கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் .....அ திகாலை எழுத்தவன் ......அ திசக்தி ஆதவ்னையே.....அ ருகில் வரவைப்பான்......!!!அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் ....அ ங்கிகள் தொடக்கம் ...அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....!!!அ ற்புதங்கள் என்பது ....அ திசயம் செய்வதல்ல ...அ ன்புக்கு கட்டுபட்டு ...அ ண்ட சராசரத்தோடு ....அ டக்கமாவதே .........!!!அ ன்று சொன்னதை செய்ததை ....அ ன்றே மறப்பவனே ....அ தி உயர் மனிதன் ....அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!அ ந்தி சாயும் நேரம் ....அ ன்றைய நிகழ்சிகளை ...அ சைபோட்டுபாருங்கள் ....அ ருவருப்பான செயல் எது ...?அ ரவணைப்பு செயல் எதுவென .....!!!
-
- 3 replies
- 2.3k views
-
-
பரமேஸ்வரன் பாதுகாக்கப்படுவானா...? பனியுறை தேசத்துப் பாராளுமன்ற வாசலுக்குள் பரமேஸ்வரன்...! சாவோடு தினம் குருதிச் சேற்றோடு சாகும் இனத்தைச் சாக்கொண்டு போகாமல் சாகும் வரை விரதமுடன்.... சத்தியனே பரமேஸ்வன் செத்துவிடலாம் போலிருக்கிறது. உனையும் திலீபன் போல இழந்து போவோமோ ? பயம் நெஞ்சுகளில் நெருப்பின் கனதியோடு..... சொகுசுக் கதிரைகளுக்குள் சொர்க்கத்தைக் காண்கின்ற சொக்கன்கள் இங்கும் அதிகம் தோழனே....! இவர்கள் வைத்த வினை ஈழத்தமிழர்களின் இத்தனை விதிக்குமாய் இட்ட வினை. இதையறுத்து எமக்காய் ஒளிதருவர் என்ற நம்பிக்கையின் கடைசித் துருப்பாய் உன்னையுருக்கி உணவுறுத்து உணர்வோடு இன்னும் அனைத்துலகம் மீதான நம்பி…
-
- 10 replies
- 2.3k views
-
-
எழுதாத பக்கமொன்று எனக்காக வைத்திரு! வசந்தத்தைத் தேடும் குயிலே! - உன் வாசல் வருவேன். பாலையை குயிலொன்று வசந்தமென்று அழைப்பது.... அமிழ்த மொழிக்கு எப்படிச் சாத்தியமாயிற்று? குளிர்ச்சி தரும் தென்றல் நான் பேசும் பொழுதில் மட்டும், அனல் கொட்டித் தழுவுவதை - உன் காற்றாடி வேகத்தால் காதிற்குள் கேட்டுள்ளேன். உன் நெஞ்சறை யாகத்தில் தீய்ந்த மணம் உண்மைதான், இருப்பினும் பல பீனீக்ஸ் சிறகடிப்பின் புழுதியைத்தானே நாசி உணர்கிறது. நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்கள் உனக்கானது... உணர்கின்றேன். என்றோ ஒருநாள்...... உனைக்காண வருவேன். எனக்காக......., இதயத்தில் எழுதாத பக்கமொன்று வைத்திரு. பனித்துருகும் விழிக்குளத்தில் குளித்தெ…
-
- 8 replies
- 2.3k views
-
-
இழப்புக்கள் பிறந்தது அவைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றது காலத்தால் தேற்றமுடியாத காயங்களில் குருதி வழிந்துகொண்டே இருக்கின்றது அன்றும் அசுரர்களை அழிக்க கடவுள்தான் வேண்டும் இன்றும் எம்மை அழிப்பவனை யாரோ ஒருவன் அழிக்கவேண்டும் அப்படி நடந்தால் கொண்டாடுவோம் எமது பெருவிருப்பங்களுக்காக சிலுவை சுமந்தவர்கள் கல்வாரிக்குள் இருந்து எழவே இல்லை இலக்கை அடையமுடியாதவர்களின் மோட்சத்தை நாமே பிரகடனப்படுத்திவிட்டு இலக்கை நோக்கி போரை மீண்டும் தொடர்கின்றோம் போரின் முடிவு இம்முறை நிறைவாக இருக்கவேண்டும் சூரனின் வயிற்றுக்குள் சேவலை மட்டுமே விடுவது வழக்கம் இம்முறை மயில்க்குஞ்சையும் சேர்த்து விடவேண்டும் கடசியாக முருகன் வேலெறிந்து சூரன் பாட்ட…
-
- 20 replies
