கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
செத்தும் காத்த என் அம்மாவின் பிறந்தநாள் நினைவில் . அம்மா பிறந்தது 1917 உடுவில் மகளிர் கல்லூரி வரவேற்ப்பில் மகத்மா காந்திக்கு மாலை சூடி ஆசி பெற்றது நவம்பர் 2017 (இறக்கிற வரைக்கும் காந்திய செல்வாகுடனேயே வாழ்ந்தார், விடுதலையும் சமூக சமத்துவமும் கவிதையும் அவரிடமிருந்து கற்றதுதான்.) . 2013 நவம்பரில் அம்மாவின் சமாதிக்குச் சென்றபோது கோத்தபாய ராசபக்சவின் விசேட உத்தரவின் பேரில் என்னைக் கைதுசெய்ய இராணுவம் எங்கள் பண்ணைக்கும் வன்னிவளான்குழம் கோவிலுக்கும் நடுவிலுள்ள காட்டுக்குள் காத்திருந்தனர், நல்ல வேலையாக நான் கார் சார்தியிடம் ”40 வருடமாக ஒவ்வொரு தடவை பண்ணைக்கு வரும்போதும் வன்னிவிளான்குளம் அம்மன் கோவிலில் கற்பூரம் கொழுத்திவிட்டு வரும்படி சொல்லுவார். 40 வருடங்களாக நான…
-
- 6 replies
- 1.3k views
-
-
மேலை நாடெங்கும் ஈழத்தின் ஏழைப் புத்திரர்கள் உழைத்துழைத்து வரி கட்டி வளம் பெருக்கி; வாழ எண்ணி திசை நகர்ந்து சமுத்திரத்து மீன்களாக சகதியிலே மாட்டி மாட்டி யாசித்துக் கிடக்கின்றார். *** *** *** தன் தேசம் அங்கே தீப்பற்றி எரிகையிலே மக்களங்கே தெருத் தெருவாய் அலைகையிலே வாயில் நுழைய மறுக்கும் ஓர் மேலை நாட்டில் ஓர் வீட்டில், இன்றைய துயர்ச் செய்தியை தொலைக்காடசி பார்த்தோ அன்றி; யாதொன்றில் கேட்டோ மனம் சோர்ந்து தூங்கிப் பின் கண் விழிப்பான். *** *** *** காலத்தின் சதியினாலே அவனுமோர் அகதிதான். நகர் நகராய் நாடு நாடாய் விட்டலையும் ஈழத்து அகதியவன். இணைபிரிந்த தனியாடு. *** *** *** …
-
- 11 replies
- 1.3k views
-
-
இதோ இன்றைய பொழுதுடன்.......... ஒரு அரசியல் வேட்டைக்காரன் -எம்மிடமிருந்து ....... விடைபெறுகிறான்!! அலைகடல் கடந்தும் - நிலை தளராது.... வேரினை மட்டும் -கடலடி துழைத்து..... மண்ணில் - படரவிட்டு.......... ஒரு விருட்சம்....... எமை விட்டு விட்டு விலகி ........ தன் முகம் சாம்பலாக்கி ..... சரித்திரம் முடிக்கிறது! பாவபட்ட இனத்துக்காய் ... பகலையும் இரவையும்... சமமாய் மதித்து உழைத்த சரித்திர புருசனே........ போய் வா இந்த பொய் உடம்பு தொலைத்தாய்! நீ போட்ட அத்திவாரம் ஆட்டம் காணாது அதுவரை - உம் தூக்கம் கலைக்க மனசு வராது........... வென்றோம் என்றொரு சேதி மெல்ல வந்து காதில் உரைக்கும்........ காலம். வரும்...! அப்போ …
-
- 6 replies
- 1.3k views
-
-
வாழும்வரை நேசிப்போம் காதலை மூச்சாய் சுவாசிப்போம் கனவிலே கூட காதலை யோசிப்போம் காதலை கவிதையாய் வாசிப்போம் காதல் மாறாதது என்பது உண்மை. ஆள் மாறினாலும் இல்லாள் மாறினாலும் காதல்மாறுவதில்லை கண்களில் காதல் வைத்து இதயத்தில் காதலியை தைத்து கனவில் காதல் கீதம் இசைத்து காலமெல்லாம் காதலோடு வாழத்துடிக்கும் காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...
