Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அறம் -வ.ஐ.ச.ஜெயபாலன் கண்ணகி உயர்த்திய ஒற்றைச் சிலம்புக்கே மதுரையோடு மன்னனும் அழிந்தான். முள்ளிவாய்க்கால் ஊழியின்போது குருதி சிந்தச் சிந்த உயர்ந்த ஆயிரம் ஆயிரம் ஒற்றைச் சிலம்பால் கொடுங்கோல் மன்னனின் தோழ தோழியர்கள் முடியிழந்தின்று தெருவினில் அலைகிறார்.. சிலம்பே சிலம்பே ஒற்றைச் சிலம்பே இசைப்பிரியாவும் தோழ தோழியரும் உயர்த்திப் பிடித்தத தர்மச் சக்கரமே கடலில் வீழ்ந்த தமிழக மீனவன் கைகளில் உயரும் ஒற்றைச் சிலம்பே தமிழன் குருதியைச் செங்கம்பளமாய் இன்னும் எத்தனை நாட்கள் விரிப்பரோ தர்மம் நசியக் கொடுங்கோல் விருந்து இன்னும் எத்தனை நாட்க்கள் வருவரோ

    • 6 replies
    • 1.3k views
  2. ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா ! நிறவெறிக்கெதிராய் நெருப்பெடுத்த கறுப்புச் சுடர். காலம் ஆபிரிக்க இருளகல கைபிடித்தேற்றிய பேரொளி. இருள் கொன்று ஆபிரிக்கர் ஓளிகொண்டெழ உதித்த மூத்தவன் மண்டேலா. இனவிடுதலையை உயிராய் கொண்டதால் - நீ இருபத்தேழு வருடங்கள் இரும்புக்கம்பிகளில் அடைபட்டு வெளியில் வந்த போது நீயே உலக விடிவெள்ளியாய் ஆகினாய். போராடும் தேசங்களின் வழிகாட்டியாய் ஒளியூட்டிய இரும்பு. இறந்து போனாயாம் இன்றைய செய்திகள் உன்னையே நினைவில் உடுத்திக் கொள்கிறது. தங்கச் சூரியன் எங்கள் தலைவன் உன்னையும் சொல்லியே உருவாக்கினான் தமிழனை தமிழீழ விடுதலைப்போரை வரலாறாக்கினான். உனக்கு நிகராய் உனக்கு நேராய் வாழ்ந்த எங்கள் தலைவனை உன்னில் காண்கிறோம் உலகில் வாழ்…

    • 6 replies
    • 785 views
  3. நிலம் மிதித்தவனின் வதை கோ- நாதன் எனதான மார்பு பால் சுரந்து மடியறங்கம் திரண்டிருக்க மழலை முகம் புதைத்து மகிழ்ந்த அதர சிறு புன்னகையினை பிடுங்கி பெரும் நிலத்தினை மிதித்தவன் தலை வெட்டி திருகித் தூக்கி வீசியிருந்தான். என் கால்களையும்,கைகளையும் பல பூட்ஸ்க் கால்கள் மண்ணிலழுத்தி மல்லாந்து கிடத்திய போது எனதான வெள்ளைத் தோலின் மார்புகளை கடைவாய்களும் கடித்து குதறி உமிழ.. இரத்தமும், காயமும் உடம்பெல்லாம் வழிந்து உறைந்தது.காமப் பிசாசுகள் முலையறுத்து முலைக் காம்பினை குழந்தையின் குதத்தில் திணித்து. மொத்த இயக்கங்களுமற்ற சின்ன யோனித் துவாரங்கள் வழியே எண்ணிக்கையற்ற பெருத்த ஆண்குறிகள் வக்கிரம் தீர்த்து கொண்டிர…

  4. எனக்கொரு மகன் பிறப்பான்..... ------------------------- எனக்கொரு மகன் பிறப்பான் -அவன் என்னைப்போல இருக்கான்.. ஆமிக்கும் சாமிக்கும் பயந்து ஊரை விட்டுப்போகான் அடுத்தவர் காணியில் கதியால் தள்ளி நடவான்... பூனைக்கும் நாய்க்கும் சகுனம் வைத்து தொடங்கும் முயற்சியை விடமாட்டான் காதல் அறியாவிட்டாலும் காமம் எண்ணி அலையான் வீணுக்குப்போகும் பயல்களுக்காக வேலியை உயர்த்தி அடையான் சோத்துக்கு அலையும் பயல்கள் போல் சோம்பேறி மடத்தில் தங்கான் நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான் மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான் படத்தைப் பார்த்துப் படிப்பான் பவுடர்ப் பொடிக்கு மயங்கான் உலகம் போற்றும் சயன்ஸு தெரியாவிட்டாலும் உயிர்கள் கொல்லும் …

