Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கண்ணீரால் முடியும் என் கவிதைகள்... --------------------- காதல் வெளியில் தூக்கம் தொலைத்த இலையுதிர்கால இரவொன்று ஒளிர்கின்றது... இதயத்தில் இருக்கும் பிரிவுத்துயர் தணல்கின்ற எரிமலைகள் எரித்துவிடுகின்றன ஒளிர்கின்ற இரவை.. அறையெங்கும் நிரம்பிக்கிடக்கும் விளக்கொளியின் நடுவே கண்களுக்கு தெரியாமல் குறுக்கும் மறுக்குமாய் அலைகின்றன நினைவுகள்... பாறையெனக் கிடந்த உன் பொழுதுகளின் மீது பக்குவமாய் நான் வரைந்த காதல் ஓவியத்தை நீ கிழித்தெறிந்த போது சிதறியவைகளாக இருக்கலாம்.. புன்னகை எழுதிய முகத்தை கண்ணீர் மூடிமுடிக்கும் முன் நினைவுச்சிதறல்கள் சுழன்றெழும் வீச்சில் சிறைப்பிடிக்க வேண்டும் கவிதைகளில்... பாதைகள் எங்கும் காதலுடன் பரவிக்கிடந்த பூக்களை வாரி அணைக்க சேர்த்துவைத்த அன்ப…

  2. கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்ட சிசு. உயிராய் முளைத்த அவர் காதலில்... பூவாய் மலர்ந்தேன் செடியாகும் கனவோடு..! கருவறை தந்தவள் கருணையே இன்றி பாதியில் பறித்தாளே சாய்த்தாளே என்னுயிர்.! கண்ணீர் கூட காணிக்கை இல்லை உரிமைகள் கூட எழுத்தில் இல்லை கருக்கலைப்பென்று வாழ்வை அழிப்பவரே ஒரு கணம்... எனக்காய் அழுவீரோ..??! இல்லை தொலைந்தது தரித்திரம் சரித்திரம் படைபீரோ..??! நீரும் ஓர் நாள் கருவோடு இருந்தீர் மறந்தீரே துணிந்தீரே பாதகரே..! கண நேர சுகத்துக்காய் ஏனென்னை பலியிட்டீர்... சிதைக்கின்றீர் தளிருடலை..! பிறந்ததும் கொஞ்சும் உறவு பிறக்க முன் பாடையில் போவது பாவமில்லையோ..??! தளைக்க மானுடம்..!!! கரு…

  3. கண்ணீரிலே எம் மக்கள்..... கூலிப்படை தாடி இப்போ செய்யுது கொலை ஓடி.... மக்கள் குரலை தேடி இப்போ அழிக்குது பார் ஓடி.... கூட்டமைப்பில் இழந்தோம் இன்று நாங்கள் ஒரு சோடி.... எங்கள் மக்கள் இவனையிழந்து இன்று இப்போ வாடி.... எம் தமிழர் இன்னல்களை எடுத்து சொன்னான் ஓடி.... ஜநா முன்னால் செய்தான் நேற்று ஆர்ப்பாட்டம் தான் கூடி.... அட.. அவனை கொன்று போட்டான் இந்த....தாடி வைச்ச கேடி... அண்டை நாடு தேடி ஓடி சொன்னான் எங்கள் அவலம் கூடி.... அவனை இழந்து எங்கள் மக்கள் கண்ணீரிலே இப்போ வாடி....!!! வன்னி மைந்தன்- :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:…

  4. கருக்கொள்ளும் போதே கல்லறைத் தெய்வங்களாகக் கடவது என காலன் சொன்னானோ என்னவோ கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை காசுக்காக விற்றுவிட்டு உங்கள் கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும் கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம் இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிறு கடுகளவேனும் கருணை கொண்டு கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல் கல்லறை தெய்வங்களையும் சிறு கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம் களியாட்டங்கள் தொடர்வதற்காய் விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும் விட்டில்கள் போல உங்கள் வீரம் விளைந்…

