Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் கண்ணனே நான் உனக்காக எதையும் விட்டு குடுப்பேன் நான் எவருக்காகவும் உன்னை விட்டு குடுக்க மாட்டேன்......

  2. [size=5]சாம் பிரதீபன் [/size] [size=5]முழு வடிவம் [/size]

    • 0 replies
    • 462 views
  3. நீ என்னை பார்க்காதே, என் மனம் உன்னை காணாது! நீ ஒன்றும் சொல்லாதே, என் உள்ளம் கேட்காது! கண்முன்னே மறைந்தாயே, கானல் நீர் போல.... உயிர் போகும் நேரத்தில் காண கண் துடித்திருக்கும், உள்ளம் இளகுதடி உன்னை காணமல் போனதற்கு! வராமல் போனதற்கு மன்னிப்பாயா.... தொடரும் தோல்விகளாய், துரத்துதடி ஞாபகங்கள். மாறி போன வாழ்க்கையில், மறந்து போன நினைவுகள் வாழ்ந்த வாழ்க்கையே மாயமாய் போன பின் வாழ்க்கையை துறந்து விட, வயது என்னை தடுக்குதடி! முற்றும் துறந்து நான் முனிவனாய் மாறினால். அங்கும் நீ அமர்ந்திருப்பாய் அம்மன் சிலையாக... வல்லக்கோட்டை முருகா வல்லமை தாராயோ.... சந்திரிகா தேசம் தமிழ் கூடல்.

  4. மாசி வந்தால் மனசில் ஒரு படபடப்பு .. மயங்காத மங்கை மனதை உடைக்க முன் .. மறுபடியும் போட்டுருவம் ஒரு விண்ணப்பம் ... கண்ணே என்று தொடங்கவா ;இல்லை பெண்ணே ... என்று பழைய பல்லவி பாடவா ,என் செல்லமே .. எல்லோரும் தாமரைக்கு ..ரோஜாக்கு ஆசைப்பட ... நான் மட்டும் செந்தாமரைக்கு ஆசைப்பட்டது தப்பா .. சேறு உன்னை சுற்றித்தானே இருக்கு உன்னில் இல்லையே .. உன்னை பறிக்குவரை என்னிலும் ஒட்டி பிடிக்கும் .. உன்னை கைப்பற்றி விட்டால் நான் கழுவி விடுவேன் .. உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி .. காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் .. என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் .. என்னை கைகழுவி போகாதே மழை மேகமே ...நான் நெருப்பை உண்ணும் கோழியே உனக்கு கட்டுவேன் தாலியே .. ஜா…

    • 11 replies
    • 1.2k views
  5. தாய்மானம் காத்த தங்கத் தனயர்களே! தமிழ்த் தாயின் தன்மானம் காக்கவெனத் தம்முயி ரீய்ந்த சான்று தனயர்களே! அமிழ்தினு மினிய அன்புச் செல்வங்களே! ஆற்ற வியலாத் துன்பக் கடலிலெமை அமிழ்த்தி மறைந்த இன்னுயிர் மறவரே! ஆணி வேரென உறுதியிற் றிளைத்துக் கமழும் தமிழினத்தின் மணத்தை நன்றே காசினியிற் காட்டிச் சென்றகன வான்களே! முள்ளி வாய்காற் களமுனை தனிலே முடிவாகிப் போனீரென முழங்கி மகிழ்ந்து அள்ளி இனிப்பினை அளித்துச் சிரித்து ஆன்றவெம் மினத்தின் மானம் பறித்து எள்ளி நகையாடி ஏதிலிக ளாக்கி எக்காள மிட்டு இன்புற் றோர்அழியத் துள்ளி யெழுந்து தூக்கம் கலைந்து துண்டெனத் தலைகள் சிதறிடச் செய்வீர்! சாவென்பது உமக்கில்லை ச…

