கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தற்போது தொற்றியுள்ள ஒரு நோய் இப்படியே தொடர்ந்து நிமிர்ந்து நிற்கின்றோம் என்று சொல்லி மக்களை பலி கொடுக்கப்போறியளே என்ற கேள்வி ஒரு நோய்போல் தொற்றி நிற்கிறது எல்லாத்தையும்ஒருவன் பார்ப்பான் என்று தறுதலையாய் திரிந்த கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்ப்பீர் நீவிர் தோல்வியுற்ற அந்த கணப்பொழுதிலிருந்து கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றப்பணம் ஒருவருக்கே தமிழனிடம் தெரிவு இரண்டானாலும் முடிவு ஒன்றுதான் எல்லாவற்றையும் விட்டு இன்றே உலக நடப்பை புரிந்து சிங்களவனோடு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்கூண்டோடு அழிந்து போவது... இல்லை தனியே நின்று மலையுடன் மோதி கூண்டோடு அழிந்து போவது தமிழனிடம் தெரிவு இரண்டானாலும் முடிவு ஒன்றுதான்
-
- 2 replies
- 1.1k views
-
-
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வ…
-
- 2 replies
- 712 views
-
-
அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது.... அவள் என்னுடன் இருந்த நாளில் துக்கம் என்பதே தெரியாது. அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி அவளின் கள்ளத்தனமான வெறுப்பு ஒரு சுகம்.............. என்று அவளை பிரிந்தேனோ-அன்றே நான் என்னை இளந்தேன்.. அவள் எனக்கு அவளின் அன்பைத்தான் விட்டுச் செல்லவில்லை-ஆனால் பசுமையான அவள் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளாள்.... அவள் நினைவுகளுடனே என் நாளை களித்துடுவேன் அவள் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் அழியா சுவடுகள் எத்தனை காலம் ஆனாலும்-அது மாறாத காதல் வடுக்கள்.................... >>>>***டினேஸ்***<<<< >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று ந…
-
- 2 replies
- 1.9k views
-
-
சின்ன பிள்ளைகளை சிறிலங்கா படை பிடிக்கலாமோ....??? ஏழிரண்டு வயசினிலே ஏ.கே.யை தூக்குகிறாய் யார் பெற்ற பிள்ளையோ காப்பரணில் நிக்கிறய்.... ஏறெடுத்து பார்கலயே ஏனோ உலகம் உனை காணலயோ...??? பிள்ளை பிடிகாறனிடம் பிள்ளை நீ சிக்கினாயோ...??? பாசமான உறவிழந்து பாதகர் படையினிலே பாவி நீ நிக்கிராயோ...??? சின்ன வயசுனக்கு என்ன ஏதறிவாய்...??? ஏனோ எல்லையிலே காவலுக்கு உனைவிட்டார்...?? காவு உனை கொடுக்க காவலுக்கு விட்டனரோ....??? மா பாவிகளை எண்ணையிலே மனசு கொதிக்குதய்யா... எம் வேங்கை எதிர்பதற்கு ஏய் பிள்ளாய் உனை எதற்கு....?? காவலுக்காய் உனை வந்து கட்டி வைத்தனரோ...??? அவர் தம்பி நீயென்று அறியாமால் விட்டனரோ....??? அறிந்தால் உனைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எதிலும் எங்கும் இருக்கிறார் கடலினில் தரையினில் காட்சிகள் நடத்துறார் வானத்தில் எதிரியின் கதையை