-
- 3 replies
- 1.3k views
-
-
காதல்கொள்! மண் மீதும் மண்ணைக் காதலித்து மரணத்தை வென்ற மாவீர் ஈகத்தின் மீதும் காதல் கொள்!
-
- 3 replies
- 1.3k views
-
-
தொட்டுத்தொட்டு நான் வளர்த்தேன் நெஞ்சுக்குள்ள விதை விதைச்சே விருட்சம் வளர்த்தேன் காடு கழனி எல்லாம் நான் அலைஞ்சே கண்டுபிடிச்சே உன்னைப் போல் அதையும் நெஞ்சுக்க வைச்சேன்..! தொட்டும் தொடாமலும் நீயும் வந்தே பச்சைப் பைங்கிளியா சுற்றியே வந்தே... உள்ளம் முழுக்க உல்லாசமா நான் உன் சோலையில..! அங்க என்ன வேலை செஞ்சே.. நெஞ்சுக்க நோ எடுக்க பிடிங்கி எறிஞ்சே நான் வைச்சத..! வெட்டிய காடும் வரண்ட கழனியும் சுற்றி வந்த பைங்கிளி சிறகொடியவும் கண்டேன்..! தோழியாய் வந்தே தூதனாய் என் உயிர் பிடிங்கினே.. நீ யாரென்று பார்க்கையில... நான் தேடியே நட்ட மரக்கன்ற பிடிக்கி எறிஞ்ச என்னவள் கை... அறிஞ்ச போதே பதறிப்போனே செல்லமாடி நீ எனக்கு..! …
-
- 4 replies
- 1.3k views
-
-
ஏன் பேச புலி போச்சு....??? மீண்டும் ஒரு ஜெனிவாவில பேச்சு.... அங்கு புலி காண்பதுவோ என்னவென்று போச்சு....??? முன்னர் நடந்த பேச்சுக்கென்ன ஆச்சு....??? இன்று அமைதி கிழித்து போரங்கு மூண்டு போச்சு.... இல்லை தீர்வு எண்ணு உருவாகி ஆச்சு.... அப்புறமா மீண்டும் பகையோடு வேங்கை ஏன் பேச போச்சு....??? வன்னி மைந்தன்
-
- 3 replies
- 1.3k views
-
-
நாங்களோ எம் போரைத் தொடர்ந்தோம்............. ------------------------------------------------------------------------------------------ சாவதெனினும் தன்மானத் தமிழராய் சாவதென்ற முடிவுடன் தொடர்ந்தார் தொடர்ந்ததால்தானே உரிமைப் போரை பிராந்தியம் கடந்து நகர்த்திட வைத்து அனைத்துலகிடம் கொண்டு சென்றதும் அதனையும் மீண்டும் நயவஞ்சகத்தாலே கர்ணனைக் கொன்ற கண்ணனைப்போன்று கைங்கரியத்தை அரங்கேற்றிய அசிங்கமான கிந்தியர் அரசது வங்கதேசத்திலும்காஸ்மீரிலும் கைக்கொண்ட கொடுமைகள் போன்று மீண்டும் வந்து எங்கள் தேசத்திலும் பேரழிவினை விதைத்து இனத்தினையழித்து ஈழத்தீவிலே தமிழினத்தை இல்லாதுசெய்யும் பொல்லாத பொழுதொன்றை வென்றிட வேண்டி மெளனம் காத்திட ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல எட்டப்பர்கள் இன்றும் இருக்கின்றனர் தமிழனே! இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான் கண்ணீர் வடிப்பாயோ? விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே நரகிற் கிடந்துழலும் விதியை எவனடா எழுதினான் உன் தலையில்? விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம் கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும். நீ படை வைத்து அரசாண்ட காலத்தில் இன்று சந்திரனுக்குச் சென்று சாதனை படைத்தானே, அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான். செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன் இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான். கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும் மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய். நீ கப்பலேறிக் 'கடோரம்' வென்றபோது ஜப்…
-
- 3 replies
- 1.3k views
-
-