    • 6 replies
    • 1.6k views
  5. எனக்கொரு அம்மா இருக்கிறாள். பத்து மாதம் சுமந்து பெற்று பால் ஊட்டி சீராட்டி தாலாட்டி பள்ளிவரை அனுப்பி வைத்தாள் கல்வியோடு ,கண்டிப்பும் பரிவும் பாசமும் ஊட்டியவள் . எது கேடாலும் பெற்று தருவாள் பள்ளிக்கு பணமா? சுற்றுலாவுக்கு அனுமதியா தோழிகளோடு ஊர் சுற்றலா? கடல் கடந்து நான் வெளி நாடு வந்த போதும் என்னுடன் ...வாழும் அம்மா பள்ளிக்கு செல்ல நேரமானால் காலைச்சாபாடு ..ஊட்டி விடும் அம்மா சகோதரிகள் இருவர் ..மணமுடித்து வெளிநாட்டில் கடைக்குட்டி நானும் பல்கலைக்கல்லூரியில் மணமுடித்து நான் மறுவீடு சென்றாலும் மறக்காமல் என்னுடனே வந்து விடு...... வெள்ளைக்காரர் நாட்டில் அன்னையர் தின விழாவாம் எனக்கு தினமும் என் அன்னை தின விழா தான்

  6. ரூபன் சிரித்திரன் 5ஆண்டு நினைவில்...! கையசைத்துப் போனவெங்கள் காலம் தந்த வீரங்களே ! கனவுடனே வானேறி கொழும்பு சென்ற கரு வேங்கைகளே ! காற்றினிலே கைவீசி முல்லைக் கடற்கரையும் காத்திருக்க கனல் மூட்டிச் சென்ற எங்கள் காவிய தீபங்களே ! அனலெறியும் தீப்பொறியாய் விழி கனலெறியத் தணலாகித் தமிழ் மானம் மீட்டுவரப் போனவெங்கள் தம்பிகளே ! மீளத்திரும்பா உறுதியோடு மீளும் தேச நினைவோடு போனவரே மீளாத்துயர் கொண்டெங்கள் மனசெங்கும் துயரலைகள் ! ஆண்டுகள் 5 தாண்டி உங்கள் ஆன்மக்கனவுகளைத் தாங்கியவெங்கள் பயணம் உங்கள் நினைவுகளோடு தொடர்கிறது.....! 20.02.2014

    • 6 replies
    • 810 views
  7. ஓடிவா தயங்காமல்; நாடிவா களங்காமல்; கோடி துயர் தொடர்ந்தாலும் நட்பின் கூடல் மகிழ்வாகும்! தென்றல் வந்த பாதையில் சென்றனவே சோகங்கள்! வாழ்வில் சேர்ந்த வலிகள் எல்லாம் வானில் திரண்ட மேகங்கள்! மழை நீரின் விந்தை மண்ணில்; இன்ப ஊற்றின் ஆரம்பம்! மீதம் உள்ள உந்தன் வாழ்வில் என்றும் பொங்கும் பேரின்பம்! உறவுகள் பலம் கொண்டு உவகையில் உருவாகும் சிநேகிதம் கரும்பாகும்; பகைமைகள் துரும்பாகும்; தோழமை மருந்தானால் நோய் நொடி நெருங்காது; வேதனையும் திரும்பாது; துணையாகும் வருங்காலம்! ஓடிவா தயங்காமல்; நாடிவா களங்காமல்; கோடி துயர் தொடர்ந்தாலும் நட்பின் கூடல் மகிழ்…

