கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வெற்றியின் சரித்திரம் முழங்குது பார் தேன் சுவை ஊறும் செந்தமிழ் ஈழம் வான் புகழ் கொண்டு வளருது பார் எழிலது பொங்கிடும் எம்முயிர்த் தமிழால் எங்கணும் மங்களம் பொங்குது பார் ஈழமண் மீட்பில் எரிகின்ற தீபம் எட்டுத்திக்கும் சுடர் வீசுது பார் மங்களமாய் மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் மாண்புறு ஈழமண் மகிழுது பார் செங்களம் ஆடிடும் செங்குருதிப் புனல் எங்கள் உணர்வினில் தெறிக்குது பார் எத்தனை எத்தனை வேங்கைகள் மண்ணில் ஈகம் செய்த உயிர் எழுகுது பார் விதைகளாய் விழுந்த உயிர்களின் தாகம் விருட்சமாய் இங்கு வளருது பார் தேசத்தின் நேசம் நெஞ்சில் நிறுத்திய புhசத்தில் தமிழினம் பொங்குது பார் வடக்கிலும் கிழக்கிலும் வளமது பெருகி வறுமைகள் இன்றுடன் ஒழியுது பார் கனவுகள் மெய்…
-
- 3 replies
- 1.4k views
-
-
வெற்று காகிதம் .. ... நாட்களும் நகருகின்றன. நெருடும் நினைவுகளுடன் வாழ்க்கையும் நகருகின்றது. வண்ண எழத்துக்களாலும். கிறுக்கல்களாலும் வாழ்க்கையின் பக்கங்கள் நிரப்படுகின்றது. கற்பனையில் சில கவிதைகள் நினைவில் சில கவிதைகள் நிகழ்வில் சில கவிதைகள் என என்கை எழுகின்றது. நான் இழந்தவைகள் ஏதுவாயினும் எஞ்சியிருப்பது நம்பிக்கையே. அடி மனதில் அடுக்கடுக்காய் அலுமாரியில் அடுக்கிய புத்தகங்களாய் மீண்டும் புரட்டிப் படிக்க நினைத்தால் புண்பட்டு போகுது என் மனசு . நான் எங்கு சென்றாலும் துன்பங்களும் வேதனைகள் என் கழுத்தை நெரிக்கின்றான. எத்தனை பேரின் சொல் காயப…
-
- 0 replies
- 619 views
-
-
வெல்க தமிழ் இயல்பாய் எழுவாய்! புயலாய் சுழல்வாய்! தமிழா!..... இதுவே முடிவாய் முயல்வாய்! எழும் தழல் மூச்சில் தமிழ் முகம் சிரிக்க, விழும் கனி மடியினில் உலகமும் வியக்க. விழுதுகள் பலமெது? - இது விடை தரும் காலம் அழுது தொழுது அலைந்தது போதும். விழி மடல் திறவா விதியையும் தகர்ப்போம் விரைவீர்! எழுவீர்! வெல்க உரைப்பீர்! அழுகிய பண்டமாய், அனாதிப் பிணங்களாய், குருதிவடி நெஞ்சமாய் குமுறியது போதும். எழுவீர்! எழுவீர்! எண்திசை வெளிக்கும் எங்களின் எழுச்சியில் எல்லாமே சிறக்கும். அழகுறு அன்னையின் விழி நகை மலர, உலகொரு சொல்லதில் உயர்வதைப் பகர, தெளிவுறு தலைவனின் திறனது வெல்ல எழுவீர்! எழுவீர்! வெல்லும் தமிழ் சொல்ல. ப…
-
- 5 replies
- 3.3k views
-
-
