Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by கறுப்பன்,

    தேடல்கள்----------------- என் தேடல்களை உனக்குள்ளும் காதலுக்குமாய் வீணாக்கியதன் பிற்பாடு ஏதோ ஒரு ராத்திரியின் மௌனத்தை கனமான இதயத்தோடு ஏற்றுக்கொண்டது மனசு. என் இரவுகளை- நீ வெறுமையாக்கிய போதும் என் இதயத்தை போலவே கனக்கிறது மௌனம். என் மௌனங்களின் பிரிய காதலியே பிரிவு எனக்கும் உனக்கும் தான் காதலுக்கல்ல.....!!!!

  2. வெள்ளி முளைக்கும் ஒரு மாலை நேரத்தில் முள்ளிவாய்க்காலின் பரந்த மணல் வெளிகளில் புதிதாகத் தோன்றியிருந்த குழிகளைக் கண்டு பூமித் தாயின் முகம் கூடத் தனது முகம் போலப் பார்க்குமிடமெல்லாம் எரி வெள்ளி விழுந்து வெடித்த எரிமலைகளின் வாய்களைப் போல, வட்டமாகத் தனது முகத்தைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல, எண்ணிய படியே தன் பாதையில் நகர்ந்தது நிலவு! இரண்டு வருடங்களாக, இந்தப் புதை குழிகளுக்குள் மறைந்து கிடக்கும் கதைகளும், மனிதக் கூடுகளும் துரத்தித் துரத்தி வேட்டையாடப் பட்ட அவர்களின் சரித்திரமும், செத்துப் போன நினைவுகளும் புதையுண்டு கிடக்கும் புனிதக் கனவுகளும், ஒரு நாள் விதையில் இருந்து துளிர் விடும் மரங்களாய், வளரும் என்ற கனவி…

  3. Started by கோமகன்,

    சகவும் சயவும் வேகம் என்றான் ஒருவன் ஆனால் சகவும் சகவுமாகி சயவும் சயவுமாகி சைபராகி வந்ததேனோ ???? " நான் " என்பதைவிட " நாமே " கனதியதிகம் பல பூக்கள் கொண்ட தோட்டத்தில் பல வாசம் இருக்கும் உடனடித் தேவை சகிப்புப் பிராணவாய்வு இருந்தால் சிறக்கும் பூந்தோட்டம்

  4. மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஐந்தாகிப் போனதுவோ- எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதோ இரசாயன நெருப்புக்குள் உறவுகள் வெந்து துடித்து கருகி மடிந்த போது இங்கிருந்து நாம் கதறி அழுதோம் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் ஆண்டுகள் ஐந்தானதோ இன்று பாழும் குண்டு மழைக்குள் எங்கள் பச்சிளங்குழந்தைகள் பதைபதைத்து துடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதுவோ சதிவலைகள் பின்னிய நாடுகள் என்று தெரியாமல் அந்த நாடுகள் ஓடிவந்து உதவாதோ என்று இறுதிவரை நம்பிக்கையோடு காத்திருந்து அன்று எங்கள் உறவுகள் உயிர்கள் ஊமையாய் அடங்கிப்போயின. அதனை எண்ணி எண்ணி நாம் அழுது அரற்ற ஆரம்பித்து ஆண்டுகள் ஐந்து ஓடியே போனது பதுங்குகுழிகள் வெட்…

    • 9 replies
    • 1k views
  5. 'வாழ்தல் எனும் மரணிப்பு' எனும் இந்தக் கவிதை சரிநிகரில் என் சொந்தப் பெயரில் வெளியாகி இருந்தது. அந்தப் பெயரை மறைப்பு செய்து இதில் கவிதையை மட்டும் ஒட்டி உள்ளேன் அன்று சிங்களவர்களுக்கு மத்தியில் இருந்து சொந்தப் பெயரில் எழுதும் போது இருந்த அச்சமில்லா மனவுணர்வு, இன்று போலித் தமிழ் தேசியவாதிகள் மலிந்து போன காலத்தில் இல்லை என்பது ஒரு வெட்கப்படவேண்டிய முரண்நகை