முடிக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் வாகரை மண்ணில் இருக்கிறார் – அவர் பற்றியில் இன்னும் இருக்கிறர் கோணமலையிலும் இருக்கிறார் – திருக் கேதீச் சரத்தில் இருக்கிறார் கொழும்பில் இருக்கிறார் காலியில் இருக்கிறார் கொடும்பகை இதயத்தில் குண்டுகள் வெடிக்கிறார் விலைகளை விண்மண் ஆக்குறார் – பங்கு விலைச் சுட்டெண்ணில் இருக்கிறார் (புலிப்படை) நிலத்தில் நிலையாய் இருக்கிறார் – இவர் நலமாய் நாட்டை நடத்துறார் கடல…
-
- 2 replies
- 1k views
-
-
“விடுதலை” செய்யுங்கள் புல்லோடும் புயலோடும் கல்லோடும் கடலோடும் பேச முடிந்த கவிஞர்களே! என்ன திடீர் மௌனம் உங்களுக்குள்ளே? புயலுக்கு முந்தியதா? பிந்தியதா? என உங்கள் மௌனங்களுக்கு உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா? நல்ல கதை. புயல்களை புதிது புதிதாய் பிறப்பிப்பதே நீங்கள்தானே. நீங்களே தூங்கினால் நாளைய பொழுதுகளின் நம்பிக்கையை யார் கொடுப்பது? நீண்ட இரவுகளின் இராச்சியத்திற்கு உங்கள் இமைகளை அனுமதிக்காதீர் கசியும் உங்கள் கண்களைத் துடையுங்கள் கடலலை மோதும் ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள் முள்ளிவாய்க்காலில் சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை சாட்சியுடன் எழுதுங்கள் காற்றில் தவழும் அத்தனை அலைகளுடனும் உரையா…
-
- 2 replies
- 766 views
-
-
பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர் விரைவாய் வரவேண்டும் விடியலொன்று. எத்தனை எத்தனை இரவுகள். அத்தனைக்கும் விடியல்கள். எங்களின் இந்த இருளுக்கு எப்போதுண்டு விடியல்தான். சொந்தமான நிலத்தினிடை துச்சர்களால் அல்லற்படும் பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. பயமேயறியாப் பிஞசுகளை பாடாய்ப் படுத்தும் நரிக் கூட்டம். பரிதவிக்கும் மக்களையே பகடைக்காய் போல் பாவிக்கும். பஞ்சங் காணாப் பூமியிலே பசியால் வாடித் துவழ்கின்ற பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. அசுரர் ஆளும் நாட்டினிலே ஆட்சி என்றும் கொடுங்கோல்தான். பகரச் சொற்கள் வேறுண்டா? பாவிகளின்…
-
- 2 replies
- 1k views
-
-
காதல் ... வெற்றி பெற இதய... பரிமாற்றம் போதாது இதயமாக .... மாறவேண்டும்.....!!! ^ காதல் துளிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 709 views
-
-
