கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன்:- ஒரு சோடி பட்டாம் பூச்சிகள் திரும்பாத திசையிற் சன்னம் தைத்துக் கிடந்தது கனவு உப்பிய நெஞ்சறை. உயிருக்கு மதிப்பற்ற நகரில் சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும் நசிந்தொட்டிய வெற்றுடல்கள். அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை. குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன உருளும் பந்துகளும் சில்லுட…
-
- 0 replies
- 837 views
-
-
கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன் ஒரு சோடி பட்டாம் பூச்சிகள் திரும்பாத திசையிற் சன்னம் தைத்துக் கிடந்தது கனவு உப்பிய நெஞ்சறை. உயிருக்கு மதிப்பற்ற நகரில் சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும் நசிந்தொட்டிய வெற்றுடல்கள். அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை. குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன உருளும் பந்துகளும் …
-
- 2 replies
- 780 views
-
-
உங்கள் கனவில் மீனா வந்தால் நீங்கள் வாழ்வில் வீணா போவீர்கள்.., சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்.., சினேகா வந்தால் செத்து போவீர்கள்.., அசின் வந்தால் அழிந்து போவீர்கள்.., ஆகையால், கனவு காணுங்கள் காதலில் தவிக்கும் சந்தியாவைப் பற்றி அல்ல... கஷ்டத்தில் தவிக்கும் ஈழத்தைப் பற்றி...
-
- 5 replies
- 1.4k views
-
-
தியாகத்தின் திரு விளக்குகளே தமிழீழத்தின் குல விளக்குகளே நியாய தேவைதையின் நீதியரசர்களே நீர் எமக்காய் மரணித்த முத்துக்களே தாயின் கை விலங் குடைக்கத் தானைத் தலைவ னொடிணைந்தவரே வாழும் வரை நாமுமை நினைந்து உம் கனவு பலித்திட கருமம் செய்வோம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
-
- 0 replies
- 559 views
-
-
நெருப்பாய் - உழைத்தவரெல்லாம்......... விடை பெறுங்கள்! ஈரலித்துப்போன விறகுகள்... இனி பேசட்டும்!! தவிர்க்க முடியாதென்றறிந்தும்... வாசலை படிகள் பழிக்கும்...! எடுத்து அடிவைக்க முடியாவிடினும்... ஏளனம் செய்யும் .............! கோலமிருக்குமிடத்தில்... கொத்து கொத்தாய் - பிணம்! நரகவேதனை ... இதுவென்றறிந்தும்.... நமக்கென்ன குறையென்று நாக்கை பல்லால் வழித்தபடி பேசும்...! பூமியின் துன்பம் புரியுமா? கலீலியோவையே - தின்று ... தொலைத்த கூட்டம்.... திருந்துமா?-கனவு!
-
- 4 replies
- 1.1k views
-
-
கனவுகளைச் சுமந்தபடி தென்னங்கீற்றில் முகம் துடைத்து திங்கள் விழும் நிலாமுற்றம் கன்னல் தமிழ் பயின்றிட்ட கவின் கொஞ்சும் கலைக்கூடம் முன்னும் பின்னும் எல்லையிட்டு முப்புறமும் கடலேரி வான் நோக்கி உயர்ந்து வணங்கா மண்காக்கும் கற்பகத்தரு வைகறை மேகத்தைக் கிழித்து வாசல் தெளிக்கும் காலைக் கதிரோன் அந்த ஈரக் காற்றின் இதமான வருடல் முற்றத்து வேலிகளில் எட்டி நிற்கும் செம்பருத்தி இரட்டை வடக் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடிய வேப்பமரம் கொத்தும் மீன்குஞ்சு குதித்து விளையாடும் குளக்கரைகள் இடையில் குடமசைய நடைபயிலும் இளமங்கையர் சிரிப்பொலிகள் மாதமொருமுறை எம்மை மகிழ்வூட்டும் திருவிழாக்கள் இன்றும் எம் இதயங்களில் இனிமையான நினைவலைகள் கனக்கும் இதயங்களி…
-
- 4 replies
- 1.3k views
-
-
-
