கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கழிவறையில் ஓவியம் தீட்டுவதில் அலாதி சுகமெனக்கு. மனதிற்கு உகந்தவளை சுவற்றில் தீட்டுவதும் மனதார இகழ்ந்தவர்களை சொல்லத்தகா திட்டுவதும் இங்கேதான்.. சில புகழ்பெற்ற ஓவியங்கள் வரையக்கற்றுக் கொண்டதும் இங்கேதான். இங்கே சுழிப்பவர்கள் அங்கே இளிப்பார்கள். கழிவறைக் கதவைத் திறந்து வெளியே செல்லுகையில் ஆழ்ந்த திருப்தி எனக்கு. இன்னும் நால்வர் அதைக் காணக்கூடுமல்லவா?
-
- 6 replies
- 1.9k views
-
-
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை எத்தனை தடவை சொன்னேன், அந்த கறுப்புப் பை கவனம் என்று மனைவி கவலைப்பட்டாள், அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே... காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள் இன்னும் 10 நாட்கள் கடற்கரையில் உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ... இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு தொலைபேசி செய்தியில் மூழ்கிப் போனான் நாளைய நாள் கண் முன்னே நடமாடியது, அலுவலகத்தில் முக்கிய மூன்று சந்திப்பு, நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும் அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ... முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார், நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்…
-
- 16 replies
- 1.9k views
-
-
நெஞ்சு (உ)ரசிய பூவே... --------------- செவ்வானச் சிவப்புக் கன்னம் சிந்தாகும் முல்லைச் சிரிப்பு முன்னாடும் இரண்டு கண்கள் முத்தாடும் செவ் விதழ்கள் தள்ளாடும் வாழைக் கால்கள் தடுமாறும் அந்த நினைவு பந்தாடும் உந்தன் அங்கம் பஞ்சாகும் எந்தன் இதயம் முகம் துடைக்கும் காற்றில் முந்தானை அது சரிய தீ வளர்த்த மெழுகாய் தீப்பிடித்து நான் உருக கண் மூடி ரசிப்பதேன் காதல் நோயை வளர்ப்பதேன் மனம் அமிழ்ந்து போகுமட்டும் மது நிரப்பி வைப்பதேன் சொல் ஆடும் சுந்தரம் செதுக்கி வைத்த சிற்பமிது வில் ஆடும் புருவம் விளை யாடும் பருவமிது கொன்று கொன்று போகிறாய் கொஞ்சம் மீதி வைக்கிறாய் நெஞ்சு (உ) ரசிய பூவே கொஞ்சி இருக்க வந்துவிடு -எல்…
-
- 11 replies
- 1.9k views
-
-
நட்பு கடல்... பல நதிகளின் சந்தோச சங்கமம் நட்பு... பல மனச் சுடர்களின் சங்கம சந்தோசம்... கடல் என்றுமே எதிர்பார்த்ததில்லை நதிகளின் குலாவலையோ... அல்லது தழுவலையோ....! நட்பும் அப்படித்தான்... மனங்கள் உரசினாலும் சரி மனங்கள் மணந்தாலும் சரி மரணிக்காத சொந்தங்களின் மறுக்காத உரசல்கள்.... அலைக்களின் ஆர்ப்பரிப்பும் நட்பின் சிதறல்களும் ஒன்றென்பேன்...! அவை என்றுமே தாமாக நிகழ்வதில்லை காற்றின் உந்துதல் அலைகளின் பிறப்பு என்றால் காலத்தின் கட்டாயம் நட்பின் சிதறலாகின்றது... சுனாமிப் பேரலையாய் கடல் வெடித்துத் தெறித்தாலும் மீண்டும் கடல் சேர்வதில்லையா...??? அப்படித்தான் - நட்பின் சிதறலும் ஆனாலும் என்ன சுனா…
