Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தொட்டுத்தொட்டு நான் வளர்த்தேன் நெஞ்சுக்குள்ள விதை விதைச்சே விருட்சம் வளர்த்தேன் காடு கழனி எல்லாம் நான் அலைஞ்சே கண்டுபிடிச்சே உன்னைப் போல் அதையும் நெஞ்சுக்க வைச்சேன்..! தொட்டும் தொடாமலும் நீயும் வந்தே பச்சைப் பைங்கிளியா சுற்றியே வந்தே... உள்ளம் முழுக்க உல்லாசமா நான் உன் சோலையில..! அங்க என்ன வேலை செஞ்சே.. நெஞ்சுக்க நோ எடுக்க பிடிங்கி எறிஞ்சே நான் வைச்சத..! வெட்டிய காடும் வரண்ட கழனியும் சுற்றி வந்த பைங்கிளி சிறகொடியவும் கண்டேன்..! தோழியாய் வந்தே தூதனாய் என் உயிர் பிடிங்கினே.. நீ யாரென்று பார்க்கையில... நான் தேடியே நட்ட மரக்கன்ற பிடிக்கி எறிஞ்ச என்னவள் கை... அறிஞ்ச போதே பதறிப்போனே செல்லமாடி நீ எனக்கு..! …

    • 4 replies
    • 1.3k views
  2. வணக்கம் யாழ் கள நண்பர்களே, இந்தக் கவிதையை குரல் வடிவில் தர வேண்டி முயற்சி செய்ததன் பலன் இது... பரீட்சார்த்த முயற்சி இது.... நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள்.... அன்புடன் கவி ரூபன்

    • 5 replies
    • 1.6k views
  3. Started by வாசகன்,

    காதல் ஒரு கல்வெட்டு கல்லு அங்கேயே கிடக்கும் காதலர் போய்விடுவர் காதல் ஒரு நீரோட்டம் காதல் போய்விடும் காதலர் அங்கெயே இருப்பர் காதல் ஒரு நெருப்பு வெப்பம் அகன்ற பின் சாம்பலே மிஞ்சும். காதல் ஒரு வெளிச்சம் குருடருக்கு காதல்தான் உயிர்காற்று பிணங்களுக்கு காதல் ஒரு நிலம் கடலில் தொலைந்து போனவனுக்கு எனக்கும் என் காதலிக்கும் மட்டும் காதல் 50Kr ரோஜா எரிச்சலுடன் வாசகன்

  4. அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!அகம் முழுதும் நிறைந்தவளே .....அகமதியால் காதலை இழந்தவளே....அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!அச்சப்படாதேயடா என்னவனே .....அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....அகந்தையும் அகமதியுமில்லை ....அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!அடைமழை போல் இன்பம் தந்தவளே ....அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!…

  5. கண்கள் பார்த்தால் காதல் வரும் கண்கள் பார்க்காமலும் காதல் வரும் காலத்தின் கோலம் கணணிக் காலம் இனிக்கும் மணக்கும் இதமாய் இருக்கும் இதுவல்லவோ உலகமென்று இவ்வுலகமும் மறக்கும் தடைபோட்டு தடைபோட்டு தாய் தந்தை தடுத்தாலும் முளைவிட்டு கிளைவிட்டு காதல் பூ பூக்கும் சுற்றமெல்லாம் குற்றம் சொல்வார் குறை சொல்வார் குறையெல்லாம் கறையாய் துடைத்து காறி உமிழ்ந்துவிட்டு முத்தம் இடும்போது கிடைக்கும் சுகம்பெரிதா இட்ட முத்தத்தை நினைக்கும் சுகம்பெரிதா காத்திருப்பது சுகமா காக்க வைப்பது சுகமா பேசிகொண்டிருப்பது சுகமா பேசியதை அசை போட்டு பொறும் இன்பம் சுகமா தொடமுடியுமா என தவிப்பது சுகமா தொடதொட சுகமா பாதி இரவில் பட்டிமன்றம் பாவ…

    • 2 replies
    • 565 views
  6. [size=5] கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்[/size] [size=5] [/size] [size=5]தாயின் வயிறு விட்டு தரணிக்கு வந்த தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள் தலைவன் அணி சேர்ந்து தன்னையே தந்து தமிழினம் காத்த காவல்தெய்வங்கள் நீங்கள் விண்ணிலும் வென்று மீண்டு விளையாட்டாய் சமராடி வியக்க வைத்த வித்தகர்கள் நீங்கள் கடலிலும் காவியம் படைத்து கலங்களையும் வென்று கடலலையென ஆர்ப்பரித்த கற்பூரங்கள் நீங்கள்[/size] [size=5]தரைவழி வந்த பகைக்கு தலையிடி கொடுத்து தம்மையே ஆகுதியாக்கிய தற்கொடையாளிகள் நீங்கள் கார்த்திகை மாதங்களில் வந்து கண்விழித்துக் காட்டி கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள் நீங்கள். பாடல்களி…

