Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஊடக இளவலுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் இளய கலைஞர்களே சென்னை வரும்போது சென்றவனைப் பாருங்கள் என்பேனே இன்று அவனில்லை. இயமனும் கவிதை சிறுகதைகள் எழுதிப் பிரசுரிக்க அவாவுற்று இவனை அழைத்தானோ. தாகத்தில் தெருப் பாடகர் நினைத்துவரும் சாலையோரத்து ஊருணி மாரியிலேயே வரண்டதுபோல ஊடக இளவல் கிருஸ்ணா டாவின்சி இளமையில் வீழ்ந்தானே. எங்கள் முகங்களை அறிமுகம் செய்த இனியன் முகமின்றி எரிதழலில் படுகிறதோ. இல்லை வாழும் முகமானாள் மகள் நேகா என்றும் சாகா முகமையா உனக்கு தமிழ் கலைஞர் எங்கள் நினைவுகளில்.

  2. பல்லிக்கு வால் பிடிப்பது - பிடிக்காது ....வால் அறுந்தாலும் வாழும் ...வால் பிடிக்காதே மனிதா ...!!!^^^ஓடி ஓடி உழைக்கணும்...முகிலைப்போல் ....ஊருக்கே கொடுக்கணும் ...முகிலைப்போல்.....!!!^^^கெட்டிக்காரமகனையும் ....கெட்டு போன மகனையும் ....ஒன்றாகவே பார்க்கும் குணம் ....அம்மா ........!!!^^^தண்ணீருக்காக போராடினோம் ....கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...வெள்ள காடு ....!!!^^^தனியே வாழ்ந்தபோது ...தன் அறையை கூட்டாதவன் ...கல்யாணம் செய்தபின் ...வீடு கூட்டுவான் ....!!!&.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை..................கவி நாட்டியரசர்..........................கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

  3. Started by கோமகன்,

    [size=5]கவிதையின் கவிதைகள் .[/size] வாழ நினைக்கும்போது வாடவைக்கும்! வாழ்வதற்காய் வாழ்வை தேடவைக்கும்! மணித்துளிகளில் நகரும் வாழ்வு, துளித்துளியாய் வளரும் நினைவு, கணப்பொழுதில் தோன்றி மறையும்... மின்னல்போல் மின்னி மறையும்! அனுபவங்கள் புரியவைக்கும் வாழ்வில், எல்லாமே ஒரு போராட்டம்! போராடி வெல்லும்போது... வாழ்வின் எல்லை முன்னால் நிற்கும்! பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நடக்கும் போரில்... கடந்து போகும்வரை கலக்கங்கள் சூழ்ந்தாலும், கலங்காத மானிடம் மட்டும் வெற்றிகொள்ளும் வாழ்வுதனை!

  4. நம்பிக்கை கொண்டு நடவுங்கள் ஏய்! முணு முணுக்கும் வாய்களே! கொஞ்சம் நிறுத்துங்கள். படலைக்கு உள்ளே தெருநாய் வருவதால் உன் முற்றம் தொலையுதென்று எவன் சொன்னான்? தெருக்கள் எங்கும் நீ கை வீசி நடக்கணும். உன் இருப்பை எப்போதும் உறுதி செய்யணும். உண்மைதான் உருப்படியாய் என்ன செய்தாய் இதற்கு? ஊருக்கு சொல்ல உன்னிடம் நிறைய உண்டாயினும் உன்னிடம் சொல்ல ஏதேனும் உண்டாவென உன் மனச்சாட்சியைக் கேள் ஆமெனில்.. நீ கரைவதை தொடர் ஆயினும் சில வார்த்தைகளைத் தவிர் அதைப் பின் காலம் சொல்லும் இல்லையெனில்.. இனியாவது சிந்தனைகொள் மானிடப் பேரவலம் கண்டாவது உன் மனக்கதவு திறக்கட்டும் இரும்புச் சிறையுடைத்து புது மனிதனாய…

  5. Started by கோமகன்,

    [size=5]கிரிக்கெட்[/size] நடு ரோட்டில கிரிக்கெட் ஆடினதும் நடுச்சாமத்தில அவுட்டான மாதிரி கனவுகண்டு திடுக்கிட்டு எழும்பினதும் அடிச்ச ஸ்கோரை கொப்பியில எழுதி வச்சதும் வீணாக ரன் அவுட்டானதுக்கு அழுது ஃபீல் பண்ணினதும்... இனிமையான கிரிக்கெட் வாழ்க்கை! இப்பொழுது ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரன்! நன்றி : கவிதையின் கவிதைகள்

