Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எழுந்து வாருங்கள் இனியும் ஒதுங்கி நிற்கும் சாபம் வேண்டாம் எழுந்து வாருங்கள்! சந்து, பொந்து எங்கிருந்தாலும் வாண்டு, பெண்டு அனைவரும் சேர்ந்து முந்தி வாருங்கள் முழு மனசாய் வாருங்கள்! அந்திவானச் சிவப்பை அள்ளி விழிகளில் பூசுங்கள்... ஆதவன் வெப்பம் அள்ளி நாக்கினில் தடவுங்கள்... அடி மேல் அடி அடித்தால் அம்மி நகருமெனில் மனசும் மாறும் எனும் மந்திரம் பழகுங்கள்! தலை ஆறு போல் நீவீர் திரண்டு வந்தால் வரலாறு இதனைப் பதிவு செய்யும் வற்றாத வெள்ளம் போல் எங்கு போய் உற்றாலும் வற்றாத ஈழ வேட்கை கண்டு உலகோரும் புரிந்து கொள்வர் உதவிட முன்வருவர்! முற்றாக எம்மினத்தை அழிக்கின்ற முட்டாள்கள் நட்டாற்றில் நிற்கவேணும் நமக்கொரு நீத…

  2. மேலை நாடெங்கும் ஈழத்தின் ஏழைப் புத்திரர்கள் உழைத்துழைத்து வரி கட்டி வளம் பெருக்கி; வாழ எண்ணி திசை நகர்ந்து சமுத்திரத்து மீன்களாக சகதியிலே மாட்டி மாட்டி யாசித்துக் கிடக்கின்றார். *** *** *** தன் தேசம் அங்கே தீப்பற்றி எரிகையிலே மக்களங்கே தெருத் தெருவாய் அலைகையிலே வாயில் நுழைய மறுக்கும் ஓர் மேலை நாட்டில் ஓர் வீட்டில், இன்றைய துயர்ச் செய்தியை தொலைக்காடசி பார்த்தோ அன்றி; யாதொன்றில் கேட்டோ மனம் சோர்ந்து தூங்கிப் பின் கண் விழிப்பான். *** *** *** காலத்தின் சதியினாலே அவனுமோர் அகதிதான். நகர் நகராய் நாடு நாடாய் விட்டலையும் ஈழத்து அகதியவன். இணைபிரிந்த தனியாடு. *** *** *** …

    • 11 replies
    • 1.3k views
  3. Started by vaithegi,

    கெட்ட கனவு. ஆழ் மனத்தின் வடு.... ஆமி சுற்றி வளைத்தான் ஆட்காட்டியும் கூட நின்றான் அடையாள அட்டையைக் காணவில்லை திடுக்கிட்டு எழுந்தேன் சிறிது நேரத்தின் பின் புரிந்தது அது கெட்ட கனவு என்று. சுடுகாட்டின் மத்தியில் படுத்திருந்தபடி கண்விழித்தேன் சுற்றும் முற்றும் பார்த்தேன், என் சுற்றம் எல்லாம் பிணக்குவியலாக.. அலறியடித்து எழுந்த்தேன் அப்புறம் தான் புரிந்தது அது கெட்ட கனவு என்று.

  4. Started by Tamilinpan,

    தமிழனே வாழ்கையின் விழ்ச்சி நாம் தோற்றிட அல்ல பகைவரின் வெற்றி நாம் பயந்திட அல்ல சொத்தின் இழப்பு நாம் செத்திட அல்ல சொந்ததின் இழப்பு சோகமாய் நாம் வாடிட அல்ல ஊரவர் வெறுப்பு நாம் ஒழிந்திட அல்ல உரிமையின் மறுப்பு நாம் உறங்கிட அல்ல தமிழனே எழுந்திரு வீரமாய் கடலிலும் வேகமாய் இழந்தது உனை சேரும் பிரிந்தது இன்று உனை நாடும் மறந்தவர் கை கோர்ப்பார் தொடர்ந்திடும் உலகம் என்றும் உன் நிழலை அருவி கவித்தொகுப்பு தமிழருவி வானொலியின் நேரடி

