கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? _________________________ தீபச்செல்வன்
-
- 1 reply
- 1.2k views
-
-
குழந்தைகள் பலிவாங்கப்படுகிற நகரம் இங்கும் ஒரு தாயின் அழுகைதான் நகரத்தை உலுப்புகிறது குழந்தைகள்தான் ... பலியிடப்பட்டு அடுக்கப்படுகின்றனர். பேரீட்சைமரங்களின் கீழே பாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை தேடுகின்றதை நான் கண்டேன். எனது அம்மாவே நீ எங்கும் குருதி சிந்துகிறாய் நமக்காய் குழிகளைக்கூட வழங்க பிடிக்காத அதிகாரத்திடம் குழந்தகைள் திரிகிற நகரம் பலியிடப்படுகிறது. காஸா எல்லைகளில் இலங்கைப்படைகள் மோத வருகின்றன கிளிநொச்சியை இஸ்ரேல்படைகள் முற்றுகையிடுகின்றன. குழந்தைகள் என்ன செய்தார்கள்? நமது குழிகளில் கிடக்கிற குழந்தைகள் அங்கு அடுக்கப்பட்டிருக்கிறார்கள் மேலும் மேலுமாய் சனங்கள் தோற்றுப்போக அதிகாரத்தை கடக்க இயலாதிருக…
-
- 1 reply
- 505 views
-
-
அன்பினில் விளைந்த ஆசை ஆசையை மறைத்த நாணம் இச்சை அறியா நேசம் ஈகம் செய்யும் உழைப்பு உண்மைக்கு வருகின்ற கோபம் ஊமையாய் ரசித்த காதல் என்னிலும் மேலான நாணம் ஏழ்மையில் சிரிக்கின்ற வேதம் ஐயம் எழுந்திட்ட போதும் ஒரு பக்கம் சாரா நீதி இத்தனை இருந்திட்ட போதும் ஊமையாய் விலகியேன் போனாய் இங்கு நான் என்னதானேன் - மழை ஈசல் போல் சிறகினை இழந்தேன்- - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 1k views
-
-
-
எங்கள் நிலைகள் காக்கப் படுவதற்காய் எழுச்சியுடன் புறப்பட்டீர்கள்.. உங்களுக்காய்ச் சிலைகள் ஊர் தோறும் எழுந்துள்ளன.. எங்கள் இடங்கள் கவரப் படுவதைத் தடுக்க விளைந்தீர்கள் உங்கள் படங்கள் சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.. நீங்கள் வீழ்ந்ததனால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. நீங்கள் சருகாகிச் சாய்ந்ததால் நாங்கள் இன்னும் கருகாதிருக்கிறோம்.. நீங்கள் மெழுகாகி உருகினீர்கள் நாங்கள் ஒளியை அனுபவிக்கிறோம்.. உங்கள் உடல்கள் சாய்ந்ததால் எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிற…
-
- 1 reply
- 488 views
-
-
கடலின் கரையில் மணிலில் மாளிகை கட்டிட விரும்புகின்றேன் கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக் காதல் கொள்ளுகின்றேன் உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி உலவிட விழைகின்றேன் ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும் உரத்தை வேண்டுகின்றேன். வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க, வேட்கை கொள்ளுகிறேன். நன்றி கவிஞர் மீரா
-
- 1 reply
- 589 views
-
-
என்றும் என்னில் கலந்த உறவே எப்போதும் எனக்காய் வாழும் உயிரே என் தாய் போல் அன்பு காட்டிய நீயே என் தவிப்பு புரியாமல் மௌனமாக என் மனவாசல் கதவின் தாழ் திறந்த நீ காலங்கள் வரும் காத்திரு என்றாய் காலங்கள் ஓடுகின்றன உன் நினைவுகளுடன் காலமகளும் சிரிக்கிறாள் உன்வார்த்தைகள் காணாமல் போனதாக கடைவாய் சிரிப்புடன்
-
- 1 reply
