Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nochchi,

    பூக்கள்...! ------------- பூக்கள் மலர்கிறது கார்த்திகைப் பூக்கள் மலர்கிறது! காவிய நாயரைப் போற்றிட மலர்கிறது மானிட மனங்கள் மலர்ந்திடுமா தமிழ் மானிட மனங்கள் மலர்ந்திடுமா மறவரைத் தொழிதிடவே வல்லமை சூழுமன்றோ வானில் உயர்ந்திடுமே எம் தேசியக்கொடியது வானில் உயர்ந்திடுமே!

  2. Started by சந்தியா,

    பூங்கா மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம் பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம் சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம் காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம் இவை மட்டுமா? மரம், செடி, கொடிகள் அசையும் இனிய கீதங்கள் அத்துடன் கூடியே அழகிய பூக்களின் நறுமணங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர் அழகிய இடம் பூங்கா!

  3. _______________________________________ தூக்கம் கண்களை நிறைத்த பொழுது குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும் பூங்காவுக்கு வருகின்றனர். கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய் மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான். கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான். சிதைக்கப்பட்ட முகத்தையும் பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும் புகைப்படங்களாக்கி உதவி கோரிக்கொண்டிருக்கிறான். எல்லாமே எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தச் சிறுவன் கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான். பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி மிருகங்களாகிய படைகளால் வன்புணரப்படுகையில் இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில் உறங…

    • 3 replies
    • 1.1k views
  4. கூடினார்கள் எரித்தார்கள் கலைந்தார்கள் சனீஸ்வரர்களுக்கு எள்ளெண்ணெய் வைத்ததில் பூசகர் இல்லம் புனருத்தாரணம் பெற்றது. ------------------------------------- கறிவேப்பிலை, பன்னக்குழை தேங்காய்ப் பொச்சு இவைகடந்து தீச்சட்டி, தீவட்டி, வேப்பிலை, சாணகம் வளர்தொழிலாய் தமிழர்களின் ஏற்றுமதி வியாபாரம். - தயா ஜிப்ரான் -

  5. இதயத்தில் , உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! முகம் இழந்தது அகம் சிவந்து நடக்கின்றேன் வரைந்துவிடு பெண்னே எனக்கு ஒரு கவிதயை கல்லுக்குள் காதலை தேடினேன்-என் நெஞ்சுக்குள் உன்னைத் தூவினேன் எத்தனை இரவுகள் கடந்து சென்றுருக்கின்றேன் எத்தனை நினைவுகளை மறந்து சென்று இருக்கின்றேன்- பெண்னே உன்னை மட்டும் மறந்து செல்ல முடியவில்லை பூட்டிய உன் இதயத்தால் ஈட்டியாய் தைக்கும் என் உயிரை மீட்டிய பல்லவி கொண்டு தீட்டியே விடடி எனைக்கவியாய் -இனியவள் பூட்டிய இதயம் ஓலிவடிவில்.....

  6. என் கனவில் வந்த பூதம் ஒன்று விடிந்த பின் நான் பேருந்துக்காக காத்திருக்கையில் அருகில் வந்து bus stand இல் நின்றது நானும் பூதமும் பேசிக்கொள்ளவில்லை பூதம் தன்னைக் கண்டவுடன் நான் அதிர்வேன் என்று நினைத்து ஏமாந்து கொண்டது என்னை நேரில் கண்டவுடன் பூதம் தலை தெறிக்க ஓடும் என்று நானும் ஏமாந்து கொண்டேன் பேருந்தில் பக்கத்தில் அமர்ந்து கொண்டாலும் தன் கண்களை மூடியே பயணித்தது அது அலுவலகத்திலும் என் பக்கமே நின்று கொண்டிருந்தாலும் ஒன்றும் பேசவில்லை அது நானும் ஒன்றும் கேட்கவில்லை இடையிடையே நக்கல் சிரிப்பும் நளினமும் செய்து கொண்டுதான் இருந்தது பூதம் அதன் குளப்படி பழக்கங்களை மாற்ற முடியுமா என்னால்? **…

