கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இருளினிலே மருளுகின்ற விண்மீன்கள் கொண்டாட்டம் இருவிழிகள் கருவிழியால் விடுகிறதே காதல் தேரோட்டம் மின்சார விழிகள் இரண்டும் மின்னி இழுக்கிறது மின்மினியாய் கயல்விழியே என் இதயம் காந்தமாகக் கவர்கிறதே தேவதையே உன் நினைவுகள் தேய்ந்துவிடாத வளர்பிறையே தேம்பி அவனும் அழுகின்றான் தேங்காமல் நீயும் வந்துவிடு தேனைப்பருக என்று தேடிவந்த தேனிகூட தேவி உன் முகம் கண்டு தேகம் சிலிர்த்ததுவோ தீண்டவில்லை உன் இதழை தித்திக்கும் சுவைகண்டும் தீங்கிழைக்க விரும்பாமல் தீர்க்கமாய் காத்திருக்கு தேவலோக கன்னியே நீயும் வந்துவிடு தேவனுக்கு அன்பே நீயும் உன்னைத்தந்துவிடு
-
- 6 replies
- 1.4k views
-
-
தூரம் அதிகமில்லை துயரம் இனியுமில்லை கைகட்டி நிற்பதனால்.. தமிழன்கை சோரவில்லை பொறுமையைக் காப்பதனால் பொறுப்புணர்வு மறையவில்லை.. நூறாண்டு இழப்புகள் தேடித்தரப்போவதை.. ஓராண்டு இழப்பால் உருக்குலைத்தல் விவேகமில்லை தலைவர் வீரத்தை தரம் பேசும் தகுதி தரணியில் எவர்க்குமில்லை உறவைப்பிரிந்த உயிர் உரம் கண்டதேயொழிய சோரவில்லை வீரம் மாறவில்லை மக்கள்வரிப்பணத்தால் மகிந்த கந்தக அரிவாள் செய்து தமிழனை அரிவதற்கு.. துணைபோகும் இனத்துரோகியர் வாழ்நாட்கள் நீளமில்லை கீபீர் போட்ட குண்டுகள் கிண்டிய குழிகளில் எங்கள் வயலுக்கு நீர் வார்க்கும்- சிங்களவன் பறித்த உயிரெல்லாம் போராளி ஆன்மாவில் புகுந்து உரம் சேர்க்கும்.. எரிந்த கொட்டில்கள்.. அடுக்குமாடி…
-
- 11 replies
- 2.2k views
-
-
கூடினார்கள் எரித்தார்கள் கலைந்தார்கள் சனீஸ்வரர்களுக்கு எள்ளெண்ணெய் வைத்ததில் பூசகர் இல்லம் புனருத்தாரணம் பெற்றது. ------------------------------------- கறிவேப்பிலை, பன்னக்குழை தேங்காய்ப் பொச்சு இவைகடந்து தீச்சட்டி, தீவட்டி, வேப்பிலை, சாணகம் வளர்தொழிலாய் தமிழர்களின் ஏற்றுமதி வியாபாரம். - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 948 views
-
-
தமிழன் புகழ் வானில் உயர்ந்தது வரி உடை அணிபவன் ஆணையில் பறந்தது! திரி சடை சிவனும் திடுக்கிட்டு மூன்றாம் விளி திறந்தான் ... முகமலர்ந்து வாழ்த்தினைப் பகர்ந்தான்... சிங்கங்கள் முகத்தை அஷ்டகோணலாக்கி அ'சிங்கங்கள்' ஆயின! பறந்தது உண்மை குண்டு விழுந்ததும் உண்மை இருந்தது இருந்தபடியே இருப்பதாக அறிக்கை வாந்தி எடுத்தார் அரசாங்க அமைச்சர் அவர் மனசுக்குள் நிறைய எரிச்சல்! உலகம் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே 'அது எப்படி புலி வானில் பறக்கலாம்?' என்று வேதாந்தம் பேசின... வெறும் அறிக்கைகள் வீசின! இறக்கைகள் விரித்து இன்னும் இன்னும் பற என்று தமிழர் வாய்கள் பேசின...! …
-
- 6 replies
- 1.8k views
-
-