  6. சூரனை வதம் செய்தான் அந்த முத்துகுமரன் அதுவும் திருச்செந்தூரன் தன்னையே வதம் செய்தான் இந்த முத்துகுமரன் இதுவும் திருச்செந்தூரன் போன பொழுது உனக்குத் தெரிந்திருக்கும் எம் மாவீரர்களும் மக்களும் உனக்களித்த வரவேற்பு சாவின் நிமிடம் தெரிந்த சத்தியவான்களில் கரும்புலிகளுக்கு அடுத்து நீதானையா! மக்கள் எழுச்சியின் சிகரம் நீ ஈழ மக்களின் மகரம் நீ உனக்காக வருந்தாது மத்திய அரசு உனக்காக அழுகிறது தமிழ் ஈழ அரசு பிரபாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் திருமாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் பிரமாவுக்கு ஒரு முறை சொல்லிவிடு - உன்னை படைத்ததற்கு கோடி நன்றி என்று தமிழ் ஈழ புல்லும் தமிழ் உயிர்கள் அத்தனையும் உனக்காக அழுவதனை ஒருதரம் கேளாயோ? போய்வா எம…

    • 5 replies
    • 1.6k views
  7. சாவை நேருக்கு நேர் சந்திக்கும் அந்த நிமிடம் யாருக்குமே உடல் ஒருமுறை நடுங்கும் ஆனால் பாலச்சந்திரா ! சாவு உன்னை சந்தித்த அந்த நிமிடம் சாவு தானடா உன்னைக்கண்டு நடுங்கி இருக்கும் ! செத்தவர் என்று உன்னை சொல்வோமா இந்த ஜென்மத்தில் நினைத்திட மறப்போமா குத்துவிளக்கது நீயல்லவோ நாம் கும்பிடும் தெய்வமும் நீயல்லவோ நித்தமும் வாழுவாய் பாலச்சந்திரா எங்கள் நெஞ்சுகளில் என்றும் மாவீரனாய்...! - - ஈழ மண் வாசம் - முக நூல்

  8. போராளிப் பெண்ணுக்கு அம்மாவின் கடிதம்.... கவிதை.... அன்புள்ள மகளுக்கு உன் அம்மாவின் ஆசிர்வாதம் காவலுக்கு செல்கிறேன் என்றாய் எம் இனத்தை காக்க எழுந்துவிட்டேன் என்றாய்..... ! உன் ஆசைத்தம்பியை பட்டினிக்கு பறிகொடுத்தாய் அவனைப்போல் பலபேரைக்காக்க பகைவனுடன் மோதச் சென்றாய்..... எனக்கும் தெரியும் நீ புலியாக பிறக்கவில்லை புலியாக மாற்றப்பட்டாய் எங்களின் விடுதலைப் போரிலே புள்ளியாக என்னையும் ; எதிரி புலியாக வைத்துவிட்டான் அவன் உருவாக்கிய புலிகலெல்லாம் பிரம்மிட்டின் உருவம் போல் வியாபித்து எழுதிடுவர் ; என்று எதிரி இன்னமும் நினைக்கவில்லை என்று எழுதிவைத்து நீ சென்றாய்.... பட்டினி எங்களுக்கு பழகிவிட்ட ஒன்று என்றாய் பசிதாங்காப் …

  9. யூலை 83 உன்னை மறப்பேனோ ?? காலம் என்ற காலச்சுவட்டில் என் நினைவுத்தடங்கள் பல ஆழப்புதையுண்டு அழிந்தாலும் , இந்தமாதமும் இந்த நாளும் என்மனதின் ஓரத்தில் ஆழமாய்க்கீறி ஆறாவடுவாய் போனது….. மாம்பழத்தீவை இனவாத வண்டுகள் அரித்து , அங்கொன்றும் இங்கொன்றுமாய் கருக்கட்டிய இனத்துவேச மேகங்கள் , உக்கிர இரத்தமழை பொழிந்ததும் இந்த மாதமே………. சிங்கத்தின் வம்சங்கள் தமிழ் பெண்டுகளை வகைதொகையாயாய் வேட்டையாடி கொக்கரித்ததும் இந்த மாதேமே !!!!!!!! அட பனங்கொட்டைத்தமிழா நீ எங்கள் அடிமையடா என்று சொன்னதும் இந்த மாதமே !!!! அடிமைப்பட்ட தமிழன் (ர்கள் ) ஊரிலே பொங்காது , உயிரை மட்டு காப்பாற்ற உலகெங்கும் பொங்கச் சென்றதும் , புலிபிடிக்குது சிங்கம்…

  10. நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! (05.07.2009 கரும்புலிக…