  7. [size=5]மண்டியிடாத வீரம் !![/size] [size=1] [size=4]நேற்று மாவீரர் நாள் [/size][/size][size=1] [size=4]உலகெங்கும் நாம் நினைவில் கொண்டோம் [/size][/size][size=1] [size=4]மாவீரர்கள் தியாகத்தை சுதந்திரமாக [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]தமிழீழமெல்லாம் அரக்கர்கள் இன்று[/size][/size][size=1] [size=4]ஒரு பெண் மானபங்கப்பட்டால் துடித்திடுவார்கள் [/size][/size][size=1] [size=4]எம் கவிஞர்கள் [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]அப்பெண்ணே முன்னாள் போராளி என்றால் [/size][/size][size=1] [size=4]கேட்டிடுவார்கள் கணக்குகளை …

    • 24 replies
    • 2k views
  8. புரட்சியொன்று புயலாக ... கவிதை ... ... புரட்சிப் புயலொன்று தமிழகத்தில் மையங்கொண்டு இலங்கை தமிழினத்துக்கு ஆதரவாய் நம் மண் நோக்கி நகர்கிறது... உங்கள் எழுச்சி வெள்ளத்தில் நம் மனமெல்லாம் நனைகிறது.... தமிழகத்தில் மக்கள் விளிப்புக்கொள்ளும் மனிதச் சங்கிலியாய்.... திரையுலகம் திரண்டுவிட்ட உண்ணா விரதங்களாய்..... தொழிளாளர் செய்துவிட்ட தங்கள் கடையடைப்புக்களாய்.... இறுதியில் மாணவர் கொதித்தெளுந்த மாபெரும் டில்லிப் பேரணியாய்..... இன்னும் பலபலவாய் எப்போதும் தோன்றாத ஆழிப்பேரலை போல் தமிழகமே வியந்துகொள்ள வீறுகொண்டு எழுகிறது..... தமிழனெனும் உணர்வின்று தமிழ் மனங்களிலே ஓங்கினின்று போரை நிறுத்தென்று …

  9. தாமரை இலையின் நீர்த் திவலை...! எத்தனை முறை தான் நீர் நினைத்தாலும் ஒட்டிக்கொள்ள முடிவதில்லை - இலையுடன்; நீர் பலமுறை சினந்திருக்கின்றது இலைக்கு புரியவில்லையே என்று...! பாவம் இலை...! அதனால் என்ன செய்யமுடியும் அதன் நெஞ்சுக்குள்ளும் ஈரமுண்டு... அதைவிட அதிகமாய் வலிகளும் நிறையவே உண்டு தடாக நீருக்கும் நீர்த் திவலைக்குமிடையே தடுமாறுகின்றது - இலை எத்தனை முறைதான் நீர்த்திவலைதனை அணைத்துக்கொள்ள நினைத்தாலும்... அதன் ஸ்பரிசத்தை மட்டுமே இலையால் கைது செய்ய முடிகின்றது. இலை அழுதகண்ணீரில் தான் தாமரைக் குளமே நீர்பெறுகின்றதென்பது எத்தனை பூக்களுக்குத் தெரியும் இருந்தாலும் என்ன... நீர் இருக்கும் வரை அதனைத் தன்மீது தாங்கி..…

  10. யூன் 06ம் நாளினிலே...! ------------------------ சிங்களத்தை எதிர்த்தெழுந்த சிறுத்தையொன்று நஞ்சுண்டு தனைத்தந்த நாளே யூன் 6! தீப்பொறியாய் வீழ்ந்தவனோ தீமூட்டி வைத்தபின்னால் திடங்கொண்ட இளைஞர்படை தீவெங்கும் மேலெழுந்து தம்பங்கை மீட்பதற்காய் செங்களத்தில் நின்றாரே! நின்றவரும் வித்தானார் நினைவெங்கும் முத்தானார் நிலம் மீட்கும் கனவோடு நிலத்துக்குள் புதைந்தோரை நினைத்தவிட்டு போகின்றோம் மனதுக்குள் வாழ்கின்ற எங்களது தேசமதை எப்போது மீட்டெழுவோம் என்றதிசை புரியவில்லை! எங்களுக்குள் பிரிவுநிலை எதிரிக்கு ஏற்றநிலை ஏற்படுத்திக் கொடுப்பதனை எப்போது மறப்போமடா! இவன் நாமம் சொல்வதற்கு எந்தனுக்கும் தகுதியில்லை இவன் நாமம் நினைப்பதற்காய் எடுத்துவந்தேன் சிலவரிகள் நஞ்சுண்டு எழவை…

