Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாவீரர்கள் காவியங்கள் பல படைத்திட வங்கக் கடல்தனிலே வேங்கைகளாகப் புறப்பட்ட மாசற்ற மறவர்கள் அண்ணன் வழி சென்றே அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள் தாய் தந்தை மறந்தார்கள் தாய் நாட்டை நேசித்தார்கள் தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள் தமிழ் மக்களையும் தாய் மண்ணையும் காத்திடவே கரும் புலியாய்! கடற் புலியாய்! பல்வேறு வடிவங்களில் புயலாகப் புறப்பட்டு - இன்று எல்லோர் மனதிலும் வாழுகின்ற உன்னதப் புருசர்கள் மாவீரர்கள்

  2. Started by slgirl,

    தாய் பிடிக்கும் என்மேல் பாசத்தை பொழிவதால் அண்ணன் பிடிக்கும் எனக்கு குடும்பதை வழி நடத்துவதால் அக்கா பிடிக்கும் எனக்கு தாய்க்கு ஆறுதலாய் இருப்பதால் தம்பி பிடிக்கும் எனக்கு சிறுவனாய் இருந்தும் என் தங்கையை படிப்பிப்பதால் தங்கை பிடிக்கும் எனக்கு என உயிர் தோழியாய் இருப்பதால் நட்பு பிடிகும் எனக்கு வழி நடத்தி செல்வதால் காதல் பிடிக்கும் எனக்கு காயங்களை கற்பித்ததால் மௌனம் பிடிக்கும் எனக்கு அது உன்னிடம் நிறையவே இருக்கின்றதனால்... காத்திருப்பு பிடிக்கும் எனக்கு உனக்காகவே காலம் பூராகவும் காத்திருக்க போவதால்.

    • 8 replies
    • 2.1k views
  3. ஆமணக்கும் நெருஞ்சியும் பூவரசும் பனங்கூடல்களும் இயல்பிழந்து போக அரசமரங்கள் எழில் கொள்கின்றது, மின்குமிழ்களின் பின்னும் தொலைபேசிக் கோபுர அடிகளிலும் தொடரூந்து தண்டவாள இடைவெளிகளிலும் யாருமறியாமல் நிறைந்துகிடக்கிறது பேரிருள் சூழ்ந்த மௌனமொன்று.. வீதிகளும் விளம்பரத்தட்டிகளும் விடுதிகளும் வங்கிகளும் வடுக்களின் மேல் வர்ணம் பூசிப்போக, அடிப்பிளவுகளில் உயிரடங்கி வெதும்பிக் கிடக்கிறது தலைமுறைக்கனவு கிராமத்து முனைகளில், சுடுகுழல்களில் ஒளிந்திருக்கும் குறிகள் விரகம் தீர்க்கும் வன்மத்துடன் அலைகின்றன. நகரத்து ஒழுங்கைகளில் தேரவாத காவிகள் தம்மபததின் பக்கத்தில் இனவாதத்தை எழுதி ஓதுகின்றனர். அதிகாரங்களும் அடையாளங்களும். நிர்வாணிகள் மீது குறிகளைப் புதைத்துவிட…

  4. வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. பெருந் தமிழ்நாடும் தமிழ்நாடும் பக்கந்தான்.. இனியேனும் தணியாதோ யுத்தந்தான்... இளங்காற்றோடு இசைகேட்டேன்.. சந்தந்தான்.. மழலை சிரிக்க... மான்கள் குதிக்க... மண்ணெல்லாம் மலரோடு ஜொலிக்க...முற்றங்களெல்லாம்.. மங்கையர்.. கரங்கள்.. வளையல் குலுங்க.. மாக்கோலம்..போட்டிருக்க... இமயங்கள் காண.. இளைஞர்கள் யாவரும்.. ஞானஒளி ஏற்றிவைக்க.. ஏழ்மையில்லை..இனி ஒரு பயமுமில்லை.. நள்ளிரவில்.. மின்விளக்கு சிரிக்க... வரும்... தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. மண்ணின் வளத்துக்கு உரமான உள்ளங்கள் வாழ்க.. மண்ணின் வளத்துக்கு உரமான உதிரங்கள் வாழ்க...