  6. விண்மலர் பூத்தது பூமியிலே.... மண்ணுலகில் பார்புகழும் மன்னவனை வரவேற்க விண்ணதிலே விடிவெள்ளி வேந்தருக்கு வழிகாட்ட தண்மதியோ வெண்சுடராய் கண்விழித்துக் காத்திருக்க மண்ணகத்தில் மன்னவனாய் மரிமகனும் அவதரித்தார் பாவிகளாய் நாமிருக்க பாவமற்ற செம்மறியாய் பூமிதனில் புதுமலராய் புண்ணியனாய் வந்துதித்த தேவனவன் செய்வீக ஜோதிமயமாய் ஜொலிக்க ஆயர்கள் பாடியிலே அன்பு மகன் அவதரித்தார் மாசற்ற மாமரியோ மலர்ந்த மகன் மாதவனின் நேசத்தில்தான் நெகிழ்ந்து நெஞ்சத்தில்தான் வியந்து பாசத்தில் தாவீது குலத்துதித்த சூசையுடன் பூசித்து புதுப் பொலிவாய் பொன்மகனை வரவேற்றார் தேவனின் தூதர்களோ தெய்வீக ஒளியுடனே வானகமும் வையகமும் வாழ்த்தியே ஒலியிசைக்க ஆதவன் வருகை கண்டு அலர்ந்திடும் தாமரைபோல் கானங்கள் பல இச…

  7. Started by இலக்கியன்,

    இருளினிலே மருளுகின்ற விண்மீன்கள் கொண்டாட்டம் இருவிழிகள் கருவிழியால் விடுகிறதே காதல் தேரோட்டம் மின்சார விழிகள் இரண்டும் மின்னி இழுக்கிறது மின்மினியாய் கயல்விழியே என் இதயம் காந்தமாகக் கவர்கிறதே தேவதையே உன் நினைவுகள் தேய்ந்துவிடாத வளர்பிறையே தேம்பி அவனும் அழுகின்றான் தேங்காமல் நீயும் வந்துவிடு தேனைப்பருக என்று தேடிவந்த தேனிகூட தேவி உன் முகம் கண்டு தேகம் சிலிர்த்ததுவோ தீண்டவில்லை உன் இதழை தித்திக்கும் சுவைகண்டும் தீங்கிழைக்க விரும்பாமல் தீர்க்கமாய் காத்திருக்கு தேவலோக கன்னியே நீயும் வந்துவிடு தேவனுக்கு அன்பே நீயும் உன்னைத்தந்துவிடு

  8. அழகழகா வாழைமரம்அடுத்தடுத்து குலை சாய்சிருக்குவிதம் விதமாய் உருவம் கொண்டுவிரும்பும் சுவையில் பழுத்திருக்குமாப் பிடிப்பாய் கப்பல்மனம் பிடித்த இதரைதேன் இனிக்கும் கதலி - தின்னத்தெகிட்டாத செவ்வாழைவெட்டிப் பொரித்துண்ணவிருந்து சிறக்கும் மொந்தனதால்இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்அத்தனையும் தொலைத்தோம்அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்துஅன்னியமண் வாசம் நுகர்வதனால்...#ஈழத்துப்பித்தன்22.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_23.html

    • 0 replies
    • 2.2k views
  9. Started by கஜந்தி,

    அன்னை மடிதொட்டு தந்தை கரம்தொட்டு மாமன்உறவைத்தொட்டு மாமியின்பாசம் தொட்டதால் அன்பே உனைத்தொட்டு இன்பம் எனைத்தொட்டு மழலைகள் வாழ்வைத்தொட்டு சொர்கம் எனைத்தொட்ட வேளை சோதனை நமைத்தொட்டு இறப்புக்கள் வாழ்வைத்தொட்டு பிரிவுகள் எனைத்தொட்டதால் இதயம்வலியைத்தொட்டு கண்கள் நீரைத் தொட்டு கவிதைசோகம்தொட்டு தவிப்புகள்எனைத் தொட்டு துடிக்கின்றேன் உன்னால் இதுதான் விதியா?

