வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களிடமிருந்து பெருமளவில் கோரிக்கைகள் வந்ததால், அவரது முழு உருவ மெழுகுச் சிலையை நிறுவ புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட் மியூசிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. லண்டனில் உள்ள மேடம் டுசாட் மியூசியும் உலகப் புகழ் பெற்றது. இங்கு உலகப் புகழ் பெற்ற பிரமுகர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியம் இந்த அளவுக்குப் புகழ் பெற்றதற்குக் காரணம், இங்கு வைக்கப்பட்டிருக்கும் சிலைகள், அந்தப் பிரமுகர்களை அப்படியே அச்சில் வார்த்தெடுத்தது போல தத்ரூபமாக இருப்பதுதான். இந்திய பிரமுகர்களின் சிலைகளும் இங்கு உள்ளன. சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களில் ஒருவர். இந்த நிலையில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிலையும் இங்கு இடம் …
-
- 15 replies
- 3.8k views
-
-
ரம்பாவுக்கு ரூ 1 கோடி மதிப்பில் மோதிரம் அணிவித்த இந்திரன்! வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:17[iST] 'அடப்பாவி... எப்படி கவுந்தான் இந்தாளு' என்று படிப்பவர்கள், கேள்விப்படுபவர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்துவிட்டது ரம்பா நிச்சயதார்த்தம். இதுவரை மணமகன் புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்த ரம்பா, ஒருவழியாக இவர்தான் மாப்பிள்ளை என்று ஒரு தமிழ் தொழிலதிபரைக் காட்டியுள்ளார். அவர்தான் இந்திரன். கனடாவில் மேஜிக்வுட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்துபவர். இதன் தொழிற்சாலை இந்தியாவில், சென்னையில் உள்ளது. விளம்பரத் தூதராக ரம்பாவை ஒப்பந்தம் செய்தார் இந்திரன்... ரம்பாவோ அவரை வாழ்க்கைத் துணைவராகவே ஒப்பந்தம் செய்து அன்லிமிடட் க…
-
- 40 replies
- 3.8k views
-
-
தமிழ் திரை இசையுலகில் மறக்க முடியாத பாடகி, ஜென்ஸி. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். தன் மென்மையான குரலால் நம் மனதை கொள்ளை கொண்டவர். பிரபலமாக இருந்த நேரத்தில் மியூசிக் டீச்சராக தன் வாழ்வை மாற்றிக்கொண்டவர். "பிறந்து வளர்ந்தது, தற்போது வசிப்பது எல்லாமே கேரளாவுலதான். சாதாரண நடுத்தரக் குடும்பம்தான். பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, மியூசிக்ல லோயர், ஹையர் கோர்ஸ் முடிச்சேன். என்னோட 13 வயசுல இருந்து மேடைகள்ல பாடிட்டு இருக்கேன். ஜேசுதாஸ் அண்ணாகூட கேரளாவுல நிறைய கச்சேரிகள்ல பாடியிருக்கேன். தாஸ் அண்ணாதான், 'நீ நல்லா பாடுறே'ன்னு சொல்லி, 16 வயசுல என்னை ராஜாசார்கிட்ட கூட்டிட்டுப்போனாரு. அப்போ ராஜா சார் தன்னோட மெல்லிசையால பல ஹிட் கொடுத்துட்டு இருந்த காலம். அவரைப் பார்க்கப் ப…
-
- 1 reply
- 3.8k views
-
-
வல்லமை தாராயோ..!! எல்லாருக்கும் வண்ண தமிழ் வணக்(கம்)..இன்று இங்கே உங்கள் முன்னிலையில் நான் பேச எடுத்து கொண்ட விடயம் யாதேனில்..(சா..தமிழை வளர்க்க தானே சில பேர் இருக்கீனம் பிறகு நாம என்னதிற்கு) ..சரி..இனி நான் நேரடியாக விசயதிற்குள்ள இறங்கிறன்.. சில கிழமைக்கு முன்னம் நண்பரின்ட வீட்ட போன போது அவரின்ட தங்கச்சி படம் பார்த்து கொண்டிருந்தா..அதுவும் எங்கன்ட பார்த்தீபன் மாமாவின்ட படம்..உடன நான் கேட்டன் என்னடப்பா இப்ப பொண்ணுகளுக்கு பார்த்தீபன் மாமா மாதிரி ஆட்களையும் பிடிக்குமோ எண்டு.. அவா..சொன்னா சா..சா நன்ன படமா போகுது நீங்களும் கொண்டு போய் பாருங்கோ எண்டு..சரி எண்டு நானும் அவாவிட்ட அந்த கள்ள இறுவட்டை எடுத்து கொண்டு வந்துட்டன்..ஆனா எனக்கு இந்த பார்த்தீபன…
-
- 16 replies
- 3.8k views
-
-
