கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மூவேந்தர் அரியணையில் முந்து தமிழ் கலையரங்கே நாவேந்தர் மடி தவிழ்ந்த நானிலத்து திருமகளே பாவேந்தர் குலமகளே பாரதியின் பைந்தமிழே தாய் தவழ்ந்த மண்ணே என் சரித்திரத்தின் பொன்நாடே தூயதமிழ் அனங்கின் துயர்துடைக்க காவியமாய் போய்விட்ட மாவீரர் குருதிச் சுவட்டில் நாளை விடியலுக்காய் நம் இளைஞர் வேள்விக்கணைத் தொடுப்பார் இன்று ஈழத்தின் வரலாற்றில் மாதலைவன் வழியினிலே திரண்டெழுந்து ஆக்கி வைப்போம் தமிழீழமே தாய் கொதித்தாள் தமிழ் அழுதது தமிழர் நெஞ்சிலே உரம் பிறந்தது பேய் சிரித்தது பிணம் விழுந்தது பிஞ்சு நெஞ்சிலே தீ எழுந்தது வேர் அறுத்தொரு பகை முடித்திட வேள்விக்கணை தொடந்தது பலகோடித் தமிழர்கள் உயிர் வாழினும் பாராள அவர்க்கு நாடில்லையே இன் நிலை போக்க ஈழத்தில் புலியானார் நம் …
-
- 1 reply
- 479 views
-
-
கண்ணீர் யுகத்தின் தாய்! குழந்தைகள் அலைய பூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள் பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியது தாய்மாருக்காய் அழுதழுது கண்ணீர் விடும் குழந்தைகள் வாழும் யுகத்தில் கனத்தன வீடுகள் குழந்தைகளுக்காய் அழுதழுது கண்ணீர் விடும் தாய்மார்கள் வாழும் யுகத்தில் கனமடைகிறது பூமி தாய் கட்டிய சுவர்களில் கனவின் காட்சிகள் நெளிந்தன நிலம் மெழுகும் தாயின் விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள் தொலை தூரத்தில் தவித்தன அடுப்பில் பொங்கியது துயரம் இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க இலட்சம் தாய்மார் கு…
-
- 1 reply
- 619 views
-
-
முகம் தேடும் முகவரிகள். ஈழத்தின் வாசலே இந்தியத் தாய் மண்ணே! உயிரிங்கு உருகி நிற்கும் என் வணக்கம் உந்தனுக்கு! உறவுகளும் தோழருமாய் மகிழ்ந்திருந்த என் பூமி மயான பூமியான செய்தி நீ அறிந்திருப்பாய்! ஐந்தாட்டுத் திட்டம் என போட்டுவைத்த போர் நிறுத்தம் கடந்து இரண்டு நாட்கள் காற்றோடு போயாச்சு! ஐந்தாண்டும் நாம்பட்ட இன்னல் ரணம் அறியாயோ? தமிழ் உயிர்கள் மலிந்த நிலை தமிழகமே அறியாயோ? வியர்வை சிந்தி உழைத்த மண்ணில் தமிழ் இரத்தம் சிந்திக் கிடக்கிறது!. பயிர்கள் விளைந்த பூமியெங்கும் தமிழ் உயிர் விதைத்துக் கிடக்கிறது! தமிழரின் வாசல் எங்கும் "கண்ணி'வெடிக் கோலங்கள் எங்களின் வீதியெங்கும் கண்ணீரின் ஓலங்கள்! ஒரே…
-
- 1 reply
- 853 views
-
-
தேநீர் கவிதை: எவராவது வந்து... எவராவது வந்து சூட்டிவிட்டுப் போங்கள் மகுடத்தை.. என் தலை காலியாய்த்தான் இருக்கிறது வெளியேயும் உள்ளேயும். எவராவது வந்து மாலையிட்டுப் போங்கள் நாறிக்கிடக்கிறது என் புறமும் அகமும். எவராவது புகழ்ச்சிகளைப் பிசைந்துவைத்த சொற்களைப் போட்டுவிட்டுப் போங்கள் என் பிச்சைப்பாத்திரத்தில். சோறில்லை என்றாலும் பரவாயில்லை. பேரில்லாமல் எப்படித் திரிவது? எவராவது வந்து அப்பாவிகளை …
