கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மறக்க முடியுமா..................? நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த நாற்புறமும் கடல் சூழ்ந்த ஞானியர் ஐவர் உதித்த நல்லதோர் ஊராம் எம் காவலூர் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட ஊர் - அதில் அழகிய கடற்கோட்டையையும் கொண்டது எம்மூர் கலை வளர்ந்து தலை சிறந்து தனித்துவமாய் இருந்தது எம்மூர் மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம் மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன் எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை பறித்தது - பல உயிர்களை அழித்தது - உடமைகளை இழந்தோம் - நண்பர்களை பிரிந்தோம் - சொந்தங்களை அகதியானோம் -அந்நிய தேசத்தில் சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ பசுமை…
-
- 37 replies
- 4.6k views
-
-
அந்த ஒற்றை மரம் பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது கூடுகட்டிக் குருவிகள் வசித்தது மரம் முழுக்க மந்திகள் இருந்தது மரங்கொத்தி பறவையும் மறைப்பில் குருவிச்சை கூட குசியாய் இருந்தது எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது உண்ணக் கனி கொடுத்தது உறங்கப் பாய் கொடுத்தது ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து கொலை செய்யவும் துணிந்தது கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும் சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம் இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று எட்டி நின்று வெட்டிப் பார்த்தன காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு…
-
- 22 replies
- 4.6k views
-
-
செக்கு செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின. போராட்டம் முடிச்சவிழ்த்தது. பழக்கத்திலிருந்து விடுபடாமல் செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின. முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது. அருகாமையில் குண்டுகள் வீழ சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை பசுமை வெளிகளையும், பனிபடரும் குளுமை தேசங்களையும் தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன. வழமையில் இருந்து மாற்றமடையாது முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி இரைமீட்டிகள் சுற்றி வருகின்றன. நாகரீக வெளிகளின் மெருகேற்றலில் செக்கிழுப்புகள் பரவி விரிகின்றன.
-
- 5 replies
- 4.6k views
-
-
அன்னதானம் தாய் மண்ணிலே குஞ்சும் குருமானும் குமரியும் கர்பிணியும் பெற்ரவளும் வழர்த்தவனும் உடல் அவயவங்களை இழந்தவர்களும் தள்ளாடும் வயோதிபமும்.......... தினம் தினம் கையிலே வெற்றுத் தட்டேந்தி ஒட்டிய வயிற்றுடன் ஒரு நேர உணவு கேட்டு தெருத்தெருவாய் கால் வலிக்க கை கடுக்க அலைந்து திரியும் போது............... புலத்திலே அன்னதானம் என்ற பெயரில் குப்பைத் தொட்டிகளுக்கும் கறுப்பு பைகளுக்கும் உணவு திணிக்கப்படுகின்றன!!!!!!!! அன்புடன் தமிழ்மாறன்
-
- 2 replies
- 4.6k views
- 1 follower
-
-
