Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆசைகள் அங்கும் இங்கும் ஒன்று தான்... உடலின் சேர்க்கையில் திரவங்களின் கலப்பில்.. வந்தன விளை பொருட்கள்..! தாயென்றும் தந்தையென்றும் உறவுகள்.. சமூகமென்றும் மக்களென்றும் கூட்டங்கள் கூச்சல்கள்...! எல்லாமே இயற்கையின் விதிப்படி..! ஆனால்... போட்ட குட்டிகளுக்கு இரை தேட வழியின்றி மனிதன்..!! போட்ட குட்டிகளுக்காய் உடல் ஒட்டிய போதும்.. இரைக்காக இரங்கும்.. இதுவும் ஓர் உயிர்ப்புள்ள.. பிராணி தான்..! "சாட்" செய்து சோடி பிடித்து கை கோர்த்து.. காதலித்து மேடை போட்டு வேதம் ஓதி.. தாலி கட்டி தேன்நிலவு கண்டு வந்தால் என்ன.. உடல் ஒட்டி குட்டையோடு.. வீதியோரம் இழுபட்டு நொந்து நூலாகி வந்தால் என்ன விளை பொருள் எங்கும் ஒ…

  2. பால்குடியாக ஒருதலை - குழந்தை பருவமடைய ரெண்டுதலைகள் - வாலிபன் கல்விகற்க மூண்டுதலைகள் - மாணவன் காதல்கொள்ள நாலுதலைகள் - காதலன் கலியாணம் செய்ய அஞ்சுதலைகள் - கணவன் பிள்ளைபெற ஆறுதலைகள் - அப்பா பிள்ளைவளர்க்க ஏழுதலைகள் - அப்பப்பா.. வேலை செய்ய எட்டுதலைகள் - உழைப்பாளி வியாதிக்காரனாக ஒன்பதுதலைகள் - வயோதிபன் விடைபெற்றுக்கொள்ள பத்துதலைகள் - அப்புச்சாமி அன்புடன், தறுதலை :wub:

  3. மொழியென்று ஒன்றாய் திரண்டாலே...! ------------------------------------ தமிழரின் உடல்கள் அடுக்கப்பட்டன நிலத்தின் இருப்பைத் தக்க வைக்க ஒற்றுமை மணி சிதறியதால் ஒற்றர்களாகப் பலர் நுளைந்தார் சத்தியம் காப்பதே உறுதியென சளைக்காது உடல்களால் எல்லையிட்டார் சத்தியம் வெல்வது உறுதியெனச் சண்டாளர் கணித்தார் கவனமுடன் பட்டினியாலும் மடியவில்லை பரிசுகளாலும் வீழவில்லை உறவாடி வீழ்த்துதல் நல்லதென உலகெங்குமிருந்து உள்நுளைந்தே அரசொன்றை வீழ்திய மகிழ்வினிலே நரந்தின்னும் நாடுகளானதன்றோ நாடுகள் வாழ நாம் சாகும் சூனியமான சூழலன்றோ சூனியமான சூழலை நாம் எம் சாதுரியத்தால் மாற்றிடவே மதமென்று நின்றால் தோல்விகளே மொழியென்று ஒன்றாய் திரண்டாலே உலகெங்கள் உரிமைக்கு வழிவிட…

    • 8 replies
    • 742 views
  4. Started by வல்வையூரான்,

    [size=1] சும்மா இருந்தாலும்[/size][size=1] இருக்க முடிவதில்லை[/size][size=1] இணையம்.[/size]

  5. எனக்கொரு வரமருள் பராபரமே.... புழுதி எழும் ஊரின் புண்பட்ட வீதிகளில் விழுது விட்ட ஆலமரத்தின் பழுது பட்ட திண்ணையில் தொழுது எழும் கோயிலின் அழகு மிகு தேரடியில் உழுது நாற்று நடும் ஊரின் வயல் வரப்பில் பொழுது விழும் நேரம் களித்து மகிழ்ந்து நாங்கள் கால்பந்து விளையாடும் கல்லூரித்திடலில் ஒழுகும் வழி சொன்ன பள்ளியின் வகுப்பறையில் ஆழ வேரெடுத்து அழகாய் கிளைபரப்பி நீள நெடுத்து நிற்கும் முற்றத்து மாநிழலில் வீழமாட்டேனென-திணவெடுத்து சோளக்காற்றிடையும் வாழ நிமிர்ந்து நிற்கும்-தென்னஞ் சோலை மர நிழலில் வாழ வழி பல தந்து வளமும் தந்து-எம் நீள நெடும் பரம்பரையின் வரலாறு தந்த வீரம் படுத்துறங்கும் விடுதலைத்திருநாட்டில் என் வாழும் நாட்களில்-இன…

