கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
அணு அணுவாய் காதல் கவிதை காதல் என்பது இருபால் ... கவர்ச்சியல்ல - உயிரின் உன்னத உணர்வு ....!!! @@@ காதல் இல்லாத இதயம் ... துடித்தால் என்ன ...? துடிக்காமல் விட்டால் என்ன ..? @@@ திருமணமாகாமல் இறந்து விடலாம் ... காதல் செய்யாமல் இறந்து விடாதீர்கள் .....!!! @@@ எனக்கு காதலே பிடிக்காது என்பவர்கள் ... காதலை பயத்தோடு பார்ப்பவர்கள் ....!!! @@@ எந்த நேரமும் இன்பமாய் ஆசைப்பட்டால் எந்த நேரமும் காதல் செய் ...!!!
-
- 8 replies
- 4.2k views
-
-
ஆழ்கடலின் அலை அயத்தமானது அது புரியாது நானும் அதன் அழகில் மயங்கி அலையின் சீற்றம் புரியாது கடலின் ஆழம் தெரியாது கரையின் ஓரமாய் நின்று ஆர்ப்பரிக்கும் அலை கண்டு அகமகிழ்ந்தே காத்திருந்தேன் அலை உயந்து பின் தணிந்தது சுழன்ற காற்றின் திசையெங்கும் சுழற்றி வாரி நீரை இறைத்தது என்மேல் தெறித்து விழுந்த நீர்த்துளிகள் மேனி நனைக்க அலையின் மகிழ்வில் நானும் ஆர்ப்பரித்து நின்றேன் எழுந்தது எதிரியாய்ப் பேரலை என் அங்கம் அத்தனையும் சுருட்டி ஆத்மாவின் மூச்சை நிறுத்தி சிந்தனை எல்லாம் அழித்து சிகரங்கள் எல்லாம் தொட்டவளை தன்னை நம்பியே நின்றவளை ஆழ்கடலின் இருண்ட அறையில் எழுந்திடமுடியாப் பாறைகள் நடுவே எதிரியாய்த் தள்ளி எக்காளமிட்டது என்ன செய்வேன் நான் எழுந்துவர முடியவில்லை எ…
-
- 9 replies
- 917 views
-
-
இன்று கனடாவில் குடும்ப தினம் நன்றி தர்சினி.(CMR)
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்னை மண் மீட்க அவதரித்த புத்திரரே! தாயைப் பிரிந்து தந்தையையும் விட்டகன்று பாசப் பிறப்புகளையும் பகலிரவாய் பாராது தேசத்தின் கடமைதனை சிந்தைமேற் கொண்டீரே! எம் மண் மீட்பதற்கு எதிரியுடன் போரிட்டு புண்பட்டு வந்தாலும் புலிப்படைக்கு பேர் சேர்த்த்Pர். இடிபோல் துன்பங்கள் எத்தனைதான் ஏற்படினும்; மலைபோல் நிமிர்ந்து நின்று தமிழர் மானம் காத்தீரே! உங்கள் வீரத்தால் - தமிழர் உலகெங்கும் புகழ் பெற்றார். தோளை நிமர்த்தி நின்று கோழை நாமும் தமிழரென்றோம். நீங்கள் இடியாய் மின்னலாய் கந்தகமாய் நெருப்பாய் எதிரியின் பாசறைக்குள் ஏவுகணையாய்; புகுந்தீர்கள். நிலத்திலே வீழ்ந்தாலும் இரத்தத்தால் ஈரமாக்கி சதையை உரமாக்கி எம் சந்ததிக்கே வளமானீர்! …
-
- 4 replies
- 1k views
-
-
நான் கொடுக்கும் துண்டித்த அழைப்புகளை கண்டிக்கும் உன் கோபத்தின் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு...... சண்டையிட்டு சரணடையும் சலனமற்ற உன் அன்பின் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு.... மடிகணினியோடு மல்லுக்கட்டி போராடி என்னோடு அரட்டை அடிக்கும் உன் சேட்டைகள் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு.... கோபத்தினை