கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இவன் ஒரு சிவன் புலியாடை அணிந்தவன்! சூலம் சிவனது ஆயுதம் சுடுகலன் இவனது ஆயுதம் பூதகணங்கள் புடை சூழ வருபவன் சிவன் சேனைத் தலைவர்கள் தனைச் சூழ வருபவன் இவன்! நஞ்சுண்ட கண்டன் அவன் நஞ்சைக் கழுத்திலே கட்டிய வீரன் இவன்! சுடுகாடு சிவன் நடமாடும் வீடு பலநாடு இவன் புகழ்பாடும் பாரு! சிவன் பாத தொழ அறுபடும் பிறவித் தளை பிரபாகரன் பாதம் தொடர நமதாகும் நாளை விடுதலை!
-
- 3 replies
- 8.6k views
-
-
சீமைக் கிளுவைக்குள் சீவியம் செய்தவள் சீமைக்குப் புறப்பட்டாள் சீறி எழுந்த சிறீலங்கன் எயார் லைன்ஸில்..! கூலி கொடுத்து தாலி வாங்கி வேலி போட்டனள் நாணி நின்றவள் கூனி நிற்பாள் என்று..! மாதம் பத்து சும்மா இருந்தவள் சுமந்தனள் சுமைகளோடு சுதந்திரக் கனவு..! தாலி பிரித்து வேலி தாண்டி நடப்பது பகற் கனவு கண்டனள் ஏங்கினள்.. படிதாண்டிப் பத்தினியும் பரத்தையானதில்..! சீமையில் சீதனம் சீர் தனம் சீ சீ.. என்பதில் சிந்திக்க இருக்கு சில சுயநலம்.. அதில் அடங்கி இருக்கு பலவீனம்.. பண வீக்கம்..! சீமைச் சிறப்புக்குள் சீரழியும் இயற்கைக்குள் சீமைக்கிளுவைகள் சீர் பெறுமா..??! விடை தேட ஆணும் பெண்ணும் எங்கே..??! கலந்தடி…
-
- 22 replies
- 8.6k views
-
-
கரும்புலிகள்..... கரும்புலிகள் நினைவுக் கவிதை.... கவிதை - இளங்கவி தமிழீழக் கடலின் ஒவ்வோர் நீர்த்துளியும் தன்னில் எரிந்த கரும்புலியின் கதை சொல்லக் காத்திருக்கு........ எதிரியிடம் சிக்கி மானம் இழந்ததனால் அது விடும் கண்ணீர்த்துளிகள் சேர்ந்து ஆழிப்பேரலையாகக் காத்திருக்கு...... நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து அதிலே எதிரியைப் பலிகொடுத்து எங்கள் கடலை எதிரி தொடாமல் எங்களுக்காய் வைத்திருந்த இரும்பு மனிதர்கள் எங்கள் கரும்புலிகள்........ பிரயாணம் தொடங்கிவிட்டால் அவனுக்கு புரிவதெல்லாம் ஈழ விடுதலை...... தெரிவதெல்லாம் எதிரியின் இலக்கு....... அவன் இலட்சியம் தான் எரிந்து எதிரியை எரிப்பது..... தன் வாழ்வுக்காய்…
-
- 12 replies
- 8.6k views
-
-
பாம்பு !! உடைப்பெடுத்த ஆற்றைப் போல் பீறிட்டு எழும் ஆர்பரிப்புடன் என் முன்னே ஆடியது வரிகள் எல்லாம் அதன் தோலாக தோலெல்லாம் அதன் வரிகளாக நெளிந்து நெளிந்து சீறிக் கொண்டே ஆர்ப்பரித்தது இதிகாசங்கள் தம்மை ஏமாற்றிய தவிப்பு ஒரு கண்ணில், ஆயிரம் ஆயிரம் ஆண்டு கடந்தும் மனிதன் மீது மாறா வெஞ்சினம் அதன் மறு கண்ணில் தனக்கும் மனிசனுக்குமான தீர்க்க முடியா கணக்கை பாம்பு சொல்லியது ஒவ்வொரு வரியிலும் மனிதன் பெயர் வரும்போது வெறுப்புடன் துப்பியது பாம்பின் கால்கள் எல்லாம் நியாயம் கேட்டு வரலாறு முழுதும் நடந்து நடந்தே அழிந்து போனதாம்... அதன் காதுகள் மனிதனின் பம்மாத்து வாக்குறுதிகளால் அறுந்து விழுந்ததாம் ஏவாளுக்…
-
- 18 replies
- 8.6k views
-
-
-
ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே அந்தப் பொருளுக்கு ஏகக் கிராக்கி தான்.. ஹைக்கூ கவிதைக்கு மட்டும் இருக்காதா என்ன ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய மண்ணில் தான். 1. ஹைக்கூவின் தோற்றம் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ், மற்றொன்று ப்ரெஞ்ச். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள். ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலை நகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை) இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த அடிகள் 5,7 என்ற அச…
-
- 10 replies
- 8.4k views
-
-
அம்மாவைத் தேடி.. அம்மா...அம்மா...அம்மா -உன் பிள்ளை அழைக்கிறேனம்மா.... கண்ணீர்ச்சுூட்டில் கரைந்து இமை கனக்குதே அம்மா... மடி தேடும் நான் அன்பு மகனல்லவோ... தலைமுடி கோதும் விரலெங்கு தூரத்திலோ.. தாயே நான் செய்த தவறென்ன சொல்லு.. ஜீவனிரண்டை சுமந்த தாயே எந்தன் நெஞ்சும் ஈரம்தானே.. அன்பு என்பது ஆதாரம் தாயினன்போ பெரிதாகும்.. கண்கள் கருணைக்கடலல்லவோ.. எந்தன் உருவம் தந்ததுன்னுடல்லவோ... கருவறை ஒளியும் தாய்நெஞ்சு வலியும் மனதுக்குத்தானே தெரியும் அன்னையினன்பைப் பிரித்திட நினைத்தால் புூலோகம் தீயினில் எரியும்... இடிஇடியென பல இன்னல்கள் நேரிலும் தாயின்நிழலின் கீழ் மனம் தாங்கும்.. வேரின்றி மரமில்லை தாயின்றி வாழ்வில்லை நீய…
-
- 26 replies
- 8.2k views
-
-
நெற்றிப் பொட்டை கழற்றி எறிஞ்சா விடுதலை கட்டுற சேலைய கழற்றி விட்டா விடுதலை நீண்ட கூந்தலை கத்தரிச்சா விடுதலை பியர் போத்தலை முழுசா இழுத்தா விடுதலை கட்டின மனிசனை கழற்றிவிட்டா விடுதலை கலியாணம் ஆகாமலே கருத்தரிச்சா விடுதலை கருவில உள்ளத்தை கலைச்சிட்டா விடுதலை கைகோர்த்து திரிஞ்சிட்டு கைவிட்டு கைபிடிக்கிறது விடுதலை போய்பிரண்டு வைச்சிருந்து கறந்திட்டு விட்டா விடுதலை படிக்க என்று பள்ளிக்குப் போய் வம்பளந்தால் விடுதலை பஸ்ராண்டில கும்பலா லுக்குவிட்டு இழிச்சா விடுதலை ரேக் எவேயில சாப்பாடு வாங்க உழைக்க போனா விடுதலை அங்கங்க அங்கங்கள் தெரிய உடுப்புப் போட்டா விடுதலை பெண்ணும் பெண்ணும் கல்யாணம் முடிச்சா விடுதலை காங் கூட சேர்ந்து கஞ்சா…
-
- 33 replies
- 8.2k views
-
-
உன்னை கேட்காமல் உன்னைபற்றி நிறையவே கனவுகள் கண்டுவிட்டேன் நீ எனக்காக படைக்க பட்டவன் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன் கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்.. சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய் மறக்க முடியவில்லை அந்த நாட்களை மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா? காலம் பதில் சொல்லும்... கனவுகள் வெறும் கனவுகளாகவே.. போதுமடா நம் உறவு.. வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு உன்னுடன் பேசும்போதெல்லாம் உன்னை தொலைத்த வேதனையில் நான் வாட தயாராய் இல்லை.. சோகத்தை தணிக்க , எனக்கு ஏதும் வழி தெரியவில்லை கண்ணீரை தவிர... பாவியடா நான்... எப்படி தனிமையில் அவற்றை தணிப்பேன் உன்னை மறந்து விட்டதாக நண்பர்களிடம் கூறினாலும் உன்னை பிரி…
-
- 15 replies
- 8.1k views
-
-
