கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. பெருந் தமிழ்நாடும் தமிழ்நாடும் பக்கந்தான்.. இனியேனும் தணியாதோ யுத்தந்தான்... இளங்காற்றோடு இசைகேட்டேன்.. சந்தந்தான்.. மழலை சிரிக்க... மான்கள் குதிக்க... மண்ணெல்லாம் மலரோடு ஜொலிக்க...முற்றங்களெல்லாம்.. மங்கையர்.. கரங்கள்.. வளையல் குலுங்க.. மாக்கோலம்..போட்டிருக்க... இமயங்கள் காண.. இளைஞர்கள் யாவரும்.. ஞானஒளி ஏற்றிவைக்க.. ஏழ்மையில்லை..இனி ஒரு பயமுமில்லை.. நள்ளிரவில்.. மின்விளக்கு சிரிக்க... வரும்... தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. மண்ணின் வளத்துக்கு உரமான உள்ளங்கள் வாழ்க.. மண்ணின் வளத்துக்கு உரமான உதிரங்கள் வாழ்க...
-
- 20 replies
- 2.9k views
-
-
இன்னுயிர்தன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி மலர்களைத்தூவிநாம் வணங்கிடுவோம். விதையெனமண்ணில் வீழ்ந்தவரே-உங்கள் விதைகுழிகளில் வேர்பாய்ச்சி வான்வெளி எங்கும் கிளைபரப்பி விழுதெறிந்து வளர்வோம் இனியென்றும் வீழ மாட்டோம் காலக்கிண்ணமதில்-இனியும் கனவுகளையா குடிப்போம் இல்லை...இல்லை... தலைவனின் தடங்களில்-விடுதலை தேரிற்கு வடம் பிடிப்போம். நாமாண்ட மண்ணும் எமையாண்ட தமிழும் இனியொன்றும் மாழாது-எம் உறவுகளைக்கொன்றபகை இனியென்றும் வாழாது. இது....., தமிழ்த்தென்றலின் வீடு புலிப்புயல்கள் உலவும்காடு பகையே....நீ..., …
-
- 9 replies
- 2.9k views
-
-
நாங்களும் காதலில் நாங்களும் காதலில் நான் ஒரு பெண்னை காதலித்தேன் அவள் அம்மாக்கு என்னை பிடிக்கவில்லை மறந்து விட்டேன் அவளை என்னையும் ஒரு பெண் காதலித்தாள் என் அப்பனுக்கு அவளை பிடிக்கவில்லை மீண்டும் நினைப்பது இல்லை அவளை நான் நாணும் ஒரு பெண்ணும் காதலித்தோம் எங்களுக்கே எங்களை பிடிக்கவில்லை பிரிந்து விட்டோம் ஒரு முறை காமத்திடம் தோற்ற பின்
-
- 19 replies
- 2.9k views
-
-
இன்றோடு.....! இன்னுமொரு ஆண்டு . எமைக் கடந்து செல்கின்றது!, முள்ளி வாய்க்காலின், வெள்ளைக் கடற்கரையில், துளை போடும் சிறு நண்டுகள், இடை நடுவில்....., துளையிடுதலை நிறுத்துகின்றன! ஏதோ...! அவற்றின் கால்களுக்குத், தடை போடுகின்றன! வேறென்ன...? இடை நடுவில் எமைப் பிரிந்த, எங்கள் சொந்தங்களின், எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்! உழுது விதைக்கப் பட்ட, பாளையங்கோட்டையின் நினைவில், மனம் புதையுண்டு போகின்றது! அன்றைய..., பாஞ்சாலங் குறிச்சியின், குறு நிலத்து மன்னர்கள், இன்றைய ராஜதந்திரிகளாய், எமக்கென ஒரு தீர்வு தேடுகின்றார்கள்! பதின்மூன்று..பதினாலு., பத்தொன்பது என்று, தீர்வுத் திட்டங்களின், வரிசை நீள்கின்றது! எல்லோரும்....! இணைந்து வாழும் …
-
- 12 replies
- 2.9k views
-
-
