கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அன்பின் சம்பந்த சுமந்திர சிறீலங்கா தேச மைந்தர்களே..! சிங்கக் கொடி தூக்கி எம் சினம் தனித்த சிங்கங்களே...! அன்னை சிறீலங்கா மாதா உங்கள் கடவுளாம் காளியின் மறுபிறப்பே..! அவள் தம் வாகனமே எங்கள் கொடி நடுவே நிற்கும் சிங்கம். அவள் கரமிரு ஆயுதமே எம் சிங்கம் ஏந்திய வாள்..! சிரம் தாழ்த்தி ஏற்றோம்... உம்மிருவர் சிங்கக் கொடிதனைப் பற்றிய சீரிய விளக்கங்களை..! வன்னிப் போரும் முள்ளிவாய்க்காலும் வதம்...! அசுர வதம்...! தமிழீழம் என்ற வேண்டா வேள்வி செய்த அசுரர்கள் அழிக்க நாம் செய்த வதம்..! வதம் முடிந்து ஆண்டுகள் 3 ஆகின்ற இப் பொன்னான வேளையில்... தமிழீழம் மறுக்கும் தமிழ் தேசியம் மறந்த.. எம் இனிய தமிழ் பேசும் சிங்கங்கள…
-
- 5 replies
- 1k views
-
-
மாயை… - வ.ஐ.ச.ஜெயபாலன் . இலையுதிர்கால சருகுகளாய் உலகமெங்கும் சிதறினமே அம்ம நீ போனது எங்கடி அனுதினம் உன்னையே தேடினேன். இனிவழி ஏதென நோகையில் இணையத்தில் வந்து கண் சிந்தினாய். நீயுமா தேடினாய் கண்ணம்மா?. எல்லை இலாத மின் அம்பலம் அங்கு ஏங்கும் மனசுகள் சங்கமம் உந்தன் இருப்பை உணர்வதில் உயிரே மயங்குது கண்ணம்மா . இணைவெளியிடைக் கண்ணம்மா உந்தன் எழிலில் மொழியில் கரைகிறேன் அகதி அழிந்திடும் அன்பிலே ஆதரவான மொழியிலே. ஆவியைத் தின்கிற கண்ணிலே போதை ஆசை சிவந்த இதழ்களிலே காட்ச்சியும் பேச்சுமே…
-
- 5 replies
- 1.8k views
-
-
இனி என்னிடம் கவிதைக்கான எந்த ஒரு இலக்கிய வார்த்தையும் மிச்சம் இல்லை என் வார்த்தைகள் பிண வாடையுடன் தான் இனி வரும் *************** எனது மகன் mc donalds MC chicken கேட்கின்றான் அவனது சகோதரங்கள் அரைவாசி எரிந்த உடலுடன் கிடக்கின்றார்கள் என்பதை அவன் அறிய நான் விடவில்லை தமிழ் குழந்தைகளின் இரத்தம் இனியது என்கின்றான் என் சிங்கள நண்பன் அவை உப்பு கரிப்பது இல்லையாம் நேற்றும் எதிரியின் பரம்பரை தமிழ் குழந்தையின் பிஞ்சு போன சதையின் வழி ஊறிய இரத்தத்தை குடித்த பின் சொன்னார்களாம் தமிழ் குழந்தையின் இரத்தம் அதிக யுத்த போதை ஊற்றும் என்று *************** என் மகன் pizza கேட்கின்றான் அவன் அறிய நான் விடவில்லை அவனின் அதே …
-
- 5 replies
- 1.4k views
-
-
நான் கேட்டுத் தூங்கிய ஆராரிரோ பாட்டில், பாதிப் பாட்டை பாடி முடித்த... பாசத்தின் உருவம் அவர்! சரியெது பிழையெது எதுவும் தெரியாத பருவம், அம்மாவைத் தாண்டினாலும்..... என் அப்பாதான் எல்லை! கண்டிப்பும் தண்டிப்பும் இருந்தாலும், அன்பு அத்தனைக்கும் உறைவிடம் அங்கேதான்! அப்பாவின் கைபிடித்து நடைபயின்ற நேரங்களும், கல்லூரிவரை கவனித்த காலங்களும், இன்றுவரை கண்முன் காட்சிகளாய்... காலத்தால் அழியாத பாசங்களின் சாட்சிகள்! உயிரைக் கொடுத்து உருவாக்கி... தன் உயிரைக் கொடுத்தும் தன் உயிராய் எனை நினைத்து வளர்த்த... என் தெய்வத்துக்கு, என்ன கடன் பட்டேனோ? என்ன தவம் செய்வேனோ?? நாளைக்கு.... நானும் ஒரு அப்பா!!!
