கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பணத்துக்காக .... திருமணம் செய்தேன்.... என்னை விட பணத்தை .... வட்டிக்கு கொடுப்பவன்..... சந்தோசமாய் ..... இருக்கிறான் .....!!! திருமணத்தை ...... மணவாழ்கையாக ..... செய்யாமல் .... பணவாழ்கையாய் ....... செய்தால் வாழ்க்கையும் .... சந்தை பொருள்தான் ....!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 742 views
-
-
என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம் மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம் மரணித்த மங்கையர் மீது சத்தியம் வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம் பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம் மானம் காத்த மறவர் மீது சத்தியம் சகோதரி சகொதரன் மீது சத்தியம் என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அதுவும் தானைத் தலைவன் காலத்திலே என் இனமே என் சனமே பூக்கள் பூத்துக் குலுங்கும் தேனீக்கள் இசை பாடும் நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து முற்றத்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரபஞ்சத்தின் அந்தகார இருளில் மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில் தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று! பிரம தேவனின் பிரதிநிதியாய் உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது ஓட வைக்கும் அற்புதப் படைப்பு! கருவை வளர்த்தெடுத்து, அதன் கண்ணையும்,மூக்கையும் கற்பனையில் வடித்துக் குருதியில் குளித்துச் சிலையாய் வடித்தெடுக்கும் ஒரு சிற்பியின் திறமை! குழந்தையின் முகம் பார்த்துக் காலம் காலமாய்க் கட்டி வைத்த ஆசைகளின் கனவுக் கோட்டையைக் கணப்பொழுதில் உடைத்தெறியும் ஒரு முனிவனின் முதிர்ச்சி! நோய் கண்ட வேளையில், இரவும் பகலும், அரைக்கண் மூடி, நீ கொள்ளும் அனந்த சயனத்தில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்தப் பரந்தாமனின் பக்குவம்! பூவைத் துளைத்து அதன் …
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
இல்லை...இல்லை... - இரத்தின “மை” Saturday, 13 January 2007 உணவுக்கு மரவள்ளிகூட இல்லை உயிர்காக்க மருந்தில்லை நத்தாருக்கு கேக் அடிக்க மாஜரினில்லை பொங்கலுக்கு சக்கரையில்லை பாறணைக்கு காய்கறியில்லை பள்ளிசெல்லும் பையனுக்கு குமுழ்முனை பேனையில்லை குழந்தைக்கு பால்மாயில்லை எக்ஸ்றே இயந்திரத்துக்கு எனேஜி இல்லை எக்ஸ்போவில் ரிக்கறில்லை ஏரியாகொமாண்டரிடம் கிளியரன்ஸ் இல்லை. ஏ நைனுக்கு விழிப்பில்லை மரக்கறிக்கு உரமில்லை சந்தையில் மீனில்லை விலைவாசிக்கு குறைவில்லை தேரிழுக்க பக்தனில்லை ஏர்பிடிக்க வலுவில்லை மனித உரிமைக்கு மதிப்பில்லை சிந்தும் குருதிக்கு பெறுமதியில்லை விசாரணைகளுக்கு முடிவில்லை மிகிந்தலைக்கு பாதையில்லை மகிந்தரின்…
-
- 1 reply
- 1.2k views
-
-