மறைத்த தருணங்களில் இம் என்ற ஒற்றை சொல்லோடு உரையாடும் பித்தனே உன் பித்தத்தின் மீதும் கொள்ளை பிரியம் ... அன்றாடம் நான் கேட்கும் கேள்விகளுக்கு சில்லரிக்கும் புன்னகையோடு சம்மந்தமில்லா விடையளிக்கும் உன் சலிப்புகள் மீதும் கொள்ளை பிரியமே..... பேசிக்கொண்டிருக்கும் போதே சொல்லாமலே தூங்கிடும் உன் தூக்கத்தின் மீதும் கொள்ளை பிரியமே..... காதருகே கண்ண…
-
- 1 reply
- 584 views
-
-
மலரும் ஆண்டே!!!... பறந்து போனதோ இல்லையோ பதற வைத்த ஆண்டு 2007 எத்தனையோ இளவல்களையும் புன்னகைப் பூவையும் தன்னுள் இழுத்துக்கொண்ட ஆண்டு! கண்களில் தமிழீழம் தாகம் மின்ன மின்ன ஒவ்வொரு ஆண்டையும் வரவேற்கின்றோம் நம்பிக்கை மாறாப் புன்னகையோடு!. எங்கள் வீட்டிலும் ஏட்டிலும் எழுதப்பட்ட சோக காவியங்களை எரியூட்டி எம்மை உயிர்ப்பிக்க செய்கின்றன போர்களமாடும் எம் உயிர் நாடிகள்! இழப்புகளின் எல்லை விரிந்துகொண்டே செல்லும் வேளையிலும் தன்னம்பிக்கை தளராத் தலைவனின் கொள்கைதான் நீர் வார்க்கிறது காயும் எங்கள் உயிர்வேர்களுக்கு!. மலரும் ஆண்டே! இரத்த வாடை நீக்கி இன்பம் கூட்டுவாயா?! அவல ஓலம் போக்கி அன்பு மொழிகள் மீட்டுவாயா?! உப்புக்கண்ணீர் துடைத்து சொந்தங்கள் சேர்ப்பாயா?! எங்…
-
- 4 replies
- 1.7k views
-
-
நீ இல்லாத ... பொழுதில் ... நான் ....!!! நீர் இல்லாத இடத்தில் மீன் ....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன் உன் எண்ணங்களை... சுமந்து ... தவிர்க்கும் .... நான் .....!!! வலையில் சிக்கி தவிக்கும் மீன் .....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 2.6k views
-
-
முதுபெருந் தலைவர்கள் முன்னைநாள் முதல்வர்கள் வெட்டிப் பேச்சளக்கும் அரசியல் கனவான்கள் கோணங்கிகள் கோமளிகள் என்று வேற்று நாட்டவனிடமே சாட்டையடி வாங்கிய பழுத்த அரசியல் மேதைகள் களங் காணும் தருணம் இது... "பாதணிகள் கழிவு விலை *கொசு வலைகள் மலிவு விலை" விளம்பரங்கள் தூள் கிளப்பும் பிரசாரப் புறநகர்கள். கிட்ட நின்று பேசினால் எச்சிலால் உமிழலாம் என்ற பயத்தினால் பந்தல் வைத்து பக்கத்தில் வர மறுக்கும் பெருந்தலைமைக் கூட்டங்கள்.... மேடையேறும் நாடகங்கள் மீண்டும் தெருக்கள் தோறும். செருப்பால் எறிவார்கள் என்ற பயத்தினால் *கொசு வலையின் பின்புறத்தில் கூச்சலிடும் தலைமைகளே பதில் சொல்வீர் "நாளை பாதணிகள் போட்டுவந்தால் பாயுமா? உங்கள…
-
- 0 replies
- 805 views
-
-
வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய தனித்தலைபவனின் காலடிகளைத் தொடரும் நாரைகளும் மௌனம் கலைத்தேதும் பேசவில்லை 02 அன்று உன் முன்னே குழந்தைகளை துரத்திச் சுட்டழித்த ஹெலிகெப்டர்கள் இன்றுன…
-
- 0 replies
- 1.1k views
-
-
கல்லறை கருக்கள் கண்திறக்கும் காலம் காத்திருக்கின்றோம் வாருங்கள்.
