கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பசுமை தளிர்த்து கனியும் கிடைத்து நிலைக்கும் என நினைக்கையில் இலைகள் உதிர்ந்து காம்பும் கறுத்துப் பட்டதாய் நின்றது பின் பனியுந்தூற, பட்டை பிளந்து பஞ்சாய்ப்போனதுபோல் பழ மரம் பருத்திச் செடியாய்க் காட்சியளித்தது. புதிதாய்த் தூவிக்கிடந்தது பனி அதில் புதிதாய் ஏதோ பிராணியின் தடம் இதுவரை எதுவும் நடக்காத கிரகத்தின் முதற்சுவடுகள்... மனதுள் பிரமை நிஜமாய்த் தெரிந்தது. ஜக்கட்டுக்குள் நுளைந்து குளிரோடு பொருதும் பிறவும் பூண்டு பின்வளவுக் காட்சி மனதில் இருக்க முன்கதவால் இறங்கித் தெருவில் நடந்தேன். கோடையில் எனது போதியாய் விளங்கும் காட்டுக்குள் புகுந்தேன் பட்டனவாய் நின்ற நெடிதுயர்ந்த விருட்சங்கள் மூச்சின்றி நிமிர்ந்து நின்றன. கிளையாய்ப் பிரிந்தது பாதை இரண…
-
- 11 replies
- 1.7k views
-
-
எம் கரும்புலிகளே! ஜீலை 5 2007 இருளகற்ற கரும்புலியாய் சென்றார்கள்! விடியலுக்கு விளக்காகி நின்றார்கள் 'சாவினை' இவர்கள் தான் வென்றார்கள்- வீர சரித்திரத்தில் பேரெழுதிச் சென்றார்கள்! சந்தனமேனிதனில் கந்தகத்தை கட்டியே களம் நாடிச் சென்றார்கள்! காடையர் கயவர்கள் கூட்டத்தை வெடி மருந்துக்கு பொடியாக்கி வென்றார்கள்! அஞ்சாத தலைவனின் பாதையிலே- நடை போடும் எங்களின் வீரர்களே! உங்களின் நெஞ்சுரம் யார்க்கு வரும்? உங்கள் தியாகமே "ஈழத்தை" வென்று தரும்! தேசத்தின் புயலாக வீசுகின்ற- கரும் புலியே! கடும்பகையைக் கொளுத்துகின்ற எரிமலையே! எம் ஈழச் சோதரரே! -ஈழ வரலாற்றின் நிலைய…
-
- 5 replies
- 1.7k views
-
-
நீ ரசிக்கின்ற றோஜா பூ சில நாட்களே வாசம் வீசும் நானே என் இதய தோட்டத்தில் நீ சுவாசிக்கும் வரை வாசம் வீசும் பூவாக இருப்பேன்...
-
- 4 replies
- 1.7k views
-
-
யார் அநாதைகள்???? அந்நிய நாட்டில் வாழும் அனைத்து தமிழரும் அநாதைகள் அன்புக்காக ஏங்கும் அனைத்து உள்ளங்களும் உலகில் அநாதைகள் படிப்பில் ஊக்குவிக்க படாதோர் அநாதைகள் பண்பில் வளராதோர் என்றும் அநாதைகள் பழக்க வழக்கங்கள் தெரியாதோர் அநாதைகள் பகுதறிவு அற்றோர் நம்முள்; அநாதைகள் அன்புவாழும் உள்ளங்கள் அநாதைகள் இல்லை அன்னை தந்தையில்லாதவர் அநாதைகள் இல்லை
-
- 4 replies
- 1.7k views
-
-
