Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by analai theevaan,

    பிறந்தால் எங்கள் மண்ணில் பிறக்க வேண்டும்! இறந்தால் எங்கள் மண்ணில் இறக்க வேண்டும்! எரித்தால் என் ஊர் சுடலையுள் எரிய வேண்டும்! புதைத்தல் என் ஊர் மண்ணுள் புதைய வேண்டும்!

  2. தென்னாபிரிக்காவின் சேரிக் குடிசைகளின், கறள் படிந்த கூரைத் தகரங்களின் கீழும், சூரிய ஒளி நுழைய இயலாத, செம்மண் குடிசைகளின் இருட்டுக்களிலும், பெரு வீதிகள் குவிகின்ற, கூடார வளைவுகளின் கீழ்த்தளங்களிலும், தினமும் பசித்திருக்கின்ற, மனிதர்களின் வெற்று வயிறுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! ரொபின் தீவின் கரை தொடுகின்ற, கடலலைகள் எழுப்பும் அழுகுரலிலும், சுண்ணாம்புக் கற்களில் சம்மட்டிகள், செதுக்கிய துவாரங்களில் புகுந்து, வெளியில் வருகின்ற அனல்காற்று, எழுப்புகின்ற அவலம் கலந்த ஓசையிலும், ஆருமற்று அனாதைகளாய் இறந்து. புதைந்து போன சிறைக் கைதிகளின், உக்கிப்போன எலும்புக்கூடுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! காவலர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, கடல் வெளிக…

    • 4 replies
    • 675 views
  3. விதைகளை தின்னும் தேசத்தில் முகிழ்த்தவளே, கனவுகளை கருவறுக்கும் கொலைவாள்களிடையே எழுந்தவளே.. இழப்பின் வலிகளை மொழிகளால் இறக்க முனைந்தவளே இழிகாலதில் இறங்கிய ஊழியின் மகளே.. குருதி குடிக்கும் பேரினத்தின் குரல்வளையில் விலங்கு பூட்டவா நீ எழுந்தாய் ... இல்லையே.. அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே நீ அமர்ந்தாய் வீதியில்... விபூசிகா... வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே உன் குரலணுக்களின் தீண்டலால் தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் கருகி நைந்துபோன திடல்களிலும் ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன.. வேரீரமிழந்து இலையுருத்திக் கிளைசிதைந்து போன பெருமரத்தில் கூடுகள் அழுகின்றன. உடல்சுமந்த குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்.. எட்டப்பர்கள் நாங்க…

    • 6 replies
    • 703 views
  4. தூல உடல் துறந்தோரின்.... ஆலயமழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். இது கார்த்திகை மாதம் பூவேந்தி எம் புதல்வரின் பொன்முகம் காணும் காலம் மண்மடியில் குடிபுகுந்த புனிதர்களைப் புதுக்குவித்து, எண்சாண் மெய்சிலிர்த்தெம் உயிர் உருகும் நேரம். காலப்பெருவெளியில் ஈழக்கதை எழுதிய இளவேணில்கள் - தம் உறவுகளைக் காணக்காத்திருக்கும் திருமாதம். தூல உடல் துறந்தோரின் ஆலயம் அழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். ஈனமா… இனத்திற்கா… இன்னுயிரை ஈந்தோமென தோழ ஆத்மாக்கள் தொய்தொடுங்கக்கூடாது. ஆழத்தாய்மடியின் அணைப்பிற்குள் இருக்கும் எங்கள் காலப்புதல்வர் கண்கலங்கக்கூடாது. ஞாலப் பரப்புகளில்……. உறவுகளே! காலச்சி…

