கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார் சோக்கான கதை எல்லாம் சொன்னாராம் சேர்ந்து பல பேருடன் நின்று செல்பியும் எடுத்தாராம் நல்லவன் போல நடிப்பார் நாம் நினைப்பது போல அவர் இருக்கார் அது தருவன் இது தருவன் என்றாராம் அவர் அருகோட நின்று தலை ஆட்டிப் பொம்மைகள் தாளங்கள் போட்டாராம் அவர் சொன்னதை செய்வார் என்றும் சொன்னாராம் போன சுதந்திரத்துக்கு முன் ஏதோ தருவன் என்றாராம் இந்த சுதந்திரத்தோட என்னதான் தருவாராம் எல்லாமே மறந்தாராம் எதுகுமே பேசாராம் நம்புங்கள் ரணிலை நல்லது நடக்கும் என்றாராம் சேர்ந்து தாளம் போடும் சில சில்லறை மனிதர் தந்திரக்கார ரணிலார் தான் ஒரு சமாதான காரன் போல் காட்டியும் நடிப்பார் …
-
- 3 replies
- 1.1k views
-
-
உன் பார்வையில் பார்த்துக் கொண்டேன் என் கண் காட்சியை * உன்னை சுற்றியதில் சேலைக்கு கிடைத்தது அழகான தேவதை * தேடிப் பார்க்க தொடங்கினேன் எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு உனக்குள் இருக்கும் என்னை * உன்னை பார்த்த களைப்பில் ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள் உழைக்க விரும்புகிறது உதடுகள் * முத்தத்தை முடித்து வைக்க பிரம்மன் வைத்தான் உன் உதட்டில் ஒரு மச்சம் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 860 views
-
-
இரத்தக்களரியில் அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள் ஈழப் போர் எழுமென முரசறைகின்றன காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு ஈழமண் எரிய எரிய தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள் நாற்பதாயிரம் இளையதலைமுறையை கருக்கிப்போட்டது கையறு நிலையில் கடல் நீர் ஏரியில் குண்டு பட்டுச் சிதைந்து மிச்சமும் வீழ்ந்ததே காசியண்ண நீங்கள் குந்தியிருக்கும் தேசத்து கோமகன்கள் தடாகத்தில் எங்கள் குருதிதிதான் ஈழப்போர் வெடிக்குமென தொட்டெழுதுக எஞ்சிய தலைமுறையின் மூளைக்குள் ஏன் வீழ்ந்தோமென சிந்திக்காதிருக்க காசியண்ணைக்குப் போர் வேண்டும் ஏய்த்துப் பிழைத்த அரசியல் கண்ணீரில் தள்ளிய சதிமறைக்கப் காசியண்ணைக்குப் போர் வேண்டும் ஆம் போரிடுவர் எம் தேசமக்களெலாம் சேர்ந்தெழும் உரிமைக்காய்…
-
- 17 replies
- 2.8k views
-
-
குருதி ஓடையும் பிண வாடையும் என் தேசத்து தெருக்களில்... உயிர் சுமந்து இருப்பதில் சில சுமந்து இடையில் குழந்தை சுமந்து நடையில் என் தேசத்து எல்லை கடக்கின்றனர் மக்கள்! என் மண்ணின் உயிர் ஆயிரமாயிரம் 'பூட்ஸ்' கால்களின் காலடியில் நசுங்குண்டு சுதந்திர தாகத்தோடு காத்திருக்கிறது! பலிகள் பல கொடுத்து நரிகளின் ஊளை கேட்டு பரிகளாகி மேனி விடைத்து அரிகளின் தேகத்தை 'ரவை' களால் கிழித்து கரிகாலன் கண்ணசைவில் பாய்கின்றனர் புலிகள்! இருந்தும் அரசு கட்டில் அமர்ந்திருக்கும் ஆந்தைகள் அலறும் ஒலி கேட்டு காது பொத்தி 'அடைத்த செவியினர்' ஆக வெளிநாடுகள்! படை மட்டும் நடாத்தி கிடைப்பதல…