  5. கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம். போராடித் தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் - ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட - ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி - மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம் எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ? விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல் எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ? வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில் துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும் மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே.. சிரிக்கும் சிரிப்பில்…

    • 2 replies
    • 1.3k views
  6. மாட்டுக்கறி எங்கள் பண்பாடு மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை வாழ்க்கையின் பன்முகம் எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு "மாட்டுக் கறி உண்ணாதீர்கள்" நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?" நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்? எனக்கும் உனக்கும் என்ன உறவு? நான் கேட்கிறேன். இன்று வரைக்கும் நீ ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா? ஒரு ஜோடி ஆடுகளையாவது? ஒரிரண்டு எருமைகளை? அவைகளை மேய்த்த அனுபவமுண்டா? குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா? இவைகளுடன் ஆற்றில் இறங்கி அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா? காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா? இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்காயா? அவற்றுக்கு பல்வலி வந்தால் என்…

  7. பட்டு தெளியாத பாதையில் .. பாடையை கட்டிவைத்து .. இதில் வந்து படுங்கள் என்று .. நான் மட்டும் கூவி அழைக்கையில் .. தெட்ட தெளிவா தெரிந்த பின்னும் .. சீவன் போன ஜீவன் கூட வராது .. ஆவிகளை மீண்டும் போருக்கு அழைக்கும் .. ஆற்றல் மிகு விசுவாசங்கள் ஒருநாளும் .. போரறியாது அதன் வலி அறியாது .. காவி காவி சென்று மாறி மாறி .. புற்றுகள் மேல் கொட்டில் போடும் .. தவளைகள் நிலையறியாது .. பாம்புகளிடம் இருந்து உமக்கு விடுதலை .. வாங்கலாம் அதுவரை அதிலே படும் .. உறக்கம் இன்றி அவர்கள் விழித்திருக்க .. நாம் உண்டுவிட்டு ஏப்பம் விடும் சத்தம் .. பாம்புகள் சீறும் சத்தமாவே காதுகளில் கேட்கும் .. ஒவ்வெரு நாளும் மேட்டில் இருந்து .. நொந்து சாவதை விட தண்ணியில் .. ஊறி திளைக்கலாம் என்று நினைக்கிற…

  8. Started by கஜந்தி,

    தொலைபேசி என்னைத் தொட்ட சோகங்கள் யாரையும் தொட்டதில்லை இதுவரையில் கண்ணீரில் கரைகின்ற பல கதைகள் கேட்டுக் கேட்டு என்னை நானே நொந்துகொண்டேன் ஏக்கங்கள் கொண்டதால் தேடிடும் உறவுகள் பாசத்தைத்தேடித்தேடி அடைக்கலமான குழந்தைகள் பிரிவின் துயரால் துடியாய்துடிக்கும் காதல்நெஞ்சங்கள் இவர்கள் வலிதனை என்னவேன்று சொல்ல இங்கே இயந்திர வாழ்கைதனில் தொலைத்துவிட்ட மகிழ்ச்சிக்காய் கணவனும் மனைவியும் எனையே அணைத்துக் கொள்ளும் சோகங்களை நான் எப்படி சொல்வேன் இத்தனை சோகங்கள் என்னேடு தானிருக்க என்னையும் வம்பிலுக்கும் வாலிப நெஞ்சங்கலே உங்களை என்ன சொல்லி நான்திட்ட எப்போது திருந்துவீர்கள் பிரான்ஸ் நாட்டில்…

  9. Started by nunavilan,

    ஆறு ஊரின் வெளியே ஆறு - அது ஓடும் அழகைப் பாரு! மாரி பொழிந்தால் வெள்ளம் - கரை புரண்டு ஓடும் எல்லாம்! ஓய்வு சிறிதும் இல்லை - அது ஓய்ந்தால் வருமே தொல்லை! ஆய்வு செய்தால் நிறைய - ஞானம் பிறக்கும் மடமை மறைய! மலையின் மீது தோன்றி - ஊற்று நீராய் வருமே தாண்டி! கலையாய் பூக்கள் எங்கும் - மலர நீரும் போயே தங்கும் துள்ளிக் குதித்து ஆடும் - தங்கப் பாப்பா நீரில் ஓடும்! பள்ளி செல்லும் நேரம் - தேனீ போல விரைந்து போகும்! தடைகள் வந்தால் ஆறு - அவற்றைத் தகர்த்துச் செல்லும் கேளு! மடைகள் திறந்து நீராய் - வெல்லும் படையாய் இருக்க வாராய்!

