கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....! ஆளரவம் தொலைத்த அடர் வனங்கள் அன்றைக்கு மௌனித்து மயானம் பூண்டு ஆட்களற்றுப் போனது. ஆழகான புற்தரைகளின் பச்சையம் ஆட்களற்றுத் தனித்த பனித்துளியின் ஈரம் குருதித் துளியாகிக் காயத் தொடங்கியது. நீங்களும் வெடியாகி இடியாகி வெளியில் வராத ஒளியாகிப் போனீரென்றுதான் காலமழுதது. எனினும் போரின் கறைகள் காயாமல் கண்ணீரின் ஈரம் தோயாமல் நீங்களெல்லாம் வனமளப்பதான வதந்திகளையெல்லாம் மௌனங்கள் காடேற்றிக் கடந்தது காலநதி. உங்கள் நிழலைக் கூடத் தொட்டறியாத பேயெல்லாம் உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது அங்கென்றும் இங்கென்றும் அறிக்கைகள் கொடுத்தது. சொல்லியழ முடியாத் துயர் கண்ணில் நிறைந்தாலும் வ…
-
- 2 replies
- 724 views
-
-
இந்த மண்ணின் மைந்தர் நீங்கள் ( காயப்பட்ட ஆமி சொல்லுறான்) என் கைகளில் இரண்டும் கட்டு.... வழியினால் கண்ணீர் சொட்டு.... உண்ணவே முடியல உணவு... கெஞ்சிறேன் உனை நான் கேட்டு.... புலியே வந்தெனக்கு ஊட்டு... எந்தன் கடமைகள் யாவையும் தொட்டு.... செய்கிறாய் இனப்பாகு விட்டு... மனிதத்தை நெஞ்சதில் கூட்டி.... செய்கிறாய் பணியதை சுட்டி.... உன்னையா வந்தேன் நான் கொல்ல....??? இந்த உணர்வதை எங்கே நான் சொல்ல....??? வெறியதை ஊட்டியே வளர்த்தார்.... உன்னை கொல்லவே எம்மையே வைத்தார்..... உம்மை பார்த்ததும் இன்றே அறிந்தேன்... மனிதத்தை இன்றே உணர்ந்தேன்.... …
-
- 4 replies
- 1.6k views
-
-
பார்ப்பன எதிர்ப்பு (பார்ப்பன எதிர்ப்பு யாழ் இணையத்தளத்தில் பல தலைப்புக்களில் விவாதிக்கப் பட்டு வருகிறது. ஒரு சிலர் நாங்கள் ஏதோ பெரியாரின் நூல்களை மட்டும் படித்து விட்டு இப்படி கதைப்பதாக நினைக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பு ஒரு இனத்தை வெறுக்கும் பாசிச நோக்கோடு அமைந்ததல்ல. பெரியாரின் நோக்கமும் அதுவல்ல. பெரியாருக்கு முன் தமிழ் சித்தர்கள் பார்ப்பனியத்தை மிகக் கடுமையாக சாடியிருக்கின்றனர். திருவள்ளுவர் எதிர்த்திருக்கிறார். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் பல இடங்களில் பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்கள் காணப்படுகின்றன. பாரி மன்னனின் அரசவைப் புலவராக இருந்த கபிலர் தனது பாடல் ஒன்றில் பார்ப்பனர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பின் தேவை அன்றில…
-
- 1 reply
- 1.3k views
-
-