குஞ்சு பொரித்து மூன்றே நாளுக்குள் முட்டையிலிருந்து எட்டிப்பார்த்த குஞ்சுகளுக்காய் இரைதேடவந்த ஜோடிக்குருவிகள் வேடனின் வலையில் சிக்கி கூண்டுக்குள் இன்று காட்சிப்பொருளாய் வித்தை காட்டிப் பிழைக்கின்றான் வேடன் வேடிக்கை பார்க்க வருபவர்களோ இறைக்கை இருந்தது தானே பறந்திருக்கலாமே என்றும் கண்ணிருந்தது தானே பார்த்திருந்தால் மாட்டி இருக்கத்தேவையில்லை தானே என்றும் வியாக்கியானம் கூறுகிறார்கள் தத்தமக்கு ஏற்ப வியாபாரிகள் வந்து விலை பேசிப் போகிறார்கள் வேடனின் குடும்பம் சமையலுக்கு தயாராகிறது பார்ப்பவர்கள் மனங்களில் பரிதாபம் மட்டும் சிலர் சிவனை வேண்டுகிறார்கள் சிலர் புத்தரை வேண்டுகிறார்கள் சிலர் அல்லாஹ்வை வேண்டுகிறார்கள் சிலர் யேசுவை வேண்டுகிறார்கள் …
-
- 11 replies
- 2.9k views
-
-
பிறப்பால் இவன் செய்த குற்றம் ஏதும் இல்லை. இருந்தும் பெற்ற தாய் நிராகரிக்க.. மனிதக் கருவி துணை இருக்க.. வளர்ந்தவன் Knut எனும் பெயர் தாங்கி.. தன் அழகால் குறும்பு செய்யும் நடத்தையால் உலகையே கவர்ந்தான். பாவம்.... 30 ஆண்டுகள் நீண்ட ஆயுள் வழக்கிருந்தும்.. மானுட உலகில்.. அவன் இருப்பு வெறும் நான்கு ஆண்டுகள் தான். விடைபெற்று விட்டான்.. போதும் பூமிப் பந்தில் இந்த வாழ்க்கை... வேண்டாம் எனியும் மனிதரோடு கொண்ட சகவாசம் என்று. இன்று கண்ணீரோடு அவன் நினைவில் இவன்..! http://www.bbc.co.uk/news/magazine-12805534
-
- 4 replies
- 2.9k views
-
-
மழைத்துளியின் சோகங்கள் மண்ணுக்குத்தெரிவதில்லை மழலையின் இனிய மொழி மற்றவர்க்குப் புரிவதில்லை மலர்களின் வாசம் தன்னை மலர்க்கூந்தல் அறிவதில்லை மங்கையின் மன ஆழத்தை மன்மதனும் அறிந்ததில்லை இதயத்தின் உணர்வுகளை இதயங்கள் உணர்வதில்லை தந்தையின் சுமைகள் இளமையில் புரிவதில்லை தாயின் அன்புதன்னை தானிருக்கும்போது புரிவதில்லை கண்ணீரின் ஈர வலியது கண்களுக்குப்புரிவதில்லை வானவில்லின் வர்ண ஜாலம் சந்திரனுக்குத்தெரிவதில்லை உடலின் முடிவுதன்னை உணர்வுக்குப்புரிவதில்லை காலனின் வருகைதன்னை காலத்துக்கும் தெரிவவதில்லை காதலின் வலிகள் காமுகர்க்குப்புரிவதில்லை நட்பின் இலக்கனம் நயவஞ்சகர்க்குப்புரிவதிலை இலக்கியனின் உணர்வுகள் இங்கு உங்களுக்குப்பு…
-
- 23 replies
- 2.9k views
-
-
கப்டன். மொறிஸ் [செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989 ] சின்னஞ்சிறு பாலகனாய்... முற்றும் அறியாத பிஞ்சாய் நான், நஞ்சு தரித்த எம் வீரரை... நட்புடனே பார்த்து நின்றேன்! கிழமைகளில் சில நாளில் இனிமையாய் அவர்களுடன், எங்கள் வீட்டில் உணவுண்டு நன்றி சொல்லிச் செல்லும் வீரர்... மறுமுறை வரும்போது ஒருவரேனும் குறைவார்... தேடுவேன்!! "மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்! அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்! வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு, அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன! ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!! தலைவன் வழியில் நின்றவன்... தமிழருக்கு காவலன்! இந்தப் பாலகன் கவிதைக்கும் அவன்தான் நாயகன்! அவன் கருங்குழல் ஆயுதந்தனை …
