கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
01 அடை மழை பெய்கிறது. கூரைகள் வழியாக ஒழுகும் மழை நீருக்கு குழந்தைகள் பாத்திரம் வைக்கிறார்கள் . மின்சாரம் தடைப்படுகிறது . விறகுகள் நனைந்து விட மதிய உணவும் கனவாகி விடுகிறது. நாய் பூனை கோழிகள் எல்லாம் நனைந்து நனைந்து நடு வீட்டிற்குள் வருகின்றன. கிணறு நிரம்பி பக்கத்து வாய்க்காலோடு கலக்கிறது. சாக்கடை நீர் மணக்கிறது. பாடசாலை கொப்பி புத்தகங்கள் பாதுகாப்பிற்காக அடுப்படி பரணில் வைக்கப்படுகிறது. கோதுமை மா பையை தலையில் போட்டுக் கொண்டு காயவிடப்பட்ட துணிகள் எடுக்கப்படுகின்றன. மரங்கள் முறிவதும் தவளைகள் கத்துவதும் கேட்டுகேட்டு அலுத்து விடுகிறது. இரவுப் படுக்கைக்கு பக்கத்து கோயிலுக்கு போவதாக எல்லோரும் முடிவு எடுக்கிறார்கள். 02 அடைமழை ப…
-
- 2 replies
- 647 views
-
-
ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம் சோகச் சுமைகளால் மனதில் பாரம் இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம் என் கால்கள் நடந்தன வெகு தூரம். 'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?' வேதனையான மனம் கால்களைக் கேட்டது. 'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது' வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது. எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக, புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக, நீண்ட தூர பயணத்தால் கால்களும் தடுமாற விண்ணுயர்ந்த மலைச்சாரலை அடைந்தது என் பயணம். நுரை ததும்ப சலசலத்துப் பாயும் மலையருவி, இலையுதிர்த்து பூக்களை மட்டும் தாங்கி நிற்கும் மரங்கள், இவற்றிடையே மனதை வருடும் சிரு குருவிகளின் இனிய கானம் இயற்கையின் இவ்வெழிலில் தனை மறந்தது எந்தன் மனம்! 'என் சோகத்தை மறக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
நீ என்றும் என் காதலி' அதிகாலை ஓர் அழைப்பு மணி அவசரமாய் சென்று யாரது...? பதில்.. நான் தான் உன் தேவதை...! கதவை திறக்கிறேன் யார் தேவதையா...? ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....! அனைத்தையும் அடித்துவிடும் அழகான ஓர் முகம்... ஆனாலும் கண்களிலே கண்ணீர்... கலைந்த கூந்தல்.... மாற்றான் கைபட்டு கசங்கிய மேலாடை... மான மறைப்புகளில் ஆங்காங்கே இரத்தத் துளி..... கலைந்த கூந்தலையும் அலங்கரித்த கார்த்திகைப் பூ என் கண்முன்னே கதறுகிறாள் ஏன் என்னை கைவிட்டாய்..? நான் கேட்டென்...? எப்போ உனை கைவிட்டேன்...? நான் உன்னைப் பார்த்ததில்லை...! அட பாதகனே.. எனை பிரிய மனமின்றி அன்று ஏங்கி அழுது நின்றாய்... எனை விட்டு பிரிய முதல் …
-
- 2 replies
- 1k views
-
-
காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால்... ஆனால், மூதூரிலும், ஆரையம்பதியிலும், வீரமுனையிலும் தமிழ்க் குருதி வடிந்த பொழுது... தமிழ்க் குருதியில் சிங்களம் நனைந்து திழைத்த பொழுது நீங்கள் கைகட்டி, வாய்புதைத்து நிற்கவில்லை. எரியும் வீட்டில் பற்றியெரிந…