-
- 10 replies
- 1.9k views
-
-
லண்டனில் ஒரு மாமி மாமியைப் போல புருஷன் பாவம் இவோ புருஷன் பயந்த சுபாபக்காரன் மாமி ஒருக்கா பார்த்தால் மனுஷன் பயந்து போவேர் இரண்டு பேரும் சேர்ந்து காசு காசாய் உழைத்து இன்னும் போதாது என்று இரவு பகல் வேலை வட்டிக்கு எல்லாம் கொடுத்து குட்டி போடுது காசு காசு மட்டும் மாமிக்கு கடவுள் போல காணும் சீட்டு கீட்டு என்று சேர்த்து வைச்சு காசை போட்டு போட்டு பாங்கிலா காட்ட மாட்டா வெளியில மாளிகை போல் வீடு மனது மட்டும் சிறிது யாரும் உதவி கேட்டால் வாரும் பிறகு பார்ப்பம் என்று நைசா மாமி நழுவிப் போடுவா வெறும் கசவார மாமி கை இறுக்கம் பாரும் காசை வச்சு மாமி என்ன செய்யப் போறா கட்டிக் கொண்டா போவா. பா .உதயன்
-
- 7 replies
- 1.9k views
-
-
என் மனநிலைக்குள் எனைத் தொலைக்க யார் காரணம் ? என் (தலை) எழுத்தின் தடைகளுக்கு... எவை காரணம் ? வெற்றுத் தாள்களில் எழுதிக் கசக்கியெறிந்தாலும், நிம்மதியாய் இருந்திருக்குமோ ??? விளங்கவில்லை...! புரியவில்லை...!! தெரியவில்லை...!!! கண்றாவிக் க(வி)தைகளை... கோவேறு கழுதைகளில் சுமந்த, பாவியாகிப் போனேனோ...... இன்று ? மற்றவரின் கேலித்தனமான அடைமொழிக்குள்... அடைக்கப்பட்ட கோழிக்குஞ்சா நான்? என்ற கேள்விகள் எனக்குள்! கேலிக்கூத்தாட,கேளிக்கை களியாட வென்றுகொண்டே இருப்பவர்களா நாம்?? விழுந்த வேகத்தில் எழும் என் வார்த்தைகளை... "அடக்குதல்" என்பதுதான் என் 'நாகரீகம்' என்பதுவும் வீண்தானோ??? கேள்விகள் கேட்கப்போனால்... நக்கீரன்களையும், நிறையக் கேட்கலாமோ? உண்மையான பதிலி…
-
- 13 replies
- 1.9k views
-
-
நாய்கள் கடி படுது தமிழுக்கு...நல்ல காலம் பிறக்குது.....!!! கூட்டணிகள் போட்டு வைச்சு கூட்டினைஞ்சாங்க... இப்போ குத்து வெட்டு என்றதுமோ தாம் பிரிஞ்சாங்க...??? ஆதி அந்த காலம் எண்ணா அவங்க நினைச்சாங்க...??? அதை எண்ணி புட்டா புலியழிக்க இவங்க முனைச்சாங்க...?? சங்க காலம் தொட்டிவிங்க சதிகள் செய்தாங்க... எம் தமிழை அழித்தவங்க பழிகள் ஏற்றாங்க... அவங்கள் இட்ட சாபமதால் இன்றழிந்தாங்க... தேடி ஓடி எம் தமிழை தேடி அழித்தாங்க... தெரு நாய்கள் போல தெருவில் சுட்டெறிந்தாங்க.... புலிகள் என்று முத்திரைகள் வேறு பதித்தாங்க..... கொலைகள் எண்ணு கொள்ளை எண்ணு எத்தனை தாங்க.... …
-
- 7 replies
- 1.9k views
-
-
இன்றைய காலையின் விடியலின் வரவினை அறியவிக்க சேவல் கூவவில்லை..! களவாடிப் போனது யார்,,,,? விழித்துப் பார்த்தேன் வெளிச்சத்தையும் காணவில்லை..! போர்-மே(மோ)கம் சூழ்ந்ததால் எமது காலைச் சூரியனும் காணாமல் போய்விட்டான்...! இன்றைய பொழுதுகள் நற் பொழுதுகளின் விடியலுக்கான... தேடல்களாய்-நாளும் தொடர்கிறது..... நமது விடியல் விடிகிறது விடியாப் பொழுதுகளாய்...!