    • 0 replies
    • 637 views
  5. 1970ல் எழுதிய என்னுடைய இரண்டாவது மூன்றாவது கவிதைகள் இவை . இரானுவ புவியில் ஆர்வத்தில் ஈழத்து காடுகளைத் தேடி அலைந்தபோது எழுதியவை. அது வன்னி நமது விடுதலை வரலாற்றின் மையமாகாத காலமாகும். விரக்தி கனலும் கடும் கோடையில் மாரிதனைப்பாடும் வன்னிச் சிறுவன் காலமுள்ளளவும் ஈழத்தின் மீண்டும் நிமிரும் நம்பிக்கையின் படிமமாக இருப்பான். 1 நம்பிக்கை துணை பிரிந்த கயிலொன்றின் சோகம் போல மெல்ல மெல்ல கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை மாலைப்பொழுது அது. என்ன ருகே வெம் மணலில் ஆலம்பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன் என்றாலும், எங்கோ வெகு தொலைவில் இனிய குரல் எடுத்து மாரி தன்னைப் பாடு…

    • 2 replies
    • 602 views
  6. எனது தலைமையில் நடந்த பொங்கல் தினச் சிறப்புக் கவியரங்கம் நன்றி -தியா-

  7. Started by Mayuran,

    வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு வான் உயர்ந்த மரமெல்லாம் வான் மறைந்துத் துளிர்த்து நிற்ப வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு பூ மகள் மேனிதனை பூக்கள் மறைத்து நிற்க பாரே அழகில் மிதக்குது பகலவன் சிந்தும் புன்னகையில் இத்தனையும் பார்க்கையிலே மனசெல்லாம் ஒரு தவிப்பு - எம் தாய்மண்ணின் பிறந்ததற்காய் தம் வசந்தம் தொலைத்து வாழும் - எம் தொப்புள் கொடி உறவுகள் வாழ்வில் தொலைந்த வசந்தம் வீசும் நாள் எந்நாளோ??? http://inuvaijurmayuran.blogspot.ch/2014/03/blog-post_20.html .

    • 3 replies
    • 1.4k views
  8. ஓடிவா தயங்காமல்; நாடிவா களங்காமல்; கோடி துயர் தொடர்ந்தாலும் நட்பின் கூடல் மகிழ்வாகும்! தென்றல் வந்த பாதையில் சென்றனவே சோகங்கள்! வாழ்வில் சேர்ந்த வலிகள் எல்லாம் வானில் திரண்ட மேகங்கள்! மழை நீரின் விந்தை மண்ணில்; இன்ப ஊற்றின் ஆரம்பம்! மீதம் உள்ள உந்தன் வாழ்வில் என்றும் பொங்கும் பேரின்பம்! உறவுகள் பலம் கொண்டு உவகையில் உருவாகும் சிநேகிதம் கரும்பாகும்; பகைமைகள் துரும்பாகும்; தோழமை மருந்தானால் நோய் நொடி நெருங்காது; வேதனையும் திரும்பாது; துணையாகும் வருங்காலம்! ஓடிவா தயங்காமல்; நாடிவா களங்காமல்; கோடி துயர் தொடர்ந்தாலும் நட்பின் கூடல் மகிழ்…

  9. Started by putthan,

    நந்திக்கொடி தூக்கினேன் சைவக்காவலர் என்றனர் சிவப்புக்கொடி தூக்கினேன் புரட்சிவாதி என்றனர் கட்ச்சிக்கொடி தூக்கினேன் அரசியல்வாதி என்றனர் கண்டுகொள்ளவில்லை ஜன நாயக உரிமை என்றனர் தேசியக் கொடி தூக்கினேன் பயந்தனர் ஆட்சியாளர்கள் என்னை பயங்கரவாதி என்றனர் பயந்தனர் அயலவர் என்னை பிரிவினைவாதி என்றனர்

    • 9 replies
    • 1.7k views
  10. கண்ணீர் அஞ்சலி.....( எண்ணமதில் கற்பனைகள் எத்தனையோ தான் சுமந்து... பள்ளியறை மீதினிலே வெண் புறவாய் பறந்தவளை.... வானேறி வந்து ஏனோ மா பாவிகளை ஏன் வதைத்தீர்;....??? என் செய்தாள் என்றென்னி அவள் உடலை நீர் கிழித்தீர்....??? உணர்விழந்து உடல் நலிந்து உணர்வற்று கிடைக்கையிலே.... உயிர்காக்க வேண்டியவள் இடமாறி வருகையிலே... இரக்கம் இன்றி ஏன் வதை;து ஏனோ பகையே நீ கொன்றாய்....??? உயிர் குடிக்க அலைகின்ற இன வெறி மகிந்தாவே ஏனோ அவளை நீ கொன்றாய்....??? என் தீங்கு அவள் இழைத்தாள்....??? தீண்டாமை கிடந்தவளை திருகியே ஏன் கொன்றாய்....??? வலியோடு வடு இணைத்து துடி துடி…