  7. தீண்டிடும் வேளையில் தேகம்..பூத்திடும் வியர்வையில் தாகம் தீர்ந்திட நாளங்கள் எரியும் மோகத்தில் மூழ்கிய இதழும் துடித்திடும் கணத்தினில் தேனை வடித்திடக் கடித்திட வண்டும் பறந்திட மறுத்திட மலரும் புயல் மகரந்த துகள்களைக் களையும் காற்று தீண்டிடும் வேளையில் தேகம்..பூத்திடும் வியர்வையில் தாகம் தீர்ந்திட நாளங்கள் எரியும் மோகத்தில் மூழ்கிய இதழும் துடித்திடும் கணத்தினில் தேனை வடித்திடக் கடித்திட வண்டும் பறந்திட மறுத்திட மலரும் புயல் மகரந்த துகள்களைக் களையும் காற்று

  8. பூநகரியில் புலிதேடும் படலம்..... ஆமிக்காரனும் சட்டம்பியாரும் கேள்வியாயும் பதிலாயும் ஒரு கவிதை ஜயா....ஜயா ... நில்லு..நில்லு.! சந்தியிலே புலி நிக்கா சொல்லு.. சொல்லு ! அந்த வழில புலி கண்டிய... ...? ஒமோம்.. தம்பி... ஒமோம். அந்த வழியிலே புளி நிக்கு கனக்க கனக்க காச்சு கிடக்கு..! இல்ல இல்ல மாத்தய ..! கொட்டியா... கொட்டியா கண்டியா..! ஒமோம்..ஒமோம் கொட்டயோட தான் நான் கண்டேன் இனி கோதுடச்சு ... கொட்டயெடுத்து... கொழும்புக்கு அனுப்பலாம் நீங்கள்... டேய்..ஜயா.. உனக்கு காது கேட்காத..? மாத்தய..நீ போடா போட..! நான் அந்த ஜயாட்ட கேக்கிறன்... தம்பிகளா.. நான் மனதுக்குள்ள சொல்லுறன் புலி தேடவந்த பொன்சேகவின் தம்பிகளே …

  9. சொந்த மக்களுக்காய் அசோகச்சக்கரத்தின் அடியில் பசி கிடந்த தாயே.. தமிழன் உணர்வதை கோரிக்கையாய் நிமிர்த்தி மட்டு மாமாங்கத் திடலில் உண்ணா நோன்பிருந்தாய் அம்மா..! அன்று காட்சியில் இருந்தோரும் முதலை அமைச்சராய் அமர்ந்தோரும் இன்றும் கைலாகுகள் தருகின்றார் தமிழர் பிணக்குவியல் மேல் அரசியல் வியாபாரம் செய்கின்றார் தாயே.. அவர்களிடம் மாறாமை ஒன்றே மாறாததாய் உள்ளதம்மா..! ராஜீவின் படைகளிடம் நீ மண்டியிட மறுத்தாய்.. விடுதலை கேட்டு நின்ற சொந்த இனத்தை ஹிந்தியா முன் மண்டியிட சொன்ன கூட்டம் இன்று தமிழர் தம் அரசியல் வாரிசுகளாம் விலாசம் காட்ட களமிறங்குகின்றன தாயே...! விண்ணிருந்து நீயும் காண்பாய் அந்தக் கொடுமைகள் இங்கு அம்மா..! ஹிந்திய அதிகாரம் உன்னைக் கொன்றிருக்கலாம்…

  10. Started by கறுப்பி,

    பூப் பூவாய் பூப்பூவாய் பூத்துவிட்ட ஆசைகள் பூப்பூவாய் என் மனதிலும் பூத்தது வெள்ளையாய் சிரிக்கின்றதே மனது பூத்த பூவுக்குள் புகுந்ததோ நிறம் என்ற கருமைத்துளிகள் பூபடைத்தான் பூவைக்குள் பெண் பூவாய் பெண்ணை படைத்தான் பூவுக்குள்ளும் பனித்துளிகள் நித்தம் விழியினை மறைக்கும் உப்புநீராய் இதயத்துக்குள்ளும் சிந்துவதோ ரத்தத்துளிகள்