-
- 9 replies
- 1.9k views
-
-
உடைந்த மூங்கிலானேன்: ஒரு உடைந்த மூங்கில் பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம் உடைந்த மூங்கிலால் புல்லாங்குழல் ஆக முடியவில்லை அது முகாரி பாடியதா இல்லை புரட்சி பாடியதா இல்லை தன்னையே உடைத்து அழுகுரலை இசைத்ததா யாரும் கவலைப் படவேண்டாம் மூங்கிலின் மேலிருந்த குருவி தன் காதலனின் வீரச் சாவு கேட்டு அழுது குளறியது மூங்கிலை கடந்த காற்று தன் தலைவனின் வீர மரணம் பற்றி ஓங்கி அறைந்து ஒப்பாரி வைத்தது மூங்கில் அழவில்லை மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை தன்னை கடக்கும் காற்றனைத்தும் அழுகை அல்ல இசை என்றது அதன் உடைவு ஆரம்பித்து இருந்ததை அது அறியவில்லை இன்னும் புல்லாங்குழல் ஆகலாம் எனும் கனவில் அது மிதந…
-
- 15 replies
- 1.9k views
-
-
அவர்கள் சூரியனை தேடிநடக்கவில்லை சூரியனாக மாறினார்கள் இருள் மறைய தொடங்கியது என்னும் அவர்கள் மாறுகின்றார்கள் புளியமர இடுக்கினூடே நிலவு மேறகில் இருந்து இறுமாப்புடன் வேகமாக எழும்பியது நிலவுக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கி நடந்தார்கள் நிலவும் சில கிளிகளும் கெக்கட்டம் விட்டு சிரித்தது கேட்டது விடியலை நோக்கி நடந்தார்கள் நடுங்கிய தேகத்திலும் வன்மம் வான்வரை எட்டி நின்றது தள்ளாடி தடுமாறினார்கள் இருந்தும் பசியும் தாகமுமும் வலியும் முன்னேற சக்தி தந்தது செவிப்பறைகளில் வீறிட்ட ஓலங்கள் வழித்துணைக்கு தாலாட்டின தொடர்ந்து வந்தது நிலவு சிரித்துக்கொண்டே வந்தது ஏளனம் செய்தது எள்ளிநகையாடியது என்ன ஒரு இறுமாப்பு …
-
- 10 replies
- 1.9k views
-
-
கவிதை :P நீ கடல் நான் கரை நீ வானம் நான் முகில் நீ வீதி நான் கார் நீ பெற்றோல் நான் எஞ்சின் நீ சந்திரிக்கா நான் லக்ஸ்மன் கதிர்காமர் நீ அசின் நான் விஜய் நீ அமேரிக்கா நான் இஸ்ரேல் நீ ஜ நா சபை நான் கோவி அன்னன் நீ பின்லேடன் நான் அவர் தாடி நீ கீட்லர் நான் நாஸி நீ யாழ்ப்பாணம் நான் கொழும்பு நீ திருநல்வேலி நான் அல்வ நீ கரவெட்டி நான் டங்ளஸ் தேவனந்தா நீ ஆனந்தசங்கரி நான் குழந்தபிள்ளைகள் நீ முதலாளி நான் கடன்காரன் நீ யாழ்கவிதை பகுதி வடகைக்கு எடுத்தவள் நான் யாழ்கவிதை பகுதியைசொந்தமாக வாங்கியவன்
-
- 10 replies
- 1.9k views
-
-
உனக்கு ஆட்சேபனையில்லையெனில் கவிதை மலர்களுக்குள் உன்னை தூவுகின்றேன் எங்கிருந்தோ வந்த உன் அழகு என் வாலிபத்தை துவசம் செய்தது. உன்னை நினைத்துப்பார்க்கின்றேன்.. நீ அழகான ஆனால் அரிதான படைப்பு. என்னை நினைத்துப்பார்க்கின்றேன் காலம் தந்த சிறகுகளைக்கொண்டு உனக்காக பறக்கின்றேன். வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிக்குள் - உன் வேர் ஊடுருவியிருப்பதாக உணர்கின்றேன்.. என்னிதயத்தில் எனக்கே தெரியாத ஓர் இடத்தில் நீ பதுங்கு குழி அமைத்திருக்கின்றாய். மனசின் இலைகளின் இடுக்கில் நீ பூத்திருக்கின்றாய். உனக்கு ஒன்று தெரியுமா?.... உன்னைக் காண்பதற்கு முன்னால் நானும் காதலை எதிர்த்தவன் தான்......
