கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கடலின் கரையில் மணிலில் மாளிகை கட்டிட விரும்புகின்றேன் கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக் காதல் கொள்ளுகின்றேன் உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி உலவிட விழைகின்றேன் ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும் உரத்தை வேண்டுகின்றேன். வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க, வேட்கை கொள்ளுகிறேன். நன்றி கவிஞர் மீரா
-
- 1 reply
- 601 views
-
-
1970ல் எழுதிய என்னுடைய இரண்டாவது மூன்றாவது கவிதைகள் இவை . இரானுவ புவியில் ஆர்வத்தில் ஈழத்து காடுகளைத் தேடி அலைந்தபோது எழுதியவை. அது வன்னி நமது விடுதலை வரலாற்றின் மையமாகாத காலமாகும். விரக்தி கனலும் கடும் கோடையில் மாரிதனைப்பாடும் வன்னிச் சிறுவன் காலமுள்ளளவும் ஈழத்தின் மீண்டும் நிமிரும் நம்பிக்கையின் படிமமாக இருப்பான். 1 நம்பிக்கை துணை பிரிந்த கயிலொன்றின் சோகம் போல மெல்ல மெல்ல கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை மாலைப்பொழுது அது. என்ன ருகே வெம் மணலில் ஆலம்பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன் என்றாலும், எங்கோ வெகு தொலைவில் இனிய குரல் எடுத்து மாரி தன்னைப் பாடு…
-
- 2 replies
- 601 views
-
-
காதல் சிட்டுக்கள்..... கவிதை - இளங்கவி அந்தி மாலைப்பொழுது மங்கிய மின்னொளியில் உணவகமொன்றில் ஜோடியாய் இரு காதல் சிட்டுக்கள்.... காம்புடன் குடிய கருஞ்சிவப்பு ரோஜாவை நீட்டியது ஆண்புறா... ரோஜா கொடுக்கிறாய் ஆனால் ஏன் அதை அழகில்லாத காம்புடனும் முள்ளுடனும் தருகிறாய் என்றது பெண் சிட்டு.... அழகில்லாத இந்தச் செடி அழகிய ரோஜாவை எப்படி தாங்கி நிற்கிறதோ நானும் உன்னை என் தேவதைபோல் என்றும் தாங்கி நிற்பேன் என்று சொன்னது ஆண் சிட்டு.. அவன் காதல் வார்த்தையில் மயங்கிய பெண் சிட்டு தன் இரு கைகளாலும் அவன் முகத்தைத் தழுவி ஒட்டிய முத்திரை போல் தன் இதழைப் பதித்தாள் அவன் இதழில்.... முத்தத்தின் சில நிமிடமும் சில யுகங்…
-
- 0 replies
- 601 views
-
-
பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய் 71 Views பிரம்மஞானியின் பாதச்சுவடுகள் பாதை காட்டிடும் புறப்பட்டு வா…. ஈழத்தை நோக்கிப் பயணித்த பாதங்கள் இடையினில் நிக்குது பாரடா இளைஞனே தேசத்தின் குரலாய் அகிலத்தில் ஒலித்த புரட்சிக் குரலது கேட்குதா உனக்கு… ஈரேழு வருடங்கள் கடந்திட்ட போதும் ஓயாமல் நின்று அழைக்குது பாரு அன்ரன் பாலசிங்கம் அண்ணணாய் … அரசியல் ஆசானாய் … தத்துவ மேதையாய்த் தமிழீழக் கனவுடன் ஓயாது உழைத்தவர் இன்றைக்குத் தானடா ஓய்ந்து போனதாய்… ஈரேழு வருடங்கள் கடந்து போகுதே… எண்ணத்தில் ஏற்றிப் புறப்பட்டு வா! தலைவரின் கரத்…
-
- 3 replies
- 601 views
-
-
போகிறார் பொறிஸ் ஜோன்சன் 🇬🇧 பிழை செய்த பொறிசார் கதிரையை விட்டு போகிறார் ஏதோ சில ஜனநாயகம் இங்க இருக்கு ஆனால் இலங்கையில் அத்தனை சனமும் கத்தியும் என்ன கோத்தா கோ கோம் என்று சொல்லியும் என்ன இயமன் தான் வந்தாலும் இவர் போகாராம் இன்னும் இருக்கிறார் கோத்தா இலங்கையை தின்ற படி இறுக்கிக் கதிரையை பிடித்தபடி அங்க ஏது ஜனநாயகம். பா.உதயன் ✍️
-
- 7 replies
- 600 views
-
-
நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ http://thesakkaatu.com/doc1704.html
-
- 2 replies
- 600 views
-
-
[size=5]ஆணிவேரை வாந்தியெடுத்த அகண்ட மரங்கள்... [/size] அபகரிக்கப்பட்ட சிட்டுக்குருவியின் பூமியில் குருதி வார்த்துக் குருதி வார்த்து வளர்க்கப்பட்ட பெருமரங்களின் அகண்ட நீழலின்கீழ் கழுத்தில் ரை சுருக்கிக்கட்டியபடி ஞானசம்பத்தக் கூத்தாடிய கவிஞர்களெல்லாம் காணாமற் போயிருந்தனர் கொஞ்சக் காலமாய் கல்லெறி விழுந்து கலைந்தோடிய இலையான்கள்போல் இவர்களன்றோடிய நாட்கள் நினைவிருக்கிறது நன்றாயின்னமும் சிட்டுக் குருவிக்கு. மேற்குத் திசையில் வெடிச்சத்தம் கேட்ட மேதினத் தோர்நாள் தான் அது. சஞ்சீவி இலைகளில் தோரணங்கட்டி அகண்ட மர நிழலில் கடை பரப்பி கதை கவிதை ஒப்புவித்த காலங்கள் போட்டது போட்டபடி கிடக்க, தலைதெறிக்க ஓடிப்போய் வலுத்தவர் வாலில் நூல…
-
- 0 replies
- 600 views
-
-
பிரிவு பூக்கள் உதிரும்போது காம்புகள் அநாதையாகின்றன... ஒய்வு ஒவ்வொரு இறகையும் கோதிவிடுகையில் உதிர்ந்து போகிறது பறவையின் களைப்பு... கவலை துரத்தில் மைதானத்தில் புள்ளி புள்ளியாய் கால்பந்தாடும் சிறுவர்கள் யன்னலோரம் கவலைகளில் இளமையைத் தொலைத்துவிட்டு நான்.. மதம் எல்லா வீதிகளும் தொலைந்து போகின்றன நெடுஞ்சாலையில்... மரணம் ஒவ்வொரு மரணத்திலும் முற்றுப்பெறுகிறது காலம் எழுதிமுடித்த ஏதோ ஒரு அத்தியாயம்.. முயற்ச்சி மின்மினிகள் போராடுகின்றன இரவை எரித்துவிட.. மௌனம் காற்றின் சலனங்களில் கலைந்து போகிறது மரங்களின் மௌனம்..
