Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் இருந்திருந்தால் இப்போது ஈழத்தில் வாழ்ந்திருப்போம்! Last Updated : இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள் மற்றும் சில பூவரச மரங்கள் பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம் சாம்பல் சுவடுகளின் மேலாய் புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது வானத்தின் காயம் ஆறிவிடும் என்று அம்மா நம்புவதைப்போல மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள் காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன -தீபச்செல்வன் கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம…

    • 0 replies
    • 326 views
  2. காட்சிப்பிழைகள் - கே இனியவன்காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்) காதல் ஒரு மந்திர கோல் ..... இரண்டு இதயங்களை .... ஒன்றாக்கி விடும் ....!!! நெற்றியில் ... குங்கும பொட்டு.....? அப்பாடா - சாமி .... கும்பிட்டு வருகிறாள் ....!!! தேவனிடம் .... பாவ மன்னிப்புக்கேட்கிறாள் .... என்னிடமும் கேட்பாள் .....!!! ^^^ கனவு நிஜத்தில் நிறைவேறாத ... ஆசைகளை நிறைவேற்றும் .... நீர்க்குமிழி .....!!! திடுக்கிட்டு எழுந்தாள் .... தாலியை கண்ணில் வணங்கி... என்னை பார்த்தாள் ....!!! இன்னும் சற்று தூங்கியிருந்தால் .... சொர்கத்தை......... பார்த்திருப்பேன்....!!! ^^^ நீ என்னை .... காதலிக்கும் வரை ... உத…

  3. கேதா ஊருக்கு போய்விட்டு வந்தவுடனேயே “தொதல் கொண்டுவந்தியா? பருத்தித்துறை வடை கொண்டுவந்தியா?” என்று கேட்காமல், நல்ல போட்டோ எடுத்துக்கொண்டு வந்தியா? என்று தான் கேட்டேன். எல்லோர் கையிலும் இருக்கும் அதே கமரா தான், அவன் எடுக்கும் போது மட்டும் கவிதை பாடும். விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியை பார்த்து “நீ அழகா இருக்கே, நிறைய பசங்க உன்னை சுத்தி வந்திருப்பாங்களே” என்று கேட்க பதிலுக்கு அவள் “ஒருவேளை அவங்க உன் கண்ணால என்னை பாக்கலியோ என்னவோ” என்பாள். கேதாவின் கமரா கண்கள்! படம் கவிதை சொல்லுது. பதில் கவிதை சொல்ல, படலையின் அரசவைக்கவிஞரும் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடும் மன்மதகுஞ்சுவுக்கு அழைப்பு விடுத்தேன். தல ஐந்து நொடியில் கவிதை ஒன்றை துப்பினார். வைரமுத்து கூட “வெட்ட…

  4. Started by pakee,

    [size=4]மனிதா நான் யாரு நீ யாரு சொந்த ஊர் ஏது அத எல்லாம் தூக்கி போடு பண்போடு நல்ல அன்போடு நீ முன்னேறு நீதான் ஸ்டார் வாழ்க்கை ஒரு புதிர் போல எது எப்ப நடக்கும் தெரியாது கடவுள் தந்த அழகிய வாழ்க்கையில் நல்லது நடக்கும் நம்புங்கள் முயற்சி இல்லாமல் பலன் ஏது? குறைகளை சொல்வதினால் தடுமாற்றம் உனக்குள் ஒருவன் யார் அதை தேடு அதை நீ அறிந்தால் தான் வரலாறு போட்டி இல்லாமல் வெற்றி ஏது? பொறமை கொள்வதால்தான் தகறாரு நமக்கு தெரியாது பல உண்டு கற்றது கையளவு நீ என்னும் தேடு வா நண்பா மர்மமான வாழ்க்கையில் வாழ்த்துதான் பார்க்கலாம்...[/size]