    • 9 replies
    • 1.2k views
  6. விடிவெள்ளி மீண்டும் வானில் தெரிகிறது வெடி கண்ட நிலம் போல் சிதறிய மனம் மீண்டும் விண்மீன்கள் கண்டு சிரிக்கின்றது கொடுவானின் இடி மின்னல் கொடுங் காற்று எல்லாம் கோரத் தாண்டவம் ஆடி முடித்து காற்று அலைகளின் சீற்றம் குறைந்து கோலங்கள் காட்டி நிற்கிறது வேருடன் மரங்கள் வீழ்ந்தன எனினும் வாடை அடங்கி மீண்ட வானின் மிதப்பின் வேகத்தில் மருண்ட மேகங்களின் மகிழ்ச்சி ஒலியாய் மீண்டும் மின்னல் கீறி மறைகின்றன ஓசை அடங்கக் காத்திருந்தேன் என் ஆசை அடக்கி மேகத் தீயுள் மோதும் உன் முகம் காண முடிவேதும் இல்லா மழை வானின் எல்லையில் மண்ணொடு மண்ணாய் மங்கியும் நானும் மகிழ்ந்திருப்பேன் முடிவுற்ற வெளியின் முகில்கள் கடந்து முடிவற்ற என் பயணம் முடிந்து மலர் கண்ட வனமாய் மலர்கின்ற மனம் க…

  7. Started by கஜந்தி,

    வானமே இல்லாத நிலவாய் தென்றலே தொடாத மலராய் எழுதப்பட்ட புத்தகத்தில் வர்ணிக்கப்படாத கவிதையாய் கண்களின் கண்ணீரைப் புரிந்து கொள்ளா உறவுகளின் சுமைதாங்கியாய் மூடநம்பிக்கையின் ஆணிவேரில் தொலைந்து விட்ட சந்தோஷங்ககளாய் இரவின் வரவிற்காய் காத்திருக்கும் அல்லிமலராய் கனவுக்குள் நிஜத்தை தோடுபவளாய் தலையணைக்கு மட்டும் தெரிந்த கண்ணீரின் ஈரத்தை சொல்ல யாருமில்லாத அவள் யார்?

  8. நீ வீசும் காற்றுக்காய் காதலால் துளைக்கப்பட்ட குழலே என் இதயம் * நீ எனக்குக் கொடுத்த தண்டனை எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த என்னைக் காப்பாற்றுகிறேன் என தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான் * நீ என்னில் முளைத்ததும் நான் உன்னில் முளைக்காமல் போனதிலும் தெரிந்து கொண்டது ஒரே விதையென்றாலும் வேர்விட எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை என்பதுதான் * உன்னால் புகைக்கப்பட்ட சிகரட் நான் என்றாலும் உனக்கு முன்னே இறந்துபோன பாக்கியசாலி நான் * என் வாழ்க்கை எனும் பேருந்தில் இறங்கிப் போன மறக்க முடியாத சாரதி நீ -யாழ்_அகத்தியன்

    • 9 replies
    • 1.8k views
  9. அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா எம் உயர்வுக்காய் உனை உருக்கி ஓடியோடி உழைத்ததற்கா? - நாம் உடைந்துபோன நேரங்களில் உறுதுணையாய் நின்றதற்கா? எம் திறமைகள் அனைத்திற்கும் திறவு கோலாய் இருந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. கருத்தாய் கல்விக்கண் ஊட்டியே வளர்த்ததற்கா? கடமையே உயர்வென்று கண்ணியத்தை போதி…

  10. ஒப்பாரி வீட்டிலும் அழகு ஒன்றுகூடலிலும் அழகு -------மலர் மாலை--------- @@@ தொண்டனுக்கு பிழைப்பு தலைவனுக்கு உழைப்பு -------தேர்தல் ----------- @@@ உடல் முழுதும் நெருப்பு த்துளை வருத்தினாலும் இன்பம் தருகிறது -------புல்லாங்குழல் ------- @@@ இன்பமென நினைத்து இன்பத்தை இழக்கிறான் -----குடிகாரன் ----- @@@ வானம் திரவமாய் தரும் தங்கம் நிலம் தங்கமாய் மாற்றும் திரவம் -----பருவ மழை ------