வெண் மணற் பரப்பில் கால் புதைய கனவுகள் சுமந்து நடக்கையில் காலில் இடறிய கல்லின் காயத்தில் கண்ணீர் கனதியானது காலங்கள் காத்திருக்கலாம் என் காயம் ஆற்ற - ஆனாலும் இழந்த நேரத்தின் இன்பங்கள் கணக்கில் வாராது கனவுகளாய் நீரில் போட்ட கோலம் நினைவில் அழிந்து போவதுபோல் காலத்தின் கணக்குகளும் - ஒருநாள் காலாவதி ஆகலாம் எண்ணற்ற எண்ணங்களின் குவியல் எப்போதும் என்நெஞ்சிருக்க போராடும் தெம்பின்றி போருக்கும் எதிரே யாருமின்றி பொங்கிடும் மனதின் பொழுதுகள் போக்கிடமின்றி போட்டிபோட ஏற்புடையது அல்லவெனினும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எப்போதும் என்னுடனே இருக்கும் சிதைந்துபோன கனவுகளின் சேமிப்பின் நினைவுகள்
-
- 8 replies
- 966 views
-
-
தியாகத்தின் சிகரங்கள்..! வீர யாகத்தின் அகரங்கள்...!! காற்றோடு கலந்தவர்கள்...! வீர காவியம் ஆனவர்கள்...!! நெருப்பாற்றில் குளித்தவர்கள்...! வரலாற்றில் நிலைத்தவர்கள்...!! மரணத்தை வென்ற மாவீரர்...! தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!! மாவீரச் செல்வங்களே...!!! உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் அழிக்கிறான்...!? உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் தடுக்கிறான்...!? உங்களின் தியாகத் தீயில்தான்... இன்னும் நாம் குளிர்காய்கிறோம்! இவ்வளவு இழந்த பின்னும்... இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!! இனியும் நீங்கள் எங்களுக்காய் உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தியாகத்தின் சிகரங்கள்..! வீர யாகத்தின் அகரங்கள்...!! காற்றோடு கலந்தவர்கள்...! வீர காவியம் ஆனவர்கள்...!! நெருப்பாற்றில் குளித்தவர்கள்...! வரலாற்றில் நிலைத்தவர்கள்...!! மரணத்தை வென்ற மாவீரர்...! தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!! மாவீரச் செல்வங்களே...!!! உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் அழிக்கிறான்...!? உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் தடுக்கிறான்...!? உங்களின் தியாகத் தீயில்தான்... இன்னும் நாம் குளிர்காய்கிறோம்! இவ்வளவு இழந்த பின்னும்... இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!! இனியும் நீங்கள் எங்களுக்காய் உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீர்கள்! நிம்மதியாய் உறங்குங்கள்...! உங்கள் கனவு…
-
- 11 replies
- 1.7k views
-
-
கனவுகள் கற்பனைகள்! மனிதா கனவு கான் அது தான் உன்னால் முடியும். மனிதா கற்பனை செய் அதுவும் உன்னால் முடியும். எது எப்படியோ? இரண்டையும் கண்டுமட;டும் இருந்து விடாதே! அதனை செயற்படுத்து. அதுவும் உன்னால் தானே முடியும். விடியும் இரவு உள்ளவரை எதுவும் முடியும் முடியும்.
-
- 3 replies
- 1.4k views
-
-
கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள் ------------------------------------------------------------------ அவர்கள் நித்திரை கொண்டு கொண்டிருந்த சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும் ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர் இறக்கும் போது அக் குழந்தைகள் எதை கனவு கொண்டு இருந்திருக்கும்.. வெடிகுண்டு சத்தம் கேட்காத ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு தாயின் மடியில் தலை வைத்தும் அப்பாவின் மடியில் கால் நீட்டியும் படுப்பதாய் கனவு கொண்டிருக்கும் ஒரு சின்ன பொம்மையுடன் கட்டிப்பிடித்து நித்திரை கொண்டு இருந்திருக்கும் தங்கள் வளர்ப்பு நாயின் குட்டிகள் மழையில் நனைந்துடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்ந்திருக்கும் தெருவில் தொலை தூரத்தில் வரும் ஐஸ் கிறீம் காரனின் பாம் பாம் …