-
- 2 replies
- 934 views
-
-
கங்காரு மண்ணில் ஒரு கடமை வீரன் விடுதலை நேசித்த வெள்ளைச் சிரிப்பு வீரத் தலைவனின் அன்பின் விரிப்பு இடர்களைச் சந்தித்தும் இயங்கிய நெருப்பு இழந்தோமே உங்களை எங்களில் தவிப்பு. நல்ல மனிதநேயம் தாங்கிய ஜீவன் வல்லமை உழைப்பினை வழங்கிய வடிவன் சொல்லிடும் முன்பே செய்திடும் தீரன் தில்லை ஜெயக்குமார் எங்களின் வீரன். அமைதியான தோற்றத்துள் அக்கினிக் குழம்பு அவுஸ்ரேலிய நாட்டிலே பணிசெய்த முனைப்பு இமைகள் மூடும்வரை ஈழத்தின் உழைப்பு ஏங்குது தமிழீழம் இன்றுமை நினைத்து. தாய்மண்ணின் விடிவிற்கு உங்களைத் தந்தீர் தமிழீழ நிலையினை உலகினில் சொன்னீர் வாய்கதறி அழுகின்றோம் ஏன் எமைப்பிரிந்தீர் வரலாற்றின் நெஞ்சினில் படமென்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி" என்ற எனது கவிதை தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ளது, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மனசுக்குள் பனித்துளி ஒரு குழந்தையைக் கைப்பிடித்துக் கூட்டிவருவதைப்போல் இந்தக் குளிர்க்காலத்தை என்னிடம் கொண்டுவந்துவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது மழைக்காலம். நெற்பயிரின் நுனியில் ஒரு பனித்துளி முழு வயலையும் வானத்தையும் தலைகீழாகப் பிரதிபலிக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக கதிரின் வெம்மையில்ஆவியாகிறது. மறுநாளும் அதே நெற்பயிரில் அதேபோல் பனித்துளி …
-
- 2 replies
- 996 views
-
-
உயிரின் வலி அறிவாயோ மானிடா ஊனுருக்கி உடல் கருக்கி உள்ளனவெல்லாம் மறக்கும் உயிரின் வலி அறிவாயோ உள்ளக் கருவறுத்து ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிர் வதைத்து உணர்வு கொல்லும் உயிரின் வலி அறிவாயோ எதுவுமற்று ஏதுமற்று எங்கெங்கோ மனம் அலைத்து ஏக்கங்கள் கொள்ளவைக்கும் உயிரின் வலி அறியாயோ எதிரியாய் எமை வதைத்து எட்டி நின்றே வகுத்து எல்லையில்லா துன்பம் தரும் உயிரின் வலி அறியாயோ எண்ணத்தை எதிரிகளாக்கி எல்லையற்று ஓடவைத்து என்புகள் மட்டுமே ஆனதாய் என் உயிரின் வலி அறியாயோ சரணடைந்து சரணடைந்து சர்வமும் இழக்க வைத்து சக்தியெல்லாம் துறந்து நிற்கும் உயிரின் வலி அறியாயோ மானிடா உயிரின் வலி அறிவாயோ
-
- 2 replies
- 635 views
-
-
வணக்கம் நண்பர்களே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். என் தமிழில் நடைபயில எனது இலக்கியப்பூங்கா. எனது முதலாவது படைப்பான இன்ரநெற் யுகமும் இருபத்தியோராம் நூற்றாண்டும் நூலில் இருந்து கவிதைகள் இங்கே மலர்கின்றன. நான் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதத் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டுவரை எழுதிய பல கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. சிறிய வயதில் கவிதை மீது கொண்ட தீராத காதலால் என் தாயகம் சார்ந்து எழுதிய என் உணர்வின் பதிவுகள் இவை. அவற்றில் சொற்பிழைகள் பொருட்பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து பொறுத்தருளுவீர்கள் என நம்புகின்றேன். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பினை மிகவும் அழகாக வடிவமைத்து பதிப்பு செய்தளித்த மறவன்புலவு திரு.சச்சிதானந்தன் ஐயா அவர்களை நன்றியுடன் ந…
-
- 2 replies
- 1.1k views
-
-
என் கண்களே எனக்குப் பிடித்த ஒளிப்பதிவுக் கருவி காரணம் அதற்கு உன்னை மட்டுமே பிடிக்கத் தெரியும் * என் பல முத்தங்களுக்கு சில முத்தங்களையே திருப்பித் தந்திருக்கிறாய் நீ உன்னை என்னிடம் இழப்பதற்காகவா முத்தக் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறாய் * கவிதை என்று யார் கேட்டாலும் உன் பெயர் சொல்வேன் உன் பெயர் என்னவென்று எவர் கேட்டாலும் நான் எழுதாத காவியம் என்பேன் * என்னை எழுத வைத்தவள் நீ என்றாலும் நான் கவிஞனானது உன்னை அழைத்து அழைத்துத்தான் * உன்னைப் பற்றி எழுத நினைத்தபோதெல்லாம் எழுதிக் கொண்டேயிருந்தேன் உன்னை விட எழுத நினைத்தேன் எழுதுவதையே மறந்துவிட்…
-
- 2 replies
- 934 views
-
-
எழுதிட மறுக்குது மனக்கோல் எழுதிட எடுத்தேன் எழுதுகோல் இயங்கிட மறுத்தது மனக்கோல் எழுதி எழுதி என்ன பயன் எதற்கும் தீர்வு இல்லை எனின் நாளும் நாளும் தொடருது அவலம் தடுத்திட வழி காண எவருமில்லா துயரம் போதும் போதும் பேசி ஏமாற்றும் நாடகம் முடிந்தால் மக்களைக் காப்பாற்ற வழி வேண்டும் அல்லல்பட்டு அல்லபட்டு அழிவதுதான் தமிழர் தலைவிதியோ என்று எண்ணிடும் போது இதயம் துடிக்கிறது அதனால் எழுதிட மறுக்குது மனக்கோல் வெற்று ஆரவாரங்களோ எல்லாம் என வெதும்புகின்றது உள்ளம் சொத்துக்கள் சேர்ப்பவரும் அரச இருக்கைகள் காப்பவர்களும் தான் அதிகமாகிவிட்டனர் என்னும்போது அழுவதா? கொதிப்பதா? என தெரியவில்லை. மெல்ல அரங்கேறும் இனக்கொலைக்கு உடந்தையாளர்கள்தான் கூடுமான…
-
- 2 replies
- 764 views
-
-
அன்புக் கரம் நாடும் அகதிகள் இறைவன் படைப்பால் தமிழர் ஆனோம் தமித்தாய் வயிற்றுப் பாவி ஆனோம் தாய் நாட்டில் அகதி ஆனோம் தவமது இருந்தோம் பசியது தாங்கினோம் ஆண்டுகள் பல ஓடியும் ஆதரிப்பார் யாருமின்றி அந்நியர் நாட்டில் அகதிகள் ஆனோம் அன்புக்கரம் நீட்டி ஆதிரித்தான் அந்நியன் அந்நியன் உணர்வுகள் நமக்கு இல்லையே? நம்மவர் உணர்வுகள் உறங்குவது ஏனோ ? அகதிக்கு அகதி நாம் நம் நாட்டில் அகதியாம்! எம்மவர் காத்திட அன்புக்கரம் நீட்டுவோம் வாரீர்..? வரிகள் : வசீகரன் அச்சில் : 12.03.93 நன்றி : தமிழன் (பத்திரிகை)
-
- 2 replies
- 1.1k views
-
-
பிறந்தால் எங்கள் மண்ணில் பிறக்க வேண்டும்! இறந்தால் எங்கள் மண்ணில் இறக்க வேண்டும்! எரித்தால் என் ஊர் சுடலையுள் எரிய வேண்டும்! புதைத்தல் என் ஊர் மண்ணுள் புதைய வேண்டும்!