- 943 views
-
-
ரோஜாக்கள் ஏனடி ரோஜாக்கள் முத்தமாய் தந்துவிடேன் என் மொத்த ஆயுளுக்குமான உந்தன் பரிசை. - தயா ஜிப்பரான் -
-
- 1 reply
- 883 views
-
-
பசி எனும் பாத்திரம். வேக வேகமாக போய்க்கொண்டிருக்கின்றேன் எங்கே, எதற்கு, எனக்கே தெரியவில்லை. என்ன தேவைக்காக இப்படி ஓடுகின்றேன் எதுவும் புரியவுமில்லை என்னை கண்டவர்கள் பார்வையில் இருக்கும் வெறி ஒரே எட்டில் கட்டி அணைத்து அழைத்து கட்டிலில் தள்ளுவதில் அவர்கள் அவசரம் அன்பான முத்தங்கள் எதிர்பார்க்க முடியாது அதரம் கடித்தலும் ஆடை விலக்கலுமே அவர்கள் குறி கறுத்த குறிகள் பெருத்த உணர்சிகளோடு முட்டுகையில் முட்டி எழும் அழுகை தட்டி அவர்கள் தாழ்ந்து நிமிர்கையில் எட்டி பார்க்கும் அருவருப்பை மிண்டி விழுங்கும் ஒரு மிடல் உமிழ்நீர் அவர்கள் வேகமான இயக்கங்களையும், இம்மியும் ரசனையின்றிய தின்னல்களையும் …
-
- 1 reply
- 1k views
-
-
கூடினார்கள் எரித்தார்கள் கலைந்தார்கள் சனீஸ்வரர்களுக்கு எள்ளெண்ணெய் வைத்ததில் பூசகர் இல்லம் புனருத்தாரணம் பெற்றது. ------------------------------------- கறிவேப்பிலை, பன்னக்குழை தேங்காய்ப் பொச்சு இவைகடந்து தீச்சட்டி, தீவட்டி, வேப்பிலை, சாணகம் வளர்தொழிலாய் தமிழர்களின் ஏற்றுமதி வியாபாரம். - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 943 views
-
-
மானுடத்தை நேசி உண்ண உணவின்றி உடுக்க உடையின்றிபடுக்கப் பாயின்றி தரிக்க நிழலின்றி சிதைந்த தேகமும் சிந்திய கண்ணீரும் கொண்டலையும் மானுடம் இரண்டு இலட்சத்தை தாண்டுதே தேனாட்டில்! துப்பாக்கி கலாசாரம் காறி உமிழ்ந்த எச்சிலின் காயங்கள் சிதைக்கின்றன இன்னும் எம்மவரின் தேகங்களையும் தடம் பதித்த எம் புனித தேசத்தையும்! காலனாம் பிணந்தின்னிக் கூட்டங்கள் சொந்த இலாபத்துக்காய் கந்தகக் குழாய் ஏந்தியதால் அப்பாவி ஜீவன்கள் அலைகின்றன தெருக்களில்! மௌனித்த உதடுகள் மீண்டும் திறக்க ஜனித்த சிசுக்கள் உரம்பெற சிவந்த எம்மண் சிலிர்க்க தமிழர் உரம்பெறு நாள்தான் எப்போ! துப்பாக்கி வேட்டும் குண்டுத் தாக்குதலும் தமிழர்களின் பசிக்கான தீனியா அழித்தது போதும் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
நீ என்னை நேசித்த போது நான் அறிந்து கொள்ளாதது ஒன்று இன்று நீ என் கூட இல்லாத போது புரிகின்றது ...நீ என்னக்குள் உயிராய் இருந்தது !!!! பார்த்த முகம் தனில் உன் கண் என்னை விட்டு பிரிந்தாலும் பழகிய என் இதய நெஞ்சை விட்டு நீ பிரிய வில்லை !!!! உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன் ..உன் சின்ன சின்ன கோபம் என்னை எளிமை ஆக்கின என் வாழ்வில் சிறு அர்த்தமுடன் .. இன்று நான் அதே நிழல்களுடன் !!!! உலகத்தின் கண்களில் உன் உருவங்கள் மறைந்தாலும் எனில் ஒன்றான உன் உருவம் மறையாது..!!!! …
-
- 1 reply
- 506 views
-
-