  8. புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்! - வித்தகக் கவிஞர் ப. விஜய் இந்தியா வித்தியாசமான நாடு! உள்நாட்டுத் தொழிலாளர்களைப் பிச்சைக் காரர்களாக்கும்! வெளிநாட்டு முதலாளிகளைப் பணக்காரர்கள் ஆக்கும்! அமெரிக்கா விவரமான நாடு! வெளிநாட்டு தொழிலாளர்களை பிச்சைக் காரர்களாக்கும்! உள்நாட்டு முதலாளிகளைப் பணக்காரர்கள் ஆக்கும்! இலங்கை விபரீதமான நாடு! சவப்பெட்டிகளை தயாரித்து சமாதானம் பேசும்! சமாதானம் பேசிக் கொண்டே ஏவுகணை வீசும்! புத்தனின் போதிமரத்தில் - இன்று செஞ்சோலை சிறுமிகளின் உடல்கள் தொங்குகின்றன செஞ்சோலை வளாகத்தின் மேல் குண்டு வீசிப் பறந்தது விமானம் அல்ல சிங்கள ராணுவத்தின் மானம்! ஒரு ராணுவம் எதிரி ராணுவத்தை…

  9. நாளைய விடியல் நாளைய விடியல் நாம் இருப்போமா..? நாளை சேவல் கூவக்கூடும் நாம் இருப்போமா..? நாளை இங்கு பூவும் மலரும் நாம் இருப்போமா..? ஆழமர நிழலில் அகதி வாழ்க்கை வன்னி மண்ணில் மணல் வீடு கட்டும் குழந்தைகள் அதை உடைக்கும் மழை வெள்ளம்! ஐ.நாவில் ஆயிரம் தொண்டர்கள் இருந்தென்ன..? எம்மை எல்லாம் மனிதப் பட்டியலிலா இணைத்துள்ளார்கள்..? மாமிசம் தின்னும் மடையர்கள்! ஆண்ட இனம் அகதியாய் அழியுமோ..? விழிக்குமோ தமிழினம் !? குஞ்சு குருமன்களாய் இளையவர், முதியவராய் உங்களில் சிலராய்.. உருக்குலையும் எங்கள் உடன்பிறப்புகள் இங்கு தினம் தினம்! பாலகன் ஒருவன் பாடுகிறான! பாவியர்கள் நாங்கள் ஏன்..? அவதியில் ஆக்கப்பட்…

  10. Started by Thamilthangai,

    தசாவதாரம்: குழந்தையாய் நான் பண்ணும் குறும்புகள் ரசித்து உன்னுள் மகிழும் போது தாயாகிறாய்! விளைகின்ற பலாபலன்கள் யோசியாது செய்யும் போது கனிவுடனே கண்டிக்கும் தந்தையாகிறாய்! எப்போதும் முதல் நானே என்றெண்ணும் எண்ணத்தை நீயே போற்றி விட்டுக்கொடுக்கும் தமக்கை ஆகின்றாய் வேறொருவர் வந்தென்னை தாக்குகையில் காத்து நின்று எப்போதும் மானம் காக்கும் அண்ணன் ஆகின்றாய்! வாழ்வினைகற்பித்து வழிகாட்டி நெறி காட்டி நல்லனவே எண்ண வைக்கும் குருவாகின்றாய்! சோகங்கள் சொல்லுகையில் தோள் கொடுத்து சோராமல் உற்சாகம் தரும் போது தோழனாகின்றாய்! மகிழ்வூட்டி என்னையே மனசாரப் பாடி உன் மடி சாய்த்து என் உயிரே நீ ஆகின்றாய்! என் உயிர்க்குடங்கள் தான் நிறைத்து உணர்வுகளிலே பூச்சொரிந்து உ…

  11. கொள்ளிடம் கதி கலங்கும்! ஊற்றுவாய் பிளந்து பொங்கிப் பரவும் காட்டாறுகள். கூற்றுவனோடு கை குலுக்கி கலகலக்கும் ஞானிகள். ஈழம் காக்கும் கந்தகப் புயல்கள். எதிரியை ஒடுக்கும் எரிமலைகள். போரின் வெற்றியை நிர்ணயிக்கும் கூரிய முனைகள். பாரியைப் புறம் தள்ளி - ஈழத் தாயவள் வலிமைக்காய் தம்... உயிர்,மெய் உவந்து ஊட்டி - அவள் வீரியத் திசுக்களின் வேதியப் பொருளிவர். பற்றுகள் அற்றவரா?.... பற்றுகள் உற்றவர்! தமிழ் ஈழம் கசக்கும் வேற்றுவர் அகற்ற இகத்தைத் துறந்த இளைய துறவிகள். இறுதிப் பயணம் இன்றி உறுதி புூண்ட உன்னத வேங்கையர். உயிரைக் குடைந்து, உருக்கிப் பிழிந்து, உதிரத் துளியும் காற்றில் கரைய காவியம் படைக்கும் வீரியத் திரிகள…