அகிம்சை. ஒரு சில தசாப்தங்களுக்கு முதல் வரை அகிம்சை என்றால் காந்தி என்றனர். அதனையே உலகும் காந்தியம் என்றது. காந்தி நாடு என்று பாரதத்தை கொண்டாடியது. உண்மை அகிம்சைஎது என்று உலகுக்கு சொல்லி பாரதத்தின் முகமூடி கிழித்தான் பார்த்தீபன் பாரதம் பார்த்திருக்க பசியில் பிள்ளை நீர்த்து பன்னிரண்டாம் நாள் வீர சுவர்க்கம் சென்றான் அகிம்சை தீயை உலகில் ஏற்றிய தீபச் சுடர் திலீபன். பௌத்தத்தை அகிம்சை மதமென்றனர் மதங்கொண்ட பௌத்தார் மனட்சாட்சி இல்லாமல் கொலைக்காட்சியை உலகிற்கு காட்டினர் முள்ளிவாய்க்களில் அந்த ஆ.. கிம்சையாளருக்கு அரவனைப்பு கொடுத்தது கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா தமிழன் என்ற உணர்வு தலை தூக்கிய பொழுதெல்லாம் தரங்…
-
- 2 replies
- 743 views
-
-
நினைவுகளை மட்டும் விட்டுச் சென்ற நினைவழியாப் போராளி பிரகாஸ் ! 2ம் ஆண்டு நினைவுநாள்10.07.02013 எழிலெனும் எழிமையான விடுதலை புலியே எங்கள் எண்ணங்களில் நிலைபெற்ற இனியவனே திருமலை மண்ணிலிருந்து புறப்பட்ட எரிமலையே தியாகப் பயணத்தின் வழியெல்லாம் தோழொடு தோழாய் வந்த அன்புத் தோழனே ! விடுதலையின் வேர் நாட்டி உலகின் திசையெங்கும் விழுதெறிந்து சென்றவனே நீயாற்றிய பணிகள் கண்டு நிமிர்ந்தோமே அன்று நாங்கள். அடிமை விலங்குடைய அன்னை மண் விடுதலையடைய உனை வருத்தி நீ சாதித்தவைகள் ஏராளம். சாவின் விளிம்பில் நின்றாலும் சாதுரியமாய் வென்று வரும் சாதனையாளன் நீ. உன் சாவைக் கூட அறிவிக்காமல் சத்தமில்லாமல் போனாயே ! பறந்து திரிந்த புலியுன்னைப் புற்றுநோய் தின்று நீ பாடையிலே போய் முடியு…
-
- 2 replies
- 675 views
-
-
''மா வீரர்கள்....'' கார்த்திகை மாதம் கண்ணீர் வடிக்கும் கல்லறை மீது தீபங்கள் ஏற்றும்.... பொன்னவர் உடல்கள் புக்களால் குளிக்கும் தேசமே திரண்டு அஞ்சலி செலுத்தும்... எங்களை காக்கவே தம்மையே அழித்தவர் மண்ணையே காக்கவே மரணத்தை ஏற்றவர்.... தீர செயல் கண்டு நெஞ்சமே விறைக்கும் உணர்வுகள் சிலிர்க்கும்... மெழுகாய் உருகி வழிகள் அழும் அவர் கல்லறையதையே கண்ணீர் கழுவும்... எழுந்தே வந்து என்னை உதைப்பான் அழுகிறாய் ஏனென்று என்னை கேட்பான்... அழுதே என்னை அசிங்கமாக்காய் எழுந்தே போய் களத்தில் நிற்ப்பாய்... அந்நியன் அவனை அடித்தே கலைப்பாய் அன்னை மண்ணை மீட்டே எடுப்பாய்... கல்லறை இருந்து கட்டளை இடுவான் இற…
-
- 2 replies
- 1.1k views
-
-
நேற்று என் தோழனும் தோழியும் கடத்தப்பட்ட பின்.. காதலர்களாய் மடிந்தனர் இன்று அவர்களுக்காக காதலர் தினம் வேற்று நாட்டில் அவனும் விம்மிய படி அவளும் விதி செய்த சதியால் பிரிந்திருக்க இன்று இவர்களுக்காக காதலர் தினம் கூற்றுகள் தவறியதால் காதல் கும்மாளம் போட்டவரும் குறுகிய காலத்தில் பிரிந்தனர்... இன்று அவர்களுக்காக காதலர் தினம் நாற்றுக்களுக்கு நடுவே நல்லதாய் காதல் செய்தவர் நேற்றிந்த சிங்களன் போட்டகுண்டில் நொடியினில் மடிந்து போயினர் இன்று இவர்களுக்காய் காதலர் தினம் ஏற்று தலைவன் ஆணை அணி வகுத்தார் புலியாய் வாட்டும் பகை கொன்று வந்தார் மீட்டும் காதலது நெஞ்சில் கொண்டார் கொள்கையால் கதலரானார் -இவர் கொள்கைக்காய் மாண்டார்... …