என்னுடைய அதிகபட்ச ஆசைகள் என்பதெல்லாம், நான் எழுதுகின்ற மாதிரியே வாழணும்! வாழுகின்ற விஷயங்களையே எழுதணும்!... என்பதுதான்!! எதிர்த்த மாடிக்கட்டிடங்களின் கண்ணாடிகளில், முகம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம்! அவை முகத்தில் ஓடும் சோக நரம்புகளை மட்டுமே பெருப்பித்துக் காட்டுகின்றன! எம் கண்ணீரில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியும் வானவில்லாகி... கட்டணப் பரிமாற்றங்களில் ஊர்போய்ச் சேர்கின்றது! அந்நியத் தெருக்களில் கொஞ்ச தூரம் நடந்தவுடன், களைத்துப் போகின்றேன்... ! ஏனென்று புரியவில்லை!? பழக்கப்படாத தெருக்களும், கொஞ்சம் பழகின முகங்களும்... ஏதோ, அகழிகள் போல் பயமுறுத்துகின்றன! என்னுடைய ஊர் ஒழுங்கைகளின் புழுதிமண் வாசனையும்... மழைக்கால சகதிகளும்... இப்பொழுது, எவ…
-
- 2 replies
- 1k views
-
-
உயிரானவளே ....!!! உன்னை சந்தித்ததிலிருந்து ... தனிமையை இழந்தேன் ... இனிமையாய் வாழ்ந்தேன் ... என் இதயத்தில் காதலே ... சுவாசமாய் இருந்தது .....!!! என்னவளே ...!!! எங்கே சென்றாய் ....? அத்தனையையும் இழந்து விட்டேன் ... உயிரை தவிர இழப்பதற்கு ... என்னிடம் ஒன்றுமில்லை ... சொல்வதெல்லாம் உண்மை ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
-
- 5 replies
- 524 views
-
-
நாளை நாளை என்றொரு நாளை எண்ணி மனம் வெம்பிப் போகாதே தம்பி - அந்த நாலுந் தெரிந்தவன் நடத்தும் நாடகத்தில் குறை சொல்லி மாளாதே தம்பி விதை விதைப்பதும் அது முளைப்பதும் உந்தன் கையிலா தம்பி? எல்லாம் இயற்கையின் கையினை நம்பி! கவலைகள் கிடக்கட்டும் காரியம் நடத்திவிடு மலைகள் எதிர்க்கட்டும் துணிவாய் இருந்துவிடு பிறந்தது இன்று வாழ்வது இன்று சாவதும் இன்றே என்று எண்ணி விடு துன்பங்கள் ஓடும் இன்பங்கள் கூடும் உல்லாசம் உன் மார்பைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் கொண்டாட்டம் நாமெல்லாம் இன்று பூத்த மலர்க்கூட்டம் நமக்கு ஏது கவலை - ஊதடா உல்லாசப் பண்பாடும் குழலை நாமெல்லாம் இன்று பிறந்த மழலை நமக்…
-
- 7 replies
- 1.9k views
-
-
மனதெங்கும் எத்தனையோ மாயங்கள் அலைகளாய் எண்ணத்தில் தோன்றுவது எழுத்தில் வடித்திட முடியாததாய் காணும் காட்சிகள் கண்விட்டுப் போவதுபோல் நினைவுகளின் நீட்சிகள் தொடராதிருந்தால் எத்தனை இன்பம் மனம் எப்போதும் கொண்டிடும் காலத்தின் பதிவுகள் கனவின் கோலங்களாய் மனதில் மகிழ்வு தொலைத்து கண்கட்டிவித்தையில் கண் மூடும் வேளைகளில் கூட கபடியாடுகின்றன பகுக்க முடியாத எண்களாய் பகிரப்படும் நாட்கள் பம்பரமாய் சுழன்று மீண்டும் பரிதவித்து நிற்பதுவாய் நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய் நெடுந்தூரம் செல்கின்றன தவிர்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாததான பிணைப்பின் வலிமையில் மறுதலிக்கும் மனதின் செயல் எத்தனை கடிவாளமிடினும் எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில் எப்போதும் போல் என்னிலை ஏக்கங்…
-
- 2 replies
- 730 views
-
-
