கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பார்க்கும் கண்களே துடிக்கும் காட்சி பாலனின் மேனியில் பலதுளைகள் கொடுங்கோற் சிங்களம் செய்த கொடுமை கொலைக்களத்தின் அதி உச்சக்கட்டம் அவன் விழிகளில் தெரிகின்றது அவன் ஒரு வீரன் மகன் என்று அவன் விழிகளைக் கண்டு மிரண்டு அவன் மேனியில் துளைத்ததா குண்டு சிங்களம் செய்த கொலை வேள்வியில் எங்கள் குலவிளக்கை எரித்ததா ஈனம் இல்லாச் சிங்களம் ஆடிய கொலைவெறியில் தங்கள் இச்சையைத் தீர்த்ததா இச்சிறு வேங்கையின் பொற்திருவுருவில் பாரெங்கும் பரந்திருக்கும் நாமெல்லாம் கோர்த்திடுவோம் கரங்களைக் கொடுங் கோலனை ஒளித்திடக் கூடிடுவோம் ஒன்றாய் கொலைக்களத்தின் உச்சத்தைப் பரப்பிடுவோம் உலகமெங்கும் எடுத்த…
-
- 33 replies
- 2.8k views
-
-
நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்
-
- 32 replies
- 5.8k views
-
-
http://youtu.be/bKy6lO-TJvw உடல் இரசாயனங்களின் உந்துதலில் உன்னைக் கண்டேன். உன்னதமாய் தோன்றிய உன்னால் பைத்தியமும் ஆனேன் - கூடி உலவவும் செய்தேன்..! உயிர்மெய்யென உன்னில் நானே உளறியும் கொட்டினேன். உன்னை நீயே உத்தமன் இவனென்று எனக்குத் தந்தாய்...! உறவுகள் விரிந்தது உண்மைகள் என்பதாய் வளர்ந்தது. உடலும் உறவு கொண்டது உயிர்களும் தோற்றம் பெற்றன. உடைக்க முடியாத பந்தம் உன் - என் உறவென்று உறுதியாய் நம்பி இருந்தேன் உன் அன்பை உண்மை அன்பெனக் கண்டதால்.! உறுத்தலாய் உருண்டது ஓர் நாள்..!! உன் முன்னவன் என்று உதிரியாய் ஒருத்தனை உதாரணம் காட்டினாய். உள்ளதில் படர்ந்தது உதவாக்கரை எண்ணம். உன்னை அது உறவால் வெறுக்க வைத்தது. உறவுகள் விரிசல் காண... உயிர்கள் அந்நிய…
-
- 32 replies
- 4.6k views
-
-
ஓல்(O/L) பரீட்சையில் ஓல்(all) எவ்(F) வந்ததும் தலை கிறுகிறுக்க அலைந்த போது.. இயக்கத்துக்கு ஓடிடுவானோ.. பயந்தாள் அம்மா. ஊருக்க வைச்சிருந்தா உவங்கள் வந்து இழுத்துக் கொண்டு போயிடுவாங்கள் உங்கால உள்ள காணியை வைச்சிட்டு அனுப்பிவிடு இவனை கொழும்புக்கு.. புத்தி சொன்னார் அப்பா. கொழும்பில போய் பொடி கெட்டிடும் உந்த ஊரெல்லாம் போகுது கனடா அனுப்பிவிடு அங்க.. பத்தாக்குறைக்கு பத்த வைத்தார் மாமா..! நானும் சோதனையில் பெயிலான (fail ஆன) சோகம் தீர புறப்பட்டேன் தாண்டிக்குளம் தாண்டி ரொராண்டோ. வருசம் ஒரு 5 போய் இருக்கும் நாலு காசு நாய்படா பாடுபட்டு வெள்ளைத் தோலிடம் ஏச்சும் இழிவும் வாங்கி உழைச்சது தான்..! அம்மா கேட்டாள் பொம்…
-
- 32 replies
- 3.6k views
-
-
நிலாமுற்றம் பால்பொங்கும் மணலின் மேல் நம் நீண்ட இரவுகள்.. மாமரக்கிளையின் காற்றும்.. வேப்பிலை சலசலப்புக்களும்..... பாட்டி கதையும்... அம்மாவின் குழையல் சோறும்... நிலாவை முகில் மறைக்கும் நேரம்.. தங்கையை.. நான்.. வெருட்ட அவள் அழுவதும்... மீண்டும் நிலாக் கண்டு எல்லோரும் சிரிப்பதும்.. சுருட்டோடு கடக்கும்.. அப்பாவுக்காக மட்டும்.. ஒலி தாழ்ந்து இறங்கும் அரட்டையும்.... பாட்டி மடியில் தலையும்.. அம்மா மடியில் கால்களும்.. ஜொலிக்கும் மின்மினிகள்.... வியந்த வியந்து எண்ணுவதும்.... எல்லோரும் ஒன்றாய் மீண்டும் அந்த நிலாமுற்றம் என் வாழ்வில் வருமா..... எப்படி வரும்....? மெய் தொலைத்த அப்பா பாட்டி... மணமாகி... …
-
- 32 replies
- 5k views
-
-
