கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
காற்றின் சுழிகளில் திருகி வெற்றிட நிறையில் தோற்று நீரின் பாயத்தில் பயணிக்கும் உதிர்ந்த பழுப்பு நிறச்சருகின் புறப்பரப்பின் கீழே நிறப்பிரிகையடையும் சூரிய பிரவாகத்தின் ஒளிக் கீற்றில் மெல்லப் படரும் வைகறையின் நிறத்தில் நெளியும் மஞ்சள் நதியின் இரு கரைகளிலும் வானேகி வளர்ந்த தென்னைமரங்கள் கடந்து தொடுவா னளவு பச்சையம் விரித்துக் கிடந்த பூமியின் உழவு மாடுகளை விற்ற கோடை நாளொன்றில் அப்பாவின் முகத்தில் வழிந்த மூதாதையரின் கண்ணீரை கழுவிச் சென்ற மழையில் முதன் முதலாய் நனைய பிடிக்க வில்லை..... ~ராஜன் விசுவா 10.4.16
-
- 5 replies
- 1.6k views
-
-
மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்;து ஆண்டுகள் நான்காச்சு எந்தக் கொலையும் நடக்கவில்லை- என்ற சிங்கள அரசின் கதை தொடராச்சு எந்தக் கொலையும் செய்யவில்லை யெனில் எப்படி அவைகள் படமாச்சு மாவீரர் தூபிகளை மண்ணாக்கி மக்களை எப்படி அங்கே சிறைபிடித்தார் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் உண்மை நிலையை உணராரா சோற்றுக்குள்ளே பூசணிக்காயை மறைத்தவர் கதையும் இதுதானா பாலியல் கொடுமையால் பல பெண்கள் படுகொலைசெய்ததோ அதிக ஆண்கள் கொன்று குவித்த இளசுகளோ பெருங்கும்பல் குவியியல்குவியலாப் புதைத்ததோ எண்ணிலடங்கா குழவி குழந்தை மடந்தை மாணவி இளைஞன் இளைஞி கிழவன் கிழவி - என பாலகர் உட்பட படும்கிழம்வரை கொன்றே குவித்து கொடூரம் செய்தார் எந்நாளும் எம…
-
- 0 replies
- 1.6k views
-
-
உனைச் சந்திச்சு பிரியும் ஒவ்வொரு நாளும் நான் நானாக வந்து நீயாக மாறுவதும் உன்கூட நடந்து சென்ற பாதைகள் எங்கும் தனியாய் நடந்து பழகுவதுமாய் மாறிப்போனேன் நான் இதுதான் காதலா...... இல்ல இதைத்தான் காதல் எங்கிறார்களா எதுவும் புரியாதவளாய் உன் மார்போடு தினம் தூங்கும் மரத்தடியில் நாளைய உனக்காய் இன்றைய என்னை செலவழித்தபடி காத்திருக்கும் இவள்
-
- 6 replies
- 1.6k views
-
-
வீட்டுக்கொரு வீரன் விளையாட வரவேண்டும் ஏட்டுக்கொரு புலிகளாய் எழுந்த எம் கூட்டங்கள் நாட்டுக்காக என்றும் கொஞ்ச நாள் குறித்துகொள்ளட்டும் பாட்டுக்கொரு புலவர்கள் பாடிநின்ற தேசத்தை மீட்டெடுக்க வீரர்கள் விரைவாக வரவேண்டும் கிழக்குபக்க சிகரத்திலே சிங்கக்கொடி ஏறினாலும் வடக்குபக்க வீதியாலே வெற்றிசேதி வரவேண்டும் எனவே வீட்டுக்கொரு வீரன் விளையாட வரவேண்டும் கிளித்தட்டோ கிறிக்கற்றோ நாட்டுக்காக நாமும் விளையாட வரவேண்டும்
-
- 4 replies
- 1.6k views
-
-