ட்விட்டரில் ஆபாசமாக சித்தரிப்பதாக பாடகி சின்மயி போலீசில் புகார்! Posted Date : 14:09 (18/10/2012)Last updated : 14:13 (18/10/2012) சென்னை:ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரு கும்பல் தம்மை ஆபாசமாக சித்தரிப்பதாக பிரபல பின்னணி பாடகி சின்மயி காவல் துறையில் பரபரப்பான புகார் அளித்துள்ளார். சினிமாவில் பின்னணி பாடிவரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள் பலர் அவரை நடிக்க அழைத்தபோது 'நோ’ சொல்லி விட்டார். முழுக்க முழுக்க இசைப் பணியில் மட்டுமே தன்னுடைய தாயாருடன் இணைந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சின்மயி இரண்டு வெவ்வேறு புகார்களை அளித்தார். முதல்…
-
- 22 replies
- 3.8k views
-
-
மொழி பட விமர்சனம் வணக்கம் அன்பர்களே யாழ் கள திரை விமர்சனம் பகுதியில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு சிறந்த மனத்தை வருடிய படததைப் பார்த்த அனுபவம், நான் பொதுவாக படம் பார்ப்பது குறைவு எனது தங்கையின் சிபரிசில்தான் மொழி படத்தை பார்க்க நேர்ந்தது. மனசை தொடும் கதை, ஜோதிகாவன் அழகிய நடிப்பு சிறப்பாக சொல்லப் போனால் ஜோவின் கண்கள் பேசும் வார்த்தைகள் (சூர்யா கொடுத்து வச்சவரப்பா). அதற்க்கு அடுத்தது பிரகாஷ்ராஜ்ஜின் அனுபவ நடிப்பு. என்னமா கொமடியா நடிச்சிருக்காரு (வடிவேலு விவேக் எல்லாம் பிச்ச வாங்கனும்) பிரகாஷ்ராஜ்ஜின் லொல்லை பார்த்தால் மனுசன் சத்திய ராஜ்ஜ மிஞ்சிடுவார் போலயிருக்கு. (ராஜ்ல முடியிற பேர் உள்ளவங்க எல்லாமெ இப்படித்தனா....?) …
-
- 20 replies
- 3.8k views
-
-
தமிழ்சினிமாவின் எல்லா ஹீரோக்களிடமும் கதை சொல்லி, கடைசியில் சிம்புவிடம் சம்மதம் வாங்கியிருந்தார் கேமிராமேன் சரவணன். படத்தின் பெயரையும் சிம்புவுக்கு ஏற்றமாதிரியே சிலம்பாட்டம் என்று வைத்திருந்தார். காளையை முடித்துவிட்டு கெட்டவனை தொடருவார் சிம்பு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிலம்பாட்டத்தின் அறிவிப்பு சின்ன குழப்பத்தை கொடுத்திருக்கிறது. உண்மையில் கெட்டவன் படத்தை முடித்துவிட்டுதான் சிலம்பாட்டம் படத்தில் நடிக்க போவதாக இருந்தாராம் சிம்பு. ஆனால், கெட்டவன் ஏற்படுத்திய செலவு முதல் ஷெட்யூலிலேயே தயாரிப்பாளரின் கண்ணை கட்டியதால் முழு பட்ஜெட்டையும் சொல்லுங்க, பிறகு எடுக்கலாம் என்று சொல்லிவிட்டாராம். இப்படியெல்லாம் சொன்னால் சிம்புவுக்கு என்ன வரும்? ஆங்.. கோபம் வரும்! அப்பட…
-
- 12 replies
- 3.8k views
-
-
தமிழ்சினிமா.கொம் என்ற தளத்தில் வந்த செய்தி கீழே.... இலங்கையில் ரிலீஸ் ஆகாத ராமேஸ்வரம்! -முட்டுக்கட்டை போடும் லண்டன் பிரமுகர் உலகத்தமிழர்கள் எல்லாம் ஆர்வத்துடன் எதிர்பார்த்த படம் ராமேஸ்வரம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழனுக்கும், இராமேஸ்வரத்தில் வசிக்கும் தமிழச்சிக்கும் நடக்கிற காதல் கதை இது. காதலோடு சேர்த்து இலங்கையில் நடக்கும் இன்னல்களையும் சிறிதளவு சொல்கிறது படம். உலகம் முழுக்க திரையிடப்பட்டிருக்க வேண்டிய ராமேஸ்வரம், சில நாடுகளில் திரையிடப்படவில்லையாம். குறிப்பாக இலங்கையில். ஏன்? இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து லண்டனுக்கு போய் செட்டிலாகி, பெயருக்கு பின் லண்டனையும் சேர்த்துக் கொண்ட திரையுலப் பிரமுகர், தன் கம்பெனிக்காக இந்த படத்தின் வெளிநா…
-
- 17 replies
- 3.7k views
-
-
