்ளினமும் வண்ணிலவும் வருடும் பூங்காற்றும் செந்தணல் மூட்டி என்னைச் சிதறடிக்க உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வெண்சங்கு கழுத்தழகி விலையற்ற மணியவளே உன் சொல்லில் உண்மையில்லை உதயம் இனி உலகிலில்லை வெறுத்து நிற்கும் மலரிடம் வெதும்பி நிற்கும் வண்டு இது உயிரற்று விழுமொழிய ஒதுங்கி மட்டும் போய்விடாது என்றாவது உன் உணர்வுகளில் சலனம் என்று ஒன்று வந்தால் உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில். . . . eelam…

  13. அதிகாலை எழுந்து..... ஆண்டவனை நினைத்து ..... இனிய புன்னகையுடன்..... ஈகை எண்ணத்துடன்...... உழைக்க ஆரம்பியுங்கள்.... அனைத்தும் வெற்றியாகும்.....!!! ^^^^^ இனிய காலை வணக்கம் இனிய உள்ளங்களே இவன் உங்கள் இனியவன் ^^^^^^ இனிய காலைமதியம் மாலை இரவு வணக்கத்தை தெரிவிக்க விரும்பும்உறவுகள் இந்த திரியில் தொடர்ந்து வாழ்த்தலாம் நன்றி நன்றி

  14. Started by வர்ணன்,

    இரந்து வாழ்பவனுக்கு... நித்தம் இறப்பு........! இனத்துக்காய் வாழ்பவனுக்கு... புத்தம் புதிதாய் தினமும் பிறப்பு!! வானம் இருண்டு போனால்... பூமி அழியாது! சிறு நரிகள் கத்தி... சிறுத்தை புலி சாகாது! நேற்றைய சந்ததி போட்ட- எச்சம்... தாயின் ......... பொட்டு-இடும் இடத்தில் எரிவாய்.... ஓடிவந்து அசிங்கம் துடைத்தீர்..... நீர் ஓராயிரமாண்டு வாழ்க ... நலமாய்!! மண் ஆள நினைப்பவர் எல்லாம்.. மகுடம் தமக்காய் சூடி கொள்வார்... மாமலையே-மண்ணை நேசித்த நீர்... போனால் - என்ன தர போகிறோம் உமக்காய் நாம்?!

  15. Started by priyan_eelam,

    தேசத் தேர் நிலைக்கு வராமல் சிலருடைய சிலைக்குக் கீழே சிறைப்பட்டு விட்டது! எங்கள் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு வடமிழுக்கச் சொல்கிறார்கள் இந்த வல்லவர்கள் தண்­ரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது தாய் நாடு- எங்களுக்கே தாகம் இன்னும் தணி‘யமல் இருக்கிறது! B)

  16. [size=3]அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?"[/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா!!"[/size] [size=3]சங்கட மடத்துக்கு [/size] [size=3]அக்னி கோத்திரம்[/size] [size=3]சைவ மடத்துக்கு [/size] [size=3]பிள்ளைவாள் மாத்திரம்[/size] [size=3]பேரூருக்கு [/size] [size=3]வெள்ளாளக் கவுண்டர்[/size] [size=3]கோவிலூருக்கு [/size] [size=3]நாட்டுக்கோட்டைச் செட்டி[/size] [size=3]சாமித்தோப்புக்கு [/size] [size=3]நாடார் அய்யா[/size] [size=3]"அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?" [/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க…

  17. காலம் உலர்த்த மறந்த நீர் விரல்களில் ஒட்டிக் கொண்டது தன்னிலை பகிராமல்.. வலிந்த வெப்ப இழப்பினை உருவாக்கி, திரட்டத் தொடங்கியது ஆதிச் சிதைவுகளை, ஈமத்தாழிகளையும் வண்டல் படுகைகளையும் கிளறி, சூரிய நட்சத்திரங்களுடனும் கனியாத கருமேகங்களுடனும் உறவாடி, காற்றில் நெருப்பில் உப்பு நீரில் நுகர்ந்தும் எரிந்தும் மூழ்கியும், இழந்துபோன ஈரலிப்பை தேடி அலைந்தது.. வழியெங்கும்.. வர்ணக் கலவைகளாலும் நறுமணப் பூச்சுகளாலும் தரவேற்றிக் கலையாடிக்கொண்டிருந்தன சில. அதீத மோகத்துடன் காலத்தை கலவி செய்து கொண்டிருந்தன சில. ஆதியின் அன்புப் போர்வைக்குள் சிக்கிப் பிணமாய் கிடந்தன சில. இன்னும் சில கௌரவ வெற்றிடங்களில் எதிரோலியோடு மோதிச் சாவடைந்து கிடந்தன. …

