Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமக்கென்றோர் மொழி தமக்கென்றோர் கலாச்சாரம் தமக்கென்றோர் வாழ்வு முறை தன்னை வடிவமைத்து தன் போக்கில் வாழ்கின்ற இனக் குழுமம் ஒன்றை இடையிட்டுப் பெருகிவந்த இன்னோர் இனம் வந்து இடித்துத் தன் காலுள் கண் முன்னே போட்டுக் கதறக் கொழுத்தையிலே அமுக்கம் தாளாமல் அதை எதிர்க்க அவ்வினத்தின் உள்ளே இருந்தொருவன் எழுதல் உலக விதி அவனின் பின் முழு இனம் திரண்டு மூச்சைக் கொடுத்திடுதல் எழப் போகும் ஓரினத்தின் இருப்பின் வரலாறு நீண்ட போராட்ட நெடு வெளியில் மண்ணுக்காய் மாண்ட வீரர்கள் மன வலிமை ஓர்மத்தை தூண்ட, துவளாமல் தொடர்கையிலே அவன் பற்றி இடைவெளியில் மனம் சோர்ந்து இடிந்தோர் விதையற்று வடிக்கின்ற விமர்சனங்கள் வாய் நா…

  2. முன்னைக் கதைகளில் ஐம்புலன்கள் அடக்கி காட்டில் கிடந்தனராம் முனிவர் நாட்டு நடப்புக்களின் கதைபேச்சு அற்று ஐம்புலன்கள் ஒடுக்கி அவை நலிந்தடங்க முக்கிக் கிடக்கிறார் முன்பள்ளியில் புலமைப்பரிசிலி;ல் போட்டிப் பரீட்சையில் பல்கலைப் புலமையில் நிலத்தடியில் நீரிற்கு நடப்பது அறியா அறிவு விருது பெற்று வாழ்த்துப் பெற்று படபடக்கிறது பெருமைக்காற்றில் சி. ஜெயசங்கர் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115649/language/ta-IN/article.aspx

  3. முள்ளிவாய்க்கால் பரணி! கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமென்றனர் …

  4. Started by manthahini,

    எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உலகெங்கும் அன்னையர் தினம் அன்பான வாழ்த்துக்களுடனும் அழகான பரிசுப்பொருட்களுடனும் இனியநினைவுகளாய் ஆயத்தமாக எங்கள் தாய்மண்ணில் எப்படி நகர்கிறது? பத்துமாதம் சுமந்து பெற்று பகலிரவாய் கண்விழித்து கண்ணுக்குள் மணியாய் காத்து வளர்த்த மகன், நட்ட நடுநிசியில் வந்த கொடுங்கோலர் கூலிகளால் அடித்து உதைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட-அந்த கொடியநிகழ்விலிருந்து மீளாது துடித்து துவண்டு அழும் என் அன்பு அம்மா!-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உடைந்த உள்ளமும் உடையாத நம்பிக்கையுமாய் படைமுகாம்கள்தோறும் பதைக்கும் மனதுடன்-என் தம்பியை தேடி அலையும்-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உயிருடன் என் தம்பி மீள்வானா என இங்கிருந்து நான் தவிக்க, துள…

  5. சென்று வா இரண்டாயிரத்து எட்டே வென்று விட்டதாய் நினைத்தால் வெற்றி உனக்கல்ல என்பேன் பற்றி எரிவது தமிழ் ஈழக் கனவே! பொறுமையை இழந்தோம் தனிமையாய் தொடர்ந்தோம் இனிமையான வாழ்வுக்காய் தனி நாட்டைக் கேட்டோம்! பொறுக்காத நாடுகள் வெறுக்கவே செய்தனர் விடை தர மறுத்து தடையினைப் போட்டனர்! குனிந்ததும் குட்டு வாங்கியதும் வலி பட்டவர்க்கே வலிக்கும் எலி வளையானாலும் எமக்கு தனி வளை வேண்டும் என்றோம்! சிங்களம் வெங்களம் விரும்பியது கங்கணம் கட்டி தமிழினம் அழிக்க விரைந்து படை திரட்டியது ‍‍ உலகிடம் இரைந்து ஆயுத பிச்சை கேட்டது! சர்வமும் மயங்கி சர்வதேசமும் சோரம்போனது ஐ.நா.…