  11. Started by Sembagan,

    தமிழீழ விடுதலை முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதுகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் கார்த்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார்கள். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் தமிழரின் விடுதலை தமிழீழமென்று சாத்வீக வழியில…

  12. பெருமை கொள்ளும் செயல் வீரன் கப்டன் ஊரான் இன்பசோதி' பெயரோடு இணைந்த சோதிபோல் நீயும் ஒளிபொருந்தியவன். காற்றிலேறிக் கைவீசிச் செல்லும் வண்ணத்துப் பூச்சியாய் உனது குழந்தைக்கால மகிழ்ச்சியில் நீயொரு ராசகுமாரன். காலம் உனக்காய் கட்டியெழுப்பிய கோட்டையில் நீயே கடவுளாய் காலவிதியின் கதையாய்....! நிலவாய் நீல வானமாய் நீயுருவாக்கிய காலத்தின் கோலம் உனது எண்ணங்கள் போல வர்ணங்களாய்.....! காலச்சக்கரம் மரணப்பொழுதுகளை நுகரத் தொடங்கி உனது வர்ணங்களாலான உலகை இரத்தச் சிவப்பாக்கிய போது நீயே யாவற்றையும் விட்டு விடுதலையாகி தேச விடுதலை தேடி வீரப்புலியானாய்.....! ஊரான் உனது பெயர் போலவே ஊரைக்கவர்ந்த புலிவீரன் நீ. உன் போல உருவாக உன்போல உடையுடுக்க உன்போல …

    • 0 replies
    • 814 views
  13. Started by nochchi,

    காதல் காதல்......! ------------------- தவழும் வயதில் தாய் மீது காதல் நடக்கும் வயதில் முற்றத்தின் மீது காதல் படிக்கும் வயதில் பாடங்கள் மீது காதல் இரசிக்கும் வயதில் இயற்கை மீது காதல் துடிக்கும் வயதில் பெண்மீது காதல் மயங்கும் வயதில் மன்மதக் காதல் முதிரும் வயதில் இறைவன் மீது காதல் முடியும் வயதில் பாய் மீது காதல் முடிவின் வழியில் தீயின் மீது காதல்

    • 6 replies
    • 1.1k views
  14. நீந்த துடிக்கும் மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும் குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

    • 3 replies
    • 1.2k views
  15. அறுபது மாதங்களாய் ஆறாத் துயர் கடந்து ஆற்றமுடியா வடுக்கள் சுமந்து ஆற்றாமையுடன் காத்திருக்கின்றனர் அடிமைகள் ஆக்கப்பட்ட எம்மக்கள் கருகிய பூமியில் கால் பதிக்க இடமின்றி கசங்கக் கிடக்கிறது கந்தகம் சுமந்த பூமி கொடும் கனல் குருதி தோய்ந்து கோரங்கள் சுமந்த நந்திக்கடல் கேட்பார் ஏதுமற்றுக் கேவலுடன் கிடக்கிறது வீறுநடை போட்ட வெற்றிகள் கொய்த தேசம் ஏறுபோல் எழுந்து எதிகள் வீந்த தேசம் எதிரி கைபட்டு எள்ளி நகைபுரியும் எத்தர்களின் கைகளில் ஏக்கம் சுமந்து ஏதுமற்று ஏற்றமிழந்து கிடக்கிறது வந்தவரை வரவேற்று வயிறார வழிசெய்து வள்ளல்களாய் வாழ்ந்தவர்கள் வாய்க்கரிசி கூட இன்றி வக்கற்று கருணையற்ற கயவனிடம் கையேந்தும் கடை நிலையில் கண்ணிழந்து நிற்கின்றார் மானத் தமிழரென மார்தட்டி வாழ்ந்த…

  16. சுத்துகின்ற பூமியில் நாம் நிரந்தரம் இல்லை இதை சிந்திக்க மனிதனுக்கு நேரமும் இல்லை சத்தம் போட்டு யாரும் இங்கு சண்டை போடத்தேவை இல்லை நாளை இந்த பூமியில் நாம் யாரும் இல்லை உயர்வு தாழ்வு இங்கு தேவை இல்லை நாளை நீ போகும் போது உன் கூடவருவது இல்லை சாதி மத பேதம் இங்கு பெரும் தொல்லை அதனால் தமிழனின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை கறுப்பு வெள்ளை என்று இங்கு யாரும் இல்லை இது மாயையின் தோற்றம்தான் நீ புரிந்து கொள்வது இல்லை இங்கு வாழ்வதுதான் வாழ்க்கை இல்லை இதை புரியாத மனிதன் பூரணமனிதனும் இல்லை