  18. நீர்ப்பறவையின் கேலிக் கோடு - அஞ்சலிக் கவிதை! தீபச்செல்வன் மீன்களை தரையில் எறிவதைப்போல தொலைதூரம் வீசியெறிந்து உன்னையும் நாம்தான் கொன்றோம் புலத்தில் தந்தையர் நிலத்தில் குழந்தையர் வழிகளில் ஆழ்கடலில் கவிழ்ந்த படகுகளும் காடுகளில் கைவிடப்பட்ட பயணப்பைகளும் கீவ் நகரை கடந்தவனைக் காணாது ஊசியிலை காடுகளும் துடித்தன போலாந்து எல்லையில் வாடிக் கிடந்தது ஒரு சோலிமலர் துயரப்பிக் கிடக்கின்றன உன் கேலியின் கோடுகள் கூடுகள் பறிபோயிருக்கலாம் இரையற்று பசியில் மரிக்கலாம் எல்லாப் ப…

  19. பறவைகளின்றி வானம் இறந்து கிடக்க, இலைகள் கழற்றிய கிளைகள் காற்றோடு குலவுகின்றன, மதில்களில் பூனைகள் இல்லை. வாசல்களில் யாதொன்றினதும் அரவங்களும் இல்லை. அறைகளில் ஒளிரும் மின்குமிழ்கள் கண்ணாடி யன்னல்களில் ஒளியத்தொடங்குகின்றன. குளிர் புணர்ந்து அந்தி கவிழ்ந்துவிட்டது. இனியிருள் சூழ்ந்து அமைதி வளர்ந்துவிடும். மூச்சுக் காற்றில் வெப்பம் தெறிக்க, உள்ளங்கைகளில் குளிர் குத்தும். இரண்டுபட்டுக் கிடக்கிறது தேகம். மனதும், கிடுகுவேலிப் புலுனிக்குருவி நான் இந்தப்பனிக் குளிக்கும் மரங்களில் எனக்கேது மறைவு. செயின் நதியும் ஈபிள் கோபுரமும் மோனோலிசாவின் முகமும் உலகின் அழகான ராஜபாட்டையும் டயானாவின் கார் மோதிய தூணும் கடிகாரத்தின் இலக்கங்களாகிடச் சுற்றிக்கொண்டிருக…

  20. புதை குழிகளுக்குள் அவர்கள் அண்ணாந்து பார்க்க உறவுகள் அவர்களை தலை கவிழ்ந்து பார்க்க கண்ணுக்கு புலப்படாத உருவங்கள் உணர்வுகளில் முழுமையாக நிரம்பியிருக தேற்றுவராரற்ற கணங்களில் நாங்கள் இருக்கின்றோம்…. நாடு இருக்கின்றது…… மீழுவோம் ஒரு நாள் ஆழுவோம் ஒருநாள்… நம்பி உயிர்கொடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கு தவறும் போதெல்லாம் மனசாட்சி உள்ளவர்களுக்கு துரோகம் முக மூடியை கிழித்து எட்டிப்பார்க்கின்றது அதற்கும் அப்பால்.. நினைக்க நினைவு கூர நேரமில்லை.. நேரமிருந்தாலும் ஒன்றுபட முடியவில்லை மிஞ்சியது எதுவும் இல்லை ஆகவே உங்களை தோண்டி எடுத்து எதாவது தேறுமா என்றும் பாரக்கின்றார்கள்… உங்கள் தியாகமே எம்மினத்த…