-
- 5 replies
- 1.3k views
-
-
http://vaseeharan.blogspot.com/ பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
நா பிளந்து உமிழ்நீர் வறண்டு செல்லரித்து மூச்சடங்கிபோன எங்கள் குரல்வளைகளில் ஆழ்துளைக் குழாய் பதிந்து எதை தேடுகிறீர்? விடுதலை ஒன்றையே நேசித்து கந்தக காற்றை சுவாசித்து நெடியேறி வெடிக்கத் துடிக்கும் நுரையிரலை கவனமாக கையாளுங்கள்... போரியல் நெறியும் வாழ்வியல் பண்பும் வகுத்த தலைவன் வழிவந்த இதயத்தை மாற்றியும் அறுவைசிகிச்சை செய்து விடாதீர் ஞானம் பிறந்துவிடும் புத்தருக்கு... இன்னும் கிடைக்கவில்லையா தேடும் பொருள்? காத்திருத்தலையும் உடனடி கீழ்படிதலையும் கற்பிக்கும் பசியை துறந்து காடுகளில் அலைந்து திரிந்து சிறுகுடலாய் போன பெருங்குடல் உங்கள் கறிக்கு உதவாது.... இன்னும் சில பாகங்கள் காத்திருக்கின்றன நகங்களில் கிழிபட... ஈழ…
-
- 5 replies
- 904 views
-
-
அம்மாவுக்கு வயசாகிவிட்டது மறதியும் வந்துவிட்டது ஆனால் அவள் நான் எப்ப போனாலும் சாப்பிட்டியா என்று கேட்கவும் பின் போகும் போது பத்திரம் பார்த்து போ என்று சொல்வதையும் ஏன் இன்னும் மறக்காமல் இருக்கிறாள் என்பது மட்டும் தெரியவில்லை. பா.உதயன்
-
- 5 replies
- 715 views
-
-
கங்காருவின் மைந்தர்களே களிப்பெமக்குத் தாருங்கள் சிங்கத்தின் குழந்தைகளை சிதறடிக்க விரட்டுங்கள் தடுப்பரண் போட்டெம்மை படுத்துகின்ற சிங்களத்தை துடுப்பாட்டக் களத்தினிலே கடுப்பாக்கி அனுப்புங்கள் மைதானம் வந்திருக்கும் மனிதக் கொலைகாரன் மகிந்த முகத்தினிலே மண்கவ்வ வையுங்கள் சிங்கக் கொடிதாங்கி சிரித்துக் கூத்தாட சீமைக்கு வந்தவனைப் - பார்த்துச் சிரித்துநிற்க உதவுங்கள்
-
- 5 replies
- 1.4k views
-
-
-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........இயற்கையோடு ஓட்டபந்தையம் ....... ^^^^^^^^^^^^^^^^^ எனக்கும் இயற்கைக்கும் .... ஓட்டப்பந்தையம் ...... எல்லை கோட்டை தொடுவதில் .... கடும் போட்டி ......!!! போட்டியின் தொடக்கமே .... இயற்கை முன்னணி பெற்றது .... சற்று என்னை திரும்பி பார்த்து .... உன்னை படைத்த என்னோடு .... உனக்கு போட்டியா ...? தோல்வியை ஒப்புக்கொள் ... நான் விலகி விடுகிறேன் .....!!! நான் விடவில்லை .... என் முழு முயற்சியையும் ..... பயன்படுத்தி இயற்கையை .... சற்று முந்திக்கொண்டேன் ..... நானும் சளைத்தவனில்லை .... திரும்பி பார்த்து சொன்னேன் .... படைத்தது நீயாக இருக்கலாம் …
-
- 5 replies
- 2k views
-
-
உன் தாய் தந்தையின் அருமை நீ வளரும் பொது தெரியாது உன் பிள்ளையை வளர்க்கும் போது தான் தெரியும்...