    • 5 replies
    • 1.2k views
  11. புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்! - வித்தகக் கவிஞர் ப. விஜய் இந்தியா வித்தியாசமான நாடு! உள்நாட்டுத் தொழிலாளர்களைப் பிச்சைக் காரர்களாக்கும்! வெளிநாட்டு முதலாளிகளைப் பணக்காரர்கள் ஆக்கும்! அமெரிக்கா விவரமான நாடு! வெளிநாட்டு தொழிலாளர்களை பிச்சைக் காரர்களாக்கும்! உள்நாட்டு முதலாளிகளைப் பணக்காரர்கள் ஆக்கும்! இலங்கை விபரீதமான நாடு! சவப்பெட்டிகளை தயாரித்து சமாதானம் பேசும்! சமாதானம் பேசிக் கொண்டே ஏவுகணை வீசும்! புத்தனின் போதிமரத்தில் - இன்று செஞ்சோலை சிறுமிகளின் உடல்கள் தொங்குகின்றன செஞ்சோலை வளாகத்தின் மேல் குண்டு வீசிப் பறந்தது விமானம் அல்ல சிங்கள ராணுவத்தின் மானம்! ஒரு ராணுவம் எதிரி ராணுவத்தை…

  12. ஆழக்கடல் அது அரபிக்கடல் அந்த நீளக் கடல் வழி நிரை நிரையாக எங்கள் சோழப் படை வீரர் செல்லும் பெரும் சேதி சொன்ன மைந்தன் வாழி கலிங்கம் வென்ற தமிழர் எம்மை செலிங்கோ வந்து சிதைத்தெறிந்து அழுங்கோ எண்டு விட்டுப்போனதை ஆராய்ந்து சொன்ன அண்ணன் வாழி உடல்கள் உரசும் விரசம் பரவும் - காம கடலில் எம்மை கலந்தவன் அண்ணன் விடலைப் பருப விரகம் அடங்கா விண்ணன் எங்கள் அண்ணன் வாழ்க சோம பானம் அருந்தி சுதியேற்றி வாசிக்க காம சாத்திரம் தந்தவன் - கலவியை கல்வியாய் சாம நேரத்துச் சங்கதிகள் சொல்லியே சரித்திரம் படைத்திட்ட மைந்தன் வாழி தண்ணியில் மிதந்தவன் விடிந்ததும் கனவினை எண்ணியே கவிபல எழுதிக் குவித்தவன் அண்ணைமாரே உங்களை ஆயுதம் ஏந்தச்சொல்லி தன்னை வருத்த…

    • 120 replies
    • 9.9k views
  13. Started by தமிழரசு,

    உன்னுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த பிறகுதான் சாலை ஓர மரங்களிலிருந்து உதிரும் பூக்களின் மௌனத்திலும் நான் இசை கேட்க ஆரம்பித்தேன் அறிவுமதி-தமிழ் கூடல்.

  14. தீயின் வம்சமடா நாம் தீமை கண்டால் தீது செய்தால் தீக்கிரையாக்கிடுவோம் விழிகள் திறந்தே உறங்கிக்கொள்வோம் விடியல் வரும் நாள் கண்ணயர்ந்து கொள்வோம் உரசிப்பார் பற்றிக்கொள்வோம் பிரிதல் ஒன்றும் பிரியப்போவதில்லை இணைவோம் எம் லட்சியம் ஈடேறும்போது அரசியல் ஆட்டம் காண எம் ஆட்சி பீடம் ஏற இணைவோம் புரியும் அன்று பிரிவு ஏன் - எம்முள் பிளவு ஏன் ? கிழக்கில் தோன்றும் இருளெல்லாம் - ஓர்நாள் வடக்கில் வெளிச்த்திற்கு அஸ்த்திவாரம் ஓட ஓட விரட்டி எம்மை கொன்றொழித்த ஓர் காலம் ஓடுஓடுவென அரசை கொன்றொழிப்போம் எம் காலம் கருநாகம் படையெடுத்தால் கலங்கிப்போகாதே - அதன் கடிவாளம் எம்மிடத்தே கவலை கொள்ளாதே வீசும் காற்றும் வ…

