கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கனடாவில் மொன்றியலில் வசிக்கும் கே.செல்வகுமார் இயற்றிய இந்த 2 பாடல்களை கேட்டு உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள். http://www.esnips.com/doc/e2dffaf4-f393-4d...ngam-(Srilanka) http://www.esnips.com/doc/93efb0c8-d1f3-4d...---Krishnarajah உயிரான காதல் என்ற பாட்டில் வரும் " நீ ஓம் என்று சொன்னால் நான் ஒழுங்காக படிப்பேன்" நாங்கள் ஊரில் யாருக்கோ சொன்ன ஞாபகம் வருகிறது அல்லவா ? ஒழுங்கை, புளிய மரம், பங்குக்கிணறு ஞாபகமா? பாடிய நிலுக்ஷி ஜெயவீரசிங்கம் எங்கள் பாடகி. இனிமையான குரல் வளமுள்ளவர்!
-
- 10 replies
- 2k views
-
-
போய்விடு! அடேய் கருணா துரோகியே! தமிழீழத்தை விட்டு விரைவில் ஓடிவிடு! கருணையின் பொருள் தெரியாத உனக்கு யாரடா கருணா என்று பெயர் வைத்தது? சொறி நாயயென நானுனை நாமமிடுவேன்! மனிதனுக்கே மனிதாபிமானம்! மனுதர்மம்! உனைப் போன்ற மிருகங்களிற்கு சட்டத்தில் கிடைப்பது சாட்டையடிகளே! பாரினில் நீயொரு படு பாதகனென்று ஹியூமன்ரைட்ஸ் வோட்சும் சொல்லுது! இனியும் உனக்கேனிந்த கேணல்பட்டம்? "கோணல் சொறிநாய்" நீயென்றறிந்திடு! நேற்றுவரை வாய்மூடிப்பால் குடித்தநீயுன் அன்னைக்கே எதிராகவா மார்தட்டுகிறாய்? இரத்தவாந்தி நீ எடுக்குமுன்னர் இலங்கையைவிட்டு வேறிடம் ஓடிடு! பற்றைக்குள் கக்கூசு இருந்த உன்னை பிளேனில் ஏற்றி பேச்சுக்கு அனுப்பிட ஒற்றர் கூட்டத்து பிச…
-
- 10 replies
- 2k views
-
-
“அழகான கொலைகாரியே😷” அழகான கொலைகாரியே அடிவயிற்றை கலக்கிறியே வளமான எம் வாழ்வை வந்தேனோ அழிக்கிறியே பாழான பழக்கத்தால் உருவான அழகே-இன்று உலகெல்லாம் பரவிநீ-எம் வாழ்வில் செய்வதெல்லாம் இழவே உறவோடு நாமிங்கு உறவாட முடியாமல் எம் மிடைவந்த சதிரே இவ்வுலகையே உலுப்ப உருவான புதிரே சத்தமின்றி பெரும் யுத்தமின்றி கொத்துக்கொத்தாய் உயிர் அள்ளிபோறவளே சத்தியமாய் சொல்லு உனை ஏவியவன் எவனோடி உன்னை நாம் தொட்டதில்லை முத்தமிட்டதில்லை ஏன் பார்த்தது கூட இல்லை எப்படி எம் சுவாச அறைவரை வந்தாய் கண்கானா அழகே உனை கவிதையாய் வடிக்குமுன் எத்தனை முறை தும்மிவிடுகிறேன். ஒருவேளை என்னையும் நினைப்பதை உணர்த்தும் அறிகுறியாடி உனை தாங்கும் தைரிய…
-
- 5 replies
- 2k views
-
-
மலர்களிலே குருதி மணக்கிறது, நாளை அவைகள் குண்டுகள் காய்க்கலாம் வன்டுகள் இப்பொழுதெல்லாம் தேன் குடிப்பதில்லை - அவை குருதி குடிக்கப் பழகியதால் துப்பாக்கிகளையல்லவா காதலிக்கின்றன. காற்றில் உயிர்கள் மிதக்கின்றன அவை பலாத்காரமாக பறிக்கப் பட்டதனால் உரிய இடம் சேராமல் காற்றில் மிதந்து அலைகின்றன. நாளைகளில் ஊர்கள் இருக்கும் புல் பூண்டு, மிருகம், பறவைகள் எல்லமே இருக்கும் மனிதனைத் தவிர..............