    • 1 reply
    • 1.4k views
  10. மாவீரர் ஒருவரைக் கண்டேன். மாவீரர் ஒருவரைக் கண்டேன். மனது திக்… திக்…என்றது. வணக்கம் மாவீரரே! என்றேன். மௌனமாக நின்றார். கையிலே மாலையும் இல்லை. காத்திகைப் பூவும் இல்லை தோளில் போர்க்கத் துண்டும் இல்லை என் செய்வேன் என்று இரு கைகூப்பி வணங்கினேன். அப்போதும் அவர் மௌனமாக நின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள் நீங்கள் மாலைக்கோ மணி மகுடத்துக்கோ மற்றெந்;தச் சலுகைகளையோ விரும்பாத சரித்திர நாயகர்கள். கதிகலங்கி நிற்கும் தமிழருக்கு கலங்கரை விளக்கங்கள்;; இதைப் புரியாத நான் உங்களை…. ……………….. நான் என்ன தவறு செய்தேன்? என்மேல் என்ன கோபம்? உங்கள் கனவைக் கலைத்தேனா? உங்கள் பெயரால் பணம் சேர்த்து என் மடியை நிறைத்தேனா? உதட்டளவில் விடுதலை என்…

  11. விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழினி ஜெயக்குமாரன் அண்மைக்காலமாக பல நல்ல காத்திரமான கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி இலக்கிய உலகின் கவனத்தினை தன் பக்கம் திருப்பிக் கொண்டு இருப்பவர். அவரது பெயரிடப்படாத இன்னொரு கவிதை இது. தன் முகநூலில் பதிந்து இருந்தார். யாழில் பிரசுரிக்கவா எனக்கேட்டு அவர் அனுமதி பெற்று இங்கு பிரசுரிக்கின்றேண் ------------ போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது. வெடியதிர்வுகளின் பேரோசைகளால் குடி பெயர்ந்தலையும் யானைக் கூட்டங்களாக இருண்ட முகில்களும் கூட மருண்டு போய்க் கிடந்தன. பகலை விழுங்கித் தீர்த்திருந்த இரவின் கர்ஜனை பயங்கரமாயிருந்தது அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில். காதலுறச் செய்யும் கானகத்தி…

    • 4 replies
    • 1.2k views
  12. உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன் யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய் உன்னுடைய முத்தம் அவ்வளவு அழுத்தமான சத்த முத்தமோ! என்றேன்.............. உன்னிரு கண்களால் என்னை எரித்து விடுவதைப் போல பார்த்தாய்................... உன் கோபம் நான் சொன்ன உண்மையிலா! இல்லை சொல்லாது விட்ட பொய்யிலா! என்றேன் எது உண்மை? எது பொய்? தெரியாதவள் போல் கேட்டாய் நீ கொடுப்பதாய் சொன்ன உன் முத்தம் உண்மை நீ கோபிப்பதாய் நடிக்கும் உன் கண்கள் பொய்யென்றேன் மௌனமானாய்!! இந்த மௌனம் முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன் வெட்கத்தால் தலை கவிழ்ந்தாய் நீ உன் வெட்கத்தின் அழகை காணத்தானே இத்தனை முயற்சியும் மகிழ்ச்சியில் நான்.............. -எங்கேயோ படித்தது

    • 18 replies
    • 2.3k views
  13. நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல் படுத்த .... என்னை தவிர யாருமில்லை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

  14. அவளை அனுபவிக்கஇ அணு அணுவாய் உள்ளிழுக்கஇ இதழ் குவித்து இன்பம் காணஇ சுற்றம் மறந்து சுகம் காணஇ சற்று நேரம் சொர்கம் செல்லஇ விரல் இடுக்கில்இ இதழ் இடுக்கில் - இறுதியில் இதய அடுக்கில் - இன்பமாய் இடம் மாறிட. வெண்ணிற மேனியில் பொன்னிற கேணியில் மூழ்கி நான் மூச்சிழுக்க... அவளை அழைத்துஇ ஆடை உரித்துஇ வாயில் பொருத்தினேன் - சிகரெட்

    • 7 replies
    • 3.6k views
  15. என்னுடன் பேச .... துடிக்கும் இதயங்கள் .... ஆயிரம் ஆயிரம் .....!!! உன்னோடு மட்டும்... பேசத்துடிக்கும் என் .... மனசை ஒருமுறை .... நேசித்துப்பார் ....!!! என்னை விட உன்னை ... அப்படி நேசிக்க யாரும் .... இருக்கமாட்டார்கள் .... உனக்காக பலர் வாழலாம் .... நானோ ..... உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