இந்த திரியிலே நான் எழுதிய கவிதைகளை இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.புதிய கவிதைகளையும் நான் இதுவரை களத்திலே எழுதிய கவிதைகளையும் தொகுக்கலாம் என்று எண்ணுகிறேன்.நான் இங்கு எழுதிய கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்றது ஆகவே அவற்றை ஒன்றாக சேர்த்தால் பிரயோசனமாக இருக்கும் . முதலில பெண் தெய்வங்களை வணங்கி தொடங்குவம் என்ன. பெண் தெய்வம் சொல்லாதே பெண்ணே நீயும் உன் -சொல்லுக்கு பொருளில்லை இங்கு பொற்சிலையாக நீயிருந்த நேரம் மொய்த்ததோ -ஆண்கள் கூட்டம் சிந்தையிலே திடம் கொள்ளு தாயே நீ -புகட்டிடு …
-
- 54 replies
- 8.1k views
-
-
உறவுகளே தொடர்கதை போல் தொடர் கவிதையை இங்கு படைப்போமா? நான் தொடக்கி வைக்கின்றேன். என்னை தொடர்ந்து வருபவர் நான் எழுதும் கருவுக்கு ஏற்றதாகவோ அதன் கடைசி வரிகளை தெரிவு செய்து அதிலிருந்து தொடங்க வேண்டும். முதல் கவிதையை நமது தாயக நினைவுகளுடன் தொடங்குவோமா? எமது பழைய நினைவுகள் எல்லாம் கவிதை வரிகளில் வலம் வரட்டும் இங்கு. என்ன நீங்கள் தயரா? அந்த நாள் எந்த நாளோ? சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு புத்தகப்பையை அனணத்தபடி சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு :arrow:
-
- 54 replies
- 8.1k views
-
-
" கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் "-------------------------------------------------------------------" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "-------------------------------------------------------------------" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "-------------------------------------------------------------------" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "-------------------------------------------------------------------"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "
-
- 6 replies
- 8.1k views
-
-
ஏணி ..........ஏன் இனி?? அழகாய் அரவணைத்தும் ஆக்ரோசத்தோடும் விருப்போடும் வெறுப்போடும் செருப்போடும் செருக்கோடும் எப்போதும் எனை நீ மிதிக்கலாம் என்னால் ஏற்றி விடவும் இறக்கவும் மட்டுமே முடியும் என்னால் என்னிடத்தை விட்டு ஏறவும் முடியாது ஏறி மிதிக்கவும் முடியாது ஏறி விட்ட ..நீ இறங்கும்வரை காத்திருக்கவே முடியும் ஏனெனில் நான் ஏணி.... அய்...எனக்கும் கவிதை எழுத வந்திட்டுது.
-
- 16 replies
- 8.1k views
-
-
ராமன் தேடும் சீதை....... கவிதை..... மலர்களின் மணம்வீசும் இளவேனிற் காலத்தில் இனிய மாலைப் பொழுதொன்றில் நண்பனின் திருமண அழைப்பிற்கு தனிமையில் செல்கின்றேன்..... அழகான மண்டபத்தில் மிக அழகான சோடினைகள்..... என் மனதின் மகிழ்ச்சிக்கு இயற்கையின் அழகுடன் செயற்கையும் அழகுசேர்க்க காதலெனும் நினைவு என் கண்களால் வெளிவந்து என் பார்வைக்கு இறகுகள் பலமாக முழைத்துவிட.... தேடினேன் என் சீதையை...! கண்டு கொண்டேன் ஓர் அழகை என் அந்தபுற(ர)த்தில்...! ஆகா..! என்ன ஆச்சரியம்.. அம் மானின் அழகில் மயங்கிவிட்டு அம் மானை எனதாக்க விழி அம்பை தொடுத்ததும்... பதிலுக்கு ஓர் அம்பு பாய்ந்து வருகுறது..! என் பார்வை…
-
- 20 replies
- 8k views
-
-