மறந்து விட்டாயா.........? கண்களால் கைது செய்து காதல் விதை விதைத்தவளே... ஏழேழு ஜென்மமும் உன்னோடுதான் என்றாயே.... இன்பத்திலும் துன்பத்திலும் என்னோடு உறவாடியவளே.... காலம் மாறினாலும் - என்றும் மாறாதது நம் - காதல் என்றாயே......! மொத்தத்தில் நீ இன்றி நான் இல்லை என்றாயே இது அத்தனையும் பொய்யாக்கிவிட்டு - நீ மட்டும் ஏன் என்னை மறந்து பிரிந்து சென்றாய் - இதுதான் உன் முதல் ஜென்ம பந்தமா.........! முகவரி தெரியாத காதலனாய் உன் முகம் காணாத ஏக்கத்தில் - ஊன் இன்றி உறக்கம் இன்றி - உயிரற்ற நிலையில் உருகிப் போய் கிடக்கின்றேன்......! கடைசியாக என்றாவது -என் மரணச் செய்தியை கேட்டால் ஒரு துளி கண்ணீராவது விடு - அதுவே நம் காதலுக்கு -…
-
- 8 replies
- 1.7k views
-
-
என் ஆக்கங்களை எல்லாம் ஒரு புளொக்கில் இணைப்பம் என்று கூகிள் ஆண்டவரின் உதவியுடன் தேடும் பொழுது நான் எழுதி சரிநிகரில் வெளிவந்த கவிதை ஒன்று கண்ணில் பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியில் எழுதிய கவிதை இது இக் கவிதையை யாழில் இதுவரைக்கும் இணைக்கவில்லை என்று நினைக்கின்றேன் (சில பழைய கவிதைகளை முன்னர் இணைத்து இருந்தேன்). நூலகம் தளத்தில் இருந்து PDF வடிவில் இருப்பதால் அதனை படமாக மாற்றி இணைத்துள்ளேன். பழைய கவிதை என்பதால் 'இதெல்லாம் கவிதையா' என்று கோபிக்க கூடாது ------------
-
- 14 replies
- 1.7k views
-
-
நான் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் உடைந்த நாற்காலி முதல் படுக்கை விரிப்பு வரை அதன் மொழி களையெடுப்பு.. நான் போர்வையை மாற்றியே ஆகவேண்டும் இந்தத்தரை முழுவதும் அது நீண்டிருக்கிறது காரணம் எல்லாம் உடைந்துவிட்டது இங்கிருப்போர் ஊனமுற்றோர் எனில் நான் முயற்சிப்பேன் ஏனென்றால் எனக்குக் காரணங்கள் உண்டு நீங்கள் காத்திருக்க முடியாது வீட்டை விட்டு வெளியே விட்டபடி எட்டிப்பார்க்க.. அந்த நாற்காலியில் பலபேர் வந்து போயிருக்கிறார்கள் தூசு ஊர்ந்து சலனம் தொற்றிக்கொள்ள இப்போது தெருக்கள் எல்லாம் வெறிச்சோடி விட்டது ஆனால் எனக்குத் தெரியாது அந்த நாற்காலி நாற்றத்தையும் சுடலைச் சாம்பலையும் தான் அணிவிக்கும் என்று.. பட்டுப்போர்வை அணிவிப்பதை எப்போதும் நிறுத்த வேண்டும் ஏனென்றால் எனக்கு அ…
-
- 14 replies
- 1.7k views
-
-
காதல் சொல்ல முன்.... கனவுக்கும்....நிஜத்திற்கும்...... கடிவாளம் நானிட்டேன். புூவுக்கும்... காற்றுக்கும்..... வேலி நான் போட்டேன். முகிலையும்... பனியையும்... சிறையிலேதானிட்டேன். முட்டாள்..நான்... வாய் விட்ட ஒரு சொல்லலே... கண்ணே உன் நட்பையும் இழந்துவிட்டேன்.