-
- 5 replies
- 1.3k views
-
-
இப்பாடலை எனக்கு பெரியார் திரவிடக் கழகத்தைச் சேர்ந்த யாழ்கள உறுப்பினர் தனிமடலில் அனுப்பி இருந்தார். கேட்க நன்றாக இருக்கிறது. http://www.thayagakaatru.com/songs-2009/el...n-thalaivan.mp3
-
- 5 replies
- 4.8k views
-
-
என் கவியால் கம்பனை சுடும் நோக்கம் இல்லையடா இராமாயனக் கம்மனும் நானும் இல்லையடா கூனியை போல சூழ்ச்சி செய்பவன் நானும் இல்லையடா கைகேகி போல இராமனைக்காட்டுக்கு அனுப்புபவன் நானும் இல்லையடா பத்துதலை இராவணணும் இங்கே கெட்டவன் இல்லையடா கம்பன் தன் கவிதையிலே ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்து விட்டானேடா இராமனும் உத்தம புத்திரன் இல்லையடா அவரும் கற்பை சோதிக்க தீக்குளிக்க சொன்னவர் தானேடா இராமயனத்து குரங்குப் படைகள் தமிழன் இல்லையடா இராமாயனம் ஈழத்தமிழனுக்கு ஒரு மாகாவம்சம் தானோடா
-
- 5 replies
- 2.1k views
-
-
-
நாம் நாமாகவில்லை எமது கைகள் மட்டும் தான் முதலில் கட்டப்பட்டது இப்போ எமது காலும் கட்டப்பட்டுவிட்டது இனி எம்மால் எழுந்து நடக்க முடியாது எழுதமுடியாது பேசமுடியாது நாம் இனி மேல் நாமாகவே இல்லை எம் விடுதலையும் வெகு துரமாகிவிட்டது நாம் இப்போ எம் அடையாளத்தை தொலைத்த ஓர் அடிமை மனிதர்.
-
- 5 replies
- 1.1k views
-
-
காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினந்தினம் கனிவான செந்தமிழால் காதலர் தினந்தன்னை கவியாலே கனிய வைக்க களமமைத்துத் தந்த மொழிமேலே பற்றுவைத்து மின்னிணைய வசமாக்கி அழியாத செந்தமிழை அனைத்துலகம் அறிவதற்கு யாழிணையப் பெயர் தாங்கி மிளிர வைத்த எம்முறவே காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினமென்று விதவிதமாய் கவிதொடுப்போர் வரிசையிலே நானுமிங்கே மின்னிணைய தொடர்பாலே மனத்தெழுந்த பாமாலை கன்னித்தமிழ் கொண்டு சாற்றுகிறேன் காணீரோ! ஆணினமும் பெண்ணினமும் அன்பாலே அருகிணைந்து பேணிநிற்கும் புதுவுறவே காதலின் பிறப்பாகி கண்களைத் தூதுவிட்டு துணையின்பக் கூடமைத்து திண்மை நிலையினராய் உயர்புலத்து வாழ்வமைத்து ஏமக் கிழத்தியவள் மென்மையுறு இதயத்தில் தூமலரின் பண்பாகி ஞ…
-
- 5 replies
- 1.4k views
-
-
03.தமிழீழம் தாய்நாடு அது எங்கள் தமிழீழம் எம் தமிழ்த் தாய்நாடு தமிழீழம்! உரக்கச் சொல்வோம் இதை உலகுக்கும் எடுத்துச் சொல்வோம்! இங்கே யார் நாங்கள்...? இங்கே யார் நாங்கள்...? எட்டுத் திக்கிலுமிருந்து.. எழுகின்ற கேள்விக்கு.. என்ன விடை..? இதை அறிந்து சிலபேர், அறியாமல் பலபேர், உனக்குள் இருக்கும் உன் தாய்நாடு எங்கே...? இருபத்தியோரம் நூற்றாண்டின் இயந்திர வாழ்வில்..! சுவடுகள் பதிக்குமுன் ஓருகணம் நில்லுங்கள்! உனக்குத் தெரிந்த உன் தாய்நாடு என்று எதைச் சொல்லிக்கொள்ளப் போகிறாய்..? உன் எண்ணக்கரு என்ன சொல்கிறது..? என் எண்ணக்கரு இதைத்தான்.. எண்ணிக் கொள்கிறது! தாய்நாடு அது எங்கள் தமிழீழம் எம் …
-
- 5 replies
- 1.6k views
-
-
