கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தைத்திருநாள் இல்லம் எல்லாம் தழைத்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல் கூவியழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள்
-
- 10 replies
- 3k views
-
-
என்னைக் கோவப் படுத்தியதுக்காக உன் மேல் நீ கோவப்படுகிறாய் உன்னைக் கோவப் படுத்தியதுக்காக என் கோவத்தை வெறுக்கிறேன் * என்னால் உன் கோவங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை ஒரு விதத்தில் அதுவும் உதவி செய்கிறது எனக்கு ஆங்கிலம் புரியாததால் * உன் கோவத்தை என் மேல் இறக்கி வைத்துவிட்டு போய்விடுவாய் பாவம் நான் படாத பாடுபடுகிறேன் உன் கோவத்தை யாரிடமாவது இறக்கி வைக்க * உன் ஆசையை காட்டுவதற்காக இப்பிடியா வார வாரம் என்கூட கோவம் போட்டு பேசாமல் விடுகிறாய் சில தினங்கள் * உன்னை அழகாய் எனக்கு காட்ட விரும்புகிறாய் என்றால் சொல்லி இருக்கலாமே உனக்கு விரும்பிய அழகுசாதனப் பொருட்கள் வாங்கி தந்திருப்பேனே அதை விட்டுட்டு ஏன் என் மேல் அடிக்க…
-
- 10 replies
- 1.6k views
-
-
இனிக்கும் நினைவலைகள் நெடிதுயர்ந்த நிழல்மரங்கள் கீழ் நிழலில் நீட்டிக்கால் வைத்துநான் நீண்டு படுத்திருந்திருந்தேன் விடிகாலை எழில்கூடி வெளிவந்த ஆதவனும் நடுவானில் நின்றிருந்து சுடுகதிரை வீசிநின்றான் துடிகூட அசையாத தளிர்ச்சோலை மலர்க்கூட்டம் தம்மழகால் எனைமயக்கி தாள்வாரம் நின்றுவிட இடையிடையே தொலைவினிலே இறக்கையினம் இசைபாட இன்னிசைபோல் தென்றலிலே மிதந்து வந்ததுவே முடிசார்ந்த மன்னவரின் முன்சரிதை மலர்எடுத்து இடையின்றி ஒவ்வொன்றாய் இனித்துச் சுவைத்திருந்தேன் துடியிடையும் பிடிநடையும் துவளும் தமிழ்ப்பாவையர்கள் வடிவழகின் வர்ணனையை மனக்கண்ணால் ரசித்திருந்தேன் அடியாளும் அடிசிலொடு இரசமுடன் இருகறிகள் மடைபோட்டு முடித்துவிட்டு மன்னவ…
-
- 10 replies
- 3.6k views
-
-
இருக்கிறதோ...... இல்லையோ ................. தவிக்க வைப்பது தெய்வமும் காதலும் மட்டுமே. ************* எருக்ககலை நாயுருவி குருக்கத்தி கூப்பிட்டுக்குத்தி இவைக்கே தெரியும் என் காதல். ************ மொழிபெயர்க்க முடியாமல் விழிகளால் எழுதும் வித்தையை எங்கே கற்றாய்? ************ நீ கடந்தபின் பார்க்கும் துணிவை பார்த்து சிரிக்கிறது-உன் ஒற்றைப்பின்னல். *********** எங்கேயும் எனைபிரிந்து போய்விட முடியாது உன்னால், அங்கே உனக்கு முதல் என் கவிதை இருக்கும். ********** வழியனுப்புதல் நிச்சயம் பாடையிலா??? பல்லக்கிலா??? ********** என்றாவது ஒருநாள் உன் பெருமூச்சு சொல்லும் என் மீதான காதலை. ********** எரிப்பவர்களிடம் கேட்டுப்பார் ஒரு இடம் எரிய…
-
- 10 replies