செத்துப்போ! ஆட்லறியின் அடியில் - தூங்கினாலும் மூதூரில் உன் அண்ணன் இறக்கிறான் பேசாமல் இருக்கிறாய் - ஏன் இனி எமக்கு? நீ செத்துப்போ! ஜோசப் இறந்த போதும் பேசாமல் இருந்தாய்! உரிமை உலையில்- உயிர்- எரித்துப்போன ...... விக்னேஸ்வரன் மாண்ட போதும்... வீணே என்று நீ கிடந்தாய்! அன்று தர்சினி எரிந்தபோது........ அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்..... இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும் குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் ..... இனியும் எமக்கு ஏன் நீ ? செத்துப்போ ....... மானமே! 8)
-
- 4 replies
- 1.3k views
-
-
ஓயுதல் தீருமடா புதியதோர் ஒளி பிறக்குமடா! பாயுதல் இன்றிப் பதுங்கியிருந்த புலி பாய்ந்தே சீறுமடா! சீயத்தின் பிடறி கிழித்து விளையாடி காயங்கள் ஆற்றுமடா! சிங்கத்தை கொடியில் தாங்கியதால் வீரம் வருமோடா? அடே மோடா... பாடங்கள் இன்னும் பல இருக்கு படிக்க! கூட்டங்கள் பல கூடி கூவிப் பிதற்றி நின்றோரெல்லாம் ஓட்டங்கள் விடுவர் ஆட்டங்களின்றி தலைவன் போடும் திட்டங்கள் கண்டு திசையெங்கும் வியந்தே நிற்குமடா! பயந்தே நடுங்கிப் பகை யோடுமடா விரைந்தே எமக்கொரு தனி ஈழம் உருவாகுமடா!
-
- 4 replies
- 1.3k views
-
-
காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள் நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!-----உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!-----உதடு சிரிக்கிறது ...இதயமோ அழுகிறது ......!!!------+கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
-
- 10 replies
- 1.3k views
-
-
கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை வையமெல்லாம் பகைவர் நமை மோதும் வேளை-உன் கையிரண்டும் களத்தில் ஏந்தாதா வாளை கையிரண்டும் களத்தில் ஏந்தாதா வாளை கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை ஆட்சி இழந்தாய் திசைதோறும் அலைந்தாய்-வெறும் காட்சிப் பொருளாகி உயிர்வாழ்ந்து தொலைந்தாய் காட்சிப் பொருளாகி உயிர்வாழ்ந்து தொலைந்தாய் கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை என்னடா உனக்கு என்றென்றும் உதையா-உன் முன்னவன் இமையம் வென்றானே கதையா முன்னவன் இமையம் வென்றானே கதையா கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை கொடுமை மறந்தா உன் கையோசை வெடிப்பு-அட அடிமை உன் வாழ்வில்…
-
- 7 replies
- 1.3k views
-
-
புலத்துக் கரும்புலியாய் ஓர் பேரொளி.... கவிதை - இளங்கவி போரின் கூக்குரல்கள் புகுந்தது தமிழ் நெஞ்ச்சுக்குள்... போரை நிறுத்தென்று மக்களில் ஒருவனாய்ப் புலம்பினான்.... உலகின் காதில் எம் குரல்கள் கேட்கவில்லை..... ஈழத்து அழுகுரல்கள் அவன் ஆயுளைப் பிழிந்தது.... அவன் கைகள் எழுதியது மரண சாசனம்..... கால்கள் இலக்கு நோக்கி ஓர் நீண்ட பயணம்..... திடீரென தோன்றிய முடிவல்ல அவன் சிந்தனையில் தோன்றிய தெளிவு..... பல்லாயிரம் உயிருக்கு பார்காத ஐ. நாவா பாவம் இவன் உயிரைப் பார்க்கும்.... அவனுக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் ஈழத்து அழுகுரலில் அவன் ஆன்மா கரைந்திருக்கும்... அமைதி காக்க தோன்றிய ஐ.நா பொய் முகம் காட்ட..... புலத்துக் கரும்…
-
- 12 replies
- 1.3k views
-
-
-