-
- 8 replies
- 1.7k views
-
-
காத்திருப்பேன் அவள் வருவாள் ..பக்கத்தில் அவள் அண்ணன் ...சைக்கிளில் வருவார் ..அருகிலே செல்வேன் ..கண்ணால் கதைப்பேன் ..அவள் யாடையால் கதைப்பாள் ..அண்ணன் கிட்டவரும் போது..என் நடை வேகமாகும் ...பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..கொப்பியை பரிமாறும் போது ..கடிதமும் பரிமாறும் ...விழுந்தது கடிதம் நிலத்தில் ..கண்டார் ஆசிரியர் தந்தார் ..முதுகில் நல்ல பூசை ..நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் ..காலம் காதலாகியது ..கல்வி கரைக்கு வந்தது ..காதலும் கரைக்கு வந்தது ...^பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலைவரை --------------------------------------------------------------------------------------------------------- தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் க…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது நான் எடுத்துக்கொண்ட பயணம் முடிந்திருக்க வேண்டும்! வாழ்ந்த நாட்களை திரும்பிப் பார்க்கும் போது என் பெயரை சிலர் உச்சரிக்க வேண்டும்! கோபுரங்களின் அழகை அத்திவாரங்கள் தாங்குவது போல் நான் பிறந்ததின் பயனை ஊரறியச் செய்வேன்
-
- 20 replies
- 1.7k views
-
-
கவலை --------- ஆட்டின் மரணம் பற்றி அப்பாவின் துக்கம் கவிதையாய் வழிந்தது முன்னொரு நாள் தோட்டத்துச் செடிகளை மேய்ந்தது பற்றி அம்மாவுக்கு கோபம் தாயைப் பிரிந்த குட்டிகள் கதறிச் சோர்ந்து போயின கூரிய நகத்தை தீட்டிய சிங்கம் குட்டிகளைப்பார்த்து சிரித்துக் கொண்டது என்ன உலகம் இதுவென்று மரத்துக் காகம் முணுமுணுத்துக் கொண்டது
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழன் !! ஒருவன் உழைப்பில் ஒன்பது பேர் உண்பான் தள்ளாடி அவர் விழும்வரை தந்தை உழைப்பில் வாழ்வான்! காதோரம் நரைமுடி தெரிகையில்தான் வேலை செய்ய நினைப்பான் ! காதலித்த பெண்ணை கூட கைபிடிக்க சீதனம் கேட்பான்! வெற்றிலை கடை யாரும் யாரும் திறந்தால் - தானும் அதையே செய்வான் - ! பாக்கு விற்க நினைக்கான் - ! செய்தால் இருவருக்கும் நன்மை .. என்று எண்ணான் - அவன் அழிந்தால் மட்டும் போதுமென்றே அசிங்கமாய் ஒரு சிந்தனை கொள்வான்! வீதி போட குவித்த - கல்லை அள்ளி தன் வீட்டுக்கு -வெள்ளம் வராமல் செய்வான் ! பள்ளம் வருமே - விழுவானே யாரும் என்றால் ....... எவனாவது செத்து போகட்டும் எனக்கென்ன என்பான்! பச்சை குழந்த…
-
- 10 replies
- 1.7k views
-
-
கனவினைக் கொடுத்து தூக்கத்தைக் கெடுத்து பாதியில் செல்வாள் பாவை! பாதையைத் தொலைத்து பேதையை நினைத்து வீதியில் விழுவான் கோழை! சேலைகள் நினைத்தால்... சோலைகள் காய்ந்து பாலைகள் தோன்றும் வேலைகள் செய்திடும்! காலைகள் இருண்டு காரிருள் படிந்து வாழ்க்கையும் உருண்டிடும் கவனம்!!! ***எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது***
-
- 20 replies
- 1.7k views
-
-
இந்த மலைகளுக்கப்பால் தான் நான் இருக்கிறேன் மலைமுகட்டில் ஊற்றெடுக்குமிந்த நதி இந்த மலைகளுக்கப்பால் சமவெளிகளை விளைவிக்கிறது பகலிரவு காலத்தை நகர்த்தும் உக்கிரச் சூரியன் உதிப்பதும் இந்த மலைகளுக்கப்பால் இருந்தே மேய்வன விரும்பும் புல்வெளிக்காடும் தவழ்வன பொழியும் மழைக்காடும் இந்தமலைகளுக்கப்பால் தான் சந்திக்கின்றன ஒலியின் மொழியை நூற்றாண்டுகளாக எதிரொலித்தபடியுள்ளன பள்ளத்தாக்குகள் இந்த மலைகளுக்கப்பால் காற்றும் நிலமும் நீரும் ஆதிநிர்வாணாத்தோடிருக்கும் முடிவிலா ஆரண்யமிருப்பதும் இந்த மலைகளுக்கப்பால் தான் இரவு அந்தகார சுவையுடன் இருளாகவேயுள்ளது இந்த மலைகளுக்கப்பால் கடவுள் எல்லைக்கோடு அகதிகள…