-
- 12 replies
- 1.3k views
-
-
தேவதை ஒருத்தி என்னை தேடி வந்தாள் தேவாமிர்தம் படைத்து உண்ணச் சொன்னாள் தேன் சொட்டும் வார்த்தையால் என்னை வருடி தேவை எல்லாம் கிடைக்கும் என்று வாழ்த்திச் சென்றாள் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் உதித்தது ஆணவம் கூடவே சேர்ந்துக்கொண்டது ஆர்ப்பரிக்கும் களிப்பில் மூழ்கியே ஆகாயத்தில் உயர பறக்கவும் விளைந்தது ஐஸ்வர்யாவின் அழகை பெற நினைத்து ஐஸ்க்றீம் குளியலில் நீந்தவும் முயன்று வைரங்கள் நகைகளில் ஜொலிக்கவும் எண்ணி வைப்பில் பலகோடி சேமிப்பில் கேட்டேன் அரண்மனை வானுயர அமைக்கவும் எண்ணி அதிகாரம் கையில் பெறவும் கேட்டேன் அகதி அந்தஸ்து இல்லா வாழ்க்கை யாவரும் பெற அஸ்தமித்த அமைதிக்கு உயிர் கொடுக்க வேண்டினேன் வையகம் முழுதும் பூந்தோட்டம் அமைத்து வைகை ஆற்றை ப…
-
- 0 replies
- 496 views
-
-
இக்கவிதையை எழுதியவன் ஏற்கனவே காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... என்றொரு கதை மூலம் யாழுக்கு அறிமுகமான வசந்தன். அவனது இன்னொரு பதிவு இது யாழ் வாசகர்களுக்காக தருகிறேன். காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... கதையைப் படிக்க இவ்விணைப்பில் அழுத்துங்கள் கனவுகள் வளர்ப்போம்.... வசந்தன் இப்பொழுதெல்லாம் பெயர் தெரியாத தெருக்களில் அகதியாய் மண்வாசனையைத் தேடும்போது தான் உயிர் கனக்கிறது. மரணத்தின் திசைநோக்கி – அன்று நடந்தவர்களுடன் நானும் கூட நடந்தேன்..... அது மிக மிக அருகில் என்னை வரவேற்றுக் காத்திருந்தது. ஆயினும் எல்லாவற்றிலிருந்தும் நொடிப்பொளுதில் தப்பியதாக ஒரு உணர்வு. பனியில் நனைந்து உடைகள் கனப்பதுபோல மனதும் ஈரமா…
-
- 3 replies
- 692 views
-
-
ஒரு நாளும் மழையில் நனையாத நான் நேற்று மட்டும் ஏன் நனைந்தேன்.....? மழைத்துளியில் குளித்தாவது உடல் வெப்பதை போக்கி கொள் என உள்மனம் சொல்லிச் சென்றது. ஒரு சிறு பொழுது மனிதர்களால் செய்ய முடியாத ஒன்று அந்த மழை கூட எனக்காக அழுதது போலும்.. நாட்கள் வாரங்கள் மாதங்கள் வருடங்களாய் வண்ண வண்ணப் பூக்களாய் பூத்து நின்ற கனவுகள் காரணமின்றியே உலர்ந்து கொட்டி விட்டன.... என் ஒரு கனவாவது பலித்திடனும் என பகல் இரவாய் விரதம் இருந்தென்ன பயன்..... கண்ட கனவுகள் எல்லாம் பகல் கனவாகி போக என் கனவுகளும் காணாமல் போனோர் பட்டியலில் உரிமை கோர வழியின்றி விழி பிதிங்கி நிற்க ஒருவர் மட்டுமே நிழலாய் தோன்றினார். தூங்கும் போது காண்பது கனவு அல்ல தூங்க விடாமல் காண்பத…
-
- 11 replies
- 1.1k views
-
-
எழுத்தில் நிலைக்க முன் படத்தில் பதிய முன் எழுந்த வேகத்தில் கரைந்திடும் மன அலைகளே..! கலியாணம் கட்டி காண வேண்டியதை கண நேரத்தில் காட்டி மறைகிறீர்.. மனததை தவிக்க விடுகிறீர்..! காதலிக்க நினைப்பவரை கட்டியணைக்க வைக்கிறீர் மீண்டும் தவிக்கையில் தலையணையை தருகிறீர்...! நடந்ததை மறந்தாலும் நினைவுக் கிடங்கதை கிண்டிக் கிளறி விடுகிறீர் நன்றும் தீதும் இரட்டையராய் தருகிறீர்..! கலரா.. கறுப்பு வெள்ளையா வகை வகையாய் போகாத காட்டிலும் போக விடுகிறீர் ராக்கெட் இல்லாமலே எட்டாத வெளியிலும் பறக்க விடுகிறீர் விழுந்து சாகவும் செய்கிறீர்..!! அலறி அடிக்கும் கணங்கள் போக அடித்து வீழ்த்த நினைக்கும் எதிரியை அடிக்க வைக்கிறீர் அலைகள் கடந்து நடுக்கடலில் நிறுத்தியும்…