    • 12 replies
    • 1.8k views
  5. தியாக சரித்திரங்களின் நாயகர்கள் தாயக மண்ணின் காவலர்கள் தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் - தமிழீழத் தாய்க்காக களமாடிய.... மாவீரர்கள்! கந்தகக் காற்றைச் சுவாசித்து... விடுதலை ஒன்றையே யாசித்து... அவர்கள் புரிந்தது பெருந்தவம் தம்மையே உருக்கி.... எம்மைக் காத்த காவல் தெய்வங்கள் ! மண்ணின் நிரந்தர விடியலுக்காய், நிரந்தரமாய் மண்ணுள் உறங்கும் வீரத் தமிழ்ச் செல்வங்கள் ! எதிரியின் தோட்டாக்கள் கூட இவர்களைப் பார்த்து அஞ்சும்! மரணம் கூட இவர்களிடம் கெஞ்சும்! இவர்களின் தியாகம் மரணத்தையும் விஞ்சும்!! புன்னகைத்தபடியே போர்க்களம் புக இவர்களால் மட்டுமே முடிந்தது! எம் தேசமே இவர்களால்தான் விடிந்தது!! தாயக மண்ணைத்தான் நேசித்தார்கள்- அதன் விடுதலை ஒன்றைத்தான் சுவாசித்தார…

  6. Started by வர்ணன்,

    பணக்காரன்....... நீ! இருப்பதை இழிப்பதில்! ஏழை நீ...... விரல்களை கருக்கியபின் புல்லாங்குழல் வாசிப்பதில்! ஆமையும் ஓடிச்சாம்....... முயலும் ஓடிச்சாம்........... அது வென்றதோ.... இல்லை - இது வென்றதோ....... நீ வெல்லமாட்டாய் - நம்பு! வெற்றிக்கும் தோல்விக்கும் எல்லைகளிருக்குமாம்.... உனக்கு? இடுப்பிலிருந்த துணி அவிழ்த்து... கண்ணைக்கட்டினால்....... இருட்டாகிடுமா பூமி? அம்மணமாய் ஆனாய் போ!

    • 8 replies
    • 1.3k views
  7. மலர்களிலே குருதி மணக்கிறது, நாளை அவைகள் குண்டுகள் காய்க்கலாம் வன்டுகள் இப்பொழுதெல்லாம் தேன் குடிப்பதில்லை - அவை குருதி குடிக்கப் பழகியதால் துப்பாக்கிகளையல்லவா காதலிக்கின்றன. காற்றில் உயிர்கள் மிதக்கின்றன அவை பலாத்காரமாக பறிக்கப் பட்டதனால் உரிய இடம் சேராமல் காற்றில் மிதந்து அலைகின்றன. நாளைகளில் ஊர்கள் இருக்கும் புல் பூண்டு, மிருகம், பறவைகள் எல்லமே இருக்கும் மனிதனைத் தவிர..............

  8. கைக்கு எட்டாத வானமாய் - என் கண்களில் தெரிகின்றாய் நீலமாய்! தொலைதூர நோக்கங்கள் எதுவுமில்லை, தோலுரித்த இசைகளைத் தவிர! உன் புன்னகைக்குள் விழுந்து கிடக்கும் வீரனாய், இன்னும் இருக்கின்றேன் உயிருடன்! உன் கண்கள் இன்னும் என்னைச் சீண்டுகின்றன... கூர்மையான வாளுடன்! கொஞ்சமேனும் தள்ளிப்போடு யுத்தத்தை, நான் போராட என்னுயிர் வேண்டும்! அதுவும்.... நீதான்!

  9. அன்று நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம் மருதை குறிஞ்சி பhலை முல்லை நெய்தல் என நிலங்களை ஐந்தாக பிரித்து அழகான எம் நிலத்தில் அமைதியாக வாழ்ந்தோம் நெத்தலி மீன்க்ள் துள்ளி விழையாடும் கடற்கரையில் துள்ளி மகிழ்ந்தோம் குடலை நெற்கள் கதிர்விட அக மகிழ்ந்தோம் தடிமன் வந்தால் பாட்டி செய்த ஒடியற் கூழில் பஞ்சாய் பறந்து விட நிம்மதியாய் வாழ்ந்தோம் முற்றத்து செவ்வரத்தம் பூக்களில் முகம் விழித்தோம் துலா கப்பியில் தண்ணி அள்ளி சோம்பல் போக்கி முகம் கழுவினோம் தொட்டாற் சிணுங்கியை தொட்டு மகிழ்ந்தோம் பட்ட காயத்திற்கு வெட்டொட்டியால் கட்டுப்போட்டோம் நாலு மணிப்பூக்களில் நேரம் பார்த்தோம் சாலைகளில் நடக்கும் போது சுகம் விசாரித்தோம் …