  6. குண்டுமல்லி தோட்டத்திலே குவிந்திருக்கும் மல்லிகையே - உன் கூட்டாளி நானிருக்கேன் குவளைமலரே கண்ணுறங்கு!! கைகொட்டி சிரித்திருக்கும் பட்டுமேனி பெட்டகமே யார் கண்ணும் படுவதற்குள் காந்தள்மலரே கண்ணுறங்கு!! ஈசானி மூலையிலே உலையங்கே கொதிக்குதம்மா போயி நானும் பார்த்துவரேன் பூந்தளிரே கண்ணுறங்கு!! பசும்பால் வாங்கிடவே பணமிங்கே போதலியே உலைத்தண்ணி ஊத்திவாறேன் மாந்தளிரே கண்ணுறங்கு!! கட்டுமரக் கப்பலோட்டி கடலுக்கு போன அப்பா பொழுதடைய வந்திடுவார் பூச்சரமே கண்ணுறங்கு!! அயரை மீனும் ஆரமீனும் அள்ளிக்கொண்டு வருவாரடி அதுவரைக்கும் பொறுத்திருக்க ஆரவல்லி கண்ணுறங்கு!! வாளைமீனும் வழலை மீனும் வலைபோட்டு பிடித்தமீனும் வட்டியிலே போட்டுத்தாற…

  7. சமூகச் சிந்தனையாளர் பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள் யாராகினும், அவரின் வழியொற்றி நீங்கள் வாழாதிருப்பின் உங்களுக்கு ஒன்று சொல்வேன் உங்களது வேலிக்குள் உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு எல்லா ஆடுகளுக்கும் சுதந்திரம் வேண்டி நீங்கள் ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம் எதுவென்பதை நானறிவேன். அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை அதுதான் அடைந்து கிடக்கிறது நான் என் செய்வேன் என்பவர்க்கு நானின்றொன்று சொல்வேன் உன் சொந்தப்பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் உன் ஆட்டுக்கு விடுதலை பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில் வேறெந்த ஆட்டுக்கும் நீ விடுதலை உபதேசம் செய்யாதே. விடுதலை பெற எண்ணும் ஆடுகளை வேட்டையாடும் நோக்கம் மட்டுமே உன்னுடையது என்பதை எவரும் கண்டு கொள்வார்கள். . முதலில் உன்பட்டியின் ஆட்டை, ஆட…

  8. நெடு நாளாய் கவிதைப் பக்கம் போகவில்லை. காரணம் கவிதை வரவில்லை. தமிழினத்தின் பரிதாப நிலைதான் அதற்கான காரணம். எரிகின்ற வீட்டில் குளிர்காய முற்பட்டது போல எல்லோரும் தலைவர்களாக முற்படும் அவலம் மனத்தை என்னவோ செய்கின்றது. விஜயதசமிக்காக ஒரு பாடலைப் பாடிப் பார்ப்போமென்று தோன்றியது அது கீழே- தொகையறா பிடி கழன்ற வெட்டரிவாள் மொட்டைக் கத்தி பெயரிழிந்த ஊர் பேயன் மந்த புத்தி அடி கழன்ற சட்டி அன்பற்ற தாய்மை அவனியிலே இன்றுலகத் தமிழர் சால்பு. சரணம் அட்டக்கத்தி வீரரெல்லாம் ஆண்டுப்புட்டாக- இனி அடுத்து வாற சந்ததிக்கும் அவுக தானாங்க முட்டாப் பயக எண்டு நெனச்சுப்புட்டாக தமிழன் மோசம் போன பத்தாதெண்ணு எண்ணிப்புட்டாக. கூத்தாடி நெள…

    • 0 replies
    • 609 views
  9. விடைபெறும் ஆண்டே விதைத்து விட்டு போகிறாய் பலவற்றை எம் வயல்களில்... அறுவடைக் காலத்திற்காய் காத்திருக்கும் வலிமையையும் விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் தந்துவிட்டு போ.... கண்ணீரின் கனதி சுமந்த காற்றும் கலைந்த கனவுகளின் ஓலங்களும் பேரிருள் ஏறிய உறைவிடங்களில் நிறைந்துபோக, ஏக்கங்களும் ஏமாற்றங்களும் யுகாந்திர காத்திருப்புக்களும் மௌனமாக வாழ்விடங்களில் நிலைத்துப்போக, இயலாமை சுமந்து விடை கொடுக்கிறோம். கருவழிந்த காலத்தின் குறியீடே... உயிர்ப்பினை ஒளித்துவிட்டு சாம்பல் பூசி அடங்கிக்கிடக்கும் கிளைகள் மீதினில் மோதட்டுமுன் ஊழியின் பெருங்காற்று. மக்கிப்போகாத எலும்புகள் மீதும் மண்தின்ற தசைத் துண்டங்கள் மீதும் இறங்கட்டுமுன் பிரளயம். இனி பகை கொண…