  6. கடவுள் என் கனவில் வந்தார் எப்படி இருக்கிறது பூமி என்றார் உங்களுக்கு தெரியாத என்று கேட்டேன் வேலைப் பழு எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லை என்றார் என்னிலும் கொஞ்சம் கோபமாகத்தான் இருந்தார் ஏதோ தேவைக்காய் அவரிடம் அடிக்கடி போய் வந்தேன் எல்லாமே வந்த பின் அவரையும் மறந்தேன் இருந்தபோதும் அனைத்தும் அறிவார் எவன் கள்ளன் எவன் நல்லவனென மனிதர்கள் மனிதர்களாக இல்லை என்றேன் மானிடத்தை ஏன் கொன்றீர்கள் என்றேன் தான் இல்லை அது நீங்களே என்றார் அழிவுகள் தொடர்ந்து கொண்டே போகிறதே என்ன செய்வதாய் உத்தேசம் என்றேன் கட்டுக்கு அடங்காமல் போய் விட்டது அதிகாரம் என் கைகளை விட்டு என்றார் மதமும் …

    • 17 replies
    • 2.7k views
  7. அமரர் அசோகமித்திரன் அவர்களுக்கு என் அஞ்சலிகளும் பிரிய பிரியாவிடையும் * 1976 அல்லது 1977ம் வருடத்தில் யாழ் பல்கலைக்கழக முதல்வர் கலாநிதி கைலாசபதியின் அழைப்பின்பேரில் எழுத்தாளரும் அப்போதைய கணயாழி ஆசிரியருமான அசோக மித்திரன் இலங்கைக்கு வருகை தந்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவன் என்கிற முறையில் நானும் அமரர் அசோகமித்திரன் அவர்களது வரவேற்பிலும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினேன். அவர் தமிழ் நாடு திரும்புகையில் எனதும் சேரனதும் கவிதைகள் உட்பட ஈழத்து எழுத்துகள் சிலவற்றை எடுத்துச் சென்றார். * அமரர் அசோகமிதிரன் கணையாழி இதழில் ”பாலி ஆறு நகர்கிறது” என்ற எனது கவிதையை வெளியிட்டதன்மூலம் தமிழகத்துக்கு என்னை அறிமுகம் செய்தார். சேரன் கவிதைகளையும் அவர்தான் முதலில் வெளியிட்டிருக்கக் கூ…

  8. Started by சுமங்களா,

    கெந்தி விழையாடிக்கொண்டிருந்த அந்திமாலைப் பொழுதொன்றில் அடிவயிற்றில் வலி கோடு கீறப்பட்டு குந்தவைக்கப்பட்டேன் ஆளாயிட்டாள் அம்மம்மாவின் குரல் அக்கம் பக்கத்து பெடியளோடை அடிச்சுப் பிடிச்சு விழையாடுறதையும் விளக்கு வைச்சா பிறகு வெளியாலை போறதையும் நிப்பாட்டு அம்மாவின் குரல் இருக்கிற பிரச்சனைக்குள்ளை இவளும் குந்திட்டாளா ஒருத்தனிட்டை ஒப்படைக்கிறவரை ஒரே செலவுதான் அப்பாவின் குரல் என் தனிமையை போக்க எவராவது வருவாரா என வாசற்படிவரை வந்தேன் வயசுக்கு வந்த பெட்டைக்கு வாசல்லை என்னடிவேவை அண்ணனின் குரல் அன்று அடிவயிற்றில் தொடங்கிய வலி இதயத்திலேறி இன்று மூளையில் பைத்தியமாக்கி…

  9. நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... அவன் விழிகள் வேட்டை நாயைப்போல வேட்டையாட துரத்துவதாயும் கொடும் கனவொன்றில் பெரும்பாம்பொன்றின் வாயில் சிக்கியதாயும் துப்பாக்கி முனையில் நானே நிற்பதைபோலாயும் அத்துணை பயத்திலும் ஏதுமற்ற ஞானியைப்போல எப்படி இயன்றதென்றும் இன்னோரன்ன புகழ்தலும் பிதற்றலும்,இரங்கலும் எள்ளலுமாய் நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... எனக்கு, ஒவ்வொரு இரவும் பல்லாயிரம் வன்னி இரவுகளை நினைந்தும்,கதைத்தும்,அழுதும்,அரற்றியும் புலர்கிற பொழுதெலாம் புத்திரர் நினைப்பில் இதுவும் இன்னோர் இரவே....