  10. புலம்பெயர் ஈழத் தமிழர்களே புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள் போக்கில் வேண்டும் மாற்றங்களே நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன் நீங்கிட வேண்டும் வேற்றுமையே வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை வடித்திட காரணம் பொறுத்திடுக நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர் நிச்சியம் ஈழம் பெறுவீரே இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த எதையும் பெரிது பண்ணாதீர் புதுவழி காணல் ஒன்றென்றே-அறப் போரினை தொடங்குவீர் நீரின்றே அதுவரை நடக்கும பேயாட்டம்-சிங்கள ஆணவ நாய்களின் வாலாட்டம் எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை எதிர் வரும் காலம் காண்பிக்கும் வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள் வாழ்வில் வீசிய புய லாலே தஞ்சம் தேடி உலக கெங்கு…

  11. "உனக்கு தலை குனியும் !" நேற்று: "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!" இன்று: "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!" நாளை: …

  12. ஏழையும் இறைவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1 தந்தன தான தனாதன தந்தன // தந்தன னானானா .........// தந்தன தான தனாதன தந்தன // தந்தன தானானா - தன // தந்தன தானா....னா // அகதிகளாகி உலக உருண்டையில் // அலைகிற செந்தமிழா // கபோதிகளாக இருளின் புதல்வராய் காணாமல் போவோமோ - நாம் காணாமல் போவோமோ. // ( தந்தன...... ) அகிலத்தில் எங்கள் இளைய தலைமுறை // அடியற்றுப் போகாமல் // புகழ்மிகும் எங்கள் கலைகளில் வேரோடி // பூத்திட வேண்டாமோ - நாம் // பூத்திட வேண்டாமோ // ( தந்தன .... ) பாட்டியின் பாட்டி பாட்டனின் பாட்டன் சொல்லிய கதை ஒன்றை நாட்டியம் ஆடி * ச…

    • 14 replies
    • 2.9k views
  13. மாவீரர் தோழனுக்காய்.. கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கடலளவு கருணை இல்லாவிடினும்‍‍‍ _சிறு கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில் வீர வரலாறு எழுதினாயேடா தோழா வீர வரலாறு எழுதினாயே... தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய் தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா தினம் தினம் சிலுவை சுமந்தாயே... உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும் ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா இன்னுயிரை ஈய்ந்தாயே... கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில் குண்டு சுமந்தாயேடா தோ…

  14. தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை. வட்ஸ்அப்பில் எனக்கு ஒரு அன்பர் பகிர்ந்ததை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி

  15. அப்பால் தமிழ் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள கவிதை இது. படித்தேன். பிடித்திருந்தது. பகிர்கிறேன். எதிரிக்காயும் கவலைப்படும் உள்ளம் தமிழர் உள்ளம் என்பது கவிதையில் மீண்டும் வெளிப்படுகிறது. போர்த்துக்கீசரில் தொடங்கி, சிங்களவரிடம் வந்து... கவிஞர் மிக இயல்பாகவும், கவிநயத்தோடும் கவிதை வடித்து வைத்துள்ளார். இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்கு நினைவில் வந்த வரிகள்: இசையை மட்டும் நிறுத்தாதே எழுதியவர்: க.வாசுதேவன் 1. அமெலியா, போர்த்துக்கல் அழகியே, நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய் இன்று இது எம் இறுதி இரவு சாளரத்தினூடே பார் இருள் அடர்த்தியாக இருக்கிறது வானெங்கும் அளவிற்கதிகமாகவே விரவிக் கிடந்தாலும் நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்? …