நீ காதலா....? நீ நட்பா....? --------- இலட்சியங்களை..... இலக்காக்கும் காதல்....!!! இலட்சியங்களை..... இயக்க வைக்கும் ... நட்பு....!!! கட்டுப்பாடுகளை..... கண்ணியமாக்கும் ... காதல்....!!! கட்டுப்பாடுகளை ... கற்று தரும் நட்பு.....!!! இதயத்தை.... பறி கொடுப்பது.... காதல்...!!! இதயத்தையே .... பரிசளிப்பது.... நட்பு...!!! கஷ்டங்களில்..... கைகொடுப்பது .... காதல்....!!! கஷ்டங்களில் தோள் கொடுப்பது ... நட்பு....!!! துயரங்களை தூக்கி எறியும் காதல்.....!!! துயரங்களில் .... பங்கெடுக்கும் ... நட்பு....!!! காதலின் வெற்றி..... இருவரும் இணைவது நட்பின் வெற்றி இருவரும் உயர்வது ....!!! காத்திரு…
-
- 1 reply
- 7.9k views
-
-
கல்லினில் இரு துளைவைத்து கண்ணென்று சொல்லி உலகையும் காப்பான் இவன், தன் கண் கொண்டு என கற்பனை வளர்த்த எமை மூடராய் ஆக்கி கயவனாய் போனாயே - கடவுள் இல்லை நீ கல் என்றே சொல்வேன் உனை.. கைலையில் உள்ளாயா - இல்லை போதியின் கிளையில் கீழுள்ளாயா? காமுகன் கையில் கணையாய் ஆனாயா. என்குல மங்கையர் கச்சை களைகையில் எங்கே ஒழித்தாயோ? களத்தினில் எம்மக்காள் கருணையின்றி கொலையுறுகையில் கழிவறையில் இருந்தாயோ?? கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த கயல்விழிகளெல்லாம் அசுரர்கள் கலவிப்பசி தீர்க்க கையிழுத்து கழுத்தறுத்த வேளை - நீ கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ கல்லில் புதைந்த கடவுளே. கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம் கல்லானவன் பொய்யுரைக்க காலடியில் காலன் இன்று எ…
-
- 26 replies
- 7.9k views
-
-
மங்கையின் கூந்தலை கார் முகில் என்றார் பூங்குழல் என்றார் நதி என்றார் நறுமணம் வீசும் சொத்தென்றார் மயக்கத்தில்..! சூடிய மலர்களும்.. முக்கிய சந்தனப் புகைகளும்.. தடவிய பன்னீரும் திரவியமும்.. தப்பிய சீயாக்காயும்.. கும்பிய கெட் அண்ட் சோல்டரும் (H&S).. கொட்டிய கண்டிசனர்களும்.. அடித்த ஸ்பிரேயும்.. வாசம் வீசியதென்பதால்.. அப்படிச் சொன்னார். உண்மையில்.. பெண்களின் கூந்தலில் வாசம் செய்வது.. பேனும் ஈரும்..!
-
- 34 replies
- 7.9k views
-
-
தமிழ்ச்செல்வனையும் போராளிகளை இழந்த துயர்ப் பொழுதில் ஈழத் தமிழருக்கு ஆறுதலான கலைஞருக்கு நன்றி. கலைஞருக்கு வாழ்த்து -வ.ஐ.ச.ஜெயபாலன் காலத்தில் சோழனுக்கு நீர் ஏந்திக் கல்லணை நிழலேந்திக் கோவில். சேரனுக்கோ சிலம்பேந்தி வந்த தமிழிச்சி. பாண்டடியற்கோ சங்கம். அடையா நெடுங்கதவும் ஆஞ்சல் எனும் சொல்லுமாய் எம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு? கலைஞா உனக்கு காலச் சுவடாக விலங்கொடித்தால் ஈழம் இருக்கும் ஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய் visjayapalan@gmail.com
-
- 22 replies
- 7.8k views
-
-
உலகைப் பார்த்து ரசிக்க வேண்டிய இவர்கள் தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள் ஆச்சரியத்தோடு.. வியப்புக்குறிகள் கூட விரல்களின் தொடுகையில்.. விடியலின் நிறம் கூட விடியாத நம் மனம் போல.. வீணாக மண்ணில் புதைப்பதை விட்டு விதையாக விதைப்போம் இவர்களின் முகத்தில்.. விழிகளைக்கொடுத்து வெளிச்சம் பெறுவோம் இறப்புக்குப் பின்பும் இவர்களால் உலகைக் காண்போம்..