-
- 4 replies
- 672 views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
உள்ளம் பயந்து ஊமையாகுது கள்ளப் பெண்ணவளிடம் காதல் கொள்ளுது கொடி முல்லையென ஆடி வருவாள் குயிலின் நாதமெனக் கூவி வருவாள் செம்பருத்தி அவளென்னை ஊடல் செருமுனைக்கு* அழைப்பாள் பின்னே ஓடி வந்து என்னைக் கட்டி அணைப்பாள் நீள் முடி கோதி நிம்மதி நாடி புன்னகை செய்வாள் பின்னே பெருநகை செய்து என்னை ஏளனம் செய்வாள் முகத்திரண்டு கருவண்டு என்னை கிறங்கடிக்க வைக்கும் மூக்குத்தி மின்னொளியை மழுங்கடிக்கச் செய்யும் பேனாவை எடுத்து சிந்தனைக் குதிரையை தட்டிக் கொடுத்து புதுக் கவிதை ஒன்று எழுத்தில் வடிப்பேன் பூவை அணைத்து உயிர்க் கவிதை ஒன்று …
-
- 14 replies
- 2.1k views
-
-
கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும் ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும் உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான் நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில் கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக
-
- 9 replies
- 1.5k views
-
-
பெட்டி நிறைய பணம் இருந்தும் பெருமூச்சு விட்டு காத்திருக்கிறாள் அக்கா.. அழகும் அறிவும் இருந்தும் கண்ணீரோடு காத்திருக்கிறாள் பக்கத்து வீட்டு தோழி.. 'தோசம்' எனும் மூடநம்பிக்கையும் 'சீதனம்' எனும் சம்பிரதாயமும் அழியும் வரை வீட்டுச் சிறையில் காத்திருக்கும் கன்னிப் பறவைகளாக பெண்கள்... http://pirashathas.blogspot.fr/
-
- 20 replies
- 2.4k views
-
-
கபாலிக்காக மண் சோறுண்ணும் மடையர்களை நினைந்து தமிழன்னை புலம்புகிறாள். புளிய மிலாறு வெட்டி புறமுதுகில் சாத்தியிந்தக் கழிசடைகள் ஓடுதற்கு மக்காள் - நல்ல காரியங்கள் செய்யீரோ மக்காள். குண்டாந்தடியெடுத்துக் குண்டியிலே போட்டு நன்றாய் பென்ட நிமிர்த்த வேணும் மக்காள் - இந்த பேயர் திருந்துதற்கு மக்காள் ஆத்திர மெல்லாம் சேர்த்து அழகான கேட்டி வெட்டி சூ—தில் கொடுத்தாற்தான் மக்காள் – இந்த சோமாறிகள் விழிப்பார் மக்காள் கொட்டன் எடுத்ததிலே குத்தும் சிராய் செதுக்கி விட்டால் முதுகினிலே மக்காள் – இந்த வீணர் திருந்திடுவார் மக்காள் தக்கார் இலாதென்றன் தாழ்வுகளைப் போக்குதற்கு மிக்க மனங்கவன்றேன் மக்காள் – நான் மீள்வதினியெக்காலம் மக்காள்.
-
- 1 reply
- 2.6k views
-
-
கரை தேடும் கட்டெறும்பாக வாழ்கைக் கடல் மீது நம்பிக்கையோடு கரைசேர நான் மிதக்க இடையில்... அலை மீது துரும்பாக எனைக்காக்கும் கப்பலாக நீ வந்தாய். காதல் எனும் கயிறு போட்டு தொற்றிக் கொண்டேன் உன்னிடத்தில். நீயோ... பத்திரமாய் எனை கரை சேர்ப்பாய் என்றிருக்க காதல் கசந்ததென்று.. நடுக்கடலில் தள்ளிவிட்டாய். பரிதவித்தே போனேனடி. நம்பிக்கை தகர்ந்து..!! ஈவிரக்கம் இல்லாதவளே உன்னை ஓர் நாள் கடல் நடுவே திமிங்கலம் ஒன்று கவிழ்க்குமடி... அப்போதும் கட்டெறும்பாய் நான்.. அலை மீது உனக்கு உதவிடுவேன் நிச்சயம் பழிவாங்கேன்..! அது உன்னுடன் காதலுக்காய் அல்ல என்னுடன் உள்ள ஜீவகாருணியத்திற்காய்..! (படத்துக்காய் ஓர் வரி.)