எதிரியுடன் உனக்குத் தேனிலவு தமிழர்க்கு எல்லாம் தலைக்குனிவு நீயானாய் நாடாளும் அமைச்சனாய் தமிழர் காடெல்லாம் அகதிகளாய் ஆடுகிறாய் அழகியுடன் பெந்தோட்டையில் வாடுகிறோம் அழுகையுடன் இனவேட்டையில் உன்குடும்பம் பணத்துடன் வெளிநாட்டில் தமிழரெல்லாம் பிணத்துடன் சுடுகாட்டில் நீயின்று பகைவனுடன் படுக்கையில் தமிழினம் மரணத்தின் படுக்கையில் http://gkanthan.wordpress.com/index/eelam/bed/
-
- 1 reply
- 1.9k views
-
-
-
எம் தேசத்தின் விடியலுக்காக வித்தான வீர மறவர்களே..! கல்லறை விட்டு எழுந்து வாருங்கள்.. கரிகாலனின் வழியில் சென்று போர்க் களங்களில் எதிரியை வீழ்த்தி சந்தன பேழைக்குள் உறங்கும் எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள்.. புதிய சரித்திரம் படைப்போம் உயிர்த்து விடுங்கள்… அன்னியரின் அடிமை விலங்கை உடைத்து எரிமலையாக எழுந்த சூரிய புதல்வர்களே தமிழீழ மண்ணில் உயிர்த்து விடுங்கள் .. கண்கள் மூடி உறங்கும் எங்கள் தோழனே கல்லறையை விட்டு வெளியே வாருங்களேன்… கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையிலே எங்கள் உள்ளம் துடித்து அழுகின்றோம் கார்த்திகை பூக்களே எழுந்து வாருங்கள்…. ஈழத்தின் வித்துக்களாய் தமிழீழத்தின் காவற் தெய்வங்களாய் தேசிய தலைவனின் பிள்ளைகளாய் .. தமிழீழம்தா…
-
- 1 reply
- 980 views
-
-
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடி…
-
- 1 reply
- 996 views
-
-
மனசு போல வாழலாம் கலகலன்னு சிரிக்கலாம் காலமெல்லாம் சிறக்கலாம் நிலவிலேறிக் குதிக்கலாம் நிம்மதியாய் இருக்கலாம் வழ வழன்னு கதைக்கலாம் வண்டு போலப் பறக்கலாம் மலையிலேறி இறங்கலாம் மழையிலேயும் நனையலாம் மழலையாகப் பேசலாம் மரங்கள் மீது ஏறலாம் பனித்துளிகள் சேர்க்கலாம் பறவையோடு பாடலாம் கலைகளிலே திளைக்கலாம் தென்றலோடு நடக்கலாம் மலர்களிலே உறங்கலாம் மனசு போல வாழலாம் http://www.lankasripoems.com/?conp=poem&pidp=214612
-
- 1 reply
- 1.1k views
-
-
*என் கனவு....* என் இரவுகளை நீ சிறை பிடித்ததால் என் கனவுகள் களவாடப்பட்டு விட்டன !!!... விடுதலைக்கு இன்றும் என்விழிகள் சாட்சி கூண்டில் ... *என் ஆசைகள் ...* அழகாய் இருக்கிறதடி உன் வாசல் கோலங்கள்... புள்ளிகளாய் நீயும் என் ஆசைகளை வைப்பதாலோ !!!... நசுங்கித்தான் போனதடி அதுவும் உன் வீட்டு நாய்குட்டி முதல் பால்காரன் வரை பாதங்கள் பட்டு !!!.. *என் நினைவுகள் ....* மறந்துவிடு எனச்சொல்லி நீ எறிந்த கல்லில் உடைந்து விட்டது ... கண்ணாடியாய் !!!... ஓராயிரம் உன் பிம்பங்கள் உடைந்த துண்டுகளில் உட்கார்ந்து கொண்டு இன்றும் கீறுகின்றன... என் இதயத்தை !!!... *என் சிரிப்பு ...* அதை எட…
-
- 1 reply
- 986 views
-
-
நிதம் என் விழிகள் உன்னருகே விழுகிறதே, திசை தெரியா என் மனது உனக்காக ஏங்குகிறதே, சொற்களால் வரைய இது வாழ்க்கைக் குறிப்பா வார்த்தைகளால் வளைக்க இது வீரத் தழும்புகளா வானத்திற்கு வளையல் போடும் செயல், எளிதல்ல ஆனாலும் எண்ணம் ஏற்றமுடையது சிந்தித்து அடைகாக்க இது அவையுமல்ல, கைகள் பேச நிதம் பதில்கூறவேண்டும்.... திங்கள் மடிந்து ஞாயிறு மலராது, உன்னை பிரிந்து நானும் வாழமுடியாது.... கற்பது காதலாயினும் கற்பிப்பது என் தேவதையே.... அடிப்பது எதிர் நீச்சலாயினும் நீந்துவது அவள் மனதிலே.