தென் செய்தியில் தமிழாலயன் அவர்களால் எழுதிய கவிதை வெல்கின்றான் எல்லாளன்! விடிகிறது தமிழீழம்! தூய தமிழ்ச் செம்மொழியைத் தோற்றுவித்த செவ்வியர்தாம் போயழவோர் நாடுமிலை தோழி! - அவர் போக்கிலியாய்த் தானலைவார் தோழி! நேயமிலா மாந்தர்களே நீளலைகள் சூழுலகே ஞாயமிலை நாணமிலை தோழி! - செந் நாய்களுமோ நரிகளுமோ தோழி வாயலற நெஞ்சுருக வாழ்நிலைகள் தேடிவரும் வாயிலிலே குண்டுமழை தோழி! - இவர் வருவதற்குள் சாவுவரும் தோழி தாயுமிலை தந்தையிலை தன்னுறவு யாருமிலை சேயழுகை கேட்கலையோ தோழி! - கொடும் செவிடர்களோ ஊருலகம் தோழி யார்குடியைக் கெடுத்தார்கள் யாருணவைப் பறித்தார்கள் யார்யார்க்கும் உறவலவோ தோழி! - இவர் யாதும் ஊர் என்றதற்கோ தோழி போர்மூட்டும் புத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
03.04.2002 அன்று யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இங்கு இன்று அடக்கியாண்ட சிங்களமே அடங்கிப் போய்விடு பதுங்கியிருந்த புலி இப்ப பாயத் தொடங்கி விட்டது... இருண்டுகிடந்த எம்மண்ணில் வெளிச்சம் வந்துவிட்டது.. மறைத்துவைத்த சூரியனை வெளிக் கொணர்ந்து விட்டோம்.. கருவறைக்குள் வஞ்சம் கொண்டு எம்மை கல்லறைவரை சென்று அழித்தாய்... எம்மினம் கல்லறையென்ன உன்தன் கருவறை புகுந்தே அழித்துவிடும்.. படித்துவிட்டான் தமிழன் உன்தன் நாசகார பாச வேலைகளை... கூலிப்படை கொண்டே எம்மை கொடூரமாக கொண்றாய்.. தன் மூளையை கொண்டே உன்னை இன்று புலி அடிபணிய வைத்துவிட்டது.. தலைவன் பிறந்த மண் இது... இங்கு ஒரு தளிர் வாட விட…
-
- 1 reply
- 749 views
-
-
அம்மா வெளிநாட்டில் உன்பிள்ளை என்று உனக்கு மகிழ்ச்சி. என் வாழ்க்கை எது என்று நீ அறிந்து கொண்டால் அம்மா நீயும் அழுவாய். வானை முட்டும் கட்டடங்கள், வடிவான வீதிகள் உழைத்து கழைப்பில்திரியும் எமக்காகவோ என்னவோ வீதியெல்லாம் இளைப்பாற ஆசனங்கள், வண்ணமான பூங்காக்கள் எல்லாம் கண்ணைக்கவரும்-ஆனால் அம்மா-என் நெஞ்சமோ உங்களைத்தேடும் நித்திரைக்கு போவேன். தலையருகே உன் படம்-என் தலை நீ கோதுவதாய் கற்பனை செய்வேன், கண்ணீர் சொட்டும்-என் தலையணை நனைந்தே போகும் வாய் விட்டு அழத்தோன்றும் அடக்கிவிடுவேன், தலையணையை கடித்துக்கொண்டு லேசாக கண்கள் மூட அலாரம் எழுப்பிவிடும் வேலைக்கு போ என்று அவசரமாய் எழுந்து ஓடுவேன் காலையில் காப்பியும் …
-
- 11 replies
- 2.1k views
-
-
வெளிநாட்டின் இன்பம் துன்பம் இங்கு இன்பமே துன்பம் ,துன்பமே இன்பம் முதல் முதலில் விமானப்பயணம் வாழ்நாளின் சாதனைப்பயணம் என தேன்றும் வந்த பிறகுதான் இது சாகவந்த பயணம் என்று தெரியும் இங்கு நான்கு சுவத்துக்குள் சிறை அது தான் எங்களின் அறை அது உள்ளவே சமையல் அறை சிக்கன்,மீனு எல்லா பொருளும் கிடைக்கும் குளிர்சாதன கிடங்குல அந்த ஏதிலிலும் சத்துயில்ல நாங்கள் உண்ணுவது தான் உணவு நாக்கு சுவைக்கு இல்லை என பழகு இது தான் எங்கள் முதல் மந்திரம் இங்கு ஜன்னல் என்ற ஒரு பெயருக்கு ஒன்று இருக்கு அதை திறந்தாள் புழுதிக்காற்று அடிக்கும் இதை யாருக்குத்தான் பிடிக்கும் சுவாசிக்க காற்று தேவை இங்கு சுவாசிக்கவே நல்ல ஒரு காற்று தேவை அனைத்து காய்ச்சலுக்கும் ஒருமாதிரி மாத்திரை கம்பெனிக்கு எங்கமேல இல்ல அக்கறையும் …