-
- 21 replies
- 1.7k views
-
-
கம்முனிகேசன் வெற்றி..! தந்தி ட்ரங்கால் தந்தி ஆபிஸ் டெலிபோன் போஸ்ட் கார்டு கடிதம் ஏர் மெயில் போஸ்ட் ஆபீஸ் செல்போன் சிம் கார்ட் நெட் வொர்க் டாப் அப் மெமரி கார்ட் சரியில்லை என்றாலும் சிம் கார்ட் சரியாக இருக்கிறது சார்ஜ் மட்டும் தான் குறைவாக உள்ளது ஒருவேளை பேட்டரி சரியில்லையோ செல்போன் ரிப்பேர் கடைகளில் குவியும் செல்போன் விரும்பிகள்..! இவ்வாறு எவ்வளவோ இருக்கிறது தமிழக மக்களுக்கு..? ஆனால் இரண்டு சிம் கார்டு போட்டு எப்படி பேசுவது என்ற கேள்விகளை புறந்தள்ளி நிரம்ப பின் தங்கி இருக்கிறோமோ என்ற அச்சம் வந்தவுடன் எப்பொழுது நாம் வீட்டுக்கு போய் ஒரு ஓவியமான நமது செல்போனை நோண்டுவது என்ற ஆர்வம்…
-
- 1 reply
- 584 views
-
-
கண்கள் பூத்திருக்க கருவிழிகள் பார்த்திருக்க வெஞ்சமரில் விதையான வீரர்களின் வாழ்த்தொலியில் பொங்குதமிழால் பூரித்த மண்ணிலே வெந்து வெந்து நீறான சிங்களத்தினை வெற்றிகொண்டெழும் எம் வீரப்புலிக்கொடி நாட்கள் அதிகமில்லை நன்னாளும் தொலைவில் இல்லை பார்க்கும் இடமெங்கினும் பார்புகழும் வகைதன்னிலே பறந்திடும் எம்கொடி பார் தமிழே பார் வீரத்தமிழ்த்தலைவன் வெற்றியின் அரசனவன் வீறுகொண்டெழுந்திடுவான் வெற்றித்திலகத்தை பெற்றிடுவான் ஆற்றல் மிக்க அவனிடம் ஆயிரம் கலை உண்டு தோற்றோடும் பகைகண்டு தொடைதட்டி மகிழ்ந்திடான் விதையான தன்மக்களை மனதார நினைத்திடுவான் தாய்க்கு பிள்ளையாய் தமிழிற்கு தாயாய் வந்துதித்த எம்தலைவன் வெற்றி வாகை சூட வீறுகொண்டு நாம…
-
- 3 replies
- 1k views
-
-
கரடிக் குகை (Bärenhöhle) இயற்கை என்னும் சிற்பி செதுக்கி வைத்த சிற்பங்கள். காலங்கள் பல கடந்தும் கண்கொள்ளாக் காட்சி. பானை அடுக்கியதுபோல் கொஞ்சம் பவளப்பாறைகள்போல் கொஞ்சம் தொங்கும் அழகுவிளக்குகள்போல் கொஞ்சம் தோரண மாலைகள்போல் கொஞ்சம் ஆலம் விழுதுகள் போல் கொஞ்சம் ஆவின்பால்மடிபோலே கொஞ்சம் கோபுர கலசம்போல் கொஞ்சம் கொடிமரம் அமைத்ததுபோல் கொஞ்சம் சுயம்புலிங்கங்கள் சுற்றி அமர்ந்திருக்க சிற்பக் கோயில்களைச் சிறிதாக அமைத்ததுபோல் பார்க்குமிடங்களில் பளிச்சிடும அருங்காட்சி. இருபது மீற்றர் ஆழத்தில் இருநூற்றித் தொண்ணு+ற்றி இரண்டு மீற்றர் நீளத்தில் புத்தொன்பது மீற்றர் அகலத்தில் பல இலட்சம் வருடங்களுக்கு முன் பளபளக்கும் கல்லுகளால் பாதாளத்தில் அமைந…
-
- 9 replies
- 1.1k views
-