-
- 2 replies
- 600 views
-
-
வனக்கம் என்னுடன் வேளை பார்க்கும் நபர் இவ் வசனத்தை கவிதை நடையில் தமிழ் மொழியில் எழுதி தருமாறு கேட்டுகொண்டார். கவிதைகள் எழுதி எனக்கு பழக்கமில்லை. யாராவது இதை கவிதை முறையில் எழுதி தந்தால் சந்தோசம். அன்புடன் நன்றி All you need is love /////////////////////////////////////////////////////////// God grant me the serenity to take things added which I can not change. The courage to change things that I can change. and the wisdom to distinguish one from another. ///////////////////////////////////////////////////////////////// The art is in the eye of the viewer ///////////////////////////////////////////////////////// www.t…
-
- 0 replies
- 599 views
-
-
கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து களிப்புடன் மிதந்தது. எம்; மக்களைக் கொன்றவரை நான் கொன்றேன். என் இனம் விடுதலை பெறும் வரை நான் சாந்தியடையேன் என சபதம் எடுத்துச் சத்தியம் செய்தது. ராசபக்சாவின் இரத்தப் பிசாசுகள் முள்ளி வாய்க்காலை முற்றுக்கையிட்டு தமிழரின் இரத்தத்தால் தனக்குத் தானே அபிசேகம் செய்த வேளை பதபதைத்துத் தவித்து பற்பல ஆன்மாக்கள் கிழம்பின. எங்கள் தவிப்புப்போல், எங்களை அழித்தவன் தவிப்பான்; இதுதான் நியதி எனச் சாபம் போட்டு, துயிலும் இல்லத்தை சுற்றிய ஆன்மாக்களைக் கட்டித் தழுவி தங்கள் தவிப்பைக் கொ…
-
- 0 replies
- 599 views
-
-
ஆமணக்கும் நெருஞ்சியும் பூவரசும் பனங்கூடல்களும் இயல்பிழந்து போக அரசமரங்கள் எழில் கொள்கின்றது, மின்குமிழ்களின் பின்னும் தொலைபேசிக் கோபுர அடிகளிலும் தொடரூந்து தண்டவாள இடைவெளிகளிலும் யாருமறியாமல் நிறைந்துகிடக்கிறது பேரிருள் சூழ்ந்த மௌனமொன்று.. வீதிகளும் விளம்பரத்தட்டிகளும் விடுதிகளும் வங்கிகளும் வடுக்களின் மேல் வர்ணம் பூசிப்போக, அடிப்பிளவுகளில் உயிரடங்கி வெதும்பிக் கிடக்கிறது தலைமுறைக்கனவு கிராமத்து முனைகளில், சுடுகுழல்களில் ஒளிந்திருக்கும் குறிகள் விரகம் தீர்க்கும் வன்மத்துடன் அலைகின்றன. நகரத்து ஒழுங்கைகளில் தேரவாத காவிகள் தம்மபததின் பக்கத்தில் இனவாதத்தை எழுதி ஓதுகின்றனர். அதிகாரங்களும் அடையாளங்களும். நிர்வாணிகள் மீது குறிகளைப் புதைத்துவிட…
-
- 2 replies
- 599 views
-
-
அழகிய வன்னிக்காடு அழிந்து விடவில்லை அதன் விதைகளை சுமந்து திசை எங்கும் பறக்கின்றன பறவைகள் முள்ளிவாய்க்கால் வற்றி விடவில்லை மேகமாய் வானத்தில் நிறைந்திருக்கின்றன முல்லை பூக்கும் உட்சி தளைக்கும் யாழின் இசை உலகம் கேட்கும் காந்தள் வாசம் காற்று மணக்கு புலிக்கொடி ஏந்தி திசைகள் நடக்கும் !!! (முகநூல்)
-
- 1 reply
- 599 views
-
-
சேய்களைக் காத்த தாய். வீரமங்கை செங்கொடி |சீமான் | தமிழ் தேசியம்
-
- 0 replies
- 599 views
-
-