  10. Started by கவிதை,

    பூக்கள் பூப்பதற்கு காத்திருப்பதைப் போல உன் அழைப்புக்களுக்காக விழிகள் பூத்திருப்பேன்! இந்த உலகத்தில் பறக்கும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் என்னைச் சுற்றியே பறப்பதாய் உணர்வேன்... நீ என்னோடு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்! இத்தனை இனிமை இருப்பதாய்க் கேள்விப்பட்டால்... தேனீக்கள் உன்னை மட்டும் சுற்றியே வட்டமிடும்! நிலவும் உன்னைப் பார்க்கப் பூலோகம் வரும்! தென்றலும் உன்னைத் தேடி தெருத்தெருவாய் அலையும்! கடலலைகள் உன் காலடியில் தவங்கிடக்கும்! என்னைப் போலவே....!

  11. கனவு .! காண்பவை எல்லாம் காட்சிகள் அன்றி நிஜம் இல்லை அப்படி ஒன்று இருத்தால் உழைப்பு ஒன்று இருக்காது ..!! நான் .! நான் எனக்கு சொல்லிக்கொள்ளும் மந்திர சொல் எனக்கு நான்தான் என்பதே .. உலகம் என்னால் மட்டும் தான் முடியும் என்கிற திமிர் இந்த நினைப்புதான் உலகத்துக்கு.. என்னால் மட்டும் மாற்ற முடியும் என்ற நினைப்பு எனக்கு இதில் யாரு வலியவன் யாரு எளியவன் ......?????? பூ .! அழகின் ஆரம்பம் முடிவும் அதுதான் மாலையில் உதிர்த்து விடுவதால் ...!!! கோவம் .! ஏனோ எனக்கு அடிக்கடி வருகிறது கோவம் ஏழையை எவனாவது திட்டினால் உடன் வருகுது முரட்டு கோவம்... சிறு பிள்ளையை யாராவது கைநீட்டி அடித்தால் அக்கணம் வருகுது பாச கோவம்... என்னேருவனை கேலி பண்ணினால் வருகுது பழிவாங்க…

  12. இரவல் உணர்வுக் கவிஞனின் கண்ணீர்..... கவிதை - இளங்கவி.... இரவல் உணர்வுக் கவிஞனின் இதயத்து வலிகள் சில வரிகளாய்....... சுமங்களாவின் தங்கையின் சோகத்தில்... அமங்களமான எங்கள் தங்கைகளைப் பார்க்கிறேன்..... மாலைச் சூரியன் மறையும் நேரம் நம் தங்கைகளின் இதயங்களோ இடைவிடாமல் படபடக்கும்.... மரணத்தின் வாசலில் கழியப்போகும் பல மணி நேரங்கள் வந்து நிற்கும்..... நிமிடங்கள் செல்லச் செல்ல அவள் நிழலே தன்னைப் பயமுறுத்தும்.... நீண்ட ஓர் இரவுக்காய் அவள் நெற்றியோ வியர்த்து நிற்கும்..... எம் தங்கைகளின் அம்மணக் கிடக்கைகள்.... அவன் மதுவெறியில் கிடக்கும் சந்தனப் படுக்கைகள்.... தற்காலிக விடுதலையின் பின் அவள் உடையெல்லாம் இரத்தங்கள்...... போருக்கு…

  13. Started by Nellaiyan,

    ... சுட்டது ...

  14. உன்னை முத்தமிட எனக்கு விருப்பமில்லை என் காதலை சத்தமிடுவதிலும் எனக்கு விருப்பமில்லை தொடுதலுக்காக மட்டும் காதலில்லை என்பதில் என் மனம் என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை மறதியை வெல்லும் ஆற்றல் உன் நினைவுக்கு மட்டும் தானடி உள்ளது சொல்லாமலேயே நீ சொல்லி விட்டுப் போன அத்தனை வார்த்தைகளும் உன் மௌனத்திற்கு இன்றும் அர்த்தம் சொல்லிக் கொண்டு தானிருக்கிறது உன் கண்கள் மட்டும் ஏனோ அதை மறுத்துக் கொண்டுதானிருக்கிறது எது வரை …என்பதில் தான் எனக்கும் உனக்கும் நடக்கிறது ஒரு காதல் யுத்தம் இதில் தோற்பதிலும் சுகம் இருக்கிறது என்று நினைக்கிறது இங்கு ஓர் மனம். http://vinmugil.blogspot.fr/2012/12/blog-post_29.html

