கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அங்கே மழை பெய்கிறது! எங்கோ ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள் புரண்டு படுக்கின்றன அப்பிணங்களைத் தீண்டுகிறது நிலத்தில் இறங்கிய மழையின் நீர்க்கால் ஒன்று புதையுடல்கள் துயில் கலைந்தனபோல் உடல் முறித்து எழ முயல்கின்றன அவற்றின் உதடுகளில் இன்னும் பதியப்படாத சொற்களும் உலக மனசாட்சியின் மீது வாள்செருகும் வினாக்களும் தொற்றியிருக்கின்றன தாம் சவமாகும் முன்பே புதைபட்டதைத் தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம் கூறியிருக்கின்றன அவை தாம் இறக்கவில்லை தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன மழைத்துளியிடம் எமது மைந்தர்கள் மீது இதே குளுமையுடனும் கருணையுடனும் பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன ! -- மகுடேசுவரன்
-
- 1 reply
- 716 views
-
-
மலையகத்துக்கு மலை முகடுகளின் தகரக் கொட்டைகளிடை மாடி வீட்டு மகன்.. கருங்கற் பாறைகள் துளைக்க நடக்கும் அந்தப் பாதணியற்ற கால்களிடை சொகுசுப் பாதணி போட்ட மகன்.. தேயிலை தடவி வரும் குளிர்காற்றில்.. அன்னைத் தமிழின் வாசனை மங்குமோ.. மறக்குமோ ஏக்கங்களிடை சிங்களமே என் மேன்மை..பேசிய மகன்.. நெடித்து நெளிந்து வீசிய சுழற் பந்துகளிடை கோணலின் கோணத்தில் வீசிய தூஸ்ரா மகன்... மகிந்த மாமாவின்.. கோத்தா அங்கிளின் சுறாக்களிடை வளர்ந்து நின்ற செல்லக் கிளி மகன்.. சொந்த அன்னை நித்தமும் தொழுது சென்ற செல்வ விநாயகன் முன்னிடை தொழாது பள்ளியும் பன்சலையும் தொழுத மகன்.. …
-
- 1 reply
- 608 views
-
-
கருத்தும் கவிதையும் - வ.ஐ.ச.ஜெயபாலன் . பெண்கவிஞர் ஒளவ்வையார் கற்பை உடலுடனோ மனசுடனோ இணைக்காமல் ”கற்பெனப் படுவது சொற் திறம்பாமை” என ’சொல்; சம்பந்தப் பட்டதாக வரையறை செய்கிறார். சொல் அடிபடையில் குழந்தை பெறுவது தொடர்பானதுதான். சொல் அடிப்படையில் உன்னோடு வாழும்வரை வேறு பெண்ணை/ஆணைச் சேரேன் என்பதுதான், இது இருவருக்கும் பொதுவானது. . இந்த வரைவிலக்கணத்தின்படி என் அனுபவத்தில் நோர்வீயிய ஆண்களும் பெண்களும் கற்புநிலையில் உச்சம் என்பேன். ஒரு சமயத்தில் ஒருவன் ஒருத்தியென தளம்பாமல் வாழ்வது, மனம் கசந்தால் நேரே பேசி விலகியபின் மட்டுமே வேறு துணை தேடுவது என அவர்கள் பண்பில் சுதந்திரமான கற்புநிலை. சிறக்கிறது. இதனால் உறவின் வெளியே தொடர்புகள் அக குறைந்த சூழல் அமைந்துள்ளத…
-
- 1 reply
- 819 views
-
-
இணைந்தோம்! உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்! நினைத்தோம்! எங்கள் தமிழ் உயிர் உயிரென நினைத்தோம்! (இணைந்தோம்) தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும் தாங்கினோம் இன்பம் தாங்கினோம்! அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ் அன்பினால் உலகை வாங்கினோம்! (இணைந்தோம்) சிரித்த தமிழ் முகம் நிலைத்த வையகம் செய்வோம் என ஆணை ஏந்தினோம்! விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும் விடுதலை வானில் நீந்தினோம்! (இணைந்தோம்) மானமே வாழ்வாய் நின்றோம் மலைகளை மோதி வென்றோம்! இயற்றியவர்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
-
- 1 reply
- 945 views
-
-
வெட்டடா வெட்டடா பகைவனே வெட்டடா பதுங்கிட நீயின்று பங்கரை வெட்டடா... நின்மதி தொலைத்து நித்திரை முழியடா- உன் கோட்டைகள் மீதிலே குண்டுகள் விழுமடா... ஆகயம் அதனையே அண்ணாந்து பாரடா புலியது பறவைகள் புயலென வருமடா... எண்ணெய் குதங்கள் எங்கினும் எரியுமே கடற் படை தளங்களும் கடுகதி சரியுமே... சட்டங்கள் போட்டா சாகவே அடித்தாய் வட்டீயும் முதலுமாய் வலிந்தே தருகிறோம்.... எத்தனை இன்னலை எமக்கது அழித்தாய் இந்தோ தருகிறோம் இன்னலை ஏரடா.... வல்ல அரசென்று வாயது அடித்தவா பிடரியில் கால் படா எங்கட ஓடினாய்...??? - வன்னி மைந்தன்