-
- 1 reply
- 976 views
-
-
உன் பொங்கல் கவிதை தித்திப்பதற்காகவே சேர்த்தாயா உன் சக்கைரைப் பெயரை இப்படி இனிக்கிறதே * தினம் நீ முறித்து தரும் கரும்பின் சுவை அலுத்துவிட்டது எங்கே கரும்பொன்றை கடித்துவிட்டு தா உன் இதழ் தொட்ட சுவை அறிய வேண்டும் நான் * நீ கண் மூடி வழிபட வழிபட தன் நெற்றிக் கண்ணையும் திறந்து பிரகாசிக்கிறான் சூரியபகவான் * சூரியபகவானுக்காய் நீ போடும் நட்சத்திரக் கோலத்தோடு உன்னை பார்க்கும்போது நிலாக்கோலம்தான் ஞாபகம் வந்தது எனக்கு * எல்லாரும் கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நீ பாடிய தேவாரத்தை நான் மட்டும் கண்திறந்து கவனித்துக் கொண்டிருந்தேன் எப்போ பிரியும் உன் இமைகள் என்று -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 921 views
-
-
கடவுளே, நாம் பறந்தால் எம்மை கழுகாக்கு, நாம் நீந்தினால் எம்மை சுறாவாக்கு, நாம் கடித்தால் எம்மை முதலையாக்கு, நாம் பிராண்டினால் எம்மை கரடியாக்கு, நாம் சிந்தித்தால் எம்மை நரியாக்கு, நாம் ஓடினால் எம்மை சிறுத்தையாக்கு, நாம் சீறினால் எம்மை புலியாக்கு, நாம் கொத்தினால் எம்மை நாகமாக்கு, நாம் மிதித்தால் எம்மை யானையாக்கு, நாம் முட்டினால் எம்மை எருமையாக்கு, நாம் பிறந்தால் எம்மை தமிழராக்காதே! நன்றி, விடை பெறுகிறேன். குளவி பி. கு: யாழ் கள உறவுகளுக்கு, குளவி கலைந்தாலும், யாழ் கூட்டை சுற்றி சுற்றி பார்க்க வரும். பி.பி.கு: குளவி குழவியாக குலவி வைத்து கலையவில்லை. தமிழக வார இதழில் ஆறு வருடங்கள் ஈசனாக இருந்து, ம…
-
- 29 replies
- 2.9k views
-
-
குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே அருமைக் குஞ்சு மூன்றையும் அதில் வளர்த்து வந்தது நித்தம் நித்தம் குருவியும் நீண்ட தூரம் சென்றிடும் கொத்தி வந்த இரைதனை குஞ்சு தின்னக் கொடுத்திடும் குருவி தந்த இரையினால் குஞ்சு மெல்ல வளர்ந்தன சின்ன இறகு இரண்டுமே சிறப்பாய் வளரத் தொடங்கின தனது குஞ்சு பறப்பதை தானும் பார்க்க ஆவலாய் தந்தை குருவி சொன்னது தனயன் பறக்க வேண்டுமாம் இப்ப என்ன அவசரம் இறக்கை நன்கு வளரட்டும் இயல்பாய் குஞ்சு பறப்பதை இரசிக்கும் காலம் வந்திடும் சின்ன இறகு வளர்ந்தபின் சிறப்பாய் பறக்க முடியுமே இன்றே பறக்க விரும்பினால் இறப்பில் முடியக் கூடுமே தாய்க் குருவி சொன்னதை தடுத்தே தந்தை சொன்னது எனக்குப் புத்த…
-
- 8 replies
- 4.3k views
-
-
"பகை வந்த வாசலில், சிறையுண்ட வாழ்வில் பயம் வந்து சேரும். தடை வென்ற பூமியில், நிமிர்கின்ற போதில் பலம் வந்து சேரும்." (ஈழத்தில் பல சந்திகளில் இப்படிப்பட்ட வாசகங்கள் உள்ளன.)
