வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
இனிய யாழ்கள உறவுகளுக்கு வணக்கம். அத்தி பூத்தால் போல் அவ்வப்போது வந்து அசத்தத் தான் இப்ப நேரம் கிடைக்குது. உங்களோடு கதைத்து கன நாட்கள் ஆகிவிட்டது. எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உங்கள் கண்களுக்கு நிழற்பட விருந்து அளிக்கின்றேன் பார்த்து மகிழுங்கள். நாளை சினிசவுத்.கொம் பாருங்கள் மீண்டும் திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும். இதோ "காதல் கடிதம்" திரைப் படத்தின் நிழற்படங்கள் உங்களுக்காக.... திரைக்கு வரும் வரை காத்திருங்கள். காதல் கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இன்பங்கள் பல கோடி. http://www.indiaglitz.com/channels/tamil/m...llery/8685.html
-
- 3 replies
- 1.8k views
-
-
City of God - நரகத்தின் நுழைவாயில் அனேகமாக அதிக முறை காப்பி இந்திய சினிமா/தமிழ் சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் பார்த்தபிறகுதான் பல தமிழ் சினிமா படைப்பாளிகளின் படைப்பு திறமை நன்றாக புரியத்தொடங்கியது இது ஒரு ஆங்கில படம் கிடையாது. போர்த்துகீசிய/ஸ்பேனிஷ் மொழி படம் சப்டைட்டிலுடன் பார்க்கலாம். இந்த படம் பார்த்து சில நாட்களுக்கு வேறு படம் பார்க்கவில்லை அதன் பாதிப்பு அப்படி. மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டப் படம் முடிவில் போது சினிமாவில் வரும் பாத்திரங்களின் ஒரிஜினல் ஆட்களின் புகைப்படத்தையும் சேர்த்து போடுகிறார்கள். முதலில் காட்சி கோழியை வெட்டி சமைப்ப…
-
- 12 replies
- 1.8k views
-
-
Print | E-mail : Email this Article சனிக்கிழமை, 6, பிப்ரவரி 2010 (15:4 IST) நடிகை கனகா எங்கே? தந்தை உருக்கமான கடிதம் கனவரை காணவில்லை என்று புகார் கூறிய நடிகை கனகாவையும் இப்போது காணவில்லை.கனகாவின் தந்தை எழுதி வைத்துள்ள கடிதம் மூலமாகவே கனகா மாயமானது தெரியவந்துள்ளது. நடிகை தேவிகாவின் மகள் கனகா, கரகாட்டக்காரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து `அதிசய பிறவி', `கும்பக்கரை தங்கய்யா', `கட்டப் பஞ்சாயத்து', `பெரிய வீட்டு பண்ணைக்காரன்' உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் வாய்ப்பு இல்லாமல் போனதால் நாயகி என்பதை தவிர்த்து கேரக்டர் ரோலில் நடித்தார். அதன்பின்பு அவரைப்பற்றிய செய்தியே இல்லை. அவருக்கு திருமணம் நடைபெற்றதா எங்கே இரு…
-
- 3 replies
- 1.8k views
-
-
பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்... பத்திரிக்கைகளில் எட்டாம் பக்கச் செய்தியாக ’பிரசாந்த் திருமணம் செல்லாது - கோர்ட் அறிவிப்பு’ சென்ற வாரம் வெளியானது. பல வருடப் போராட்டம், அவமானத்திற்குப் பின் ஒருவழியாக பிரசாந்த் நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். 2005ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துகளுடன் நடந்த பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம், இப்படி ஒரு கொடுமையான முடிவைச் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. திருமணம் முடிந்து ஹனிமூன் எங்கு போவது என்பதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூர் தான் போக வேண்டும் என்று அடம்பிடித்த கிரகலட்சுமி, அங்கு சென்ற பின் போனில் யாருடனோ மணிக்க…
-
- 2 replies
- 1.8k views
-
-