-
- 1 reply
- 1.1k views
-
-
ஊற்று - தேநீர் கவிதை சக்கையாகிப் போன ஒரு பழைய நினைவின் இடுக்கிலிருந்து உருண்டோடி வருகிறது * காடிருந்த நிலத்தின் வியர்வையாக வழிகிறது * புதையுண்ட தனிமையின் விதையொன்று மரமாகி உதிர்க்கும் முத்து முத்துப் பூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கிறது மூலம் காண முடியாத ஆழத் துயரில் ஊற்றெடுத்து தளும்பிக் கொண்டிருக்கிறது * கால வெறுமையின் ஊதுகுழல்களால் ஊதப்படும் சாம்பல் பூத்த கங்குகள் எரிவதில் பொங்கிப் …
-
- 1 reply
- 954 views
-
-
அன்னையின் ஆஸ்தி போராட்டம் என்பது சோத்துக்கல்ல நாம் போராட்டப்புறப்பட்டது படிப்புக்கும் அல்ல தொழில் வாய்ப்பு, மொழிப்பற்று ......இவைக்குமல்ல மனிதனாக வாழவிடாமை என்னை, என் குடும்பத்தை, என் உறவுகளை,... உயிர்வதை செய்தமை சிங்களம் அப்படியேதான் உள்ளது அதற்கு மனிதமொழி புரியாது தர்மவழி தெரியாது கடைசி சாட்சி எனது அன்னையின் இறுதி ஆஸ்தி இது போதும் நாம் ஒன்றாகி புறப்பட.......
-
- 1 reply
- 959 views
-
-
புத்தாண்டு கவிதை அடுக்கு தொடர் கவிதை-----------------------------------------வருக வருக புத்தாண்டே வருக ......தருக தருக இன்பவாழ்க்கை தருக......பொழிக பொழிக வளம் பொழிக .....வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!போ போ பழைய ஆண்டே போ .....ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....போதும் போதும் துன்பங்கள் போதும் ....ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!!அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!^^^மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன் யாழ்ப்ப…
-
- 1 reply
- 2.7k views
-
-
[size=4]பொப் டிலானின் “When the Deal Goes Down” என்ற கவிதை. எப்போது கவிதை எழுத போனாலும், இப்படி சில கவிதைகள் ஞாபகத்துக்கு வந்து “ஏன் உனக்கு வேண்டாத வேலை?” என்று ஏசும். படிமம் தான். வாசிக்கும்போது முகத்தில் பளாரெண்டு அடிக்கும் படிமம். நீங்களும் வாங்குங்களேன்.[/size] [size=3] [/size] [size=4] The moon gives light and it shines by night Well, I scarcely feel the glow We learn to live and then we forgive O’er the road we’re bound to go More frailer than the flowers, these precious hours That keep us so tightly bound You come to my eyes like a vision from the skies And I’ll be with you when the deal goes down [/size] [size=4]கேதாவின் கவித…
-
- 1 reply
- 579 views
-
-
-
- 1 reply
- 514 views
-
-
தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன் தொப்புள் கொடியில் உயிர்க் கொடி ஏற்றிய தோழா ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா! இணையத்திலே உன் அழகிய முகம் பார்த்தோம் இதயத்திலே கருகிப் போனது எங்கள் மனம்! எவ்வளவு இளகிய மனம் கொண்டவன் நீ எங்களுக்காய்... ஏன் கருகிப் போனாய்? தூத்துக்குடியில் முத்துக் குளித்தவன் நீ சாஸ்திரி பவனில் ஏனையா தீக்குளித்தாய்? குடம் குடமாய் நாங்கள் அழுது வடித்த எங்கள் கண்ணீரில் உன் முகமே பூக்கிறது! எம் தமிழ்மீது நீ கொண்ட பற்றுக்கு எல்லையே இல்லை என்பதை இப்படியா உணர்த்துவது! தமிழினத் தலைவர்கள் என்று சொல்லத் துடிக்கும் எங்கள் தலைவர்களின் நாக்கை அறுத்தாய் நீ! கையாலாகாத பரம்பரை என …