-
- 2 replies
- 1k views
-
-
முதல் இரவின் சங்கமத்தில்....... நம் காலைப்பொழுது இவர்களுக்கு முதலிரவு எங்கே தெரியுமா ! கோடி கண்கள் பார்த்திருக்கும் ஓர் வெட்ட வெளியில் ! அவளின் வருகைக்காய் நீண்ட நேரம் காத்திருந்தான் ? நேரமும் நெருங்கியது காத்திருந்து காத்திருந்து கலங்கிவிட்டான் - காரணம் இவர்கள் பொருத்தமில்லா யோடிகள் நிறத்திலும் ஏன் குணத்திலும் தான் ! இவளோ பால் வெள்ளை அவனோ கறுப்பின் மறு உருவம் அவளும் வந்துவிட பறவைகளின் இன்னிசை பூச்சிகளின் ரீங்காரம் மரத்தின் இலைகளின் சல சலப்பு கடல் நீரின் அலையோசை இத்தனையும் சேர்ந்தொலிக்க இணைகிறது முதலிரவில் இவர்களின் உடல் இரண்டும் ! இவளின் ஆதீக்கம் அவனை அடியோடு மறைத்துவிட பார்த்தோர்கள் பர…
-
- 8 replies
- 2.5k views
-
-
அன்பே, நான் உன்னிடம் என் காதலை சொன்ன பின்பு உனது தொலைபேசி அழைப்பு வரும் என்று ஒவ்வொரு நொடியும் காத்து இருந்தேன். அந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு ஒவ்வொரு யுகமாய் இருந்தது. என் இதயத்துடிப்பும் பலமாக அடித்துக் கொண்டது என் மனதில் இடம் புடிச்ச என் அழகிய மன்னவனே எனது ஆருயிரே உன் தொலைபேசி அழைப்பும் வந்தது. நீ எனக்காக சம்மதம் சொல்லுவாய் என்று நினைத்து மகிழ்ச்சி வெள்ளம் கரை ஓட ஓடோடி ஓடி வந்து தொலைபேசியை தூக்கினேன். ஆனால் உயிரே நீ சொன்ன சேதியைக் கேட்டு என் இதயத்துடிப்பு நின்று விட்டது. என் கண்ணாளனே நீ எனக்காக சம்மதம் சொல்லுவாய் என்று நினைத்தேன் ஆனால் நீயோ என் இதயத்துடிப்பை நிறுத்தி விட்டு இன்னொருத்திக்கு மாலை சூட்ட போகின்றாயே?
-
- 0 replies
- 695 views
-
-
ஒரு ஜீவாத்மாவின் கவிதை ----------------- என்னை அவர்கள் மதிக்கவில்லை...... என்று கோபப்படாமல்...... அவர்கள் மதிக்கும்படி........ நான் மாறவில்லை என்று ...... கவலைப்படு - காரணத்தை..... தேடு மதிக்கப்படுவாய்.......!!! பாராட்டும் போது...... துள்ளி குதிக்கும் மனம் ....... விமர்சிக்கும் போது....... துவண்டு விழுகிறாய்....... அப்போ உன் மனத்தை ...... கடிவாளம் போட்டு .... வழிநடத்துகிறாய்.......... கடிவாளத்தை கழற்று ...... சவாரிசெய் நிச்சயம் விழுவாய்...... காயப்படுவாய்....... ஆனால் வாழ்க்கையில் ...... வெற்றி பெறுவாய்,............!!! கரையில் நின்று கடலை ...... பார்த்தால் தப்புக்கடலும்.…
-
- 1 reply
- 810 views
-
-
போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும் -------------------------------------------------------------- 01 வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்ட படைகளின் உடல்களை கணக்கிட்டு பார்த்தபடி சிதைந்த உடல்கள் கிடக்கும் மைதானத்தில் பதுங்குகுழியிலிருந்து வெளியில் வந்த சனங்கள் நிறைகின்றனர். பக்கத்து வீட்டில் போராளியின் மரணத்தில் எழுகிற அழுகையுடன் இன்றைக்க…