சிங்கள அரசின் பொருளாதாரத்தை சிதைப்போம்_அவன்... சிரசுக்கு வைப்போம் ஆப்பு சிலேடையாய் இணையத்தில் மட்டும்... சிங்கம் போல சிலிர்ப்போம் சிந்திய ரத்தம் காயும்முன்னே... சிங்களவனுக்கு சீர் பல கொடுப்போம் நலன்புரிமுகாம் எனும் நரகத்தில்..... நம் உறவுகள் படும் துன்பத்திலும் நம்மில் சிலர் செய்யும் செயலை.. நான் எப்படிச் சொல்ல.........? நாற்பதாயிரம் ரூபா கொடுத்தால்... நாளைக்கே ஆளைக்காட்டுவனாம். இருபதாயிரம் கொடுத்தால்... இருசில நிமிடம் போனில் கதைக்கலாமாம் ஜந்து லட்சம் கொடுத்தால் வெளியே விடுவானாம்... காலைப் பிடிச்சுக் கெஞ்சிக்கதறினால் சாப்பாடு கொடுக்கலாமாம்.... விடுவோமா நாம்...? ஆடடிச்சு குழம்பு வச்சு... பூநகரி மொட்டைக்க…
-
- 11 replies
- 1.6k views
-
-
இங்கு இணைந்திருக்கும் பலரைப்போல நானும் தமிழீழ பாடல்கள் விரும்பி கேட்பேன்.. சில பாடல்கள் எழுதியும் வைப்பேன்.... சினிமா பாடல்வரிகள் தான் முழுதும் எழுதி நிறைய இணையத்தளங்கள் உள்ளன. இது போல் தமிழீழ பாடல்வரிகள் உள்ள எந்த இணையத்தளமும் யாருக்கும் தெரிந்தால் எனக்கும் அந்த இடத்தை காட்ட முடியுமா? நான் றொம்ப தேடிப் பார்த்தேன்...எனக்கு எங்கயும் கிட்டுது இல்லையே...
-
- 3 replies
- 1.6k views
-
-
மெல்ல மெல்லக் கசியும் உண்மைகளிலிருந்து நீண்ட பெருவெளிக் கனவு தற்கொலை செய்து கொள்கிறது..... முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து சொட்டுச் சொட்டாய் சேர்த்து வைத்தவையெல்லாம் இரத்தம் குளி(டி)த்துப் பெருத்து நாறிப் பிணங்களாய் மனித எலும்புக் கூடுகளாய் வெளிவருகிறது. நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய் விட்டுச் சென்ற வார்த்தைகளும் ஆள்மாறி ஆள்மாறி அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு துயர் வலியில் தடயமறிவிக்காமல் தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள். சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள் சாவின் நிணம்மாறாத் தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து.... யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால் அவர…
-
- 9 replies
- 1.6k views
-
-
புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் இவன் விழிகளில் தீப்பொறி பறக்கும்.. பார்க்கும் வழிகளில் தென்றல் நடக்கும் புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் ஏறென நடக்கிறான் பாரு-பிரபாகரன் இறங்கிப்போவது ஏது இரக்கம் இவனிடமிருக்கும்..எமை ஏளனம் செய்தால் கொதிக்கும்.. ஒழுக்கம் சொல்லித் தந்தான்.. உலகே வியந்து பார்க்க படைகள் பலவும் செய்தான்.. பகைகள் தொடைகள் ஆட கடலில் காவியம் படைக்கும் கரிகாலன் படைதான் நிலைக்கும்.. எங்கள் நெஞ்சைக் கொள்ளை கொண்ட ஏக தலைவனம்மா..அவனாயுள் கூட எந்தனாயுள் இன்றே தருவோமம்மா.. புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் வாழ்வைத் தமிழுக்குத்…
-
- 5 replies
- 1.6k views
-
-