    • 0 replies
    • 560 views
  5. காதலென்று அலைந்ததில்லை கனவதில் மிதந்ததில்லை என்னோடு உன்னை கற்பனைக் கண்கள் காணும் வரை! காலம் உன்னை இனங்காட்ட காரணமில்லாமல் கரைகிறது என் மனம் உன் நினைவில்! பாராத உன்னுருவம் பார்க்கத் துடிக்குது என் பருவம் பார்த்த விழிகள் பூத்திருக்கு இமைகள் அசைக்காது.! இடியே வரினும் இசைக்காத என் செவிகள் ஏங்குதுன் காற்றிலாடும் சொல் வாங்க! அர்த்தமில்லா கீதம் கூட அற்புதமாய் காதில் விழுகுது! இடைவிடாது இடிக்கும் அந்த இதயம் கூட அமைதிகாக்குது இதமாய் உன் பெயர் உச்சரிக்க! இரவோடு வந்த உறக்கம் கூட இரந்து கேட்டும் இரக்கப்படமால் இல்லையென்று கிடக்குது.! மோதலுக்கு வரியெழுதும் கரங்கள் கூட காதலுக்கு வரியெழுதத் துடிக்குது! நடை பயில பஞ்சிப்பட்ட கால்கள்…

  6. இதைப் பார்க்கும்போது வன்னியில் வாடிக்கொண்டிருக்கும் எம் குழந்தைகளின் நினைவுகள் வந்துபோயின...பின் ஒருகணம் வெளிநாட்டில் எம் உறவுகளின் பிள்ளைகளையும் நினைத்தேன்...கண்ணீர்களுக்குள் என்னால் கவிதைகளை தேடிக்கண்டுபிடிக்க இயலவில்லை..ஆற்றாமையில் மனம் துடிக்கிறது... இந்தப்படம் உங்கள் மனங்களுக்குள் தூண்டிவிடும் உணர்வுகளை கவிதை ஆக்குங்கள்...

  7. Started by meelsiragu,

    ஒரு சொல்.! புரோட்டாவும் நல்ல குருமாவும் முடித்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளில்..! பல ரவுண்டுகளை மாத்தி மாற்றி அடித்தப் பிறகு என்ன தோன்றும் உங்களுக்கு.. அடப் போங்கையா..!.. உங்களின் பேச்சும் கருத்துக்களும் என்று இருக்கையில் எப்படி நினவு தப்பி வீட்டில் நிலை தடுமாறி குப்பற விழ முடிகிறது என்னால்..? வியப்பும் ஆச்சரியமும் ஒன்று சேர்ந்து கொள்கின்றன.. மீள்சிறகு

  8. செருப்புகளும் மதங்களும் விற்பனை சந்தையில் நிறைய குவிந்து கிடக்கின்றன செருப்புகள் போல் மதங்களும் தங்களுக்குள் விவாதித்து விவாதித்து தாங்களாகவே அடித்துக் கொள்வதிலும் சளைத்தவையில்லை ஒன்றையொன்று அளவுகளிலும் அழகுகளிலும் தான் வெவ்வேறாக இருக்கின்றன சில அறுந்தும் சில தேய்ந்தும் செருப்புகளை போலவே பல வேளைகளில் செருப்புகள் உயர்வானவைதான் மனிதயினத்தை காவுகள் கேட்கும் மதங்களைவிடவும் kavimathi.com

  9. குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது மகிந்தாவின் அநியாத்தால் குண்டு மழையும் வான்பிதாவின் புண்ணியத்தால் மாமழையும் பொழிகிறது ஒரு குடையின் கீழே குடியிருந்த எங்கள் வாழ்வு வன்னிக் காட்டில் வெள்ளக்காடாய் மிதக்கிறது நேற்றிருந்த வீட்டையும் இன்றிருந்த குடிலையும் இழுத்துப் போனது வெள்ளம் இனியென்ன செய்வது? முன்னேறி வரத்துடிக்கும் எதிரிகளின் காலடிச் சத்தம் முன்னரங்க முறியடிப்பில் பிள்ளைகளின் யுத்தத்தால் தொலைகிறது ஆயிரம் அர்பணிப்புகள் அடைமழை போல் புரட்சிகள் ஆடு நனையுது என்று ஓநாய்களும் அழுகிறது தூக்கிப் போக முடியாத சொத்தாக நிமிர்ந்து நின்ற தென்னையும் பனையும்கூட சரிந்துபோய்க் கிடக்கிறது எத்தனை முறை இடம்பெயர்ந்தாலும் …

