கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ. சுற்றி நிற்கும் இந்தியப்படைகளின் முற்றுகைக்குள்ளால் நீயும் உனது தோழர்களும் இருள் கனத்த பொழுதொன்றில் - எங்கள் ஊரிலிறங்கினாய்....! சிகரங்கள் தொடவல்ல வீரர்களின் முகமாய் அந்த நாட்களில் எங்களின் சூரியன் எங்களின் தோழன் எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ. பூவிதழ் விரியும் அழகாய் புன்னகை யாரெவரெனினும் சினேகப் பார்வை ஊரிலே உனக்காயொரு சிறுவர் படை அங்கே நீயும் சிறுவனாய் ஆசானாய் வீடுகளில் உனக்காயென்றும் காத்திருந்து எரியும் விளக்குகளின் கீழ் உன் வரவைத் தேடும் நாங்கள்....! எப்படியெல்லாமோ எங்கள் மனங்களில் வந்து குடியேறிய புலி எங்கள் அன்புக்குரிய றோயண்ணா உங்களின் வரவில் மகிழ்ந்ததும் உங்களின் அன்பில் நனைந்ததும் இன்று போலவ…
-
- 2 replies
- 879 views
-
-
பிள்ளைகளின் மரணம் நடுரோட்டில் இரத்ததால் குதறப்படும் குடும்பங்கள் உலகம் கண்டுகளித்த இனப்படுகொலைகள் கொடூரர்களின் ஆட்சி முன்ஜென்ம பாவங்கள் ஏதுமறியா அகால மரணங்கள் போராளிகளின் வீழ்ச்சி விவசாயிகளின் கண்ணீர் ஏழைகளின் வயிற்றடுப்பு பணம் பணமென பேயாய் அலையும் பதர்கள் தீயின் நாக்குக்கு தவறாது பலியாகும் குடிசைகள்(மட்டும்) பிஞ்சுகளை சிதறடிக்கும் குண்டுகள் அப்பாவிகளை நோக்கியே நீளும் ஆயுதங்கள் காமத்திற்கு இரையாகும் பால்முகங்கள் கழுத்தறுக்கப்பட்ட கனவுகள் இவற்றைக் கண்டு நாணாதவன் கடவுளெனில் நானும் கடவுள். http://aazhkadal.blogspot.fr/2012/01/blog-post_28.html
-
- 4 replies
- 879 views
-
-
உனைக் காணாத கணங்களில் காதல் எண்ணம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடுகிறது பெருக்கெடுத்து ஓடும் உன் எண்ணச் சுமைகளின் திண்ணம் தாளாமல் தவித்துப் போகிறேன் திறன்பேசியில் குறுஞ்செய்தி தேடி நொடிக்குகொருமுறை நெருடுகிறேன் குறுஞ்செய்தி காணாது குன்றிப் போகிறேன்... அருகலையில் ஐயம் கொண்டு திசைவியை திருகிப் பார்க்கிறேன்.. என் கனவுக் கூட்டங்களின் பிறப்பிடமே அவற்றின் இருப்பிடமே….!! வீசும் தென்றலும் விசும்பின் சாரலும் உன் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது!! ஆதவனின் கதிரொளிகளும் உன் எண்ணங்களால் சுட்டு விட்டுச் செல்கிறது !! என் கனவுகளை நீயே பிரசவிக்கிறாய் அவற்றை போற்றுகிறாய் அழிக்கவும் செய்கிறாய்..!! ஐம்பூதங்களும் என் வேட்கை அறியும் அர…
-
- 5 replies
- 879 views
-
-
பேசவேண்டும் யார் இருக்கிறீர்கள் வெறுமையாகிப்போன தேநீர்க் கோப்பையில் நிறைகிறது என் குரல். நீங்கள் எனக்காவும் பேசுவதாக இருந்தால் தேநீர்க் கோப்பையை கவிழ்த்துவிடலாம் என் வெற்றிடங்கள் நிறைந்து கொள்ளும். எதைப்பற்றி பேசுவீர்கள்.. வழிக்காத என் தாடியைப் பற்றி கசங்கிப்போன என் ஆடையைப் பற்றி கிழிந்துபோன காலனி பற்றி அருகில் இருப்பவரைப் பற்றி.. ஓ, நீங்கள் என்னைப்பற்றி பேசவே மாட்டீர்களா? ஓசைகளை கழற்றி எறிந்துவிட்டு சொற்களை கொட்டுவீர்கள் பின் எப்போது சிதை ஏற்றுவீர்கள் நான் செத்தபின்பா அப்போதாவது என்னைப் பற்றி பேசுவீர்களா என்ன. எப்போதுதான் பேசுவீர்கள் என்னைப்பற்றி? எனக்குத் தெரியும் உங்களால் பேசவே முடியாது. ஏனென்றால், நீங்கள் உங்க…