காதல் என்பது இனிய சுவாசம் என்றாயே பெண்ணே உயிரும் உயிரும் கலப்பதுதான் காதல் என்று சொன்னாயே பெண்ணே நான் தான் உன்னுடய முதல் கவிதை என்றாயே பெண்ணே பொய்கள் உனக்கு பிடிக்காது என்று சொன்னாயே பெண்ணே என்னை வெறுப்பதாக ஏன் பொய் பேசுகின்றாய் பெண்ணே முற்களாக ஏன் என்னை குத்துகின்றாய் பெண்ணே உன் சொற்களாலே ஏன் என்னை கொல்கின்றாய் பெண்ணே உன் கண்களாலே ஏன் என்னை எரிக்கின்றாய் பெண்ணே நான் இங்கு மரித்து விடுகிறேன் உன் கைகளால் விசம் கொடு பெண்ணே
-
- 32 replies
- 4.2k views
-
-
மரணம் ! அது உனது முகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.... சொல்ல எழுகிற சொற்களைக் குற்றித் துளைக்கும் கூர்முனைக் கத்தியிலிருந்து உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது. உதிரும் குருதித் துளிகள் உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டு போகிறது..... கத்தியின் இடுக்கிலிருந்து ஒழுகுகிறது உனது கடைசிக் கனவுகள்..... ஓர் உயிரின் பெறுமதி பற்றிய எந்தவித கவலையுமின்றி உன்னைக் குற்றிக் குருதியில் குளிப்பாட்டி மகிழ்கிறது காடேறிகளின் கர்வம்..... இன்றைய முகப்புச் செய்திகளிலும் தலைப்புச் செய்திகளிலும் நீ நிறைந்து வழிகிறாய்..... வியாபாரிகள் வயிறு முட்ட நீ வலியில் துளித்துளியாய் செத்துப் போகிறாய். எத்தனையோ கொடுமைகள் …
-
- 32 replies
- 4.4k views
-
-
நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி! எனது இங்கிலாந்து இளவரசியை* தலையில் தூக்கி கொண்டாடினேன்..... அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்... அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்..... அவளது காருக்கு டயர் மாற்றினேன்.... அவளது காருக்கு பெட்ரோல் நிரப்பினேன்..... அவளது படிப்பிற்கு நான் படித்தேன்.... அவளது படிப்பிற்கு காசு கொடுத்தேன்... அவளது வாய்க்கு உணவு சமைத்தேன்.... அவளது வாய்க்கு சங்கீதம் தேடினேன்..... எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்..... காலம் மாறியது...... உன்னை என்னால் மணக்க முடியாது......வார்த்தைகள் சுட்டன! உன்னிடம் வீடு இல்லை..... உன்னிடம் ஜாகுவார் கார் இல்லை.... உன்னிடம் படிப்பு பட்டம் இல்லை.…
-
- 32 replies
- 4.3k views
-
-
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் -சினேகிதி- அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன் படை சேர்ந்தாய் அண்ணாவே பூநகரி மணலாறு கிளிநொச்சி எனக்களம்பல கண்டாய் இன்று நீயும் மாவீரன் வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய் உள்ளம் வலிக்கத்தான் செய்தது உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள் அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள் அழுது ஆற்றாமை தீர்த்தால் இராணுவ இராஜமரியாதையையும் ஏற்கவேண்டி இருக்குமே ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ சிதறிப்போன சந்தில் எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான் உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும் உங்கள் கனவுகள் நனவாகவில்ல…
-
- 32 replies
- 5.2k views
-
-
-
- 32 replies
- 4.1k views
-
-
குறுக்கால போனவங்கள் வேலை அவசரத்தில் வீட்டை போற வழியிலை நிக்கிறாங்கள் அறுவான்கள் கறுத்த துணியோடை மரங்களுக்கை உருவை மறைச்சு நிக்கிறாங்கள் அறுவான்கள் வண்டிகளை இளைகுழையாக்கி இரக்கமில்லாமல் நீட்டிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறாங்கள் அறுவான்கள் சரி அந்தப் பக்கம் தானே ஆர் பெத்த பிள்ளையோ மாட்டக் கூடாதெண்டு கைகாட்டி அவனை மட்டாப்போடாப்பா மரத்துக்குள்ளை நிக்கிறாங்கள் அறுவான்கள் ஐரோப்பா முழுதும் அள்ளித் தெளிப்பான்கள் மக்கள் கட்டும் வரிப்பணத்தை கனவான்கள் கிரீசுக்கு இன்னும் காணாதாம் என்னத்தைச் செய்ய கிறுக்கர் நாங்கள் தான் இருக்கோமாம் போத்துக்கல்லும் போதாதாம் பொதுமகன் கையில் வைக்கிறாங்கள் சுமையை நிக்கிறாங்கள்அறுவான்கள் ஆழ்ந்த சிந்தனையில்…