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ் கவிதைகள் ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா காசுகூட இல்லாமல் .... சுத்தி திரியிறாயே சித்தப்பு .... இது தப்பெண்னு தெரியல்லையோ .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ஊராருக்கு ஞாயம் சொல்லி ... நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... உன் வீட்டு ஞாயத்தை எந்த .... நாட்டாமை சொல்லப்போறாறோ ...? சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி .... வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி .... வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்.... சித்தப்பு -…
-
- 0 replies
- 707 views
-
-
என் கண்ணில் பட்டவளே.....!!! நீ பிரம்மனின் .... தங்க தேவதையா ....? தெய்வீக தேவதையா ...? தோகை மயில் அழகியா ...? மானிட பெண் தாரகையா ...? என்னை கொல்லும் யார் நீ ...? +++ குறள் - 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. +++ திருக்குறள் வசனக்கவிதை
-
- 3 replies
- 1.1k views
-
-
அன்பு செய் அல்லல் தீரும் உண்மை சொல் உயர்வு உண்டு தொண்டு செய் தொண்டனவாய் நன்மை செய் நாடு போற்றும் கருணை செய் காதலோடு பொறுமை கொள் பூமியாழ்வாய் உரிமை சொல் உனது நாடு வற்மை தீர் வாழ்வு ஓங்கும்..
-
- 0 replies
- 1.2k views
-
-
நீ பிரிந்தபோது ... உறைந்துபோன ... இதயம் - நீ தந்துவிட்டு போன ... நினைவுகளால் .... மீண்டும் துடிக்கிறது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS
-
- 3 replies
- 827 views
-
-
[size=3]பெயரற்ற யாத்ரீகன் நூலிலுள்ள சுவாரசியமான, சில ஜென் கவிதைகள்[/size] [size=3]1[/size] இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் வசிக்க எண்ணியிருந்தேன். இருந்தும், இதோ என்னிடம் வருகிறது மரணம், வெறும் எண்பத்தைந்து வயதே நிரம்பிய குழந்தையிடம். [size=3]0[/size] [size=4]ஹனபுஸா இக்கீய் ஆண். ஜப்பான். ? – 1843[/size] [size=3]2[/size] எதிலும் நம்பிக்கையின்றி சும்மா அமர்ந்திருக்கிறேன், என் சுவாசத்தைக் கவனித்தவாறு. முப்பது வருடங்களுக்கு பிறகும் அது வெளியில் போகவும் உள்ளே வரவுமாக இருக்கிறது [size=3]0[/size] [size=4]ஆல்பர்ட் கோல்ஹோ ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு[/size] [size=3]3[/size] எதிலும் முனைப்பின்றிச் சோ…
-
- 0 replies
- 6.9k views
-
-
-
- 0 replies
- 766 views
-
-
நான் நானாக இல்லை இரவும் பகலும் மல்லுக்கட்டி முகம் சிவந்த வேளையில் உனைநான் கண்டேன் பைங்கிளி உனைநான் கண்டேன் . செவ்வரியோடிய உன் கயல் விழிப் பார்வையில் கலங்கித்தான் போனேனடி..... குவிவடிவாய் உன் புருவத்திலும் குழிவிழும் உன் கன்னக் கதுப்பிலும் , சின்னஞ்சிறு உதட்டு வெடிப்பிலும், பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கியே போனதடி .... நால்வகைப் பெண்ணும் ஓர் உருவமாய் வந்தாய் சிந்தை குழம்பியே சீர்கெட்டுப் போனேன் அடி பைங்கிளியே ..... உன் குதலை மொழி எப்போ கேட்பேன் ? உன்னிதழை என்னிதழ் பற்றுவதெப்போ ?? மொத்தத்தில் , நான் நானாக இல்லை........... கோமகன்