மானுடத்தை நேசி உண்ண உணவின்றி உடுக்க உடையின்றிபடுக்கப் பாயின்றி தரிக்க நிழலின்றி சிதைந்த தேகமும் சிந்திய கண்ணீரும் கொண்டலையும் மானுடம் இரண்டு இலட்சத்தை தாண்டுதே தேனாட்டில்! துப்பாக்கி கலாசாரம் காறி உமிழ்ந்த எச்சிலின் காயங்கள் சிதைக்கின்றன இன்னும் எம்மவரின் தேகங்களையும் தடம் பதித்த எம் புனித தேசத்தையும்! காலனாம் பிணந்தின்னிக் கூட்டங்கள் சொந்த இலாபத்துக்காய் கந்தகக் குழாய் ஏந்தியதால் அப்பாவி ஜீவன்கள் அலைகின்றன தெருக்களில்! மௌனித்த உதடுகள் மீண்டும் திறக்க ஜனித்த சிசுக்கள் உரம்பெற சிவந்த எம்மண் சிலிர்க்க தமிழர் உரம்பெறு நாள்தான் எப்போ! துப்பாக்கி வேட்டும் குண்டுத் தாக்குதலும் தமிழர்களின் பசிக்கான தீனியா அழித்தது போதும் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
என் உழைப்பை உறிஞ்சும் வரிப் பணத்தில் கொடிக்கம்பம் நட்டு கொடி ஏற்றும் தினமே மே தினம்..! பஞ்சமும் பட்டினியும் வேலை இன்மையும் கூலி இன்மையும் இன்றும் தொடர்கதை தான் ஆண்டுகள் தோறும் ஒப்புக்குத் தோன்றும் மே தினம் போல்..! ஊழலும் ஏய்ப்பும் நிறைந்த உலகில் இன்னொரு புரட்சி புதிய அடக்குமுறை தாண்டி வெடிக்கும் வரை வராமல் போ கொடுமைகள் மறைக்கும்.. மே தினமே..!
-
- 2 replies
- 514 views
-
-
பாயுது வேங்கை பதறுது...சிங்களம்.. பாரடா தமிழா பாரடா.. இந்த சரித்திர வெற்றிக்கு.. உதிரங்கள் ஊற்றிய மறவனைப் பாடடா.. வெகுண்டது வேங்கை.. வெடிக்கின்றபோது... தமிழன் வெற்றிக்குத் தடைகள் ஏது.. சீரிய தவைவன்... கூறிய பாதையில்.. போரிடும்..புலிகளைப் பாடு... தமிழனின் மானத்தை காத்திட உயிர் தந்த வித்துடல்.. ஆடையைக் கலைந்தாய்.. தமிழ் விழிகள் சிந்தும்.. கண்ணீர் மூடும்... அம்மணமேலுடை ஆகும்.. உணவைப் பறித்தாய்.. உயிர்கள் தவிக்க.. உயிரைப் பறித்தாய்.. உன் மத்தம் சிரிக்க.. இதுதான் கரிகாலன் அடி.. இப்போ சிரிடா சிரி... இருக்குது..பின்னூட்டமுனக்கு... இது வெறும்.. முன்னோட்டக் கணக்கு.. எத்தனை உயிர்கள் போனாலும்.. சத்திய வேள்வியில் வ…
-
- 14 replies
- 3k views
-
-
மறதி ஒரு தூக்கமாத்திரை அது எங்கெங்கும் இலவசமாக வழங்கப்படுகிறது அது நமக்கு நடந்தவை எதுவும் நமக்கு நடந்தவை அல்ல என்று நம்ப வைக்கிறது துரோகத்திற்கும் அவமானத்திற்கும் நம்மைப் பழக்கப்படுத்துகிறது நினைவுகள் இனி படிக்கப்பதற்கான கதைகளே என அது நம்பத் தொடங்குகிறது … பிறகு அவை இன்னும் ஒரு முறை எதிர்காலம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன -மனிஷபுத்திரன் http://www.ilankathir.com/?p=4695
-
- 2 replies
- 1.6k views
-
-