  10. வன்னி – மரணவெளிக் குறிப்புகள் கருணாகரன் முதற்காட்சி 1. பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது இரவு பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது பகல் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது காலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது மாலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை 2. நாட்களை மூடி காலங்களை மூடி மனிதர்களை மூடிப் பேரிருளாய் யுத்தம் விரிந்த போது நாங்கள் கூரைகளற்ற வெளியில் அலைந்தோம். போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை “எங்கேயுன் பிள்ளை? கொண்டு வா போர்க்களத்துக்கு“ என்ற கட்டளை யுத்தத்தின் பரிசாக அளிக்கப்…

  11. வன்னியிலே உனக்கு இரத்ததானம் கவிதை இரத்ததானம் கொடு..! தயவுடன் இரத்ததானம் கொடு..! மேற்குலகின் தெருக்களிலே வாகனங்களில் தொங்கும் வாசகங்கள் இவை...! மேற்குலகே வன்னிக்கு செல்லுங்கள் வேண்டியளவை அள்ளுங்கள் உங்கள் உயிர்காக்கும் அதிசயத்திரவம் எங்கள் உயிர் நீங்க முதல் நாங்கள் தெருக்களிலே ஊற்றிடும் திரவம்......! அதில் உங்களுக்கும் உரிமையுண்டு உங்களின் ஆயுதங்களால் தானே உடலிலே ஓடாமல்; அது தெருக்களிலே பாய்கிறது.... ஏன் இன்னும் தயக்கம்....! கலந்துவிட்ட குருதிக்கூட்டங்களை பிரிக்கும் விஞ்ஞானம் புரியல்லையா உனக்கு...? இறைவனே...! அதுவும் புரிந்துவிட்டால் அலை மோதிடுமே உன் கூட்டம் வன்னித்தெருக்களிலே இன்று....! …

  12. மடியொன்று கண்டேன்! ஆழமறியா அண்ணன் அணியை-என்றும் பலம் சேர்த்துப் பகை முறிக்க- அண்ணன் திசை நோக்கித் திளைக்காமல் நடந்தனரே-எம் மாவீரச் செல்வங்கள், இவர்கள்பணி நீயேற்று-மக்கள் துயர்துடைக்க விரைந்து சென்று, அவர்களுள் ஒருவனாய்- இன்று மீளாத்துயில் கொள்வோனே! உன் திறனை நானறியேன்- அதை உன் நண்பர் சொல்லிடவே செவிமடுப்பேன்- ஆனால் உன்சுமையை நானறிவேன் எட்ட நின்று. ஊரவரில் முன்நின்று உறுதியுடன் பேசிடுவாய்- இருந்தும் வேதனைகள் உள்ளவரை வெறுமனவே விடமாட்டாய்- உன்னுடன் நெருங்கிப் பழகினதோ மூன்றே மூன்று மாதங்கள்தான்- அதனுள் புரிந்தவைகளோ ஏராளம் ஏராளம்!- ஒருபுறம் சிறியவர் கருத்தை ஆர்வமுடன் நீயேற்றுப் பணிவுடனே நடந்திடுவாய்- மறுபுறம் மூத்தோர்கள் வியந்திடவே நேர்மை…

  13. எனக்கு மின்னஞ்சலில் வந்தது ஈழத்துப் பாப்பா பாடல் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்த…