-
- 12 replies
- 1.4k views
-
-
கலவரம் உனக்கெதற்கு ! -------------------------------- கலவரம் கொள்ளாதே நிலவரம் நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா ! பலமென்பது என்னவென்று பதுங்கும் புலி காட்டும் உளம்தனிலே உறுதியை நீ உரமாக்கி நடமாடு ! இடப்பெயர்வை ஏற்படுத்தி எம்மினத்தை வதைப்பவர்க்கு இருந்துபார் நடப்பதை தனித்தனி ஊரெல்லாம் ஒன்றாகித் திரள்கிறது அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அரற்றிக் கொள்ளாது அடைந்திருக்கா தெழுவாய் நீ ! பலமற்ற கொழு கொம்பில் பரவிப் படர்கின்ற சிங்களப் படைகளது சிதறிச் சிதைவதற்கு அகலப் படர்கிறது ! நிலங்கள் கை மாறும் களங்கள் பின்வாங்கும் காலம் அது கூட கலைப்போம் சிங்களத்தை என்றே சிந்தை கொண்டால் சிறுமை உனக்கில்லையடா ! பெருந் தலைவன் இருக்கையில…
-
- 0 replies
- 690 views
-
-
என் விரக்தியின் அத்திவாரம் கொத்துக் கொத்தாய் வீழும் குண்டுகளுமல்ல கும்பல் கும்பலாய் சாகும் குடும்பங்களுமல்ல இன அழிப்புக்காய் நடக்கும் யுத்தமுமல்ல ஆறாய்ப் பெருகி ஓடும் இரத்தமுமல்ல வெறிச்சோடிக் கிடக்கும் வயல் வெளிகளுமல்ல நிரம்பி வழியும் புதை குழிகளுமல்ல சோற்றுக்காய் ஏங்கும் தமிழ் மழலைகளுமல்ல தொற்றுநோய் பரவும் அகதி முகாம்களுமல்ல போரை வாழ்த்தும் சில நாடுகளுமல்ல மௌனம் காக்கும் பிற நாடுகளுமல்ல இத்தனை நடந்தும் மனம் கலங்காமல் இன்னமும் பிறர் துயர் விளங்காமல் கண்மூடி இருக்கும் சிலதமிழரின் குணம்தான் என்அடிமன விரக்தியின் அடிப்படைக் காரணம் http://gkanthan.wordpress.com/
-
- 4 replies
- 1.4k views
-
-
விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் எந்தத் தீர்வையும் ஈழத் தமிழனிடம் கேட்க்காமல் இந்தியா போட்ட பிச்சை இது இன்னும் கிடந்து இழுக்குது சேடம் ஆயிரம் தடவை இந்தியா சொல்லியும் இலங்கை இதுக்கு மசிவதாய் இல்லை ஏதோ புலி தான் மறுத்தினம் என்றால் இப்பவும் ஏன் தான் மறுக்கினம் கொடுக்க 13 ம் பெட்டியோடு வந்த பெரியண்ணை தலையில் பிறத்தாலே நின்று துவக்கால அடிச்சும் சிங்களம் சொன்னது இந்தத் தீவில் எந்தத் தீர்வும் எப்பவும் இல்லை என்று அப்பவே சொன்னது விக்கிரமாதித்தன் கதையைப் போல சற்றும் மனம் தளராத இந்தியா சந்திக்கும் பொழுதெல்லாம் 13 ம் கதையை பல தடவை சொல்லும் இதுக்கு மேலாய் கொடு…
-
- 4 replies
- 916 views
-
-