- 2.3k views
-
-
காலக்கரைபற்றி நீள நடக்க முயல்கிறேன் உன்னையும் என்னையும் அறிந்த ஒற்றைத்திங்கள் மட்டும் உடன் வருகிறது. வெட்கமற்று என்னைத் தழுவிய உப்புக் காற்றை உள்ளம் தேடுகிறது. உனக்குமெனக்குமான மோனப் பொழுதுகளில் முகையவிழ்த்த முல்லைகளின் சிரிப்பொலி சில சமயங்களில் இரைச்சலாகவும், சில சமயங்களில் இன்னிசையாகவும்....... காலநதிக்கரையில் பதித்த தடங்கள் இன்னும் சிதையாமல்.... காத தூரம் கடந்தும், கருகியும் பாதைவெளிகள் பிரிந்தும் ..... தொடர்ந்தும்,...... ஒற்றைத்திங்கள் மட்டுமே உடன்வருகிறது சாட்சி சொல்ல.
-
- 11 replies
- 2.3k views
- 1 follower
-
-
-
வேர்க்கும் குளிர் இரவுகளில் கோர்த்துக்கொள்கிறது விழிகளில் நீர் ....... நிசப்த யுத்த விளைவுகளின் வெப்பம் எரிக்கிறது கணங்களை ................ விரித்த சிறகுகளை மடக்கி திணிக்கப்பட நிகழ்வுகளை சுமந்து நேற்றைய வீற்றிருப்பின் கற்றைகளை சுமக்கையில் நாளைய வரவில் வல்லையில், எந்தநூர் வயல் வெளிகளில் , சந்நிதியில் , உப்பாற்றங்கரைகளில், வல்வைச்சந்தியில் , என்ன நிகழ்விருக்கும்? வரப்புகளில் நடைபோகும் நாரைகள் உரத்துக்கத்தும் ஊளைக்கிடாய் ௬ட்டம் பால்மொச்சையடிக்கும் சிறு குட்டியாடு பருவகால தும்பிகள் வண்ணாத்துப்பூச்சிகள் எல்லாமிருக்குமோ ? முற்றத்து மல்லிகை வேலியோர எல்லைப்பனை நாயுருவி சுமக்கும் தேன் ௬டு அகலபடந்த அறுகி…
-
- 1 reply
- 2.3k views
-
-
அழகான கவிதை வாழ்க்கை ----------------------- மூங்கில் நுனிப் பனியை புகழ்கின்றோம் மூக்கின் நுனிப்பனியைத் துடைக்கின்றோம் இரண்டிலும் பனி பார்வையில் பிணி பச்சை மரக்காட்டிடையும் மரங் கொத்தி தேடுவதென்னவோ பட்ட மரம் நீர் மேல் நிலவு நிமிடத்தில் உடையும் நிமிடத்தில் சேரும் நிலவுக்குக் கவலையில்லை வடி கட்டிப் போகும் அமுதத்தைப் பாரார் வடியில் மிஞ்சும் மிச்சத்தைப் பார்ப்பார் காலையும் மாலையும் அழித்து அழித்துப் போடுகின்றது அழகழகான சித்திரம் வானமும் பகலிலும் இரவிலும் பொட்டு வைத்துப் பார்க்கின்றது பச்சைச் சேலையில் பள பளக்கும் நீர்க்கரை கட்டி பூமியும் அழகுதான் இயற்கை சிரிக்கின்றது மனிதன் அழுகின்றான…
-
- 7 replies
- 2.3k views
-
-
பிரபல ஆங்கிலப் பாடகி Amy Winehouse (24) இன் பிரபல்ய பாடலான.. " Love is a losing game " பாடல் வரிகள் பற்றி.. ஒப்பீட்டு விமர்சனம் அளிக்க.. (இரு வெவ்வேறு கால பாடல்களுக்குரிய பாடல்களில் அமைந்த வரிகளின் தன்மைகளை ஒப்பிட்டு..) கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆங்கில பாடப் பரீட்சையில் கேட்கப்பட்டுள்ளது. எங்கே.. எம் கவி வித்தர்கள்.. நீங்களும்.. உங்கள் கருத்தை இவ்வரிகள் தொடர்பில் சொல்லுங்கள் படிப்போம்... (உங்களை ஒப்பிடச் சொல்லவில்லை) Though I battled blind Love is a fate resigned Memories mar my mind Love is a fate resigned Over futile odds And laughed at by the Gods And now the final frame Love is a losing game Amy Winehouse இன் இணையத்தளத்தில் பாடலை…
-
- 9 replies
- 2.3k views
-
-