-
- 1 reply
- 852 views
-
-
ஓரு கைய்தியின் கண்ணீர்.....!! ( களுத்துறை. வெலிக்கடை .புசா..அவலம்) சுற்றி வளைத்தொரு முற்றுகையிட்டு சுற்றி பிடித்தான்... பற்றியே பிடித்து தேகம் மீதிலே பறைகள் அடித்தான்... கை களை கூட்டியே விலங்கினை மாட்டியே கட்டியே இழுத்தான்... கோர சொற்களை கத்தியே உரைத்து எட்டியே உதைத்தான்... கொட்டியே கொட்டியே என்றென கத்தியே முட்டியை உடைத்தான்.... நாளங்கள் உடைத்து குருதிகள் பாயவே குலுங்கியே சிரித்தான்.... எரிதனல் போலவே வலியினில் துடிக்கையில் ஏறியே அடித்தான்... தளும்புகள் மீதிலே பெற்ரோலை ஊத்தியே அலறவே வைத்தான்.... நினைவுகள் இழந்து நிலத்தினில் வீழ்கையிலும் நிமிர்தி…
-
- 1 reply
- 960 views
-
-
வலைப்பூவில் எழுதும் தீபிகாவின் கவிதையில் பிடித்த கவிதையொன்று. உண்மை அறியும் பொய்கள் சமாதானம் தருவிக்கப்பட்டதாய் சொல்லப்படுகிற எனது நிலத்தில் வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற விளம்பர மரங்களின் நிழலில் நாய்களுடன் சேர்ந்து வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும் படுத்துக் கிடக்கின்றன. திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு திரிகிற சனங்களின் முகங்களில் படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள் மிச்சமிருக்கும் வாழ்க்கையை எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன. சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும் மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை பார்க்கும் ஆவல் நிறைந்த அதே கண்கள் குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி கும்மாளமிட்டபடி ஊரெங்க…
-
- 1 reply
- 749 views
-
-
உனக்கு எப்பொழுதும் அடுத்தவர் துன்பத்தில் ஆனந்தம் அதுவும் தமிழர்கள் பிணங்களை எண்ணுவது பேரானந்தம் நீ செய்ய நினைத்ததை அவன் செய்தான் - ஆதலால் அவன் ரகு வம்சம் நாம் அரக்கர்கள் ஆனோம். தூது போக அனுமார்கள் தேவையில்லை இருக்கிறார்களே எம்மூர் விபீசணன் மார் அரசியல் எமக்கு தெரியாது - ஆனால் காலம் காலமாக அண்டிப் பிழைக்கிற ஆக்களை அடையாளம் காணத் தெரியும் மகா பாரதம் உனக்கு பொருந்துதோ? இல்லையோ ? எம் தர்மம் ஒரு நாள் வெல்லும்
-
- 1 reply
- 670 views
-
-