-
- 31 replies
- 1.9k views
-
-
போலிக் காதல் மயக்கத்தில்_மது போதை வகுத்த ஒழுக்கத்தில் நீலிக்கண்ணீர் உறவுகளில் _பலர் நிகழ்காலங்கள் இறந்து போகின்றன இரை தேடி வந்து இரையாகும்_விதி எண்ணி சிரித்திருக்கலாம் சமுத்திரம் கடக்க முடிந்தும்_கண் கடக்க முடியவில்லை என்று கலங்கியிருந்திருக்கலாம் மேகத்தில் இரத்தம் பூக்களில் மாமிசம்_கத்தியில் கண்ணீர் விழிந்தன் கனவில் நியத்தைதான் சொல்கிறேன் மாற்றமில்லை_ காதல் நெருப்பொன்றே புதுப்பிக்கும் மானிடத்தை
-
- 31 replies
- 4.7k views
-
-
உன்னை விட்டு - நான் ஒரு கணமும் விலகவில்லை விலக நினைத்தாலும் -அது என்னால் முடியவில்லை என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்கிறாய்- ஆனால் மௌனமாக இருக்கிறாய் - மௌனமாகவே துரத்துகிறாய் என்னுடன் பேசாமல் மௌனமாக இருந்ததேன் ?? என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்ந்ததேன் ?? என்னை விடாமல் துரத்தியதேன் ?? ஏன் ?? ஏன் ?? ஏனெனில் நீதான் எந்தன் நிழல் நான் உந்தன் நிஜம் !!!
-
- 31 replies
- 4.5k views
-
-
-
- 30 replies
- 4.3k views
-
-
ஒருவருட காதல் வருடப்பிறப்பு அன்று கோயிலில் திருவிழாக் கால மக்கள் திரளுள் கருவிழியாள் உன் பார்வையால் அரும்பியது என்னுள் காதல் தைப்பொங்கல் வரும்வரையில் தையலுன் பின்னால் தினமும் அலைந்த என் காதலுள் தொலைத்தாய் உன் இதயத்தை மாசி வந்ததும் நாமிருவரும் பேசி பேசி காதல் செய்தோம் பங்குனி மாதத்தில் உன் சங்கு கழுத்தில் முத்தமிட்டேன் சித்திரை மாதம் வந்ததும் நித்திரையின்றி புரண்டேன் வைகாசி பூத்ததும் நாமிருவரும் கைராசி பார்த்து சந்தோசப்பட்டு ஆனி வந்ததும் உல்லாசமாக தேனீக்கள்போல பறந்து திரிந்து ஆடி வந்ததும் இருவரும் பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர் ஆவணி உதித்ததும் உனக்கு நான் தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில் புரட்டாதியு…
-
- 30 replies
- 6.2k views
-
-
chating ( தமிழ் ஆக்கம் தெரியாது ) முகங்கள் புதைத்து முகவரி கள் தொலைத்து வயதுகள் மறைத்து உணர்ச்சி விளையாட்டில் பறிபோனது இங்கே இதயங்கள் பண்பாடு தொலைத்து காதல் மொழி பேசி உணர்ச்சி விளையாட்டில் பிரிந்தது குடும்பங்கள் நிஜத்தை தொலைத்துவிட்டு போலி வாழ்க்கைக்காய் வழக்காடு மன்றத்தில் பிரிவுக்காய் தவிக்க குழந்தையோ வீதியில் அனாதையாக தத்தளிக்குது. நாகரிக வளர்ச்சியால் தமிழ் பண்பாடு அகதியாய் அலைகின்றது எம்மைப் போல். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 30 replies
- 3.9k views
-
-
1987 அதுவும் ஒரு மே மாதத்தின் திகதி தெரிந்திராத, அன்றைய நாளின் ஒரு காலைப்பொழுது....! ஏன் வந்தது என தெரியாத ஐந்தே வயசு, எனக்கு... எதுவும் புரியாத பிஞ்சு மனசு! ஓடிக்கொண்டிருந்த அம்மாவின் கைகளுக்குள், பதகளிப்போடு என் பயணத்தினை ஆரம்பித்தேன்! அப்பாவின் கைகளுக்குள் என் தங்கை, என் அழகான கூடு முதன்முதலாய்க் கலைகின்றது!!! மந்திகை ஆஸ்பத்திரிக்கான ஊரோடு ஒத்த அவர்களின் பயணத்தில்... ஐந்து வயதிலேயே, "அகதி" என்று பெயரெடுத்தேன்!!! - எங்கே போகின்றோம்? என்று, இன்றுவரை தெரியாத அதே கேள்விகளும் என்னோடு கூடவே பயணிக்கின்றன!!!! பாதி வழி தாண்டும்போது... யாரோ சொன்ன வார்த்தைகள்... எனக்குப் புதிதாய்... புரியாத வார்த்தைகளாய்.... "ஒபரேஷன் லிபரேஷன்" என காதில் …