முல்லைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் ஆயிரம் காலங்களைக் கடந்த கடல் ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல இன்றும் புது அலைகளை எழுப்புகிறது. அந்த அலைகளின் எல்லைக்குமேலே யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த இடைச்சிகளின் மேச்சல் நிலம். அந்தக் கானல் பொட்டலின் கந்தல் குடையான சிறு மரம் நோக்கி கத்திக் கம்போடும் செல்பேசியோடும் பெயர்கிறாள் ஒரு புல்வெளியின் இளவரசி. நூல் பாவையாய் அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம் ஆடித் தொடர்கிறது நாய். அந்த நான்கு கண்களின் பார்வையில் கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள் செம்புழுதி போர்த்த பற்றைகளிடை காடைகள் மிரளாமல் ஊரும். ஆயிரம் காலத்து வளமையாய் நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு பழமும் வைத்திருக்கிறது இலந்த…
-
- 14 replies
- 3.1k views
-
-
[size=3] [size=4]அழுதோம் [/size] [/size][size=3] [size=4]விழிகள் கரைய கரைய [/size][/size][size=3] [size=4]விடைகள் அற்று அழுதோம் [/size][/size][size=3] [size=4]கண்ணீரை துடைக்க யாருமில்லை [/size][/size][size=3] [size=4]கண்ணீர் வற்றி கண்கள் புண்ணாகின [/size][/size][size=3] [size=4]அழவும் உடலில் தெம்பு அற்று வீழ்ந்தோம் [/size][/size][size=3] [size=4]வீழ்ந்தோம்தான்[/size][/size][size=3] [size=4]உலகை நம்பியதால் வீழ்ந்தோம்தான்[/size][/size][size=3] [size=4]ஆனால் மீளவும் எழுவோம் [/size][/size][size=3] [size=4]விழ விழ எழுவோம் [/size][/size][size=3] [size=4]விடியும்வரை ஓயோம் [/size][/size] [size=4]http://leo-malar.blo...og-post_10.html[/size…
-
- 4 replies
- 637 views
-
-
யுத்தக்கல் சுமக்கும் சிறுவன் தீபச்செல்வன் ஒற்றைக்காலுடன் இழுத்துச் செல்லும் சிறுவனுக்காய் திறக்கப்பட்டிருக்கிறது குண்டுகள் கொட்டப்பட்டு குழிகள் வீழ்ந்த நகரம் செல்துளைத்த ஓட்டைக்குள்ளால் பள்ளியிலிருந்து பார்த்த பொழுது அழிவில் முழுநகரும் தோய்ந்திருந்தது வலிக்காத கால்களுடன் நகரத்தில் திரிகையில் ஒரு கையில் அம்மாவும் மறுகையில் அப்பாவும் இருந்தனர் யாருமற்ற நகரில் ஊன்றுகோல்களை அவன் பிடித்திருந்தான் கால்களற்ற சிறுவர்கள் தவழ்ந்தலையும் கனவு நகரில் விளையாடும் குழந்தைகளில்லை குழந்தைகளின் பூங்காவில் யுத்தக் கல் நிறுத்தப்பட்டிருந்தது கால்கள் முதல் எல்லாவற்றையும் இழந்த குழந்தைகளுக்கு தோல்வியை நினைவுப…
-
- 2 replies
- 581 views
-
-
சயனைட் குப்பி...... கவிதை...... எங்கள் கோவில்களில் தெய்வமாய் வணங்குதற்கு தாராள தகுதிபெற்ற தனியொரு ஆயுதம் நீர்..... எதிரியிடம் பிடிபட்டு சிதைவழிந்து சாகாமல் கெளரவமாய் மரணத்தை வளங்கும் கொடை வள்ளல்..... காற்றாக உள் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் மூச்சை நிறுத்திவிடும் உன்னதப் படைப்பு நீங்கள்.... குட்டி எமன்களாக - வீரர் கழுத்திலே தொங்கிடுவீர் பாசத்தின் கயிற்றினாலே மரணத்தை மறுக்காமல் தந்திடுவீர்.... வீரர்களின் மனத்திடத்தை உரைத்து நிற்கும் உன்னதமாய் அன்று முதல் இன்று வரை ஆட்சி செய்யும் செங்கோல் நீர்..... உன் தொழில் அழித்தல் மட்டுமல்ல ஆக்கும் கடமை உண்டு