கவிஞர்வை வைரமுத்து மரங்கள் குறித்து பாடிய கவிதை மரங்களை பாடுவேன்வாரும் வள்ளுவரேமக்கட்பன்பில்லாதவரை என்ன சொன்னீர்,மரம் என்றுமரமென்றால் அவ்வளவு மட்டமா.!!வணக்கம் ஒளவையேநீட்டோலை வாசியான் யாரென்றீர்மரமென்றுமரமென்றால் அத்தனை இழிவா !!பக்கத்தில் யாரவர் பாரதிதானேபாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர்நெத்தை மரங்கள் என்றீர்மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா !!மரம் !!!!!!சிருஷ்டியில் ஒரு சித்திரம்பூமியின் ஆச்சரிய குறிநினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்.விண்மீனுக்குத் தூண்டில் போடும் கிளைகள்சிரிப்பை ஊற்றிவைத்த இலைகள்உயிர் ஒழுகும் மலர்கள்மனிதன்தரா ஞானம் மரம் தருமெனக்குமனிதன் தோன்றும் முன் மரம் தோன்றிற்றுமரம் நமக்கு அண்ணன்அண்ணனை பழி…
-
- 1 reply
- 4.6k views
-
-
வேர்கள் வெளியில் தெரிவதில்லை கனிகள்,காய்கள் ஏன் மரங்கள் கூட கொண்டாடப்படுகையில் வேர்களின் வியர்வையை யாரும் துடைப்பதில்லை மரத்தை வளர்க்க நிலத்தை துளையிட்ட வேர்களின் வலி யார் அறிவார்? கனிகளை,காய்களை,மரத்தை திருடுகையில் வேரின் அழுகையை யார் நினைத்தார்? வேர் என்பது உயிருள்ள அத்திவாரம் தாயை போல, தாயின் தாயை போல வேர் கிழங்கானால் மட்டும் --- -நிரோன் -
-
- 7 replies
- 4.6k views
-
-
வேதனையை வாழ்க்கை ஆக்கிவிட்டவள் அன்புக்கு அர்த்தம் கேட்டால் காயங்களை மட்டும் காரணமின்றி தந்தவள் காதலுக்கு கருத்து கேட்டால்... நேற்று வந்த யாரையே நேசித்தவளுக்கு... நெடுநாளாய் நேசத்தை மட்டும் காட்டிய என் உணர்வு உறைக்காமல் போனது -என் துரதிஸ்டமே... கற்பனையில் என் காதல் கடந்து சென்று விட்டது களிப்புடன் -அதற்குள் கனவை கலைத்ததால் கழிப்பும் காணாமல் போனது ஆயிரம் சோதனை தாங்கிய ஆணிவேர்கள் கூட அழிந்திடும் நிச்சயம் காதலில் தோற்றிருந்தால் ஆனாலும்... இறைவனிடம் கேட்க எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி நிறைவேறா ஆசையினை முடிவுறா பயணமதை வாழ்வழிக்கும் காதலை- ஏன் வரவைத்தாய் என் மனதில்? சத்தியம் செய்து விட்டதால் சமர்களம் எனை வெறுத்த…
-
- 25 replies
- 4.6k views
-
-
=====> என்னவள் <===== விண்வரை வியாபித்த அன்பில்ஈடு இணையில்லாதவள்... வசந்தங்களால் வசப்படுத்த முடியா தென்றலவள்... தூரிகைகளில் தீட்ட முடியா தீண்டலவள்... ஏழுஸ்வரங்களில் இயற்ற முடியா இசையானவள்... தமிழின் இனிமையை தன்னகத்தே கொண்டவள்... தன்வேர்களை பூமியில் ஆழமாய் பதிந்தவள்... மனச்சிறையின் எல்லைகளை உடைத்து சிறகடித்து பறப்பவள்... காதலிலும் காதலுக்குள்ளும் உள்ளதையெல்லாம் கற்பிப்பவள்... சிறு பொழுதுகளில் நீராய் நிறைந்திருப்பவள் பெரும் பொழுதுகளில் நினைவாய் மலர்ந்திருப்பவள்... விடைபெறாமல் விடைபெறும் கேள்விகளையே தொடுப்பவள்... பின்னிரவின் மென்தூக்கத்தில் மெல்ல என்பெயரை சொல்பவள்... தீ சூரியனிலும் நீர் சம…
-
- 60 replies
- 4.6k views
-
-
-
இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து மலரத் துடித்த போது உன் வசியப் பார்வை என்னை சட்டென மலரவைத்தது. உன்னைப் பார்த்த அந்நிமிடத்தில் இருந்து என் மனசுக்குள் எதோ ஒரு தாக்கம். இதைத்தான் காதல் என்பார்களோ? புரியவில்லை..! எனக்கு புரியவில்லை, கிளியே..! அவனிடம் ஒரு முறை கேட்டு சொல் மெளனத்தின் ஓரத்தில் நெஞ்சின் ஈரத்தில் வெட்கப்படும் என் மனசு இராத்திரியில் கனவுகள் பகலில் அவன் நினைவுகள் இதுதான் என் வாழ்க்கை கிளியே இதையும் அவனிடம் சொல் ஆயிரமாயிரம் கனவுகளில் அவன் வந்து என் கூந்தல் கோதி தூக்கத்தை கலைத்து விளையாடி மகிழ்ந்த அந்த இனிமையான இரவுகள் அதையும் மறக்கவில்லை நான் இதையும் அவனிடம் சொல் கிளியே. பசுவின் மடியினைத் தேடும் பசுங்க…
-
- 27 replies
- 4.6k views
-
-
குட்டி அண்ணாவின் கவிதை தந்த தாக்கத்தில் இன்று எழுதியது...(http://www.yarl.com/...pic=101771&st=0) . பிரிந்து பறக்கும் வலி... அன்பே உனக்கும் எனக்குமான உறவுகள் எந்தக் கவிஞ்ஞனும் இதுவரை புனைந்துவிடாத வார்த்தைகளின் வனப்புகளைத் தாண்டி வரையப்பட்ட கவிதைகளடி... நாம் பழகிய அழகிய நாட்களின் நினைவுகள் எந்த ஓவியனது தூரிகையிலும் இதுவரை சிக்கிவிடாத அற்புதமான ஓவியங்களடி... உன் வார்த்தைகள் என் செவிகளில் விழுந்த அந்த மிகமெல்லிய முதலாவது குளிர்நாளில் நீ பேசிய ஒவ்வொரு வரிகளையும் என் நினைவுப் பெட்டகத்தில் எடுத்துச் செல்கிறேன்.. பழைய சில முத்திரைகளையும் பட்டாம்பூச்சிகளின் இறகுகளையும் பொன் வண்டு முட…
-
- 20 replies
- 4.5k views
-
-
எல்லாருக்கும் வணக்கம் கலியாணச் சடங்கு எண்டு சொல்லிப் போட்டு எங்கடை புரோகிதர்மார் பண்ணுற அட்டகாசம் இருக்குதே, சீயெண்டு போயிடும். ரெண்டு பேரையும் இருத்திவைச்சுப் போட்டு ஒருத்தருக்கும் விளங்காத (அவையளுக்கே விளங்குமோ தெரியாது) மந்திரங்களைச் சொல்லுறதென்ன, அதை இங்கை போடுங்கோ இதை அங்;கை போடுங்கோ அப்பிடிப் பாருங்கோ இப்பிடிப் பாருங்கோ, மூண்டு தரம் சுத்துங்கோ ஆறுதரம் இருந்தெழும்புங்கோ .. . . . அப்பப்பா .. . . கலியாணம் பேசேக்குள்ளையும் அந்தப் பொருத்தம் , இந்தப் பொருத்தம் எண்டு பாக்கிற ஆக்கள் மனப் பொருத்தம் எண்ட ஒண்டையும் பாத்தால் நல்லா இருக்குமெண்டு நினைக்கிறன். நான் என்ன சொல்ல வாறனெண்டால் ஆம்பிளையும் பொம்பிளையும் நான் கீழை சொல்லிற மாதிரி ஒருத்தருக்கொருத்தர் தங்கடை விர…
-
- 24 replies
- 4.5k views
-
-
கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது என்ன தான் விசித்திரமோ? பிரிந்து போன நம் காதல் மட்டும் இன்னும் உயிர்ப்படைய வில்லை தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது நின்று போன யுத்தம் மீண்டும் நிகழ்கிறது என்ன தான் விசித்திரமோ? நின்று போன நம் காதல் மட்டும் மறுபடி தொடரவே யில்லை :wink:
-
- 41 replies
- 4.5k views
-
-
பாரதியார் ஒரு நல்ல கவிஞர்.அவர் மறுபிறவி எடுத்து யாழ்களத்திற்கு வராமல் ஈழதமிழனாக சிட்னிக்கு வந்திருந்தால் எப்படி கவிதை வடித்திருப்பார் என்பதை பற்றி சிந்தித்தேன். அப்படியே கவிதையும் எழுதி விட்டேன்,அதற்காக எனக்கும் ஒரு மன்றத்தை ஆரம்பித்து போடாதையுங்கோ தொடர்ந்து பாரதியார் கவிதைகளை நான் ரீமிக்ஸ் பண்ண போறன். காணி நிலம் வேண்டும் - சாய்பாபா காணி நிலம் வேண்டும் - அங்கு அழகிய பளிங்கு மேல்மாடி "கோஸ்டிலி விட்டிங்குடன்" கட்டி தர வேண்டும் சுவீமிங்பூல் அருகினிலே - அப்பிள் மரத்தினிலே காயும்,பழமும் பத்து,பன்னிரன்டு -பார்ம் மரம் முற்றத்தில் வேண்டும் - நல்ல முத்து சுடர் போல் நிலாவொளி முன்பு வரவேண்டும் - அங்கு கத்தும் குக்குபுரா ஓசை - சற்றே வந்து காதில் ப…