-
- 5 replies
- 879 views
-
-
சாள்ஸ் என்ற பெறுமதி….! (எழுதியவர் - நிக்சன்) சாள்ஸ் என்ற பெறுமதி….! சாள்ஸ் என்ற சரித்திர மனிதன் சாவின் விளிம்பிலும் சாதனை படைத்த சத்தியன்…. சிங்களத்தின் அழிவில் தான் ஆக்கமுண்டென்ற அறத்தை நம்பிய தோழன்….! ஓயாமல் உழைத்த ஒற்றைச்செடி நூறாய் ஆயிரமாய் சூரியன்களைச் செதுக்கிய சிற்பி….! தலைவர் தளபதிகள் எவருமவன் முன்னால் பொதுவேதான் பேதமில்லை…! நேருக்குநேர் விவாதம் செய்திடும் ஒரேயொரு வீரதளபதி அவன் என் தோழன்; சாள்ஸ்….! கோபத்திலும் சிரித்திடும் இனியன் கொடிய பகைமுன் வீரத்திலும் அவனை வென்ற பேரொன்றில்லை…! தலைவன் வழி அது எங்கள் சாள்ஸ்சின் விழி வரலாறு படைத்த சாதனைப்புலி….! கோபத்திலும் சிரித்திடும் இனியன் கொழும்பின் அழிவை இவனே கொள்கையாய் மாற்…
-
- 17 replies
- 879 views
-
-
வானவில்லின் நிறங்களாய் உன்னில் பல வர்ணம் நேரத்துக்கொன்றாய் நாளுக்கொன்றாய் நிறம்மாறிக்கொண்டிருக்கிறாய் நீ உன்மீது கொண்ட நம்பிக்கைகள் இன்னும் வெள்ளை நிறமாகவே என்னுள் இருக்கின்றன காற்றடிக்கும் போதும் கடும் மலையின்போதும் கூட அவை நிறம்மாறும் நிலையற்று நிற்கின்றன ஆனாலும் மனம் என்னும் மாயக்கண்ணாடி சூறைக் காற்றின் வாடையில் மெலிந்து சுழல் காற்றில் சிக்கித் தவித்து இழப்பை எதிர் நோக்கும் வலுவற்று ஓடி ஒளிந்துகொள்ள இடம்தேடி ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறது மீட்க முடிந்தவன் நீ மட்டுமே எனினும் பிடிப்பு எதுவுமற்று பேரன்பு சிறிதுமற்று பருவம் தப்பிக் காய்க்கும் மரமாய் பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ என்ன சொல்லி என்ன இயல்பே அற்ற உனக்கு ஏற்புரை எது சொல்லினும் எள்விளையா நிலமாய் உன்மனம்…
-
- 4 replies
- 878 views
-
-
[size=5]பனியில் மொழி எழுதி - கவிஞர் சோலைக்கிளி[/size] சோலைக்கிளி இலங்கையின் கிழக்கும் மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த கவிஞர். இவரது இயற்பெயர் உதுமாலெவ்வை முகம்மது அதீக் ஆகும். இவர் 1980களிலே எழுதத் தொடங்கியவர். ஈழத்து கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். பாம்பு நரம்பு மனிதன், காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, எட்டாவது நகரம் போன்றவை இவரின் கவிதை தொகுப்புகளில் சிலவாகும். அந்த வகையில் இம்மாத சுவடுகள் பதியுமொரு பாதையில் கவிஞர் சோலைக்கிளியோடு பயணிப்போம். இதைத்தான் இவன் இவ்வளவு நாட்களாகப் படித்துக் கொண்டிருந்தான் மேசைப் புத்தகத்…
-
- 1 reply
- 878 views
-
-