    • 5 replies
    • 1.8k views
  16. எனக்கொரு முகவரி தேடிஇரவினைப் புரவிகளாக்கிசாட்டையில் புறத்தினை தோய்துதனிமையில் சொர்ப்பணம் கொண்டாள் இருதயம் துடித்திடும் போதுஎன் கணம் நீண்டிடும்போதுவிடத்துடன் நாகத்தை தேடிவிடை கொடு உடலிம் உயிரேசருகினில் பற்றிய தீயேகொடியிடம் செந்நிறம் கொண்டாய்புலவியில் பிதற்றளும் முறையேபுன்னகை கொண்றிடும் மனமேதிதியது நெரிங்கிடும் நேரம்கனிகளும் விதைகளாய் விழுமேகாந்தளின் தொடுகையில் விழவேமேகமும் கரையுது நிலவேகுறையது நிறையதைக் கொள்ளும்குற்றமும் தண்டனை தூக்கும்இரு நிலை இயங்கியல் உலகில்இடைவெளி சேர்தலின் காளமேஇறந்திடாத் தூடித்திடு மனமே

  17. Started by Karan T.,

    எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்துவிட்டால் என் உள்ளம் தாங்காதே கைகளை பிடித்து உள்ளத்தை நீ அணைத்தாய் தோள்மீது தலைசாய்த்து உன் சுமையை இறக்கிவைத்தாய் உன் உதட்டின் வெப்பத்தில் என் கன்னம் உருகிபோக மெய்மறந்து நான் நின்றேன் இன்னும் இறுக்கி அணைத்தாயே உன் கண்ணின் நீர்துளி கைகளிலே ஏந்திவைத்தோன் உன் கையில் என் இதயம் பத்திரமா சொல் தோழி உயிரை பகிர்ந்தாய் உறவை பகிர்ந்தாய் காலம் முழுதும் என்னோடு துணையாக வரவேண்டும் எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்…

    • 1 reply
    • 975 views
  18. அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு விலைக்குறைப்பு ஊ…

  19. கொலைக் களத்தில் கோல மயில்..... கவிதை - இளங்கவி.... மாஞ்சோலை ஒன்றிலே மாமர நிழலின் கீழ் மன்னவனின் மடியிலே மயிலொன்று படுத்திருக்கு..... மாங்கனிகள் பாரத்தில் கிளைகள் எல்லாம் நிலம் தடவ.... மயக்கும் விரல் கணையால் மடி கிடந்த பொன்மயிலின் மென் ஸ்பரிசம் அவன் தடவ... ச்சீ.. வேணான்டா.... கையை எடு.... நான் வீட்டை போப்போறன்.... இல்லை..இல்லை நாளைக்கு வயல் வேலை நான் வர மாட்டேன்டி.. அதனாலே இன்று உன்னை தொட்டுவிடப் போறேன்டி..... இல்லையடா... செல்லம் இது வேண்டான்டா... இப்போ நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால் நாம் வீட்டைபோவோம் இப்போ... சரியடி போவோம்.... காலையிலே எனக்கு என்ன சாப்பாடு கொண்டருவாய் நான் மண்வெட்டி பிடிக்கம…

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐயாக்களே! ------------------------------------------------------- வாக்குத் திருவிழா முடிந்தது போக்குக் காட்டிப் பிடிக்க முனைந்த வாக்குகள் யாவும் வராமல் போனதால் சிறிலங்கா மீண்டும் வழமைக்குத் திரும்பியது! மீண்டும் எங்கும் சோதனைச் சாவடி ஓமந்தையில் தனிதனித் தனித்தனியாக உடற் பரிசோதனைக் கெடுபிடி எடுபிடிகள் ராச்சியத்தில் எதுவுமில்லை என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட ராயபக்ஸயாக் கூட்டமது தமிழ் மக்களைத் தினந்தோறும் கசக்கிப் பிழிந்து காழ்ப்புணர்வைக் காட்டி சிங்களத்து வாக்குகளை முழுவதுமாய் பெறுவதற்காய் வகுக்குமினித் திட்டங்களை… திட்டங்களில் முதற்பலியாவது தமிழினமே சம்பந்தருக்குமென்ன சரத்துக்குமென்ன சாவதும் அழிவதும் யாரோ எவரோத…