இன்று வரைக்கும் அழுகின்றோம் எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன் எங்கள் முற்றங்களில் ஓடி விளையாடிய குழந்தைகள் இன்று உடல் சிதைந்த புகைப்படங்களாக பார்க்கின்றோம்... புள்ளிக் கோலமிட்டு பிட்டு அவித்து ஊட்டிய அம்மாவின் கையில்லை -இன்று தோளில் சுமந்து பள்ளிக்கு கொண்டு விடும் அப்பாவுமில்லை... கொடியேற்றி கொண்டாடினார்கள் நாங்கள் படங்குக்குடிசையில் திண்டாடிய போது சிரித்தார்கள் எங்கள் தேசம், நாங்கள் வாழ்ந்த சொர்க்க பூமி சுடுகாடாய் தெரிந்த போது மானமென்ற ஒன்றுக்காய் மடிந்த பெண்ணின் உடலை நிர்வாண படுத்தி புகைப்படங்கள் எடுத்து புன்னகைத்தார்கள்... உயிர் தப்பி வந்த பெண்களை தெரியாத பாசையில் ஏசினார்கள் அடித்தார்கள் , உதைத்தார்கள் தங்கி…
-
- 0 replies
- 598 views
-
-
வேலிப் பொந்தினில் பிறந்த நேசத்தில் கருக்கொண்டவள் வைக்கறைப் பொழுதினில் வைத்தியசாலையில் நன்கே பிறந்தவள். அழகு பெயரும் சூட்டி அடுக்குச் சட்டை போட்டு கொண்டாடிய பிறந்த நாட்கள் பல களிப்புறக் கண்டவள்..! தங்கத் தட்டினில் பல்லுக் கொழுக்கட்டை அவிச்சுக் கொட்ட இன்புற்றவள்.. மங்கையாய் பருவமடைந்த வேளையதில் பல்லக்கில் பவனி வந்தவள்..! அந்நிய நாடுகளில் அதிசய வாழ்க்கை தந்திட கண்கவர் கள்வர்கள் படையெடுத்த போதினில் அழகு கன்னியாக வீதி வலம் வந்தவள்..! தேசத் தாயவள் அவதி கண்டவள்.. நொடிப் பொழுதினில் உந்தித் தள்ளிய தேவையின் வேகத்தில் வேங்கையாகி பாய்ந்து நின்றவள். தாய் நிலம் தின்ற சிங்களப் பாசறை நொருக்கி வீழ்ந்தவள்.. மாவீரர் வரிசையில் நிமிர்ந்து நின்…
-
- 0 replies
- 598 views
-
-
அன்னை என்பவள் உன்னை பத்து மாதம் சுமந்து நீ பிறந்த பின்பு தன்னோட இரத்தத்தயே குடுத்து வழத்து விடுவார் தந்தை என்பவர் தோழாளாக நின்று அன்பு காட்டி அரவணைத்து வழி காட்டி வழத்து விடுவார் உன்னை.. இருவரும் கனவுகழுகளோடும் கர்பனையோடும் பிள்ளை தங்களை பர்ப்பான் என்று இருப்பார்கள் ஆனால் பிள்ளை நீயோ அவர்களை ஒட வைப்பாய் முதியோர் இல்லத்துக்கு சுஜி நண்பி எழுதினது
-
- 0 replies
- 597 views
-
-
ஈமத்தாழி - கவிஞர் தீபச்செல்வன் மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறிக்கின்றன தடைசெய்யப்பட்ட முகங்கள் சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்…
-
- 0 replies
- 597 views
-
-
-
- 1 reply
- 597 views
-
-
(அடியேனுக்கு கவி மணத்துக்கும் வராது, இரசித்தவைகளை கத்தரித்து காவி வரமட்டும் முடிகிறது.)
-
- 0 replies
- 596 views
-
-
வீர வேலன் எங்கள் தோழன் ஊருக்கு நீ பாலகன் வீரர்களுக்கு நீ மாவீரன் கன்னி வெடிகளை தாண்டித்தாண்டி தான் நீ நொண்டி விளையாடினாய்... கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி நீ பந்து விளையாடினாய்.... பதுங்கு குழிகளுக்குள் மறைந்து கண்ணாமூச்சி விளையாடினாய்... நீ விளையாடிய விளையாட்டையும் கொரில்லா பயிற்சியாக ரசித்தார் உம் தந்தை உலகத் தமிழ்த் தந்தை... கையில் கொடுத்த பிஸ்கட்டுகளையும் நெஞ்சை துளைத்த குண்டுகளையும் ஒன்றாகவே பார்த்த வீரன்... வயிற்று பசிக்கு பிஸ்கட்டையும் மார்பு பசிக்கு குண்டுகளையும் உண்ட வீரன்... நீ! பூக்களின் தேசத்தில் போர்க்களம் புத்தன் கை பிடித்தே யுத்தம் செய்த ஆரிய அரக்கன்... புத்தமும் காந்தியமும் கை கோர்த்தே பாலச்சந்த…
-
- 1 reply
- 596 views
-
-