  15. Started by விகடகவி,

    எங்குதான் கற்றாய் நீ பொய்.. இளமை சொல்கிறதா... ஆசை சொல்லத் தூண்டுகிறதா.. இதுவரை இல்லாமல்.. இப்போது.. பொருத்தம் இல்லாமல்.. பொய்சொல்கிறாயே.. நீ உரைப்பதை நம்பிவிடும்.. முட்டாளா நான் மாறிவிட்டேன் என்று எண்ணிவிட்டாயா..முட்டாள்க் காதலனே... நீ நிற்பது கடல் நடுவில்.. நான் நிற்பது கரைமணலில்.. நீதான் இங்கு வரவேண்டும் நானல்ல.. காதல் மனதைத் தொடும் கலை.. உடலைத் தொட அலைவது கொலை காமம் தாம்பத்யத்தை ஸ்திரப்படுத்த... காதலைப் பலவீனப்படுத்த அல்ல நீ நேசிப்பது என்னையென்றால்.. நான் என் இதயத்தை என்று எடுத்துக் கொண்டேன்.. நீ உடலை என்பதைக் காட்டிச்சென்றாய்.. உன் வேலையாகவில்லை என்று எரிகிறாய்.. என் காதலன் கண்ணியத்தை எண்ணி நான் அழுகிறேன்.. பரிபூரண இதயத்தைக் க…

  16. வணக்கம் நண்பர்களே! இக்கவிதைப் பூங்காவில் ஒரு புதிய அறிமுகம், 'வேங்கையன் பூங்கொடி" எனும் தொடர் காவியம். கவிதையா? உரை நடையா? பிரித்துப் பார்க்காமல் இரண்டுக்குள்ளும் பயணிக்கும் ஒரு கதைவடிவம். பல அங்கங்களைக் கொண்ட சில பாகங்களான இக்காவியம் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் ஒவ்வொரு அங்கமாக இத்தளத்தில் வெளியாகும். தொடர உள்ள இக்காவியத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இவ்விடத்தில் இணைக்கும் திரியில் பதியுங்கள். 'வேங்கையன் பூங்கொடி" எண்ணப்பதிவு விமர்சனப்பகுதி

  17. விடுதலை வேள்வியில் விறகானாய்! வீரர்களின் சுடர்களுடன் இணையானாய்! வெந்திட்ட புண்ணுக்குள் வேல்கொண்டு குத்திவிட்டார் தந்திரமாய்ப் பேச்சுவார்த்தை புதைகுழிக்குள் தள்ளிவிட்டார் விந்தையல்ல நீதிகொல்லல் எங்களுக்கே என்று காட்ட இயந்திரக் கழுகுகொண்டு குண்டுவீசிக் கொன்று விட்டார்! ஆயுதங்கள் போரில்நிற்க அறிவுடனே பேசி நின்று ஆயிரமாய்ப் பொய்யுரைப்போர் நேரெதிர்க்கும் ஆற்றல்தன்னைத் தகர்ப்பதற்கு ஆள்அழித்தல் என்றுநிற்கும் கோழைகளால் அகம்அழவே அகிலமெங்கும் தமிழரினம் கலங்குதம்மா! சத்தியத்தைத் தலைநிமிரற் கிடமளியோம் என்பவர்க்கே சுற்றிநின்று துணைபுரிவோர் இதற்கும்கூடத் தலையசைப்பார் பற்றிநின்று சுதந்திரத்தை மீட்கநிற்போர் வழிமறுப்பார் பற்றுகின்ற தீபெருக மட்டுமன்றி என்னச…

    • 0 replies
    • 1.5k views
  18. ஊருக்கு தாண்டி நான் கில்லாடி என் மனச உடைச்சது நீதாண்டி பொய்யாச்சு எல்லாம் பொய்யாச்சு என்னை விட்டு எல்லாம் போயாச்சு கண்ணதாசனும் கம்பன் கவிஞனும் பொம்பள மனச எவனும் புரியல கவிஞர் வாலியும் வைரமுத்துவும் பொம்பள மனச எவனும் அறியல உன்னை நினைச்சதால நான் மறக்கல உன்னை மறக்க நினைச்சாலும் முடியல மனச மனசுக்குள் புதைச்சதல பிரிக்க முடியல மனசல உறக்கம் கொஞ்ச நேரம் கிடைச்சாலும் அது கிடைக்கவேணும் உன் மடியில என்னை பார்த்தும் பார்க்காம போகிற உன்னால முடியுது என்னால முடியல...