கடவுளுக்கு...! மூடிக் கிடக்கின்ற சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விட்டால்..., மண்ணின் குரலுமக்குத் கேட்கக் கூடும்! கீழிறங்கி, புழுதி மண்ணின்மேல் நடந்து வந்தால், மானிடத்தின்-- எழுச்சிகளை வீழ்ச்சிகளை முற்று முழுதாக நீரறிதல் கூடும். --கூட, நீர்...வருவீரா? 26.7.68 வா எாிகின்ற-- குறுமெழுகு வாிசை ஒளி நிழலில், ஒப்பாாிக் குரல் கேட்டு இந்தப் *பெட்டிக்குள் நீயேன் கிடக்கின்றாய்? முகம் மூடும், துப்பட்டி நீக்கி-- எழுந்துவிடு!; என்கூட வந்துவிடு! *பெட்டி--சவப்பெட்டி 2.8.68 உறக்கம் சிலுவை எழுந்துநிற்கும் வெள்ளைக் கல்லறைகள் சூழ்ந்திருக்க, கால்மாட்டில் பட்டிப் பூமலர்ந்த *சிப்பிச் சிலுவை மேட்டின் கீழ்-- மண் கு…
-
- 3 replies
- 1.6k views
-
-
முத்துக்குமரன் எனும் மாவீரன்..... கவிதை அஞ்சலி.... தமிழ் நாட்டின் செல்வமே நம் முத்துக்குமரனே முத்தான உன் உயிர்தந்து நம் மூச்சையே நிறுத்திவிட்டாய்.... காலையில் செய்திகேட்டோம் கண்ணீரால் நம் உடல் நனைந்தோம் உன் உடலைக் கருக்கிய உன் உறுதி கண்டு மனதளவில் உருக்குலைந்தோம் ..... உயிர்பிரியும் நேரத்திலும் பிரபாகரன் என்றாய் பின்னர் உயிரையே போக்கிவிட்டு தமிழன் பிரபஞ்சதையே நீ வென்றாய்... முத்துக் குழிக்கும் ஊரிலே பிறந்தவனே...... தமிழன் மனங்களிலே முத்தாக உன் உயிர் தந்தவனே..... தமிழ் நாட்டிலே விதையாகி தமிழர் மனங்களிலே முளைத்து விட்டாய்...... உன் மூச்சு அடங்கமுதல் உன் கொள்கைகளை எரியவைத்தாய்.... …
-
- 4 replies
- 1.6k views
-
-
நினைவு இருக்கிறதா ? உனக்காக ஒருத்தி ,காத்திருந்தாள் , உனக்கு எழுதிய கடிதம் ,உன் அசட்டையினால் பாடசாலை அதிபரிடம் பிடிபட்டு ,அசம்ப்ளியியில் தலை கவிழ்ந்து நின்றது , பஸ் வண்டியால் இறங்கி நீ மழையில் நனைவாய் என்று குடையுடன் காத்திருந்தது , உன்னை ஒரு நாள் காணவிட்டால் தோழி மூலம் கடிதம் சேர்ப்பது . நீ பந்து விளையாடிய போது ,தோழியருடன் உனக்காக கர கோசம் செய்தது ,பாட சாலை இல்ல விளையாடில் ,உனக்காக நண்பிகளுடன் தோரணம் செய்து தந்தது. காலிலே காயம் பட்ட போது என் துப்பட்டாவில் ,கிழித்து தந்தது . ரசாயயான கூடத்தில் பதிவை தவற விட்டு ,மறுநாள் நீ தேடிய போது ,இரு நாள் தேட விட்டு ,மறு நாள் நான் தந்தது . ன் லேடி பைக் காற்று போனதும் ,அதை நான் உருட்ட கூடாதென்ற…
-
- 6 replies
- 1.6k views
-
-
வெறுமை சாலைகளிலும் மரங்களிலும் மனிதர்களிலும் இறங்குகிறது வெறுமையான இரவு. காத்திருப்பவை நாய்களின் குரைப்பும் சோற்றின் மௌனமும். ஏதொ மறந்து போய்விட்டது யாருடைய களைத்த முகமும் உன்னைத் தேடுவதில்லை. இழந்தது வசவுகளின் கசிந்த அன்பு. இன்று கால்களுக்குக் கீழ் எந்தத் தரையும் இல்லை என்னிடம் தரப்பட்டவை வார்த்தைகள் என் பின் இருப்பவை துகள்கள். கதியில் மறைந்தது சிரிப்பு ஏன் அழுகையாகக்கூட இருக்கலாம். இப்பொழுதுதான் இங்கு எங்கேயோ ஓய்ந்திருக்கவேண்டும் அந்தப்பாடல் கண்களில் ஒளிர்ந்து தன் புறாக்களை அசைத்து போகிறாள் ஒரு பெண் உச்சிவெயிலில் வேர்க்க விறுவிறுக்க வந்த நண்பன் நீல மேகங்களிடை மறைந்த ஒரு தேவதையைப் பார்த்திருக்கவேண்ட…