  11. Started by Anisha,

    உன்னை போல் ஒரு ஆணின் அருகிலே மௌனம் கொள்வது கடினம் தான்... பேசிக் கொள்ளாத எல்லா நிமிடமும் நஷ்டம் தான்... எனை விட இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்... உன்னை பார்த்தவுடன் எனை தொட்டுவிட்ட வெட்கத்தில் தலை குனிந்தேன்... அன்பே...உன்னை ஒரு நிமிடம் மறந்திருக்க என்னால் முடியவில்லை... இன்று இந்த நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்க வில்லை... உன் வெள்ளை உள்ளம் கண்டு விழுந்து விட்டேன்... விழுந்த இடம் உந்தன் நெஞ்சம் என்று புன்னகைத்தேன்...!!!! அன்பே... உன்னை நான் மறக்க்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தொல்வியிலேயே முடிகின்றன... ஏனெனில்... நான் மறப்பதற்கு உன்னை தானே நினைக்கிறேன்...!!!! நான் சிந்தும் புன்னகை கூட உன்னை …

  12. Started by வீணா,

    புதிய பதவிகள் எனக்கான வாழ்க்கைப் பயணத்தில் - ஓர் துணையாய் உனைத் தேர்ந்தெடுத்தாயிற்று! என் குடும்பமும் உன் உறவுகளும் புடைசூழ இணைந்தாயிற்று புதுப் பந்தத்தில்! ஆனால்... எனக்கான போராட்டங்களை இனி நான் தனியனாய் ..... பெண்ணாய் ..... - குடும்பத் தலைவியாய்..... மனைவியாய்...... மருமகளாய்.... உற்ற தாயாய்.... நானே நானாய் சந்தித்துக்கொள்ள வேண்டும்! சகித்துக்கொள்ள வேண்டும்!! எத்தனை கதா பாத்திரங்களை என்னுள் திணித்தாயிற்று?! இத்தனை காலமும் எனை வளர்த்து தம் செல்ல மகளாய் கொஞ்சிக் குலாவிய அம்மாவும் அப்பாவும் அந்நியமாய்.... இத்தனை பாரங்களையும் எனை தனியே சுமக்க வைத்து தம் பொறுப்பு முடிந்ததென்…

    • 9 replies
    • 1.2k views
  13. ஆரியச் சக்கரவர்த்தி ஆசோகனின் காடைக் கடையன் விஜயன் பரம்பரையில் உதித்த சிங்கள தேசத்தில் 50 களில் தமிழ் பெண்கள் மார்பறுத்து கொதி தார் ஊற்றி... அனல் தணல் மீது விட்டெறிந்து கொடுமை செய்து.. கூடி நின்று கேலி செய்து வெற்றிக் கோசம் போட்டு மகிழ்ந்த கூட்டம்... 83 இல் அதையே அகலப்படுத்தி தமிழச்சிகள் சேலை களைந்து மானபங்கப்படுத்தி தமிழர் குடியையே ஆடை இன்றி விரட்டி அடித்து மகிழ்ந்து நின்று.. மகாவம்சம் வழி வீரம் பேசிக் கொண்டது. அந்தக் காடைக் கழுதைகளை காட்டேரிகளை.. இராணுவம் என்ற பெயரில் உலக நாடுகள் அள்ளி வழங்கிய கொலைக்கருவி கொடுத்து தமிழர் பகுதிக்கு அனுப்பி வைத்தான் ஜே ஆர்..! ஒப்பரேசன் லிபரேசன் முன்னாடி தொடங்கி ஒப்பரேசன் லிபரேசனில் தமிழ் பெண்கள் …