-
- 2 replies
- 1.1k views
-
-
நேசிப்பின் நிலாவரையல்ல நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத்தேவை. கொடுங்குலத்தின் கூர்ப்புடைக்கும் மடுத்தலத்தின் மத்தியிலே தடுத்தாட் கொள்ள என்று தமிழருக்கு இருந்த தாய் அடங்காச் சினங் கொண்ட அநியாயச் சிங்களத்தின் நெடுங்காலத் திட்டமதில் மடுத்தல மாதாவும் இப்போது இடப்பெயர்வு அகதி பரம்பொருளே!.... தடுத்தாட் கொள்ள யார் உள்ளர் உலகில்? இருதயநாதரும் இராணுவ ஷெல்வீச்சில் சிதைவுற்று போனாராம். சீர்தூக்கி இறைமகனை காக்க ஒரு கையின்றி, கட்டிட சிதைவுக்குள் கருணைக்கடல் நிற்கிறாராம் கண்கொண்டு பார்த்து கனக்கும் இதயமெங்கே? ஆருக்கும் எம்மினம் அவதியைக் கொடுக்கவில்லை ஆனால் போர் வித்தை கற்கவரும் வல்லாண்மைகளின் மானுட நேசிப்பு எம் மண்ணைக் குதறுகிறது மானுட ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
சுமையிழுக்கும் காளைகளுக்கு......... புல்லு கூட கொடுத்ததில்லை... வக்கணையாய் ............. காத தூரம் நடந்தே நொய்ந்துபோன அதன் - கால்களில் பிழை பிடிப்பார்..............! களிம்பு தடவ - நினைத்ததுண்டா? முகில்களுக்கு இறுதி அஞ்சலியாம்.............. மழைவந்தால்மட்டும் -பிறந்த நாள் வாழ்த்தாம்! என்னயிதுவோ -கருத்து கப்பலோ? வயிறுகிழிந்து கொட்டிய வான ....... குருதி உடலில் ஏனோ கறையான் கள் பெயரில் கப்பல்? தாய் தேசமது விடியலையே தந்தை தேசமெதுவென்று தெரிந்தாலும்....... அவர்களெமை நம்பலையே...........! போகயெண்ணிய வாகனம்............ விரைவு பாதை நடுவே உருளைகள் ........ செயலற்றதால் உடைந்ததாய் ஆச்சு வாழ்வு..! நீ வெட்டி வீரம் காட்டு ....... வெள…
-
- 2 replies
- 860 views
-
-
-
மாவீரரே!! உயிரிலும் மானம் பெரிதென இவ் உலகிற்கு உணர்த்தி நின்றார் செந் தமிழனின் வீரத்தை இந்தப் பாரிலே உயர்த்தி நின்றார்! நெஞ்சிலே நஞ்சினைத் தாங்கியே எம்மவர் மண்ணுக்கு வெளிச்சம் தந்தார் அன்னை மண்ணுக்கு தன்னலம் பாராமல் சாவையே அணைத்து வென்றார்! நல்தலைவன் வழியினில் சென்றுமே நன் நீதியைக் காட்டி நின்றார் வான் என்ன! கடல் என்ன! களத்திலும் கூட வீரத்தை காட்டி நின்றார்! வாழ்க்கையின் தத்துவம் காட்டிய வீரரே உம்மை நினைக்கவே நாளெதற்கு? மறைந்தாலும் மனதினில் நிறைந்திட்ட நீங்களே விடியலில் ஒளிர் விளக்கு! மறப்போமோ உங்களை எங்களின்வீரரே இது விடிகின்ற தருணம் அல்லோ? வீசும் காற்றது என்றுமே உரைப்பது வீரச் சோதரர் பேரை அன்றோ? மண்ணே! மானம்…
-
- 2 replies
- 982 views
-
-