- 1.4k views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் (20.4.16) வெளியாகியுள்ள எனது கவிதை "மீள வரும் குளம் ... ", யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மீள வரும் குளம்..... நீர் உரசிப் பறக்கும் தட்டான்கள் தாழ்வான மரக்கிளையில் ஒரு மீன்கொத்தி மறைந்திருந்து கூவும் ஒரு போர்க்குயில் வளைந்த மொட்டைப் பனையில் ஒரு கிளி மரச்சரிவில் ஒரு மரங்கொத்தி.... பதிவுசெய்து வைத்திருந்த காட்சிகள் மீளவருகின்றன மனக்கண்ணில் வற்றிய இந்தக் குளக்கரையில். -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன் 20.4.16)
-
- 10 replies
- 2.2k views
-
-
யார் இவர்கள்..... கவிதை - இளங்கவி தமிழர்களை அழவைத்த அந்தக் கொலைக்காட்சி இதுவும் போதாதா உலகத்துக்கு எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி.... இறந்த உடல்களெல்லாம் நிர்வாணமாய் கிடக்க உயிருள்ள ஓர் உறவின் உயிர் குடிக்கிறது துப்பாக்கி..... அவர் உதிரம் நிலம் நனைக்க அவன் சிர்ப்போசை கேட்கிறது.... நாம் சிந்திய இரத்தத்தில் அவன் சந்தோசம் மிதக்கிறது..... யார் இவர்கள்....? எமைக் காத்த தெய்வங்களா.... இல்லை..ஈழத்து இளம் மயிலா... அல்லது... எம் ஊரு காளைகளா.... எம் மொட்டுக்களின் பெற்றோரா...? புலியாக இருந்தாலும் பொதுமகனாக இருந்தாலும் அவன் இறந்தது உனக்காக..... உன் தேச மீட்புக்காக....... கண்ணீரும் வற்றி விட்டோம் கலங்க நேரமில்லை... ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
சொர்க்கம் மனதிலே...... எத்தனை தடவை பிறப்பேன் எத்தனை தடவை இறப்பேன் எத்தனை முறை நான் புதைவேன் அத்தனையிலும் நான் உயிர்ப்பேன் கருவினில் தோன்றி கல்லறை வரையும் உறவுகள் தான் எம் வேலி கனவுகள் போல கலைந்திடும் வாழ்வில் கவலைகள் யாவும் போலி புலர்ந்திடும் பொழுதில் மலர்ந்திடும் பூவும் பொழுதினிலே தலை சாயும் அலர்ந்திடும் பொழுதில் விடிந்திடும் வேளை அழகிய மலர்கள் பூக்கும் இலையுதிர் காலம் உதிர்ந்திடும் இலைகள் இறப்பினும் மரங்கள் இருகு;கும் இயற்கையின் கையில் இயல்புகள் மாற இலைதுளிர் காலம் பிறக்கும் வசந்தங்கள் வந்தால் பாரினில் எங்கும் பசுமையின் புரட்சிகள் தோன்றும் சுகந்தமாய் சேவை தொடர்ந்திடும் வேளை சொர்க்கத்தின் வாசல் திறக்கும் பிறர் நலம் காக்கும் மனமது ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
-
பட்டாம் பூச்சியின் கனவு மனம் வலிக்கிறது. சம்பிரதாயச் சடங்கின் வடிவில் கழுத்தை சுற்றிப் பொன்நாகம் பளபளக்கிறது. அவளுக்கு கட்டாயக் கைதும், விலங்கு மாட்டலும்.. உடல் அவளுக்கானதாக இல்லை. முதல் முத்தம், முதல் தழுவல் வலியாக.. ஒரு படர்கையின் கனத்தில் பெண்மை நொறுங்கிப் போனது. அவள் சுயம் மறுக்கப்பட்டது. குரல் ஒடுக்கப்பட்டது. இன்னொரு வடிவம் அவளுள் சங்கமிக்க அவள் அனுமதியின்றி எல்லாம் ஆகிவிட்டது. நீளும் ஒவ்வொரு இரவிலும் சுயம் ஏளனப்படுத்தப்படுகிறது இரவுகள் விடியும் ஒவ்வொருகணமும் படர்ந்த இன்னொரு வடிவம் வெற்றிக் களிப்பில் நெஞ்சு நிமிர்த்துகையில் அவள் மனதில் படிந்தவலி விசுவரூபம் எடுக்கிறது. உள்ளக்கிடக்கையில் கிடந்துழலும் சுயம் அடிக்கடி பீற…