-
- 0 replies
- 916 views
-
-
வாழ்த்தொலிகள் கேட்கும் தூரத்தில் நீயிருந்தால் எம் தலைவா! கைகட்டி ... வாய்பொத்தி பார்த்திருப்பாயோ ஈழத்தில் எம்மினம் எதிர்கொள்ளும் இன்னல்களை சேய் தவிக்க தாய் விடுவதில்லை எம் தாயுமானவே! நாம் தவித்திருக்க நீ ஒழித்தி…
-
- 0 replies
- 651 views
-
-
பிறக்கிறது நம் தேசம்..... கவிதை - இளங்கவி இரத்தத்தில் தோய்ந்த தமிழீழத்தின் முழு நிலவும்....... பிணக்குவியலால் மறைந்த தமிழீழத்தின் சூரியனும்....... அங்கே ஒளியையும் மறைத்து நம் தேசத்தின் குளிர்மையும் நீக்கி கூக்குரல்கள் மட்டுமே என்னாளும் ஒலித்திடும் தேசத்தை பாரீர் அங்கே ஒருதரம் வாரீர்....... குயில்களும் பாடாமல் கூட்டிலே ஒளிந்து கொள்ள....... மயில்களும் ஆடாமல் மறைவிலே மறைந்துகொள்ள.... மரணித்த உடல்கள் மட்டும் மலிவாகக் கிடைக்கிறது...... தடுப்பார்கள் யாருமின்றி தினமும் கொலைகள் நடக்கிறது.... ஒருபக்க முலையிலே குழந்தையின் பசி தீர்த்து மறுபக்க முலையை எதிரியின் கொடுமைக்கு பறிகொடுத்து இறக்கின்ற நிமிடமும் மழலையின் பசிதீர…
-
- 8 replies
- 1.6k views
-
-
-
போர்த்திட்டாண்டா.. தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..! காலம் காலமாய் வரலாறாய் எழுதி வைத்து.. தமிழினத்தை.. அழித்து துன்புறுத்தியவனுக்கே சொந்த இனத்தை.. ஊரை விட்டே துரத்தி அடித்தவனுக்கே.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா.. பாரடா பார்.. உலக மைந்தா. தமிழன் போல் சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல் அவன் போல் வீரம் உனக்கும் வருமா கேள்..??! மானம் கெட்டதுகள் வாழ்ந்தென்ன வீழ்ந்தே தொலையட்டும் என்றே அன்னை சோனியாவின் எடுபிடிகளாய் வடக்கிருந்து வந்து.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா சிங்களத் தானைத் தளபதிக்கு பொன்னாடை போர்த்திட்டாண்டா..! வாழ்க தமிழ் வீரம் எழுக தமிழக புதிய வரலாறு.. காட்டிக் கொடுப்பதில் காக்கவன்னியன…
-
- 21 replies
- 3k views
-
-
Mummy பொங்குறா பொங்கல் பிள்ளை order பண்ணுறான் Pizza Daddy எனக்கு வேண்டாம் புக்கை வாங்கித்தாங்கோ மக் பேர்கர்! விடியக்காலம மனிசிக்கு வேலை பின்னேரம் எனக்கு வேலை Fridge இக்குள்ள புக்கை! Facebook இல அரட்டை அட் ரா சக்கை ..... அட் ரா சக்கை ...! இதுதாண்டா புலம்பெயர் பொங்கல்!!!! பொங்கலோ பொங்கல்!!!! டமில்போய் 14/01/2014
-
- 1 reply
- 749 views
-
-