தக்காளி ,வெங்காயம் விளை நிலம் எங்கே உண்ணும் உணவும் உடை இல்ல நிலை இங்கே மறந்து மறைத்து போனது எங்களின் நிலைமை மூன்று மாதத்தில் நெல் சாகுபடி வருமானமோ நாங்கள் சாகும் படி ..... மாறும் எங்கள் காலம் தங்கம் இப்போ உங்க காலம் வரும் நெல்லை தேடி அலையும் காலம் சிறிய வீடு சிறிய காரும் போதும் எனக்கு இது தான் உன் எதிர்பார்ப்பு இயற்கை சீற்றம் வந்தால் இதில் இல்லை பாதுகாப்பு உண்ணும் உணவு நாங்கள் தயாரிப்பது உங்களுக்காக இதை நீ புரியாதவனாக இருக்கிறாய் வழி விடு வழி விடு உன் சங்கதி வாழ்வதற்கு புதிய இயந்திரம் வந்தாலும் இதில் அனைத்தும் கிடைத்து விடுமா ....... சிந்தனை என்னும் வார்த்தைகளை சிந்திக்க மறந்து விட்டாய் என் தோழா …
-
- 1 reply
- 877 views
-
-
[size=4]திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்... எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்[/size] [size=4]சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிந்த ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்[/size] …
-
- 5 replies
- 877 views
-
-
ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி சிங்களம் மகிழ்ந்து இருந்த போது... கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி எம்மை காக்க எவர் வருவார் என தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம் என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் .... நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு நானோ இறையாண்மை அடிமை நீயோ இன்னொரு அடிமை உனக்கு... என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம் சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை.. தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய் வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி எம்மை ஒரு பாதையில…
-
- 12 replies
- 876 views
-
-
மரணத்தின் முதல் படியில்...... தூக்கம்......... மரணமெனும் வீட்டின் கனவு எனும் ஜன்னல் கொண்ட கவலை மறந்து களைப்பு ஆறும் தங்குமிட விடுதி......! உள்ளே செல்வதற்கு அனுமதி உனக்கு மட்டும் தான்.... உன் எந்த உறவும் உன்னுடன் செல்வதற்கு அங்கே அனுமதி மறுப்பு...... தனிமையிலே இனிமை காணும் மாய மண்டபம்...... ஒவ்வொரு நாட்களும் உனக்கு அங்கிருக்க அனுமதி சிலமணி நேரம் சில வேளைகளில் வெளியே வரும் கதவுகள் மூடப்பட்டால் உன் ஜன்னல்களும் சாத்தப்படும் அன்றுடன் உன் வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிப்பு உனக்கும் நிரந்தர விடுமுறை அதுதான் உன் மரணம்..... வாழ் நாளில் பெருமளவை சிலர் இங்கே கழித்திடு…
-
- 2 replies
- 876 views
-
-
கலை நயம் பாதி மெய்யறிவு பாதி கலந்து செய்த கலவை நீ. நாத்திக மொழியில் நீ பேசினாலும் - அதில் ஆன்மிக உணர்வு கொண்டேன் நான். நடிப்புக்கு இலக்கணம் நீ என்பர் - அன்பு மனிதத்துக்கு இலக்கணமும் நீ என்பேன் பரந்த அறிவாற்றல், தூரநோக்குப் பார்வை, சீரிய சிந்தனை தொனிக்கும் உன் வீரியப் பேச்சு. சமூகப் பிரச்சினைகளின் ஆழம் அறிந்தோன்; சிக்கல்கள் நீக்க அதுவே வழி என்பான். தமிழின் அழகை உன் வாய் மொழி மொழியும்! கலையின் வனப்பை, புதுமையின் பொலிவை கமலின் ஆளுமையை அவன் படைப்புகள் பேசும்!