-
- 2 replies
- 821 views
-
-
தியாக சரித்திரங்களின் நாயகர்கள் தாயக மண்ணின் காவலர்கள் தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் - தமிழீழத் தாய்க்காக களமாடிய.... மாவீரர்கள்! கந்தகக் காற்றைச் சுவாசித்து... விடுதலை ஒன்றையே யாசித்து... அவர்கள் புரிந்தது பெருந்தவம் தம்மையே உருக்கி.... எம்மைக் காத்த காவல் தெய்வங்கள் ! மண்ணின் நிரந்தர விடியலுக்காய், நிரந்தரமாய் மண்ணுள் உறங்கும் வீரத் தமிழ்ச் செல்வங்கள் ! எதிரியின் தோட்டாக்கள் கூட இவர்களைப் பார்த்து அஞ்சும்! மரணம் கூட இவர்களிடம் கெஞ்சும்! இவர்களின் தியாகம் மரணத்தையும் விஞ்சும்!! புன்னகைத்தபடியே போர்க்களம் புக இவர்களால் மட்டுமே முடிந்தது! எம் தேசமே இவர்களால்தான் விடிந்தது!! தாயக மண்ணைத்தான் நேசித்தார்கள்- அதன் விடுதலை ஒன்றைத்தான் சுவாசித்தார…
-
- 2 replies
- 18.3k views
-
-
தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை. வட்ஸ்அப்பில் எனக்கு ஒரு அன்பர் பகிர்ந்ததை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி
-
-
- 2 replies
- 411 views
-
-
ஏனிந்தப் புன்னகை? கண்ணே என் கண்ணின் மணியே பொன்னே என் சின்னத் தமிழ்ப் பெண்ணே உன் புன்னகையின் எண்ணங்களை என்னால் புரிய முடியவில்லை... ஏனிந்தப் புன்னகை? யாரைப் பார்த்து தாய்நாட்டில் குண்டுகளின் மத்தியில் அன்னை பிச்சையெடுக்க ஐரோப்பாவில் மகன் இந்திய நடிகைக்கு பொன் நகை அணிவிக்கிறான். அதைக் கண்டா இப்புன்னகை? எண்ணமும் நினைவும் எம் மூச்சும் உதிரமும் உடலும் என்றும் எம் தமிழிற்கே என்று அரசியல் மேடையில் முழங்கியவர்கள் இங்கு - பெற்றபிள்ளையது தமிழை அறிந்திடுமோ அது தவறு என்று தடுப்பவர்களைப் பார்த்தா இப்புன்னகை? இன்னொரு எத்தியோப்பியா ஈழத்தில் உருவாகிக் கொண்டிருக்க இங்கே பக்தி வெள்ளம் பல கோடி பணம் செலவு செய்து …
-
- 2 replies
- 1.4k views
-
-
உறவறுந்த துயரோடு இருள் கவிழும் மனம்... சடா கோபன் சித்திரையின் கடைசிக் கணங்களை காலம் உருட்டிக் கொண்டிருக்கிறது. ஓடி முடித்த தூரத்தையும் ஓட வேண்டிய தூரத்தையும் கணிக்க முடியாத குழப்பத்துடன் நான் வாழ்க்கையில்..... ஓடி முடித்த தூரத்தை விட ஓட வேண்டிய தூரம் நீண்டதாய் தெரிகிறது. வயதில் ஓடி முடித்தது நீண்டதாயும் ஓட வேண்டியது மிகக் குறுகியதாகவும் தெரிகிறது. எத்தனை கோடி வயதுகளையும் எத்தனை கோடி வாழ்வுகளையும் இந்த நிலம் சந்தித்திருக்கும். போராட்டங்களோடு வாழ்வும் போரோடு வயதுமாய் காலம் என்னை கடந்து போய் இருக்கிறது..... விடுதலைக் கனவுகளின் விளைநிலத்தில் மெ…
-
- 2 replies
- 1.5k views
-
-