-
- 15 replies
- 2k views
-
-
சமாதான உடன் படுக்கை கையெழுத்தான ஆரம்ப நாட்களில் எழுதிய கவிதை... மீண்டும் வராதோ குறைந்த பட்சம் அந்தச் சமாதானம் என்ற ஏக்கம் அடிக்கடி என்னுள் வந்து போகும்.... சிவன் வந்தான் சிவனோடு அவன் மகன் குகனும் வந்தான் மூத்தவன் கணபதியும் அன்னை பார்வதியும் பிறிதொரு நாள் வருவதாக சேதியும் வந்தது! "என்ன திடீர் விஜயம்...?" என்றேன் "நாட்டில் சமாதானமாமே... அது தான் சும்மா சுற்றிப் பார்க்க வந்தோம்" என்றான் குகன் மயலிறகால் காது குடைந்த வண்ணம்... "கழுத்தில் நஞ்சு கட்டியவர்கள் சுதந்திரமாக நடமாடலாமாமே... அதுதான் நானும் வந்தேன்" என்றான் நீலக் கழுத்தை தடவிய வண்ணம் சிவன்...! பாம்பு பல்லிளித்தது மயில் தோகைவிரித்து அழகு க…
-
- 4 replies
- 2k views
-
-
பாசத்திற்குரிய முரளிக்கு: வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இந்தப்பாடல் உங்களுக்கான படையல். அசல்: நா.முத்துக்குமார் நகல்: வசீகரன் பல்லவி: நினைத்து நினைத்துப் பார்த்தேன் விலகி நெருங்கி பார்த்தேன். உங்கள் எழுத்தினாலும் யாழும் மகிழுதே உங்கள் பதிவை எண்ணி நானும் வியக்கிறேன். முகமூடி அணிந்து யாழில் இன்னும் எழுதும் பதிவும் எதற்கு நண்பனே? (இது உங்களுக்கல்ல ஏனைய உறவுகளுக்கு!) சரணம்-1 அமர்ந்து எழுதும் அறையின் ஒளியும் உங்களைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்? யாழ் உறவுகளின் முகங்கள் தெரியுமா? தொடர்ந்து எழுதும் விரலின் வலியை மயிலிறகு கேட்கும் எப்படிச் சொல்வேன்? தொலைந்துபோன உறவுகள் சேருமா? கருத்துக்களத்தில் ஆக்கம் சேர்க்கும் கைகள் இன்று எங்…
-
- 7 replies
- 2k views
-
-
-
புரட்சி அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம் உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப் பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம் விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம் Inthuja Mahendrarajah நன்றி இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
-
- 7 replies
- 2k views
-
-
"கிளி" வீழலாம் புலி வீழுமா?!! வெற்று நிலத்தை பிடித்துவிட்டு வென்று விட்டோமென்று கொட்டம் அடிக்கும்! கூட்டம் ஒன்று!! எட்டி நின்று பார்ப்பவர்க்கு உண்மை புரியாது!! எங்கோ இருந்துகொண்டு தமிழன் வீழ்ந்த செய்திகேட்டு எக்களித்துச்சிரிக்கின்ற பேடியர் இனமொன்று மானத்தை எரித்து விட்டு உயிர்வளர்க்கும் இவர்க்கும் புரியாது!! பாடி விளையாடி பகடி விட்டு கூடிக் களிக்கின்ற வயதில் தன் இனம் வாழ மானமே ஆடையெனக் கட்டிக்கொண்டானே அவனே மாவீரன்! எங்கள் புலிவீரன் வெத்திலை சப்பிச் சிவக்கின்ற உங்கள் வாய்களுக்கு எங்கள் நிலம் சிவக்கும் நீண்ட கதை தெரியாது அதனால் தான் கொக்கரித்துக் கொண்டாடுகின்றீர்கள்! 'கிளிநொச்சி மட்டுமல்ல கிழக்கிலங்கை வடக்கு முழுவதுமே தமிழ…
-
- 10 replies
- 2k views
-
-
பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ எங்கள் மலர்களின் முக்கத்தைப் பாருமையா பெற்றோரை இழந்தனர் உற்றோரை இழந்தனர் அணைக்க கரங்கள் இன்றி அலையா அலைந்தனர் அலைந்த உள்ளங்களை அணைத்தது இச்சோலை அன்புக்கு ஏங்கிய உள்ளங்களை அன்புகாட்டிய இச்சோலை அழுத விழிகளை அழகுறச் செய்யது இச்சோலை அன்னையும் தந்தையுமாகி அமுது அளித்தது இச்சோலை துயரம் மறந்து சிட்டாய் பறந்தது இச்சிட்டுக்கள் அன்னையை பறித்தீர் தந்தையும் பறித்தீர் தப்பிய இக்குஞ்சுகளையும் பறித்துவிட்டீர் பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ துளசி
-
- 8 replies
- 2k views
-
-
என்னவளின் டயறி ---கண்களால் காதல் தந்து ....நினைவுகளை மனதில் சுமந்து ....வலிகளால் வரிகளை வடித்து ....என்னவளின் காதல் டயறி ....கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....என் மீதுகொண்ட கவலைகளை ....தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....அவைகூட அழுதிருக்கிறது ....!!!+காதல் நினைவுகளும் காதல் டயறியும்என்னவளின் பக்கம்( 01) உயிரற்ற காகித்தத்தில் ....உயிர் கொண்டு எழுதினேன் ....உதயனே உயிரானவனே ......!!!காகிதம் கூட உயிர் பெற்று ....உன்னையே எழுத சொல்கிறது ....!!!என் கையெழுத்தை தவிர ....அத்தனையும் உன் நாமமே ....கவலைகளை கண்ணீரால் ...வரிகளாய் எழுதுகிறேன் .....!!!+காதல் நினைவுகளும் காதல் டயறியும்என்னவளின் பக்கம்( 02) என்னவளின் டயறியிலிருந்து ......03 …
-
- 12 replies
- 2k views
-
-
ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில், பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் …
-
- 2 replies
- 2k views
-
-
-
- 9 replies
- 2k views
-
-
கனடாவில் வாழ்வு பத்தொன்பது ஆண்டுகள் கண்ணை மூடி முழிப்பதற்குள் ஓடி மறைந்து விட்டது. திரும்பிப் பார்த்தால் அண்டப்.. பெருவெளியில் நீண்டதொரு பயணத்தின் நடுவில் நின்று கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமா இல்லை என்னோடு சேர்ந்து இன்னும் பலர் பயணிக்கிறார்களா.....??? கடந்து போன ஆண்டுகள் தராத வேதனையை அடிக்கடி வந்து போகும் வெண்பனி தந்து சென்றது. எங்கே போனேன்-எங்கே வந்தேன் ஒன்றுமே தெரியவில்லை. சிட்டுக்குருவியாய் சிறகு விரித்து வானவெளியில் பறக்க-எனக்கும் ஆசை ஆனால் சிறகு உடைந்தவள் ஆச்சே-இல்லை இல்லை விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி.. எதைச் சொல்ல எதை விட எனக்குள்ளும் ஆயிரம் ஆசைகள்-ஆயிரம் நிறை வேறாத கனவுகள். விபத்தும் என்னை தன்னுள் அடக்காமல் இன்…
-
- 24 replies
- 2k views
-
-
சபதம் |||| ||||| சிங்கள விகாரையில் எரிந்தன விளக்குகள் தமிழர் வீடுகளில் அணைந்தன உயிர்கள் சமாதானம் உயிர்க்கும் என்றனர் மக்கள் எதிரியின் கரங்களில் கந்தகக் குழாய்கள் வேள்விக்குக் கிடைத்தோ பச்சிளம் பிஞ்சுகள் சயனத்தில் கருக்கினர் சிங்கள வெறியர்கள் குருதியில் எம்விதி எழுதத்திரண்டனர் தமிழர் ஈழமே தீர்வென பூண்டனர் சபதம்.