  17. காஸா நகர் குழந்தைகள் குழந்தைகள் அஞ்சிப் பதுங்கியிருக்கும் நகரில் பிறக்கப்போகும் இன்னொரு குழந்தைக்காய் எப்படிக் காத்திருப்பது? ஒவ்வொரு இஸ்ரேலியப் படையினனும் துரத்திக் கொண்டிருக்கிறான் ஒரு பாலஸ்தீனக் குழந்தையை அவர்கள் ஏன் குழந்தைகள்மீது குண்டுகளை வீசுகிறார்கள்? தமது துப்பாக்கிகளை ஏன் குழந்தைகளுக்கு எதிராய் திருப்புகிறார்கள்? ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும் ஒரு குழந்தையின் பிணம் குழந்தைகளற்ற குழந்தைகள் பதுங்கியிருக்கும் ஓர் நகரை எப்படி அழைப்பது? ஓர் ஈழக் குழந்தையை கருவில் கரைத்துக் கொல்லும்போது பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன குழந்தைகளைக் கொல்பவர்களின் நோக்கம் என்னவாய் இருக்கும்? http://globaltamilnews.net/GTMNEditorial/tab…

    • 5 replies
    • 835 views
  18. ''சுட்டு வீழ்த்தடா கிபிரை.......!!!'' எங்கள் வானில் வந்து பகை எம்மை அழிப்பதா......??? இதை கண்டு கண்டு வேங்கை இனி சும்மாய் இருப்பதா.....??? கோரமதாய் வந்து பகை கொன்று அழிப்பதா.....??? எம் தமிழர் உயிர்களையே தின்று களிப்பதா....??? இத்தனையும் ஆடும் பறவை விட்டு வைப்பதா....??? எங்கள் வானில் உள் நுழைய விட்டு கொடுப்பதா....??? கொட்டமடித்து எங்கள் வானில் பறக்க முனைவதா.....??? மீண்டும் மீண்டும் எம் தமிழை அழிக்க நினைப்பதா.....??? இத்துடனே நிறுத்தி கிபிரை சுட்டு வீழத்தடா....!!! வன்னி மைந்தன்

  19. Started by வானவில்,

    சோலையில் பூத்த மலர்களே நீங்கள் கண்மூடி உறங்குங்கள் எங்கள் நிலை பார்த்தால் காலையிலையே நீங்கள் வாடிவிடுவீர்கள் ஆடை தரித்த எங்களூர் இன்று குட்டி கிரோஷிமாவாகிவிட்டது எங்கள் நிலை கண்டு கூவிக் கூவியே நம்மூர் குயில்களின் குரல்களும் தேய்ந்து விட்டன கரைந்த காகங்களும் காலமாகிப் போய்விட்டன அமாவாசை இரவில் பூரணைச் சந்திரனை எதிர் பார்த்து ஏமாந்து போனவர்களாக நாம்! விடிகின்றது தினமும், நமக்கில்லை........ இன்று வரையில் இருட்டிற்குள்தான் நம் விடிவும்...! நாளை போர் தீர்ந்து கண்ணீர் குறையுமா நம் கண்ணில்..........?

  20. Started by பூமகள்,

    பேரலையோடு பரள் பேசும் புதுக்கவிதை சங்கமச் சத்தம்... பூ அவிழ பூக்காம்பு கேட்டு மயங்கும் மரகத வனப்புச் சத்தம்.. இளவெயில் பட்டு இலையூஞ்சல் ஆடும் குயில் பாட்டு குழையும் சத்தம்... மூங்கில் காட்டில் முட்டும் காற்று முத்தம் தந்து முனகும் சத்தம்.. மெல்விரல் படின் இலை மூடும் தொட்டாச்சிணுங்கி நாணிச் சிணுங்கும் வெட்கச் சத்தம்... காதல் மொழி பேசும் அழகு பேடைக்கிளி இரண்டும் கொஞ்சும் சத்தம்... நள்ளிரவு நிலாநேரம் நீரின் மேலே தவளை தாவும் தளுக் சத்தம்... வண்டு வரும் பூச்செண்டு அறியும் ரம்மிய கமக ரீங்காரச் சத்தம்... கேட்கா சத்தம் கேட்கும் நித்தம் கேள்விக் குறியாய் வாழ்க்கை மட்டும்.. வாழச் …