செத்துப்போகட்டும் அவர்கள் சாகப்பிறந்தவர்கள் ஏன் கவலை அதற்காக சாகப்பிறந்தவர்கள் அவர்கள். ஈனப்பிறவிகள் எண்ணிவிட்டு போகட்டும். தானாடாவிட்டாலும் தசையாடுமாம் இவர்களுக்கு ஒன்றும் ஆடவில்லை. அங்கே பிணக்குவியல்கள். பணத்தை குவிப்பதற்காய் மலிவு விற்பனைகள் களியாட்டவிழாக்கள். செத்துவிட்டு போகட்டும் வன்னிமக்கள் சதையாடாத ஈனப்பிறவிகள். புலிபாய்ந்த காலத்தில் ஆணிவேர் எடுத்தவர்கள் புலிசாய…
-
- 3 replies
- 1k views
-
-
இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்... அன்று நீ என்னிடத்தில் எதிர்பார்த்த எதுவுமே, இன்று உன்னிடத்தில் இல்லையாம்! கேள்விப்பட்டேன்.....! உனக்காக அழவே கூடாது என்றிருந்தேன்... கண்கள் என்னை கைவிட்டன - உன்னைப்போல! எப்போதும் திரும்பப்பெறமுடியாத என்னுடைய நம்பிக்கைகளை உன்னிடத்தில் தொலைத்தவன் நான்! இனிமேலும் அதை நான் உன்னிடத்தில் தேட மாட்டேன்!!! இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்... உன் வற்றாத நினைவுகளும் ஆற்றமுடியாத காயங்களும் ஆறாத கோபமும் கூட. உன்னையும் நீ செய்த துரோகத்தையும் எப்படி மறக்கமுடியும்??? என்னை மட்டுமா... என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி... நீ தந்துவிட்டுப்போன பிரிவையும் அதன் சமுதாய அடையாளத்தையும் எப்படி மறைக்கமுடியும்??? அன்ற…
-
- 48 replies
- 5k views
-
-
சுழிகுளம் சுழிகுளம் என்ற சித்திரகவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப் பெறுவதாகும். இதில் இடம் பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே பெற்றிருக்க வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். “கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா” பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும் . நன்றி : முகனூல்
-
- 7 replies
- 1.3k views
-
-
வெள்ளைக் கூடுகள்.... கவிதை - இளங்கவி... இறுதியாக எங்கள் மனிதப் படுகொலைகள் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் வசிக்கும் காகமும் குஞ்ச்சுகளும் பேசுவதாக ஓர் கற்பனை.... நம் புதுவீடு வெள்ளையாய் பளிச்சென்று இருக்கம்மா...! வெள்ளைமரக் குச்சிகள் இங்கே புதிதாகக் கண்டாயா....? இல்லையடா செல்லம்... இது இங்கே மரணிடத்த மனிதர்களின் எலும்பச் சிதறல்கள்.... மழையுடன் புயலும் தாங்கும் மாமிசச் சிதறல்கள்.... நாம் வானத்தில் பறந்ததால் ஓர் வழியாகத் தப்பித்தோம்... இவரோ பூமியில் வாழ்ந்ததால் புதைகுழியில் சிதறிக் கொண்டார்.... அவர் எலும்புச் சிதறல்களில் உமக்கு அழகாய் வீடமைத்தேன்... அவர் வாழ்ந்த இடமெல்லாம் நீர் விளையாட வழியமைத்தேன்... சரி..சரி சிங்க…
-
- 0 replies
- 532 views
-
-