-
- 0 replies
- 1k views
-
-
-
ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆச…
-
- 4 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்...... பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்...... இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்... கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்... நான் இங்கே நல்லா…
-
- 0 replies
- 3.7k views
-
-
மூட்டை முடிச்சும் முட்டுவலியும் மூச்சிப்பிடிப்புடன் வீடு வந்து சேர்ந்தேன் வளைகுடாவிலிருந்து விடுதலையாகி வந்தேன்! மணக்கும் மனைவியின் முகமோ சுருக்கம் கண்டு; சுறுக்கமாய் முதுமைக் கொண்டு! முன்னாடி நிற்கும் எனைத்தெரிய கண்ணாடு போடும் திரை மறைத்த விழி! நரைக்கொண்டு கரைப்படிந்து; உழைத்தக் காசை செலவுச் செய்ய வியாதியுடன் வந்திருக்கிறேன் வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்! இளமைக்கு வேட்டு வைத்து கடமைக்கு ஓட்டுப் போட்டு கடனுக்கு ஒட்டுப்போட்டு; பாலையிலேப் பலக்காலம்! செழிப்பான வாலிபத்தை மாதச் சம்பளத்திற்கு விற்றுவிட்டு; நமக்கென்று துணைவேண்டி ஓடிவரமுடியாமல் ஊன்றி வருகிறேன் குச்சினை! எட்டி உதைக்கும் பிள்ளை வேண்டி ஏங…
-
- 11 replies
- 1.9k views
-
-
வெளியினிலும் தெரியும் வெறுங்கால் தடங்கள்...... சடா கோபன் காணி நிலம் வேண்டும் என் சொந்த காணி நிலம் வேண்டும்! உயர் காப்புவலயம் உள்வாங்கிக் கொண்ட என் காணி நிலம் வேண்டும்! பட்டைகட்டி துலா மிதித்து என் பூட்டன், நிலம் செழிக்க நீர் இறைத்த அந்தத் தோட்டத்துக் கிணத்திலே ஒருவாளி தண்ணியள்ளி என்தொண்டை நனைத்திடல் வேண்டும் என் காணி நிலம் வேண்டும்! ஆயிரமாய் சப்பாத்துக்கள் அழுத்திச் சென்றாலும் இலட்சங்களாய் சில்லுகள் உருண்டு திரிந்தாலும் அழியாது சுவடுகள் எந்தனது முன்னோரின் வெறுங்கால் சுவடுகள்.... ! சாகாது இன்னும் பத்திரமாய் அங்கு உயிர்ப்போடு இருக்கிறது…
-
- 3 replies
- 895 views
-
-
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால் ஊமைகள் அல்ல. நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால் முடங்களும் அல்ல. ஆறாத புண்களோடும் மாறாத வடுக்களோடும் தான் கைகளில் எழுதுகோல்களை தூக்கியிருக்கிறோம். எழுதுகோல்களை பிடிப்பதற்காக மட்டுமே எங்களின் கைகளை மெளனித்துள்ளோம். எங்கள் கைகளும் உயர்ந்து இருந்தது “ஒருகாலம்”. நாங்கள் சொல்ல நீங்கள் கேட்டது “அந்தக்காலம்”. நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கவேண்டியதாய் இடக்குது “இந்தக்காலம்” காலங்கள் மாறும் அது விதி. கவலைகள் தீரும் அதுவும் விதி. “எதை” முற்றாக முடித்து விட்டதாய் எக்காளம் இடுகிறாயோ “அது” ஆரம்பித்த இடத்தில் நிற்பதை மறந்துவிடாதே..!!! “எதை” குழிதோண்டி புதைத்து விட்டதாய் கொக்கரிக்கிறாயோ “அது” முழைத…