பாலி ஆறு நகர்கிறது 1968ல் எழுதப்பட்ட எனது முதல் கவிதை. இதை எழுதியபோது மல்லாவி என்ற வன்னிக் கிராமத்தில் கலகக் காரனாகத் திரிந்தேன். எனது கவிதைகளை பிரசுரிக்கும் அனுமதி கேட்டு ஆர்வலர்கள் எழுதுகிறார்கள். ஒரே தடவையில் 10 மேற்படாத எனது கவிதைகளை அனுமதி இன்றிப் பிரசுரிக்கலாம். அன்புடன், வ.ஐ.ச.ஜெயபாலன் பாலி ஆறு நகர்கிறது - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். …
-
- 4 replies
- 2.3k views
-
-
வடலி சி.சிவசேகரம் இந்தக் கருப்பனைகள் இங்கேதான் முளைக்கும் இடம்பெயரச் சொல்லி எவர் வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும் இந்தக் கரும்பனைகள் எப்போதோ என்றோ இங்கேதான் முளைக்கும் எத்தனையோ பெரும் புயல்கள், இடிமழைகள், சுடுவேனில் எல்லாமே எத்தனையோ நூற்றாண்டாய்க் கண்டவைதாம். பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரையார் போயழிந்தார். ஆனாலும் எங்கள் கரும் பனைகள் எங்கள் வெளிகளிலே ஓலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும் எனவேதான் எத்தனை நாட்போனாலும் எத்தனை தான் கடிதாய் நீவிர் முயன்றாலும் எங்கள் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும். பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள் என…
-
- 15 replies
- 2.3k views
-
-
இன்பம் எங்கே...........இன்பம் எங்கே என்று தேடு மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம் சிறுமிக்கு விழாது பொம்மை மீது இன்பம் மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம் பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம் மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும் பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம் கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின் (************** ) விரும்பியதை போட்டு வாசிக்க தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம் தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம் பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம் வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம் ு யாழ் களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம் மனிதருக்கு இன்…
-
- 13 replies
- 2.3k views
-
-
உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன் யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய் உன்னுடைய முத்தம் அவ்வளவு அழுத்தமான சத்த முத்தமோ! என்றேன்.............. உன்னிரு கண்களால் என்னை எரித்து விடுவதைப் போல பார்த்தாய்................... உன் கோபம் நான் சொன்ன உண்மையிலா! இல்லை சொல்லாது விட்ட பொய்யிலா! என்றேன் எது உண்மை? எது பொய்? தெரியாதவள் போல் கேட்டாய் நீ கொடுப்பதாய் சொன்ன உன் முத்தம் உண்மை நீ கோபிப்பதாய் நடிக்கும் உன் கண்கள் பொய்யென்றேன் மௌனமானாய்!! இந்த மௌனம் முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன் வெட்கத்தால் தலை கவிழ்ந்தாய் நீ உன் வெட்கத்தின் அழகை காணத்தானே இத்தனை முயற்சியும் மகிழ்ச்சியில் நான்.............. -எங்கேயோ படித்தது
-
- 18 replies
- 2.3k views
-
-