படத்தினைபெரிதாகப்பார்க்க இது புத்தர் ஞானம் பெற்ற சித்திரைநாளின் சிறப்புப்பரிசு. பாவப்பட்ட ஈழத்தமிழருக்கு பெளத்த தேசம் வழங்கிய விருது. அன்று விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன எங்கள் ஊர்களில் உயிர்கள் அணைந்தன. பாருங்கள் எல்லோரும் உற்றுப் பாருங்கள். ஈரம் நொதிக்கும் இதயங்களே! தீர்ப்பு வழங்கவரும் தேசங்களே! எங்கள் வாழ்வின் அவலத்தை வரைந்து கொள்ளுங்கள். ஏதும் அறியாமல், ஏன் சாகிறோமென்றும் தெரியாமல் குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு குடும்ப விருட்சம். பிஞ்ச அணைத்தபடி பூவும், பூவைப்பிணைத்தபடி காயும் தமிழருக்குக் காவலென்பதால் நாயும் ஏரியுண்டு போவதுதான் எமக்கெழுதிய விதியா? உலகமே! இதற்கும் உன் மெளனம் தான் பதிலா? …
-
- 1 reply
- 2.2k views
-
-
____________________ லூர்த்தம்மா! காலம் பற்றி என்ன சித்தரிப்புக்களை நான் செய்ய வேண்டியிருக்கிறது? நாறி வதைத்துக்கொண்டிருக்கும் எல்லாச் சொற்களையும் உனக்காக அசைத்து கொட்டுகிறேன். மழைக் காலத்திற்கிடையில் நமது காணியில் மேடு ஒன்றில் வீடு ஒன்றை அமைப்பதற்காகவே இரவுகளில் கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களிடம் சொன்னேன் குழந்தைகள் ஒரு பொழுதும் விரும்பி துப்பாக்கிளை தூக்கி வரவில்லை என்பதை. அபிராஜிடம் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். அபிராஜை இன்னும் நான் பார்க்கவிலை. வெயில் கொட்டிக்கிடந்த நாளில் மிகத் தெலைவுக்குச் சென்றும் அவனை பார்க்கமுடிவில்லை. யாரையும் குறைகூறக்கூடாது? எதைப் பற்றியும் விபரிக்க முடியாதிருக்கி…
-
- 1 reply
- 640 views
-
-
என்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் எனக்கு காதலர் தினம்... உன் கண்கள் காணும் காலை நேரம் எனக்கு காதலர் தினம்... உன் இதயத்திற்கள் நானிருக்கும் இனிய நிமடpமெல்லாம் எனக்கு காதலர் தினம்... உன் இடது பக்த்தில் என் இதயததையு; எனத இடது பக்கத்தில் உனது இதயத்தையும்... நாம் தாங்கும் நாளெல்லாம் எமக்கு காதலர் தினம்.. அப்பாடா ரெம்ப தேடுதல் வேட்டையில் சிக்கியது கலைஞனின் வேண்டுதலுக்காக இங்கே சுட்டு ஒட்டுகிறேன்.. சத்தியமா எனதல்ல.. சுட்டது...இங்கே http://kaathdal.tripod.com/
-
- 1 reply
- 922 views
-
-
மறப்போமா மன்னிப்போமா நாம்....? பின் வாங்கினால் இன்று போய் நாளைவா என்ற பெருமையுடைய தேசத்திடம் பின் வாங்கினோம் கலைத்து கலைத்து தொலைத்ததென்ன நியாயம்... மறப்போமா மன்னிப்போமா நாம்....? உண்ணாவிரதமிருந்தால் உயிர் போகும் என்று கருணை காட்டும் தேசம் உயிரோடு கொழுத்தி முடி என உண்ணா நோன்பு இருந்ததை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? ஒரு ஊர் திரண்டாலே ஊசலாடும் உலகத்திடம் ஊர் ஊராய் ஊர்வலம் நடாத்தி உலகையே உலுக்கியும் எம் உறவுகளை உயிரோடு கொழுத்த சம்மதித்த உலகை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? மிருகவதை என்றாலே மினக்கட்டு சபை கூட்டி தடுத்திடும் உலகிடம் சதையும் பிணமுமாய் தமிழர் என்ற மனிதர் என்று சடுதியுடன் விபரித்தும் தடுக்காத உல…