மாதந்தை வேலுப் பிள்ளை மரணித்தார் என்றதுமே வேதனை தாங்கவில்லை வெம்பியழ இடமுமில்லை சோதனைகள் மத்தியிலே சோர்ந்தவர் மடிந்தாரோ பாதகர்கள் கொடுமையினால் புனிதரவர் இறந்தாரோ சாதனைகள் புரிந்தவொரு தமிழ்த்தலைவன் கருகொடுத்து மாதரசன் மணியாட்சி மகிழவொரு காலத்தே அதனழகைப் பார்க்காமல் உயிர்விடுத்தல் தகுமாமோ? சீதாவின் நிலையுறுத்தி சீரன்னை பார்வதியும் சேதியொன்று மறியாது சித்தங்கலங்கி நிற்க பேதையென வாடியங்கே புலம்புவது சரிதானோ? ஆதரிக்குந் தமிழரணி அணியணியாச் சிதறுதற்கு போதனைக்கு ஒருபெரியோன் இல்லாத குறையன்றோ வேதமொழி தாயகமாய் கொண்டவரால் நீதியங்கே அணிவகுத்த காலத்தை அழித்தங்கே அரக்கருடன் தாயகத்துக் கனவுகளை தகர்த்தெறியும் ஆட்சிவெறி தமிழ்மானம்…
-
- 1 reply
- 712 views
-
-
நொண்டி சாக்கும்.. நொள்ளக் கண்ணும்..! [size=1] அவரவர் விளக்கம் [/size][size=1] அவரவருக்கு [/size] [size=1] சாந்த சொரூபியாக [/size][size=1] இருந்து கொண்டால் [/size][size=1] எல்லாம் சாதிக்கலாம் [/size] [size=1] அல்லது தற்பொழுத நிலையை [/size][size=1] தற்காத்துக் கொள்ளலாம் [/size] [size=1] பொழிப்புரை சொல்ல[/size][size=1] கிளம்பி விட்டார்கள் [/size] [size=1] தொல்காப்பியம் [/size][size=1] ஐந்திணை [/size][size=1] மற்றும் சில [/size] [size=1] ஏன் சுற்றி வளைத்து [/size][size=1] சொல்வானேன்..?[/size] [size=1] மந்திரி சபை விரிவாக்கம் [/size][size=1] என்ன செய்யப் போகின்றன [/size] [size=1] என்று உங்களால் [/size][size=1] உத்திரவாதம் தர …
-
- 1 reply
- 665 views
-
-
கார்த்திகை முன்னிரவு -2012 - நிலாந்தன் 27 நவம்பர் 2012 மழைக் குருவியின் குளிர்ந்த பாரமற்ற குரல் வீரர்களைப் புதைத்த காட்டில் சலித்தலைகிறது. ஈமத்தாழியுட் கார்த்திகை நிலவு ஒழியூறிக்கிடக்கிறது. வழிபாடில்லை வணக்கப்பாடலும் இல்லை நாயகர் இல்லை பேருரை இல்லை நனைந்த காற்றில் உருகிக் கரையும் தீச்சுடர் வாசமும் இல்லை. பெயர்க்கப்பட்டது நடுகல் துயிலாதலைகிறது பெருங்கனவு. இரும்பு வணிகர் உலவும் காட்டில் பூத்திருக்கிறது கார்த்திகைப்பூ. நிலாந்தன் கார்த்திகை -2012 www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/art…
-
- 1 reply
- 496 views
-
-
தமிழனின் விஸ்வரூபம் திருவள்ளுவர்; தமிழரின் விஸ்வரூபம் தந்தை பெரியார்! ... ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன்; ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்! ... சோற்று வயிறின் விஸ்வரூபம் தோழர் ஜீவானந்தம்; ஆற்று மணலின் விஸ்வரூபம் தோழர் நல்லகண்ணு! ... தரையுலகம் விடுத்து திரையுலகம் பார்ப்போமாயின்… கொடையின் விஸ்வரூபம் கண்டி; கொள்கையின் விஸ்வரூபம் காஞ்சி; நடிப்பின் விஸ்வரூபம் விழுப்புரம்; வசனத்தின் விஸ்வரூபம் திருவாரூர்; ... இசையின் விஸ்வரூபம் பண்ணைப்புரம்; இயக்கத்தின் விஸ்வரூபம் அல்லி நகரம்; பாடலின் விஸ்வரூபம் சிறுகூடல்பட்டி; தேடலின் விஸ்வரூபம் பரமக்குடி; .... ஆம்; ஆழிசூழ் உலக நாயகனாம் - கமல் எனும் கலைஞன்… பரமக்குடியில்; ஒரு பார்ப்பனக் குடியில் - கதர…
-
- 1 reply
- 394 views
-
-