-
- 10 replies
- 2.6k views
-
-
வணக்கப்பாடலும் மாவீரர் வணக்கமும் எம் தலைவரின் சிந்தனையும் திருவள்ளுவர் ஆண்டும் மாதமும் திகதியும் நேரமும் கூடவே பண்பலை வானலையில் .. என்ன வேலை இருப்பினும் வானொலி அருகிருக்கும் மறவர் வீரம் பாடி அரசியல் அலசும் தாமரை தட்டாகம் பின்னர் ஒரு குறு நாடகம் ஒலிவடிவில் .. உண்மை வந்திடும் என்னும் பயத்தில் தேடி வந்து தாக்குவார் சிங்களம் கோபுரத்தில் சேதம் வரும் ஆனாலும் கொள்கையில் சிறிதும் வராது ... செய்திகள் இனிதே வரும் வெற்றிகள் சொல்லி எப்படி முடியும் என்பார் அதிர்ச்சியில் பலர் கோபுரம் சாய்ந்ததால் என்ன பற்றி எரிந்தால் என்ன பனையிலும் பாலை மரத்திலும் அண்டனா இருக்கும் .. தவபாலன் குரல் வருமா இனி எமக்கு புதுவையின் கவி வருமா வீரரை போற்றி அண்ணனின் உரைவருமா மாவீர…
-
- 10 replies
- 790 views
-
-
பூங்குயில்களே-உங்கள் முகாரியைக்கொஞ்சம் முடக்கிப்போடுங்கள் காற்றில்கலந்த கந்தகநெடியிலே -என் வெற்றிச்சேதியை விட்டுச்செல்கிறேன் அப்போதுபாடுங்கள்-புதிய பூபாள ராகங்கள். எனை வளர்த்தபாசறையில் நான்வளர்த்த பூஞ்செடியே நாளைய சேதிகேட்டு புதிதாய் மொட்டுவிடுவாயா-இலயேல் உயிர்பட்டு விடுவாயா? நாணல்களே....ஏன்.. கோணல்களானீர்கள் பனித்துளி என்ன உங்களுக்குப்பெருஞ்சுமையோ தலைநிமிர்ந்துநில்லுங்கள் ஆதவனின் அனல்க்கரங்கள் அள்ளிச்செல்கயிலே அறிவீர்கள் நீங்கள் சுமந்தது வைரக்கிரீடமெண்று. வீரதேசத்தின் விடுதலைக்காற்றே-என் மண்ணின் மணம்சுமந்து உயிர்க்கூண்டில் நிறைந்து …
-
- 10 replies
- 1.8k views
-
-
அன்பர்களே, நான் சிங்கப்பூரை விட்டு 3 வருடங்களுக்கு முன் கனடாவுக்கு வந்தபோது என் துறையில் (கட்டடவியல் பொறியியல்) வேலை கிடைக்கவில்லை. 3 மாத முயற்சியின் பின் பலர் சொற்படி தொழிற்சாலை வேலையில் சேர்ந்தேன். சோகம் தாங்க முடியவில்லை. பின்னே? சிங்கப்பூரில் முதுநிலை வடிவமைப்பாளராக இருந்துவிட்டு, அதை சும்மா விட்டுவிட்டு இங்கே வந்து இப்படி ஆகிவிட்டதே என்று. சிங்கபூர் நிரந்தரவாசி (PR) உரிமையைக்கூட கைவிட்டுவிட்டு வந்துவிட்டேன். தொழிற்சாலையில் மரப்பொருட்கள் செய்யும் வேலை. மேசை, நாற்காலி போன்றவை. அப்போது சோகத்தில் கவிதை பொத்துக்கொண்டு வந்தது. 1) மரக்காலை வேலை ஒன்று... ("மழைக்கால மேகம் ஒன்று.." என்ற வாழ்வே மாயம் படப் பாடல் மெட்டில் பாடவும்.) மரக்காலை வேலை ஒன்று எனை ரொம்…
-
- 10 replies
- 3k views
-
-