    • 2 replies
    • 1.1k views
  14. அம்மாவாம் அம்மா....! பத்து மாதங்கள் பகலையே காட்டாமல் இருட்டு வயிற்றில் படுக்க விட்டாள் புஷ்டியான ஆகாரம் தானுண்டு -- தனக்கு இஷ்டமான காரம் விட்டாள்....! பிரசவத்தில் அவள் பட்ட வலியை பிறசமயத்தில் ஊரார் நன்றாய் உளறுகின்றார் கருப்பையால் புவியேற நான்கொண்ட துன்பம் இங்கெவர் உரைப்பார் காண்....! பத்தியமென்று பகாசுரன் போல தின்று அறுத்த மீனெல்லாம் அரைத்த குழம்பாக்கி விருப்பமுடன் விழுங்கினாள் தன் பிள்ளை அருந்த பால் சுரக்கவே....! கொழுக் மொழுக்கென்று முட்ட முட்ட அணைத்து பால்தந்தாள் முப்பத்தாறு மாதம் அடுத்தென்னை மடியில் இருத்தி -- தந்தாள் வேப்பெண்ணை பூசியே முலையை.....! …

    • 12 replies
    • 2.5k views
  15. ஈழம் என் உயிர் என்பார் தடைகள் உடைத்து தலைவன் வழியில் ஈழம் காண்போம் என்பார் வீர வசனம் பேசித் தம்மை விசுவாசி என்றும் கூறி வீணே காலத்தைக் கழிக்கின்றார் உணவின்றி மக்கள் உழல்கையில் உள்ளம் இரங்கார் ஒருபிடி உணவும் கூட உண்மையில் கொடார் கள்ளமனைத்தும் தம் உள்ளம் கொண்டு காப்பாற்றுவார் போல் மாற்றார் முன் கதறித் துடித்து நாடகமும் ஆடுவார் தன்னைத்த் தானே பீற்றித் தண்டோராப் போட்டுத் தம்பட்டம் அடித்து தானே தன்மானத் தமிழன் என்றுவேறு எக்காளமிடுவார் வார்த்தைகளில் வண்ணம் வைத்து வருவோரை மயக்கி வக்கணையாய்ப் பேசி வலைவீசி வார்த்தைகளைக் கடன் வாங்கிடுவார் இத்தனை கேடு கேட்ட தமிழனை தெரிந்தும் போற்றுவோர் மனிதம் தெரியாத மூடர்களே உணர்ந்தும் உறவு கொள்வோர் உலகறியா மூடர்கள் …

  16. Started by putthan,

    தொண்டர்களாள் வளர்ந்த தலைவனுக்கு சரித்திரம் உண்டு தொண்டர்களாள் வளர்ந்த எதிர்கட்சி தலைவனுக்கும் சரித்திரம் உண்டு தொண்டா உனக்கு உண்டோ ஓர் சரித்திரம். ரசிகர்களாள் வளர்ந்த கதாநாயகனுக்கு சரித்திரம் உண்டு. ரசிகர்களாள் வளர்ந்த வில்லனுக்கும் சரித்திரம் உண்டு. ரசிகா உணக்குண்டோ சரித்திரம். பக்தரால் வளர்ந்த சாமிகளிற்கு சரித்திரம் உண்டு பக்தரால் வளர்ந்த ஆசாமிகளிற்கும் சரித்திரம் உண்டு. பக்தா உனகுண்டோ சரித்திரம். வாசகர்களாள் வளர்ந்த எழுத்தாளரிற்கு சரித்திரம் உண்டு வாசகா உனகுண்டோ சரித்திரம். போராட்ட குழு தலைவனுக்கு சரித்திரம் உண்டு ஒட்டுகுழு தலைவனுக்கும் சரித்திரம் உண்டு. போராளி உனகுண்டோ சரித்திரம். உனக்கு நீயே நாயகனாக,தலைவன…

  17. கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன் என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல் காலடிச்சத்தம் கேட்டது இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது இவ்வளவு கம்பீரமான காலடி சத்தம் மெதுவாகக்கண் திறந்தேன் ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம் மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன் என்னவனை முதல் முதலில் பார்த்த முதல் நாள் மறக்க முடியாத நாளும் கூட கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன் உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன் கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன் நான் திட்டியது அவன் காதில் …