-
- 30 replies
- 2.8k views
-
-
வசந்தகாலம் ......... பச்சையம் விரிந்த புல்வெளியும் பல வா்ண அழகு மலா்களும் வீதியின் இருமருங்கும் வியாபித்திருக்க பள்ளி விடுமுறையில் மழலைகள் துள்ளி விளையாடும் பூங்காவை நோக்கி நான் என் பேரனுடன் நடைபயில இரண்டாவது படிக்கும் அவனது கையிலும் ஜ போன் வீதியில் ஓடிஓடி மூலைக்கு மூலை எதையோ தேடி அலைந்தான் அன்று தும்பி பொன்வண்டுதேடி மாட்டு வால் தடத்துடன் ஓடி விளையாடிய என் அண்ணன் தம்பிகளின் இளமைப் பருவம் நினைவில் ஊசலாட இவனென்ன தேடுகிறான் என்று எண்ணித் திகைத்து வீதியில் கவனமாக நடத்கும்படி எச்சாித்தபடி நான் அவன் சொன்னான் போக்கிமான் பிடிக்கிறானாம் காலமும் தேசமும் மாறினாலும் தேடல் ஒன்றுதான் என்று என் நினைவில் நிழலாட அவனைத்தவிர மூலைக்கு மூலை …
-
- 30 replies
- 3.8k views
-
-
யார் அந்தக் கள்ளி?? வானத்தில் தூங்கும் கள்ளி உனக்கு அங்கு வாழ்வு தந்தது யாரடி? தாரகைகளிடையினுள் ஒரு தாஜ்மகால் உறக்கம் தங்கத்தட்டாய் பூமிக்கு மேலே ஒரு புதையலை தூங்க விட்டது யாரடி? கறுத்து போனது வானம் இறுக மூடிய விழிகளுக்குள் இருட்டின் பேரால் ஊரடங்கு சட்டம் ! விழித்தெழுந்து பார்த்தேன்! காணவில்லை! விண்வெளியில் வெள்ளை நிறம் அடித்தது யாரோ?? கும்மியடித்த இருளை ..... கொன்று போனது யாரோ? எங்கு போனாள் அவள்? அள்ள அள்ள குறையாத அழகுக் கள்ளியா நீ? யாரிடம் வாங்கினாய் யாருக்கும் சொல்லாமல் இந்த அழகை...! மெல்ல வானம் விடிகையில் சொல்லாமல் மறைகிறாய் மெல்ல வானம் சிவக்கையில் கேட்காமலே வந்து அணைக்கி…
-
- 30 replies
- 3.2k views
-
-
அம்மம்மா அம்மா என்று அறிமுகம் ஆனவரே அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற புதிய மொழியை சொல்ல வைத்தவரே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள் நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள் ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள் ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும் எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல் உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம் காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர் நீர் கண் மூடு…
-
- 30 replies
- 16.7k views
-
-
1993.... சிங்களரும் தமிழுரும் மரமும் கொடியும் சிந்தனை செய்து டிங்கிரி பண்டா தமிழின அழிப்புக்காய் ஏவி விட்ட ரஷ்சிய டாங்கிகளின் அணிவகுப்பாய் யாழ் தேவி....! ஆனையிறவு தாண்டி கிளாலி வெளியில் புலிப் பாய்ச்சலில்.. தடம்புரண்டு போச்சுது அது..! தோல்விக்கு விலையாக சங்கத்தானையில் போட்ட விமானக் குண்டில் பலியான தமிழினம் இன்னும் அலறுது வேதனையில்...!! 2013... முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நாயகன்... "வடக்கின் வசந்தம்" மகிந்த சிந்தனையின் பிறப்பிடம்.. மகிந்த பண்டா ஏவும் இந்த வெற்றி மமதை யாழ் தேவி ஹிந்தியத் தடமதில் சீன உருவமாய் தடமுருண்டு வந்தாலும் தமிழர் நிலத்தில் - அது ஓர் பாழ் தேவி..! இதன் வரவில் பாழாகப் போகுது எம் தமிழ் தேசம்..! விபத…
-
- 30 replies
- 3.9k views
-
-
கடல் நீரிலே துள்ளும் மீனினம் போல், என் மனதிலே துள்ளும் உணர்வுகளுக்கு, உயிர் கொடுத்து உலவிட வந்துள்ளேன்.