அகவை பதினாறு காணும் யாழ் மகளே நீ வாழி . .கற்றோரும் மற்றோரும் கத்துக்குட்டிகளும் காளைகளும் கன்னியரும் .கற்றுத் தெளிந்தோரும்.. கற்க வருபவருக்கும் நீ கலைமகள். கண்ட நாள்முதல் மீண்டும் மீண்டும் காண வைத்தாய் .. அனைவரையும் அணைக்கும் ஆலமரம் நீ.. ஜாதி மத பேதமின்றி சகலருக்கும் சரி சமமாய் பிறப்பிலிருந்து இறப்பு வரை அறிவிக்கும் கருவியாய்.. ஊரிலிருந்து உலக செய்திவரை அத்தனயும் தரும் அமுத சுரபியாய் . .பருகத்தேவிட்டாத தேனாய் நாளும்பொழுதும் வளரும் யாழ் களமே நீ வாழி நான் மட்டும் மல்ல ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும் கொள்ளுபேரன் பேத்திகளும் உன் பேர் சொல்ல வேண்டும். என்ன துயர் வரினும் எழுகவே யாழ் களமே
-
- 10 replies
- 802 views
-
-
என் நண்பா என் நண்பா என்ன பயம் உனக்கு அவளுடன் பழகிய நாற்களை நினைத்துப்பாரு அவளோ தன் காதலை தயங்காமல் உன்னிடம் சொல்லி விட்டாளா------- நீயோஅவளுக்கு உன் காதலை சொல்ல மறுக்கிறாய் உன் நினைவுகள் வீனான கற்பனை தான் அந்த கற்பனை நிரந்தரம்இல்லை நண்பா? நீயோ உன் கண்களை முடியபின் பலவிதமான கற்பனைகள் உன் மனதில் மகிழ்ச்சியை தருகின்றது ஆனால்நீயோ உன் கண்களை விழித்த பின் பலவிதமான ஏக்கத்தையும் பயத்தையும் சிந்தனைகளையும் தருகின்றது? உன்சொல்லாத காதல் நீயோ தொலை தூரம் அவளோ நெடுந்துரம் உன் காதலை அவளுக்கு சொல்லிய பின் அவள் உன்னை ஏமாத்தி விடுவாளோ என்று ஏக்கம் உனக்கு ? ஒவ்வொரு நாளும் அவளுக்கு என்னசொல்வது என்று உன்மனது துடித்துக் கொண்டே இருக்…
-
- 10 replies
- 1.9k views
-
-
என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ தெரியவில்லை எனக்கு உன்னைப் பிரிவதென்றால் உயிர்விட்டுப் போவதுபோல் வலியொன்று உணர்கின்றேன் என் செய்வேன் நான் ஏனிந்த நிலையெனக்கு என் வீட்டு முற்றத்தில் தினந்தோறும் எழுந்து வந்து ஆனந்தமாய் அனுபவிக்கும் இளங்காலை இனிமை மஞ்சள் இளவெயிலின் தகதகக்கும் மோகனத்தில் உணர்வழிந்து உறைந்துவிடும் மாலை மயக்கங்கள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் அழகான காலையிலே அவசரமாய் உணவு தேடி பரபரப்பாய் பறந்து வந்து பாட்டிசைக்கும் புள்ளினங்கள் பச்சை இலைகளிலே பதுங்கி ஒழிந்திருந்து கதிரவன் வெளிப்படவே ஒளிவீசும் பனித்துளிகள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் கொத்து கொத்தாய் காய்காய்க்கும் முற்றத்து மாமரங்கள் பழு…
-
- 10 replies
- 1.8k views
-
-
-