-
- 9 replies
- 1.6k views
-
-
உச்சியில் வட்டம் ஒன்று வரைந்து நடிவில்.. வடிவாய் ஓர் கோடிழுந்தேன். பின்.. ஆங்கே கோளங்கள் இரண்டு சரியாய் பொருத்தினேன். கோடும் வளைய வளையிகள் கொண்டு சரி செய்தேன். ஈர்ப்பு மையம் மாறிப் போக பிறை ஒன்று உச்சத்தில் வைத்தேன் சமநிலை குழம்ப முக்கோணம் ஒன்று கூடச் சேர்த்தேன்..! கோடுகள் சேர்ந்து ஓவியமாக.. உயிரற்று நின்றது. கணிதத்தில் வகையீடு தொகையீடு சமன்பாடுகள் பல போட்டு திரிகோண கணிதமும் கேத்திர கணிதமும் எல்லாம் கலந்து அட்சர கணிதத்தில் ஒருபடி.. இருபடி எல்லாம் தாண்டியும்.. பயனில்லை..! அலுப்புத்தட்ட கட்டிலில் சாய்ந்தேன் நித்திரை வெளியில் கோடுகளின் எண்ணத்தில் உயிர் பெற்றது ஓவியம். வார்த்தைகள் தேடினேன் முந்திக் கொண்டு.. ஓவியம் பேசியது "உன்னவள…
-
- 21 replies
- 1.6k views
-
-
சுமக்கும் சிலுவையுடன் -------------------- அந்திப் பொழுதும் வெட்கும் வேளையில் அவளுக்காக காத்திருக்கின்றேன் கரைகளை நக்கும் நுரை கால்களையும் கழுவிப் போகின்றது கடலிலும் பேதமில்லை கரையிலும் பேதமில்லை- அது சுமக்கும் மனிதரில் பேதமில்லை மனங்களில் பேதம் முதுகில் சுமப்பவன் முக்காடு போடுபவன் முக்குறி இடுபவன் அதற்கும் மேலால் மண்ணில் உழைப்பவன் மரத்தில் ஏறுபவன் நித்திலம் கொழிப்பவன் நின் மலசலம் எடுப்பவன் எத்தனை பேதமை இருட்டிப் போன பின்னும் அவள் வரவில்லை... சேதி வந்தது 'அவள் வர மாட்டாள்' மண்ணின் மேலால் நீர் இருக்கலாம் கடல் மண்னின் கீழால் நீர் இருக்கலாம் கிணறு மண்ணும் நீரும் ஒட்ட முடி…
-
- 7 replies
- 1.6k views
-
-
போய்விடு அம்மா வ.ஐ.ச.ஜெயபாலன் காலம் கடத்தும் விருந்தாளியாய் நடு வீட்டில் நள்ளிரவுச் சூரியன் குந்தியிருக்கின்ற துருவத்துக் கோடை இரவு. எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன கணவர்களைச் சபித்தபடி வருகிற இணையத்துத் தோழிகளும் போய்விட்டார். காதலிபோல் இருட்டுக்குள் கூடிக் கிடந்து மலட்டு மனசில் கனவின் கரு விதைக்கும் தூக்கத்துக்கு வழிவிட்டு எழுந்து போடா சூரியனே. பாவமடா உன் நிலவும் கணணியிலே குந்தி இணையத்தில் அழுகிறதோ மூன்று தசாப்தங்கள் தூங்காத தாய்களது தேசத்தை நினைக்கின்றேன். படை நகரும் இரவெல்லாம் சன்னலோரத்துக் காவல் தெய்வமாய் கால்கடுத்த என் அன்னைக்கு ஈமத்தீ வைக்கவும் எதிரி விடவில்லை. பாசறைகளை உடைத்து உனக்குப் புட்பக விமானப்…
-
- 7 replies
- 1.6k views
-
-
சாளரத்தில் மோதி விழுகின்ற மழைத்துளிகள்-அட யார் இங்கு தடை போட்டது தூக்கப் பொழுதுகளில் தலை கோதும் என் தாயின் கரங்களுக்கு.