குர்து மலைகள் – தீபச்செல்வன் பெண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்கள் ஏந்தியிருக்கும் கொடியில் புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலீவ மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் …
-
- 2 replies
- 1.3k views
-
-
அடைந்து சுதந்திரம் இன்றுடன் இலங்காவுக்கு வயது ஐம்பத்து ஒன்பது ஆகிறது! ஐயா பெரியோரே பாரினிற் சிறந்த படு பாதகர் தேசம் இலங்காவென்பதை நீர் யாவரும் அறிவீர்! முந்தைநாள் ஜே.ஆர் நேற்று சந்திரிகா இன்று மகிந்தன் கோவணத் துண்டை கொடியில் காயப் போடுகின்றார்! கண்டுகளிப்பதற்கு சிங்களக் குண்டர்கூட்டம் தறுதலை நகர் கொழும்பில் கூடுகிறது! கடனில் வாங்கிய விமானங்களின் வேடிக்கை பழுதடைந்த கவசவாகனங்களின் அணிவகுப்பு வீதித்தடைகள் அங்கவடையாளச் சோதனைகள் விமரிசையாக நடக்கிறது இலங்காவின் பிறந்ததினம்! நீளத்தாடியுடன் வீணைமீட்கும் சுவாமியார் ஒருபுறம் ஓலைவிசிறிலால் உடம்புசொறியும் பிக்கு மறுபுறம் குடுவடிக்கும் குண்டர்படை கொலைவெறியுடன் அணிவகுக்க கொடுங்கோல் மன்னன் மகிந்தன்…
-
- 2 replies
- 1.2k views
-
-
என் காதலி தமிழீழச்சி...... இளங்கவி -தமிழீழ காதல் காணாத இறைவனிடம் வரம் கேட்கும் பக்தன் போல் நீ காட்டா பார்வைக்காய் காத்திருந்தேன் சிலவருடம் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்....... பெண்களின் உதடை கொவ்வைப்பழமாக வர்ணிப்பார் உன் உதட்டின் நிறமோ கரு நாவல் பழம் போல இருந்தும் முத்தமிட மனமேங்கிடும் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்...... பெண்ணின் மார்பழகு மாங்கனிக்கு உவமைகொள்ள உந்தன் மார்பழகோ தென்னம் குரும்பட்டியாய் ஒழிந்துகொள்ள இருந்தாலும் ரசித்துக்கொள்வேன் காரணம் நீ தமிழீழச்சி என்பதால் நீ மறைந்திருக்கும் இதர அழகை வர்ணிக்க மனமேங்கிறது ஆனாலும் முடியவில்லை காரணம் நீ தமிழீழச்சி என்பதால் அதுதான் நம் தமிழீழத்தின் காதலின் சிற…
-
- 2 replies
- 1.4k views
-
-
குறும்பு கலந்து எழுதப்படும் குறுகிய பாவாக இருப்பதால் இரட்டை அர்த்தம் தொனிக்க குறும்பா என்று பெயரிட்டார்கள். மறைந்த எமது ஈழக் கவிஞர் மகாகவியே இதற்கு முன்னோடி. வாழ்க்கையில் நடக்கும் சிறிய சம்பவங்களிலுள்ள நகைச்சுவையை அல்லது சாதாரண சம்பவங்களுக்கே நகைச்சுவையையூட்டி குறும்பாக்களை எழுதமுடியும். நமது தமிழில் அத்தகைய இலக்கியவகையிருக்கும்போது ஏன் நாம் லிமெரிக்கென்று பிறமொழிப் பெயர் கொடுத்து எமது தமிழின் ஆற்றலை இருட்டடிப்புச் செய்கிறோமென்று தெரியவில்லை. இதே வகையில் ஆத்திசூடி போன்ற குறுகிய கவிவரிகளையும் குறட்பாக்களையும் சேர்க்கலாம். தமிழில் போதிய பாவகைகளுண்டு. நாம் எதற்காக கைக்கூவை ஜப்பானிலிருந்து இறக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. இப்படியே போனால் ஒரு காலத்தில், தமிழ் தனது பாவ…