  18. குறுக்குக் கட்டி நீ குளிக்கையிலே குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு! குறும்புக்காரன் மனசுக்குள்ளே குறுகுறுக்குதடி வயசு! தலைக்கு சீயாக்காய் தேய்ச்சு சிகைக்கு சாம்பிராணி காட்டி நீ குளிச்சு முடிந்தபின்னும், எனக்கு முடியவில்லை! என் இதயம் படியவில்லை!! புது உடையுடுத்தி வந்த பின்னும் என் படையெடுப்பு அடங்கவில்லை! மடையுடைத்த எண்ணத்தில்... தடையுடைக்கும் திட்டத்தில் என் கவனமெல்லாம் உன்னிடத்தில் உன் கவளம் போன்ற கன்னத்தில்! சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே, சமைந்தவள் உனைப் பார்க்கையிலே... என் சிந்தனையும் சமையுதடி! எண்ணெய் ஊற்றாதே...! என் எண்ணமெல்லாம் வழுக்குதடி!! சாமி சிலை முன்னாடி சாந்தமாய்த்தான் தெரிகிறாய்! திரைச்சீலை பின்னாடி காந்தமாய் ஏன் இழுக்கிறாய்…

  19. அம்மா அம்மா என்காத உயிர் இல்லையே அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே! எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள் எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்! எம்மை காக்க அரும்பாடுபட்டாள் எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்! திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள் நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்! எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள் எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்! தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு! நாம் உண்ணும் அழகு கண்டு தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்! தன் உயிர் கொடுத்து எம் உயிர் வளர்த்தாள் அன்னை! அவள்தான் நான் உலகில் வந்து கண்ட முதல் தெய்வம்.

    • 101 replies
    • 11.1k views
  20. பனியின்றி குளிரின்றி இந்த வருடத்தின் முதல் சிரிப்பு இயற்கையின் சிரிப்பில் துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..! மலர்வது மலர் மட்டுந்தானா..! மனிதர்களுந்தான்..! நகரமே சிரித்தது யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது சிரித்துக் களித்தது இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க மலராய்த் தெரிந்தது குட்டைப் பாவாடைகளும் கட்டை ரீசேர்ட்டுகளும் தலை காட்டா விட்டாலும் சிட்டுக் குருவிகளாய் இளசுகள் உதட்டோடு உதடுரசி மூக்கோடு மூக்குரசி கெஞ்சலும் கொஞ்சலுமாய்..... வட்ட மேசைகளைச் சுற்றி வட்ட மிட்ட கதிரைகளில் பெரிசுகளும் சிறிசுகளும் கண் பார்த்துக் கதை பேசி மெல்லுதட்டில் தமை மறந்து ஐஸ் சுவைத்து...... கை கோர்த்து நடக்கையிலும் காதலுடன் இடை தழுவி …

    • 2 replies
    • 1.6k views
  21. அனைவருக்கும் ஒரு சிறு காதல் பாடல் போட்டி. காதலர் தினம் நெருங்கிவிட்டது. இரசிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இங்கே "காதல்" என்ற சொல்லில் அல்லது காதலிக்க, காதலுடன் இப்படியான சொற்களில் ஆரம்பிக்கும் சினிமாப்பாடல்களை எழுதுங்கள். ஒருவர் ஒரு பாடலின் வரிகளில் குறைந்தது முதல் வரியையாவது உருப்படியாக எழுதவேண்டும். முழுவதும் எழுதமுடிந்தால் எழுதுங்கள். ஒருவர் ஒருநேரத்தில் ஒரு பாடலை மட்டும்தான் எழுதவேண்டும். அடுத்தவர் வந்து ஒரு பாடலை எழுதியபின்னர் முன்னர் வந்தவர்கள் திரும்பவும் வந்து இன்னொரு பாடலை எழுதலாம். சரி, எங்கே பார்ப்போம்..... நானே ஆரம்பித்துவைக்கிறேன். குறிப்பு:-ஆரம்பத்தை மட்டும் படித்துவிட்டு என்ன ஆசிரியரே! இது உங்கள் சொந்த அனுபவமா? என்று கேட்கவேண்டாம். …