  11. தடயமின்றி அழித்திடுவோம் அடிமைகளின் கூட்டம் கண்டேன் அகமகிழ்ந்து பேச கேட்டேன் ஆயாவை தலைவியாக்கிவிட்டு ஆனந்த கூத்தாட கண்டேன் வேட்டிக்கட்டிய ஆண்கள் எல்லாம் வெட்கத்தை தொலைக்க கண்டேன் மூத்தோரென்று சொல்லப்பட்டோர் முட்டாள்களாய் நிற்க கண்டேன் களவு செய்யும் வாய்ப்பிற்காக கைகூப்பி நிற்க கண்டேன் பெண்ணின் காலில் விழுவதனை பெருமையாக நினைக்க கண்டேன் பணமொன்றே நோக்கமென்று பல்லிளித்து சிரிக்க கண்டேன் பச்சோந்தியும் தோற்றுப்போகும் பகல்வேஷ நடிப்பு கண்டேன் காசு பணம் சுருட்டிடவே காலில் விழும் கூட்டத்திற்கு ஈனம் மானம் எதுவுமில்லை என்பதையும் அறிந்து கொண்டேன் எதிர்ப்பு சொல்ல ஒருவருக்கும் ஏன் தோன்றவில்லை என்றால் கைமாறிய பண கட்டிற்காக கட்ட…

  12. என் உயிர் உறவுகளே செத்துக் கொண்டு இருக்கும் தேசத்தில் இருந்து ஒரு குரல் நான் துள்ளித் திரிந்த தெருக்களில் குருதி ஆறு கொப்பளித்துக் கொண்டு இருக்கிறது - எம் தேகத்தின் தோல்கள் உரிக்கப் பட்டு வத்தலுக்காய் வாட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறோம் கன்னியர்கள் ஆடைகள் களையப்பட்டு சூறையாடப் படுகிறது அவர்கள் கற்புக்கள் - எம் கண்களில் இருந்த கண்ணிர் வற்றி நடைப் பிணமாய் நாம் இப்போ........ ஜயகோ....! தமிழ்ச் சமுகமே தட்டிக்கேழுங்கள் செத்துக் கொண்டிருக்கும் தேசத்துக்கு - ஓர் சத்துணவு திட்டமாவது தரும் படி ஏன், எதற்கு எப்படி யானோம் -? நாம் இப்படி ................? கேளுங்கள் ஒவ்வொருவரிடமும் கேளுங்கள் - பதில் வராவிடின் தேடுங்கள் - அதற்கான பதிலைத் தேடு…

  13. தலைப்பைப்பாத்திட்டு சண்டைக்கு றெடியா யாரும் வரவேண்டாம். கீழேயுள்ள கவிதையை மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அததனை இங்கு பதிவிடுகிறேன். இழு தேரை ! இறுகப்பிடி வடக்கயிற்றை…! சமீபத்தில் இங்கிலாந்து நடந்த ஒரு தேர் உற்சவத்தில் 20.000 பேர் கலந்துகொண்டதாக வந்த செய்திக்கு, அங்கு வாழும் கவிஞர் இளம்பறவை எழுதி அனுப்பியுள்ள கவிதை. இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை…பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தா…

  14. Started by எஸ். ஹமீத்,

    வேஷம்...! -எஸ். ஹமீத் **சிங்கார வதனந்தான் சிலிர்ப்பூட்டும் சிரிப்புந்தான் சேலைக்குள் இருக்கிறது எயிட்சும் இறப்பும்...! **பளபளக்கும் பாம்புதான் வழுவழுக்கும் உடலும்தான்... பற்களில் இருக்கிறது விஷமும் சாவும்...! **அழகான ஏரிதான் அன்னப் பறவையும்தான்... அடியில் இருக்கிறது முதலையும் முடிவும்...! **அடர்ந்த காடுதான் அறுசுவைக் கனிகள்தான் கூடவே இருக்கிறது மிருகமும் மரணமும்...! **தகதகக்கும் நெருப்புத்தான் தங்கத்தின் வண்ணம்தான் இறங்கினால் இருக்கிறது சூடும் சுடலையும்...! **வெண்ணிற ஆடைதான் செந்நிற சால்வைதான் சேர்ந்தே இருக்கிறது குருதியும் கொலையும்...!