    • 6 replies
    • 1.4k views
  12. இனி எம் காலம்!. தெறிக்கும் பொறி பறக்கும் புலி படை கண்டு பகை கலங்கும்! வெளிக்கும்! இனிச் சிரிக்கும்-கதிர் தமிழர் கிழக்கில் உதிக்கும்! எதற்கும் இல்லை கலக்கம்!எட்டு திசையும் இங்கே வெளிக்கும் பதுங்கும் புலி பாயும் இனி பொறுப்பதில்லை!. விலங்கு உடைக்கும்! வெடிக்கும் சிங்களக் கூடம்! வேங்கை அடக்கும்! பேரினத்தீயை! எடுக்கும் ஓட்டம் மகிந்த கூட்டம்! பறக்கும் எம் கொடி தலை நகரில்!

  13. மலரின் சிதைவொன்று காணொலியில்.......... கவிதை...... விடுதலைக்காய் விதையான எங்கள் வீரச் சின்னமொன்றை சிதைத்த காட்சி கன்டதுமே கண்களிலே இரத்தத் துளி...... கருகிய மலரைக்கூட கசக்கிய காட்சிகண்டால் புத்தரும் நடுங்கிடுவார்.. கிட்லரும் ஓடிடுவான்.... ஜேசு நாதர்கூட; மறுபடியும் சிலுவையிலே ஏறிடுவார்..... தன் தாயும் சகோதரியும் பெண்ணென்று நினைக்கவில்லை... அவள் போராளியென்றாலும் பெண்ணென்று நினைக்கவில்லை... கருகிய மலரையும் கற்பழித்த பயங்கரம்..... அதைக் கனவில் கண்டாலும் மனதில் மாறா வடுவாகும் மனதில் அது நிரந்தரம்...... நாயென்றும் சொல்லமாட்டேன் அது நன்றிக்கு வாலாட்டும்.... பேயென்றும் சொல்லமாட்டேன் பெண்ணென…

  14. Started by putthan,

    ஆலயத்தில் தேடு ஆண்டவனை என்றார்கள் ஆழ்மனதில் தேடு ஆத்மாவை என்றார்கள் முற்பிறவி மறுபிறவி இப்பிறவி என்றார்கள் ஆத்மவிடுதலைக்கு தத்துவங்கள் ஆயிரம் தந்தனர் தனிமனித விடுதலைக்கும் விளக்கங்கள் பல கொடுத்தனர் சமூக விடுதலைக்கு விளக்கம் கொடுக்க மறந்ததேன்!!

    • 6 replies
    • 1.3k views
  15. "லிபரேசன் ஒப்பரேசன்"..... வடமராட்சி மக்களால் எனதூர் நிறைந்தது இளவட்டம் நிறையவே வந்தது பு+சாவைத் தப்பிய பெருமூச்சு எங்கும். எங்கள் வளவிற்கும் வந்தார்கள். காய்த்துக் குலுங்கிய மரமுந்திரிகை, அது முற்றத்தில் முன்னிற்கு நின்றது. கனியாதனவும் உண்டார்கள்! ஐயோ தம்பி பழமே கடினம் காயாய் வேணாம் சமைக்கிறோம் பொறுங்கள் முடியாது போனால் கொல்லையில் மாமரம்..… "முந்திரி தானே உடனே எட்டுது" பசியில் தோய்ந்த பதிலே கேட்டோம். ரூபவாஹினிச் செய்தியின் நேரம் வீட்டிற்குள் குறைந்தது நூறு பேர் இருக்கும் பு+சாக்குப் போகும் கப்பலைப் பார்த்து அடையாள அணிவகுப்பு அன்றங்கு நடந்தது! புங்கடிக் குளமும், ஈட்டி எறிஞ்சானும் கொட்டிகை வெளியும், கட்டுவரம்பும் காட்டினேன், …