  10. கடுநோய் கொண்டும் காற்றாய்ப் பறந்து கனலாய் தெறிக்கும் விதமாய் பேசி இடுமோர் வெற்றிக்கிணையே இல்லை எதிரிக்கிவரோ பெருமோர் தொல்லை எதானால் இவரை அழைத்தாய் எங்கள் இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லை பதமாய் பொங்கிப் படைக்கும்வேளை பானைஉடைத்தாய் பார்த்துக்கெடுத்தாய் மனதில் உரமும் செழிக்கும்வேளை மரணம்தந்தே மயங்கச்செய்தாய் கனவில்மட்டும் நிம்மதி என்று காலமெல்லாம் கலங்கச் செய்தாய் உரையைக்கேட்க இதயம் மகிழும் உண்மைப் பேச்சில் உணர்வும் கசியும் வரமாய் தமிழர்க் கொளியாய் வைத்து வழியில் செல்ல இருளைத் தந்தாய் இருந்தால் எங்கள் ஈழம் வெல்லும் என்றா இவரை கொண்டாய் சதியை பெரிதாய்போட்டே பிரிவைச்செய்தாய் பிழையை செய்தாய் பேசற்கரிய தமிழாம் ஈழத்தலைவர் எல்லாம் தர…

  11. கிறுக்கு கிழவி! சென்ற ஆண்டு வந்த ஆண்டுடன்........ அஞ்சலோட்டம் புரிந்தது........ கூடி ஓடின காலம்....... பார்த்துப்பார்த்து எனை வளர்த்தவள்....... இப்போ படமாய் என்னெதிரே! முட்டிய வயிறுடன் நானிருந்த போதும்.. இன்னும் ஒருவாய் ஊட்டிவிட ஏங்கியிருந்தவள்....... அம்மா அடியிலிருந்து என்னை ..... காத்த காவலரண்! அடி வயிற்றில் சுமக்காவிடிலும்... பிரசவிக்காமாலே ...... பிரசவ வேதனை கொண்ட கடவுள் அவள்! தடக்கி தடக்கி நான் நடந்த நாளில் இன்னுமொரு தாயானவள்...... தடியூன்றி அவள் நடந்த நாளில் ...... என் சேயானவள்......... சொல்லாமல் ஓடிட்டாள் சுயநலகாரி! அழுக்கு படிந்த தாவணி ..... முடிச்சு அவிழ்ப்பாள்- ரகசியமாய் தெருவோரம் - மணி சத்தம் கே…

    • 16 replies
    • 3k views
  12. Started by piththan,

    உறங்குவதும் உண்பதும் மட்டும் உன்வேலை என்றால் ஆடைகள் உனக்கெதற்கு? தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது-யாழ்பாடி

    • 2 replies
    • 1.1k views
  13. யாழவளே உனக்கு வயது பதினேளா ?? அதனால் தான் நீ அழகுடை மகளாகி அற்புதங்கள் கொண்டு ஆண்களையும் பெண்களையும் ஆவலொடு உன்பின்னே அலைய வைக்கின்றையோ ?? தேன்மதுரத் தமிழில் தெவிட்டாது தினமும் தெம்மாங்கு பாடி நீ தீந்தமிழில் திசையெங்கும் தமிழ் பரப்பி நிற்கின்றையோ?? வைகறையில் எழுந்தவுடன் உன் வாசல் வரை வந்து உன்முகம் கண்டபின் தான் ஊர் காணப் போகின்றார் உலை வைக்க முன்னரும் உன்னைத்தான் பார்க்கின்றார் உன்மத்தம் கொண்ட உறவுகளாய் உன் தமிழர் எத்தனை வேலைகளை எளிதாகச் செய்தாலும் ஏக்கத்துடன் உன்னை எண்ணியே செய்திடுவர் எப்போ மாலை வரும் என்று உன்னைப் பார்ப்பதற்காய் உற்ற துணையாக உன்னைத் தான் நினைத்து உறவாட வேண்டுமென உணர்வாய் ஏங்கிடுவர் மனைவியின் மந்திரங்கள் உள்ளத்தில் ஓதாது…