  15. ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இலங்கையின்அமைதி ஆயுதத்தினாலே பாலஸ்தீனத்தின்அவதி ஆயுதக்குறைவினாலே! ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இந்தியபாகிஸ்தானின் அமைதி அணுகுண்டினாலே திபெத் சீன அவதி அணுகுண்டின்மையினாலே ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! நன்றி: குழலி பக்கங்கள்!

  16. Started by Nathamuni,

    நல்ல உச்சி வெய்யில்.. நடந்து வந்த கிழவிக்கோ பெரும் களைப்பு.... அங்கிருந்த திண்ணையில் ஓய்வாக அமர்கிறார்... பசி.... தாகம்.... அங்கும் இங்கும் பார்க்கிறார்.... கண் அயர்ந்து விட்டார். அப்போது அவ்வழியே வந்த மனிதர் அவரை இனம் கண்டு கொண்டார். பசி, தாகம்.... பார்த்தவுடன் புரிந்தது. பாட்டி.... எனது வீட்டுக்கு வாருங்கள்.... உண்டு களைப்பாறி செல்லலாம் என்கிறார். பாட்டியும் புறப்படுகிறார். அவனது மனைவியோ.... ஒரு அரக்கி.... அவனுக்கே சமைத்து உணவு கொடுக்க மாடடாள். இன்று இந்த கிழவி வேறா? நம்பிக்கையில் அழைத்துச் சென்றான். திண்ணையில் இருக்க வைத்து உள்ளே செல்கிறான். மனைவியை மகிழ வைத்து.... அதன் பின்னர் சமைக்க வைக்க வேண்டுமே... பெரும் பிரயத்த…

    • 0 replies
    • 6.7k views
  17. நீயும்..! நானும்...! நிலாவொளியில் நீல கடலின் நீள் கரையில் நினைவுகள் மறந்து நீயும் நானும் பாலை வனத்தில் பற்றியெரியும் வெய்யிலில் வெற்றுக் கால்களுடன் நீயும் நானும் மாலை நேரத்து மஞ்சள் வானத்து மறையும் சூரிய அழகில் நீயும் நானும் எரிமலை வாசலில் எகிறி பாயும் எரிகுழம்பில் எமை மறந்து நீயும் நானும் வாச மலர் தோட்டத்தின் வண்ண மலர்களிடையே பாச பிணைப்பில் நீயும் நானும் இருபகை நாடுகளின் இடைவிடா யுத்தத்தின் இடை நடுவே நீயும் நானும் இந்த உலகத்தின் அத்தனை முரண்களிலும் இரு முரண்களான நீயும் நானும் ஒருவரையொருவர் பார்த்தபடியே காத்திருப்போம் ஒன்று சேர..!

  18. எனக்காக நான் கடவுளைக் கும்பிட்டதில்லை உனக்காக தான் என்பதை ஏன் நீ உணரவில்லை எனக்காக நான் அழுததில்லை உனக்காக தான் அழுதேன் என்பதை ஏன் நீ அறியவில்லை எதற்காக நான் பிறந்தேன் என்று தெரியவில்லை ஆனால் உன்னைக் காதலிப்பதால் தான் உயிரோடு ஊசலாடுகிறேன் என்று மட்டும் தெரிகிறது

  19. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள். http://www.kaasi.info/pages/kavithai.htm

  20. அப்பிக்கிடக்கும் அந்தகாரம் துடைத்து கசியும் நிலவொளி துருவேறிய கம்பிகளை கடந்து கரடுமுரடான பழுப்பேறிய சுவர்களில் திட்டுதிட்டாய் விழுகிறது காய்ந்த உதிரச் சிதறல்கள் உயிர்வற்றிய ஓவியங்களாய் பயமுறுத்துகிறது. இரவின் நிசப்தம் உடைகிறது கூட்டத்தைப் பிரிந்து தனியனாகிப்போன குட்டியானையொன்றின் பிளிறலைப்போல் அருகிலோர் அறையில் அலறி அடங்கிப்போகிறது அந்தரித்த ஒரு தமிழ்க்குரல் அடிவயிற்றைப் பிழிகிறது பயம் அடுத்தது நானாகவும் இருக்கலாம் கடந்த விசாரணையின் காயங்களே காயவில்லை உதிரம் கலந்து ஒழுகிறது சலம் பிளாஸ்ரிக்குழாய் செருகப்பட்ட மலவாயிலில் மரணவேதனை நகம் பிடுங்கப்பட்ட விரல்களில் இலையான்கள் இருக்க எத்தனிக்கிறது. இன்னமும் நான் இருக்கி…