-
- 0 replies
- 876 views
-
-
பார்த்தலையும், புன்னகைத்தலையும், நிராகரித்துவிடும் பலரை கடக்கவேண்டியிருக்கிறது. அரவணைப்புகான ஏக்கத்தைதையும் இன்றின் ஏமாற்றத்தையும் சுமந்து திரியும் சிலரையும் கடக்கவேண்டியிருக்கிறது. வீடுகளில், வேலைத்தளங்களில் - இருந்து ஏதாவதொன்றைக் காவி வருபவர்களையும், ஒரு சீக்கரெட் , கபே வழியாக ஏதோவொன்றை இறக்கி வைக்க முயல்பவர்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. லெதர் ஜக்கெற்றுக்களும் மப்ளர்களும் மனதையும் மூடிவிட ஐபோனும் கூலிங்கிளாசும் பொறிகளையும் தின்றுவிட கொட்டடி முதல் கொடிகாமம் வரை உறவாடி உணர்வோடு இருந்தம் என்பவரையும் பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. சென் நதியிலும் லூவர் மியூசியத்திலும் ஈபிள் கோபுரத்திலும் நீண்ட மெற்றோக்களிலும் ஏறிவந்த பின்னும்…
-
- 9 replies
- 876 views
-
-
தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் காவியமான வீரப் புதல்வர்களுக்கும் வீரவணக்கம்! [size=4]புன்னகை தவழும் பொன்முகத்தோனே.....![/size] ------------------------------------------------------------ எம் மண்ணின் அழகாய் வலம் வந்த புன்னகை தவழும் பொன்முகத்தோனே தமிழர் இன்னல் களையும் வாஞ்சையுடன் உலகின் திசைகள் நாடி நின்றானே வெள்ளை மனிதரின் பெரும் வஞ்சகத்தால் புன்னகைப் பொன்முகம் சாய்ந்ததன்றோ! தமிழ் மான மரபினை மண்ணிலே பதிந்தவர் தமிழீழ மண்ணின் காற்றிலே கலந்தவர் பொய்மையின் நீட்சியாய் தொடரும் உலகிலே உண்மையின் சாட்சியாய் உயிர் துறந்தோரே! காலமும் பொய்த்தது களமும் போனது நினைவுகள் மட்டுமே நெஞ்சினில் வாழுது கனவுகள் தாங்கியே களத்தின் வீழ்ந்தவர் எம் மனதினுள் வா…
-
- 15 replies
- 875 views
-
-
ஒரு கூட்டு கிளிகளாக, கொட்டில் வகுப்பொன்றில், கூடிப்பழகிய இனிய கணமொன்று நொடிக்கனவாக மலர்ந்ததின்று. நட்பில் வஞ்சமில்லை.... பதற்றமில்லை நெஞ்சத்தில்... நொடிக்கனவை படம் பிடித்து, மனத்திடையே மாட்டி வைக்க, அழுத்தினேன் புகைப்பட கருவியை. பளிச்சென்று ஒரு வெளிச்சம்... மலரும் காலையின் சூரிய கீற்று கலைத்தது என் இனிய கனவை... மலர்ந்தன என் விழிகள் புலம்பெயர் வாழ்க்கையின் புழுங்கும் கணங்களை முழுநீளப்படமெடுக்க... (17/08/2010)
-
- 8 replies
- 875 views
-
-
கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக.. இருண்ட கண்டத்தின் இருள் அகற்றிய கதிரவனே! வெருண்டது வெண்ணினம் - உன் வீர எழுச்சி கண்டு தொலைந்தது நிறவெறி தொடர்ந்த உன் பணியால் கொத்தடிமைத் தனம் உடைத்து - உன் குடி அரசாள வழி அமைத்தாய் ஒடுக்கப்பட்ட இனங்களின் ஒளி விளக்கானாய் துடிக்கிறது எம் இதயம் தூயவனே உன் சேதி கேட்டு இரத்த உறவொன்றை இழந்த உணர்வு எங்கள் உதிரமெல்லாம் பரந்து நிற்கின்றது கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக.. கண்ணீரோடு காத்திருக்கின்றோம் கலங்கரை விளக்கினைத் தேடி இருண்ட கண்டத்தின் நாயகனே! இருண்ட எம் வாழ்வில் ஒளி ஏற்ற இனி எம் தேசத்தில் வந்து பிறந்துவிடும். - எம் தலைவனுக்கு அடுத்து நாம் துதிக்கின்ற பேரொளியே துயில் எழும் ஞாய…
-
- 11 replies
- 875 views
-
-
முதல் விசா முடியும் பொழுது முதல் தங்கையின் திருமணம் முடிந்திருந்தது இரண்டாம் விசா முடியும் பொழுது இளைய தங்கைக்கு இருபது பவுன் சேர்க்க முடிந்திருந்தது மூன்றாம் விசா முடியும் பொழுது மூனு சென்ட் நிலத்தில் வீடு வாங்க முடிந்திருந்தது நான்காம் விசா எடுக்க தயாரான போது நரைத்திருந்தது திருமணமாகமலே எனக்கு “தலைமுடி” படித்ததில் பிடித்தது (முக நூல் )
-
- 2 replies
- 874 views
-
-
உலகம் இப்போ ஒரு உருண்டை வீடு அதில் மனிதர் எல்லாம் -தினம் அலையும் வெறும் கூடு இயந்திரங்கள் மனிதராகி வேர்வை சிந்தாது உழைக்கலாம் மனிதரெல்லாம் ஒன்று கூடி இயந்திரமாய்ப் பிளைக்கலாம் காலம் போற போக்கில் நாளை கலியாணங்கள் நடக்கலாம் ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத தம்பதியர் கூடியே தத்துப் பிள்ளை தத்தெடுக்க இயந்திரங்கள் சமைக்கலாம் வீட்டுக் காவல் வேலைகென இயந்திரத்தில் நாய்களாய் தோட்டம் முதல் தொலைவு வரை ஓடியோடி உழைத்திட இயந்திரமாய் மனிதனை சந்தையிலும் வாங்கலாம் .