  11. "இசை" என்ற தமிழ் சொல் அற்புதமானது. இசயின் பொருள், இலக்கணம், நோக்கம், பயன் எல்லாமே அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இசைக்கு அடிப்படையான ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. அவற்றின் ஒத்திசைவில் இசை பிறக்கிறது. இசைக்கு வேறுபட்டவை தேவை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் இசைவும் இல்லை. அதனால் பிறக்கும் இன்பமும் இல்லை. அதனால் தான் மனிதன் முதற்கொண்டு எல்லா படைப்புக்களும் வேறுபாடுகளோடு, விதம் விதமாக, வகை வகையாக படைக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் தான் சக படைப்புகளோடு ஒத்திசைகிற போது வாழ்க்கை இசையாகிவிடுகிறது. துன்பம் என்பது ஆபசுரம். ஒத்திசைவில் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று பொருள். இசை ஸ்வரங்களுக்கு இடையே மட்டுமல்ல, முரண்பட்ட அனைத்துக்கும் இடைய…

    • 0 replies
    • 1.1k views
  12. உன் கூந்தலுக்கு அழகு என வாங்கினேன் மல்லிகைப்பூ, தென்றலே நீ கொடுத்தாய் ஒரு மாபெரும் வெறுப்பு நீ நடந்தாய் அழகாக நான் சொன்னேன் என் விருப்பு, நடந்த உன் பாதம்தனில் நீ எடுத்தாய் செருப்பு உன் முத்துப் பல் தெத்துப் பல் அழகினை காட்டியதுன் சிரிப்பு, எடுத்துச் சொன்னேன், உன் அப்பன் கொண்டுவந்தான் பிரம்பு. நீ பிறந்த அந்நாளில் யாவருக்கும் நீ கொடுத்தாய் இனிப்பு, எனக்கு மட்டும் நீ கொடுத்தாய் நா தாங்கா ஒரு உறைப்பு. என் காதல் நீ அறிய நான் மிதித்தேன் நெருப்பு, நீ சொன்னாய் உன்னிடம் இதுவெல்லாம் வேகாத பருப்பு. உன் மீது நான் கொண்ட காதலால் அடைந்தேன் வெறுப்பு நீ உணர்ந்தாய் காதலையே நான் அடைந்தேன் மலைப்பு. எம் காதல் கதை…

  13. சிங்களர் அறியாப் பூ சகிப்பு சோனியா பறித்த பூ வெறுப்பு மகிந்த கொண்ட பூ கொழுப்பு பொன்சேகா வளர்த்த பூ கடுப்பு இராணுவம் செய்த பூ இனஅழிப்பு அரசாங்கம் காத்த பூ மூடிமறைப்பு ஈழத்தில் மலர்ந்த பூ தவிப்பு வீணாய் போன பூ எம் உழைப்பு மருத்துவர் பெற்ற பூ தடுப்பு பத்திரிகை கண்ட பூ மறுப்பு ஐநா மறந்த பூ பொறுப்பு அமெரிக்கா வாங்கிய பூ செருப்பு வெளிநாடு பார்த்த பூ விடுப்பு கலைஞர் தந்த பூ சலிப்பு எம்வாழ்வில் பூத்த பூ கசப்பு எம்வயிற்றில் எரியும் பூ நெருப்பு http://gkanthan.wordpress.com/index/pookkal/

  14. Started by nunavilan,

    பூமி கேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல பேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி உதுமானியப் பேரரசின் சிறைகளுக்குள் சிந்தப்பட்ட ஆர்மீனியரின் குருதி வற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல் புழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம் பாலைவனங்களில் கருகிய தார்பூரரின் தாகம் தணல் மூண்ட பெருங்காடுபோல் தீயாய் நாம்மை துவட்டிய பசி பட்டினியோடு மூச்சடங்கிய கம்போடிய வியட்நாயிமரின் பசி தலை அறுக்கப்பட்ட பறவைபோல் அனல் படரத் துடித்த நம் வயிறு பசியால் மடிந்த உக்கிரேனியரின் ஒட்டிச்சுருங்கிய வயிறு விசமேற்றி இறந்த மீன்களின் மூடா விழிகள்போல் நஞ்சுறைந்து வாட…