-
- 10 replies
- 2.9k views
-
-
ஏங்குகின்றேன்! உன்னை எப்பொழுது கண்டேனோ அன்று முதல் நான் என்னிடம் இல்லை உன்னால் பசிஇ உறக்கம் ஏன் நிதானத்தை கூட இழந்தேன்! எனக்குள் நானே சிரித்துக் கொள்கின்றேன்! எனக்குள்ளே ஏதேதோ பேசுகின்றேன் இதெல்லாம் உன்னாலடா! நான் எதற்கும் ஏங்கியதில்லை உன்னனக் கண்ட பின் நீ எனக்கு கிடைக்க வேண்டும் என ஏங்குகின்றேனடா! உண்மையில் காதல் என்பது ஒரு நோய் அது எப்போ வரும்இ போகும் என புரியாது என்னுள்வந்துவிட்டது அந்தநோய்! என்னை குணமாக்குவாயா? நீ எனக்கு கிடைப்பாயா? சொல்லடா சொல்!!! :roll: :roll: :roll: (சுட்டது) நன்றி லங்காசிறி.கொம்
-
- 12 replies
- 2.9k views
-
-
-
- 7 replies
- 2.9k views
-
-
ஆதவன் தேரிலே அரியணை ஏறியே அகிலம் ஒளிரவே அக்கினி சுரந்தனன் பகலவன் செங்கதிர் பங்கயம் தீண்டவே பனிபட்ட இதழது பகலாய் முகிழ்ந்தது களிறின் பிளிறல் சங்காக முழங்கிட செவிகள் இரண்டும் சாமரரை வீசவே துதிக்கையால் துதித்தது தூயவன் ஞாயிறை இளம் குளிர் காற்று இதயத்தை நனைக்க இன்பம் பொங்கிட இனிமையாய் புலர்ந்தது காக்கையின் கரைதலும் குயிலின் பாடலும் மஞ்ஞையின் அகவலும் காதில் ஒலித்திட கரைந்தது இருள் மலர்ந்தது பகல்
-
- 6 replies
- 2.9k views
-
-
-
ஆடிப்பிறப்பு விடுதலையைத் தேடி... ... எத்தனையோ ஆடிகளை கடந்து போயிற்று என் வாழ்க்கை. இன்னமும் நானும் சேர்ந்துபாடிய பாட்டின் மகிழ்ச்சிக்குள் இருந்த விடுதலையை நான் அனுபவித்ததேயில்லை. நாளைகள் கடந்து நிரம்ப நாட்களாயிற்று. இப்போ என் தோழர்களுமில்லை. ஆனந்தமுமில்லை. கொழுக்கட்டையும்..கூழும்.. கனவாகிப் போன வாழ்க்கைகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது மனசு. இப்போதும்.. பற்கள் விழுந்து போன என் தாய்.. என்னையும் நினைத்தபடி தன் சுருக்கம் விழுந்த கைவிரல்களால் கொழுக்கட்டைக்கு பற்கள் பதித்துக் கொண்டிருப்பாள். எமது கனவுகளைப் போலவே குமிழிகளாய் வந்து வந்து வெடித்து வெடித்துப் போகிற கொதிக்கும் தண்ணீருக்குள் கூழுக்காக மா உருண்டைக…
-
- 3 replies
- 2.9k views
-
-
சொல்லத் தெரியவில்லை சுடர் போல எரிகிறது மனம் விம்மி வெடித்து நேற்றைய வானம் போல் பொழிந்து தள்ளிட விழிகள் இரண்டும் முட்டிக் கிடக்கின்றன அழுவதற்கான நாள் இது அல்ல எழுவதற்கான நாள் இது என்று உள்மனம் உறுதியாய் சொன்னாலும் விழி உடைத்து விழி நீர் சொரிகிறது... #ஈழத்துப்பித்தன் #மே18 2016
-
- 3 replies
- 2.9k views
-
-