கருணை இல்லாதவனுக்குப் பெயர் கருணாநிதி பச்சைத்துரோகி கபட நாடகதாரி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவனில்லை அவன் திராவிட துரோகிகளின் தலைவன் இராமாயணம் தந்த நாட்டில் இராவணர்கள் மகாத்மா வாழ்ந்த நாட்டில் மாபாவிகள் பெரியார் வாழ்ந்த நாட்டில் பெரும் பூதங்கள் அண்ணா பிறந்த மண்ணில் அயோக்கியர்கள் புத்தர் பிறந்த மண்ணில் அற்பப்புளுக்கள் சேடம் இழுக்கும் வரை பதவியில் இருக்க உனக்கேன் இத்தனை ஆசை? பொய்யனே.....உன் பொய்கள் இலங்கை அரசின் பொய்களை மிஞ்சிவிட்டனவே தமிழர்கள் தினமும் சாகையிலே அங்கே போர்நிருத்தம் அமுலில் உள்ளதென்று அறிக்கை விடுகிறாய் எந்த உலகத்தில் உள்ளாய் நீ? உன் போக்கு எம் நெஞ்சில் தைக்கும் முள்ளு கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்கும் க…
-
- 1 reply
- 1.3k views
-
-
"சொந்தங்கள்" என்ற சொற்பதம் கழிவறைச் சேற்றுக்குள் புதைந்து ரொம்ப நாளாச்சு! அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில் நிறையவே கொட்டிக் கிடக்குது! சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று... அவராடும் ஆட்டத்திற்கெல்லாம்..... ஆளும் நானில்லை... ஆடுகளமும் நானில்லை! ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்! - ஆனால், அநியாயமாய்ப் போன அன்பென்ற ஒன்று, என்னோடு கூடிப்பிறந்ததாய்ப் பிதற்றுகின்றது இன்னும்! சொந்தமென்று ஒன்று என்னை ஓங்கி உதைத்து நான் வீழ்ந்தபோதும், நண்பனென்று சொல்லி உரிமையோடு என்னை தாங்கிப் பிடித்தது - நட்பு !!! என்னை நேசிக்கும் நட்புக்காய் உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!!
-
- 2 replies
- 1.3k views
-
-
என்?????? புலம்பெயர் நாட்டினிலே தமிழர்கள் ஒன்றினைந்து கேட்கும் உரிமைக்குரல்.... நமக்காக நம் இனத்திற்ககாக நம் ஈழத்தமிழர்களுக்காக.. செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கும் இவர்களெல்லாம் தமிழர்களை பயங்கரவாதிகளாம் என்னடா உலகம் இது?????? நாடு விட்டு நாடு போய் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் ஆனால் தொடருவதோ.... நம் இனங்களின் அவல நிலைகள் தான் சமாதானத்தை தரும்படி உங்களிடம் கேட்டால் நீங்கள் ஆயுதக்கருவிகளையல்லவா தர முயல்கிறீர்கள் நம் ஈழத்தை நமக்கே திருப்பித்தர என் இந்த சுணக்கம்???? எங்களது இழப்பில் நீர் என்ன சுகம் கண்டீர்????? எதிர்பார்கிறோம் …
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ் ஈழத்தின் துயர் கண்டு கொதித்தெழும் எங்கள் தமிழகமே உதிரவிழி பார்த்து துடிக்கின்ற எம் இதயத்தின் உறவுகளே! நிலத்திலும் புலத்திலும்- போர்க் களத்திலும் ஒலித்திடும்- எங்கள் உரிமைக்குரல் கேட்டு-இன்னும் எம்மை நெருங்கி வாருங்கள்! முல்லைப் பிஞ்சுகளை பிணங்களாய் பார்த்தபின்னே கொதித்துப் போனீர்கள்! எங்களுக்காய் குரல் கொடுக்க உரிமையோடு நிமிர்ந்து வாருங்கள்! நெருங்கிடும் பகை துரத்த நெருப்பின் தலைவன் எம்மோடு! நெஞ்சிலே வலி சுமந்து-எம்மை நெருங்கிடும் தலைவர்கள் உம்;மோடு! உணர்வுகளை அடக்கி வைத்த காலம் இனிப் போதும் ஐயா! கவியாலே தமிழ் பொழியும் வானம் எங்கள் வசமாகட்டும்! நேற்று உண்ணாநிலைப் போரினிலே உணர்வுகள் கொப்பளித்த-எங்கள் வாஞ்சைத…
-
- 4 replies
- 1.3k views
-
-