-
- 0 replies
- 462 views
-
-
தேச ஒருமைப்பாடென்று கூடிக் கற்பழித்தவர்கள் எங்கள் வாய்கால்களில் தங்கள் குறிகளை கழுவிக்கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் மன்றாடுவோம். கழுகின் நிழல்களில் ஒதுங்கி வாள் சுமந்த நீதிதேவதை வெள்ளையாடையோடு வருகிறாள் உயர்ந்த ஜனநாயகநாடும் காந்தியச் சக்கரங்களால் சாம்பல் மேடுகளிலும் எலும்புச்சிதைவுகளிலும் ஏறி வருகிறது. காடுகளை அழிக்கையில் உறங்கி இருந்திருப்பார்கள். அல்லது விருந்தில் இருந்திருப்பார்கள். இவர்களுக்கு எதுவுமே தெரியாது வாருங்கள் மன்றாடுவோம். நீதி கேட்போம். வண்ணாத்துப்பூச்சிகளையும் மின்மினிப்பூச்சிகளையும் கொன்று சிதைத்த கதைகளை சொல்லுவோம். கூட்டம் கூட்டமாய் தவித்து நின்ற மான்குட்டிகளை நஞ்சு பூசிக்கொன்ற கதைகளை சொல்லுவோம். ஒலிவ்இலைகளை சுமந்த வெள்ளைப…
-
- 10 replies
- 1.1k views
-
-
தமிழ்க் குரலில் வாரவாரம் வரும் பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது 02.08.2019 வெள்ளிப்பொழு 'கல்' எனும் தலைப்பில் சொற்களின் திருவிழா... பொன்.காந்தனுடன் தமிழகத்தில் இருந்து ஈழக்கவிஞர் சிவ.திவாகர் மற்றும் கவிஞர் செல்வா. 'மை' 16-08-2019 அன்று தமிழ்க் குரலில் ஒலிபரப்பாகிய பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது
-
- 1 reply
- 656 views
-
-
வெள்ளை மனம் பத்துத் தடவைகள் பட்டுச்சேலையுடுத்தி பத்தரை மாற்றுத்தங்கப் பதுமையாய் பலர் முன்னிலையில் கொழு பொம்மையாய் பார்வையிட்ட பெண்ணிடம் பக்குவமாய் பாடத் தெரியுமா சமையல் தெரியுமா என்றே பலரும் தங்கள் சந்தேகம் தீர்ந்திட பத்துக்கு பலநூறு கேள்விகள் கேட்டுவிட்டே பட்சணங்கள் பல வகை வகையாயிருந்ததை பண்போடு வயிறார உண்டு விட்டு களித்துவிட்டே பாலின் நிறம் பால் வெள்ளை பெண்ணின் நிறமதில் வெள்ளையில்லையென்றே வெளிநடப்பு செய்த மாப்பிள்ளை வீட்டார்கள் வெள்ளைமனம் கொண்ட என் புண்பட்ட நெஞ்சமும் பாறையாய் போனதை அறிவீரோ பண்பட்ட மனதுடன் சின்னஞ்சிறு ஆசைதனை வெண்தூரிகை கொண்டே என் புகைப்படத்தை வெள்ளை நிற மை கொண்டே மையிட்டு வெள்ளை மனதுடன் மகிழ்கிறேனே
-
- 16 replies
- 4.1k views
-
-
வெள்ளை வானை எண்ணயிலே மிச்ச உயிர் போகுதய்யா... ( ஆள்கடத்தல்) நாளு சுவர் வீட்டுக்குள்ளே நாளாந்தம் வாழ்க்கை ஜய்யா.... வெளியில் போக முடியவில்லை வெள்ளை வான் கடத்தலய்யா... ஓடி ஒழிய முடியவில்லை ஊறடங்கு வேறு ஜய்யா... நட்டு வைச்ச மரம் போல தெருவெல்லாம் ஆமி ஜய்யா... அவனை கண்ட அச்சத்திலே பாதி உயிர் போகுதய்யா.... எட்டப்பர் வேறு ஜய்யா எட்டர் வேலை புரியுதய்யா.... இலக்க தகடு கழட்டிப்பிட்டு இல்லம் உள்ளே புகுருதய்யா... காரணங்கள் இன்றி இங்கு கைதுகள் நடக்குதய்யா... காணவில்லை பட்டியலில் வேறு இன்று போடுதய்யா... என்ன செய்வோம் நாங்களய்யா எங்கு போயு சொல்வோம் ஜய்யா..??? எங்கள் …