தமிழ்க் கன்னி தோற்றம் எத்தனை எத்தனை இன்பன் கனவுகள்.... என்ன புதுமையடா! - அட புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே போடும் ஒலியிவளோ? - வந்து கத்துங் குயிலின் இசையோ? கலைமயில் காட்டும் புதுக்கூத்தோ? - அட முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு மொழியில் உரைப்பதோடா? மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள் மக்கள் உறவுடையாள்! - நல்ல செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில் சிரிக்கும் அழகுடையாள்! - சிறு கன்னி வயதின் நடையுடையாள்! - உயர் காதல் வடிவுடையாள்! - தமிழ் என்னு மினிய பெயருடையாள்! - இவள் என்றும் உயிருடையாள்! முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும் மூப்பு வரவில்லையே! - மணச் சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச் சாயல் கெடவில்லையே! - அட விந்தை மகளிவள் சிந்தும் …
-
- 10 replies
- 2.1k views
-
-
சாவை நேருக்கு நேர் சந்திக்கும் அந்த நிமிடம் யாருக்குமே உடல் ஒருமுறை நடுங்கும் ஆனால் பாலச்சந்திரா ! சாவு உன்னை சந்தித்த அந்த நிமிடம் சாவு தானடா உன்னைக்கண்டு நடுங்கி இருக்கும் ! செத்தவர் என்று உன்னை சொல்வோமா இந்த ஜென்மத்தில் நினைத்திட மறப்போமா குத்துவிளக்கது நீயல்லவோ நாம் கும்பிடும் தெய்வமும் நீயல்லவோ நித்தமும் வாழுவாய் பாலச்சந்திரா எங்கள் நெஞ்சுகளில் என்றும் மாவீரனாய்...! - - ஈழ மண் வாசம் - முக நூல்
-
- 10 replies
- 1.3k views
-
-
போராளிப் பெண்ணுக்கு அம்மாவின் கடிதம்.... கவிதை.... அன்புள்ள மகளுக்கு உன் அம்மாவின் ஆசிர்வாதம் காவலுக்கு செல்கிறேன் என்றாய் எம் இனத்தை காக்க எழுந்துவிட்டேன் என்றாய்..... ! உன் ஆசைத்தம்பியை பட்டினிக்கு பறிகொடுத்தாய் அவனைப்போல் பலபேரைக்காக்க பகைவனுடன் மோதச் சென்றாய்..... எனக்கும் தெரியும் நீ புலியாக பிறக்கவில்லை புலியாக மாற்றப்பட்டாய் எங்களின் விடுதலைப் போரிலே புள்ளியாக என்னையும் ; எதிரி புலியாக வைத்துவிட்டான் அவன் உருவாக்கிய புலிகலெல்லாம் பிரம்மிட்டின் உருவம் போல் வியாபித்து எழுதிடுவர் ; என்று எதிரி இன்னமும் நினைக்கவில்லை என்று எழுதிவைத்து நீ சென்றாய்.... பட்டினி எங்களுக்கு பழகிவிட்ட ஒன்று என்றாய் பசிதாங்காப் …
-
- 10 replies
- 1.9k views
-
-
சித்திரை நினைவுகள் சித்திரை நிலவில் நித்திரை நீக்கி - உன் முத்திரை விழி பார்த்திருந்தேன்... நிலவின் குளிர்ச்சி உந்தன் முகத்திலா..... உன் முகத்தில் குளிர்மை நிலவின் முகத்திலா - என்று குழம்பிய கணங்களைக் கடப்பதுதான் காதலின் சுகமா என்றிருந்தேன்.... என்னில் ஒட்டிய நினைவு நீயடி... உன் விழியால் எனை நனைத்தாயடி... உன்னால் காதலின் சுகமுணர்ந்தேனடி.... அதன் வலியிலும் மகிழ்ந்ததேனடி.... வலிக்கும் நிலத்தில் தான் என் வாழ்வு.... மறுபடி நீ வந்து - என்னை மணக்கும் பொழுதில் தான் பலிக்கும் என் நினைவென்று... சிந்திய முத்துக்கள் கொண்டு என்னை வழியனுப்பியவள்.... குரல் கேட்டு நாலு சித்திரை கடந்துவிட்டது.... அவள் நினைவுகளோ - என்னை அகல மறுக்கிறது...... எங்களைக…