  15. கௌதம புத்தருடன் - ஒரு கவிதா நேர்காணல் ஜெ.கி.ஜெயசீலன் நான்: தார்மீகப் பெரு நெறியைத் தக்கபடி போதித்து யார் மீதும் பகையில்லா யாகத்தைச் செய்தவனே! உனதடியை வணங்கி வரும் உன்னரிய புத்திரர் தாம் மனதறியச் செய்துவரும் மா கொடுமை அறியாயோ! ஊருறங்கும் நள்ளிரவில் ஊளைவிடும் 'ஷெல்' நரிகள்! போருறங்காப் பூமியிதில் பொழுதெல்லாம் குண்டு மழை நீ வளர்த்த கருணையினை நெஞ்சத்திற் பேணாமல் தீ வளர்த்த தென்னிலங்கை திருந்த வழி சொல்வாயா? புத்தர்: அன்பார்ந்த தமிழ் மகனே! அவலத்தின் உள்ளே மண்பாய்த்து அழிகின்ற மடமை பல கண்டேன்! போதி மர ஞானமதைப் போதித்தும் என்பக்தர் நீதி தரவில்லையெனும் நீசத்தாற் துடிக்கின்றேன்! கொல்லாமை பேரறமாம்; குரலெடுத்துக் கூறிய என் சொல்லாலே ஏமாற்றிச்…

  16. விடியல் விரியும் உன் தோழமைப் பேச்சு இவ்வளவு விரைவில் சுருங்குமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை..! உன் அரிமா மூச்சு இத்தனை முந்தி அடங்குமென்று எள்முனை அளவும் நம்பவில்லை..! செங்கொடியில் ஆடிய உன் உயிர்க்கொடி நின்று போனது கடைசி நொடி..! தத்துவ நூல்களைப் படி..படி..எனத் தரமான நூல்களை தந்தாய் தொடர்ந்தபடி..! உன் தடம் பார்த்து நாங்கள் இனி நடப்பதுதான்...எப்படி..? இரும்பை உருக்கிய எக்கு நெஞ்சம் தோழமை உறவுகளைத் தூக்கிச் சுமந்த மார்பு..! சிவா...சிவா...! எல்லோருக்குமே சிவா போல...ஆக அவா...! எப்படி மறப்போம் தோழனே..! முறுக்கேறிய முரட்டுக் காளை நீ...! இருட்டைப் போர்த்திய …

  17. சந்தையில் மலியும் வரை விந்தையான உள்ளத்தில் உறங்காதிருப்பவை

  18. உனக்கும் எனக்குமான இறுமாப்பு ஏகாந்த வெளிதனில் எல்லைகளற்று விரிந்திருந்தது அதுவே இன்று நிட்சயம் அற்றதாய் நம்பிக்கையற்றதாய் நாளும் நடுவானில் நூலறுந்த பட்டமாய் நரகமாகிக் கொண்டிருக்கிறது எந்நேரமும் உச்சரிக்கும் இரகசிய மந்திரமாய் மனம் ஏக்கங்கள் கண்டு இன்றும் வாழ்கிறது ஏதிலியாய் எதுவுமற்று வாழ்தலற்ற வகையின்றி வரம்புகள் கடந்தோம் தான் வகை தெரியா மூடர்களாய் வெற்று வெளியில் நாமின்று வேலிகள் எதுவும் இன்றி விழுதுகள் கூட இன்றி வேடர்களின் வில்லாய் நாம் வசமானோம் வரப்புகள் இன்றி விதியின் சதிதானா வீழ்ந்தது மதியின் தவறிய கணக்காய் மனிதம் தொலைத்த மனம் மிச்சத்தின் எச்சங்களாக எங்கும் எண்ணக் கணக்குகள் தவற எதிரிகள் எண்ணற்றுப் போக எதுமற்றவர்களாய் நாங்கள்…

  19. கடவுளைத்தேடி நீ ஆலைய கருவறைக்குள் அமைதியாய் போய்விட்டாய், அம்மா என்ற கடவுள் என்னோடு இருப்பதால் உன்னைத்தேடியே ஆலயம் வந்தேன். முகம் கொடுத்து பேச முடியாதவனாய்-உன் பாதணிகளுக்குள் மலர் வைத்துப்போனேன். நீ கடைக்கண்ணால் கண்டதையும் நான் கண்டேன், வீதியோர குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு நீ சென்றபோது மலருக்கு தெரியாது உன்னக்கு என்னை பிடிக்காதென்று இப்போதெல்லாம் நான் வெளியே போவதில்லை. உன்பிம்பம் விழுந்த என் வீட்டுக்கண்ணாடியை சமையலறையில் மாட்டிவிட்டேன். உன் நினைவுகள் என்னை தீண்டும்போது சமயலறைக்கு ஓடிவிடுவேன், உன்பிம்பம் பட்ட கண்ணாடி முன்னே கண்ணீர் வடிக்க, அம்மா கண்டுவிடுவாள் என்று வெங்காயம் உரித்த படி நான்......