-
- 1 reply
- 742 views
-
-
நித்தம் எங்கள் முத்தம் வந்து சத்தம் போட்டு-எம்மை துயில் எழுப்பினாய், ஆதவன் மறையும் வேலை அமைதியாய்-உன் அலையோசை எழுப்பிஎம்மை தாலாட்டினாய், நாம் பிறந்து வளர்ந்தது உன் உன்மடியில், எங்களை பெற்றவள் மடியில் வாழ்ந்ததை விட-எம் பசிபோக்க உன்மடியில் தானே தாயே நாம் இருந்தோம், நீ இறவாத வரம் பெற்ற தாயம்மா, எம்மை வாழ வைத்த கடவுள் கடலே நீயம்மா. என்றும்போல் அன்றும்தானே-எம்மை அலையோசை தாலாட்டி அமைதியாய் உறங்கவிட்டாய் அன்னையாய்-எம்மை அரவணைத்து காத்தவளே, உன் அலையனுப்பி-எம் உறவளித்ததேனோ? தாயே, அன்றும் உன்னை நம்பித்தானே உன் கரைமேலே கண்மூடினோம், ஊர்புகுந்து உறவளித்தாய் உரெல்லாம் பிணம் விதைத்தாய், என் அப்பாவை க…
-
- 1 reply
- 667 views
-
-
மனமேடை ஊஞ்சலிலே நடனமிடும் இசையசுரா உனதோடு சொன்னதையே உதையாக ஏன் நினைத்தாய்? நினைவிடையே தினவெடுக்கும் நீஎந்தன் நட்பென்று எனையா நீஎண்ணிவிட்டாய் உனையிகழும் பிறப்பென்று? பணமேதும் பகைக்கவில்லை பிணமாக மணக்கவில்லை குணமாக்கும் சிறுவார்த்தை பாசாணம் ஆனதுவோ எழுத்தின் எதிர்வீச்சால் என்னெண்ணம் கன்றியதோ வழுக்கிய வார்த்தையில் அழுக்கும்வந்து அணைத்ததுவோ?! துரும்பும் தூணாகும் காற்று கனத்திடுமா புகையும் நெருப்பாகும் படத்தில் எரிந்திடுமா திசைகள் மாறிடுமா பசைகள் விலத்திடுமா விதிகள் இதுவென்றால் விலத்தல் எவ்வாறு?!
-
- 1 reply
- 834 views
-
-
ஏன்டா என்னை கொண்டீங்க....??????? பத்தவைச்சா பத்தவைச்சா என்னை ஏண்டா பத்த வைச்சா...??? பாவி புள்ள என்னில் ஏண்டா தீயை வந்து பத்த வைச்சா...??? மூணு புள்ள பெத்த என்னை முளுசாய் ஏண்டா எரிச்சுப் புட்டா...??? உயிர் வதங்கி உடல் கருகி இறக்கும் படி ஏண்டா வைச்சா...?? என்ன பாவம் செய்தேன் என்று என்னை வந்து கொளுத்தி புட்ட....?? கூட்டத்தோடு கூட்டமாக கூடியங்கு நானும் வந்தேன்.... ஜயோ பாவி ஏனோ வந்து என்னை அங்கு கொளுத்தி புட்ட....??? தீக்குளித்து மடிந்தான் என்று ஏண்டா வந்து அறிக்கை விட்ட....??? ஓலம் இட்டு கத்தையிலே ஓடி வந்து அணைக்க வில்லை... கூட எண்ணை ஊற்றி நீயும் ஏண்ட…
-
- 1 reply
- 986 views
-
-