பட்டும் படாமல் இருப்போரை எல்லாம் தட்டிக் கொடுத்து தன் பக்கம் ஈர்க்காமல் - தலைகனத்து கொட்டிடும் தேல் எனவே கொட்டி கொட்டி வெட்டி விடுவதுதான் விடுதலைக்கு பங்களிப்பா? பெயருக்கு தலைவராக இருப்போரெல்லாம் பெரிய தலைவர்களை எல்லாம் சரியாக பகைத்து கொண்டே இருந்தால் யார் பக்கம் சாய்வார் அவர்? பட்ட மரமென்று ஒன்று இருந்தால் விட்டு வெட்டினால், வேர் விட்டு வெட்டினால் சட்டெனெ பெய்யும் மழையில் சடுதியில் துளிர்த்துவிடும் ஒட்ட வெட்டினால் நட்டம் நமக்கல்லவா? உயிர் காக்கும் பிரச்சனைகள் இருக்கும் போது மயிர் காட்டி கட்டுரை வரைவதும் - பதிலுக்கு வயிற்று பிழைப்பிற்க்கெ வக்காலத்து வாங்குகிறார் என்பதும் உயிர் காக்குமா? நம் தமிழர் உயிர் காக்குமா? எலி கூட்டமல்ல க…
-
- 10 replies
- 2.9k views
-
-
-
- 16 replies
- 2.9k views
-
-
வா..வா!! ----------------------- கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே 2005 போய்வா தோழா! சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை கொன்று தொலைத்தாய்! என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி? இருந்தாலும் போய்வா! 2006 ஏ வா வா ! வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா? வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை.. பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா? கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்! வாய் மூடிபோன பீரங்கி வாய்களை ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்! அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும் எரித்திடாதே.. அணைத்திடாதே! தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-…
-
- 15 replies
- 2.9k views
-
-
காவியக்காதல் முதல் கலியுக காதல்வரை இதிகாசம் முதல் இலக்கியம் வரை கனவுமுதல் கற்பனைவரை அப்பப்பா பெண்கள்பாடே பெரும் பாடு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள் ஆதிமுதல் அந்தம்வரை அத்தனையும் உங்கள் கற்பனைக்குள் ஆனால் இவர்கள் கோலங்கள் தான் இங்கே அழங்கோலமானது எதற்காய் இத்தனை பரிகாசம் யார் இவர்கள் பொம்மைகளா? மாற்றங்களே இல்லாது வாழ்வதற்கு இல்லை அதிசய பிறவிகளா? இல்லை உணர்ச்சியற்ற ஜடங்களா? எதற்காக இவர்கள் மீது இத்த வெறுப்பு இதை புரியாது தவிக்கின்றது இந்த வெள்ளை ரோஜா
-
- 18 replies
- 2.9k views
-
-
பொய்மையும் கயமையும் கூடிக் கொக்கரிக்க , ஒட்டிய வயிறும் பஞ்சடைத்த கண்களும், உங்களை நோக்கியே ............. நீங்கள் சொல்கின்ற ஒரு இசங்களும் என்செவியில் எட்டவேயில்லை . நீங்கள் உல்லாசமாய் உங்கிருக்க , குடும்பமாய் உறுமினோம் . ஊழிக்காற்றில் உக்கியே போனோம் . எச்சங்களாய் நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக , இருப்பதற்கு வக்கற்றவர்களாக இரைப்பையை நிரப்ப கருப்பையை விற்கவே துணிந்தோம் . முன்பு நான் உறுமிய புலி . இன்று நான் சருகு புலி . உங்கள் உல்லாசத்தில் ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் , நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ...... எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........