இரசாயனவியல் துறையில் உனக்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்... பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் ... படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்... அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் .... அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் .... பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் .... மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் ..... பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் ... முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் .... வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதென…
-
- 0 replies
- 616 views
-
-
நீ என்னை நேசித்த போது நான் அறிந்து கொள்ளாதது ஒன்று இன்று நீ என் கூட இல்லாத போது புரிகின்றது ...நீ என்னக்குள் உயிராய் இருந்தது !!!! பார்த்த முகம் தனில் உன் கண் என்னை விட்டு பிரிந்தாலும் பழகிய என் இதய நெஞ்சை விட்டு நீ பிரிய வில்லை !!!! உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன் ..உன் சின்ன சின்ன கோபம் என்னை எளிமை ஆக்கின என் வாழ்வில் சிறு அர்த்தமுடன் .. இன்று நான் அதே நிழல்களுடன் !!!! உலகத்தின் கண்களில் உன் உருவங்கள் மறைந்தாலும் எனில் ஒன்றான உன் உருவம் மறையாது..!!!! …
-
- 1 reply
- 514 views
-
-
வன்னிமண்ணே வன்னிமண்ணே வானைப்பிழக்கும் உன்குரல் வந்து என்னை வாட்டுகிறது தன்னிச்சையாய் போர் தொடுத்து தருணம் பார்த்து உன்னுயிர் பறிக்க தென்னாசியச்சிங்களங்கள் தோளோடு தோள் சேர்ந்து செறிந்து நிற்கின்றனவாம் உலகத்தமிழன் உறங்காமல் எப்போதும் உனக்காக குரல் கொடுத்தும்- சிங்களவன் அடங்காமல் நிற்கிறானாம் ஆணவத்துடன் குடிக்க நீருமில்லை குழந்தைக்குப்பாலுமில்லை பசிக்குப்பஞ்சமில்லை படுக்க நிழலுமில்லை-அதை கடிந்து கேட்க யாருமில்லை மருந்துப்பொருளுமில்லை மயக்க ஊசியில்லை மரணத்தை தடுக்கவும் யாருமில்லை வணங்காமண் வருகிறான் உனக்காக இணங்காமல் அழிக்கலாம் உந்தச்சிங்களங்கள் கணம் போகும் போதும் காத்திரு- உன்னை பிணம் தின்னும் பேய்கள் சூழ்ந்திருக்கின்றனவாம் …
-
- 3 replies
- 980 views
-
-
மழைபோல் வந்த குண்டுகளால் மண்ணோடு மண்ணாக மாண்டுபோன மக்களைத்தான் மறக்க முடியுமா! மானம் தான் வாழ்வில் மகத்தானெதென்று மண்ணுக்காக மாண்டுபோன மாவீரர்களை மறக்க முடியுமா! முள்ளீவாய்க்கலில்,முழுவதும் தொலைத்துவிட்டு வட்டுவாய்க்கால் பாலத்தால் வானரக் கூட்டத்தின் வாய்க்குள் நுழைந்ததை மறக்க முடியுமா! தண்ணீர்த் தாகத்தால் தண்ணீர் கேட்டபோது தண்ணீர் குழாயினால் நீரைப் பீச்சிஅடித்ததை மறக்க முடியுமா! தலையால் வடிந்த தண்ணீரை நாக்கால் நனைத்து தாகம் தீர்த்ததைத்தான் மறக்க முடியுமா! நீர்த் தாகம் தீர்ந்தது அன்று இன்னும் தீரவில்லை நாம்கேட்ட சுதந்திர தாகம்.