முள்ளிவாய்க்கால் பாலைமரக் கிளிகளே! பாசமுடன் பாடும் பறவைகளே ! சோலையதை விட்டெங்கே சென்றீர்கள்? பாவியரின் 'பொமபரினால்' . பாலைமரம்..வீரைமரம் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்தன..! தாவியதில் ஏறும் மந்தியினம் கூவிவந்த குண்டுகளால் அழிந்தன..! பாட மறந்தன குயில்கள். ஆட மறந்தன மயில்கள் ஓட மறந்தன மான்கள் காடுதரும் சுகத்தில் களித்திருந்த காடைகளும்..சேவல்களும் பாடையிலே ஏறி பறந்தன! தேன்தேடும் வண்டினம் வான்கூவி வந்த 'பொஸ் பரசால்' தாம் கூடும் கானகத்து மரக்கிளையில் எரிந்தன ! கூழைக் கடாக்கள் .... கட்டிய கூடுகளில்... சிறகு முளைக்காத சிறுகுஞ்சுகள் பாவியர்.. கொட்டிய …
-
- 1 reply
- 582 views
-
-
தில்லைநடராஜன் வாசற் திருப்படியில் தொல்லையம்பலங்கள் ஆடுகிறார் திருக்கூத்து எல்லைகடந்துவிட்ட பித்து நிலைபோலும் கல்லைக் கடவுளென்று தம் தேகத்தையாட்டுகிறார். பாலைக்குடித்த பிள்ளை யாரென்று மாலையெதிர்பார்த்து மேடையிலே நின்றமகன் சால்வை போனவிடம் தானுமறியாமல் சதுர்கூத்து ஆடிவிட்டான்; சிவனடியானாகிவிட்டான். கனியாக் காதலுக்கு அடிக்கின்ற புகையிதுவோ? கடவுள் வரமருளி ஆடுகின்ற கூத்திதுவோ? செப்படி வித்தைக்கு சிவனில்லம் சத்திரமோ ? மூளைப்பிசகுக்கு கலையாட்டம் மருத்துவமோ? - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 1.2k views
-
-
FACEBOOK பாவித்துப்பார்... உன்னை சுற்றி REQUEST தோன்றும்... நட்பு அர்த்தப்படும்...... நாளிகையின் நீளம் குறையும்.... உனக்கும் கவிதை வரும்... டைப்பிங்க் வேகமாகும்... INTERNET தெய்வமாகும்... உன் கைவிரல் பட்டே KEYBOARDS உடையும்... கண்ணிரண்டும் கமெண்ட் ஐ தேடும்... FACEBOOK பாவித்துப்பார்... நித்திரை மறப்பாய்... 6 முறை LOG I...N பண்ணுவாய்... LOG OUT பண்ணினால் நிமிசங்கள் வருஷங்கள் என்பாய்... LOG IN பண்ணினால் வருஷங்கள் நிமிசம் என்பாய்... காக்கை கூட உன்னை கவனிக்கும்... ஆனால் யாருமே உன்னை கண்டுகொள்ளவில்லை என் உணர்வாய்... உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத உறவொன்று உருவாகக் காண்பாய்... இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம் FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்... F…
-
- 1 reply
- 1k views
-
-
ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க... ஆலயங்களில் மணியொலிக்க ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க தாமாகவே கண்பனிக்க தரணியில் மீண்டுமோர் கார்த்திகை கார்த்திகை செல்வங்களான கண்மணிகளே மாவீரர்களே பார்தனில் தேடுகின்றோம் பாசங்களே உங்கள் கோவில் கோவிலதை உடைத்துப்பகை கோலவிழாக்கள் கொண்டாடினர் பாவியர்க்கு சந்தோசமாம் பாழாக்கி விட்டனராம் துயிலுமில்லங்களை துயிலுமில்லங்களைத் துடைத்தாலும் துடைபடுமோ உங்கள்நினைவு விழிகளில் வழிகின்றநீர் விபரத்தை விளம்பித்தான் நிற்காதோ நிற்கின்றவிக் கார்த்திகையில்நினைவெல்லாம் நீங்கள்தானே காற்றென வந்தவரே கனலென நின்ற கற்பூரங்களே கற்பூரங்களுக்கு விளக்குவைப்போம் கார்த்திகையில் விழாஎடுப்போம் தமிழராய் ஒன்றுபடுவோம் தரணியில் தமிழரசு அமைப்போம…