  14. கரடிக் குகை (Bärenhöhle) இயற்கை என்னும் சிற்பி செதுக்கி வைத்த சிற்பங்கள். காலங்கள் பல கடந்தும் கண்கொள்ளாக் காட்சி. பானை அடுக்கியதுபோல் கொஞ்சம் பவளப்பாறைகள்போல் கொஞ்சம் தொங்கும் அழகுவிளக்குகள்போல் கொஞ்சம் தோரண மாலைகள்போல் கொஞ்சம் ஆலம் விழுதுகள் போல் கொஞ்சம் ஆவின்பால்மடிபோலே கொஞ்சம் கோபுர கலசம்போல் கொஞ்சம் கொடிமரம் அமைத்ததுபோல் கொஞ்சம் சுயம்புலிங்கங்கள் சுற்றி அமர்ந்திருக்க சிற்பக் கோயில்களைச் சிறிதாக அமைத்ததுபோல் பார்க்குமிடங்களில் பளிச்சிடும அருங்காட்சி. இருபது மீற்றர் ஆழத்தில் இருநூற்றித் தொண்ணு+ற்றி இரண்டு மீற்றர் நீளத்தில் புத்தொன்பது மீற்றர் அகலத்தில் பல இலட்சம் வருடங்களுக்கு முன் பளபளக்கும் கல்லுகளால் பாதாளத்தில் அமைந…

    • 9 replies
    • 1.1k views
  15. Started by yakavi,

    வைகாசி 18.......? எங்கள் முகவரியை முற்றாக தொலைத்த நாள். அகத்தினிலே தீராத வலியை புதைத்த நாள். யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை இழந்த நாள். வைகாசி காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல் கண்ணீர் விட்டநாள்.......

    • 9 replies
    • 1.6k views
  16. காந்தி தாத்தா எம் தாத்தா இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த "அச்சா" தாத்தா என மேடையில் முழங்கிடுவார்கள் எம் சிறார்கள் -புலத்தில் பாரதியார் எம் மாமா பார்தத்தின் மகா கவி,ஜெ கிந் என மேடையில் முழங்கிடுவார்கள் எம் சிறார்கள் -புலத்தில் இடுப்பையும் மார்பையும் குலுக்கி ஆடிடுவார்கள் மேடையில் போலிவூட் நாட்டியமாம் எம் குமரிகளும் கிழவிகளும்-புலத்தில் சின்னத்திரையில் சில நிமிடம் சிரித்தவளை அழைத்து சில்லறைகள் சேர்த்திடுவார் சபாகுழு எனும் எம்மவர்கள்- புலத்தில் இந்திய சாமிமார்களையும் சாத்திரிகளையும் அடைக்கலம் கொடுத்து அரவணைத்து மகிழ்ந்திடுவார் எம் மனிசிமாரும் மாமிமாரும் புலத்தில் ஜ.பி.எல்.இரவு முழித்திருந்து பார்த்து இந்தி…

    • 9 replies
    • 1.5k views
  17. Started by இலக்கியன்,

    அன்பு என்பதன் அர்த்தம்தான் என்ன? அந்த ஒரு சொல்லின் கருதான் என்ன? தாய்தன் பிள்ளை மீது கொண்ட அன்பு என்ன? கணவன் மனைவி மீது கொண்ட அன்பு என்ன? காதலன் காதலி மீது கொண்ட அன்பு என்ன? நண்பன் நண்பன் மீது கொண்ட அன்பு என்ன? கண்கள்மீது இமைகள் கொண்ட அன்பு என்ன? இதயத்துக்கு இசை மீது கொண்ட அன்பு என்ன? மொழிமீது கவிஞனுக்கு கொண்ட அன்பு என்ன? இருளின் மீது சந்திரன் கொண்ட அன்பு என்ன? மழைத்துளிகள் பூமி மீது கொண்ட அன்பு என்ன? மலர்கள் மீது வண்டுகள் கொண்ட அன்பு என்ன? ஒளி மீது மரங்கள் கொண்ட அன்பு என்ன? அலை கடல் மீ…