-
- 3 replies
- 818 views
-
-
ஒற்றை வார்த்தை வேலை முடித்து மாலை வேளையில் சாலை நெரிசலில் சிக்கித் தவித்து விரையும் வண்டியில் வீடு விரைந்து இருட்டும் பொழுதிலே கட்டியணைத்து நெஞ்சில் புதைத்து முத்தம் கொடுத்து ஆரத் தழுவி உச்சி மோர்ந்து உள்ளம் குளிர என் செல்லக் குழந்தை சொல்லி அழைக்கும் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை களைப்பும் அமுங்கிப் போகும்
-
- 0 replies
- 596 views
-
-
தோரணங்கள் இல்லை மஞ்சள் சிகப்பு நீலக்கொடிகள் இல்லை எழுச்சி கீதங்களும் இல்லை இது கார்த்திகைதனா நாங்களும் தமிழர்கள் தானா.. ஒடுங்கிப்போகிறது சர்வமும், சவங்களா நாம். இத்தனை திங்களாய் என்ன செய்தோம். களையிழந்து கொண்ட நிலைதொலைத்து வாடிக்கிடக்கிறாள் ஈழநங்கை. மரகதமாமணிகள் உறங்குமிடமெங்கும் பேரிருள் மேவி கிடக்கிறது. காந்தள் சூடி ஒளிகொண்டு நிற்கும் காலமல்லவா இது. நினைவேந்தலில் உருகியழும் நேரமல்லவா இது. தீக்கடைக்கோல்களை மறந்துவிட்டு எவரெவர் கால்களில் விழுந்தோம். ஒப்பாரி வைத்தோம் எவராவது பார்த்தார்களா ? வாருங்கள் சாம்பல் அகற்றித் தீமூட்டுவோம். வேர்களில் இருந்து மீண்டும் தழைப்போம். விண்நிகர்த்த மேனியர் விதைத்த நிலத்தில் புல் முளைத்தாலும் புலியாகுமென்று நடுகல் உடை…
-
- 4 replies
- 795 views
-
-
மாதந்தை வேலுப் பிள்ளை மரணித்தார் என்றதுமே வேதனை தாங்கவில்லை வெம்பியழ இடமுமில்லை சோதனைகள் மத்தியிலே சோர்ந்தவர் மடிந்தாரோ பாதகர்கள் கொடுமையினால் புனிதரவர் இறந்தாரோ சாதனைகள் புரிந்தவொரு தமிழ்த்தலைவன் கருகொடுத்து மாதரசன் மணியாட்சி மகிழவொரு காலத்தே அதனழகைப் பார்க்காமல் உயிர்விடுத்தல் தகுமாமோ? சீதாவின் நிலையுறுத்தி சீரன்னை பார்வதியும் சேதியொன்று மறியாது சித்தங்கலங்கி நிற்க பேதையென வாடியங்கே புலம்புவது சரிதானோ? ஆதரிக்குந் தமிழரணி அணியணியாச் சிதறுதற்கு போதனைக்கு ஒருபெரியோன் இல்லாத குறையன்றோ வேதமொழி தாயகமாய் கொண்டவரால் நீதியங்கே அணிவகுத்த காலத்தை அழித்தங்கே அரக்கருடன் தாயகத்துக் கனவுகளை தகர்த்தெறியும் ஆட்சிவெறி தமிழ்மானம்…
-
- 1 reply
- 717 views
-
-
-
- 7 replies
- 1.2k views
-
-
அம்மாவுக்காய் சில வரிகள் ----------------------------------- அம்மா, சும்மா எல்லோரும் காணும் கடவுள், என் அம்மா, மனித உருவில் நான் கண்ட தெய்வம், என்னை சுமந்தபோது-அவள் கருவறை நிறைந்திருந்தது, வறுமையால்-அவள் வயிறுமட்டும் வெறுமை, ஒற்றை வயிற்ரை நிரப்ப முடியாதவள், பெற்ற என் வயிற்ரை போராடினாள், பற்றைக்குள் செத்த மரங்களின் குச்சிகளை-தன் வலிமைக்கேட்ப ஒடித்துக்கொண்டு உச்சி வெய்யிலில்-அவள் பாதணியில்லா பாதங்களை பதித்து வந்து-என் பசி போக்கினாள், சில நேரம்-அவள் விற்காத விறகுகளை விலையேதும் பேசாமல் அரைப்படி அரிசிக்காய் போட்டுவிட்டு, அறைவயிரேனும் எனக்கு நிரப்பி விட்டால். நிரந்தரமாய் தன் வயிற்ரை காயவிட்டு. அம்மாவின் கண்…
-