  10. அன்று அடைமழைகாலத்தில் அழுதகண்ணீர் ஆழக் குழியில் விதைத்த விதைகளை நனைத்து உயிர்ப்பித்தது. இன்று விதைத்த விதைகளை தோண்டி எடுத்து வித்தை காட்டும் காலம் தோப்பாக வேண்டிய விதைகளை முளைக்கக்கூட விடுவதில்லை அறுபடைக்காக அன்றி அடையாளத்திற்காக விதைத்த வயலுக்குள் மீண்டும் நூறுவகைத் தானியத்தை விதைக்கின்றார்கள் எதுவும் முளைக்கவும் வளரவும் முடியாமல் செத்துப்போகின்றது தன்னை விட பெரிய சாணி உருண்டைகளை தள்ளிக்கொண்டுபோன வண்டுகள் தந்த நம்பிக்கையை கூட எதுவும் தருவதில்லை மாமரத்தடியில் ஈன்ற கன்றின் துவாலைகளை நக்கும் தாய்ப்பசு போதித்த பரிவுபோல் எதையும் எங்கும் உணர்வதில்லை கோடிக்குள் இருந்த கோழிக்கூட்டில் கக்காவுக்கு கூட போகாமல் அடைகாத்த…

  11. எல்லா காலங்களினது உழைப்பையும் ஒன்று திரட்டி சேகரித்த விதைகளை பயிரிடும் சற்றுமுன் தீர்ந்துபோன விதைப்புக் காலத்தின் கடைசி பின்மாலைப் பொழுதில் அஸ்தமன சூரியனின் இளஞ்சூட்டில் நெளிவெடுத்து வருடும் காற்றில் தலையசைத்து சிரிக்கும் நெற்பயிருக்கு தீங்கொன்றும் நேரா வண்ணம் வழிநெடுகிலும் கையில் உள்ளதை சிந்திச் சிதறியபடி செலகிறேன் பசித்திருக்கும் பறவையின் கூடுவரை.., நகரத்தின் பல்லிடைச் சக்கரத்தில் சக்கையாய் சிதறுண்ட வாழ்க்கையின் எஞ்சிய சிறுதுரும்பின் உயிர்நீட்சிக்காய் கனவுச் சிறகுகளை களைந்துவிட்டு மீண்டுமொரு விதைப்பு காலத்திற்காக தேடல் துவங்குகிறது..... ~ராஜன் விஷ்வா

  12. மாவீரரே!! உயிரிலும் மானம் பெரிதென இவ் உலகிற்கு உணர்த்தி நின்றார் செந் தமிழனின் வீரத்தை இந்தப் பாரிலே உயர்த்தி நின்றார்! நெஞ்சிலே நஞ்சினைத் தாங்கியே எம்மவர் மண்ணுக்கு வெளிச்சம் தந்தார் அன்னை மண்ணுக்கு தன்னலம் பாராமல் சாவையே அணைத்து வென்றார்! நல்தலைவன் வழியினில் சென்றுமே நன் நீதியைக் காட்டி நின்றார் வான் என்ன! கடல் என்ன! களத்திலும் கூட வீரத்தை காட்டி நின்றார்! வாழ்க்கையின் தத்துவம் காட்டிய வீரரே உம்மை நினைக்கவே நாளெதற்கு? மறைந்தாலும் மனதினில் நிறைந்திட்ட நீங்களே விடியலில் ஒளிர் விளக்கு! மறப்போமோ உங்களை எங்களின்வீரரே இது விடிகின்ற தருணம் அல்லோ? வீசும் காற்றது என்றுமே உரைப்பது வீரச் சோதரர் பேரை அன்றோ? மண்ணே! மானம்…