என்னைபத்து மாதங்கள்கருவில் சுமந்து பெற்றெடுத்த அன்னையே என்னை பாராட்டி சீராட்டி வழர்த்தாயே என்னை இரவில்பலகதைகள் சொல்லிஉறங்கவைப்பாயே நான் தூக்கம் விட்டு எழும்பும் வேளையில் என் அருகில் இருந்து அன்புடன் என் தலையை வாரி முத்தம் கொடுப்பாயே ---- நான் அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்தர் நீஅனைத்தையும் வேண்டித் தருவாயே பல ருசியான சமயல்களை செய்து ஊட்டிவிடுவாயே எனக்கு பாடங்கள் சொல்லித்தருவாயே உன் இடுபப்பில் சுமந்து கொண்டு பாட்டுப்பாடி என்னை மகிழ வைப்பாயே நீ எனக்குசின்ன வயதில் செய்த நினைவுகள் இப்போழுது நினைத்துப்பாக்கும் போதெல்லாம் சந்தோசமாக இருக்கின்ற இருந்தாலும் நீ என் பக்கத்தில் இல்லை என்றதும் கொஞ்சம் வருத்தம் த…
-
- 5 replies
- 1.5k views
-
-
விடியலின் பாதை அனு தினமானது. கொடியரின் பாதை அது மாதிரியே நாளும்,பொழுதும் கொலை,கடத்தல் இந்த சம்பவம் இல்லையெனில்-அது சிறீலங்காவே இல்லையென ஆச்சு. இணையத்தை பார்த்தால் ஆளாளிற்கு தனது கற்பனையால் இன்னமும் எரிகின்ற நெருப்பில் பிடுங்கிய வரை லாபமென ஏதேதோ எழுதுகின்றார். வீரம் மெளனித்தால் ஈரமுள்ள நெஞ்சகம் என் செய்யும்? நிலைமை ஒன்றும் சீராக இல்லை. இதற்குள் எத்தனை சீரழிவை இன்னமும் செருகுவர்? தூற்றுவதே சிலரது பொழுதாக தேற்றும் உள்ளகச் செழிப்பகற்ற ஊற்றுக் கண் இருந்தும் இல்லாததாய் இழவுகள் சேதி எழுதும். மாற்றம் தேடும் மனிதங்களை கறைப்படுத்தும் காகிதங்கள் வரையின்றி ---- குழப்பம் ஏற்படுத்துவதில் குறியாக சில துன் மார்க…
-
- 5 replies
- 1.7k views
-
-
கூலிப்படையே ஓடி வா..... வாகரையை வசமாக்க வரிந்து கட்டுகிறாய் வா... வம்புக்கிழுக்கிறாய் வந்தடி வேண்டி போ... வெட்ட வெளியில வெட்டிய புதைகுழிகள் வெறுமையாய் கிடக்கிறது வா..வந்ததை நிரப்பு.... என்ன செய்வோம் நீ அடம்பிடிக்கிறாய் வந்தடி வேண்டி போ வா.... ஊடகங்கள் பாவம் உறங்கி கிடக்கிறது தட்டியெழுப்பி ஊளையிட விடு வா.... தென்னிலங்கை தெருக்கள் அமைதியாய் கிடக்கிறது காவு வண்டிகளை கத்த விடு வா.... பொதி செய்து உன் உடல்களை பொதியாக அனுப்ப வேண்டும் பொங்கியெழுந்து வா.... எம் ஆயுத கிடங்குகள் அரைவாசி வற்றிற்று அள்ளியெடுக்க வேணும் அய்யா விரைந்து வா.... ஓராண்டு ஆட்சியது ஓவென்று ஓடிருச்சு ஓலமது கொடுக்க …
-
- 5 replies
- 1.6k views
-
-
ஒற்றை சொற்களாய் உதிர்த்து வானத்தை நிரப்பிய பின், உன் துயரம் தோய்ந்த நாக்கு என் தனிமையை தின்னத்தொடங்குகிறது. இரவின் நீட்சியும் வியர்வை நாற்றமும் பிசுபிசுப்பின் அந்தரிப்பும் மோகனத் தவம் கலைக்காமல் சாய்ந்தெழும் பெருமூச்சும் அவசத்துடன் பகிரப்படுகையில் யாருக்கும் கேளாமல் நீ சிந்திய ஓலமொன்று நட்சத்திரங்களை விழுத்தியது. நிராகரிக்கமுடியாத முத்தத்தை அவமானத்துடனும், கண்ணீருடனும் அருவருப்புடனும் எதிர்கொள்ளும் அபத்தப் பொழுதொன்று நினைவுகளில் விரிகையில், சொற்கள் வறண்டு ஆவியாகிப் போகிறது, கதவுகள் மூடிய கண்ணீர்வளையத்தின் மறைவில் என்னைத் துகிலுரியத் தொடங்குகிறேன் உனக்குப் பரிசளிக்க. வானத்தை நிரப்பிய உன் சொற்கள் என் தனிமையை தின்று நட்சத்திரங்களாய் பூக்கின்றன
-
- 5 replies
- 988 views
-
-
முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..…
-
- 5 replies