“UNCLE TOM”S CABIN” : கறுப்பு அடிமைகளின் கதை - கேஷாயினி அமெரிக்காவின் அழியாத வடுவாக சுட்டப்படுவது ஒரு காலகட்டத்தில் அத்தேசத்தில் நிலவிய “அடிமை முறை”. அடிமைகளாக கறுப்பினத்தவர்களை விற்பதும் கசையடிகள் கொடுப்பதும், அடிமைகளிடம் அனுதாபங்காட்டுபவர்களுக்கு கடுந்தண்டனைகள் விதிப்பதும், ஏன் வெள்ளையர்களுக்கெதிரான கறுப்பினத்தவர்களின் சாட்சி கூட எடுபடாதவொரு நிலை ஒரு காலத்தில் காணப்பட்டது. தங்களுக்குள்ள உணர்ச்சிகள் கறுப்பினத்தவர்களுக்கு இருக்கக்கூடாதென்று கூட கருதினார்கள். அடிமைகளை தொடுவது கெடுதல் என்று நினைத்திருந்தார்கள். “சிலர் அதிகாரம் பண்ணவும் சிலர் சேவை செய்யவும் பிறந்தவர்கள்” என்ற எண்ணம் மேலோங்கி காணப்பட்டது. அன்று இவ்வாறானதொரு நிற அடிமைத்தனம் இடம்பெற்ற காலப்பகுதி…
-
- 0 replies
- 1.8k views
-
-
என் நண்பர் ஒருவர் சொன்னதால், ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் இல் பார்த்தேன். தமிழ் மொழியில் பார்க்க முடியும். மலையாளிகளால் எப்படி இப்படி ஒரு சின்ன கதையை ஆழமாக சொல்ல முடிகின்றது எனும் வியப்பை மீண்டும் ஏற்படுத்திய படம். படத்தின் இறுதி வரைக்கும் உங்களால் முடிவை / யார் அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஏன் என்பதையும் ஊகிக்கவே முடியாது. ஒரு ஆழமான சிறுகதை ஒன்றை வாசிக்க விரும்புகின்றவர்கள் இப் படத்தை பார்க்கலாம். கீழே இப்படத்திற்கான விமர்சனம். இவ் விமர்சனத்தை நண்பர் காட்டியதால் தான் இப் படத்தை பார்க்க தெரிவு செய்தேன். --------------------------------------------------------------- இரட்டை இரட்டையர்களில் ஒருவன் காமுகன், குடிகாரன்,…
-
- 14 replies
- 1.8k views
-
-
தேசத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைச்சதுகள்.. எல்லாம்.. இப்படிப் பேச... தேசத்துக்காக வாழ்ந்தவர்கள்... புதைகுழிகளில்.. நீலாம்பரி வரதராஜப்பெருமாளுக்கு சொர்க்கத் தீவாகத் தெரிவது.. அநேக தமிழர்களுக்கு கொலைக்களமாகத் தெரிகிறது. இதனை மலையாள (கேரள) உலகம் அறிந்து கொள்வதும் அவசியம்.
-
- 11 replies
- 1.8k views
-
-
தமிழ் சினிமாவின் பரிணாமம்: வளர்ச்சியா? வீழ்ச்சியா? முதல் பகுதி பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கான எதிர்வினை என்பது என்னவாய் இருக்கக்கூடும்? கேள்விகளை கேட்பவர்களின் நடத்தையின் மீதோ, ஒழுக்கத்தின் மீதோ ஒரு சில எதிர் கேள்விகளை எழுப்பி, எதிராளியின் அறநிலையின் மீது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம், உன்னுடைய கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? என்று தப்பித்துக் கொள்ளல், இல்லையெனில் கேள்வியே தவறு என்று எதிர் வினையாடல், அதுவும் இல்லையெனில், இதுதான் சமூகத்தின் வழக்கம் இப்படி இருப்பதால்தான் சம்ச்சீர்மை இருக்கிறது என்று பொய்யாய் ஒரு பதிலைச் சொல்லி ஒப்பேற்றுதல். பெரும்பாலான சமயங்களில் இதுவே எதிர் வினைகளாய் இருந்திருக்கின்றன. தன்னை ஒரு முறை மீண்டும் சுய பரிசோதனை செ…
-
- 0 replies
- 1.8k views
-
-
************************************************************************************************************ *** இந்த திரைப்படம் கனடாவில் கார்த்திகை 6, 7 திகதிகளில் தாயக மாணவர்கள் *** **** கல்வி மேம்பாட்டுக்காக திரையிடப்படுகின்றது. *** ***** Dates: November 06 & 07 and 13 &14 (Sat and Sun) *** ****** Time: 1:30 PM Place: Woodside Cinema. Tickets: $10 *** ************************************************************************************************************* இந்தப் ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
7 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன்; இசை: டி. இமான்; இயக்கம்: சிவா. தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை சென்டிமென்டிற்கு அழிவேயில்லை என்ற நம்பிக்கையில் இந்தத் தீபாவளிக்கு களமிறங்கியிருக்கிறது ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த". தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்) பல ஊருக்கு பிரெசிடென்ட். அவருடைய தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). காளையனுக்கு தங்கையின் மீது அதீத பாசம். ஒரு கட்டத்தில் தங்கைக…