  13. [size=5]விதையாகிப் போன நம் வீரத்தியாகிகளே,[/size] [size=3][/size] [size=3][size=4]தன்னை உருக்கி –இத் தரணிக்கு ஒளி கொடுக்கும் சுடர்போல் தமிழ் தாயவளின் உறவுகள் வாழ விதையாகி போன நம் விடுதலையின் வீரத்தியாகிகளே கார்த்திகை இருபத்தி ஏழு மட்டுமல்ல காலமெல்லாம் உம்மை கைதொழுவோம் நாம்[/size] [size=4]அடக்குமுறை, ஒடுக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க அமைதிக்கு பெயர் பெற்ற அழகிய நம் தேசம் வனப்பிழந்து வாடுவது தாங்காமல் –புது வலிமையுடன் புறப்பட்ட வாலிப நெஞ்சங்களே, கரத்தில் கனலுடனும் மனத்தில் அனலுடனும் களமாடி பகை வெல்ல புறப்பட்ட தோழர்களே, வெற்றி மேல் வெற்றியாக பல வெற்றிகள் எமக்கீந்து வெஞ்சமரில் உயிரீந்த மாவீரர்களே, வாசனை வீசிடும் வாலிப வயதினிலே வளர்…

  14. Started by sathiri,

    விஞ்ஞானம் விதவிதமாய் விந்தையாய் விதைக்கிறான் விதையில்லா விருட்சம் விதையில்லா விரும்பழம் விதையில்லா விரும்காய் விதையில்லா விரும்கறி விதையுள்ள மனிதன்

  15. வித்து காசு பாத்துறாதண்ணே எம்புட்டு நேரம் நிற்கிறது சீக்கிரமா படமெடுண்ணே அம்மாக்கு ஒத்தாசையா செங்கல் தூக்கனும் அழுக்குத் துணி மாத்தி கலைஞ்ச முடியை வாரி பூச்சுடி அழகா போஸ் கொடுக்க வருச பொறப்புக்கு வாண்ணே இந்த படத்தை எங்கயும் வித்து காசு பாத்துறாதண்ணே பள்ளிக்கூட போற வயசில்ல பக்கபலமா அம்மாக்கு இருக்கேன் குழந்தைத் தொழிலாளினு சொல்லி பொழப்பை கெடுத்துராதண்ணே உழைச்சாத்தான் பசிக்கிற வயிறும் சந்தோசப்படும் இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே! http://www.greatestdreams.com/2010/03/blog-post_04.html

  16. பட்டும் படாமல் இருப்போரை எல்லாம் தட்டிக் கொடுத்து தன் பக்கம் ஈர்க்காமல் - தலைகனத்து கொட்டிடும் தேல் எனவே கொட்டி கொட்டி வெட்டி விடுவதுதான் விடுதலைக்கு பங்களிப்பா? பெயருக்கு தலைவராக இருப்போரெல்லாம் பெரிய தலைவர்களை எல்லாம் சரியாக பகைத்து கொண்டே இருந்தால் யார் பக்கம் சாய்வார் அவர்? பட்ட மரமென்று ஒன்று இருந்தால் விட்டு வெட்டினால், வேர் விட்டு வெட்டினால் சட்டெனெ பெய்யும் மழையில் சடுதியில் துளிர்த்துவிடும் ஒட்ட வெட்டினால் நட்டம் நமக்கல்லவா? உயிர் காக்கும் பிரச்சனைகள் இருக்கும் போது மயிர் காட்டி கட்டுரை வரைவதும் - பதிலுக்கு வயிற்று பிழைப்பிற்க்கெ வக்காலத்து வாங்குகிறார் என்பதும் உயிர் காக்குமா? நம் தமிழர் உயிர் காக்குமா? எலி கூட்டமல்ல க…

  17. விமான தாக்குதலில் உயிர் நீத்த குழந்தை செல்வங்களுக்கு கொடிய காடையர்களே உங்களுக்கு என்ன வேண்டும் அப்பாவி சிறுவர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள் பாவிகளே பாவிகளே கொஞ்சம் நில்லுங்கள் பாலர்கள் மனதை தான் கொஞ்சம் பாருங்கள் இன்று இறப்போம் என்றா சீருடையில் சென்றனர் உங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றன அல்லாவா இதே நிலை உங்களுக்கு வராதென்ற திமிரா..... பொறுத்திருங்கள் மிருகங்களே உங்களுக்கும் அழிவுகள் நடக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை பாவம் பாலகர்கள் ஆயிரம் கனவோடு பள்ளி செல்ல பாவி நீ இந்த வேலை செய்தாய் உன்னையும் தாய் தானெ பெற்றெடுத்தாள் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்று நினைப்பா நாயே உனக்கு சிங்களவன…