-
- 0 replies
- 1.6k views
-
-
பகல்கள் மீதான நினைவுகளால் இறக்கும் இரவின் பாடல்.. ------------------------ காற்றையும் கடந்துபோகும் நிலவையும் கரைந்துபோகும் இரவையும் நினைவுகளால் கழுவிக்கொண்டே தொலையும் இந்த நாளொன்றில் கசிந்துகொண்டிருக்கின்றன கண்ணீர்த்துளிகளாய் ஞாபகங்கள்... அன்புச்சிதைவுகளின் காலப்படுக்கைகளுள் புதைந்துபோய்விடாமல் இன்னமும் என் இமையோரத்தில் எஞ்சி இருக்கின்றன உன் மேலான பிரியத்தின் படிமங்கள்.. ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் சிரித்தபடி உப்புக்கரிக்கும் இமைகளின் ஓரங்களில் ஓலமிடும் விசும்பல்களாய் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது மனது தனியாக... முன்னொரு நாள் சேர்ந்து நடந்த நீயில்லாத தெருவொன்றில் துருவக்காற்றில் ஒடுங்கிப்போகும் ஓரிரு ஓர்க் மரங்களும் நடுங்கியபடியே கடந்துபோகும் நாலைந்து ச…
-
- 21 replies
- 1.6k views
-
-
நாவீரமாய், விலக்கவோ இழக்கவோ முடியவில்லை நினைவுகளை ............. கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை வெடித்தெழும் போதை _உன் விழி மடிக்கையில் விழுதுப்பாலாய் ஒட்டிவிட்டது வெண்சிரிப்பு _இனி அழுது முடியுமோவென் பிழைப்பு . பாடை மேளம் எல்லாம் தயாராக, ஊர்வலம் பிந்துகிறது . அட நான் இன்னும் சாகவில்லையே ............! வத்தாக்கிணற்றடியில் முத்தாதகொவ்வை பளபளப்பு , பாவற்காய் மினுமினுப்பு , என்னவோ செய்யுது , சரம் தூக்கி நடப்பது , றோட்டில் நாயை துரத்தி ஓடி மகிழ்வது _என் மட்டுமிருந்த எனை தாடி சொறிந்து வானம் பார்க்க வைத்த கொடுமை ....... காத்தடிக்க நீவர சைக்கிள் கடையிலிருந்த எனக்கல்லவா வேர்த்தது ? எப்பவோ …
-
- 10 replies
- 1.6k views
-
-
(15.09.09 தடைமுகாம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பில் தொடர்பு கொண்ட பெண் போராளி ஒருத்தியின் குரல் இது) கன்னங்கள் நனைத்த கண்ணீர்ச் சொட்டுக்கள் மெல்லக் காய்ந்து போகிறது. காலத்திடம் தோற்றுப் போய் மர்மம் நிறைந்த இருட்பொழுது தன் இருப்புக்காய் இயல்பாகிறது. எல்லாம் இழந்து நடுத்தெருவில் சனங்கள். புதைகுழிகளுக்கான அகழிகள் புதிது புதிதாய் பிறப்பெடுக்கிறது. அற்புதங்கள் அநாமதேயமாய் வியாபாரிகளின் கணக்குகளிலிருந்து விடுபடுகிறார்கள்…. நாங்கள் போனதும் உயிர் கொடுத்ததும் இதற்காகத்தானா….? *‘போராடுங்கள் சாவு உங்களுக்குச் சர்க்கரையல்லவா* சொன்னவர்களல்லவா நீங்கள்…. இன்று சாவோடு கம்பிவேலிகளுக்குள் சமராடிய கைகள் ஓய்ந்து சத்தமிட்ட குரல்கள் ஒட…
-
- 11 replies
- 1.6k views
-
-
தீயில் எரியுது டோறா..... வம்பிழுக்க வந்த பகை டோறா... வாங்கி கட்டி இழந்து போச்சு (இரண்டு )டோறா.... சுற்றி வந்து சூழன்டடித்த டோறா.... சுக்குநுறாய் போச்சுதின்று நுறா..... பாயும் புலி பகைக்க வந்த டோறா.... துண்டு பாதியாகிப் போச்சு இன்று வேறா.... திமிர் ஆட்டம் போட்டு ஆடி நின்ற டோறா... தீயில் எரியுது பார் இன்று தமிழா நீறா.... 01-09-06 அன்று பருத்துறைகடலில் இரண்டு டோறா அழிப்பின் போது....