  18. Started by Eelathirumagan,

    இன்று உலகெலாம் காதலர் தினத்தை கொண்டாடுகிறது. உங்களில் பலர் காதலை உணர்ந்திருக்கக் கூடும். என்னுடன் சேர்ந்து கவிதையை அனுபவிப்பீர்கள் என நினைக்கிறேன். காதல் என்ற மூன்றெழுத்தை கண்டு சொன்ன கடவுள் யார்? மந்திர வித்தை கொண்டிந்த சொல்லை செய்த சிற்பி யார்? சீறும் புலியாய் இருந்தவர்கள் பெட்டிப்பாம்பாய் போன கதையென்ன ! கையால் எழுதா, காதால் கேளா வாயால் பேசா மொழி இதுவே இரு இதயம் மட்டும் பேசுகின்ற கடவுள் தந்த அன்பு மொழி ஒன்றை ஒன்று விட்டகலா ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற அன்பு என்னும் ஆலயத்தின் அர்ச்சனை மந்திரம் காதல் மொழி எத்தனை ஆண்டு, எத்தனை தூரம் எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும் அத்தனை நாளும் என்னிதயம் உன்னை நினை…

  19. பகட்டான கோயில் அமைத்தோமே -நாம் பங்கரில் வாழ்வது தெரியவில்லையா பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா பண்டிகையும் திருவிழாவும் செய்தோமே -நாம் குண்டினால் சாவது தெரியவில்லையா தேரில் வைத்து இழுத்தோமே -நாம் தெருவில் நிற்பது தெரியவில்லையா பன்னீரால் தீர்த்தம் கொடுத்தோமே -நாம் செந்நீரில் தோய்வது தெரியவில்லையா பூங்காவனத் திருவிழா செய்தோமே - இன்று தூங்காத எம்துயர் தெரியவில்லையா நமசிவாய என்று துதித்தோமே - காற்றில் நச்சுவாயு வருவது தெரியவில்லையா மேளமும் தாளமும் இசைத்தோமே -இன்று மரணஓலம் இசைப்பது தெரியவில்லையா கண்ம…

  20. Started by Rasikai,

    தை திருநாளா? தை திரு நாளா? இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் .. சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா! பானையில் பால் பொங்கி வழிந்தால் ... உழவர் திருநாள் என்கிறோம்... இதயம் எல்லாம் இரத்தம் வழியும் ஒரு நாளாய் போனதே.. எம் வாழ்வு.... இந்நாளதில்... இதை என்ன பெயர் கொண்டு சொல்லியழைப்போம்?? மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!! அனைத்து கள உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    • 9 replies
    • 2.1k views
  21. பல்லிக்கு வால் பிடிப்பது - பிடிக்காது ....வால் அறுந்தாலும் வாழும் ...வால் பிடிக்காதே மனிதா ...!!!^^^ஓடி ஓடி உழைக்கணும்...முகிலைப்போல் ....ஊருக்கே கொடுக்கணும் ...முகிலைப்போல்.....!!!^^^கெட்டிக்காரமகனையும் ....கெட்டு போன மகனையும் ....ஒன்றாகவே பார்க்கும் குணம் ....அம்மா ........!!!^^^தண்ணீருக்காக போராடினோம் ....கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...வெள்ள காடு ....!!!^^^தனியே வாழ்ந்தபோது ...தன் அறையை கூட்டாதவன் ...கல்யாணம் செய்தபின் ...வீடு கூட்டுவான் ....!!!&.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை..................கவி நாட்டியரசர்..........................கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

  22. தடுமாற்றங்களும் குழப்பங்களும் நிறைந்த மன நிலை நாம் என்ன செய்ய 2009 உலகமே சேர்ந்து குழப்பியது எம்மை குவிந்தது தாயகத்தில் பிணங்களின் குவியல் கந்தக புகை நிறைந்தது எங்கும் நச்சு புகையும் சேர்ந்தே இருந்தது இலங்கையில் ஓரினம் இன்னோரினத்தின் முகவரி பறித்தது பார்த்தது சர்வதேசம் சதியில் ஐநாவும் பங்கெடுத்தது உரிமைக் குடி ஒன்றின் உரிமை மறுப்பை உலகம் பார்த்தது உரத்து அறிக்கை விட்டன சில நாடுகள் சிறிலங்கா செய்ததை சரி என்று!!! துன்னாலைப் பிறந்தவன் லண்டன் நகர் வசித்தவன் மூவொன்பதாண்டு வயதுளான் முருகதாசெனும் பெயருளான் மூண்ட சினம் கொண்டான் உலகுக்கு உண்மை நிலை புகன்றிட வந்தான். ஏழு பக்கத்தில் எழுதி முடித்தான் மரண சாசனம் உண்மைக்…