  18. Started by Manivasahan,

    விமானக் கிலி காலமும் மாறுது காட்சியும் மாறுது கயவரின் தலைநகர் கதிகலங்குது குண்டுகள் தினமும் கொட்டிய சிங்களம் மண்டுகள் போலவே மருண்டு அலறுது காண்பது அனைத்தும் மஞ்சளாய் தெரிகிற காமாலைக் கண்ணனாய் காவல் புரியுது காகமும் அவர்க்கு காலனாய் தெரிந்திட கயவர் கூட்டம் கத்திக் குளறுது ஒளியினை எங்களின் வாழ்க்கையில் பொசுக்கியோர் ஒளியினை நிறுத்தியே ஒழிந்து மறைகிறார் வெளிச்சம் நிறுத்தியே வெருண்டு கிடக்கிறார் வெற்று வானிலே வெடிகளைச் சுடுகிறார் பகலிலே வந்தால் பார்க்கலாம் என்பதாய் பைத்தியக் காரனாய் பேட்டிகள் கொடுக்கிறரார் வினையினை மண்ணிலே விதைத்தவர் கேளுமே விடுதலை வரும்வரை விண்ணுமக்(கு) எதிரியே!

    • 5 replies
    • 1.2k views
  19. Started by வர்ணன்,

    22ம் திகதி வருதாமோ? இறக்கை முளைக்கிறதா? தங்க ரதத்தில் தாய் நிலத்தை வைத்தா இழுத்தோம்? சொல்லி வைத்தவர் யாரோ விடிந்தால் சொர்க்கபுரியென்றே உன்மனசை சீரழித்தே போன அந்த செம்மல்தான் யாரோ? சிங்க தேசத்துக்கு உன் வாயாலே உணவளிக்கிறாய் கவனம்... இரத்தவாடை உன் நாவில்.... இதை உனக்கு சொல்லாமல் விட்டது யாரோ? வெட்டவெளியை ஒரு துளி மழை நனைத்தால்... பொட்டல்காடெல்லாம்... புஸ்பனவனமாகுமென்றே சொல்லி வைத்தது யாரோ? அமைதியில் நாட்டமில்ல.. போர் அவர் பிறவிக்குணம்... ஆவிபிரிப்பதே அவர் தொழில்.. அடுக்கடுக்காய் புலிக்கு அவப்பெயராம்....! இந்த நாளில் போரென்றே கொள்வாயா? இருந்த கூட்டுக்கு நீயே இடியாய் ஆவாயா? சொல்லி வைத்தது யாரடா... …

  20. பாடையில் ஏற்றும் பிணத்தின் நெற்றியில் ஒட்டும் நாணயக்குற்றியை நெஞ்சாங்கட்டை நெருப்பெரிந்து முடிந்ததும் கரியைக் கழுவிக் காசெடுக்கும் வெட்டியான்களாய்.. விதைகள் சுமந்த விருட்சங்கள் எல்லாம் வேரோடு அழிக்கப்பட்டு விட்டன வியாபாரிகளால்.. அறுக்கும் முன் அலங்கரிக்கப்படும் ஆட்டுக்கடாக்கள் போல விதைக்கும் முன்னே வீழ்த்தப்பட்டு விட்டது.. பருத்துக் கொழுப்பதற்காய் கிளிசறியாக்குழையும் பூவரசங்குழையும் பருத்திப்புண்ணாக்கும் முத்தர் வீட்டு நல்ல தண்ணியும் குடுத்து நலமெடுத்துக் கிலோ ஏத்தி நல்ல நாள்ப் பார்த்து நாற்பது பேர் சேர்ந்து சுத்தி நிக்க வெட்டி இரத்தம் மூளை மார்பு,தொடை,வயிறு குடல் என்று பங்கு நல்ல விலை அதிலும் நல்ல வியாபாரம்.. மயிலற்றை ஆடு நல்ல விலையாம…