  16. இன்று என் பெயரைத் தமிழில் Google பண்ணிப் பார்த்த போது கிடைத்த என் பழைய கவிதை இது. 23 ஆம் வயதில் 1998 January இல் எழுதி பிரசுரமான கவிதை. விசுவாசமற்ற காதலன்:

  17. மார்கழிப்பனி மழையில் யேசு பிறந்து வந்தார் மானிலம் பூச்சூட புது அழகினைப் படைக்க வந்தார்

  18. *.மனம் சுமக்கு’மே ‘ வலிகள். * (மே பதினெட்டு - கவிதை) ******************************************* *இருளும் -ஒளியும் இரவும் -பகலும் என்பதுபோல், இழப்பும் -ஏற்பும் கொண்டோம் இதனால் எம் வாழ்வில் என்பதுண்டு! – இதில் சில எண்களும் உண்டு! “அவ் வெண் பதினெட்டு!” *பதினெண்கீழ் கணக்கு” - பதினெட்டு நூல்களின் தொகுப்பு! தமிழுக்கு இதனால் சிறப்பு! *பதினெட்டு ‘மே’ என்பதிலோ எண்ணற்ற கணக்கு!.... - இங்குண்டு தமிழரின் இறப்பு! தமிழுக்கும் இழப்பு!.... *வைகாசி, புத்தம் ஞானம் பெற்ற மாதம் ! - இருந்தும் சுத்தம், மொத்தமாக மதம் இழந்த மாதம் - நித்தம் யுத்தம் செய்த மாதம்! … *நாமோ,.. சுற்றம் த…

  19. Started by theeya,

    உலகம் இப்போ ஒரு உருண்டை வீடு அதில் மனிதர் எல்லாம் -தினம் அலையும் வெறும் கூடு இயந்திரங்கள் மனிதராகி வேர்வை சிந்தாது உழைக்கலாம் மனிதரெல்லாம் ஒன்று கூடி இயந்திரமாய்ப் பிளைக்கலாம் காலம் போற போக்கில் நாளை கலியாணங்கள் நடக்கலாம் ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத தம்பதியர் கூடியே தத்துப் பிள்ளை தத்தெடுக்க இயந்திரங்கள் சமைக்கலாம் வீட்டுக் காவல் வேலைகென இயந்திரத்தில் நாய்களாய் தோட்டம் முதல் தொலைவு வரை ஓடியோடி உழைத்திட இயந்திரமாய் மனிதனை சந்தையிலும் வாங்கலாம் .

    • 2 replies
    • 873 views
  20. பெண்ணே கண்ணே கனியே கனி அமுதே கட்டி அணைக்க"வா" கவ்விக் கொள்ள"வா" கருணை கொண்ட"வா" கண் காட்ட"வா"..! பாசைகள் பலவிதம் பரிமாறிட கற்பனை பொங்க கழிவிரக்கம் தொடங்க சிந்தை மகிழ சரசம் தவ்வ சரீரம் பிணைய சக்தி பீறிட பாய்ச்சல் நிகழ்ந்திட ஆடி அடங்கும் அகிலத் தொடையில் அடங்கிடும் அவன் இனவெறி..! கன்னி அவளும் கலவி கண்டு தேவை முடித்து சேவை தந்து அயர்ந்தாள்.. உருகி ஓடும் திரவங்கள் கலந்திட முந்தி ஓடும் ஒற்றை விந்தின் வெற்றியில் உயிர் ஒன்றை உருவாக்கும் இயற்கையின்.. இயந்திரமாய் முட்டை தந்து..!

  21. வேணாம் மச்சான் வேண்டாம்.....!!! ----------------------------------------------- ஊரில் இருக்கும் மச்சான் சுகமாடா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் எண்டு கேள்விப்பட்டன்!!! உன் முடிவில் "நியாயம்" இருக்கிறது இருந்தாலும் "யாதார்த்தம்" வேறு மச்சான் கோதாரி விழுந்த காசுதான் எங்களின் சந்தோசங்களை முடிவுசெய்கிறது அதுதான் எங்களின் வாழ்வையும் தீர்மானிக்கிறது கிட்டடியில அவுஸ்திரேலியா வந்த பக்கத்து வீட்டு சேகர் அனுப்பும் காசில்.. "மாபிள்" பதிச்சு வீடு எழும்புது "ஏசியும் கலர் கலரா பெயின்றும்" வீடு பழபழக்குது..!! "ஐபோனும் கீறோ கொண்டாவும்" கனவில வந்து சாவடிக்குது என்ன இழவுக்கு இங்க கிடந்து சாவான் என உன் மனம் அலைக்கழியுது கொப்பர் அடிக்கடி புறு…