-
- 34 replies
- 4.5k views
-
-
இலைகளைக் கழுவிச் சொட்டுகிற பெரு மழையில் கடைசியாய் நனைகிறது அமைதியின் ஓசை, மேகத்தில் மறைந்த கவலையின் வடுக்களை தன் கோடொன்றில் கீறி விரைகிறது மின்னலொன்றின் வெளிச்சம், தொலைந்த வானத்தைத் தேடி அலையும் நிலவின் சிதறலை ஆட்டி அசைக்கிறது தரைநீர்த் தேங்கலொன்றில் விழுந்த தூறல், கனத்துப் பெருத்த மழையின் சுவட்டில் கூடிழந்து உரத்துக் கூவுகிற பறவையின் இரைச்சலில் பாதித் தூக்கம் கலைந்துவிட, மீதி இரவில் மழையை நனைக்கிறது ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............ "மீதி இரவில் மழையை நனைக்கிறது ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............" ....... கனத்த வரிகள்
-
- 6 replies
- 4.5k views
-
-
-
- 45 replies
- 4.5k views
-
-
நாம்... ரொம்பவும் நேசிக்கும் ஒருவரால்தான், 'துரோகம்' எனும் பரிசையும்... புன்னகைத்தபடியே... கொடுக்க முடிகிறது! மனச்சாட்சிகள் எப்பொழுதும் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..! அது... துரோகம் செய்தவரையும் ஒருநாள் தட்டியெழுப்பும்..!! காலம் கடந்த ஞானத்தால்... கோலம் மாற்ற முடியாது! காலைச் சுற்றிய பாம்பாக... மனச்சாட்சியின் தொண்டைக்குழியை, இறுக்கிக்கொண்டேயிருக்கும்...!! துரோகத்தின் தடங்களில்... அனுபவப்பாதை விரிந்து செல்லும்...! தாங்களே பின்னிய வலையில், துரோகிகள் சிக்கித் தவிக்க... மற்றவரின் பயணம் மட்டும் தொடரும்! மீண்டுமொருமுறை துரோகச் சந்திகளில் தரிக்காத, தனித்த நீண்ட பயணங்களில்...... மாற்றங்கள் இருக்கும்...! ஏமாற்றங்கள் இருக்காது...!! இனிமையான பொழுதொன்றி…
-
- 17 replies
- 4.5k views
-
-
கடவுளுக்கோர் கடிதம் எல்லாம் வல்லவராம் எல்லாம் தெரிந்தவராம் எல்லாம் செய்பவராம் எங்கும் இருப்பவராம் அகிலத்தில் வாழ்பவர்கள் அப்படித்தான் சொல்லுகின்றார் ஆனாலும் என்னிடத்தில் அடுக்கடுக்காய் பலகேள்வி மனச்சிறையில் இதைப்போட்டு மறுவிக் கொள்ளாமல் மனந்திறந்து கேட்டுவிட மடலிதனை வரைகின்றேன் அண்டத்தை ஆள்கின்ற ஆண்டவன்உன் செயல்களுக்கு காரணத்தை அறியாத காரணத்தால் ஒருகடிதம் அடுக்காத செயல்செய்த அநியாயக் காரனைப்போல் தலைமறைவாய்ப் போயிருக்கும் தங்களுக்கே இக்கடிதம் முறையாக அனுப்பிவைக்க முகவரியும் தெரியாது இரகசியமாய் அனுப்பிவைக்க இருக்குமிடம் தெரியாது திருமுகத்தை அனுப்பிவைக்க திசைதெரியாக் காரணத்தால் திறந்த மடலாகத் த…
-
- 34 replies
- 4.5k views
-
-
மின்னல்கள் கூட இடைபிரிந்து திசைவழியிறங்கி உனை தேடுகின்றன- என் தொலைந்து போன காதலை மீட்டுக்கொடுப்பதற்காய். - from my blog -
-
- 37 replies
- 4.5k views
-
-
உன்னை விட்டு - நான் ஒரு கணமும் விலகவில்லை விலக நினைத்தாலும் -அது என்னால் முடியவில்லை என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்கிறாய்- ஆனால் மௌனமாக இருக்கிறாய் - மௌனமாகவே துரத்துகிறாய் என்னுடன் பேசாமல் மௌனமாக இருந்ததேன் ?? என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்ந்ததேன் ?? என்னை விடாமல் துரத்தியதேன் ?? ஏன் ?? ஏன் ?? ஏனெனில் நீதான் எந்தன் நிழல் நான் உந்தன் நிஜம் !!!