கடலலையின் வழிநெடுகே கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்.. கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள் படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள் பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந் நிகழ்ச்சிகள் என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில் எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில் சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ!.. செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?... வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ! வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ! ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்பதெலாம் உண்மையோ?... ஒருமரத்துப் பறவைகட்கு முடிவிலாத கொடுமையோ?... இந்தியனாய்ப் பிறந்ததனால் தமிழனுக்கு மௌனமா? இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்…
-
- 6 replies
- 1.3k views
-
-
அலாரச்'சேவலின் அலறல் கேட்டு அல[ரு]றும் எனது பொழுதுகள். 'ஷவர்'ச்சாரலின் தூரலில் நனைகையில் கரைந்து போகும் கனவுகள் திண்று போட்ட உறக்கத்தின் எச்சங்கள். நேற்றய இரவும்..... அலுப்புடன் சலித்துக்கொண்டே களட்டி எறிந்த இலட்சியச்சட்டைகளை மாட்டிக்கொண்டே காலையின் சாலையில் கலந்து போகிறேன். இதோ.... …
-
- 5 replies
- 1.3k views
-
-
தணல்ச்செடி, அலைமகன் - தீபச்செல்வனின் இரு கவிதைகள்:- 05 ஜூலை 2016 தணல்ச் செடி சமூத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் தளைத்தது தணல் மலர்களுடன் ஒரு செடி அனல் கமழுமுன் சமுத்திர மௌனத்தால் கோணிற்று உலகு இப் பூமி …
-
- 1 reply
- 1.3k views
-
-
விரல்களுக்கிடையில் புகைக்கும் வெண்சுருட்டைப் போலவே... என் இதயமும் கருகிச் சிறுக்கிறது! புகைந்த சாம்பலைப் போல... என் நினைவுகள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறது! எல்லாம் தீர்ந்து... மூன்றாவது விரல் வந்து தூக்கி வீசும்வரை... அதன் போதையிலேயே கிடந்தேன்! என்றாவது ஒருநாள்... அது எனைச் சாகடிக்கும் எனத் தெரிந்திருந்தும், அதைத் தாங்கிப்பிடித்திருந்தேன்! நெருப்பும் புகையும் பழகிவிட்டது! சுட்டாலும் மீண்டும் மீண்டும் பற்றிக்கொள்ளச் சொல்லுது மனசு! உள்வந்து செல்லும் புகையோடு என் பெரு மூச்சுக்களும் ஒருநாள் அடங்கிப்போகும்! அதுவரை இருட்டில் இந்த சிகப்பு வெளிச்சம் துணையிருக்கும்!!!
-
- 18 replies
- 1.3k views
-
-
சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்களவெறிக் கூத்துகளை அறிந்தும் அறியாயோ ஐ.நாவே? வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது க…
-
- 2 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய் வீரத்தின் உள்ளக் குமுறல்கள் உண்ண உணவின்றி உறங்க இடமின்றி உடுக்க உடையின்றி ஊனுக்கு மருந்தின்றி உள்ளம் ஒன்றே உறுதியென்று உயிரை தம் உடலுள் புதைத்து வாழ்ந்தால் மானத்துடன் வாழ்ந்திடுவோம் அஃதின்றேல் அழிந்திடுவோம் அரக்கன் சிங்களவன் உலகத்துணைகொண்டு நெருங்கி வந்து தடைகொண்ட ஆயுதத்தால் போர்விதி மீறி அழித்தபோது மௌனித்த இவ்வுலகில் வாழ்வென்னும் வளம் ஒன்று தேவைதானா? ஈழமது எங்கள் தேசம் அதில் சுதந்திரமா வாழ்வது தான் எங்கள் தாகம் இன்றேல் நீதியற்ற உலகத்திலே இதுவே நீதியற்ற விதியென்றால் எம்முயிரை மாய்ப்பது எங்கள் திண்ணம் முள்ளிவாய்தனில் எழு அழுவோசை காப்பாற்று காப்பாற்று எனும் அபயக்குரலெல்லாம் வானெழுந்து உலகமெல்லாம் ஒலித்தபோது …
-
- 1 reply
- 1.3k views
-