  22. எந்தன்குரல் கேட்கிறதா? அவனியிலே வித்தகனாய் அறிவுடனே நான்வாழ அனுதினமும் கனவுகண்ட அன்பான அம்மாக்கு என்னருகே இருக்கையிலே உன்னருமை தெரியவில்லை அருமையினை உணர்கையிலே அருகினிலே நீயில்லை மெழுகுவாத்தியாய் உருகி வெளிச்சத்தைத் தந்தவளே வெளிச்சத்தின் அருமையினை இருட்டில்தான் உணர்கின்றேன் உன்பேனா பிரசவித்த உரைகளைநான் மேடையேற்றி பேச்சாளன் ஆகியதை பெருமையுடன் நினைக்கின்றேன் பரீட்சைக்கு முதல்நாளும் படுக்கையிலே விழுந்திடுவேன் என்னருகே வந்திருந்து எனக்காக நீபடித்தாய் என்பாடம் தனைப்படித்து எனைஉயர்த்த முயன்றவளே உன்பாசம்தனை எந்த உலகத்தில் காண்பேனோ சிந்தையிலே எந்நாளும் எந்தனையே தாங்கியதால் உந்தனுக்கு எப்போதும் நிம்மதிய…

    • 37 replies
    • 5.1k views
  23. Started by slgirl,

    என்ன அநியாயம் நான் பிறக்குபுன்பே யாழ் மண்ணின் இதயம் அழிந்துவிட்டதாம் ஓ நான் கண்ணாலே கண்டதும் அந்த அழிந்த இதயத்தை தானே என்ன தான் எம் யாழ் இதயத்தை மீண்டும் கட்டி எழுப்பினாலும் இதயமது இழந்தவை மீளப்பெறமுடியாது கயவர்கள் யாழ் மக்களின் உயிரை உணர்வை...பண்பாட்டை எரித்துவிட்டார்கள் காடையர்கள் எதிரியின் இந்த கொடூரம் தான் தூங்கிகிடந்த தமிழனை விழிக்க வைத்தது... கயவர்கள் தீயிட்டதால் தீயாகவே எழுந்தார்கள் தமிழர்கள்...தீயவனை அழிப்பதென முடிவோடு அன்று வைத்த தீ தான் இன்று தமிழன் நெஞ்சில் சுடர்விட்டு எரிகிறது ஈடுகொடுக்க முடியாத இழப்பல்லவா எம் இதயத்தின் இழப்பு....... இறைவனே கயவர்களை கண்கொண்டு பாத…

    • 8 replies
    • 1.6k views
  24. காதல் தோல்வி காதலித்தோம் நானும் எனது பக்கது வீட்டுகாறியும் உங்கள் வீட்டு எங்கள் வீட்டு காதல் இல்லை இது ஒரு மணிதியாலம் தான் எனது எஜமானும் பக்கது வீட்டு எஜமானும் பேசிகொள்ளும் நேரம் மட்டும் தான் அவர்கள் புரிந்து கொள்ள இது மனிதக் காதலும் அல்ல அதையும் தாண்டி இரு பக்கது வீட்டு நாய்களுக்கான புனித காதல் யாரும் தப்பாக நினைக்க கூடாது இது நாய்களுக்கு என்று மட்டும் எழுதப்பட்ட கவிதை பாவம் தானே அவர்களும்

    • 13 replies
    • 2.2k views
  25. Started by வினித்,

    தீபம் பத்தும் அறியாத பருவகாலவயது அது.. கார்மேகம் கண்ட மயிலாய் காதல்தீபம் ஏற்றினாள் அவள் கயல்விழிகளால் காலம் கடந்தபின்னும் பிரகாசமான ஒளியுடன் சுடர்விடுவது - என் இதயத்தில் மட்டும் அல்ல எங்கே.. நெஞ்சில் கைவைத்துக் கூறுங்கள் அந்தப் பருவகாலம் மயிலிறகாய் வருடிய நினைவுகளாக உங்கள் இதயத்தில் இல்லை என்று ??? நேசமுடன்.. -நித்தியா ஒலிவடிவில்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.