-
- 31 replies
- 4.5k views
-
-
-
நம் தலைவன் வரவுக்குகாய் காத்திருப்போம் கவிதை - இளங்கவி தமிழினத்தின் இன அழிப்பின் உச்சமான இவ்வருடத்தில் வைகாசி பதினெட்டு; வழமைபோல் மகிழ்வின்று விடிகிறது..... உலகத்தின் குரலொன்று தமிழனுக்காய் ஒலிக்காதா; எனும் சின்னஞ்சிறு நம்பிக்கையில் காலை கடனுமின்றி கணனியை தட்டுகிறேன்..... அதிர்ச்சி செய்தியொன்றில்; என் அனைத்துலகும் இருள்கிறது...! ஆம்..! தளபதிகள் நால்வர் மண்ணுக்காய் மரணிப்பு...! பதைபதைக்கும் நெஞ்சுடனே நண்பனும் நானுமாய் பாராளமன்ற சதுக்கம் விரைகின்றோம்..... கையடக்கத் தொலைபேசியில் மறுபடியும் கவலையுடன் ஓர் செய்தி..... எம் தலைவனையும் கொன்றுவிட்டார் அவன் சடலமுமெடுத்துவிட்டார்..... ஆம்...! இதுதான் அச்செய்தி தமிழர் உலகெல்லாம்…
-
- 18 replies
- 4.4k views
-
-
பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே பாட்டு இன்றே கேட்கலாம் வாங்க http://vaseeharan.blogspot.com/ please click on here... பாட்டைக் கேளுங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி வழங்குங்கள் அன்புடன் தமிழ்வானம் யாழ்கள உறவுகளுக்காக மட்டும்
-
- 25 replies
- 4.4k views
-
-
தோழி காலை புலர்ந்தவுடன் - தோழி என் கண்ணில் நீ நிற்கின்றாயே! காதல் மயக்கமல்ல - தோழி என் இதயத்தின் நட்பு அன்றோ! வானில் தெரியும் நிலா - தோழி உன் குளிர் முகப் புன்னகையோ! பாலும் முக்கனியும் - தோழி உன் கனிவுப் பேச்சும் ஒன்றோ! தாயாய் அரவணைப்பாய் - தோழி உன் சேயாய் நான் மாறிடுவேன்! இனிதாய் பேசும் பேச்சை - தோழி நீ எங்கு கற்றுக்கொண்டாய்! கோபமும் வருவதில்லை - தோழி உன் நல் நட்புக் கிடைத்ததினால்! பாடும் குயில் தன் குரலை - தோழி உன்னிடம் கடன் வாங்கியதோ! கொட்டும் அருவி போலே - தோழி என்னிடம் பரிவை நீ காட்டுகின்றாய்! மாறாப் பற்றுக்கொண்ட - தோழி நீ என் நெஞ்சின் நீரூற்று! நன் செய் நிலம் விளையும் - தோழி நீ என் வாடா அன்புப் பயிர்! ஏதனால் ஈடு செய்…
-
- 13 replies
- 4.4k views
-
-
எங்களது தமிழ் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் எல்லோருமே பெண்களின் இடுப்பின் மடிப்புக்களை மட்டுமே வைத்து கவிதையும் பாடலும் எழுதியுள்ளார்கள். இவர்கள் இரனையை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் நான் வீடு மாறியதில் வேலை அருகாமையில் இருந்ததால் அண்மையில் நான் வேலைக்கு போவதற்காக ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். அதுவும் கோடைகாலம். இன்று வேலைக்கு போய்க்கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னே ஸகூட்டரில் போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தும் வந்து உதித்தது.. என் ஸ்கூட்டரின் முன் ஸ்கூட்டரில் முன்னமர்ந்து போகிறவளே மடிப்பேயில்லாத உன் இடுப்பில் வழுக்கி வழுக்கி விழும் என் மன அவதியில் சிக்னல் சிவப்பா பச்சையா என்கிற சிதறிப்போன பார்வையில் மஞ்சளாய் என்மனது அல்லாட அசையும்…
-
- 44 replies
- 4.4k views
- 1 follower
-