பிரபல ஒளிப்பதிவு இயக்குனரும், 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற வெற்றி படங்க்ளை இயக்கியவருமான இவர் இலண்டனில் இவரது அடுத்த படமான "தாம் தூம்" படப்பிடிப்பின் போது மாரடைப்பால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது இவருக்கு வயது 42. ஒளிப்பதிவு இயக்குனர் ஜீவா அவர்களே, நாம் இழந்தது ஒரு மனிதனை அல்ல, தமிழ் சினிமாவின் ஒரு நல்ல தூரிகையை. http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...june/260607.asp
-
- 18 replies
- 3.7k views
-
-
கிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இருவரும் அது குறித்து மறுப்பு அறிக்கைகூட வெளியிடவில்லை. இந்நிலையில் விஜய் இயக்கிய சைவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அமலாபால். இந்த சூழ்நிலையில், அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் இணைந்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அமலாபால், ‘’பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், எங்கள் எதிர்காலம் குறித…
-
- 34 replies
- 3.7k views
-
-
நடிகை நமீதா காரில், பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம் கணவருடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்த…
-
- 1 reply
- 3.7k views
-
-
இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. மேற்கத்திய இசை, கர்நாடிக் சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதை தான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே’ என்று உருகவைப்பார், ‘போராளே பொன்னுத்தாயி’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோ…
-
- 2 replies
- 3.7k views
-
-
சில மாதங்களுக்கு முன் இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால், த்ரிஷா ஜோடியாக நடிக்கும் படம் ‘சமரன்’ என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. த்ரிஷாவும், விஷாலும் இணைபிரியா நண்பர்களாக இருந்தாலும் த்ரிஷாவுடன் நடிப்பது என்பது விஷாலுக்கு நிறைவேரா ஆசையாகவே இருந்தது(தீராத விளையாட்டு பிள்ளை படத்திலிருந்தே விஷால் த்ரிஷாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்). ஒரு வழியாக த்ரிஷா நடிக்க ஒப்புக்கொள்ள வேகமாக துவங்கப்பட்ட இந்த படத்திற்கா இத்தனை பிரச்சினைகள் வரவேண்டும். சமரன்(சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம்) என்ற டைட்டிலுடன் துவங்கி பாதி படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் சமரன் படக்குழுவிற்கு தெரிந்திருக்கிறது, ஏற்கனவே இந்த டைட்டில் இயக்குனர் சீமானால் வாங்கப்பட்டுவிட்டது என்று. சீமானிடம் ‘சமரன்’ டை…
-
- 2 replies
- 3.7k views
-
-
தமிழ் சினிமா கதைச் சுருக்கம் சு.தியடோர் பாஸ்கரன் தென்னிந்தியாவில் முதன்முறையாக சலனப்படம் ஒன்று மதராஸ் விக்டோரியா பப்ளிக் ஹாலில் காட்டப்பட்ட போது இது ஒரு அசுர சக்தியின் பிறப்பு என்று யாரும் அறிந்திருக்கவில்லை. சீக்கிரமே நகரின் சில இடங்களில் சாலையோரக் காட்சிகளாக படங்கள் காட்டப்பட்டன.. மெக்னீஷிய விளக்கு ஒளியில் - நகருக்கு மின்சாரம் இன்னும் வரவில்லை - கையால் சுழற்றப்பட்ட புரொஜக்டர் மூலம் ஐந்தாறு நிமிடங்கள் மட்டுமே ஓடிய துண்டுப்படங்கள், காட்சித்துணுக்குகள் போல, நுழைவுக் கட்டணத்துடன் திரையிடப்பட்டன. இது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக வளரும் என்ற எதிர்பார்ப்பு அன்று இல்லையென்றாலும் முதல் சில ஆண்டுகளில் திரைப்படக்காட்சிகள் ஒரு அதிசயம் போல மக்களால் எதிர்கொள்ளப்பட்டன. படங்க…
-
- 0 replies
- 3.7k views
-
-