-
- 10 replies
- 1.9k views
-
-
என் இருப்பும், உன் இருப்பும் அவசியம் பருத்த கலசங்களும், பெருத்த தம்புராவுமே நட்பை நிலைப்படுத்தும் நிர்வாண நிலையென்றால் கரிக்கிறது கண்மணிகள். உறுத்தலின்றி தரித்த விசம்போல் ஒரு பேராற்றில் கலக்கும் துளிகளில் மாள்வது நட்பாகில்.... மானுடம் சிகிலமாகி, நாகரீக வெளிகளெல்லாம் நரகல் புவியாகி சீழ் பிடித்து மணக்கும். என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம். நட்பென்ற உன்னதத்தின் மேன்மையைப் புரிய வைக்க நண்பா! என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
-
- 6 replies
- 1.9k views
-
-
<iframe src="https://www.facebook.coவெலிm/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthamilarivu%2Fposts%2F4136726713041863&show_text=true&width=500" width="500" height="414" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe> https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950
-
- 11 replies
- 1.9k views
-
-
மாறும் உலகில் மாற உன் உறவே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை நிரந்தரம் நான் மாண்டபின்னும் உன்னில் உயிர்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு நிரந்தரம் நான் சாயும்போது காப்பது நீயே நிரந்தரம் செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம அதன் விலையாக என்னை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
-
- 4 replies
- 1.9k views
-
-
உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??! களப்பலியாய் போனவர் போகட்டும் அவர்களெம் மாவீரச் செல்வங்களாய் எம்மோடு வாழ்வது உறுதி..! ஆனால்.. சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய் உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???! கவிபாடும் தமிழ் சொல்லாலே புலியெனப் பாய்ந்த புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??! "ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு" என்ற சொல்லை வகுத்து ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன் பாலகுமாரன் அண்ணன் எங்கே..??! திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி அவன் பொன்னமான் தம்பி தமிழீழ அரசியல் தத்துவஞானி எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங…
-
- 11 replies
- 1.9k views
-
-
பள்ளி நாட்களில் பட்டாம் பூச்சிபோல் பழகிய உன் நினைவு பசுமையாக என் மனதில்... பல்லாண்டுகள் பல பொழுதுகள் பறந்து போனாலும் பால் நிலவாக உன் நினைவு... நட்புக்கு நீயும் தோழி இரங்குவதில் நீயும் என் தாய் அன்புக்கு நீயும் காதலி அறிவில் நீயும் என் ஆசான் உன்னை நான் சந்தித்தேன் இளவேனிற்காலம் உன்னை நான் பிரிந்தேன் இலையுதிர்காலம் உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு மாரிகாலம் வாழ்கை என்பது உன் நினைவுகள் உறங்குமா உன்