மாலை ஒன்று நான் தொடுக்க மலர்பறிக்கப் போயிருந்தேன். கைநீட்டிக் காம்போடு - நான் பூ பறிக்கு முன்னே 'பூ கேட்டது...' 'நாளை நான் வாடிப்போவேன் இன்று என்னை வாழவிடு' பூபதியின் நினைவுநாள் என்று நான் சொன்னதுமே நேற்று என்னை மொட்டோடு பறித்திருந்தால் பூபதித்தாயின் கழுத்தில் இரண்டு நாள் மாலையாய் வாழ்ந்திருப்பேன். வளைந்து கொடுத்தது பூ என்னை வாரி எடுத்துக்கொள் என்று. பூபதித்தாய் அவள் உருகி பூத்த தமிழினத்தின் வாடாத நினைவுப் பூ. வாழ்க்கையே உணவுக்காக வாழும் பிறப்பில் இனத்தின் வாழ்வுக்காய் உணவு மறுத்து உதிரம் உறைந்து உடலை உருக்கி உயிரை காற்றோடு கலந்து மாமாங்கப்பிள்ளையார் உள்ளே கற்சிலையாய் இருக்க உண்மை தெய்வமாய் நீ வீதியிலே கிடந்ததை நெஞ்சம் மறக்குமோ தாயே...? தத்த…
-
- 16 replies
- 4.3k views
-
-
-
- 1 reply
- 817 views
-
-
செவ்விளநீர் மர நிழலில் மண்ணழைந்து- செம்பருத்தி பூ இதழ்பிரித்து பொட்டு வைத்து மெல்லிய காற்றில் அணிஞ்சில் பழ கோது கொண்டு விசில் ஊதி.......... ஐஸ் பழ வான் பின்னால் ஓடி அடித்து பிடித்து சில்லறை கொடுத்து நாவில் பனியுருக நாவால் உதட்டை துடைத்து துடைத்து சுவைத்தோமே வருமா வருமா? மீண்டும்-அந் நாட்கள் ? சுகம் தருமா தருமா? பாட நேரம் வெளியோடி காளிகோயில் மாமரம் மீதேறி பறித்து வந்த மாம்பிஞ்சை ஒளித்து ஒளித்து சாப்பிட்டோமே அக்காலம் வருமா வருமா? சுகம் தருமா தருமா? கள்ளன் பொலிஸ் விளையாடி கள்ளனுக்கு பொலிஸ் "ஊண்டி போட " அவன் அழுதுகொண்டு வீட்டை -ஓட அப்பா கிட்ட உதை வாங்கினோமே வருமா வருமா அந்நாள்? சுகம் தருமா தருமா? …
-
- 23 replies
- 3.4k views
-
-
அது ஒரு மாலைப் பொழுது மழைத் துறல்கள் காற்றின் மோதுகையால் சிதறி முகத்தை உரசிச் செல்லும்போது ஒரு வகையான உணர்வு மனதைக் கிள்ளத்தான் செய்கிறது. இரு பீர் போட்டில்கள் காலியாகியிருந்தன. அந்த நண்பன் சடுதியாகத்தான் கேட்டான், அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை, இப்போதெல்லாம் நான் எதிர்பார்ப்பவைகள் எதுவும் நடப்பதுமில்லை. அந்த நண்பன்! யதி, நீ விடயஞானம் உள்ளவன் உன்பற்றி பலரும் அறிவாளி என்கின்றனர், இது விடயத்தில் எனக்கு உன்னால் உதவ முடியும். நான் ஒரு மார்க்ஸிஸ்ட் ஆவது எப்படி? நான்! என் குறித்த அவன் வர்ணனைகள் என்னை சங்கடப்படுத்தின. இதிலெல்லாம் நான் நாட்டம் கொள்வதில்லை, ஏனெனில் நான் என்னை அறிவேன். நான் சிரித்துக் கொண்டேன…
-
- 3 replies
- 888 views
-
-