    • 1 reply
    • 1.1k views
  15. வானுயரப் போக வாய் பிளந்து குதிக்க... வெடிக்கும் அந்தக் கந்தகத் துகள்கள் காற்றில் கலக்க.. மாசும் அங்கு தொன் கணக்கில் ஏற.. சுவாசக் காற்றும் உள்ளிளுக்கும் நச்சுப் புகையை.. மகிழ்வுற வாங்கி.. நாங்களோ.. பட்டாசு வெடித்து பண்டிகை செய்வோம். சொந்த இனத்தவன் சாவில் மாற்றான் காட்டிய வேதக் கணக்கில் சுய புத்தியற்று குதூகலித்தபடியே..! இந்த இடைவெளியில் பொருளீட்டும் முதலைகள் வாயில்.. "வண்டி" வலிக்க உண்டிக்கு ஏங்கி இருக்கும் மழலைகள் கூட மனித இரைகளாக..! வெடிக்கும் அந்தப் பட்டாசு ஓசைக்குள்.. விடுதலைக்காய் வாழ்வுக்காய் கதறும் இந்த குரல்கள் கேட்காது.. நாளை நமக்கும் இதுபோல் ஓர் நிலை வந்தால்.. நாலு பேரில் ஒருவராய் ந…

  16. Started by yaal_ahaththiyan,

    உனக்கு சந்தேகம் அதிகம்தான் இல்லையென்றால் எதற்காக உன்னோடு நட்சத்திரங்களையும் கூட்டிப் போகிறாய் * என் இதயக் கரும்பலகையில் உன் பெயரே நிலவு * உன் இதழைத் தொட்டுக் கொடுப்பதால்தான் கேட்டு வாங்குகிறாய் என் முத்தங்களை * முத்தக் கவிதைக்காய் என் காது மடலையும் விட்டு வைக்கவில்லை உன் இதழ்கள் * அம்மா எவ்வளவுதான் சுற்றிப் போட்டாலும் உன் கண்படும் இடத்தில் எப்போதும் நான் -யாழ்_அகத்தியன்

    • 3 replies
    • 1.2k views
  17. பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும். ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான். இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும் …

    • 18 replies
    • 2.9k views
  18. 1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது பெண்போராளிகளதும் சமூக ஆர்வலர்களதும் பாரட்டைப் பெற்ற இக் கவிதை மறு வாசிப்புக்காக பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒர…

  19. [url=http://g.imageshack.us/g.php?h=177&i=flower1yp8.jpg] பூவே உன் வயது என்ன....? சற்று முன் பிறந்த குழந்தை போல் அழகாக சிரிக்கிறாய் ஆனால் நான் சொல்கிறேன் உன் வயதோ பதினைந்து எப்படி என்று கேட்டால் காரணமும் நான் சொல்கிறேன் என் ஒளிப்பெட்டியில் பதினைந்து வருடங்கள் முன் உன்னை குழந்தையாய் பெற்றெடுத்தேன் - ஆனால் இன்றோ குமரியாய் மாறிவிட்டாய் உன் குழந்தை சிரிப்பு இன்னமும் மாறவில்லை. இளங்கவி

  20. வான் மழை கழுவி வந்த வானவில்லின் வர்ணம் கொண்ட மலரே..... தென்றலிடம் கடன் வாங்கிய விசிறி கொண்டு திரவியமாய் பரப்பும் நறுமணம் கொண்டவளே.. மெல்லிதழ் தான் அசைத்து என்னை மெல்ல அழைத்திட்டாய் செவ்விதழ் விரித்து உன் தேனமுதம் பருகவிட்டாய்... எள்ளளவும் மனப் பயமின்றி நான் உன்னை தழுவி இன்புற்றேன் உன் பட்டுடல் பட்டு பக்குவமானேன்..! நான் மட்டும் உன் அன்புக்குக் காதலனாக மாலைக்குள் நீ வாடினாலும் உன் ஆயுள் முடிந்தாலும்... உன் சந்ததி பெருக்கும் மகரந்தம் தாங்கியவனாய்..! தியாகத்தின் செம்மல் நீ... உன்னை நாளும் ஆணை ஆடையாய் மாற்றிடும் மனிதப் பெண்ணுக்கு உவமை சொல்பவன் ஓர் மடையன்..! [size=2]Photo taken …