-
- 1 reply
- 558 views
-
-
சுதந்திரம் வரும் ஒருநாள் நம் கௌரவமும் அன்று வரும் தமிழீழம் புதிய சூரியனாய் உலகுக்கு உதயம் தரும் அந்த நாள் காண நான் இருப்பேனா ஏங்குகிறேன் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை பிறப்பாராம் வீரத் தலைவர்கள் தமிழீழத் தலைவன் அவன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என்ன விநோதம்! காலம் ஏன் இப்படி கடுகதியில் ஓடுகின்றது தம்பி என்று அழைத்தவர் இன்று அருகி உன்னை பலர் அண்ணன் என்று அழைப்பது எனக்கு அதிசயம் ஆம், அதுவும் பாசம் தான் ஆனால் எனக்கு நெஞ்சம் துடிக்கிறது மேலும் விரைந்து நடக்கிறேன் செய்ய முடிந்ததை நான் செய்தபின் தான் மடிவேன் மேலும் வேண்டும் உத்வேகம் புத்துணர்வு வாசலில் நிற்கும் புதிய சமுதாயம் அதன் கையில் பொறுப்புகளை அர்ப்பணித்துச் செல்வோமா பூமி அது காத…
-
- 1 reply
- 1.2k views
-
-
அன்று அடைமழைகாலத்தில் அழுதகண்ணீர் ஆழக் குழியில் விதைத்த விதைகளை நனைத்து உயிர்ப்பித்தது. இன்று விதைத்த விதைகளை தோண்டி எடுத்து வித்தை காட்டும் காலம் தோப்பாக வேண்டிய விதைகளை முளைக்கக்கூட விடுவதில்லை அறுபடைக்காக அன்றி அடையாளத்திற்காக விதைத்த வயலுக்குள் மீண்டும் நூறுவகைத் தானியத்தை விதைக்கின்றார்கள் எதுவும் முளைக்கவும் வளரவும் முடியாமல் செத்துப்போகின்றது தன்னை விட பெரிய சாணி உருண்டைகளை தள்ளிக்கொண்டுபோன வண்டுகள் தந்த நம்பிக்கையை கூட எதுவும் தருவதில்லை மாமரத்தடியில் ஈன்ற கன்றின் துவாலைகளை நக்கும் தாய்ப்பசு போதித்த பரிவுபோல் எதையும் எங்கும் உணர்வதில்லை கோடிக்குள் இருந்த கோழிக்கூட்டில் கக்காவுக்கு கூட போகாமல் அடைகாத்த…
-
- 1 reply
- 735 views
-
-
குருவிக்கு வேண்டுகோள் : ஞானக்கூத்தன் கூடுகட்ட விடமாட்டேன் சின்னக் குருவியே! என் வீட்டு சன்னல்கள் திறந்திருக்கக் காரணம் பருவக் காற்றுகள் உள்ளே வர எஞ்சிய உணவின் வாசம் மறையவும் துவைக்கப்படாத துணிகளின் வாடை போகவும் இன்னும் ஏதோ ஒன்று என்னவென்று தெரியாத ஒன்றின் சிறு நெடி போகவும் பருவக்காற்றுகள் உள்ளே வீசத் திறந்துள்ளன எனது சன்னல்கள் எனது வீட்டுக்குள் வருவோர் தனது வாசத்தோடு வந்து போகிறார் திரும்பிப் போகும் போது அதிலே கொஞ்சம் விட்டு விட்டே போகிறார் தெரியுமா? சன்னல் வழியே சிறகை மடக்கி வர முயலாத சின்னக் குருவியே கூடு கட்டப் பொருந்தி இடங்கள் இல்லை குருவியே எனது வீட்டில் நாட்டின் வளர்ந்த மரங்கள் எல்லாம் என்ன ஆயின? நீயேன் கூட்டை…
-
- 1 reply
- 818 views
-
-
ஏ சர்வதேச சமூகமே! கவிப்பேரரசு வைரமுத்து சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்களவெறிக் கூத்துகளை அறிந்தும் அறியாயோ ஐ.நாவே? வாய்வழி புக…
-
- 1 reply
- 1.3k views
-
-
ரசிகா கவிதை ரசிக்க கூடியமாதிரி உள்ளது. இதைப்படித்ததும் கவிஞர் காசியானந்தனின் வரிகள் என் நினைவுக்கு வந்தன அன்னை தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா.. நீ என் அன்னை ...... அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான் ஆ னா எழுதிய மண்ணல்லவா... தாயின் நினைவையும் தாய்நிலத்து நினைவையும் ஒன்றாகத் தந்நதமைக்கு நன்றிகள்
-
- 1 reply
- 785 views
-
-