- 1.4k views
-
-
புவியீர்ப்பு விசையின் சக்திக்குள்ளே உயரப்பறக்கும் பருந்து கண்ணில்பட்டதை தன்னிலும் சிறியதென்றது துாரம் எம் பார்வைக்குள் அடக்கப்படும் காட்சிகள் அல்ல அதையம் தாண்டும் அருகே போகும்போது ஈர்க்கப்படும் விடையம் எம் சிந்தனையில் கட்டுப்பாட்டை விதிக்கின்றது சாட்சி ஒதுக்கப்பட்ட உண்மைகள்போல் அருகில் இல்லாத ஒன்றின் மீதான விருப்பம் இருப்பதை ஒதுக்கி வைக்கின்றது இழக்க நேரிடும் என்ற உண்மை அறியாதவரை சிந்தனை பந்தில் அடைக்கப்பட்ட காற்றல்ல பரந்த விரிந்த பூமிப்பந்தில் பார்வையின் நோக்கத்தில் படைப்பாளி சிக்கிக்கிடப்பதுபோல்
-
- 5 replies
- 746 views
-
-
ஒற்றைப் பேச்சில் ஒடிந்தே போனான்..! இனத்துக்காய் வீழ்ந்தோரை தூற்ற நீ யார்..??! கேள்விகள் கேட்க யாருமற்ற நேரத்தில் அவனுக்குள் ஆயிரம் கேள்விகள்..! அகோரமாய் தேசத்தில் நடந்ததை தரிசித்தவனுக்கு... ஊமையாகித் துணை நின்று அழித்தவனின் செயல் பாராட்டி சாகடித்துப் பின்... மனித உயிர்க்கான உரிமைகள் தேடும் "உண்மையை"க் கண்டறிவோரின் வேடங்கள் அவனுக்குப் புரியவில்லை..! வெகுண்டு எழுந்தவன் வேதனையில் துடித்தான்...! தன்னின மக்களுக்காய் குண்டு சுமந்த மண்டேலாவுக்கு ஒரு நீதி..!!! "உலக அமைதிக்கென்று" பசப்பி உலகை அடிமையாக்க.. ஊரூராய் குண்டு போடும் ஒபாமாவுக்கு நோபல் பரிசு..! சொந்த மண்ணில் இன அழிப்பை தடுத்து நின்றவனுக்கு "பயங்கரவாதிப்" பட்டம்...! அந்தப் பட்டம் அவ…
-
- 5 replies
- 707 views
-
-
சிறகு முளைக்கும் முன்னரே..., இறக்கை விரிக்க வைத்த நாள்! பொத்திப் பொத்திப்.., பிள்ளை வளர்த்தவர்கள்..., பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் ! எங்கு போனாலும் பரவாயில்லை.., இங்கு மட்டும் வேண்டாம் ராசாக்கள் ...! எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் ! நாங்கள் உயிரோடு இருந்தால்.... நாளைக்கு எங்களுக்கு..., கொள்ளி போட வந்து விடுங்கள்! காணியை விற்றார்கள், கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்! கைகளில் கிடந்ததை விற்றார்கள்! காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்! நாளைய நம்பிக்கைகளை, எஜன்சிகளிடம் கையளித்தார்கள்! உலகப் படத்தையே காணாதவர்கள்.., சில நாட்களுக்குள்..., உலகம் …
-
- 5 replies
- 1.7k views
-
-
அன்று பயந்து விட்டேன் உன் அழகில் மயங்கி உன்னைக் காதலித்து விடுவேனோ என்று. நான் சொன்ன படி கேட்கின்ற என் மனது ஒரு நிமிடம் நிலைமாறி அடம் பிடித்தது உன்னைக் காதலிக்க வேண்டாமென்று, இலச்சியம் தடுத்தது. ஒரு நிலையானது மனம். இனிக்கும் பழமெனத் தெரிந்தும் புளிக்குமென தள்ளிவைத்தேன். புளியைச் சுவைக்க பிடிக்காமலல்ல பற்கள் கூசி வாய் திறக்க முடியாது என்பதனால். இலக்கு வைத்த இலட்சியம் சிகரம் தொட சிரமங்களைத் தாண்டி துள்ளிச் செல்ல வாழ்க்கையில் மிதக்கின்றேன், உயரத்தில் நின்று கஸ்ரங்களை - ஒரு தீப் பெட்டியாய் பார்க்க வேண்டுமென்று. புரிந்து கொண்டேன் என்னை நீ காதலிப்பதனை, காதலியாய் நீ வேண்டாம் என்றும் தோழியாக நீயிரு அப்போதுதான் நான் …
-
- 5 replies
- 3.8k views
-