  5. கண்ணீரில் கரையும் தலையணைகள் கண்ணீரில் கரையும் தலையணைகள் கணத்திற்குக்கணம் காந்தவலையுளே பதிந்து நீந்தும் கணக்கிலா இணையத் தகவல் மீன்களாய் எல்லைகாணா மனவெளி முழுதும் அழுந்தப் பதிந்த உன் குரலொலிகள் சொர்க்கமே! உனை பாலிக்க வேண்டிய பொழுதுகளில் ஏனெனக்கு இன்னுமோர் பணியும் அதற்கான பயில்வுகளும்? ஊட்டமுடியாத தொலைதூரமதில் ஒரு நெடுநாட்துயர்போலே இறுகிக்கிடக்குதென் கலங்களுள்ளே உனக்கேயான திருவமுது சொந்தங்களில்கூட எந்தப் பெண்மையுமே எனக்கீடாய் உனக்கில்லையென்றே உணர்ந்திருந்துங்கூட நாட்களாய்………! வாரங்களாய்………! மாதங்களாய்………! விலகியிருக்கின்றேனே இனிக்குமுந்தன் இதழ்முத்தமிழந்து. கற்பூரதீபமே! வேண்டுமானால் இக்கலாசாலை விடுதிக் கட்டில் தலையணை…

  6. http://vaseeharan.blogspot.com/2007/08/blog-post.html பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம் பிணவாடைக் கடலே கேட்கிறதா...? ஓலம் கேட்கிறதா...? சரணம் 2 அன்னையர் ஆடவர் பால் மணப் பிஞ்சுகளே சீறிவந்த பேரலையே கொண்டு சென்றா…

  7. 26.12.2004 அன்று ஆழிப்பேரலையில் நாம் இழந்த எம் உறவுகளுக்காகவும், உலகெங்கிலும் இந்தப் பூமி இழந்த அற்புத மனிதர்களுக்காகவும் இப் பாடல் காணிக்கை: பாடல்: http://www.imeem.com/vaseeharan/music/kyEb..._kanneeril_kul/ பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்…

  8. கண்ணீரும் குருதியுமாய் ஈழம் ! செந்நீரின் மையெடுத்து நம் கண்ணீரின் கதையெழுதி புண்ணாகிப் போன நெஞ்சின் வலிகொண்டு கவிதை வரைந்தேன் அந்நாளில் நானும் குழந்தையாய் அம்மண்ணில் தவழ்ந்திருந்த ஆனந்தமான பொழுதுகள் அவை போன இடமெங்கே ? என் சொந்தங்கள் தூக்கமின்றி ஏக்கத்தில் வாழ்ந்திருக்கும் எண்ணத்தின் சுமை கொண்டு என் விழிகள் நிறையுதம்மா எரிகின்றது என் ஈழத் தேசமம்மா எண்ணை வார்க்க ஆயிரம் பேர் எவருமில்லை தீயணைக்க, அழுவதின்றி என் செய்வோம் ஆற்றாமையால் நாம் தவிப்போம். தவிக்கின்றார் தம்பி தங்கையர் தமிழர் என்னும் ஒர் காரணத்தால் தமைத் தாமே இழக்கின்றார் தமிழன்னை பாராளோ ? பதிலொன்று கூறாளோ ? சேறும் சகதியுமாய் நன்னிலங்கள் சீரழிந்து போவதுண்டு.…

  9. நரம்பு நாடிகள் துடித்து இரத்தம் கசிந்து உறவுகளின் உயிர் பிரிந்தாலும் தளர்ந்து விடதே தமிழா... வருவான் புலி வீரன் பொங்கி எழுவான் உமை காக்க.. உம்மை கொன்ற சிங்கள காடையர்களை கொன்று குவிக்க... கண்ணீரை சிந்தாதே தமிழா உன் கண்ணில் மகிழ்ச்சியை உரு வாக்க புலி வீரன் இருப்பன் உன்னுடன் உன் இறுதி முடிவிலும் நம்பிக்கையை இழந்து விடாதே தமிழா.. உம் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற புலி வீரன் இருப்பான் தமிழிழம் ஒரு நாள் மலரும் சோகம் கொள்ளாதே தமிழா...

  10. கண்ணீரை வரவழைக்கும் வீராவின் கவிதை

    • 0 replies
    • 1.1k views
  11. Started by theeya,

    ஊனை உருக்கி உடலை வருத்தி தினம் சோற்றுக்கு வழியின்றி சொந்த மண்ணைப் பிரிந்து அகதி முகாமில் இடர்படும் தமிழன் உண்ட சோற்றில் உப்பில்லை கண்ணீர் துளி விழுந்து கசக்கிறது சோறு