கவிதை! ஊரறியாமல் நீயழுத கண்ணீர்........ பாயின் துவாரமூடு ...... பாய்ந்து செல்ல பார்த்திருக்கிறியா? அது கவிதை! ஊரழுத கண்ணீரை - உணர்வின் ........ முதுகில் தாங்கி ........ சோர்ந்து போனாயா? துவண்டு போனாலும் ....... நீ வாழ்ந்தாய் மனிதனாய் அது கவிதை! எது கவிதை? சொல் என்ற மானும் அல்ல.......... மொழி என்ற காடும் அல்ல........ மொழி காட்டில் சலங்கை எடுத்து ...... சொல் மானுக்கு கட்டி விடு..... பின் ..கற்பனைகாட்டில் கலைத்துவிடு... அது கவிதை! நேற்றைய பொழுதில் மை எடு.. இன்றைய பொழுதின் எழுதுகோலில் நிரப்பு....... நாளைய பக்கங்களை ..... வீச்சோடு .... எழுதி நிரப்பு...... புலர்கின்ற பொழுதில்......... நீ இல்லாமல் போனாலும்....... பொய் …
-
- 5 replies
- 1.8k views
-
-
மூட்டை முடிச்சும் முட்டுவலியும் மூச்சிப்பிடிப்புடன் வீடு வந்து சேர்ந்தேன் வளைகுடாவிலிருந்து விடுதலையாகி வந்தேன்! மணக்கும் மனைவியின் முகமோ சுருக்கம் கண்டு; சுறுக்கமாய் முதுமைக் கொண்டு! முன்னாடி நிற்கும் எனைத்தெரிய கண்ணாடு போடும் திரை மறைத்த விழி! நரைக்கொண்டு கரைப்படிந்து; உழைத்தக் காசை செலவுச் செய்ய வியாதியுடன் வந்திருக்கிறேன் வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்! இளமைக்கு வேட்டு வைத்து கடமைக்கு ஓட்டுப் போட்டு கடனுக்கு ஒட்டுப்போட்டு; பாலையிலேப் பலக்காலம்! செழிப்பான வாலிபத்தை மாதச் சம்பளத்திற்கு விற்றுவிட்டு; நமக்கென்று துணைவேண்டி ஓடிவரமுடியாமல் ஊன்றி வருகிறேன் குச்சினை! எட்டி உதைக்கும் பிள்ளை வேண்டி ஏங…
-
- 11 replies
- 1.9k views
-
-
தெரியாம போச்சுதே...( திபாவளி) ஜயோகோ அரியரோ வந்தனரோ...??? எம் தமிழை அன்று வந்து ஆண்டனரோ....??? தீபாவளியை கொண்டு வந்து தினித்தனரோ....??? எம் தமிழர் அன்று என்ன பல் இழித்தனரோ....??? ஆண்டாண்டாய் ஆடி படி கழித்தனரே.... அந்த காலமிதை சொல்ல ஏனோ மறந்தனரோ....??? இன்று மட்டும் எப்படியோ கண்டனரோ....??? ஒடி வந்து எங்களிற்கு சொல்லினரோ....??? ஒப்பாரி வைத்து இங்கு காத்துறாரே..... எம்மை மாறும்படி வந்துயிங்கு கெஞ்சிராரே.... ஆதியந்தம் கேட்டுப்பிட்டா முழிசிறாரே.... அந்த ஆய்வுகளை சொல்ல ஏனோ மறுக்கிறாரே....??? ஆண்ட எங்கள் மன்னனையோ அழித்தனரோ....??? அட…
-
- 0 replies
- 1.6k views
-
-
காதலித்துப் பாரேன்...... கவிதை - இளங்கவி நேற்றைய காதலர் தினத்தில் காதலில் திழைத்திருந்தோருக்கும், காதலி / காதலனுக்காய் கலைத்திருப்போருக்கும், காதலித்துக் களைத்திருப்போருக்கும் மற்றும் காதலித்து வாழ்க்கை வெறுத்திருப்போருக்ககும் இது சமர்ப்பணம்..... காதலிக்க கலைத்திருப்போர்...... அவனோ..... கனவு காண்பான் திரிஷா பக்கத்தில் தினுசாய் கிடப்பதாய்..... தமண்ணா கைபிடித்து அவளுக்கு துணையாய் நடப்பதாய்.... படிப்பின்றி சுற்றுவான் பெட்டை வளைச்சலுக்காய் பள்ளி செல்வான்...... ஏண்டா இப்படியென்றால் இதுதான் இளவயசு என்பான்..... அவளுக்கு...... சிம்பு வேணுமென்பாள்... மீசை வைத்த பெடியன் பார்த்தால் முறைத்திடுவாள்... தோடுபோட்ட பெடி…
-
- 0 replies
- 1.3k views
-