-
- 15 replies
- 1.9k views
-
-
அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா எம் உயர்வுக்காய் உனை உருக்கி ஓடியோடி உழைத்ததற்கா? - நாம் உடைந்துபோன நேரங்களில் உறுதுணையாய் நின்றதற்கா? எம் திறமைகள் அனைத்திற்கும் திறவு கோலாய் இருந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. கருத்தாய் கல்விக்கண் ஊட்டியே வளர்த்ததற்கா? கடமையே உயர்வென்று கண்ணியத்தை போதி…
-
- 9 replies
- 1.9k views
-
-
இத்தனை அழகாய் இருப்பிடம் வேறெங்கும் இருக்குமா தெரியவில்லை. வேளைக்கு உணவு; நோய் காணும் முன்னே மருந்து; யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். விரட்டி உயிர் பறிக்கும் வேட்டையன் இல்லை. மட்டற்ற கலவிக்கு சாஸ்த்திரமும் வேண்டியதில்லை. ஜாலத்தில் கிளர்கிறது வர்ணங்களால் வடிவம் கொண்ட உலகு. உயிர் வாழ்வதுக்குண்டான அனைத்து உத்தரவாதமும் உனக்குண்டு. இத்தனைக்கும் எதிர்மாறாய் சேறும் சகதியுமாக நிலையாமையில் கட்டமைக்கப்பட்டதென் அழுக்காறு உலகு. இரையில் பொறி வைத்து உயிர் பறிக்கும் குரூரம். நெளியும் புழுவில் ஒழியும் முள் குரல் வளை கிழிக்கும். உணவுக்குள் மரணம் ஒளிந்திருக்கும் சாபம். உயிர் காவும் வேட்டையன்…
-
- 0 replies
- 1.9k views
-
-
காதல் மனம் தனியே சிரித்திருக்கும். தனிமையில் நிலைத்திருக்கும். காணுமிடமெல்லாம் தன் காதலையே பார்த்திருக்கும். ஊனுள் உருகிநிற்கும். உள்ளத்தை மறைத்து வைக்கும். தாம் மட்டுந்தானென்றே தம்மையே புகழ்ந்து நிற்கும். காலத்தால் அழியாது என்றும் காவியத்தி உள்ளோமென்றும் போதை தலைக்கேறினாற் போல் பொய்களும் உரைத்து நிற்கும். அன்னைக்கு அடங்கேனென்றும் தந்தை சொற் கேட்கேனென்றும் இன்பம் காதல் ஒன்றே என்று எப்போதும் இறுமாந்திருக்கும். உங்கள் காதல் மனங்களையும் அவிழ்த்து விடுங்கள்.
-
- 11 replies
- 1.9k views
-
-
ÅÃÓõ §¾Å¨¾Ôõ §ÅñÎõ ÅÃõ §¸û ±ýÈ¡û §¾Å¨¾ ´Õ ¿¡û À¨ÆÂ ¿¡ðÌÈ¢ôÒ ÀÊòÐ §¸ð¸òÐÅí¸¢§Éý ºõÀó¾ÛìÌ ¸¢¨¼ò¾ Ó¨ÄôÀ¡Öõ «Ê Å¡í¸¢ ÀƸ¡¾ «¸ÃÓõ Å¢Øó¦¾ØóÐ «Æ¡¾ Å¢¨Ç¡ðÎôÀÕÅÓõ ¦¾Ã¢ó¾ Ţɡì¸û ¿¢ÃõÀ¢ÅÕõ Ţɡò¾¡Ùõ «¼õ À¢ÊòÐ Å¡í¸¡¾ Á¢¾¢ÅñÊÔõ À¾¢ýÁÅÂÐìÌ §Áø Ò¾¢Â ¿ñÀ÷¸Ùõ Àò¾¡ÅÐ Àãð¨ºÂ¢ø Á¾¢ô¦Àñ ¿¡ÛÚõ À¾¢§ÉÆ¢ø «¼÷ Á£¨ºÔõ ¿ý¦¸¡¨¼ §¸ð¸¡¾ ¸øÖâÔõ ¯Îò¾¢ì¦¸¡ûÇ ÀòÐ ÒÐ측øºð¨¼Ôõ ¾¢ÕðÎ º¢É¢Á¡ À¡÷ì¸ º¡Ã¡Â¢ø À½Óõ «ó¾ ž¢ø ´Õ ¸ýÚ측¾Öõ À¡¼¦ÁøÄ¡õ §¾÷Å¡¸¢ Àð¼Óõ ¸Ä¢Ä¢§Â¡ Üü¨È ¯ý¨Á¡츢 °÷ÍüÈÖõ ¾ñ¼î§º¡Ú Àð¼õ ¦ÀüÈ 22 ÅÂÐõ Àì¸òÐ À¡ø¸É¢Â¢ø ±ó¿¡Ùõ À¢Ã¢Â¡ ÀÊòÐ즸¡ñÊÕì¸×õ ¯¨Æì¸ ºÄ¢ì¸¡¾ ÁÉÓõ ¯¨Æô¨À ¦¸¡ñ¼¡Îõ «ÖÅĸÓõ þô§À¡Ðõ À¡÷ì¸ Å¢ÕõÒõ À¡øÂ §¾¡Æ¢ Ãõ¡×õ ¯ý§À…