தன்மானத் தந்தையே! திருநிறை பழநெடு மாறன் ஐயா! தன்மானத் தமிழனாய்த் தகைசார் அறிஞனாய்த் தரணியில் இலங்கிடும் தமிழகத் தந்தையே! இன்னலில் ஆழ்ந்த ஈழத்தவன் பசிதனை இல்லா தொழிக்க எண்ணம் கொண்டுநீர் உன்னதப் பணிபுரிந்தீர் உலகமே வியந்திட உறுதியாய் நின்றங்கு உயிர்தனை வருத்தும் மன்னும் உண்ணா நோன்புதனில் இறங்கி மனிதம் நின்னிடத்தே என்பதை எண்பித்தீர்! தங்கத் தம்பியாம் திலீபனின் நாளில் தந்தையே நீவீரும் திருவுளம் கொண்டு அங்கம் நொந்து அறிவினா லுயர்ந்து ஆரும் புரிந்திடா அறப்போராட் டம்தனில் இங்கிதமாய் இசைந்தீர் ஏற்றமிகு தந்தையே! என்னகைம் மாறுநாம் இதற்காய்ச் செய்வோம்? இங்கிருந்து நெஞ்சத்தால் இனியவுயிர் நிலைத்திட எஞ்ஞான்றும் இறைவனை வணங்கி நின்றிடுவோ…
-
- 1 reply
- 912 views
-
-
கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளைக் கனவுகள்.. ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் கண்ணீர் தொய்ந்த வாசமாகவும் எம் கனவுகள் இத் துரோக மண்ணில் காய்ந்துப் போவதின்னும் எவ்வுயிர் பிரிந்து மிஞ்சும் கடைசி பொழுது வரைக்குமோ.. அறியோம்; அறியோம்; இறக்கை முறித்து - உயிர் உதிர்த்து - உடல் முடைந…
-
- 1 reply
- 712 views
-
-
உடல் ஒடிந்து போகையிலும் உள்ளமது உடையலயே எங்கள் தமிழ் நீதிக்கு ஏன் குரல் கொடுக்கலயோ...?? செவிகள் உண்டு உந்தனுக்கு செவிடாக நீயெதற்கு....?? கலைஞர் என்ற மாமனிதா கருணையது காட்டிவிடு... உந்தன் தமிழ் நாட்டினிலே போட்ட தடை எடுத்துவிடு எங்கள் தமிழ் நீயென்றால் இன்றுயதை செய்து விடு... வேங்கைகள் உந்தனுக்கு வேடுவர் இல்லையின்று அச்சமில்லை உந்தனுக்கு அவையினிலே செப்பிவிடு... தொப்பிள் கொடி உறவு நாங்கள் தொல்லையிலே வாழயிலே பந்தியிலே உந்தனுக்கு பாயசம் இன்றெதுக்கு...??? நல்ல மனம் உந்தனக்கு இல்லையென்று சொல்லவில்லை ஆயினும் நெஞ்சத்திலே வடுக்கள் இன்னும் ஆறலயே... உன்னை நம்பி எம்தமிழர் உன்னணியில் நிற்கையிலே எங்கள் ஈழ தேசத்திற்கு …
-
- 1 reply
- 812 views
-
-
நேர்காணல் – த.அகிலன் (ஞாயிறு தினக்குரல்) ஈழத்தின் அகோரமான போர்ச்சூழலில் உங்களின் வாழ்வின் ஆரம்பம் கழிந்திருக்கின்றது, அந்த வகையில் உங்களின் வாழ்வியலின் அந்த ஆரம்ப நாட்கள் குறித்து? நான் கிளிநொச்சியில் தான் பிறந்தேன், கிளிநொச்சியிலேயே வளர்ந்து அனேகமாக வன்னி மண்ணின் மகன் என்று கூடச் சொல்லலாம். கிளிநொச்சி மத்திய கல்லூரியிலே தான் என்னுடைய முதலாம் ஆண்டியிலிருந்து க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றேன். அனேகமாக நான் ஈழத்தை விட்டு இந்தியாவுக்குப் புலம் பெயரும் வரை வன்னியிலே தான் வாழ்ந்திருக்கின்றேன். வன்னியின் அவலங்களோடு, வன்னியின் துயரங்களோடு வன்னியின் சகல விஷயங்களோடும் நான் வாழ்ந்திருக்கின்றேன். வன்னியில் இன்றைக்கிருக்கிருக்கின்ற எல்லோருக்கும் இருக்கின்ற துயரங்களோடு தான் எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