-
- 1 reply
- 1.2k views
-
-
பிறக்குமா புத்தாண்டு ...........? பிறக்குமா புத்தாண்டு எதிரிக்கு பார் சோறு எங்களுக்கு கந்தக காற்று இறைவா என் இந்த வேற்றுமை உலகெங்கும் போராட்டம் தமிழ் மக்கள் மன்றாட்டம் ஓயாத போரை நிறுத்து கொல்கிறது கொத்துக்குண்டு சிந்தும் ரத்தம் ஆறாய் ஓடுது கண்ணீர் விட்ட கண்களும் வெறுமையாய் சுரபிகள் வற்றி விட உண்ண உணவும் குடிக்க நீரும் சுவாசிக்கும் காற்றும் கந்தக வாசம் ஏன் இந்த அவலம் ஈழத்தமிழனுக்கு புலம் பெயர் உறவுகளும் ஓயாத போராட்டம் பட்டினிச் சாவுக்கும் பலர் முன்னேற்றம் உறவுகளின் துயரால் உலகமே ஏக்கம் ஆறாத வலி ,மாறாத சோகம் தீராதா இந்த பழி ,நெஞ்சிலே ஓயாத வலி ........
-
- 1 reply
- 732 views
-
-
-
போருக்குப் புதல்வர்களை தந்த தாயக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த தலைவியையும் இழந்தோம் பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம் …
-
- 1 reply
- 759 views
-
-
-
எந்தத் தூய கோவிலுள்ளும்தூசு நுழையும்ஆயினும் உள்ளெரியும் தீபம்பேசாதுஅதன் ஒளிர்வில் உள் நுழையும் தூசே தானொளிர்ந்து பேசும்...
-
- 1 reply
- 1.3k views
-
-
பார்ப்பன எதிர்ப்பு (பார்ப்பன எதிர்ப்பு யாழ் இணையத்தளத்தில் பல தலைப்புக்களில் விவாதிக்கப் பட்டு வருகிறது. ஒரு சிலர் நாங்கள் ஏதோ பெரியாரின் நூல்களை மட்டும் படித்து விட்டு இப்படி கதைப்பதாக நினைக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பு ஒரு இனத்தை வெறுக்கும் பாசிச நோக்கோடு அமைந்ததல்ல. பெரியாரின் நோக்கமும் அதுவல்ல. பெரியாருக்கு முன் தமிழ் சித்தர்கள் பார்ப்பனியத்தை மிகக் கடுமையாக சாடியிருக்கின்றனர். திருவள்ளுவர் எதிர்த்திருக்கிறார். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் பல இடங்களில் பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்கள் காணப்படுகின்றன. பாரி மன்னனின் அரசவைப் புலவராக இருந்த கபிலர் தனது பாடல் ஒன்றில் பார்ப்பனர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பின் தேவை அன்றில…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன அழிப்பின் இறுதிப் போர் மே மாதம் கவிதைகள் தீபச்செல்வன் 17 May 10 12:15 am (BST) ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது. இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது. வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள். இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை. சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கிறது. குடி எரிந்து முடிகிறது. டெலிகப்ரர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா. எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தது. நான் தேடிக்கொண்டிருக்கிறேன். …
-
- 1 reply
- 1.9k views
-
-
மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயாகும் முன்னேயிளம் பிஞ்சுகளை அழிக்கிறான் தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயா…
-
- 1 reply
- 1.6k views
-
-
I just can't control myself I can't be with no one else It seems like I'm addicted to The way you like to touch me I don't think they understand Why love at your command From the words you speak so deep Our bodies read I have to have you I love you............... You're perfect A manifestation of my dreams Body feel About a million different things எங்கேயோ சுட்டது....