    • 6 replies
    • 1.4k views
  16. முள்ளிவாய்க்கால் ஓரத்திலே விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவை சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களை சுமக்கிறது கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் - ஓவியா- முற்காலத்தில் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் நேற்று அழுகுரல் எழுந்து ஊழித் தாண்டவமாடி இன்று சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது தொடர் வேவுவிமான இரைச்சலில் மழையாயிற்று எறிகணை இழந்த உறவுகள் போக எஞ்சியவர் சித்தம் இழந்தனர் எல்லாம் சூன்யமாயிற்று அழுகுரல் நிரம்பிய மண் அதிர்விலிருந்து …

    • 6 replies
    • 10.8k views
  17. தாயக கனவுடன் சாவினை தழுவிய ..... .. கார்த்திகை இருபத்தியேழு மாவீரர் தினம். மெளனமாய் அஞ்சலிப்போம்..... முப்பது வருடங்களுக்கு மேலாக எம்மை நாமே ஆளவேண்டும் சகல உரிமையுடன் வாழ் வேண்டும் என்னும் உன்னத நோக்கதுகாய் "தமிழர் தாயகம் தமிழ் ஈழம்" என்னும் தாரக மந்திரத தோடு சாவினை தழுவிய மா வீரர்களே இறுதி போரிலே , கந்தக குண்டுகளின் குண்டு மழையிலே சிதறுண்ட மக்களே குற்றுயிரும் ..குறை உயிருமாய் புதைக்க பட்டவ ர்களே ...நீங்கள் மண்ணுக்காய் விதைக்க பட்டவார்கள் விழி நீர் மழை சொரிய ,நினைக்கின்றேன் எத்தனை கனவுகள் ஆசைகள் விருப்பங்கள் என்பவற்றை மண்ணுக்காய் துறந்த மாவீரர்களே. தாயாய் தந்தையாய் சகோதரியாய் மனைவியாய் மகளாய் மகனாய் விதைப…

  18. நிகழ்காலமும் நிகழ்ந்த காலமும்... பெற்றவரை பிள்ளைகள் பேணிவந்த காலமது பிள்ளைகளால் பெற்றவர்கள் கூணுகின்ற காலமிது சொற்ப பணமிருந்தால் சொர்க்கம் தான் அந்தக்காலம் மெத்த பணமிருந்தால் நரகம் தான் இந்தக்காலம் அவதியுடன் வாழ்ந்தாலும் ஆண் உழைக்கும் காலமது சவுதிக்கும் சென்று பெண் உழைக்கும் காலமிது உயிர்காப்பான் தோழன் என்பர் உண்மைதான் அந்தகாலம் உயிர்கேப்பான் தோழன் இதை உணருகின்றோம் இந்தக்காலம் கட்டுப்பாட்டுடன் மனிதன் காதலித்த காலமது இஸ்டபடி இளைஞன் எதையும் செய்யும் காலமிது பூஞ்சோலைக்குள் மட்டும் புனித காதல் அந்தக்காலம் மிருகத்தின் சாலைக்குள்ளும் மீதமில்லை இந்தக்காலம் இன்றையதை விட நேற்றயது நல்ல காலம் நேற்றயதை விட நாளையது எப்படியோ???

    • 6 replies
    • 1.4k views
  19. தமிழ் ஈழம் அமைவதை இந்தியா அனுமதிக்காது. இலங்கை பிரதமர் இஸ்ரேலில் பேட்டி. அடப்போங்கப்பா... இஸ்ரேல் தடுத்தாலும் சரி... இலங்கை குதித்தாலும் சரி... இந்தியா குமுறினாலும் சரி.... தமிழ் ஈழம் நிச்சயம் அமையும்டா என் டுபுக்கு தமிழச்சி கவிதைகள் குமுதம்/பாமரன் பக்கம்

  20. '' குண்டுகள் வெடிக்க வேண்டும்..'' எங்களின் மண்ணிலே ஏறியே வந்து உன் பிள்ளை அனுப்பியே ஊரதை அழித்தாய்... எம்மினம் அழிகையில் ஏனென்று கேட்கல இன்றேன் தாயே வெம்பியே அழுகிறாய்...?? நாளுமே..நாளுமே நரபலி எடுத்தாய் எம் தமிழ் வாழ்விலே இன்னலை அழித்தாய்.. கூடியே வாழ்ந்தவர் கூடதை சிதைத்தாய் எத்தனை அவலத்தை எமக்கன்று திணித்தாய்... இத்தனை மறந்தேன் இன்று நீ அழுதாய்...?? நின்மதி தொலைத்து நித்தமும் அழுதோம்... அத்தனை ரணமும் அனுபவி வேண்டும் உன் உடல் யாவுமே கிழியவே வேண்டும்... அங்க மிழந்து- நீ அலறவே வேண்டும் அது கண்டு அயலவர் கலங்கிட வேண்டும்... பஞ்சம் வந்துன்னை பற்றிட வேண்டும் உணவின்றி நோயினால்- நீ இறந்திட வே…