என் குருவே உந்தனுக்கு ஒரு கோடி நமஸ்காரம் .... உன்கவியால் மனம் நெகிழ்ந்து கவி படிக்க பயின்றவர்களில் நானும்ஒருவன்தான் , அது நிற்க.... இடி இடிக்கும் உன் குரலில் முல்லைத்தீவு பற்றி ஒரு முத்தான கவி சொல்ல பித்தாகி போனேன் நான் சகயமாய் நீ செய்யும் வார்த்தை ஜாலமெனெ புரியாமல் போவேனோ ....... கதறி அழைத்தோம் வரவில்லை - கரம் கூப்பித் தொழுதோம் வரவில்லை கூக்குரல் கேட்டதுவே.-.உரைத்தாயோ எம் குரலை உன் தலைவன் காதினிலே... எது செய்தாய் எமக்காக ..... ஆனந்தமாய் இருந்துவிட்டு - பின்னர் ஆனந்த புரத்தில் ஆவிதுடித்ததாம் நீலிக் கண்ணீர் நீ விட்டழ - நாமென்ன மூடரோ, நாடகத்தை நம்பி நிற்க கையிருந்த போது கரம் நீட்டி அழ…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஊனுடலை விட்டு உயிர் பிரிந்தாலும், - தமிழர் உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!! பேரினவாதம் எனும் கொடிய மிருகம் ஒன்று கர்ச்சிக்கும் பலமாக தமிழர் உரிமைகளைக் கொன்று. தமிழர் தம் துயரத்தை துடைத்திட வேண்டும் என்று, கிளம்பிய வீரர்கள் நீங்கள் தியாக தீபங்கள் அன்றோ! அன்னையின் அரவணைப்பு, தந்தையரின் ஆதரவு, உடன் பிறந்து உறவாடிய சகோதரரின் பாசம், வாழ்வில் உயர்ச்சிகாண நீர் தொடர்ந்த கல்வி, இத்தனையும் துறந்திட்டீர்; வீரவேங்கைகளாய் புறப்படீர். தாய்மண்ணின் மீட்பிற்காய் உம் உயிரையும் ஈந்துவிட்டீர். மாவீரரே..! ஈழத்தமிழர் வீரத்தின் சின்னங்களே...! நிகரற்ற தியாகிகளே...! உமை என்றும் நினைவு கூர்வோம். ஈழத்தமிழர் விடுதலைக்காய் நீர் வீறுடன் செய்த பயணம், உம் வழிவந்…
-
- 1 reply
- 715 views
-
-
TRIBUTE TO BALAMURALI KRISHNA என் மனம் கவர்ந்த மா பாணன் பால முரளி கிருஸ்ணாவுக்கு கவிதாஞ்சலி **************************************** தங்கரதம் சென்றது விதியினிலே ஒரு தளிர் மேனி வெந்தது தீயினிலே மரகத வீணைகள் துயர் பாட மானிக்க மாலைகள் உனை மூட * செவ்விள நீராய் கண் திறந்து செம்மாதுளையின் மணி நீர் உகுத்து ஆற்றொணத் துயரினில் ஓலமிட்டு ஆபோகி கைவளையல் உடைந்தது போல் * துயர் மிகும் வேழைகள் தேனாக இனி தென்றலின் வண்ணத்தில் நீபாட மின் புடப் பேழையுள் தீயாகி தேவனின் பொன்மேனி நீறாகி
-
- 1 reply
- 679 views
-
-
அம்மாவின் கனவு தம்பிகளின் தங்கையின் நம்பிக்கை சுதர்சனா ! நீயெப்படி ? நெருப்பில் எரிந்து கரித்துண்டமானாய்….? எப்போதோ செய்தியாய் சந்தேகமாய் கேள்விப்பட்டது…. அது மறந்து போன ஒருநாளில் தோழனொருவன் ஊடாய் தொடர்பில் வந்த உன் அம்மாவின் கண்ணீர் இன்னும் நனைத்தபடியிருக்கிறது நினைவுகளை…. அம்மாக்களுக்கு நிரந்தர துயராய் பிள்ளைகளின் இழப்புகள் எங்களுக்கென்ன எழுதப்படாத விதியா சுதர்சனா…? உன் நினைவாய் நீ போன இடம் வரப்போவதாய் புலம்புகிற அம்மாவின் கனவுகளில் ஏன் தீமூட்டினாய்…..? அக்காவின் ஞாபகங்களில் தொலை தூரங்கள் வரையாகத் தங்கள் கனவுகளை எறிகிற உன் உடன்பிறந்தோரின் உள்ளெரியும் தீயில் அவர்கள் உயிர்வாழ்வையே வெறுப்பதை….! எந்த வா…