  21. வேலிப் பொந்தினில் பிறந்த நேசத்தில் கருக்கொண்டவள் வைக்கறைப் பொழுதினில் வைத்தியசாலையில் நன்கே பிறந்தவள். அழகு பெயரும் சூட்டி அடுக்குச் சட்டை போட்டு கொண்டாடிய பிறந்த நாட்கள் பல களிப்புறக் கண்டவள்..! தங்கத் தட்டினில் பல்லுக் கொழுக்கட்டை அவிச்சுக் கொட்ட இன்புற்றவள்.. மங்கையாய் பருவமடைந்த வேளையதில் பல்லக்கில் பவனி வந்தவள்..! அந்நிய நாடுகளில் அதிசய வாழ்க்கை தந்திட கண்கவர் கள்வர்கள் படையெடுத்த போதினில் அழகு கன்னியாக வீதி வலம் வந்தவள்..! தேசத் தாயவள் அவதி கண்டவள்.. நொடிப் பொழுதினில் உந்தித் தள்ளிய தேவையின் வேகத்தில் வேங்கையாகி பாய்ந்து நின்றவள். தாய் நிலம் தின்ற சிங்களப் பாசறை நொருக்கி வீழ்ந்தவள்.. மாவீரர் வரிசையில் நிமிர்ந்து நின்…

  22. பொதுநூலகப் புதுநூலகம் (அன்றொருநாள் ஐபிசித் தமிழுக்காய் எழுதியது) நல்லளவையூரான் நானுரைக்கும் கவிபார்த்து சொல்லிற்படு குறை களைந்தே ஆய்ந்து நறும் வித்தகரே வியம்பிடுவீர் வாஞ்சையுடன் ஏற்றிடுவேன் இத்தினம் சித்தமாய் இயம்புகின்ற அடியேனும் துன்பமாய்க் கலந்தழியும் நெஞ்சகன் ஆகி மின்தளம் வழியே விரும்பிடு யாழ்நகர் நூலகக் கருவினைச் சார்ந்தே பொதுநூலகத்தில் புதுநூலகமாம் என்ற கருக் கொண்டே மதிதனில் இருத்தி மாண்புறு தமிழால் பெருமை கொண்டு சோர்வகற்றி வரைக்கின்றேனீங்கு!! தங்கு யாழ்நகர் தருநல் வரமென யாங்கொரு காலத் தோங்கிய தாகி மேருவில் மேலுறு பயனதாய் மிளிர்ந்து பெருமைசேர் அறிவுநூல் பலவுடன் வெண்மையாய் பாவலர் முதலாய் பைந்தமி ழறிவோர் த…

  23. மீதமின்றி கொல்லம்மா கடலம்மா `````````````````````` பெற்றால் தானே பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள்,, உண்மைதான் நாங்கலெல்லாம் உனக்கு தெருவில் கிடந்தது கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அழித்திருக்கலாமே - ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... எழுத்து -27/12/2012

  24. றோஜாவே உன்னை பறிக்க எண்ணியபோது புரியவில்லை...... இத்தணை முட்கள் என்னை தீண்டும் என்று!!!

  25. விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல் விழும் எச்சில்களுக்கு இரத்தம் வருத்த ஆடுகிறான் தன் பிஞ்சுகளோடு கனத்த உடலும் கால் தெரியும் அமைப்பும் ரசிக்கத்தான் கூட்டமுண்டு காலணா வீச ஆளில்லை கரணம் அடிக்கும் பூக்களை ரசிக்கத் தெரிகிறது சிந்தும் துளி ரத்தங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை உழைக்கப் பல தொழில்கள் பிழைக்கப் பல தொழில்கள் பிச்சைக்குத் தொழிலுண்டா? வீசுங்கள் உங்கள் சட்டைப்பை காசுகளை. ஆகாயத்தின் மத்தியில் ஆடும் இவர்களின் வாழ்க்கையும் அடிக்கடி கலையும் மேகங்கள் கயிறின் நுனியில் உயிரை வைத்து பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில் உதடுகள் வெடிக்க இவர்கள் ஆடுகிறார்கள் இறைவனின் கூத்து இறைவன் ஆடுகிறான் இவர்களின் வாழ்க்கையில் கூத்து.…

    • 5 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.