    • 50 replies
    • 7.5k views
  22. Started by gowrybalan,

    பயணம் தொடங்கினேன்... தூறலும் தொடங்கியது அம்மா சொன்னவ ''மழையில நனையாதை'' எண்டு! ஒதுங்க இடம் தேடி...ஓடி... கடைசியில் - ஒரு தாவாரம்.. ஒதுங்கினேன்........ தாவாரம் வழியே தூவானம் வர உடல் நனைந்தது.... மனம் அடித்துக் கொண்டது... அம்மா சொன்னவ... ''மழையில நனையாதை'' எண்டு! தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

    • 15 replies
    • 2.4k views
  23. Started by N.SENTHIL,

    காட்டுமல்லிக்கொடியாய் யாருமற்ற வனத்தில் முளைத்து கிடந்தேன் பூப்பறிக்க வந்தவள் - இந்த கொடியில் ஆசை வைத்து பறித்து போனாள் பதியம் போட்டாள் , பொழுது தவறாமல் நீர் ஊற்றினாள் உரம் போட்டு என் வளர்ச்சிகண்டு பூரித்தாள் மொட்டுவிடும் பருவத்திலொரு நாள் நன்று கொதித்த வெந்நீர் ஊற்றினாள் வேர் வரை பாய்ந்து துடித்தேன் - ஏன் இப்படியென்றேன் பூக்கள் பிடிக்காதென்றாள் பூப்பதுதானே என் இயற்கை விதி என்றேன் பூக்காது பார்த்துக்கொள் என்றாள் ............. முயற்சிக்கிறேன் என்று சொல்லி செத்துப்போனேன்

    • 7 replies
    • 1.5k views
  24. வெள்ளை வானை எண்ணயிலே மிச்ச உயிர் போகுதய்யா... ( ஆள்கடத்தல்) நாளு சுவர் வீட்டுக்குள்ளே நாளாந்தம் வாழ்க்கை ஜய்யா.... வெளியில் போக முடியவில்லை வெள்ளை வான் கடத்தலய்யா... ஓடி ஒழிய முடியவில்லை ஊறடங்கு வேறு ஜய்யா... நட்டு வைச்ச மரம் போல தெருவெல்லாம் ஆமி ஜய்யா... அவனை கண்ட அச்சத்திலே பாதி உயிர் போகுதய்யா.... எட்டப்பர் வேறு ஜய்யா எட்டர் வேலை புரியுதய்யா.... இலக்க தகடு கழட்டிப்பிட்டு இல்லம் உள்ளே புகுருதய்யா... காரணங்கள் இன்றி இங்கு கைதுகள் நடக்குதய்யா... காணவில்லை பட்டியலில் வேறு இன்று போடுதய்யா... என்ன செய்வோம் நாங்களய்யா எங்கு போயு சொல்வோம் ஜய்யா..??? எங்கள் …

  25. எதேச்சையாய் ஒரு காகத்தைக் கவனிக்க நேர்ந்ததுஇ எனது பள்ளி வளாகத்தில். உணவு வேளை முடிந்ததும் பிள்ளைகள் சிந்திய உணவுப் பருக்கைகளை தமது அலகால் கொத்தி அவ்விடத்தையே சுத்தம் செய்துவிட்டது காகம். இப்படி காகம் எத்தனையோ வகையில் ஒரு சாதாரண பறவையை விடவும் உயர்ந்த குணங்கள் கொண்டதாய் எனக்குத் தோன்றிற்று. ஆனால் அது் ஏனோ ஒரு பறவையாயக் கூட மதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் அதன் நிறமோஇ வடிவோ அல்லது அபரிமிதமோ தெரியவில்லை. எனது ஆதங்கம் ஒரு கவிதையாக இங்கு வெளிப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.