  14. Started by nedukkalapoovan,

    வரிப் புலிகள் வாழ்ந்த காலம்.. விறகு வெட்டி கட்டி கண்டி வீதி வழி நடுச்சாமம் தாண்டியும் பெண்டிர் கூட மிதித்து வைக்க ஓடிய வண்டிகள்.. யாழ் நகர் வந்து சேர செம்மணிப் பேய்கள் கூட அமைதி காத்தன...! வானரப் படைகள் வாழும் காலம்.. விறகுவெட்டியும் தூக்கில் தொங்குகிறான் மாற்றான் மனையாளொடு கட்டியணைத்தபடி. பெண்டிர் மிதிக்கா வண்டிகள் பெற்றோலில் ஓட பெற்றோர் ஓடுகிறார் அவர் பின் பிள்ளை ஓடிப் போயிடுவாளோ என்றே பதறியடித்தபடி. செம்மணிப் பேய்களை விஞ்சி.. கோத்தாவின் ஏவல் பிசாசுகள்.. கிறீஸ் பூதங்களாய் மகளிரை மட்டும் குறிவைத்து கருவறுக்கும் நிலை..! தமிழினம் ஈழத்தில் வேரறும் நிலை...! புட்டுக்கு தேங்காய்ப் பூவாய் இருந்த ச…

  15. மே 18!!! குற்றுயிராய் ஒரு உயிர் குடல் கிழிந்து ஒரு உயிர் பாதி எரிந்தபடி ஒரு உயிர் உருக்குலைந்து ஒரு உயிர் அழுகுரலோடு ஒரு உயிர் அனாதையாய் ஒரு உயிர் நஞ்சுண்டபடி ஒரு உயிர் கடந்து ஓடினோம் உணர்வும் செத்து உயிரும் செத்து முள்ளிவாய்க்கால் வரை!!! எல்லாம் தின்று ஏப்பம் விட்டு நந்திக்கடலில் கறை படிந்த கை கழுவி ஒன்றுமில்லை என்றான் புத்தன்!! மே மாதம் நினைவழியா மாதம் இன்றும் பிண்வாடையும் கந்தகவாசமும் நாசில் அரிக்கும் மாதம்... சூட்சிகள் செய்து மனட்சாட்சிகள் இல்லா கொலைக்களம் சாட்சிகள் ஆனவர் நாக்குகள் அறுத்து ஊமைகள் ஆன சோகம் செங்குரிதி ஓடி வெந்தணல் ஆன எம்மவர் நினைவுகள் அழியா மாதம் இது ஊழிக்கூத்து நிகழ்ந்த மாதம்! அடி மனதோடு…

    • 3 replies
    • 849 views
  16. இங்கே தொடராக இந்து மதத்தை இழிவு படுத்துவதன் நோக்கமாக திட்டமிட்டு இவர்களுடைய பரப்புரை தொடர்கிறது... இலங்கையில் உள்ள இந்து மதம் ஆட்சி செய்யவில்லை இந்துவாதம் ஆளவில்லை...இதனை தெளிவாக பலர் சுட்டி காட்டீயும் இந்த நாஸ்தீக வாதிகள் அல்லது அரைகுறை பண்டிதர்கள் புரிய முணையவில்லை... இந்தியா இந்துவாத அரசியலை இலங்கை அரசியலுடன் ஒப்பிடுவதானது ஏற்பபுடையதல்ல... எமது ஈழத்தமிர் ஆட்சியல் இந்துவாதம் தலை தூக்கவில்லை..ஆளவும் இல்லை... நீங்கள் மதங்களை இழியுங்கள் அது உங்கள் மடமை இந்த மதங்களை இழிப்வர்கள் அவர்களுடைய குடும்ப உறவுகள் எந்த மதத்தை சர்ந்திருக்கின்றன என்பதை புரிதல் வேண்டும்...ஒரு மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி கட்டுவது தவறல்ல மாறாக கடவுளே இல்லை மனிதனின் மேலொரு சக்த்தியி…