ஒற்றை வார்த்தை வேலை முடித்து மாலை வேளையில் சாலை நெரிசலில் சிக்கித் தவித்து விரையும் வண்டியில் வீடு விரைந்து இருட்டும் பொழுதிலே கட்டியணைத்து நெஞ்சில் புதைத்து முத்தம் கொடுத்து ஆரத் தழுவி உச்சி மோர்ந்து உள்ளம் குளிர என் செல்லக் குழந்தை சொல்லி அழைக்கும் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை களைப்பும் அமுங்கிப் போகும்
-
- 0 replies
- 595 views
-
-
அம்மா தாயே உன்னை - உன் அன்பு மகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, பேஸ்புக்கில் அவள் பற்றி அடிக்கடி கவிதைகள் ! ஊரெல்லாம் அவள் பற்றி ஏதேதோ பேசுவேனம்மா, ஒரு வேளை உன்னை - உன் ஒத்தைமகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, காதலின் வலி கொண்டு கண்ணீர் வடிப்பேனம்மா உன்னை நினைத்து நான் அடிக்கடி சிரிப்பேனம்மா, ஒரு வேளை உன்னை - உன் மூத்த மகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, நீயும் நானும் ஒன்றம்மா நீயின்றி நானேது பெத்தம்மா உன் மகன் காதல் செய்தால் உனக்கேதும் கஷ்டமா? மரணம் ஒன்றில் தானம்மா - உன் செல்லமகன் உன்னை மறப்பேன் அன்று என்னையும் தான் மறப்பேன், மன்னித்து விடுவாய் அல்லவா???
-
- 2 replies
- 595 views
-
-
நெருடல் தந்த அகச் சிக்கல் பூமிப் பந்தில் புதியதோர் உலகம் வாரிச் சுருட்டிய மன அழுத்தம் நெம்பி மனமது விகல்பி நைந்து போயினவாம் நமதான வாழ்வாக! விரும்பிக் கேட்ட நிலையா? இடர் நீயாகத் தந்த வாழ்வாச்சு! உந்தன் பிறப்பு சாசுவதமாயின,; எந்தன் வாழ்வு அசுவதமாவோ? எமதான இறப்பில்,அதுவான இழப்பில், உமதான வாழ்வு சிறப்பாகும் என்ற நினைவுன்னை, சிதைவாக்கும் உண்மை சிந்தை கொள மறவாதே! உனதான வாழ்வுரிமை எமக்கானதுமாகும் இதை நீ மறுக்க கறுப்பாகும் உன் வாழ்வும்.; எமதான நிலத்தில் ஏகமாக நீயா? நமதான உரிமை நாதியற்று போமா? ஆனதான வாழ்வே ஆதியற்று போமா? வருடல் என்பது உனதான ஆத்மா! மருகல் ஒன்றே தமிழனவன் வாழ்வா! விரிதல் ஒன்றே எமதான ஆற்றல், பிரிதல் ஒ…
-
- 0 replies
- 594 views
-
-
ஹைக்கூக்கள் 10 பார்த்து சிரித்ததால் முறிந்தது அடுத்த வேலியின் பூவரசந்தடி மங்கலம் பாடிக்கொண்டிருந்தாள் மனைவி மங்களம் தலையாட்டிக்கொண்டிருந்தது வேலியில் இருந்த ஓணான் இராணுவத்தால் வெட்டப்பட்டிருந்தது வேலி அழகாய் தெரிந்தது பக்கத்து வீட்டு கிணற்றடி இற்றுப் போனது கூரை சிரித்தன விண்மீன்கள் நீ தூங்கியதால் நான் தூங்கவில்லை குறட்டை. விரல்களின் நளினத்தால் விளைந்தது நல்ல இசை நடனமாடியது குழந்தை. நிலவில் கூட மேடுபள்ளமுண்டு இல்லை உன்முகத்தில் மேக்கப். வல்வையூரான்.
-
- 0 replies
- 594 views
-
-
சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு… என் அப்பாவைக் கொன்று எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு. அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில் நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்… இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன். • ஆனால், துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ, குறித்த நேரத்தில் வராமல் கால்மணி நேரம் தாமதித்தாலும், தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ எனக்குப் புலப்பட்…
-
- 1 reply
- 594 views
-