    • 2 replies
    • 785 views
  12. கண்ணீர் அஞ்சலி.....( எண்ணமதில் கற்பனைகள் எத்தனையோ தான் சுமந்து... பள்ளியறை மீதினிலே வெண் புறவாய் பறந்தவளை.... வானேறி வந்து ஏனோ மா பாவிகளை ஏன் வதைத்தீர்;....??? என் செய்தாள் என்றென்னி அவள் உடலை நீர் கிழித்தீர்....??? உணர்விழந்து உடல் நலிந்து உணர்வற்று கிடைக்கையிலே.... உயிர்காக்க வேண்டியவள் இடமாறி வருகையிலே... இரக்கம் இன்றி ஏன் வதை;து ஏனோ பகையே நீ கொன்றாய்....??? உயிர் குடிக்க அலைகின்ற இன வெறி மகிந்தாவே ஏனோ அவளை நீ கொன்றாய்....??? என் தீங்கு அவள் இழைத்தாள்....??? தீண்டாமை கிடந்தவளை திருகியே ஏன் கொன்றாய்....??? வலியோடு வடு இணைத்து துடி துடி…

    • 5 replies
    • 1.2k views
  13. மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும் விடுதலை பெருந்தீயில் பேரியக்கமாய் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் சுடர் விட்டு எரிந்த தியாக விளக்குகளே பற்றி எரியும் பெரு நெருப்பை நெஞ்சின் அறைகளில் தாங்கி உயிரையே எண்ணையாக கொடுத்த பெரு மக்களே உங்கள் காலடித்தடங்களை எமக்குள் இறக்கி கைகூப்பி மண்டியிட்டு தொழுது வணங்குகின்றோம் வீர வணக்கங்கள் !! : யாழ் இணையம் மே, 2012

  14. மானவாழ்வு ஒன்று பயணம் முடித்ததோ? தமிழ்வீரம் தந்த உயிர்ப்பூவின் வாழ்வை சதிகாரக் கொலை தின்றதோ? தமிழன் துன்பங்களுக்கு கரங்கொடுக்கும் ஜனனாயகக் கரங்களுக்கே மரணம் பரிசுகொடுக்கும் சீர்கெட்ட ஜனனாயகமே! மரணத்தின் பொறியில் உன்வாழ்வை வைத்து, இன-கண்ணீரின்நீதிக்கு சேவை செய்த உன்வான்னாட்களின் துணிச்சல்கள்தான் எதிரிக்கு வயித்தெரிச்சல்களோ? உன்பிரிவைத் சுமந்த செய்தி எம் நெஞ்சங்களுக்கு இடியைத்தந்தது. தேசத்தின் விடியலுக்காய் விலையான உன்வாழ்வை எம்கண்ணீர் சுமக்கின்றது கனவுகளோடு. இரவிராஜ் அண்ணாவின் பிரிவுத்துயரில் வருந்தும் யாழ்கள உறவு வாயயும், கையையும் கட்டிபோட்ட ஒரு இனத்தை மரணம் சூறையாடும்போது. மௌனம் கலையாமல் உன் மனிதாபிமானம் நோன்பிருக்கின்றது. சிங்க…

  15. பேய்களுக்குண்டு மனிதாபிமானம் அடிக்கும் கொல்லாது நாய்களுக்குண்டு மனிதாபிமானம் கடிக்கும் கொல்லாது :?: மனிதர்களாம் இவர்கள் :?: மனிதர்களுக்கு உதவ சென்றீர் மணி பொழுதில் உருகி போனீர் பூக்கள்,மொட்டுகள்,காய்,கனி புலிகளெனின், புலிசேனை இவர்களுக்கு :?: பூக்கள் அறுபத்தொன்றும் கருகின புலிகளேன முத்திரை இட்டனர் புண்ணகைத்து சர்வதேசம் அறிக்கையும் விட்டனர் :cry: அரச பயங்கரவாதம் அங்கீகரித்த பயங்கரவாதம் என்றனர் தலைநகரம் விடயம் பெரிதானது முல்லைநகர் விடயம் சிறிதானது :shock: களத்தில் இருக்க பயந்து புலத்திற்கு ஒடி வந்து உங்களுக்காக கண்ணீர் விட என் மணம் கூசுகிறது. :x நாலுபேர் கதைப்பார் நாற்பது பேர் கூடுவோம் சில கண்ணீர் த…

    • 9 replies
    • 1.6k views
  16. கண்ணீர் நொடிகள் - என்.சுரேஷ். சென்னை கல்யாணி கவரிங் கல்யாணி கவரிங் என்ற விளம்பரம் கேட்டு கவரிங் நகை வாங்கச் செல்லும் ஏழை கல்யாணி நிஜ நகைகளுக்காக ஏங்கிக் கலங்கும் நொடிகள்! விதவையாகிப்போன அந்த பூக்காரி அக்காவின் நினைவுகளும் கனவுகளும் மனதை குத்தும் நொடிகள்! காதலனும் காதலியும் பிரிந்த பின் சந்திக்க அவர்தம் கணவனுக்கும் மனைவிக்கும் முன் ஒருவருக்கொருவர் அறியாதவர்கள் போல் நடித்துத் துடித்த தவிப்பின் நொடிகள்! சொந்த இனத்தின் அழிவக் கண்டும் சட்டத்தால் வாய்ப்பூட்டிடப்பட்டும் அமைதியின் வேடத்தில் தவமிருக்கும் வீரத்தின் எழுச்சி எரிமலை கண்ணீரால் துடிக்கும் நொடிகள்! பட்டியலிட்டால் அடங்கா எத்தனை எத்தனை கண்ணீர…