-
- 12 replies
- 1.8k views
-
-
தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி கோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நமீதாவுக்கு ஒரு புது பட்டப்பெயரைச் சூட்டியுள்ளனர், இளம் ரசிகர்கள். அதுவும் மாணவர்கள். அது... 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி'! ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நமீதா. அப்போதுதான் இந்தப் பட்டப் பெயரைச் சூட்டி தங்கள் 'பக்தி'யை வெளிப்படுத்தினர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள். சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது. இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். வி…
-
- 0 replies
- 1.8k views
-
-
2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகர்-நடிகையாக ஜெயம்ரவி-ஜோதிகா 2003-ம் ஆண்டு விருது விக்ரம் - லைலா தமிழ் திரைப்பட தொழிலுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. 2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த நடிகர்கள்- நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகி யோர்களின் பெயர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். 2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விவரம்:- ஆட்டோ கிராப் சிறந்த படம்-முதல் பரிசு- ஆட்டோகிராப். சிறந்த படம்-இரண்டாம் பரிசு-விஷ்வ துளசி. …
-
- 1 reply
- 1.8k views
-
-
சிறந்த குணசித்திர வில்லன் நடிகரும் நாடக நடிகருமான திரு.ஆர்.எஸ்.மனோகர் காலமானார். இவர் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்தும் அதன் பின்னரும் புகழ் பெற்ற வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் விளங்கினார். இலங்கையின் இராவணன் வரலாற்றை இலங்கேஸ்வரன் எனும் நாடகத்தால் சிறப்பாக்கி காட்டியவர். நாடகத்தறையில் பல சாதனைகள் நிகழ்த்தி இதுவரை 8000 நாடகங்களுக்கு மேல் அரங்கேற்றியவர். அன்னாரின் இழப்பு கலைத்துறைக்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எமது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.
-
- 2 replies
- 1.8k views
-
-
லஷ்மி மூவி மேக்கர்சின் ‘சிலம்பாட்டம்’ ஷ¨ட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. வரும் 3-ம் தேதி கொழும்பில் நடக்கும் படப்பிடிப்பில், சிலம்பரசனுடன் சினேகா குழுவினரின் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. ஓடும் ரயிலில் இக்காட்சியைப் படமாக்க இலங்கை அரசிடம் அனுமதி வாங்கியுள்ளனர். தவிர, சிம்பு மோதும் சண்டைக் காட்சியும் ரயிலில் படமாகிறது. அங்கு ஒரு வாரம் ஷ¨ட்டிங் நடக்கிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=300
-
- 2 replies
- 1.8k views
-
-
தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய, ஆடவரி மாட்லகு அர்த்தலே வேருலே படத்தின் ரீ-மேக், யாரடி நீ மோகினி. அப்பா ரகுவரன். மகன் தனுஷ். தறுதலையாக திரியும் மகனை திட்டுகிறார் ரகுவரன். அவன் பொறுப்பானவனாக மாறி, இனி நீ வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறும்போது, கல்லால் அடிக்கிறார். மகனுக்கு காதல் தோல்வி ஏற்படும்போது, சேர்ந்து தண்ணி அடித்து சோகத்தை பகிர்ந்து கொள்கிறார். கூடவே அடிகட் ஆகாதே என அட்சைஸும் செய்கிறார். எந்த விதிமுறைக்குள்ளும் அடங்க மறுக்கும் இந்த உறவு சிறிய புன்னகையுடன் நம்மை ஈர்க்கிறது. ரகுவரனின் வசன உச்சரிப்பு சர்க்கஸ் சிங்கம் மாதிரி. ரகுவரனின் சாட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