-
- 6 replies
- 2k views
-
-
எழுந்திருங்கள் எழுந்திருங்கள் சோர்வதற்கான நேரமல்ல இது உறுதி கொள்ளுங்கள் சபதமெடுங்கள் மரணித்துப்போன மாவீரர்கள் மீது மாண்டுபோன மக்களின் மீது அவர்களின் தியாகத்தின் மீது சபதமெடுத்துக்கொள்ளுங்கள் உயிருள்ளவரை தமிழீழம் காண உழைப்போமென்று போராடுவோமென்று அழுதது போதும் விம்மியது போதும் துடித்தது போதும் துவண்டது போதும் இழந்தது போதும் நம்பிக்கை இழக்காதீர்கள் தலை நிமிருங்கள் புலியாக மாறுங்கள்............. முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள் தமிழீழம் காணவேண்டும் இப்போது விட்டால் எப்போதும் இல்லை எம் விடிவு புறப்படுங்கள் நீதி கேளுங்கள் ஐநாவிடம் உலகநாடுகளிடம் பார்க்கவில்லையா? உணரவில்லையா? இவர்கள் என்ன செய்தார்களென்று எம்மினத்தை…
-
- 0 replies
- 2k views
-
-
வேசங்கள்! மனித பிறவியது மண்ணில் சிறப்பு பிறப்பாமே! கவலைகல் கண்ணீர்கள் சந்தோசங்கள் சாகசங்கள் இவை எல்லாம் அனுபவிக்குமாமே! சோதனைகளை விரட்டிவிட்டு சாதனை படிகளை கண்டறிந்து வெற்றிப்பாதையில் செல்லுமாமே! மனிதம் உள்ளோர் மட்டும் தானோ இத்தனைக்கும் உரியவர்கள்! மனிதமின்றி மனிதனாய் நித்திலத்தில் வேசங்கள் போட்டு நடைபோடும் வேடதாரிகளுக்கு என்ன தெரியும்! கவலை மறக்க கண்ணீரும் கண்ணீரை மறக்க புன்னகையும் இறைவன் தந்த வரமென்று அறியா வேடதாரிகளே நில்லுங்கள்! நித்திலம் நின் ஆயுள் தந்தது மனிதனாய் வாழவே -ஆனால் நீயோ வேசங்கள் பல தரித்து வேடதாரி பட்டம் பெற்று நித்திலத்தையே நிலைகுலைக்கின்றாயே உன்னால் முடியாது என்…
-
- 6 replies
- 2k views
-
-
இந்தப் படைப்பு, ஏறத்தாள இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு காலத்தில் மனிதகுணமும் அதனது இயல்புகளும் எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அசோகச்சக்கரவர்த்தி காலத்தில் இருந்து இன்றுவரை எதுவுமே பெரிதாக மாறி விடாதது மட்டுமல்ல, மனித குணம் மேலும் மேலும் வக்கிரமடைந்து செல்வதைக் காட்டுகின்றது. 'தர்மச்சக்கரம்' கலிங்கம் வீழ்ந்தது! குருதி கொப்பழித்த 'தாயா' நதிக்கரையின் ஓரங்களில், கரையொதுங்கிய பிணங்களின் இரத்த வாடை கலந்த காற்று வெற்றிச்செய்தியை, நெற்றியில் சுமந்து வீசியது, அன்னப் பறவைகள் நடை பயின்ற ஆற்றங்கரையில், ஆந்தைகளும் கழுகுகளும் குந்தியிருந்தன.. கலிங்கம் வீழ்ந்தது!. வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு. வீழ்ந்து கிடக…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
அவன் மனிதன் அல்ல மகான் தனிமனித விடுதலைக்காக(ஆத்மீகவிடுதலைக
-
- 18 replies
- 2k views
-
-
-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........இயற்கையோடு ஓட்டபந்தையம் ....... ^^^^^^^^^^^^^^^^^ எனக்கும் இயற்கைக்கும் .... ஓட்டப்பந்தையம் ...... எல்லை கோட்டை தொடுவதில் .... கடும் போட்டி ......!!! போட்டியின் தொடக்கமே .... இயற்கை முன்னணி பெற்றது .... சற்று என்னை திரும்பி பார்த்து .... உன்னை படைத்த என்னோடு .... உனக்கு போட்டியா ...? தோல்வியை ஒப்புக்கொள் ... நான் விலகி விடுகிறேன் .....!!! நான் விடவில்லை .... என் முழு முயற்சியையும் ..... பயன்படுத்தி இயற்கையை .... சற்று முந்திக்கொண்டேன் ..... நானும் சளைத்தவனில்லை .... திரும்பி பார்த்து சொன்னேன் .... படைத்தது நீயாக இருக்கலாம் …
-