-
- 2 replies
- 874 views
-
-
மகிந்தவின் கழுத்தில் தொங்குவது சிங்களவரின் கோவணம் இடியமீன் சிரிக்கிறான்
-
- 1 reply
- 874 views
-
-
வரலாறு காடுகளை பூக்க வைக்கும். HISTORY WILL BLOOM FOREST. . பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங…
-
- 2 replies
- 873 views
-
-
விளையாட்டா விளையாட சின்னவர்கள் ... பொம்மை கேட்டனர் .. கொடுக்கப்பட்டதோ பொம்மை துப்பாக்கி .. ஆண்டுகளா பல சிறார் விளையாடி போன .. அதே குருதி தேய்த்த பழைய துவக்கு .. இதை வைத்திருந்தவன் இறந்து போய் .. ஒருவருடமும் இல்லை அப்ப நாலு வயது .. அப்பொழுது இவன் பிறந்து இருந்தான் .. இவன் அருகில் நான் இருக்கும்போதே .. அவன் வெளியில் விளையாடியபடி நின்றான் .. டும் என சத்தம் வந்தால் ஓடி வரும் அவன் .. அன்று மட்டும் வரவில்லை ஏனோ .. சீறி வந்த ஏவுகணைக்கு தெரியுமா .. அவன் ஆசைப்பட்டது பொம்மை.. துவக்குக்கு என்று .. ஏவுகணை ஏவுறவன் பார்வையில்.. அவன் தீவிரவாதி... ஆனால் அவனுக்கு பொம்மை மேல் .. தீராத காதல் வியாதி ... பிஞ்சா கருகி விழும்போது மனம் .. துண்டா வெடித்து போவதை யார் அறிவர் .. …
-
- 0 replies
- 873 views
-
-
தேசிய நினைவெழுச்சி வாரத்தை முன்னிட்டு கவிதை போட்டி From: media@tyouk.org வணக்கம் தமிழீழ தேசிய நினைவெழுச்சி வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்படும் கவிதை போட்டியின் பதாகையை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம் நாங்கள். இவ் மின்னஞ்சலுடன் இணைத்திருக்கும் பதாகையை தயவுசெய்து உங்கள் இணையத்தில் அல்லது பத்திரிகையில் இணைக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம். நன்றி சஞ்சய் தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்.
-
- 0 replies
- 873 views
-
-
-
இதயமாக இருப்பவளே ....... இதயத்துடிப்பு வலிக்கிறதா ...? துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ கல்லை செதுக்கினேன் உருவம் கண்ணால் செதுக்கினேன் காதல் இதயம் வலியால் துடிக்கிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன்
-
- 5 replies
- 872 views
-
-
உலகப் போருக்கு முன்னால் உள்ளம் கதிகலங்க யூதர்கள் அனுபவித்த இனக் கொடுமையும், தென்னாப்பிரிக்க மண்ணிலே தோலை மட்டும் வெண்மையாய்க் கொண்டோர் கொண்டாடிய இனவெறியும், தமிழனின் தலையெழுத்தில் சிலையில் எழுத்தாய்ப் பொறிக்கப் பட்டுவிட்டது. மொத்தமாய் அவனிடமிருந்து எல்லாம் பறிக்கப் பட்டுவிட்டது. சொந்தமாக உறவுகளை மட்டுமல்ல அத்தியாவசியப் பொருளைக் கூட வைத்துக் கொள்ள வாய்ப்பில்லாத நிலை. ஈழத்து சோகம் ஆழத்தில் நெஞ்சை அழுத்தி விடுகிறது. அதில் புதையுண்டு மனம் அழுது விடுகிறது. புலிகளைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடை விதித்தால் மட்டும் தீர்ந்து விடாது பிரச்னை. மனித உரிமைகள் மறுக்கப் படுவதும், மாற்றான் தாய்க் கொடுமை…
-
- 2 replies
- 872 views
-