    • 4 replies
    • 1.1k views
  17. கண்ணீர் யுகத்தின் தாய்! குழந்தைகள் அலைய பூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள் பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியது தாய்மாருக்காய் அழுதழுது கண்ணீர் விடும் குழந்தைகள் வாழும் யுகத்தில் கனத்தன வீடுகள் குழந்தைகளுக்காய் அழுதழுது கண்ணீர் விடும் தாய்மார்கள் வாழும் யுகத்தில் கனமடைகிறது பூமி தாய் கட்டிய சுவர்களில் கனவின் காட்சிகள் நெளிந்தன நிலம் மெழுகும் தாயின் விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள் தொலை தூரத்தில் தவித்தன அடுப்பில் பொங்கியது துயரம் இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க இலட்சம் தாய்மார் கு…

  18. குழந்தைகள் அலையபூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள்பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியதுதாய்மாருக்காய் அழுதழுது கண்ணீர் விடும்குழந்தைகள் வாழும் யுகத்தில் கனத்தன வீடுகள்குழந்தைகளுக்காய் அழுதழுது கண்ணீர் விடும் தாய்மார்கள் வாழும் யுகத்தில் கனமடைகிறது பூமி தாய் கட்டிய சுவர்களில் கனவின் காட்சிகள் நெளிந்தன நிலம் மெழுகும் தாயின் விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள் தொலை தூரத்தில் தவித்தன அடுப்பில் பொங்கியது துயரம் இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க இலட்சம் தாய்மார் குழந்தைகளை இழந்தனர் தாய்மார்கள் குழந்தைகளாகி அழும் யுகத்தை சபித்தது யார்? ஏங்கும் விழிகளை துடிக்கும் வார்த்தைகளை கண்ணீர் படிந்த முக…

    • 0 replies
    • 735 views
  19. என் உற்ற; என் துயரங்களில் பங்குகொண்ட, எனக்கு பிரச்சனை என்றால் தானும் கலங்கும் என் இனிய நண்பனின் எம் நிலமை பற்றிய பாடல் பாடல் ""யாருக்கும் அடி பணியாது....ஈழமே எம் நாடு"...

  20. கண்ணீர்ப் பொங்கலை….. ------------------------------------------- கண்ணீர்ப் பொங்கலுமாய் செந்நீர்ப் பொங்கலுமாய் எம் தாயக தேசமன்றோ ! நகரும் மக்களை நரபலி எடுக்கின்றது சிங்களப் படைகளன்றோ ! நாங்கள் சர்க்கரை போட்ட பொங்கலைப் பொங்குவதா எம் தேசம் காத்திடப் பொங்கி எழுவதா ! பொங்கி எழுந்து நாம் எம் தேச மக்களின் துயரினை துடைப்போமா இல்லை இன்னும் கதைகள் பேசியே காலத்தை கழிப்போமா ! எங்களின் உறவுகள் ஏதிலியாகியே தங்கள் வாழ்வினை தொலைத்து விட்டாரே ! தங்கள் வாழ்வைத் தொலைத்தது ஏனோ தாயகம் மீட்டெழும் முடிவினில் தானே ! கண்ணீர்ப் பொங்கலும் செந்நீர்ப் பொங்கலும் கடக்கும் பலமென்றும் உலகத் தமிழர் கைகளில் தானே உலகெங்கும் எழுவோம் பொங்கி எழ…

    • 0 replies
    • 816 views
  21. கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி [size=3] என் இதயத்தை ஆக்கிரமித்ததால் கண்களால் கைது செய்ததால் நினைவில் சித்திரவதை செய்வதால் பெண்ணே நீயும் கொடும் படை போலடி உடலெங்கும் பெரும் கிளர்ச்சி செய்த்தால் உணர்விலே கொடும் தீப்பற்ற வைத்ததால் இதயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதால் கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி எட்டா விலையில் இருப்பதால் தடவலால் ஊக்கம் பெறுவதால் தகவல் பரிமாற்றம் செய்வதால் பலான பெண்ணே நீயும் ஐ-பாட் போலடி வன்பொருளும் மென்பொருளுமிருப்பதால் என்பொருள் முடிவடையச் செய்வதால் என் நேரத்தை என்றும் இழுத்தடிப்பதால் பெண்ணே நீயும் கணனி போலடி[/size][size=3] Posted by வேல் தர்மா at 02:18 Thanks: http://velthar…