அவன் அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவனுக்கு அங்கு எல்லாமே புதுமையாக இருந்தது. அழகாகவும் இருந்தது. எதையுமே புதிதாக பார்க்கும்போது அப்படித்தான்.. அவன் தன்னுடைய சொந்தபந்தங்கள், நெருங்கிய நண்பர்கள் என எல்லோரையும் பிரிந்தே அந்த வேலைக்காக வந்திருந்தான். அந்தப் பிரிவு அவனுடைய மனதில் ஒரு நிரந்தரமான வெறுமையை உருவாக்கி இருந்தது. இருந்தபோதும் அவன் தானும் தன்னுடைய வேலையுமாக ஒரு குறுகிய வட்டத்தினுள் புதைந்து போனான். அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டிருந்த இழப்புகள், சோகங்கள், வலிகள் மட்டுமே அவனுக்கு இப்போது துணையாக இருந்தன. சிலவேளைகளில் தான் தன்னுடைய சொந்த ஊரை, குடும்பத்தினரை, நண்பர்களை விட்டு வெகுதூரம் விலகி சென்று விட்டதாக அவன் கற்பனை செய்துகொண்டான்.…
-
- 2 replies
- 829 views
-
-
.... "நல்லூர் புத்தசாமி கோயில்" ... நாலு வரி எழுதுங்கள்
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!" "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!" "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னைக் கண்டதால…
-
-
- 2 replies
- 260 views
-
-
அனார் கவிதைகள் 1 கருமை முற்று முழுதாய் இருட்டி கறுத்துப்போன அமாவாசையின் ஏணியில் உன் உயரங்களுக்கு ஏறிவருகின்றன என் கால்கள் இருட்டிய மழைக் காற்று தூசிகளாலும் காய்ந்த இலைகளாலும் ஆகாயத்தை நிரப்புகிறது கருமுகில் மூட்டங்கள் மூடிய வானத்தின் கீழ் காகங்கள் மாத்திரமே பறவைகள் வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குள் ஒரு ஜன்னல் என என் கண்கள் திறந்துகிடக்கின்றன முதலும் முடிவுமற்ற உன் உச்சரிப்புகள் இடத்தைப் பாழ்படியவைத்து வவ்வால்களாகத் தலைகீழாய்த் தொங்குகின்றன என் உதடுகளை விரல்களைச் சுழலும் காற்றில் உதிர்த்…
-
- 2 replies
- 1.5k views
-
-
நான் உன்னை நினைப்பதை மறந்துவிடப் போவதில்லை அது என்னை மறக்கப் பார்க்கிறது * என் எதிரியல்லக் காதல் அனாலும் சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால் சாகக்கூடாது என்பதால் * நீதான் அடைகாக்கிறாய் என்பதற்காய் என் காதல் முட்டையை உடைத்துவிடாதே நானாக உடைத்து வெளிவரும் வரை * அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து தொலைத்த பாதையில்_ நான் என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன் அவளை நினைத்து வாழ * என்னை மறப்பதற்காய் நான் இறந்து விட்டதாக நினைத்து விடாதே ஏனெனில் நீ வாழ்ந்து கொண்டிருப்பது யுத்த பூமியில் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 982 views
-
-