அமெரிக்க டிவியில் ஐஸ்வர்யா ராய்..! அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார். சி.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று லேட் ஷோ. இது எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வரும் 9ம் தேதி ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார். இதற்கு முன்னதாக சி.பி.எஸ். தொலைக்காட்சியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் ஒரு பேட்டியளித்திருந்தார். இந் நிலையில் நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்' குறித்து ட…
-
- 18 replies
- 3.7k views
-
-
கோவிலுக்குள் ஷூட்டிங் - பொங்கிய பக்தர்கள் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோவிலில் நடந்த வடிவேலு நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஷூட்டிங்கால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்தக் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வடிவேலு நாயகனாக நடிக்க, தீத்தா ஷர்மா ஜோடி போட, தம்பி ராமையா இயக்க,ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் ஷூட்டிங்கை இங்கு நடத்தி வருகின்றனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட படக்…
-
- 10 replies
- 3.7k views
-
-
பாபா குகையில் ரஜனிகாந்த். விஜய் தொலைக்காட்சியின் காணொளிக் காட்சி. காணொளியை பார்க்க கீழே உள்ள சுட்டியின் மீது அழுத்தவும். http://ww1.4tamilmedia.com/index.php/2009-...el-rajini-video
-
- 1 reply
- 3.7k views
-
-
தமிழ் சினிமாவில் பெண்கள் பிரபஞ்சன் நான் அண்மையில் படித்த முக்கியமான புத்தகம், கே. பாரதி எழுதிய ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ (விகடன் பிரசுரம்). பாதி வானத்தைத் தாங்குபவர்கள் என்றும் பாதி பூமியை நிரப்புபவர்கள் என்றும் நீட்டி முழக்கி ஆடம்பரமாகச் சொல்லப்படும் பெண்கள், நம் தமிழ் சினிமாவில் என்ன மாதிரி சித்தரிக்கப்படுகிறார்கள் என்கிற ஆய்வே இந்தப் புத்தகம். பெண்கள் பற்றி எழுதுவது என்பதும் சினிமாவில் சித்தரிப்பது என்பதும் பெண்கள் பற்றியது மட்டுமல்லாமல் மானுடம், மனிதகுலம் பற்றியது என்பதே உண்மையாகும். சினிமா பேசத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து அண்மைக்கால, இன்றைய தமிழ் சினிமா பெண் பாத்திரங்களுக்குக் கொடுத்த இடம், பாத்திரங்களாகச் சித்தரித்த முறை, பெண்களின் …
-
- 0 replies
- 3.6k views
-
-
விகடன் விருதுகள்: சிறந்த நடிகராக விஜய் தேர்வு! ஆனந்த விகடன் வார இதழின் 2017-ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக விஜய்யும் சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சிறந்த படத்துக்கான விருது அறம் படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த வில்லன் - விஜய் சேதுபதி, சிறந்த வில்லி - ஷிவதா. சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ். வாசன் விருது இளையராஜாவுக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த பாடகராக அனிருத்தும் சிறந்த பாடகியாக ஸ்ரேயா கோஷலும் தேர்வாகியுள்ளார்கள். விருதுகள் …
-
- 11 replies
- 3.6k views
-
-
2012-ம் ஆண்டில் உலகம் அழியப் போகிறது என்று வைத்துக் கொள்வோம்... சும்மா ஒரு பேச்சுக்குதான்... கற்பனை செய்ய முடிகிறதா அந்தப் பேரழிவை? . ஹாலிவுட்டில் அப்படி ஒருவர் கற்பனை செய்ததால் உருவாகியுள்ள படம்தான் 2012. சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம். வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆ…
-
- 0 replies
- 3.6k views
-
-
இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் 'ஷாக்' ஃபேஸ்புக் பதிவு! கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா சார்பில் இவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார். எஸ்.பி.பியின் பதிவு கீழே! ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி. சில நாட்கள…