  21. *** இலை ஓன்று கிளையில் இருந்து பெயர்ந்து விழுகிறது அதன் ஓலம் கேட்டு திரும்புகிறேன் மிகுந்த வலியோடு மண்ணில் புலம் பெயர்ந்து கிடக்கிறது இனி ஒரு போதும் கிளைக்கு திரும்ப முடியா மரண வேதனையோடு மட்கி போக துணிகிறது மண்ணோடு . http://www.saraladevi.com/2013/06/blog-post.html

  22. எல்லாம் என்பதன் அர்த்தம் புரியாதவரை எல்லாம் இங்கே புதுமையாகத்தான் இருக்கிறது. வாரி வழங்கிய கைகள் இன்று வாட்டம் கண்டன. ஏறு தழுவிய மார்புகள் எல்லாம் சோர்வு கொண்டன. ஏர் பூட்டி உழுதிருந்த நெல் வயல்கள் வான் பார்த்துக் காத்திருக்க வாழாவிருப்பதுவே வாழ்க்கையானது. வசந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையிலே வறட்சி மட்டுமே மீதமானது... பட்டினி கிடந்து பழக்கப் பட்டதால் பசி கூடவே எம்மில் ஒட்டிக் கொண்டது நிரந்தரமாக... எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஏமாற்றங்களாகி இன்னும் வாழ்தல் வேண்டி தொடர்கிறது சீவியம்.

    • 6 replies
    • 1.2k views
  23. பூ விழுந்த மனசு கவிதைத்தொகுப்பிலிருந்து......... - காலையில் நான் காணும் வாசல் கோலம் நீயே ! காரிருளில் துணையாகும் ஓளி தீபமும் நீயே ! கண் திரைக்குள் தினம் தோன்றும் கனாவும் நீயே ! என் வாழ்விற்கு வாசம் தரும் பூ வனமும் நீயே ! - உறவெனும் பந்தத்தில் உயிராய் இணைந்தவளே வாழ்க்கை என்னும் கணக்கில் வரவாய் வந்தவளே கானல் நீராய் தோன்றி மறைந்து போகாமல் - என் தாகம் தீர்த்தவளே ! - பனித்துளி தொட்டு சிலிர்க்கும் புல்நுனிபோல் - உன் பார்வையால் தவிக்கின்Nறுன் பாலைவன ஓட்டகம்போல் உன் காதல் தேக்கி வாழ்கின்றேன் மழைமேகமாய் வருவாயா ? என் மனத்தோப்பினுள் சிறு தூறல் வீசிப்போவாயா ? என்.பரணீதரன்

    • 6 replies
    • 1.6k views
  24. தமிழா உனக்கு ஏனிந்த நிலை...??? என்ன செய்தாய் என்ன செய்தாய் என் தமிழா என்ன செய்தாய்..?? ஏன் உனக்கு இந்த நிலை....??? கண்ணீராலே முகம் கழுவி உன் காலை ஏன் விடிகிறது....??? கொட்டும் மழை செல்களிலே உன் குடில் ஏன் நனைகிறது...??? விடிகாலை ஒவ்வொன்றும் ஏன் உனக்கு ஓலத்தை அழிக்கிறது...??? நின்மதி தொலைத்து உன்னை ஏன் நிர்கதியாய் அலைக்கிறது...??? சுடு காடு மட்டும் உன்னை ஏன் சுதந்திரமாய் அழைக்கிறது...??? நிகழ் காலம் ஒவ்வொன்றும் உனக்கு இறந்த காலமாய் ஏன்...?? யுத்த தேசத்தில் சிறை கைதியாய் நீ மட்டும் ஏன்...?? விட்டில் புச்சியாய் உன் ஆயுள் முடிகிறதே ஏன் …

    • 6 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.