    • 1 reply
    • 567 views
  22. கண்ணே!... வருகின்றேன். உறங்காத கண்மணிக்கு உயிர் நண்பன் வரையும் மடல் கூதலுக்குள் ஒடுங்கும் குருவிக் கூட்டம்போல - அன்று சுய தேவைகளுக்குள் ஒடுங்கிப்போனது என் சுதந்திரவேட்கை காதலுக்குச் சாவு மணி அடித்துவிட்ட பெண்ணே! சாதலுக்கு அழைப்புமணி கட்டிவிட்டாய் கண்ணே! உறவுகள் தேடும் உணர்வுகளை ஒதுக்கிவிட்டு உரிமைப்போருக்கு உன்னையே கொடுத்தவளே! உறவுகளை வாழ வைக்க உயிர்காத்து வந்தவன்நான். என்னுள்ளம் இங்கு இன்று உறங்கவில்லைக் கண்மணியே! களங்களில் சதிராடிக் காலிழந்து விட்டாயாம், இருப்பினும் கரும்புலிக் களத்திற்குக் காலாகி நிற்கிறாயாம்! செவிப்புலன் மோதும் சேதிகள் கேட்டுத் தவிப்புகள் என்னிடம் தளம் சமைத்துக் கொண்டன. உள்ளத்தில் எழுந்த அலையில் …

  23. Started by Jamuna,

    இன்றைய விடியல் என் வாழ்வு என்று நான் அறியவில்லை! மனம் என்னை விட்டு போகுமென கணப்பொழுதும் நினைக்கவில்லை! கண்ணில் விழுந்த தூசு போல் என் கண்மணியினுள் விழுந்தாள்! விழுந்த நீ கண்ணிற்கு இதமானதால் எடுக்க நான் விரும்பவில்லை!! கண்மணிக்குள் விழுந்தவள் கண்மணி ஆவாளா என் கரும்விழிகளை நீ கேட்கையில் என் கண்மணிபட்ட பாட்டை கண்ணே உன் விழிகள் அறியுமா! இருவரின் கண்கள் பேசுகையில் உதடுகள் பேச மறுத்தன உதடுகள் பேச எத்தணித்த போது கண்களிள் ஒரு ஏக்கம்! கண்களின் ஏக்கம் காதலின் தாகம்! கண்மணியின் மெளனம் காதலின் நெருக்கம் விழிகளின் இருந்து வரும் கண்ணீர் - நம் கண்கள் மோதியதால் கிடைத்த காதல்சின்னம்! கண்கள் கூடியதால் இமை மூட மறுக்கின்றன இமைகள் மூ…

    • 33 replies
    • 5k views
  24. கண்மணி சுகமா.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... விதி வரைந்த இடைவெளி விடியல்தேடும் நினைவடி... நிலவில்லாத நீலவானம்.. அழகில்லையே... நீயில்லாமல் இங்கு ஏதும் சுகமில்லையே... என்னுயிரை அங்கு வைத்து உன்னுயிரை இங்கு வைத்து இறைவன் நடத்தும் கூத்து இளமை கருகும் காத்து.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... தொட்டுஇட்ட முதல்முத்தம்.. நெஞ்சை தொடும் இளரத்தம்.. உன் கடிதம் விழிநீரில் கரைகிறதே.. என்னுயிரை எண்ணி உயிர் கரைகிறதே.. ஆறுகடல் தாண்டி ஒன்று ஆசைகொண்ட ஜோடி இன்று காதல் என்னும் காடு மாட்டிப் படும் பாடு கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் …

  25. கவிதை பிறந்த கதை : மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்) மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த மங்கை மலந்திருக்கின்றாள் மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என் மனங்கவர் இளமை உற்றவள் பால் தூது ஏகாயோ? மல்லிகை சூடி மனதில் என்னை நிறுத்தக் கூறாயோ? சந்தனத்தின் சாயல் எடுத்து வெண்மதியில் முகமெடுத்து ஆனந்தத்தின் சுளையெடுத்து அழகூற இலங்கும் மங்கையவள் என் அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும் காதல் கொண்ட ஏழை நெஞ்சம் பாவையவள் படுத்துறங்கும் மஞ்சமாக வேண்டும் காதல் கொண்டு அர்ச்சிக்க கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும் காளை எந்தன் நெஞ்சம்…

    • 9 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.