    • 12 replies
    • 2.2k views
  21. இல்லறம் -வ.ஐ.ச.ஜெயபாலன். ஆற்றம் கரையில் இன்னும் தோற்றுப்போகாத மரம் நான். இன்று தெளிந்துபோய் புல்லும் சிலும்பாமல் நடக்கிறது காட்டாறு. விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி ஹோலிப் பண்டிகைக் குறும்போடு வண்ணங்கள் வீசி தொட்டுத் தொட்டுச் செல்கிறது அது. நேற்று வெறிகொண்டாடியது தானல்ல என்பதுபோல. எனது கன்றுகள் முளைத் தெழுகிற நாள்வரையேனும் கைவிட்டகலும் வேர்மண் பற்றி பிழைத்திருக்கிற போராட்டத்தில் நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன் அது நானல்ல என்பதுபோல. நேற்றைய துன்பமும் உண்மை நாளைய பயமோ அதனிலும் உண்மை. எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு. சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள். துள்ளி மகிழுதே பொன்மீன்கள். நமது அன்றாட மறதிக்குப் பரிசுத…

    • 11 replies
    • 2.8k views
  22. Started by ரஞ்சித்,

    தம்பி ! நீயும் நானும் திரிந்தலைந்த எல்லப் பற்றைகளும்- முள்ளேறிய வீதிகளும் இப்போதும் வந்துபோகும் ! கருக்கம் மட்டை பிய்த்து-திராட்சை பறித்த கணங்களும் காரிருளில் மின்னி மறையும் ! பூவரசங்கிளையில் வாள் பிடித்து-மெய்யாவுமே அடித்தழுத நினைவுகளும் என்னைச் சுற்றி வரும்- ஆனால் நீ மட்டும் வராமலயே இருந்துவிட்டாய் ! நீ- புரவியேறிப் போன செய்தி கேட்டு விழித்திருந்தோம் இரவாகி நீ விண்ணேறிய சேதி வந்தது- கதறக் கூட முடியவில்லை- ஊர்சுற்றிக் காவலிருந்தது ! உன் இழப்பிலும் ஒரு உற்சாகம்-நான் கொடுத்து வைக்கவில்லை ! வைத்திருந்தால் உன் முன் நான் சென்றிருப்பேன் !

  23. Started by nirubhaa,

    சத்தம் ... உற்றுக் கேட்டால் உனக்கும் எனக்கும் புரியும்... உலகம் முழுவதும் இடையறாது ஒலிக்கும் .... ஓம் எனும் சத்தம் .....! இதனை இயற்கையின் இரைச்சல் என்கிறார் சிலர் ....!-மற்றும் சிலரோ ஓம்கார மந்திரம் என்றனர்....! சத்தமில்லா உலகமும் இல்லை- மனித உள்ளமும் இல்லை....! நித்தமும் ஒரு சத்த யுத்தம் மனங்களுக்குள் சத்தமின்றியே நடக்கும்...! வாய் திறந்தால் சத்தமும் -திறக்காத போது மௌன யுத்தமும் நடக்கிறது...! மலர்கள் அசையும் போதும் - பட்டாம் பூச்சி பறக்கும் போதும் சத்தம் வருகிறது - மலர்களின் அசைவிற்கு ஒலி அளவுண்டு, விஞ்ஞானம் சொல்கிறது...! மனிதன் தான் கேட்பதில்லை மலர்கள் பேசும் போது ...! நம் வாழ்க்கையில் .. மனிதன் அழுவது சத்தம் ! அவன் சிரிப்பது சத்தம்...! பேசுவது சத்தம்!…

  24. பத்துபொருத்தம் பார்த்து பத்தும் பொருந்தி இருக்கும் யார் என்று கூட தெரியாத என் பெற்றோர் பார்த்த மணமகள் ஒருபக்கம் பத்து பொருத்தம் வேண்டாம் நீ மட்டும் போதும் என்று சொல்லும் பத்து வித்தியாசங்களை எம்மிடையே கொண்ட நீ மறுபக்கம் இப்போது நான் என்ன செய்ய...

    • 0 replies
    • 1.1k views
  25. 1. "ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது.... எடை குறைவாக...!" 2. "வராந்தாவிலேயே இருந்த வயதான தந்தை.... இறந்த பின் ஹாலுக்குள் வந்தார் புகைப்படமாய்...!" 3. “வீட்டின் பெயரோ அன்னை இல்லம்..! அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்..!” 4. " புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை...." - நா. முத்துக்குமார். 5. " பறித்த மலரை ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன? கல்லறையில் வைத்தாலென்ன? மலருக்கென்னவோ பறித்ததுமே வந்துவிட்டது மரணம் ! " 6. “சர்க்கரை இல்லை... கொழுப்பு இல்லை... எஜமானரோடு வாக்கிங் போகுது ஜிம்மி...!” 7. "வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.