-
- 2 replies
- 1.8k views
-
-
நான் இரசித்த கவிதை இது. உங்களுக்காக இங்கு இணைக்கிறேன். எழுதியவரின் பெயர் சிந்து. அடிமைச்சிறை தகர்... பிறப்பிலிருந்து மரணம் வரை அறியாமை உனது வாழ்வானதோ? மழைக்குத் தோன்றி மாண்டு போகும் மண்புழுவா நீ? மலர்களும் காயப்படுத்தாத தென்றல் தான் பெண்கள் புயலாய் மாற்றம் கொண்டால் மலைகளையும் சாய்த்திடுவர் இடுப்பொடிந்து நீயும் தலைவணங்கியது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நீயும் வாழும் உலகைப் பார் எல்லாமே உனக்குள் அடங்குமடி பெண்ணே பெண்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை ஆண்கள் இச்சை தீர்ந்தபின் சுருக்குக் கயிற்றில் இறுகிச் சாகும் விலங்கினமா பெண்கள்? அடிமை சிறை தகர்த்து சிறகுகள் முளைத்து சுதந்திர வானில் நீயும் பறந்திட வேண்டா…
-
- 2 replies
- 1.4k views
-
-
சனி மாற்றம் நல்லதென்று சாதகத்தில் சொல்லக்கேட்டு பாதகமில்லையென்று பறந்தாயன்று பனி நாடு ஒன்றுக்கு கடன் பட்ட பணத்தை திருப்பியுடன் தருவேனென உடன் பட்டுப்போயங்கு உழைப்புத் தேடினாய் தமிழ் மட்டும் தெரிந்த நீ திடங்கொண்டு மட்டும் திக்கிதிக்கியொரு மொழியை தினமொன்றாய் விழுங்கி கைப்பாசையோடு முன் ஒரு காலத்தை தொடங்கி நின்றாய் சறங்கட்டி வெறும் மேலில் தண்ணிவார்க்கும் உனக்கு பனங்கட்டி போல் அளவில் பனிவிழும் தேசத்தில் அடங்கிப்போய் ஆடைக்குள் ஆள் மாறலானாய் வெண்கட்டி வயல்களாய் வீதியெங்கும் குவிந்த பனிக்கட்டி சறுக்கி பழுவில் அடிபட்டால் சுடுதண்ணி வைத்து ஓத்தித் தடவுதற்கும் ஒருவரும் கிடையாது அப்புவின் பனந்தோப்புள் அதிகாலை போய்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
மனிதத்தை காக்க உங்களால் முடியலயோ....??? சோற்றுக்கு வழியின்றி திண்ணையிலே குந்தும் பிள்ளையை இன்று நான் எண்ணயிலே..... ஜயோ என் உடல் கூட இயங்கலயே என்னால் உதவிட இன்று முடியலயே.... பசியாலே அப்பிள்ளை அழுகையிலே பார்த்து நிக்க என்னால் முடியலயே.... கண்ணீரை கொட்டியவர் அழுகையிலே அதை கண்ஊhடு பார்க்கவே முடியலயே.... வறுமையவரை வாட்டையிலே உதவிட யாரும் வரவில்லையே.... சோர்ந்து அவரும் வீழ்கையிலே அவர் சோர்வுயகற்ற யாரும் முணையலயே.... மனிதத்தை உரைக்கின்ற மனிதர்களே இந்த மனிதரை காக்க உங்களால் முடியலயோ....??? - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 970 views
-
-
தொலைவே இல்லாத பின்னிரவொன்றில், விடிகாலைப் பொழுதினைத் தொலைத்துவிட்டு, நிரந்தரமாகிப்போன கும்மிருட்டில், சத்தமே இல்லாமல், சந்தம் பாடுகின்ற குயில்களின் குரல்வளைகளை அறுத்தெறிந்து, கோட்டான்களைக் கூப்பிடுவோம் வாருங்கள்! முகவரி இல்லாமலே பூபாளம் பாட! 10/dec2014
-
- 2 replies
- 701 views
-
-