  17. பாரத மாதா வின் கவட்டுக்குள் ஒரு சாக்கடை அங்கோர் அழுக்கு தின்னிக் கெழுத்தி.. அதன் பெயர் ஜனநாயகம்..! கெழுத்தியின் உடலுலோடு ஓர் ஒட்டுண்ணி அதன் பெயர் சுப்பிரமணியம் சுவாமி. அந்த ஆசாமிக்கு ஒரு கட்சி அது தேர்தலில் நின்றதில்லை ஆனால் வெற்றி முழக்கத்திற்கு குறைவில்லை..! மக்களோ அந்த ஐயனின் குசும்பில் தினமும் சொல்லாமல் செல்கின்றார் கீழ்ப்பாக்கம்..! சுவாமிக்கு அடிக்கடி நெஞ்சில் ஓர் வலி உள்ளூரில் ஓய்வின்றிய புறணிக்கு அப்படி வருவது விசேடம் அல்ல..! இருந்தாலும் ஓய்வுக்கு ஊளையிட.. அப்பப்ப எட்டிப் பார்ப்பது அண்டை அயலில் ஈழத்தை..! கூவிற கூச்சலுக்கு றோ போடும் பிச்சையில் மருத்துவம்..! புலி என்றால் ஐயாவுக்கு…

  18. மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! -------- பச்சை நிற உடலழகியின்... வண்ண வண்ண பூக்கள் .... அங்காங்கே அழகுபடுத்தும் .... பச்சை நிற அழகியின் வதனம் .... சுற்றும் முற்றும் பார்த்தேன் ... தூரத்தில் யாரும் இல்லை ... தடுப்பாரும் யாருமில்லை ....!!! கிள்ளி எடுத்தேன் பூவை .... தள்ளி போகமுடியாமல் .. தன் வதனத்தை இழந்து ... தவிர்த்த செடியின் சோகத்தை ... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! ஆற்றங்கரைக்கு போனேன் ..... அழகான ஆற்று நீரில் கால் .... பதித்தேன் தட்டி சென்றது மீன் ... கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு .... ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!! என்னை மறந்தேன் -தூண்டிலில் ... புழுவை செருகி துடிக்க துடிக்க .... …

  19. மலர்களும் வெட்கி தலைகுனிந்தன அவை கண்டது உந்தன் மலர்முகம். தனிமையில் முழுநிலவும் தகிக்கிறது திருடிப்போனாய் தண்மையெல்லாம். நேற்றுப்போலவே இன்றும் இனிக்கிறது உன் நினைவுகள் காதல். அவள் திறந்து பார்த்தது கடிதமல்ல என் இதயம். தூங்கும் போதும் விழித்தே இருந்தது இடம்மாறிய மனசு. முட்கள் குத்திய போதும் வலிக்கவில்லை - அது காதல். வல்வையூரான்.

  20. நேற்றைய மாலைப் பொழுதில் என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. . வசந்தகாலத்தின் வரவுக்கண்டு மரங்கள் குருத்தெறிந்து மொட்டுவிட்டுக் கருத்தரிக்க கொட்டும் மழையில் தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து அம்மணமாக நின்றன. வீதியில் தொடை தெரிய நடைப் பயணம் போனாள் ஒரு யுவதி. தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர். கடிகாரச் சிறு முள்ளின் ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம் வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து பதுங்கிக் கொண்டது பசுந்தரை ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை தொடர்ந்து பொழியும் வெண்பனியில் கருஞ…

    • 7 replies
    • 1.2k views
  21. தம்பி... சுத்தமானது என் சமாதி சத்தியமாய் சொல்கிறேன் ! ஆண்டுக்கு இரண்டு முறை தான் தம்பிகள் என் சமாதிக்கு வருவீர்கள் பிறந்த நாளில் ஒரு முறை மரித்த நாளில் மறு முறை அது என்ன ஏப்ரல் 27-ல் என் சமாதியில் இத்தனை கூட்டம் ! கடும் கூச்சல் !! ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை ' ஏன் எழுப்பினார்கள் என்பது புரியாமல் தவித்தேன். சூரிய உதயத்தை என் வாழ்வில் கண்டதில்லை ஆனால்இ அதிகாலையில் தம்பி வந்ததுமே தூக்கம் கலைந்திற்று! துக்கம் கவ்விற்று !! வந்தது என் தம்பி கருணாநிதியல்லவா? அதிகாலை என் இருப்பிடத்தைத் தேடி வந்த காரணத்தை கருணாநிதி சொன்னதும் தான் தெரிந்துகொண்டேன். இலங்கைத் தமிழர்களுக்காக என் சமாதியில் உண்ணாவிரதமாம் ! அருமை தம்பி கருணா…