-
- 12 replies
- 7.8k views
-
-
முகநூலில் அகப்பட்ட கவிதை கவிஞர் தமிழ்தாசன் எழுதியது......கவிதையைப்படித்து முடித்து நீண்ட நேரமாகியும் இன்னும் வெளிவராமல் அதிர்ந்து போய் நிற்க வைத்திருக்கும் எழுத்து..... யாழ்க்கருத்துக்கள நண்பர்களுடனும் இதனைப்பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் இங்கு பதிவிடுகிறேன். விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்கள…
-
- 16 replies
- 7.8k views
-
-
போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள் ---------------------------------------------------------------- கவிதை:தீபச்செல்வன் _______________________________ 01 போராளிகள் மடுவைவிட்டு பின் வாங்கினர். நஞ்சூறிய உணவை தின்ற குழந்தைகளின் கனவில் நிரம்பியிருந்த இராணுவ நடவடிக்கைகளிலிருந்து போர் தொடங்குகிறது. நகர முடியாத இடைஞ்சலில் நிகழ்ந்து வருகிற எண்ணிக்கையற்ற இடப்பெயர்வுகளில் கைதவறிய உடுப்புப்பெட்டிகளை விட்டு மரங்களுடன் ஒதுங்கியிருக்கின்றன சனங்கள். போர் இன்னும் தொடங்கவில்லை. 02 போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு பின் வாங்கினர். பயங்கரவாதிகளை துரத்திக்கொண்டு வருகிறது அரச யுத்தம். மரத்தின் கீழ் தடிக்கூரைகளில் வ…
-
- 29 replies
- 7.7k views
-
-
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" உன் வார்த்தைகள்.. என்னை உன் செல்லப் பிராணியாக்க.. நீ அழைத்த போதெல்லாம் அலுக்காமல் ஓடி வந்தேன்.. உன் காலடித் தடம் பார்த்தே பாதைகள் நடந்து வந்தேன்..! அப்பப்ப ஏதேதோ கோலம் கொண்டு.. நீ வார்த்தைகளால் எட்டி உதைகையில் உள்ளூர நொந்தாலும் வெளியூரா உன் காலடி சுற்றினேன்.. உன் பாதங்களே சரணெனக் கிடந்தேன்..! நான் வாங்கி வர நீ உண்ண.. வாய் பார்த்து எச்சில் வடித்தேன்.. அதில் அன்பின் உச்சம் நான் கண்டேன்..! இறுதியில்.. உன் கார் கதவடியில் தாவி ஏற நான் முயல்கையில் நீயோ.. அட நாயே Get out என்றாய்..! உன் காதல் காலநிலை போல என்றே அறியாமல்.... அது போட்ட அன்புப் பிச்சையில் உயிர் வாழ்ந்த …
-
- 23 replies
- 7.7k views
-
-
கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்
-
- 45 replies
- 7.6k views
-
-
-
Ranger with Tusks of Killed Elephant, Amboseli 2011 © Nick Brandt கென்யா நாட்டின், கொடும் கோடையிலும், பனிக் கவசம் சுமக்கின்ற, கிளிமாஞ்சரோ மலைக்குன்றின், அடிவாரத்தில்………! பிளெமிங்கோ பறவைகள், உழுது கோடு வரைந்த நிலம், பாளம் பாளமாய், பிளந்து கிடக்கிறது! பிளந்த நிலத்தின் வடுக்களுக்குள், புதைந்து மறைகின்ற, சிறு தவளைக் குஞ்சுகள் கூட, கதிரவனின் கொடுங்கரங்களின், வெம்மையை உணர்கின்றன! நாளைய மேகங்களின், வருகைக்காக, நம்பிக்கை சுமந்து, அவை வாழ்ந்திருக்கின்றன! இரக்கமில்லாத தரவைகளில், கருக்கட்டி வளர்ந்த, பெரிய யானையின் தந்தங்கள், சிறிய மனிதனொருவனின், துப்பாக்கியின் வெற்றிக்குச், சாட்சியாகிக் கிடக்கின்றன! தனது தோள்களில் கூடத், தூக்கிவைக்க முடியா…
-
- 17 replies
- 7.6k views
-