    • 0 replies
    • 895 views
  21. ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06 சில வேளைகளில்.... சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட காதல் தொற்றிக்கொள்கிறது! அதன் இனிய நினைவுகளால்... மனம் கொஞ்சம்... தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது!! காத்திருப்புக்களும் சந்திப்புகளும் கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்.... அந்த தேநீர்விடுதி! வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும் அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...! காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில் அதற்கும் கொள்ளைப் பிரியம்...!! அங்குள்ள பணியாளரைப்போலவே இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!! அவளுக்காகக் காத்திருந்த பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....…

  22. எனது பிரத்தியேக கோவையை நேற்று இரவு சரிபார்த்தபோது அதனுள் இருந்த சில "நிழற் பிரதி"களுல் ஒன்றாய் பின்வரும் கவிதையும் இருந்தது... ஆழமான அர்த்தமும் உணர்வுகளும் நிரம்பிய இக் கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்.. "நிலா"என்ற பெயரிலான பெண்போராளி எழுதியிருக்கிறார்..... நீங்களும் இரவும் நாங்களும் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து உங்களின் கரங்கள் நீளும் நிற்போம் "அண்ணை நானும் வரட்டா?" என்பீர்கள் வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம். ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள் ஒரு கணம் நிதானம் இழ்ந்து போனால் "டிம்" இல்லையோடா? என்று திட்டுவீர்கள். சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும். …

  23. சாதிவெறி இன்னும் சத்தியமாய் தீரவில்லை எங்கள் தமிழ் போராட்டமும் அவ்வெறியை தீர்க்கவில்லை பலநூறு மைல்கள் பறந்து வந்தும் ஐயையோ பார்கின்றோமே சாதியது இங்குமல்லோ ஆதியிலே சாதியில்லை பாதியிலே வந்ததென்று சேதியாகச் சொல்லுறாங்க ஓதியே வைச்சாங்க மோதித்தான் சாகிறாங்க கோதித்ததான் பார்க்கிறாங்க மீதியாய் ஒன்றும் இல்லை சாதியால் அழிவுதாங்க. பார்பனரோ கொண்டு வந்தார் ஏற்பவரோ ஏற்றி விட்டார் தீர்ப்பவரோ இன்று இங்கு திண்டாட்டப் படுறாங்க மோர்மிளகாய் செய்து தந்தால் முட்டி மோதித் தின்னுவாங்க ஊர்காரர் உள்ளே வந்தால் எட்ட நில்லு என்கிறாங்க சாதியில்லை என்று தான் அம்பேத்கர் சொன்னாங்க வாதியாக பெரியாரும் அதைத்தானே சொன்னாங்க நாதி…

    • 14 replies
    • 2.4k views
  24. உனது ஆட்சிக்கான சாவுமணியை நீயே அடிக்கிறாய்.. நாமென்ன செய்ய..? உன் அழிவுக்கான குழியினை நீயே வெட்டுகிறாய்… யார் என்ன செய்ய..? உனது அகங்காரங்கள் உனக்கான பாடையை அலங்காரம் செய்து கொண்டிருப்பதை நீ அறிய மாட்டாய்… உனது கொடுங்கோலின் நுனி உனக்கான கல்லறையைச் செதுக்கும் உளியென்பதை நீ உணர மாட்டாய்… மனிதத்தையும் மனிதர்களையும் எரித்துக் குளிர் காய்பவனே… பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே… உன் அரசாசனத்தை அக்கினி சூழ அதிக நாட்களில்லை…! ஆமாம்… உனது ஆணவ நடை ஓயும்.. உன் அகம்பாவக் குடை சாயும்…! உனது மாட மாளிகைகள் மண்ணோடு புதையும்; கூட கோபுரங்கள் குப்பை மேடாகும்! எங்களின் தயவாலும் நீ சூடிக் கொண்ட மகுடம் இன்னும் சில மாதங்களில் எரி…

    • 1 reply
    • 783 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.