உமிழ்ந்தது தப்பு... குடு குடுப்பை காறனவன் குழிக்காதே எண்கிறான் பர பரப்பில் வந்துயவன் பகுத்தறிவு என்கிறான்... மூடர்கள் நீர் போலும் முளையில் ஏதுமில்லை ஏனென்று கேளாது ஏற்றீரோ நீரும்..? ஆலயங்கள் தோறும் ஏறி ஆண்டவனை வணயங்கியவன் இன்று வந்தேனோ இல்லை சாமி என்றானோ...?? காலயிலே நீராடி காசிக்கு மாலையிட்டு ஊச்சி மலையேறி உண்ணா நோன்பிருந்தான்.. பின்னாளில் வந்தேனொ பிதற்றல்கள் செய்தான்..? இன'னாளு வரைக்கும் இதையென் சொல்லலயோ...?? தாசி மகளுக்கு தரணியிலே விலை வைத்தான் இத்தனை இழியாரையோ இன்று பெரியார் என்பீர்...?? கட்டி தளுவி கலவியதை நீயாடு பிள்ளையதை வேண்டாமென்று பிதற்றிய செம்மலிவர்... இன்னாரின் இலட்சியத்தை ஏ…
-
- 2 replies
- 970 views
-
-
கண்ணிமைக் கதவுகளில் கண்ணீர்த்துளிகள்.... இளங்கவி - மாவிரர் நினைவுக்காய்... உணர்வுகள் முகைவெடித்து கண்ணீராய் உருவெடுத்து கண்ணிமைக் கதவுகளில் காத்திருக்கும் கார்த்திகை இருபத்தியேழுக்காய்...... இது ஒரு நாளில் உருவெடுத்த உணர்வுப் பிரவாகமல்ல...... ஒவ்வொரு வருடமும் சேர்த்துவைத்துக் கத்தும் எங்கள் உயிர்மூச்சின் சத்தம்..... எங்கள் மண்ணுடன் கலந்து நிலமாகிப் போனீர்..... எங்கள் கடலுடன் கலந்து நீராகிப் போனீர்..... எங்கள் வானிலே கலந்து வான்வெளியாகியும் போனீர்.... ஆதலால் தமிழர் மனங்களில் கலந்து அவர் நினைவாகிப் போனீர்..... உங்கள் சரித்திரம் சொல்லா எங்கள் சரித்திரத்தில் பக்கமில்லை.... உங்கள் சாவுகளை எண்ணா எங்கள் போரிலும் வ…
-
- 2 replies
- 979 views
-
-
அம்மா! நினைவினைப் பிழிந்து கொஞ்சம் நெஞ்சின் நெருப்பிலே போடுகின்றோம். தீயின் தீ கூட கசிந்து மெல்ல கண்ணீராய் வழியுதம்மா..!! தடம் மாறிப்போன தமிழை இடம் நோக்கி இழுத்து வர ஒரு பிள்ளை பெற்றாயம்மா! இன்று பாரின் திசையிருந்து அழுவோர்க்கெல்லாம் என்றும் நீயே அம்மா! மானத் தமிழன் தாயே அம்மா! இதமான மழையின் ஈரம் பலமான அலையின் ஓரம் கால் பட்ட தடங்கள் அழிய ஈமங்கள் முடியும் அங்கே! நாமங்கள் முடிவதில்லை! அம்மா உன் ஞாபகம் வளரும் எம்மில் ஈழப்போர் ஓய்வின்றித் தொடரும்..!
-
- 2 replies
- 2k views
-
-
புத்தாண்டே வா புதுவாழ்வு தா ஒரு வருடம் ஓடி உதிர்ந்தது. குருதிப்புனல்களில் இருந்து துளிர்விடும் புதிய தளிர்கள் புன்னகையோடு எட்டிப் பார்க்கட்டும் முகம் தெரியாத எம் உறவுகளுக்காய் வைகறைப் பொழுதுகள் தவமிருக்கட்டும் உலகத் தேசிய வரைபடத்திலே புதிய நாடாக தமிழீழம் இணையட்டும் எங்கள் வாழ்வே போராட்டமாகவும் போரட்டமே வாழ்வாகவும் மிளிரட்டும் நம்பிக்கை ஏந்திய நமது கைகள் வெற்றிப் பூக்களைப் பறிக்கட்டும் சூரியத் தலைவனின் முதிர்ச்சி விடுதலைப் பாதையில் ஒளிவீசட்டும் தமிழக எழுச்சியும் சிங்கள வீழ்ச்சியும் புலம்பெயர் தமிழர்க்கு பலமாகட்டும் கலைஞரின் கருணை வெள்ளம் எங்கள் தேசத்தை நனைக்கட்டும் கற்பனை வானிலே பறக்கும் கனவுகள் எங்கள் நனவாகட்டும் …
-
- 2 replies
- 754 views
-