எனக்காக ஒரு பாடல் தாய்மணணே நீ பாடு எனக்காக ஒரு பாடல்-என் தாய்போல நீ பாடு எனக்காக ஒரு பாடல்-உன் சேய்போல நீ தேடு உனக்காக நான் வாடல்-இன்னும் வாழாத வாழ்வோடு உனக்காக நான் வாடல் தாய்மண்ணைப் பிரிந்தாலும் தலைமுடியே உதிர்ந்தாலும் தாயக நினைவோடு... தளராமல் நான் இருப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் பிடிக்காத பிழைப்போடும் பெரும் பாடு பலபட்டும் உயிர்க் காற்றை உறையவிட்டு உனக்காக நான் உழைப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் உயிரை உயர்வாக நினைத்தாலும் உடலை கூடாகச் சுமந்தாலும் உற்றார்கள் உன்னை மறந்தாலும் என் உணர்வுதனை உருக்கிடுவேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் அன்னிய வனவாச அவலத்தோடும் அன்னை மண் உன் நினை…
-
- 1 reply
- 1.1k views
-
-
மரணமே நெருங்காதே கண்ணீர் மழையால் உம்மை தொழுகிறேன் மரணமே நெருங்காதே கிடைத்தற்கரிய பரிசாய் எனக்கும் கிடைத்தான்....என்னை நனைத்தான் என்னுள் நனைந்தான் கடந்த கால நினைவுகளை காயங்களாக கொண்டவனின் காயம் போக்க காதல் செய்ய வரம் கிட்டியது என் பேறு தொலைவில் இருந்தாலும் காதலால் தீண்டுகிறான் தேன் துளியாய் அவன் நினைவுகள் தித்திக்க வார்த்தைகள் தெவிட்டுகிறதே அவன் அன்பை வருணிக்க..... அன்னாகரீனா, நாஸ்தென்காவை காதலிகளாக கொண்டவன் என்னையும் காதலியாக ஏற்றான் அவன் அன்பிற்கும் மட்டுமல்ல அறிவிற்கும் நிகரில்லா என்னை ஆயுள் வரை அவனோடு பயணிக்க எதற்காக தேர்ந்தெடுத்தான் என்னில் எதை வியந்தான்....? உள்ளூர் அரசியலே தெரியாத என்னிடம் உலக அரசியல் பே…
-
- 1 reply
- 704 views
-
-
குருதி படிந்த சுவடுகள் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கவிதை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கம் நதியும் இவர் பிறரன்பு புரியவைத்த பெருமை இவர் அன்று பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலர வைத்த மாண்பும் இவர் மனித நேயத்தைத் தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போல இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் துன்னையே அர்ப்பண்pத்த தியாகம் இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் துயர் களைந்த சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்மா எனும் உறவு.... தாய்ப் பாசம் அனைத்து உயிரும் ஆசைகொள்ளும் உன்னதப் படைப்பு அவள்.... அம்மா என்று அழைத்ததுமே உன் அருகில் நிற்கும் நினைவு இவள்..... அவளை மனதிலே நினைத்துவிட்டால் காற்றுனை தாலாடும் உணர்வுகொள்வாய்... உன் கவலையெல்லாம் மறந்துவிடும் வானத்து நிலாகூட - உன்னை நெருங்கிவந்து முத்தம் தரும்.... அவளை நினைக்கும் போதெல்லாம் நீ மீண்டும் பிறந்திடுவாய்.... பிறப்பின் உணர்வு கொண்டு குழந்தைப் பருவதின் குதூகலம் உணர்ந்திடுவாய்.... தாயெனும் தெய்வமது தன் பசியில் உனை வளர்ப்பாள்... உன் தூக்கம் தருவதற்கு தன் இரவை செலவுசெய்வாள்... பல கண்டங்கள் தூரத்திலும் உன் துக்கம் அறிந்திடுவாள்.... அதுபோல நீயு…
-
- 1 reply
- 1k views
-
-