    • 4 replies
    • 1.3k views
  19. பாலைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன். அன்பே மஞ்சத்தில் தனித்த என்மீதுன் பஞ்சு விரல்களாய் சன்னல் வேம்பின் பொற் சருகுகள் புரள்கிறது. இனி வசந்தம் உன்போல பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும். கண்னே நீ பறை ஒலித்து ஆட்டம் பயிலும் முன்றிலிலும் வேம்பு உதிருதா? உன் மனசிலும் நானா? இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை இனி இளவேனில் முதற் குயிலையும் துயில் எழுப்புமடி. நாளை விழா மேடையில் இடியாய்ப் பறை அதிர கொடி மின்னலாய் படருவாய் என் முகில் வண்ணத் தேவதை. உன் பறையின் சொற்படிக்கு பிரபஞ்சத் தட்டாமாலையாய் சிவ நடனம் தொடரும். காத்தவரா…

    • 4 replies
    • 1.7k views
  20. உன்னை என் ஞாபகப் பிரதேசத்தில் இருந்து அழிக்க முயற்சித்தவர்கள் அழிக்க முடியாமல் தோற்றுப் போய் விழிக்கிறார்கள் ஏனென்றால் நீ என் இதயத்தில் READ ONLY MEMORY யாக அல்லவா பதிவாகி இருக்கிறாய்! பவர்கட்! கொஞ்சம் சிரி...மெழுகுவர்த்தியை தேட வெளிச்சம் வேண்டும். என் இதயத்தை திருடிய குற்றத்திற்காக என் மனச் சிறையில் உன்னை ஆயுள் கைதியாக்க சம்மன் அனுப்புகிறேன் தயவு செய்து முன் ஜாமீன் கேட்டு விடாதே! எங்கேயோ,எப்பவோ படித்து சுவைத்தது...சகாறா அக்கா எழுதினது யார் எனக் கேட்டு அடிக்க வரக் கூடாது

    • 4 replies
    • 1.1k views
  21. உனக்கு என்ன கவலை .... இருந்தாலும் தோள் மீது .... சார்ந்துகொள் ..... என்னை கேட்காமலே .... தோள் மீது சாய்ந்துகொள் ....!!! என் தோள் உன் .... இதய சுமையை இறக்கும் .... இதய சுமையை தாங்கும் .... சுமைதாங்கியாய் இருந்தால் .... உயிர் உள்ளவரை உன்னை தாங்குவேன் .....!!! நான் உன் உயிர் நட்பு ..... உன் அத்துனை சுமைகளையும் .... என்னிடம் கொட்டிவிடு .... உன் முகத்தில் சிரிப்பையே.... பார்க்க வேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 01

  22. பாட்டி வீட்டுப் பழம் பானை பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா அந்தப் பானை ஒரு புறம் ஓட்டையடா ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே புகுந்து நெல் தின்று தின்று வயிறு ஊதிப் புடைத்துப் பருத்தடா மெள்ள வெளியில் வருவதற்கும் ஓட்டை மெத்தச் சிறிதாக்கிப் போச்சுதடா பானையைக் காலை திறந்தவுடன் அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு பூனை எலியினைக் கண்டதடா அதை அப்படியே கௌவிச் சென்றதடா கள்ள வழியில் செல்பவரை எமன் காலடி பற்றித் தொடர்வானடா! நல்ல வழியில் செல்பவர்க்கு தெய்வம் நாளும் துணையாக நிற்குமடா! படித்ததில் பிடித்தது குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

  23. பதுங்குகுழி ஓடிப்போன மகிந்தவுக்கு.... முடிச்சுப் போட்டமெண்டு மாத்தையா மூச்சுவிட முன்னம் அடிச்சுப் போட்டுது வான் புலி. அலரி மாளிகை அந்தப்புரம் அடிச்சு விழுந்து பங்கருக்கை துடிச்சுப் பதைச்சுப் போயிருக்காம். தமிழர் தினமும் இப்பிடித்தான் துடிச்சுப் பதைச்சு ஓடுதுகள். குடும்பமாகத் தனியனாக குழந்தை குட்டி இளசு பழசு எந்தப் பிரிவும் மிச்சமின்றி செத்து செத்து வீழுறதை எந்தச் சிங்களவன் பார்த்திருப்பான்...? கொழும்பும் இனிமேல் பயம்கொள்ளும் கோட்டைக் கனவில் உள்ளவரின் கொழுப்படக்கும் நாளுமினி கொஞ்சத் தூரம் சொல்லி வைப்போம். தமிழன் நிலமும் தமிழன் கடலும் தனக்குச் சொந்தம் என்றவனை தமிழர் படை வென்று வரும் தரணியெங்கும் சென்று வ…

    • 0 replies
    • 1.8k views
  24. ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா பொய்யும் வெல்லுதடி பாப்பா - …

    • 5 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.