-
- 1 reply
- 671 views
-
-
தேநீர் கவிதை: மழை மழை நனைதல் தவம். குழந்தைகளுடன் நனைதல் வரம். பகல் முழுதும் மழையுடன் விளையாடிக் களைத்த குழந்தை தூங்கிப் போனாள். மழையும் ஓய்ந்து தூங்கியது. அதன் பின் தொடங்கிற்று பிறிதொரு சிறுமழை - கிளைகளினூடே துளிகளாகவும் கனவு காணும் குழந்தையின் இதழ்களில் புன்னகையாகவும். இங்க செம மழ. ஜாலியா நனையிறோம் அங்க மழயா என்ற ஒரு குழந்தையின் …
-
- 1 reply
- 1.7k views
-
-
அம்மாவின் டிரங்குப் பெட்டி - கவிதை லீலாதர் மண்டலோயி இந்தியிலிருந்து மொழிபெயர்ப்பு : மணிபாரதி, ஓவியம்: செந்தில் மூன்றாம் நாளுக்குப் பின் பொறுமையிழந்த வீட்டுப் பெண்டுகள் ஒன்றுகூடித் திறந்துவிட்டனர் அம்மாவின் டிரங்குப் பெட்டியை சற்றே விவாதத்தின் பின் பகிர்ந்து கொள்ளப்பட்டன நகைகள் பெரிய பூசல் ஏதுமின்றி பெண்கள் மூன்றுபேர் ஆனதால் சேலைகளின் பகிர்தல் எளிதாக இருக்கவில்லை பூச்சி அரித்துவிட்ட கல்யாணப் புடவை மூலையில் கிடக்க உடைந்த மூக்குக் கண்ணாடி இன்னொரு பக்கம் இளமை தொட்டு வயோதிகம் வரையிலும் அம்மா கண்ட ஈரம் நிறைந்த காட்சிகள் அதில் பதிந்திருந்தன ஆனால், அவர்களுடைய கண்களுக்குத் தெரியவில்லை ஒரு மடிச்சீலை இருந்தது ர…
-
- 1 reply
- 733 views
-
-
நறு மணம் வீசும் மலராக இருந்தால் நானும் உனக்கு முள் வேலியாக இருப்பேன் பயன்தரும் விதையாக நீயும் இருந்தால் அதுக்கு பசளையாக நான் இருப்பேன் எழுத்தாக நீயும் இருந்தால் உன்னை கவிதையாக இங்கு நானும் கோர்த்துடுவேன் வெண்ணிலவாக நீயும் இருந்தால் உன்னை கருமுகிலாக வந்து உன்கற்பை காத்துடுவேன் கண்ணாக நீயும் இருந்தால் உன்னை இமையாக வந்து நானும் காத்திடுவேன் மூக்காக போல நீயும் இருந்தால் நானும் உனக்கு சுவாசம் தந்துடுவேன் வாய் போல நீயும் இருந்தால் என் கவித் திறனை உனக்கு தந்திடுவேன் இதயத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்த காலத்தில் களத்தில் இருப்பவர்களுக்குதான் களநிலைமை தெரியும். யுத்த களத்தில் சில நேரங்களில் பின்னடைவு ஏற்படுவது இயல்பு, இக்காலங்களில் நம்மவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆதரவும்தான் நம்மவர்கள் வெற்றிகளை விரைந்தெடுக்க உதவும். இது நேரங்களில் சில மூதேவிகள் நம்மவர்களிடத்தில் பயத்தையும், சோர்வையும் ஏற்படுத்த முனையகூடும், அப்படி முயலும் சில மூதேவிகளை இங்கும் நாம் கான்கிறோம். அவர்களின் வெற்றுக்கூச்சல்களை புறந்தள்ளி புத்தி புகட்டுங்கள். தமிழர்களின் பொற்காலமாக கருதப்படும் பிற்கால சோழர்களின் வெற்றிக்கு வித்திட்ட வரலாற்று நிகழ்வை இது சமயம் குறிப்பிடுகிறேன் பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர். இவர் பற்பல யுத்த களங்க…
-
- 1 reply
- 914 views
-
-
புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் முனைவர் இரா.செங்கொடி மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்க…
-
- 1 reply
- 760 views
-