- 0 replies
- 444 views
-
-
வா..வா!! ----------------------- கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே 2005 போய்வா தோழா! சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை கொன்று தொலைத்தாய்! என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி? இருந்தாலும் போய்வா! 2006 ஏ வா வா ! வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா? வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை.. பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா? கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்! வாய் மூடிபோன பீரங்கி வாய்களை ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்! அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும் எரித்திடாதே.. அணைத்திடாதே! தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-…
-
- 15 replies
- 2.9k views
-
-
உன்னுடைய முத்தங்கள் என் முகத்தில் கறுப்பாக உன் ஒளியில் நானும் என் நிழலில் நீயும் என் மூச்சுக்காற்று-உனை அணைக்கத்தூண்டியது கண்களின் காமத்துக்கு நீயும் ஒளியானாய்-அன்று என் ஆற்றல்களுக்கு தீணி போட்டாய் குப்பிவிளக்கே நன்றியடி.....
-
- 7 replies
- 1.5k views
-
-
இறுதியாய் ஒரு யுத்தம்... இறுதியாய் ஒரு யுத்தம் இனமானம் காக்க ஈனர்களை விரட்ட இழந்தவை யாவும் மீட்ட இனிவரும் பிள்ளைக்கு சுதந்திரத்தின் சுகம் காட்ட இறுதியாய் ஒரு யுத்தம். அடிமைகளாய் , அகதிகளாய் அவமான வாழ்வு போதும் ஏதிலியாய் எங்கேயோ அழுகிச் சாகும் நிலை போதும் அடியோடு வீழ்ந்தாலும் அன்னை பூமிக்கே, உரமாகும் மரணமேற்போம்... மாக்களுக்கு மனமஞ்சி மறைந்தொளியும் மானக்கேடு மண்ணோடு மண்ணாக்கி ஈழன்னை புகழ் தாங்கி புலிக்கொடியால் புயல் கிளப்பி புறப்படுவோம் பெரும் படையாய்.. நாய்கள் தான் வாழும் நரிகளுக்கு பயந்தொதுங்கி நாடாண்ட குடிகள் நாம் நடுக்கிடுவோம்.. படை நடத்தி. கோடிப்பேர் வரட்டுமே !! கூலிக்கு மாரடிக்கும் கூர்…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஐம்பதாயிரம் கோடி ஆன்மீக காசு பார்த்தவருக்கு கேக்கு வெட்டினம், ஐம்பது இலட்சம் மக்களுக்காக காடு பார்த்தவருக்கு திவசம் கேக்கினம். பெறாமகனுக்காக கோடி சொத்து சேர்த்தவருக்கு கேக்கு வெட்டினம், தனது மகனை எதிரியை வீழ்த்த அனுப்பியவருக்கு திவசம் கேக்கினம். ஸ்ரீ லங்கா தலைமைக்கு தங்க சங்கிலி இட்டவருக்கு கேக்கு வெட்டினம், சிங்கள அடிமை சங்கிலியை உலகிற்கு உடைத்தவருக்கு திவசம் கேக்கினம். நாமவரி அணிந்து மக்களிடம் தியானவரி கறந்தவருக்கு கேக்கு வெட்டினம், புலிவரி அணிந்து மக்களின் மயானவிதியை தடுத்தவருக்கு திவசம் கேக்கினம். இறைவனை காட்டுகிறேன் என்ற வழிபோக்கருக்கு கேக்கு வெட்டினம், நாற்பதாயிரம் தமிழ் சாமிகளுக்கு வழிகாட்டியவனுக்கு திவசம் கேக்கினம். வெறும் கை…
-
- 33 replies
- 4.2k views
-