  20. கனிவான கன்னி என்று உன்னை நினைக்க நீ, என்னை கண் கலங்க வைத்தாயடி. உதிரம் எல்லாமே உனக்காக என்றிருந்த என்னை, உயிரோடு வதம் செய்தாயடி . ஒரு முறையேனும் உன் இன்முகம் காட்டி கனிமொழி கேட்க நான் , ஏங்கியிருந்து , வாடியிருந்து , இளமைதனை இழந்து ஏமாந்து போனனடி. என்னுயிர் நீ என்று தன்னுயிர் பாராது கண்ணீருடன் இருந்த என் தாயன்பினை நான் உணர்ந்து , பாசம் உள்ள அன்னையவள் அன்பு மட்டும் எனக்கு இப்போ ஈசன் தந்த சொர்க்கமடி. உன் நினைப்பு எனக்கு தந்தது வெறும் வெட்கமடி . சிந்தை கலங்குதடி எந்தன் சிறுபிள்ளை தனத்தை எண்ணி …..கலை http://www.siruppiddy.net/?p=7317

  21. எனக்கும் உனக்கும் நீதி சொல்லும் பிரதம நீதி தேவதை இன்று நீதி கேட்டு புத்தரிடம் தமிழர்களுக்கு நீதி மறுக்கும் புத்தர் கண் திறப்பாரோ ?

    • 6 replies
    • 603 views
  22. பெருவானில் புகழோடு உலாவரும் நிலவே பெருந்துயரில் மாய்கிறோம் காப்பாற்ற வாராயோ வெள்ளியும் விண்மீனும் உனக்கு வழித்துணை வெறியரும் கயவரும் எமக்குப் பெருவினை கதிரவன் வந்ததும் உனக்கு விடுமுறை கடைசி மூச்சுவரை எமக்குண்டோ விடுதலை இருண்ட வானுக்கு நீவந்து ஒளிதந்தாய் இருண்ட எம்வாழ்வுக்கும் சற்றேனும் வழிகாட்டு பிறநாடுகளைக் கெஞ்சினோம் புறமுதுகு காட்டினர் பிறைநிலவே நீயேனும் உதவிக்கு வாராயோ வேண்டினோம் தெய்வங்களை வெறுமனே இருந்தனர் வெண்ணிலவே நீயேனும் காப்பாற்ற வாராயோ http://gkanthan.wordpress.com/index/eelam/kaappaarru/

  23. அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு! உள்ளத்தில் உறைந்தவளே றிசானா..! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே! உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா..? எல்லாம் முடிந்து விட்டது. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை! என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம். றிசானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ.. அதைக்கூடத் தாங்காமல் உன்பெற்றோர் தீயில் விழுந்த புளுவாய் தீய்ந்து போனதை நாம் அறிவோம். இப்போது இறந்துபோனதை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..! உன் மரணச் செய்தி கேட்டவுடன் தாய் மொழிந்த வார்த்தைகள் 'எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?' இன்னும் …

  24. நிலவே .... உன்னை உவமையாக கூறி .... காதல் செய்தும் காதலரை .... வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..? உன்னையே உவமையாக கூறி .... காதலியை ஏமாற்றிய .... காதலனை சுட்டெரிக்க .... ஒருமுறை வருவாயோ ..? நிலவே உன்னிடம் .. நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..? தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....! பூலோகத்திலோ உன்னால் ... நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!! நிலவே ஒருமுறை வருவாயோ .. சூழலை மாசுபடுத்தும் இவர்களை .... எச்சரிக்க மாட்டாயோ ...? நிலாவில் பாட்டி இருக்கிறார் .... இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!! பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ... வான் வெளி தூசிகளே அவை .... நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...? மூடநம்பிக்கையை உடைத்தெறிய ... ஒருமுறை இறங்கி வருவாயோ ...?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.