-
- 3 replies
- 1.6k views
-
-
அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை மீட்பர்களற்ற வதைமுகாம்கள் மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பசி மயக்கத்தில் கேட்பாரற்று உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில் சருகாகின தனிமைக் கூடுகள். அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள் உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கிறது. கூடி அழ ஆளின்றி மானிட மரணங்கள் மலினப்படுகின்றன. தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது. ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது. மறைப்புகள் அற்ற திறந்த வெளி இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன. …
-
- 8 replies
- 1.6k views
-
-
நான் தேடும் ........... போதும் நான் வெச்ச பாசம் இரு கண்கள் போதாது… சோகம் கரைக்க கண்ணீர் கரக்கிறது காதல் பயணத்தில் நானே ஒரு பாவம் இதயத்தின் நிம்மதியைத் தேடி துறந்த ஜன்மம் போல் கனத்தபடி நித்திரை அடைத்து இன்று வாழ்கிறேன்........ விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL
-
- 5 replies
- 1.6k views
-
-
நோயினை சொல்லுவார் நொடிகளை விரையமாக்குவர் நோக்கமின்றியே -பலர் ஊக்கத்தை கெடுப்பார்கள் வாதிடு என்பார் போதுமினி என்கண்டாய் என்பர் மேடையின் எறி முழக்கம் மடமையில் பல உளறல்கள் வாடையில் கூட இல்லை அவர் வாயில் வாய்மை எழு எழு என்றார் எழுந்த பின் மறைந்தார் மானத்தமிழராம் இவர்கள் மக்கள் தொண்டராம் இவர்கள் மண்ணுக்காய் மக்களுக்காய் மாய்த்திட தம் சொகுது மறுத்தே நிற்கும் ம(ா)ன தமிழர்கள் ஆனையிறவை மீட்க அதை வைத்து ஓடி வந்தார் அடுத்த முகாம் பிடிக்க அடுத்தடுத்து வந்தார் ஆனாலும் தடை கண்டு அடுப்படி சென்றார்.. ஆகுதியான வீராரின் நமத்தை சுமந்து அடிக்கடி வந்தார் தடைச் செய்தி கேட்டு தம் சுய நலத்திற்காய் தியாகச்சுடர்களை மறந்தா…
-
- 13 replies
- 1.6k views
-
-
ღ♥அன்புள்ள காதலிக்கு ♥ღ♥ பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை உன்னை பார்த்தாலே எனக்கு பேச்சும் வரவில்லை மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை நண்பனை கண்டவுடன் இதயத்தின் ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம் ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள் ஆயிரம் பூக்கள் பூக்கின்றன, நீ பார்வைகள் உதிர்த்து விட்டு செல்கையில் அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கின்றது முத்து பற்களும் முறுகிய சுருள் மயிரும் பிராகச மின்னலை உதிரும் விழிகளும் தேன்வடியும் பேச்சும் மெழுகு பொம்மையாய் உடலும்..!! உன அழகை என்னவென்று சொல்வேன்!! அழகு என்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடியும் பயனில்லை நடமாடும் அக…
-
- 5 replies
- 1.6k views
-
-
பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை நீண்டவால்க் குருவி. வானத்தின் சோகங்களையும் வீதியின் தனிமைகளையும் பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும் துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை இழைத்துக் கூவியழுகின்றது. சேர்ந்து இசைக்கும் குரலொன்று வருமென்ற தேடலில் நியமம் தப்பாத இடைவெளிகளை சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது. நீண்டவால்க் குருவியின் ஒற்றைக்குரலில் சூரியன் மரணிக்கத்தொடங்குகிறான். இருளின் பெருக்கத்தொடு இயைந்து மௌனத்தின் இடைவெளியும் நீண்டு கனக்கத் தொடங்குகையில், அந்த இடைவெளிகளின் நிசப்தத்தில் மூச்சின் ஒலிகளை நிறுத்திக் காவலிருக்கத் தொடங்குகிறேன். இன்னொருகுரல் எங்காவது ஒலித்துவிடாதா.... நீள்கின…
-
- 18 replies
- 1.6k views
-