  21. முன்பெல்லாம் இருள்பூத்த நிசப்தத்தில் _அவை இயங்குதல் வழக்காதலால் ஆங்காங்கே எச்சங்களாய் ................! வேரோடுதல் போல ஓடிக்கொண்டிருக்கும்_ அப்பப்ப தன்னிலை மறந்து சிலகணம் வாய்கால் நீரோடுதல் போல வெளிவரும் ... பூசாப்பொருள் இதுவென்று பேசாதநாளில்லை உற்றவர் காசா பணமா தருமிதுவென்று ௬சாமல் முன்னின்று குறிவைத்தனர் . வளைதல் நெளிதல் வசப்படல் கொண்டதில்லை . உயர்ந்தவனை கொண்டாடியதுமில்லை கீழிருந்தவனை துண்டாடியதுமில்லை _ஆதலால் மாவிலை தோரணங்கண்டதுமில்லை. முகவரியில்லாத முகத்திற்கு சுகவரிகளை பரிசளித்த போதிலும் தகவிலா நிலைகளை வகைப்படுத்திய போதிலும் மிகைப்பட்டுக்கொண்டதுமில்லை இதமான இறந்தகால நினைவுடன் சூனியவாதமொன்றை கடக்க முனைகையில் , …

  22. அ. எலும்பும் தோலுமாக தூரத்தில் முட்கம்பி ஒனறில் அம்மா கொழுவப்பட்டிருந்தாள். இருவரது முகங்களையும் முட்கமபி கிழித்துத்கொண்டிருக்கிறது. மெலிந்த கைகள் முட்கம்பிகளுக்குள புகுந்து கலந்துகொண்டிருக்க நடுவில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டிருக்கிறது. அம்மா புன்னகையை இழந்துபோயிருக்கிறாள். தாழ்ந்து மறைந்துவிட்ட கண்களுக்குள் படிந்த புழுதியை கண்ணீர் கரைக்கிறது. காலத்தின் பெருந்துயர் நிரம்பி பிள்ளைகளுக்காக ஏங்கும் அம்மாக்கள் பலர் என் அம்மாவின் பின்னால் வரிசையில் நிற்கின்றனர். எல்லா அழுகைகளும் எல்லா விசாரிப்புக்களும் பரிமாறல்களின் துயரங்களும் ஓலைக்கொட்டிலினுள் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அம்மாவி…

  23. தன்னைப் படைத்த இறைவன் விண்ணைப் படைத்திருக்கக் கூடாது! விண்ணைப் படைத்திருந்தாலும் - பின்னே மண்ணைப் படைத்திருக்கக் கூடாது! மண்ணைப் படைத்திருந்தாலும் - அங்கே உன்னைப் படைத்திருக்கக் கூடாது! உன்னைப் படைத்திருந்தாலும் - முன்னே என்னைப் படைத்திருக்கக் கூடாது! என்னைப் படைத்திருந்தாலும் - என் கண்ணைப் படைத்திருக்கக் கூடாது!

    • 5 replies
    • 999 views
  24. சும்மா ஒரு கிறுக்கள் பக்தர்கள் பகுத்தறியாமல் பம்பரமாய் சுத்துபவர்கள் அவதாரங்கள் ஆத்மீகத்தின் சாபக்கேடுகள் பூசாரிகள் கோயில் புனித்தத்தை கெடுத்த புண்ணியவான்கள் கோயில் தொண்டர்கள் சலுகைகளை கூலியாக பெறுபவகள் இலக்கியவாதிகள் இறந்தகால எண்ணங்களுக்கு இனிப்பு தடபுபவர்கள் சித்தாந்தம் தனிநபர் எண்ணங்களின் தொகுப்பு

    • 3 replies
    • 997 views
  25. Started by yaal_ahaththiyan,

    நீ என்னைக் காதலிக்கவில்லை என்ற சொல்லை எறிந்தால் பதிலுக்கு உனக்கு மட்டும் கவிதைகளை தந்து கொண்டே இருக்கும் மரம் நான் * நான் மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்காததில் கவலைப்பட்டது என்றால் அது உனக்கு கவிதை எழுத துடித்த போது மட்டும்தான் * நல்ல வேளை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை அப்படி எழுதியிருந்தால் உன்னை விட அழகான கவிதையை என்னால் எழுதியிருக்க முடியாது * நீ கட்டி அணைத்தால் தூங்காது தலையணை நான் கட்டிப்பிடித்தால் தூங்காது பேனா * உன்னைப் பார்த்து யார் யாரெல்லாம் பொறாமைப் படுகிறார்களோ தயவு செய்து அவர்களைப் பார்த்து நீ கோவித்து விடாதே அவர்கள்தான் என் கவிதை…

    • 2 replies
    • 997 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.