உறுதி இது தமிழீழம் உருவாகும் வரலாற்றில். கல்லூரி செல்லும் கன்னிப் பெண் சட்டையில் கைக்குண்டு தேடுது காவாலி இராணுவம் சந்தியில் சென்ரியில் சவப்பெட்டிப் பயணம் ஜ.டி யில் தானே-எங்கள் ஆத்மா வாழுது அண்றைக்கு சென்ரியில் நிண்றவன் கண்ணுக்கு தம்பியின் தோற்றத்தில் ஏதோ தவறாம் இன்றைக்கும் அவன் இருப்பிடம் தெரியாமல் ஈழத்தில் தவிக்கிறாள் ஈரஞ்சு மாதங்கள் கருவிலே சுமந்தவள் எட்டப்பன் கூட்டம் எல்லாளன் தேசத்தில் கொட்டம் விடுகிறது கொடுமை பல புரிகிறது வெட்டிச்சரிக்கிறது-இனத்தை வேருடன் அழிக்கிறது காவலர்கள் காடேக கடிநாய்கள் புகுந்ததனால் வாடி வதங்கி வலி மிகக்கொண்டு கூடு திரும்பும் குஞ்சிழந்த பறவைபோல் காக்க ஏதுமின்றி கவனிப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
காத்திருக்கும் இதயம் கனவுகள் பூத்த இரவுகள் எல்லாம் - உன் நினைவுகளால் வேகுகின்றன இதயம் துடிக்கும் ஓசைகள் எல்லாம் - எனக்கு மட்டும் ஒப்பாரிச்சத்தங்களாகின்றன - உன் நினைவு பூத்த வெம்மை நிலப்பரப்பாய் என் உள்ளம் தகிக்கிறது அசைவற்ற வெறு வெளியில் நினைவற்ற ஜடம்போல - என் மனவறையின் சுவர்களில் வெறுமைகளே நிறைந்து கிடக்கின்றன உன் நினைவு சுமந்த என் இதயம் கனத்துப்போன இரும்பாக மரத்துப்போய்க்கிடக்கின்றது என் பாலைவனத்தின் வெண்மணலில் நீர் வார்க்கும் ஊற்றாக நீ வரும் நாள்பார்த்து - உன் நினைவுகள் சுமந்து - ஒற்றைக்கால் தவமியற்றும் பற்றற்ற கொக்காக உனக்காக உனக்கேயாக - இன்னும் உயிர் சுமக்கிறேன் - இந்த உணர்வற்ற உடலில்
-
- 1 reply
- 785 views
-
-
ஒரு வசந்தம் தொலைந்து விட்டது எங்கள் தேசத்தின் வாசலில் ஏற்றி வைத்த தீபம் ஒன்று ஏகாதிபத்திய நெருப்பில் எரிந்து பொய் விட்டது. எங்கள் விளை நிலத்திக்கு வித்துக்களை ஊன்றி வந்த விருட்சமொன்று சரிந்து விட்டது எங்கள் புனித மூச்சை புயல் தின்று விட்டது இருள் சூழ்ந்து கிடந்த எங்கள் எல்லைக்கு ஒளி சுமந்து வந்த உயிர் ஒன்று அணைந்து விட்டது பாசத்தோடு பேணிக்காத்த சிறகொன்று பாரத வலையில் சிக்கி முறிந்து விட்டது அந்நிய தேசமெல்லாம் எங்களது அவலங்களை சொல்லி நின்ற இதயமொன்று அவிந்து விட்டது செரு முனையில் நின்று செந்தமிழின் பண்ணிசைத்த சிட்டொன்று சிதைந்து விட்டது எங்கள் இமயம் ஒன்றை இருள் விழுங்கி விட்டது எங்கள் விழி மடல்கள் வெல்ல முடியாதோரின் வஞ்சனையால் கிழிந்து விட்டன துணிச்சலையே த…
-
- 1 reply
- 825 views
-
-
''கண்ணீரை துடைத்து விடு..'' வெள்ளைத் தேரேறி வெளியுலகு போனவனே- உன்னை கள்ளத் தேரேறி வந்து கயவன் உனை கொன்றானே... வெலிகந்தையில் வைத்துன்னை வெறியர்கள் கொன்றாரே நினைத்து பார்க்கையிலே நெஞ்சு கொதிக்குதய்யா... உன்னை இழந்தின்று தமிழினம் தவிக்குதய்யா- உந்தன் கல்லறை இன்று கண்ணீரால் நனையுதய்யா... விலை போனதொன்று வீம்புகள் செய்கையிலே தப்பிப் போய் தலைவனடி தமிழீழம் காத்தாயே... ஜநா முந்தலிலே ஜயா நீ உரைத்தாயே அண்ணன் உள்ளவரை அஞ்சாதே தமிழ் என்றாயே... ஒட்டு படையதற்க்கு ஓல வாழ்வளித்தாயே மட்டு நகர் நின்று மரண அடி கொடுத்தாயே... பல் குழல் பேச்சாலே- அவர் பரப்புரை அழித்தாயே அனுகுண்டாகி நீ அகிலத்தில் திகழ்ந்தாயே... ஈழமத…
-
- 1 reply
- 902 views
-
-
தேசிய கீதம் ஆனைவாய்க் கரும்போ? அனலிடைப்பட்ட புழுவோ? சட்டியிலிருந்து சற்றே சறுக்கி; அடுப்பினில் விழுந்த மனிதர் நாம் தாவார மில்லான், தனக்கொரு வீடில்லான், தேவாரம் மோதுதல் ஏதுக்கடி? தேசிய மேயில்லார்க்கு தேசிய கீதமொரு பொல்லாப் போடி? பொறுமையிழந்தவர் தம்மைப் போற்றி இசைப்பர் இன்னும் கோடி, இறைவனுண்டென்றால் சேருமொரு புது வாழ்வு தேடி. -அறியாதவன் http://www.valampurii.com/online/viewnews.php?ID=13381
-
- 1 reply
- 700 views
-