-
- 0 replies
- 537 views
-
-
காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை காலத்தால் தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை காலத்தால் குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும் நின்று போர்களம் பார்த்தவன் உண்ட சோறு தொண்டை உள் நுழையு முன் நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர் இளவேனில் நாளில் உதிர்ந்தார் தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால் மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்குமையா ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால் தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர் நடந்த கால் தடமிருக்கும் தமிழ் மாந்தர் உள்ள…
-
- 3 replies
- 3.4k views
-
-
நானோ ஒரு கேடி.... வைச்சிருக்கன் தாடி....... வீணையதை வேண்டி போறேன் நானும் பாடி..... வேண்டுகிறேன் நான் கோடி.... ஈழமதை சாடி.... உலகம் எல்லாம் ஓடி.... வருகது என்னை தேடி........ சாக்கடையில் மாடி....... கட்டிறேன் நான் கூடி..... கேடு செய்யிறதில் நான் கேடி....... போவேனா நானும் வாடி.....??? ஈழ மக்கள் கட்சி..... இன்னல் செய்யும் கட்சி....... அதுக்கு இல்லை சாட்சி..... மக்கள் மதிக்கும் மன சாட்சி.... துனிஞ்ச மனம் எனக்கு.... மக்கள் பலம் எதுக்கு....??? உலகமதில் எனக்கு.... பெயரு ஒன்னு இருக்கு.... நான் துரோகி.......!!!
-
- 5 replies
- 2k views
-
-
நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்காகவே வாழும் வரை!
-
- 23 replies
- 7.1k views
-
-
எட்டடா தூரமில்லை - இனி முட்டுமெம் கைகள் வானை தட்டடா கைகள் சேர்த்து - எங்கள் வானிலே கொடியை ஏற்று தொட்டிடலாமோ பகைவர்- உயிர் தாயவள் மண்ணை யென்றும் முட்டவா வந்தான் மூடன் - வேங்கை மூச்சினால் அழிந்து போவான். கொட்டடா முரசு - எட்டு திக்கிலும் சேதி சொல்வோம் உருண்டிடும் உலகப் பந்தை ஒருமுறை நிற்கச் சொல்வோம். கட்டிலாப் புலமை பெற்ற - உலக கவிகளை கூட்டி வந்து மட்டிலாத் தீரம் செய்தான் - எங்கள் தலைவனைப் பாடச் சொல்வோம். பற்றினை விட்டு வந்தார் - புதுப் பரணிக்கு வழி சமைத்தார். இட்டிடும் தலைவன் ஆணை முடித்துயிர் தந்து போனார். பெற்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
'பூக்களைப் பறிக்காதே' என்கிறது எச்சரிக்கைப் பலகை! ஆனாலும் புற்றரை யெங்கிலும் பூக்களின் சிதறல்! காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர் பாவம் அதற்குப் படிக்கத் தெரியாது! ----இது ஒரு ஜப்பானியக் கவிதை...... எப்போதோ படித்தது....
-
- 10 replies
- 2.6k views
-
-
என் கவிதையை ரசிக்கிறாய் கண்ணீர் விடுகிறாய் காதலை வெறுக்கிறாய் உயிரே ...!!! என் காதல் வரிகள் எழுத்துக்கள் அல்ல -உன்னை நினைத்து எழுதும் ஆத்மாவின் உயிர் வரிகள் ....!!!