!!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!!!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி..................எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................பத்திர காளிமீது பக்தி கொண்டவள் ...........................பத்தினியாள் பக்தியாள்............................சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் .................சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............சின்னப…
-
- 0 replies
- 2.3k views
-
-
அவர்கள் பார்வையில் எனக்கு முகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை அவர்களின் பார்வையில்- இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன சமையல் செய்தல் படுக்கையை விரித்தல் குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல் இவையே எனது கடமைகள் ஆகும் கற்பு பற்றியும் மழை பெய்யெனப் பெய்வது பற்றியும் கதைக்கும் அவர்கள் எப்போதும் எனது உடலையே நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்........ அ.சங்கரி http://noolaham.net/project/01/16/16.htm
-
- 4 replies
- 2.3k views
-
-
-
-
- 15 replies
- 2.3k views
-
-
ஆயுள் கைதி அந்த வெள்ளைப் புடவைக்காரி என் வேதனைக்குச் சொந்தக்காரி சின்ன உதட்டுக்காரி சிலர் சிந்தனைக்கு உந்துசக்தி சொந்த மனங்களுக்குள் சந்தமிடும் சலங்கைக்காரி புள்ளித் தீ விழித்து புன்னகைக்கும் புகைபோக்கி கள்ளத்தை உள்ளே வைத்து களிப்பூட்டும் வித்தைக்காரி மெல்ல மேகமதில் மனம் மிதக்க வைக்கும் மாயக்காரி கொள்ளை சுகம் கொடுத்து கொள்ளையிடும் கொடுமைக்காரி பள்ளம் அருகே வைத்து பார்வை வீசும் பகட்டுக்காரி உள்ளம் இணைந்த பின்னும் உரிமை கொள்ளும் சக்களத்தி துள்ளும் இளமையையும் துரத்திவிடும் சாலக்காரி வெள்ளைப் பல்லின் வண்ணம் வித்தை மாற்றும் வேசக்காரி உள்ளும் புறமும் புற்று நோய் விதைக்கும் மோசக்காரி சுருள்சுருளாய் வளையமிட்டு சுகம் கொடுக்…
-
- 7 replies
- 2.3k views
-
-
இன்று காதலர் தினம். காதலர் தினம் என்ன அவர்களுக்கு மட்டும்தானா நமக்கில்லையா? வாழ்வில் இணைந்து கொண்ட தம்பதிகளுக்கும் காதலுண்டல்லவா! ஆனால் அதன் இயல்புதான் சற்று வேறாயிருக்கும். அந்த வேறுபட்ட இயல்பைச் சில வருடங்களுக்கு முன் கவிதையாக்கினேன். அதனைக் கீழே தருகிறேன். தாய்க்குப்பின் வந்த தாரம் வாய்க்குச் சுவைதருவாள் என்றும் வாழ்விற் துணைவருவாள் - காம நோய்க்கு மருந்தாவாள் துயர் போக்கும் அருள் தருவாள் அள்ளி அணைக்கையிலே மனம் ஆறும் பரிசத்திலே உள்ள நிறைவினிலே துன்பம் ஓடிடும் தூரத்திலே அன்னையிருந்த இடம் இன்று அவள் அரியணையாம் என்னைக் கலந்துவிட்டாள் இன்று எனதென்றொன்றுமில்லை வட்ட நிலாவொளிரும் அவள் வதனப் புன் சிரிப்பில் கெட்டதெல்லாமழியும் அவள் கிட்டநிற்கும்…
-
- 0 replies
- 2.3k views
-
-
கை பிடித்த போது..... என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது கன்னியவனை கண்ணுற்ற போது என் இலக்கிய உலகம் இனிய கதவு திறந்தது இனியவன் இமை திறந்த போது மண்ணில் விண்ணுலகம் பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது தாய் மொழியைத் தலைக்கேற்றியது தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது என்னவனைக் கை பிடித்த போது! நன்றி
-
- 8 replies
- 2.3k views