-
- 14 replies
- 1.7k views
-
-
கனவின் பொருளுரையீர். களிகொண்ட மனமொன்றுகூடும் அதிகாலையொன்றில் காட்டினிடையேகித் தனியனாய் நடைபயின்றேன். மனிதருடன் உரையாடல் சலித்து மரங்களுடன் உரையாடும் அவாவெழுந்து ஊர்தாண்டி உவகையுடன் தொலைந்தேன். பசுமைக்கும் பழுப்புக்கும் இடைப்பட்ட பருவமது பார்வைக்கு இதமழித்ததெனினும் காட்டினிலும் பதுங்கிக் கிடந்ததோர் ஊமைச்சோகம். எதிர்காலமெண்ணித் துயருற்றாற் போலான ஏக்கமெங்கும் மரங்களிலும் கிளைகளிலும் பற்றிப் படர்ந்தது போல் ஒரு தோற்றம். "ஆரூடக்காரனே, எம்மொழியைப் புரிந்தாய் நன்று. எம்முடனே நட்பிழைந்தாய் நன்று. வானமொழியிழக்கும் பருவமிது நம் வாழ்வும் என்னாகுமென்றெண்ணித் துயிலிழக்கும் காலமிது. தன்னந்தனியர்களாய் நின்றிருந்தோம் நாமிங்கு வந…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஊடக காரனா நீ...? மக்களின் தொண்டனாய் மன்றேறி வந்தவரே நீதியை கொன்றிங்கே நின்றென்ன உரைக்கின்றாய்..? பிழைகள் செய்தாரென்று பிழையாய் உரைக்கின்றாய் வதைகள் செய்வதற்கா வந்தாய் நீயிங்கே...? கும்பிடு போட்டுனக்கு குலவி வந்தால் தான் சந்திக்கு விடுவாயா சம்பந்த காறனே...? மறையது கழன்றாரென்று மன்றில் நீயுரைத்தால் செருப்பதை எறியாமல்- என்ன செங்கம்பளமா விரிப்பார்...? சுதந்திர தா்மத்தை சுடு காடனுப்பி விட்டு மன்ரேறி என் செய்வாய் மடையனே நீ சொல்லு...? விதி முறை போட்டென்ன விலையா பேசுகின்றாய்..? சீா் கேடி என்செய்வான்- அவன் சிந்தை இது காண்... மதியது தானிழந்தாய் மறையது நீ கழன்றாய் உடையில்லா அல…
-
- 5 replies
- 1.7k views
-
-
தியாகத்தின் சிகரங்கள்..! வீர யாகத்தின் அகரங்கள்...!! காற்றோடு கலந்தவர்கள்...! வீர காவியம் ஆனவர்கள்...!! நெருப்பாற்றில் குளித்தவர்கள்...! வரலாற்றில் நிலைத்தவர்கள்...!! மரணத்தை வென்ற மாவீரர்...! தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!! மாவீரச் செல்வங்களே...!!! உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் அழிக்கிறான்...!? உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் தடுக்கிறான்...!? உங்களின் தியாகத் தீயில்தான்... இன்னும் நாம் குளிர்காய்கிறோம்! இவ்வளவு இழந்த பின்னும்... இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!! இனியும் நீங்கள் எங்களுக்காய் உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீர்கள்! நிம்மதியாய் உறங்குங்கள்...! உங்கள் கனவு…
-
- 11 replies
- 1.7k views
-
-
திரு முருகு - வ.ஐ.ச.ஜெயபாலன் தினைப் புனத்தின் மத்தியிலே வேங்கை மர நிழலில் தேன் தினைமா துடைத்து வெண்தாடி பிய்த்தபடி நிற்கின்றேன். தேவதைபாதி சூனியக் காரிபாதியாக காவல் பரணில் சிரிக்கின்றாள் வள்ளி வயல் நிறைய பூனையாக்கப் பட்ட யானைகள் அலைகிறது. நிலா முகத்தி மான்விழியாள் முல்லைச் சிரிப்பழகி தேன் மொழியாள் என்று சொன்ன கவிதை எல்லாம் பாழுள் புறம்காலால் தட்டிவிட்டாள். வேங்கை மரத்தடியில் உடைந்த புல்லாங்குழல் பிய்ந்த மயிலிறகும் தலைமயிரும் கண் சிமிட்டிக் கண்ணனும் வந்தவர் என்கிறாள் ஏளனப் பணிவு இதில் வேறு எள்ளல் சிரிப்பு. வெறிக்கும் சோம மது புறக்கணிப்பின் ஆலகால விசம். எல்லார்க்கும் தேன் கமழ்ந்து எட்டாத குறிஞ்சி மலர். விந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழீழ புலனாய்துறையினரின்வெளியீடு விழித்திருப்போம் கேட்டுப்பாருங்கள் http://www.esnips.com/doc/eab937d6-453d-48...et=documentIcon