-
- 2 replies
- 631 views
-
-
காதலோடு நான் . . .01 வானத்து நிலவோ வடித்தெடுத்த பொற்குடமோ கானமயிலோ கவர்ச்சிமிகு தேவதையோ தங்கப்பதுமை ஒன்று தரணியில் வந்ததுவோ கோபுரக் கலசமொன்று கோதையாய் மாறியதோ வானவில்லொன்று நிமிர்ந்து இன்று பெண்ணானதோ கம்பன் காணமறந்த காவியப் புதல்வியோ எண்ணிலடங்கா வார்த்தைகளால் இழைத்துப்பின்னிய கவிதையோ கோதை இவள் யாரோ ? கோமகன் மகள்தானோ ? கோவலனை கொள்ளை கொண்ட மாதவி இவள் தானோ ? கண்ணெதிரே தோன்றியதும் கவிதை மழை கொட்டுகின்றதே பனித்துளி வீழ்ந்து புல்நுனி மருகுவதுபோல் பவளக்கொடி பார்வையினால் பாவிமனம் பற்றுகின்றதே ! பிரம்மனின் கைவண்ணத்தில் பிறந்த பொற்கொடியை புவியிலே வடித்துவைத்த சிற்பிகள் யாரோ ? அந்தரத்தில் பறக்கவைத்து அற்ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஒலி வடிவம் ------------------------------------- நெஞ்சில் ஓர் மூலையில் ஏதோவொரு சோகம் எனை அணைக்கும் உடம்பு சோர்வின் கைப் பிள்ளையாகும்! மனசு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யும் எதிர்காலம் கண்முன் விஷ்வரூபமெடுக்கும் தனிமையில் தத்தளித்து தாய் மடி தேடும் மனம் பொல்லாத கற்பனைகளால் இதயம் வெடிக்கும் தலை கோதி நெஞ்சில் முகம் சேர்த்து அணைக்க ஓருயிர் வாராதா என விழிகள் தேடும்! "எனக்கு மட்டும் ஏன் இப்படி" கண்முன் தெரியா கடவுளிடம் விசாரணை நடக்கும் கால் போனால் ஊன்றுகோல் மனசு உடைந்தால் என்ன உதவும் ? "நம்பிக்கை" என்ற பழகிப்போன பதிலில் சமாதானம் …
-
- 7 replies
- 1.7k views
-
-
,வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்? அன்னையே தாயே அழியா புகழ் கொண்ட அற்புதமே! ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில் ஈட்டி கொண்டு எழுத வைத்த ஈகைத்தாயே. வீரத்தின் விளை நிலமே விண்ணையும் விஞ்சிய வீரனை விடுதலைக்கு ஈன்றெடுத்த வேங்கைத்தாயே, பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை பார் போற்ற பிறப்பெடுத்து பாலூட்டி வளர்த்த பார்வதியே! பொக்கிஷமே புண்ணியமே காலத்தால் அழியாத காவலனாம் சூரியனை பெற்றெடுத்த கண்ணகியே,, சொர்ணத்தாயே,,, நீரையும் நெருப்பையும் நிழலாக்கி நிமிர்ந்து நின்ற நாயகியே, சோலை விருட்சம் அம்மா-நீ சொந்தம் நாங்கள் துயரம் கண்டாயோ-எம் நெஞ்சு கனக்க நிலையகன்று சென்றனையோ, காற்றானாய் உன் கண்மணிகள் கண்ணில் நீரை இறைத்து நி…
-
- 15 replies
- 1.1k views
-
-
மே 18....!!! எங்கள் தேசம் எரிந்து போனது.. எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்.. எங்கள் கனவுகள் கலைந்து போயின... எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது. எத்தனை நாட்கள் வலி சுமந்தோம்! எத்தனை நாட்கள் உயிர் கருகினோம்! எத்தனை நாட்கள் பசியில் துடித்தோம்! எத்தனை நாட்கள் கதறி அழுதோம்! துண்டுதுண்டாய் சிதறிப்போனது சின்னப்பிஞ்சு கண்முன்னே பிள்ளையின் உயிர் பிரிய கட்டியணைக்க கையில்லா அம்மா குண்டு துளைத்து குடல் கிழிந்து தொங்கி குற்றுயிராய் குழறி அழுதாலும் கண்கள் பிதுங்கி விழுந்து மரண ஓலம் எழுப்பினாலும் நின்று துயர் தீர்க்க நேரம் இன்றி உயிரை மட்டும் கையில் கொண்டு ஓடினோமே!!! முலையில் பால் வற்றி குருதி வடியும் அதையும் பசியால் பிஞ்சு குடிக்க வலியால்…