-
- 1 reply
- 1k views
-
-
கும்பாபிசேக மேளச்சத்தத்திலும் அமைதியாய் இருக்கும் சாமி போல அடக்கம் உனக்கு எப்படி நாதஸ்வர இசைபோல வாசித்தாய் உன் காதலை * அழும் குழந்தையைக்கூட அழகாய் சிரிக்கவைத்து புகைப்படம் எடுக்க தெரிந்த கலைஞன் நான் எப்படி உன் அழகான புன்னகை மட்டும் புரியாமல் போனது எனக்கு * பொறுக்கவே முடியவில்லை என் மறதிகளை நீ கொட்டித்தீர்த்த ஞாபகங்கள் அவ்வளவும் அளவில்ல பொக்கிசங்கள் * பிழையின்றி தமிழ் எழுத தெரியாத என்னை கவிஞனாக்கவே வந்து தொலைத்திருக்கிறது காதல் * வெக்கப்படுவதற்காகவே சேலை கட்டும் பெண்கள் மத்தியில் வெக்கத்தையே ஆடையாய் கட்டியிப்பவள் நீ -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 1.7k views
-
-
வென்றால் சிரி.............. வெள்ளம் கால் நனைத்தால்..... சிரி............ முழங்கால்மேலது உயர்ந்தால்........... முற்றும்போனதென்று புலம்பு...! ஒண்டும் காணம் ... ஒண்டும்காணமென்றே அழு.,... ஏதும் நடந்தால்...... இடுப்பை குலுக்கி குலுக்கி........ என்னமோ பண்ணு...... நான் என்ன சொல்ல.......... சிலவிடத்தில்........ சத்தம் போட்டு அழுவதை விட... மெளனமாய் சிரிப்பது மேலாம்!
-
- 1 reply
- 823 views
-
-
திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிந்த ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் நாளும் பொழுதும் கண்ணைக் கரைத்து நாளை வருவார் நாளை வருவார் எ…
-
- 1 reply
- 808 views
-
-
எத்தனை அழகாய் சிரித்துவிட்டுப் போகின்றாய் நீ... இங்கே ஒருவன் சிறைப்பட்டதை அறியாமல்....! உந்தன் நினைவுச் சிலந்தியில் சிக்கிய என்னைக் கொஞ்சம் விடுவி... இரவுகளோடு நான் படும் அவஸ்தை போதும்! சிரிப்பில் கூட போதை இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது! "களுக்" என நீ சிரிக்கின்றபோது மனசுக்குள் எங்கோ உளுக்கிக் கொள்கிறது! புன்னகை கூட இத்தனை அற்புதமாய் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை மயில்பீலியாற் மனதை வருடுகின்ற மகா சுகம் "ரெடிமேட்" சிரிப்பை உதடுகளில் ஒட்டவைத்துக் கொள்பவர்களும் உண்டு அதற்கு ஒரு சாமர்த்தியம் வேண்டும் நீ, எல்லாம் கடந்து புன்னகையால் உதடுகளில் புதுக்கவிதை எழுதுபவள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இது நான் எழுதியதல்ல இந்த லிங்கையும் தொலைத்து விட்டேன் மன்னிக்கவும் வெறுமே நிணமும் நீரும் கொண்ட ஒரு பிண்டமல்ல வீரமும் விடுதலை வேகமும் கொண்டவன் ஈகமும் மனதில் ஈழமும் கண்டவன் தானைகள் தகர்த்தொரு தடவழி சமைத்தவன் எங்கே போர்க்களம் எங்கே பகைவன்-என வானமும் நடுங்கிட வையகம் நடந்தவன் மார்பிலே குண்டேற்றி மரணத்தை அணைத்தவன் உறங்கிடும் கதை சொல்லும் உண்மையின் தலமிது கற்களும் முட்களும் காலடி நெருட புற்களும் புழுதியும் பாதம் மறைக்க கைகளில் சுடுபொறி கருத்துடன் ஏந்தி விழிகளில் விடுதலைச் செம்பொறி தாங்கி தலைவனின் காலடித் தடமது தொடர்ந்து-தன் விழுப்புண் வாங்கிய திண்ணுடல் நோக காகமும் கழுகும் உண்டிடவென்று எதிரியைக் கிழித்தவன் உறங்கிடும் புமி …
-
- 1 reply
- 1k views
-