-
- 30 replies
- 4.3k views
-
-
மருதப் பாட்டு வ.ஐ.ச.ஜெயபாலன் கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன். இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும். தென்றலிலோ வரால் மீன்களின் இராப்போசனத்திலோ நாணல்கள் அசைகின்றன. வண்டின் பாடலில் மயங்கி மொட்டுகள் துகில் அவிழ்க்கிற மாலை. அழிக்கப்பட்ட காடுகளும் காடு மண்டிய வயல்களுமானதே நீர்ப் பறவைகளை இழந்த என் மருத வழி. எனினும் நீர் ஓடி நெல்தழைத்து நீர்ப்பறவை வான் நிறைய ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய் முட்டையாய் காத்திருக்கும…
-
- 30 replies
- 2.7k views
-
-
சொல் அப்பா சொல்: வெள்ளை பனி உருகி வீட்டின் முன் வழிகின்றது வளைந்து செல்லும் வீதியெங்கும் பனியின் சிதறல்கள் காற்றின் திசையெங்கும் குளிரின் வாசம் பனி பார்க்க விரும்பும் மகனை கூட்டிச் சென்று காட்டுகிறேன் குவியலாக இருக்கும் பனிக்குள் குளித்தெழும்புகிறான் சறுக்கி வீழ்ந்து சிரித்து எழும்புகிறான் வெண் நுரை அள்ளி வீசி விளையாடுகிறான் இப்படித் தானே அப்பா நீயும் ஊர் முழுதும் மழை நிரம்புகையில் சைக்கிளில் என்னை வைத்து வெள்ளம் காட்டுவதும் மழையில் நனைவதின் சுகமும் வெள்ளத்தை கூறு கிழித்து சைக்கிள் ஓட்டுவதன் பரவசமும் அப்பா நீ காட்டியது தானே எனக்கும் பின்பு பனை வெளிகளினூடு போகையிலும் மலைக் குன்றுகளினூடு நடக்க…
-
- 29 replies
- 5.2k views
- 1 follower
-
-
Up.. Down குவாக்சுகளின் கலவையில் குவா குவா என்றே பிறந்திட்ட இரட்டைப் பிறவிகள் புரோத்தனும்.. நியூற்றனும்..! அண்டை அயலில் அலைந்து திரிந்த... லெப்ரோன்கள் மீது கொண்ட காதலில் கலவி கொண்டே தந்தன.. அணுக் குழந்தைகள். காபனின் கறுப்பில் கவர்ந்திட்ட ஐதரசனும் காந்தர்வமாய் கலந்திட்ட ஒக்சிசனும்.. இடையில்.. நைசா நுழைந்திட்ட நைதரசனின் நாட்டமும் கூடவே.. பொஸ்பரஸின் கூட்டும் கூடிக் கண்ட விளைவே டீ என் ஏ...! டீ என் ஏ சுருளிச் சுற்றில் சிக்கிக் கொண்ட காதல் எஸ் எம் எஸ் ஸுக்கள் அமினோ அமிலங்களாய் வாசிக்கப்பட அங்கு பிறந்த கவர்ச்சிச் சண்டையில் நடந்த கலவியில்.. புரதங்கள் பிறப்பெடுக்க கருக்கொண்டது உயிரின் உருவம்..! அழகும் வர்ணமும் அறிவும் திறனும் கூட…
-
- 29 replies
- 2.5k views
-