- 5 replies
- 2k views
-
-
''இது இறுதிப் போர்....'' எந்தன் வீட்டில் மஞ்சள் அட்டை ஏறி வந்து விழுகுதப்பா கண் விழித்து பார்க்கையிலே சிவப்பு அட்டை நிக்குதப்பா... எங்கு போய் ஒளிவதப்பா...? எனக்கு வழி தெரியவில்லை எறி வள்ளம் ஓடிவிட எல்லைக்கது போனேனப்பா... அங்க வைத்து என்னை ஜயா பிடிச்சிழுத்து வந்தாங்கப்பா... எங்கள் மண்ணை காத்து விட எம் படையில் இணைந்து விடு... காலமதின் கட்டளையை கண்ணா நீயும் ஏற்றுவிடு தோளின் மேலே சுடுகளனை சுமந்து நீயும் நடந்து விடு... எல்லைக்கின்று போய் நீயும் எங்கள் நாட்டை காத்துவிடு எத்தனை காலம் எம் மண்ணில் அடிமையாக நீ இருப்பாய்...??? உன் உரிமை காத்து விட உன் உயிரை விட்டு விடு எங்கள் ஈழம் மலர்ந்து விட எங்கள் களம் வந்து விடு..…
-
- 13 replies
- 2k views
-
-
எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு ஏணையில் உறங்கும் பச்சிளம் குழந்தையைக்கூட ஏவுகணை வீசி கொல்லும் எதிரிகளே உங்கள் உலக சாதனையை அம்மணமாய் நின்று கொண்டு உலகம் வாழ்த்தட்டும் எங்கள் வலிகள் உங்களுக்கும் புரியவில்லை இன்னும் இந்த உலகத்திற்கும் புரியவில்லை மனிதம் தொலைத்து வெறிபிடித்த மிருகங்களாய் கொடிய முகம் கிழித்து வாருங்கள் எங்கள் எல்லைகள் எங்கும் உங்களுக்காய் மரணக்குழிகள் காத்திருக்கிறது எங்கள் குருதி உறைந்த செம்மண் பூமி எழுந்து உங்களைத் திண்டு விழங்கும் வெறும் எலும்புக் கூடுகளாய் உக்கிப்போன எச்சங்களை பொறுக்கி உங்கள் வீட்டின் முற்றத்திலே கொண்டுபோய் கொட்டுவோம் கனரக வண்டிகள் சுவர்களை உடைக்க பறந்திடும் விமா…
-
- 8 replies
- 2k views
-
-
வெல்லும்! வெல்லும் எம் ஈழம்! தலை போனால் போகட்டும் தன்மானம் சாகாது உயிர் போனால் போகட்டும் உணர்வுகள் சாகாது நிலம் போனால் போகட்டும் பலமிங்கு குறையாது தோல்விகள் வந்தாலும் மனமிங்கு சளைக்காது! விடுதலை ஒன்றேதான் குறிக்கோளாய் ஆனபின் இடையில் வரும் எதுவுமே இடைஞ்சலாகாது! இலக்கொன்றே எம் வெற்றி அதுவரை போராடு தலைவன் வழிசென்ற தலைகளென்றும் குனியாது! களத்தினில் நிற்பவன் பலத்தை எடை போடாதே சிங்கள அரசுக்கு நீ சிபாரிசு செய்யாதே!உள்ளிழுத்து பின் பொங்கும் சுனாமியாய் வருவார்கள் தமிழ் ஈழமே வென்றுதான் புலிகள் வெளிவருவார்கள்! வலிகளை எல்லாம் உள்வாங்கிக் கொள்ளாதே புலிகளை நம்பிக்கொள் உன்வீரம் சாகாதே!! தமிழினம் நிமிரணும் எதற்குமே சோராதே! ஈழம் வெல்…
-
- 10 replies
- 2k views
-
-
சென்று வாருங்கள்! உமக்காய் எம்மிடம் எதுவும் இரந்ததில்லை........ வாசல் வந்து ஒளிதர.......... வைகறை கலைக்கும் சூரியன் ........ வரி கேட்குமா என்ன? காலம் ஒன்று எமக்காய் விழி திறக்க........... கந்தக அதிர்வில் .......... விழி மூடியவர்களே.... ஊரினைதான் பிரிந்து வந்தோம்... உணர்வினை தொலைத்து அல்ல.......... அலை ஓய்ந்ததென்று கனவாம் பலருக்கு....... அலை ஓய்வதுண்டா...? கடல் இருக்கும்வரை அலை காணாமல் போகுமா? கரிகாலன் படை - இருக்கும்வரை.. கூலிகள் கருத்து தமிழனை ஆளுமா? சாய்ந்துபோன விருட்சங்களே. உம் வேர்களை சுமந்தவர் வாழ . என்றுமே நீர் தருவோம். நிம்மதியாய் - உறங்கும்!! (மூதூரில் - எமக்காய் கனவுகாண- விழிமூடியவர்களிற்கு)
-
- 12 replies
- 2k views
-
-
நன்றி முகநூல். நன்றி முகநூல். (படத்தில் அழுத்தி.. பெரிதாக்கியும் வாசிக்கலாம்.)
-
- 0 replies
- 2k views
-