-
-
மதிலொன்று மறித்துக் கிடக்கிது. கருங்கல்லாய் இருக்கலாம் காரிரும்பாய் இருக்கலாம் ஒருவேளை தேவலோகத்துச் சாமானாயுமிருக்கலாம் மதில் தெரியிது அதன் பலம் தெரியிது முன்னர்: பூசாரி வந்து குளை அடிச்சுப்; பாத்தார் பரியாரி வந்து மூலிகை வைச்சார் பாம்புக்கடி வைத்தியரும் ஒருக்கா வந்துதான் போனார் கைமருந்து பலிக்கேல்ல சீமையில் படித்த சிறப்புச் சிகிச்சைகள், கேரள மாந்திரீகர், மட்டக்களப்புச் சமாச்சரம், ஒண்டும் தான் பலிக்கேல்ல மதில் இப்ப மினுமினுப்புக் கூடிக் கிடக்கிது பூசாரி ஊத்திய பாலும் பஞ்சாமிர்தமும் காரணமாயிருக்கலாமாம்;: பேச்சுமிருக்குது கனகாலம் கதைக்காது புதிராய்க் கிடந்த ஊர்க் கிழவர் ஒருநாள் திடுப்பெண்டு சொன்னார் "உதுக்கும் ஒரு சாமானிருக்க…
-
- 18 replies
- 2.3k views
-
-
களனி கங்கையின் இசை நிலவிலே பெளத்த நாட்டிளம் பெண்களுடனே சுந்தர சிங்களத்தில் பாட்டிசைத்து ரயில்,பஸ் ஒட்டி விளையாடிடுவோம் யாழ்ப்பாணத்து செம்மண் புறத்து பனம்பண்டம் புளத்சிங்கள வெத்திலைக்கு மாறு பண்டம் முஸ்லிம் மக்களின் கவிதை கொண்டு அரபிய தொப்பிகளை பரிசளிப்போம் புலத்து தமிழருக்கோர் பாலம் அமைப்போம் இணையத்தை பலப்படுத்தி உறவு சமைப்போம் மகாவலியில் ஒடிவரும் நிரின்மிகையால் எல்லா மாவட்டங்களிலும் பயிர் செய்திடுவோம் மலையகத்தில் தேயிலை பயிரிடுவோம் வெளிநாட்டுக்கு ஏற்றியிடுவோம் மட்டுநகரில் கருவாடு காயவைப்போம் தொப்புள் கொடி உறவுகளுக்கு பார்சல் பண்ணிடுவோம் ஆயுதம் செய்வோம் நல்ல குடியேற்றம் செய்வோம் விகாரைகள் வைப்போம் அகதி முகாம் வைப்போம் ச…
-
- 15 replies
- 2.3k views
-
-
ஆயுத கப்பல் வருகுது......!!! கடலில வருகுது கப்பலு கனரகம் தாங்கிய கப்பலு.... போர்க்கலம் ஆயிரம் தாங்கியே போருக்காய் வருகுது கப்பலு... அரபிக் கடலதை தாண்டியே அசைந்து வருகுது கப்பலு.... வின்னிடை பாயும் கணைகளும் தாங்கியே வருகுது கப்பலு.... கனரக ஆட்லெறி கனமதாய் காவியே வருகுதே கப்பலு.... கரிகாலன் படையனி களமதை கனம் பாக்க வருகின்ற கப்பலாம்..... சிங்கள பகையதை சிதைத்திட அந்தோ சிரித்தே வருகுதாம் கப்பலாம்.... சுதந்திர தீபம் ஏற்றிட அந்தோ சுதந்திர கப்பல் வருகுதாம்.... வருகுது கப்பல் வருகுதாம் பகை வஞ்சகம் தீர்க்க வருகுதாம்.... விரைவினில் ஈழம…
-
- 8 replies
- 2.3k views
-
-
உருகுதே உருகுதே... கண்டேன் கண்டேன் சூரியனைக் கண்டு உருகி உச்சி குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு சிலிர்க்க கண்டேன் -அது ஆதவன் அணைப்பில் சிணுங்கவும் கண்டேன் சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு :?:
-
- 14 replies
- 2.3k views
-
-
உன் நிழல் கூட இனி உனக்கு இல்லை!! வெட்டி வெட்டி எறிந்தாலும் நகம் துளிர்விடும்...! துட்டகைமுனு படை... விட்ட தவறை.... சரி செய்ய.. விளங்காமல் தவிக்கும்! செத்து செத்து பிழைக்கும்... இனத்தின் முகத்தில்-ஒரு சிரிப்பு பூக்கும்...!! யூலை படுகொலை... ஆரம்பம் அவருக்கே-இனி முடித்து வைக்க.... முடியுமா அவராலே? தன் வினை.. தன்னைச் சுடும்... தமிழனை எரித்தவர்.. வாழ்வு........ இனி தலைவர் அனுமதி பெற்றே... தன் நிழலைக்கூட இனி தான் நம்பும்!!
-
- 16 replies
- 2.3k views
-