-
- 23 replies
- 3.6k views
-
-
எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு..! சென்னை: திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும் சர்ச்சைக்கும் அத்தனை நெருக்கம். எப்போது பேஸ்புக் பதிவு போட்டாலும் அது தீயாக பற்றிக்கொள்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனது பேஸ்புக் பதிவுகளால் கதறவிட்டவர் அவர். தற்போது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதாவது தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் சர்ச்சை நாயகி. ஒரு வருசம் தான் ஓகே: தனது பதிவில் அவர், என் பெற்றோரைத் த…
-
- 33 replies
- 3.6k views
- 1 follower
-
-
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஸ்டார் ஓட்டல்களில் நடனம் ஆட ஹீரோயின்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறது. பெரும்பாலும் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இதற்கான சான்ஸ் கொட்டிக்கொண்டிருக்கிறது. சில தென்னிந்திய ஹீரோயின்களுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. கேட்டாலே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு நாள் இரவு ஆட்டத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிறார் ஆபாச நடிகை சன்னி லியோன். இந்தி படங்களில் கிளாமர் வேடங்களில் நடித்து வரும் இவர் தமிழில் ‘வடகறி என்ற படத்தில் குத்தாட்டம் போட்டார். தெலுங்கு படங்களிலும் கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார். இதற்கிடையில் இம்மாதம் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஐதராபாத் ஜூப்ளி ஹில்…
-
- 15 replies
- 3.6k views
-
-
திரு ரஜனிகாந்த் அவர்களுக்கு வணக்கம், ஒரு ரசிகனாக இருந்தும் உங்களை தலைவா என்று அழைக்காததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். ஈழத்தில் பிறந்ததால் தலைவா என்று ஒரு நடிகரை அழைப்பது எனக்கு அந்நியமாக இருக்கிறது. ஆயினும் நான் உங்கள் பரம ரசிகன். ஈழத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் உங்கள் ரசிகர்கள்தான். தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட நாங்கள் உங்களை அதிகமாக நேசிக்கின்றோம். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. தமிழ்நாட்டில் குசேலன் படத்தை மக்கள் தோற்கடித்த பொழுது, வெளிநாடுகளில் அதை நாங்கள் வெற்றி பெறச் செய்தோம். வெளிநாடுகளில் தசாவதாரமா அல்லது குசேலனா நன்றாக ஓடியது என்று விசாரித்துப் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று புரியும். படத்தைப் பார்க்காது உங்களை …
-
- 0 replies
- 3.6k views
-
-
உத்தம வில்லனும், கமலஹாசனும் வ.ஸ்ரீநிவாசன் திரைப்படம் எடுப்பதும் ஒரு வித்தை. இத்தனை வருடங்களாக இதில் இருக்கிறேன் என்பதாலோ, இத்தனை படங்கள் எடுத்திருக்கிறேன் / நடித்திருக்கிறேன் என்பதாலோ அது கை வந்து விடாது. சீதா தமிழில் சீதையாவதைப் போல் வித்யா, வித்யையாகி உச்சரிப்பில், பழக்கத்தில் வித்தையாகிறது. வித்யா என்றால் கல்வி, கற்றல். கல்விக் கடவுள் ‘கலை’மகள். ஆனால் ‘வித்தை’ என்னும் தமிழ்ச் சொல் பல பொருட்களிலும் வருகிறது. செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை. ‘வித்தை காட்டுவது’. சினிமாவைக் கூட இப்படிச் சொல்லலாம். கண்கட்டு வித்தையால் வசனகர்த்தாக்களையும், நடிகர்களையும் முதலமைச்சர்களாக்க முடியும். தமிழில் வித்தை என்பதற்கு அதன் சம்ஸ்க்ருத பொருளையும் தாண்டி, திறன், தந்திரம், ஜாலம…
-
- 7 replies
- 3.6k views
-