-
- 11 replies
- 1.9k views
-
-
உரிமைக்குரல் பாடல் ஒளி வடிவில் Click http://www.alaikal.com/video
-
- 4 replies
- 1.9k views
-
-
வேலைக் களைப்பில் அவன் தேவைக் களைப்பில் அவள்... நாலு சுவருக்குள் நடத்தும் நள்ளிரவுக் கூத்துக்கு சாட்சி யாரு... வாயே பேசாத பாப்பா தங்கச்சி பாப்பா கேட்டானாம்...! அருமையான பூமிப் பந்தில் அனுதினம் நிகழும் கருக்கலைப்புக்கும் அவனே சாட்சி...! கன்னத்தில் ஒரு முத்தம் தந்து அம்மா சொல்லுறா... "அப்பாக்கு இந்த தங்கச்சி பாப்பா வேணாமாம் பிள்ளைக்கு அடுத்த முறை பெத்துத் தாறன்..!" கருவறை எல்லாம் கழிவறையாக.. இரத்தக் கட்டிகளாய் பிறக்குது உயிரற்ற கலக்கூட்டம்..! உனக்கும் ஆபத்து உயிர்க்கும் ஆபத்து இருந்தும் தொடருது உறைகளற்ற உறவுகள்..!!! தொடர்ந்தும்.. வேலைக் களைப்பில் அவன் தேவைக் களைப்பில் அவள்..!
-
- 21 replies
- 1.9k views
-
-
நட்போடு வாழ்தல் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்னும் தொடுவானில் கையசைக்கும் மணக்கோலச் சூரியன். கீழே படுக்கையில் பொறுமை இழந்த பூமிப் பெண் வெண்முல்லைப்பூ தூவிய நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள். எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும். வழித்துணையை போற்றினும் புணரினும் எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். தோழி உடன் இருக்கிற இன்பங்களும் பிரிகிற துன்பங்களும் அடுக்கிய நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா நம் வாழ்வு. பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து ஆர்ப்பரித்த வானம் இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா …
-
- 6 replies
- 1.9k views
-
-
சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும் அவள் அணிந்த ஆடைகளையும் அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள் படம்காட்டி செய்தியாய் செவ்வியாய் செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்….. இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி 76பேருடன் உடலுறவு கொண்டாளாம்….. அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி….. ஆளாளுக்கு விளக்கங்கள் அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான். மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம் அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும் பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட விட்டு வைக்காத இனம் நாங்கள். நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான். விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்…
-
- 11 replies
- 1.9k views
-