-
- 34 replies
- 4.7k views
-
-
வெள்ளைக் கடற்கரையில்... வெள்ளைப் புற்றடி விநாயகரை வணங்கியே நாம் செல்ல மண்கும்பான் கும்பி மணல் மலையழகு காட்டும். மணலிடையே பனைமரங்கள் நுங்குதாங்கி நிற்கும் இதைப் பாhத்து நடக்கையிலே சோமர் கிணறு தெரியும் சுகமான குளிப்பென்று - அது எம்மை அழைக்கும். தெங்குகள் இடையினிலே பள்ளிவாசல் மிளிரும் தெவிட்டாத நீர் இங்கேயென சாட்டி வழி சொல்லும். மாதாவின் திருத்தலத்தின் மணி ஓசை கேட்கும்; மனத்திலே அதன் ஒலி அருள் நினைவு சுரக்கும் மேல் வானில் செங்கதிர்கள் அழகுக் கோலம் தெளிக்கும் அதன் கீழே பறவை இனம் வரிக் கோலம் போடும். கீழ்வானம் தேடியெங்கும் படகுகள் பாய் இழுக்கும் அதைப் பாhர்த்துச் சிறையாக்கள் பாய்ந் தழகு கொடுக்கும் இதைப் பார்த்து நிற்கை…
-
- 20 replies
- 3.5k views
-
-
வெள்ளைக் கூடுகள்.... கவிதை - இளங்கவி... இறுதியாக எங்கள் மனிதப் படுகொலைகள் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் வசிக்கும் காகமும் குஞ்ச்சுகளும் பேசுவதாக ஓர் கற்பனை.... நம் புதுவீடு வெள்ளையாய் பளிச்சென்று இருக்கம்மா...! வெள்ளைமரக் குச்சிகள் இங்கே புதிதாகக் கண்டாயா....? இல்லையடா செல்லம்... இது இங்கே மரணிடத்த மனிதர்களின் எலும்பச் சிதறல்கள்.... மழையுடன் புயலும் தாங்கும் மாமிசச் சிதறல்கள்.... நாம் வானத்தில் பறந்ததால் ஓர் வழியாகத் தப்பித்தோம்... இவரோ பூமியில் வாழ்ந்ததால் புதைகுழியில் சிதறிக் கொண்டார்.... அவர் எலும்புச் சிதறல்களில் உமக்கு அழகாய் வீடமைத்தேன்... அவர் வாழ்ந்த இடமெல்லாம் நீர் விளையாட வழியமைத்தேன்... சரி..சரி சிங்க…
-
- 0 replies
- 522 views
-
-
வேசங்கள்! மனித பிறவியது மண்ணில் சிறப்பு பிறப்பாமே! கவலைகல் கண்ணீர்கள் சந்தோசங்கள் சாகசங்கள் இவை எல்லாம் அனுபவிக்குமாமே! சோதனைகளை விரட்டிவிட்டு சாதனை படிகளை கண்டறிந்து வெற்றிப்பாதையில் செல்லுமாமே! மனிதம் உள்ளோர் மட்டும் தானோ இத்தனைக்கும் உரியவர்கள்! மனிதமின்றி மனிதனாய் நித்திலத்தில் வேசங்கள் போட்டு நடைபோடும் வேடதாரிகளுக்கு என்ன தெரியும்! கவலை மறக்க கண்ணீரும் கண்ணீரை மறக்க புன்னகையும் இறைவன் தந்த வரமென்று அறியா வேடதாரிகளே நில்லுங்கள்! நித்திலம் நின் ஆயுள் தந்தது மனிதனாய் வாழவே -ஆனால் நீயோ வேசங்கள் பல தரித்து வேடதாரி பட்டம் பெற்று நித்திலத்தையே நிலைகுலைக்கின்றாயே உன்னால் முடியாது என்…
-
- 6 replies
- 2k views
-
-
ஓ... காலனே, இந்த வேசம் போடாத வெண்பஞ்சு முடிபேசும் கதைகள் கொஞ்சமல்ல அவற்றைப் பேசி முடித்தபின்னால் ஓலை அனுப்புகிறேன் அதுவரைக்கும்....