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழீழத்துக்கு ஓர் பயணம்.......... கவிதை.... சிறுவனாய் அன்று சிட்டுக்கள் வால் பிடித்து சுற்றிவந்த தெருக்களெல்லாம் வசந்தமாய் நினைவில் வர வானூர்தியில் அமர்ந்து வாழ்ந்த நிலம் செல்கிறேன்.... வட்ட நிலவுகளாய் வண்ண நிறங்களாய் குருவிக் கூட்டங்களாய் குளிர்விக்கும் வசந்தங்களாய் கூடி நின்ற எங்கள் சின்னஞ்சிறு காதலிகள் கூடிவந்த தெருக்கள் என்றும் எந்தன் நினைவுகளில் இன்பக் கனவுகளாய் அன்று நான் நண்பனிடம் அவள் என் கிளியென்பேன் அவளோ தன் தோழியிடம் அவன் என் புலியென்பாள் இப்படியாய் பல பல பள்ளிக் கால விளையாட்டு இவையெல்லாம் மனங்களில் மறையாத இன்பத் தேனூற்று.... சிட்டுக்களைச் சிறைபிடிக்க அவசரமாய் செல்வதென்றால் அம்மா…
-
- 8 replies
- 1.7k views
-
-
காதலிக்கிறேன் என்றாய்... பல பல பொய்கள் புனைந்து புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்... காதலில் இது சகஜம் என நினைத்தேன்... இன்று நீ... அதையே வேறோருவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாய்.... சற்றும் மாறாமல்.....
-
- 22 replies
- 1.7k views
-
-
1997 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பொங்கல் கவியரங்கில் பாடப்பட்ட கவிதை இது. பொருத்தப்பாடு கருதி இப்போது பதிகின்றேன். புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது - அதில் ஒரு நிமிஷம் கூட அர்த்தமாகுது ஆண்டு பல கண்டோம் - அதில் என்ன சுகம் கொண்டோம் வேண்டும் வரம் வேண்டி நின்றோம் '97 இன் உதயத்தையே தொழுது நின்றோம் தையே நீ கிழிந்த மனங்களை தையேன் வெய்யோன் கண்டு அஞ்சாதே அவனுன்னை வையான் பையவே வருவாய் நல்லதே தருவாய் மின்னலே உன்னைத் தொழுதேன் என்னுள்ளே புகுவாய் கோடிப் பிரகாசம் கூட்டுவாய் 'தை' என்ற தையலுக்கு தாலி கட்டவென்றே 'வெய்' என்ன வெய்யோனும் வேளை பார்த்து நின்றான் மை பூசும் தையலவள் சு…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
நிரந்தரமற்ற கனவுகளை நினைவில் சுமந்து வாழ்ந்தேன் இன்று என் விழிகளில் நீ சுமக்க வைத்தது கண்ணீரைத் தானே... பசுமையான என் வாழ்வில் வந்து பாசத்தைக் காட்டி வேசம் போட்டாய்.. என் பாசங்களை வெறுத்தேன் பொங்கி வந்த ஆசைகளைப் பொசுக்கிப் போட்டாய்.. சில நாட்களில் பழகி தொடர் நாட்களில் விலகி விட்டாய்.. உன் வரவுக்காய் ஏங்கிய என் விழிகள்-இன்று உன் கனவுக்காய் ஏங்குகின்றன... காவியத்தின் நாயகனாய் உனைக் கண்டேன் காதல் காவியத்தைத் தேர்ந்தெடுத்தேன் கற்பதற்கு.. ஆரம்பம் சுவையாய் இனித்ததால் காவியத்தக்காய் என்னை அற்பணித்தேன்.. இந்த உலகத்தையே காவிய நாயகனாய் நினைத்தேன்.. பசியை மறந்தேன்.. படுக்கையை இழந்தேன் கண் உறங்காமல் …
-
- 6 replies
- 1.6k views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய …
-
- 2 replies
- 1.6k views
-