-
- 2 replies
- 954 views
-
-
கனவினைக் கொடுத்து தூக்கத்தைக் கெடுத்து பாதியில் செல்வாள் பாவை! பாதையைத் தொலைத்து பேதையை நினைத்து வீதியில் விழுவான் கோழை! சேலைகள் நினைத்தால்... சோலைகள் காய்ந்து பாலைகள் தோன்றும் வேலைகள் செய்திடும்! காலைகள் இருண்டு காரிருள் படிந்து வாழ்க்கையும் உருண்டிடும் கவனம்!!! ***எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது***
-
- 20 replies
- 1.7k views
-
-
பெண்ணிற்கு இலக்கணம் வகுத்தவன் அழுது கொண்டிருக்கிறான் ! பெண்ணையே தெய்வமென போற்றியவன் துடித்துக் கொண்டிருக்கிறான் ! பெண்ணையும் அவளின் அங்கங்களையும் விழி தராசுகளில் எடைபோட்டு களவாடப் பார்க்கும் கள்வர்களின் கைகளில் எப்போது தீப்பிடிக்கும்? நடந்தால் சிரித்தால் குனிந்து எதையாவது எடுத்தால் கூட போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில் ஓர் ஆணினம். இந்தியப் பெண்கள் அறிவில் - அழகில் வல்லவர்கள் தாம்! ஆனால்... நெறிதவறா சிற்பங்கள்! ஒவ்வொரு பெற்றோரும் பெண்ணைப் பிரசவித்து கூடவே ஒரு நெருப்பு வளையத்தையும் இட்டே வளர்க்கின்றனர்... பெண்ணினம் அடிமை என்பது பழையது ! பெண்ணினம் போர் வாள் என்பது புதியது ! ஓர் ஆணின் வாழ்வை விடவும் பெண்…
-
- 0 replies
- 342 views
-
-
பாரதியார் காதல் கவிதைகள் சொல்லும் ரசனை காதல் செய்வீர் காதல் செய்வீர் காதல் செய்வீர் 😀
-
- 14 replies
- 7.2k views
-
-
தமக்கென்றோர் மொழி தமக்கென்றோர் கலாச்சாரம் தமக்கென்றோர் வாழ்வு முறை தன்னை வடிவமைத்து தன் போக்கில் வாழ்கின்ற இனக் குழுமம் ஒன்றை இடையிட்டுப் பெருகிவந்த இன்னோர் இனம் வந்து இடித்துத் தன் காலுள் கண் முன்னே போட்டுக் கதறக் கொழுத்தையிலே அமுக்கம் தாளாமல் அதை எதிர்க்க அவ்வினத்தின் உள்ளே இருந்தொருவன் எழுதல் உலக விதி அவனின் பின் முழு இனம் திரண்டு மூச்சைக் கொடுத்திடுதல் எழப் போகும் ஓரினத்தின் இருப்பின் வரலாறு நீண்ட போராட்ட நெடு வெளியில் மண்ணுக்காய் மாண்ட வீரர்கள் மன வலிமை ஓர்மத்தை தூண்ட, துவளாமல் தொடர்கையிலே அவன் பற்றி இடைவெளியில் மனம் சோர்ந்து இடிந்தோர் விதையற்று வடிக்கின்ற விமர்சனங்கள் வாய் நா…
-
- 1 reply
- 612 views
-
-
மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை.. முள்ளிவாய்க்காலோடை எல்லாம் முடிஞ்சுது - இனி முதுகு சொறியும் நிலைதான் தமிழர் நிலை என்றிருந்தோம் தம்பியர் தூண்டி விட்ட திரியில் துயருற்றிருந்த - எங்கள் மனங்களில் மத்தாப்பு பூக்கின்றது மலரும் எங்கள் தேசம் என்ற மமதையில் நிற்கின்றோம். அள்ளி அணைத்து ஆதரிக்க எங்கள் அன்னை தமிழகம் இருக்கின்றது சுற்றி வரும் பகை யுடைத்து சுதந்திரத்தை பெற்றுத்தர - திலீபனின் வழியில் பல்லாயிரம் தம்பிகள் அங்கே விழி திறந்து விடுதலைக்காய் வழி திறந்து விட்டிருக்க வார்த்தைகள் ஏதுமின்றி மகிழ்கின்றோம் கந்தகக் களஞ்சியத்துள் வீழ்ந்திட்ட சிறுபொறிபோல் - அகிலத்தை கலங்கடிக்கும் அருஞ்செயல் கண்டு மீள நாம் துளிர்க்கின்றோம் கலங்கிக் கிடந…
-
- 10 replies
- 904 views
-