-
- 26 replies
- 5.2k views
-
-
வேட்டு வைக்காதே தமிழா வேட்டு வைக்காதே ஒருவனுக்கொருவன் வேட்டு வைக்காதே நாட்டை மீட்கப் போகையிலே நல்ல பாம்பும் நாடி வரும் கெட்ட பாம்ப்பும் தேடி வரும் நல்ல பாம்பை சேர்த்துக் கொள் கெட்ட பாம்பை விலத்திச் செல் நாதி கேட்ட நாம் இன்று நாகரிக உலகினிலே நமக்குள்ளே வேண்டாம் நம்பியார் வேலைகள் ஆயுத பலம் வேண்டாம் அழிவுகள் நமக்கு வேண்டாம் வேண்டும் எமக்கு இப்போ மனிதபலம் இதற்கு ஒப்பு உண்டா உலகில் நிகர் ஒருவன் வருவான் என்று ஒவ்வொரு நாளும் நாம் ஏங்குவதை விடுத்து எழுவோம் ஒன்றாகி ஒரு நாள் இந்த உலகிற்கேதிராக கூட்டுவோம் நம் உறவுகளை காட்டுவோம் நம் பலத்தை கொட்டுவோம் முரசைத் தமிழன் விட்டுக் கொடுக்கமாட்டான் என்றும் …
-
- 21 replies
- 2.1k views
-
-
வேட்டைக்காறி....... இவள் நச்சுக்குண்டைப் போடவைத்த மோசக்காறி....... நாடு விட்டு நாடு வந்த வேட்டைக் காறி...... இத்தாலி நாடு தந்த அகங்காரி..... அப்பனோ சர்வாதிகாரி..... ஆத்தாளோ இறுமாப்புக்காறி...... மகளோ அடங்கா பீடாறி...... உன்னால் நாம் நிற்கும் நிழலும் இழந்தோம்... இருக்க வீடும் இழந்தோம்.... படுக்க பாயும் இழந்தோம்.... உண்ண உணவும் இழந்தோம்..... உன் தாலி போனதால் எங்கள் தாலியையும்: அறுக்க நினைத்தாயே...? உனக்கு அப்பாவித் தமிழர் நாம் என்னதான் பாவம் செய்தோம்....? காடேறி உனக்கு தாலியின் மகிமை தெரியுமா...? காலையில் ஒண்டு மாலையில் ஒண்டு அது உன் கலாச்சாரம்....! ஒருவனுக்கு ஒருத்தி அது எங்கள் கலாச்சாரம்..... இந்திராவ…
-
- 16 replies
- 1.7k views
-
-
வேணாம் மச்சான் வேண்டாம்.....!!! ----------------------------------------------- ஊரில் இருக்கும் மச்சான் சுகமாடா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் எண்டு கேள்விப்பட்டன்!!! உன் முடிவில் "நியாயம்" இருக்கிறது இருந்தாலும் "யாதார்த்தம்" வேறு மச்சான் கோதாரி விழுந்த காசுதான் எங்களின் சந்தோசங்களை முடிவுசெய்கிறது அதுதான் எங்களின் வாழ்வையும் தீர்மானிக்கிறது கிட்டடியில அவுஸ்திரேலியா வந்த பக்கத்து வீட்டு சேகர் அனுப்பும் காசில்.. "மாபிள்" பதிச்சு வீடு எழும்புது "ஏசியும் கலர் கலரா பெயின்றும்" வீடு பழபழக்குது..!! "ஐபோனும் கீறோ கொண்டாவும்" கனவில வந்து சாவடிக்குது என்ன இழவுக்கு இங்க கிடந்து சாவான் என உன் மனம் அலைக்கழியுது கொப்பர் அடிக்கடி புறு…
-
- 3 replies
- 1.2k views
-