    • 24 replies
    • 2.9k views
  21. வியூகம் யாவும் விடை காண்பார். நினைவிலும்,கனவிலும்,தமிழீழம் பற்றிய பற்றுதலாலான நினைவுகள் ஏந்தி ஒரு சாந்தி தரும் செய்தி ஒன்று பூம்புனலேந்தி ஐம் புலன்களை ஆதங்கமாக நீவி ஆத்ம, ஆதரவுக்கரம் தாராதோ? வனையும் நெஞ்சகத்து கதவின் காந்தங்களை, புனையும் பொய்யர்களின் பீற்றல்களை, புரட்டி,பகை விரட்டி ஏகாந்தமாகும் நமதான ஆதங்கக்கரம் பற்றி! தினையும்,ஆங்கு தினமும் எம் விடுதலை வேங்கைகளின் திளையும் வெற்றிச் சேதி ஆற்றி எம் உளவுரணேற்றி தீந்தான வாகை பகைபுலம் காட்டி நமதான வரமாக்கி மாந்தமாகும் எம் மனவிருளகற்றி,விளக்கேற்றி, விடியல் செய்தித் தீ சுமந்து, நீ எம் அகமாக சுகமான, சுமைஏந்தி சுற்றம் சூழ, மகிழ வலம் வருவாயா? ஏதிலியாக தினம் அங்கு மாயும் எம் இன மாந்தர் ஆ…

    • 0 replies
    • 1k views
  22. பல பட்டங்கள் வாங்கினேன் அதைவிட நூல் இல்லை நூல் இல்லாத பட்டமாக அலைகின்றேன் நான் இங்கே வாழ்க்கைகே அர்த்தம் இல்லை ஏன் நான் பிறந்தேன் இந்தபூமியிலே சட்டங்கள் போட்டது யார்குற்றம் இங்கு நீ வந்தது உன்குற்றம் யுத்தததை கொண்டுவந்தது யார்குற்றம் பூமியில் பிறந்தது என் குற்ற்ம் என்னுடய கல்லறையில் ஆவது அந்த யுத்த அவல ஓசை இல்லாது ஒழியட்டும்

  23. நாங்கள் பிறை காண முன் அவன் சிறை காண வேண்டும் நாங்கள் கஞ்சி குடிக்கும் போது அவன் அஞ்சி துடிக்க வேண்டும் நாங்கள் நோன்பு பிடிக்க முன் அவன் கம்பி பிடிக்க வேண்டும் நாங்கள் ஈச்சம் பழம் உண்ண முன் அவன் பேச்சுப் பலம் மறைய வேண்டும் நாங்கள் கேட்டு அழும் துஆவால் அவன் கூட்டுள் விழ வேண்டும் நாங்கள் நம்பி எண்ணும் திக்ரால் அவன் கம்பி எண்ண வேண்டும் நாங்கள் எழுந்து சஹர் செய்ய முன் அவன் ஒழிந்து போக வேண்டும் நாங்கள் தானம் செய்யும் மாதத்தில் இந்த ஞானம் பொய்யனாக வேண்டும் நாங்கள் கேட்டு அழும் குனூத்தால் அவன் ஆட்டம் நிற்க வேண்டும்…AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=138917 .

    • 4 replies
    • 1.1k views
  24. ஒவ்வொரு தோட்டாவுக்கும் கணக்கு பார்த்து மௌனமானவர்கள் மீண்டும் தேடப்படுகிறார்கள். அடிக்கொரு குண்டு போட்டு நாடு பிடித்தவர்கள் விரட்டப்படுகிறார்கள்👏

  25. Started by sathiri,

    விரல் இடுக்கில் வீழ்ந்து கிடக்கிறது உயிரும் உலகமும் .. கடைசித் துளியினை இரசித்து விட்டு இறந்து போகலாம் நா . தேடுகிறது ... பொங்கி வழியும் சம்பெயின் விம்மி நிக்கும் நீ ..

    • 5 replies
    • 737 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.