  23. Started by karu,

    தாயிருந்த மண்ணைவிட்டு சமச்சிருந்த சோத்த விட்டு ஊரழிய வந்தோமே ஒன்றுமின்றிப் போனோமே தோல் நிறமும் மாறலியே சொந்த குணம் போகலையே தேரிழுத்து வீதியெல்லாம் செய்த தவம் காக்கலையே புலம்பெயர்ந்து வந்து புலம்புவதால் என்னபயன் மட்டக்களப்போடு மன்னார்தான் போனாலும் வன்னி இருக்குதென்று மகிழ்வோடிருந்தோமே! வெட்டி அரிந்தெம்மை வேரோடு சாய்க்க வென்று வாசலிலே நிற்பவனெம் வாழ்வை அழிப்பானோ! சுற்றிவர நின்று சுடும் பகையைக் காலெடுத்து எற்றி இறைவா எமக்குதவி செய்யாயோ! (யாராவது இந்த ஒப்பாரியைத் தொடருங்கள்.)

    • 9 replies
    • 2.2k views
  24. சைவ சமயம் உட்பட பல சமயங்களில் இறைவனைத் தொழ பதிகங்கள் இயற்றி கோவில்களில் தேவாலயங்களில் பாடி இறை நம்பிக்கைகளை பன்னெடும் காலம் வளர்த்து வரும் நிலையில்... எமது இனத்தின் இருப்பின் முதலாய் நிற்கும் தெய்வத்தையும் கடந்து நினைவில் என்றும் இருக்க வேண்டிய மாவீரர்களை நெஞ்சால் தொழுது இலட்சியத்தால் அவரின் கனவு வென்று நிற்க.. தோத்திரங்கள் பதிகங்கள் இயற்றி நிற்போம். அவை பண்.. தாளம் கொண்டு புனிதம் நிலைக்க.. பாடப்படும் நிலை இயற்றுவோம்..! வீழ்ந்த வீரரின்.. இலட்சியம் காவி நிற்போம். அந்த வரிசையில்.. எங்கள் பங்களிப்பு... உங்கள் பங்களிப்பையும் ஆற்றி நில்லுங்கள்...! பண் - தாளத்துடன் பாடக் கூடியது. பண் - தாளம் - அறியப்பட வேண்டியது. மாநிலத்தின் தமிழ் மரபு காத்தாராய் தமிழ்…

  25. நீ சொல்லும்வரை நானும் நினைக்கவில்லை மனசெல்லாம் பாரம் ஆனாலும் அது கனக்கவில்லை. எவளைப் பார்த்தாலும் ஏதாவது எழுதிப்பார்ப்பது ஒரு காலம்! ஆவி உயிர் ஆன்மா முன்றும் ஒன்றானாலும் ஒருத்தியிடம் ஒன்றிப்போனேன் இந்தச் சில காலம். என் பழைய கவிதைகளையெல்லாம் தூசு தட்டி படித்து ரசித்தாள்! "கவிதை ஒன்று கவிதை படிக்கிறது" எங்கோ படித்ததை சொல்லிக்காட்டி அசத்தினேன்! ஆர்ப்பாட்டமான மகிழ்ச்சியில் இன்னும் சில கவிதைகளுக்காய் எண்ணங்களைப் போட்டு கசக்கினேன். தொடர்ந்து வந்த இருவருக்குமான தனிமையில் முத்தங்களுக்கான முனைப்புக்களில் சில முன்னகர்வுகளுடன் வெற்றியின் உதயக்களிப்பில் நான்... இடையில் கைமறித்தவள் "யாரந்த கவிதையில் வந்தவள்!" "எவள் அன்ற…

    • 9 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.