-
- 23 replies
- 2.9k views
-
-
பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும். ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான். இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும் …
-
- 18 replies
- 2.9k views
-
-
ஏழை குழந்தையின் கண்கள் மின்னியது.... மாற்று உடுப்பு கிடைத்தது எண்டு எண்ணி ... பாவம்.. தன்னை போல அதுவும் 'வேண்டாம்' என ஒதுக்க பட்டவை எண்டு அறியாமல் ...
-
- 1 reply
- 2.9k views
-
-
கொலைக் களத்தில் கோல மயில்..... கவிதை - இளங்கவி.... மாஞ்சோலை ஒன்றிலே மாமர நிழலின் கீழ் மன்னவனின் மடியிலே மயிலொன்று படுத்திருக்கு..... மாங்கனிகள் பாரத்தில் கிளைகள் எல்லாம் நிலம் தடவ.... மயக்கும் விரல் கணையால் மடி கிடந்த பொன்மயிலின் மென் ஸ்பரிசம் அவன் தடவ... ச்சீ.. வேணான்டா.... கையை எடு.... நான் வீட்டை போப்போறன்.... இல்லை..இல்லை நாளைக்கு வயல் வேலை நான் வர மாட்டேன்டி.. அதனாலே இன்று உன்னை தொட்டுவிடப் போறேன்டி..... இல்லையடா... செல்லம் இது வேண்டான்டா... இப்போ நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால் நாம் வீட்டைபோவோம் இப்போ... சரியடி போவோம்.... காலையிலே எனக்கு என்ன சாப்பாடு கொண்டருவாய் நான் மண்வெட்டி பிடிக்கம…
-
- 22 replies
- 2.9k views
-
-
நாம் ஆயிரம் எழுதலாம். ஆனாலும் ஒரு கவிஞர் எழுதுவது போல் வருமா? கவிஞர் பழனி பாரதி புதிய இந்தியா என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கவிதை மோடியின் டிரவுசரைக் கழட்டுகிறது.. விவசாயிகளுக்கு வாய்க்கரிசி போடுவதுதான் புதிய இந்தியா நெசவாளர்களுக்கு சவத்துணி நெய்வதுதான் புதிய இந்தியா சில்லறை வணிகர்களுக்கு நெற்றிக்காசு வைப்பதுதான் புதிய இந்தியா மாட்டுக்கறி உண்பவரை கொன்று கொன்று மனிதக்கறி உண்பதுதான் புதிய இந்தியா இல்லாதவனின் கோவணத்தை பிடுங்கி இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பதுதான் பு…
-
- 3 replies
- 2.9k views
-
-
Feb 10 2005, 08:49 PM இதயத்து சேகங்களை இறக்கிவைத்து சுமக்கும் சுமைகளையும் சொல்லிட வார்த்தைதேடி கலைந்துபோகும் என் கனவுகளை கலைத்து பிடித்து கட்டிவைக்க விழையும் வாலிபன்நான் வசந்தத்தை அனுபவிக்கும் வயதில் வறுமையை தாங்கலாம் வெறுமையை...........?? முடியவில்லை வீதியில் வீசப்பட்டடோ விக்கப்பட்டவனே இல்லை சொந்தம் சுற்றம் எல்லாம் உண்டு உற்றாருக்கும் பெற்றாருக்கும் உதவி உதவியே உதிரிபாகங்கள் தேய்ந்துபோய் உடலும் மனமும் சோர்ந்து.....என் துக்கங்களை தூக்கம்மட்டும் அவ்வப்போது தத்தெடுத்து கொள்ளும் இதோ என்னை தத்து கொடுத்துவிட்டேன் நிதந்தரமாக (ஒரு நண்பனின்உண்மை கதையிது
-
- 13 replies
- 2.8k views
-
-