-
- 1 reply
- 866 views
-
-
கொடுமை கொடுமை .... காட்டுமிறான்டிகளின் உச்ச கட்ட கொடுமை .... ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ... கொடூரமாய் கொல்லப்படும்... கொடூர கொடுமை ......!!! அந்நிய படையின் ஆதிக்கத்தில் ... கற்பிழந்த ஈழச்சிகள் .....! ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ... செம்மணி வெளியில் .... வேம்படி மாணவி ....!!! வெறி நாய்களிடம் அகப்பட்ட ... வெள்ளை முயல்போல் .... புங்குடுதீவில் வித்தியாவின் .... கொடூர கொலை ...!!! நான் சொல்லும் தீர்ப்பு ....!!! வெறிகொண்ட .... காட்டுமிறாண்டிகளை.... உடன் கொல்ல கூடாது .... அணுவணுவாய் அனுபவித்து .... சாகவேண்டும் .....!!! இவர்கள் பெற்றெடுத்த பெண் .... குழந்தைகளை இவர்களிடம் இருந்து ..... பாதுகாக்க வேண்டும் ....!!! இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே .... இவர்களிடமிருந்து பாத…
-
- 1 reply
- 760 views
-
-
இன்னொருமுறை உனக்கு பிறப்பு வாய்த்தால்....... எங்கள் இனத்தில்.. பிறக்காதே! எனக்கு அப்பா.. நீ தானென்று...... சத்தமிட்டு சொல்வேன்.... அதில் எந்த களங்கமும் என் ... அம்மாவுக்கும் வராது...! ஏன் என்றால்... என் அம்மாவின்.. தாத்தாவுக்கும்.. நீர்தானே அப்பா! உயிரின் தொடக்கம் என்பது... வெறும் பிறப்பு ... உறுப்புக்கள் காறி... துப்பும் சங்கமம் இல்லை..! மானம்....! பிறந்து ..தின்று.. உண்டு ..ஒய்யாரமா.. கதை-பேசி.. சத்தமெழுப்பி... நாளையபொழுதில் .. செத்துப்போனால்... காக்கை கூட... தன் இனத்துக்காய்..... அழும்! ஊருக்காவே...வாழ்ந்து.. போனியே உனக்கு ஏதாச்சும் தந்ததா.. இந்த சனம்? நம்பினவன.. சந்ததியை... …
-
- 1 reply
- 692 views
-
-
Leave me alone. என்னை தனியாக இருக்கவிடு. கட்டிக்கட்டியாய் இரத்தம் சுரந்து சட்டை எல்லாம் நனையும். மாமிசம் கழுவிய நீர் போல் உதிரப்போக்கு அதிரப்போகும். வலிக்கும் தாங்கிக்கொள்வேன். சங்கடமாகும் சமாளித்துக்கொள்வேன். சஞ்சலமாகும் நெஞ்சுறுதிகொள்வேன். வயிற்றுக்கு கீழ் தசை பிடிக்கும் மசையமாட்டேன். மார்பு வீங்கி தலைவலிக்கும் சோர்வு கொள்ளமாட்டேன். உணர்ச்சியுண்டாகும் உணர்ந்து நடந்துகொள்வேன். தோள்மூட்டு வலிக்கும் தோற்றுவிடமாட்டேன். வெறுப்பேறும் பொறுத்துக்கொள்வேன். அருவருப்பாகும் அலட்சியப்படமாட்டேன். சோ…
-
- 1 reply
- 917 views
-