என்னதான் பெரிதாய் .. ஒப்புக்கு ஜனநாயகம் பேசு........ என்னமோ பெரிதாய் ஊரோடு ...... சண்டைக்கு வா.! என்னதான் பெரிதா... ஏதும் வேசம் போட்டாலும்....... தென்னை ஓலையில் வளர்த்திய...... உன் தங்கை உடல் பார்த்து அழுவாய்.....அழுதே ஆவாய்..! கன்னமது சுட்டு கொண்டு ஓடி ........ உன் கரங்களில் பட்டு தெறிக்கும்....... கண்ணீரில்....... எழுத்துக்கள் வாசி........! குளிர் காய நினைத்து...... வீட்டை எரித்தாய்....... குப்பி விளக்கை அணைத்துக்கொண்டு...... கூரைமீது படுத்தாய்..! பற்றி எரிகிறது பார் - இப்போ....... நீ சுமந்த பாவம் ........ உன்னை கொல்லும்......! நாம் நேசிக்கும் பூமி....... நாமிருக்கும் வரை- என்றும் உன்னை வெல்லும்! 8)
-
- 9 replies
- 1.9k views
-
-
நினைவுகள் வருது நினைவுகள் வருது நனவாய் இருந்த நினைவுகள் இன்று கனவாய் வருது கடலின் அலைபோல் மழைபோல் பொழிந்து கவியாய் வருது பிறந்த மண்னில் தவழ்ந்த ஞாபகம் நினைவினில் வருது மயிலின் நடைபோல் நடைபயின்ற செம்மண்வாசம் நறு மணமாய்வருது கிளியின் மொழிபோல் தமிழ் சொன்ன முதல் ஆசான் நினைவுகள் வருது பொழியும் மழையில் ஆடும் மயில்போல் மழையில் நனைந்த நினைவுகள் வருது ஆலமரத்து விழுதில் ஊஞ்சல் ஆடிய நினைவு கடல்அலை போல் அடி வருது நிலாவின் முற்றத்தில் உறவுகள் சேர்ந்து கூழ் குடித்த நினைவுகள் கண்ணீராய் வருது திருவிழாக்காலத்தில் கன்னி அவளைக் காதல் செய்த நினைவுகள் வலியாய் வருது பள்ளி நாட்களில் தோள் தோள் நின்ற …
-
- 14 replies
- 2.3k views
-
-
பொறுமைகாத்த தமிழன் படை பொங்கி எழுந்தது தலைநகரில் வெறியர்படை தலைகள் தெறிக்குது மகிந்தாவின் சிந்தனையாம் மதிகெட்டு ஓடுது தலைவரின் சிந்தனையில் தமிழர்படை முன்னேறுது போர்என்று வந்தபடை போராயுதம் போட்டு ஓடுது கடலிலே கடற்புலிகள் கடல்வீரம் காட்டுது கடற்படை வெறியான் கடற்கலங்கள் வெடித்துசிதறுது தற்காப்புப் போரில் தமிழன்படை வென்றுகுவிக்குது ஓயாதலைகள்5 இல் வெறியர்படை ஓடுதுஅங்கே ஓடுதுவிரைந்து இந்தமீட்புப்போரில் தம் உயிர் ஈந்த இம் மாவிரருக்கு வீரவணக்கம்
-
- 14 replies
- 2.6k views
-
-
இருண்டகாலத்தின் பதுங்குழி சொங்களற்றவர்களின் அசையா முகங்களில் சங்கீதம் பாடி ஆடுகின்றன ஈக்கள் இரவுக்கும் பகலுக்கும் இடையில் மாபெரும் யுத்தப்படை ஒன்று என் கிராமத்தை கடந்து போயிருக்கையில் காணவில்லை விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை சாட்சிகளற்றவர்களின் நிலத்தில் கைது செய்யப்பட்ட குழந்தை ஒன்றை ஏற்றுக்கொள்ளவும் யாருமில்லை மீண்டுமொரு இருண்ட காலத்தில் பதுங்குகின்றனர் குழந்தைகள் வானத்தில் விமானங்கள் இல்லை எத்திசைகளிலிருந்தும் செல்கள் வரவில்லை வானத்தையும் திசைகளையும் கண்டு அஞ்சுகின்றன குழந்தைகள் இப்போது எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் எதுவும் இல்லை விமானங்களும் இல்லை போர்க்களங்களைத் துறந்துவிட்டோம் பாசறைகள் யாவற்றையும் மூடிவ…
-
- 1 reply
- 588 views
-