    • 1 reply
    • 1.4k views
  22. இணங்கி வாழ்வதிலும் இன்றே இறந்து போ Jun 27, 2013 நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டது. பாய்ந்து செல்லும் காலத்திற்குத்தான் எத்தனை வேகம் வைகாசி மாதமென்றால் தார் ரோட்டில் நெருப்பெரியும் நிலவும் சுடும் காற்றில் தேகம் தகிக்கும் இன்றும் தேசக்காற்றில் வெம்மை சொரிகிறது நாலாண்டாய் தவிக்கும் நினைவுகளும் பெருமூச்சுகளும் புழுங்கித் தவிக்கிறது கார்ப்பெற் வீதிகளால் எமது கனவுகளை புதைக்கமுடியவில்லை கைத்தொலைபேசி மணியோசைகளால் கதறல்களை மறைக்கமுடியவில்லை மலைகள் இல்லையென்றோ ஆறுகள் இல்லையென்றோ அந்திரிக்காமல் ஆழக்கிணறு தோண்டி அமிர்தம் உண்ட இனம் இன்று மினரல் வாட்டர் பருகி மீளா உவகை கொண்டோம் அக்கிரமங்கண்டு ஆர்ப்பரிந்த காலம் மலையேறிவிட்டது. உன் அயல் வீட்டில் களவா …

  23. அன்னையர் தினம் அண்மித்துவரும் இந்நாட்களில் நான் அண்மையில் படித்துச் சுவைத்த அன்னையர் தினக்கவிதை ஒன்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எழுதியவர்: வி.ஜீவகுமாரன் அன்னையர்தினம் கொஞ்சம் ஓவரடா! உங்கள் அம்மா பாசங்கள் கொஞ்சம் ஓவரடா! உங்கள் அம்மா பாட்டுக்கள் அதனால்தான் சொல்லுகின்றேன் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் எதுவரை இந்தப் பாட்டுக்கள்...உனக்கொருத்தி வரும்வரைதானே... "அம்மா கொஞ்சம் பேசாமல் இருக்கிறியளே! அவள் சொல்லுறதையும் கேளுங்கோவன்" இங்குதான் அம்மா உறவு ஆட்டம் காணும்! அம்மணியின் அரசாட்சி கோலோச்சும்! ஜயா நீ அவுட்...! நீ எழுதிய கவிதைகளும் அவுட்!! மீறினால் தலையணை நனையும்! சாப்பாட்டில் உப…

  24. கடவுளே உனக்கு கண்ணில்லையோ? கடவுளுக்கும் கண்ணில்லையோ -அது கல்லாகிப்போய் கன காலமோ! குந்த ஒரு குடிநிலம் கேட்டது பிழையோ -அதுக்கு தமிழீழம் எண்டு பெயரிட்டதுதான் தவறோ? அடிச்சவனை திருப்பி அடிச்சால் குற்றமோ?-நாங்கள் அழுதுகொண்டே செத்துபோவதுதான் விதியோ? தமிழராய் பிறந்ததுதான் தவறோ?-தமிழன் கேக்குறதுக்கு நாதியற்ற இனமோ? இன்னும் எத்தின நாளுக்குதான் அழுவமோ?-இதை கேக்குறதுக்கு யாருமில்லா உலகமோ? நாடு நாடாய் அலைவதுதான் கதியோ? அகதியாய் செத்துப்போவதுதான் முடிவோ? நீதி என்ன ஒரு நிறத்துக்கு மட்டுமோ? -அது தமிழருக்கு ஒரு நாளும் கிடைக்காதோ? மனிதாபிமானம் செத்து கனகாலமோ? -அதை குழிதோண்டிப்புதைத்தவர்கள் தான் பெரிய ஆக்களோ? விடுதலை கேட்பது பயங்கர…

    • 6 replies
    • 888 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.