-
- 10 replies
- 1.1k views
-
-
வைரஸாய் தொற்றிக் கொண்டு கன்னித் தமிழை கணணித் தமிழாய் கனிவிக்க கனவோடு வந்தவன்... தமிழ் பொடியாய் சிறக்க சில சிக்கல் சிலர் தர... சிறகு விரித்தான் குருவிகளாய் நட்புகளின் கூட்டுறவில்..! நீண்டு நிலைத்த காலமதில்... எண்ணற்ற எண்ணங்களுக்கு எழுத்துரு.. இலத்திரன்களால் ஒழுங்கமைத்து ஓவியம் தீட்டி பச்சை தீட்டிக் கொண்டவன் யாழது.. இயல்பாகினன். தொல்லையொன்றை இனம் மொழி இணைந்து காண.. மீண்டும் வெடித்த சொற் போரில் பிறந்தது நெடுக்கால போகும் காலம்... நீண்டது நிலைத்தது. இயல் இசை நாடகம் தமிழோசை அடங்கிய தமிழ் மூன்று.. யா…
-
- 10 replies
- 1.2k views
-
-
உயிர் அழுகின்ற போது ஒசைகள் கேட்பதில்லை... ஒசைகளை மவுனித்த நாங்கள் ஊமைகள் அல்ல... மவுனமாய் எமக்குள் பேசிக் கொள்ளும் மொழிகள் உங்களுக்கு புரிய போவதில்லை... சப்த நாடியும் உறையச் செய்யும் எங்களின் உயிரின் ஒசைகள் வெளிப்படும் நாளின் தோன்றலுக்காய் இந்த மவுனமான நாட்கள் மெல்ல எம்மைவிட்டு கடவதாக.....! # 18-05-2013
-
- 10 replies
- 1.9k views
-
-
நெருப்புக் குயில்கள் நிந்தனை எத்தனை வந்தணைத்தாலும் தங்கள் கருத்தை தயங்காது உரைக்கும் சிகப்புப் பக்கச் சிந்தனையாளர்கள். சகட்டுமேனிச் சமூகத்தை - தங்கள் சிகப்பு எண்ணங்களால் சீர்தூக்கி வைப்பவர்கள். முரட்டு மாட்டின் முதுகில் ஏறி - அதைப் புரட்டி எடுத்து சிறு பேனா முனையில் விரட்டும் விவேகிகள். முட்டாள்த் தனத்தின் முகமூடி கிழிப்பவர்கள். கட்டாக் காலிகளையும் தம் எழுத்துக்களால் கட்டி வைப்பவர்கள். எட்டா உயரத்தில் எதுவும் இல்லையென்று சிட்டாகப் பறந்து சிறகடித்துக் காட்டுபவர்கள் சாட்டையாய் வீசும் சடுகுடு வார்த்தைக்குள் - ஓர் சமுதாயத்தின் பொல்லாச் சங்கதிகள் உரைப்பவர்கள். பழமையை எதிர்த்து புதுமையை அணைத்தாலும் பாழாய் போகாமல் பண்பு…
-
- 10 replies
- 1.9k views
-
-
-
- 10 replies
- 944 views
-
-
கை வந்த கழுகுகள் இறக்கை வைத்த விரியன்கள் கண் கொத்தும் கழுகள் பிணந்தின்னிப் பேய்கள் உயிர் காவும் வேதாளங்கள் இன்னும் பல பேர் தெரியா பிரகிருதிகள் - எல்லோருக்கும் வேணுமாம் விளையாட எம் குழந்தைகள் வீசிய குண்டுகளில் அவை காவிய உயிர்கள் எத்தனை - சென் பீட்டர்ஸ், செஞ்சோலை என தொடர்கதை அவர் தம் வெறியாட்டங்கள் காயங்கள் கண்டதும் காற்று மறு திசை வீசியதும் பழங் கதை ஆயின இன்று திறமையையும் பலத்தையும் பரீட்சிக்கும் புதுக் கதை, ஆம் எங்களிடமும் கழுகுகள். இப்போதெல்லாம் இருட்டினாலே சிவராத்திரியாமே உங்களுக்கு? எத்தனை இரவுகள் தொலைத்திருப்போம் எம் தூக்கங்களை. கொஞ்சம் அனுபவித்து தான் பாருங்களேன் நாம் பட்ட வலிகளையும். வாங்…
-
- 10 replies
- 1.6k views
-