  21. பூவே........... பூச் சூட வா ... மலர்களிலே பல நிறம் கண்டேன் மாலையாகும் திறன் கண்டேன் பூஜைக்கு போகும் சில ,கண்டேன் மலர் வளையமாகும் சில கண்டேன் கண்ணீரில் மிதக்கும் சில கண்டேன் மாடியில் வாடும் சில கண்டேன் மாலையில் மலரும் சில கண்டேன் காலையில் மலரும் பல கண்டேன் நிறம் உள்ளவை பல கண்டேன் , முட்களின் நடுவே சில கண்டேன் நறு மணம் உள்ளவை பல கண்டேன் பால்போன்ற வெண்மையும் கண்டேன் வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை . மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும் மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும். மலர்களிலே இத்தனை வகை என்றால் மனிதமலர் கள் எத்தனை வகை ?...........

  22. கண்டதும் காதல் கொண்டு கொண்டது கோலம் என்று கோதையர் மேல் காதல் கொண்டால் காயும் நிலைதான் காளையர்க்கு கொடியிடை வேண்டுமென்றும் கொள்ளை அழகு வேண்டுமென்றும் குருடராகிக் குனிந்து நின்றால் கோட்டான் கூட உமைக் குதறிடும் நல்லதும் கெட்டதும் நாலுவிதம் நம்மெதிரே உள்ளவைதான் நகல் நிகர்த்து நல்லது காண் நன்மை நீயும் பெற்றிடுவாய் கண் காணும் கவர்வின்றி உண்மைக் காதல் தான் வேண்டுமென்றால் கால்களில் வீழாது காதல் செய்வீர் கம்பீரமாய் நின்று காதல் செய்வீர் உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர் உத்தமி ஒருத்தி வந்திடுவாள் உண்மைக் காதல் தந்திடுவாள் உம்மை உய்யவும் வைத்திடுவாள் உணர்ந்து காதல் செய்திடுவீர் உண்மை அன்பைப் பெற்றிடுவீர் உன்மத்தராய் ஆகாமல் உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்

  23. Started by கஜந்தி,

    காவியக்காதல் முதல் கலியுக காதல்வரை இதிகாசம் முதல் இலக்கியம் வரை கனவுமுதல் கற்பனைவரை அப்பப்பா பெண்கள்பாடே பெரும் பாடு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள் ஆதிமுதல் அந்தம்வரை அத்தனையும் உங்கள் கற்பனைக்குள் ஆனால் இவர்கள் கோலங்கள் தான் இங்கே அழங்கோலமானது எதற்காய் இத்தனை பரிகாசம் யார் இவர்கள் பொம்மைகளா? மாற்றங்களே இல்லாது வாழ்வதற்கு இல்லை அதிசய பிறவிகளா? இல்லை உணர்ச்சியற்ற ஜடங்களா? எதற்காக இவர்கள் மீது இத்த வெறுப்பு இதை புரியாது தவிக்கின்றது இந்த வெள்ளை ரோஜா

  24. பெண் என்னும் பூகம்பம் துணிவிருந்தால் துயர் அகலும். எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும். ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால் சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை. போராளியான பெண் ஆணுக்கு நிகராக அனைத்திலும் மிளிர்கிறாள்;. அல்லாதவள்... அன்றாட அல்லல் மீள அல்லும்,பகலும் அவதியுறுகிறாள். புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள் பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம் சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும் புதையுண்டு கிடக்கிறோமே..... வேண்டாமென்று சொல்லவில்லை வீறு கொண்டெழுந்து..... வேகும் விதியோடு வாழ்விற்கேங்கும் எங்கள் சோதரிகள் கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே. அன்னையமும் அதை மே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.