திரைப்படம் என்பது பொதுவாக ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே நோக்கப்படினும், நன்றாகச் செதுக்கப்பட்ட படைப்புக்கள் பார்த்து முடித்தபோது அப்படத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க முடியாததாய் ஆக்கும். நந்தலாலா திரைப்படம் அவ்வாறாக அமைந்துள்ள ஒரு படம் என்பது எனது கருத்து. அண்மையில் கமலின் "மன்மதன் அம்பு" திரைப்படத்தை அதன் பாடல் இசை மற்றும் வரிகள் சார்ந்தும் கமல் என்ற தனித்துவம் சார்ந்தும் பலத்த எதிர்பார்ப்புடன் பார்க்க வெளிக்கிட்டு, அவஸ்த்தைப் பட்டபடி பார்த்து படம் முடியும் தறுவாயில் ஒன்றில் கமல் சாகவேண்டும் அல்லது நான் சாகவேண்டும் என்ற அளவிற்கு வெறுப்பாகியிருந்த நிலையில் இனிமேல் தமிழ் படம் பார்ப்பதை விட்டுவிடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் மிஷ்க்கின் நந்தலாலா மூலம் எனது தமிழ்பட வெறுப்ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஃபிலிம்ஃபேர் விருது! திங்கள், 25 பிப்ரவரி 2008( 13:13 IST ) இந்திப் படங்களுக்கான 53வது ஃபிலிம்ஃபேர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போல் அமீரக்னின் தாரே ஜமீன் பர் விருதுகளைக் குவித்துள்ளது. சக் தே இந்தியாவில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது பெறுபவர் ஜப் வி மெட் படத்தில் நடித்த கரீனா கபூர். சிறந்த படம் தாரே ஜமீன் பர். இதனை இயக்கிய அமீர் கான் சிறந்த இயக்குனருக்கான விருது பெறுகிறார். இதில் நடித்த சிறுவன் டர்ஷிர் சபாரிக்கு சிறந்த நடிகருக்கான விமர்சகர் விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருதை தபுவும் (சீனி கம்), சிறந்த படத்துக்கான விமர்சகர் விர…
-
- 6 replies
- 1.8k views
-
-
நடிகர்கள்: மகேஷ், அஞ்சலி, ஏ வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன் வசனம்: ஜெயமோகன் இசை: விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ் பின்னணி இசை: விஜய் ஆன்டனி மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு எழுத்து - இயக்கம்: ஜி வசந்தபாலன் தயாரிப்பு: கே கருணாமூர்த்தி - சி அருண்பாண்டியன் தமிழ் சினிமாவில் அபூர்வமாக சில குறிஞ்சிகள் மலர்வதுண்டு. வசந்த பாலனின் அங்காடித் தெரு அப்படியொரு குறிஞ்சி!. இது பண்ணப்பட்ட கதையல்ல... விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம். அத்தனையும் நிஜம்!. பத்து மாடி, பதினைந்து மாடி என உயரமான கட்டடங்களில் பரபரப்பாக நடக்கும் பளபள வர்த்தகங்களுக்குப் பின்னே அதன் முதலாளிகள் செய்யும் சில்லறைத்தனங்களும், மனிதன…
-
- 9 replies
- 1.8k views
-
-
சைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள் 2020 - சிவபாலன் இளங்கோவன் · கட்டுரை சமீபத்தில் சினிமா உதவி இயக்குனர் ஒருவர் அவர் எழுதிவைத்திருக்கும் கதையில் அவருக்கிருக்கும் சில சந்தேகங்களின் நிமித்தம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ஒடிசலான தேகம், நெடுநெடுவென உயரம், கசங்கிய சட்டை, ஹவாய் செப்பல், பொறியியல் படிப்பு என உதவி இயக்குனர்களுக்கான அத்தனை இலக்கணங்களும் அவரிடம் இருந்தது. இதுதான் அவருக்கு முதல் படம். தயாரிப்பாளரை அணுகியிருக்கிறார். கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு வர சொல்லியிருக்கிறார். ‘பவுண்டட் ஸ்க்ரிப்ட்’ என சொல்லக்கூடிய தடிமனான புத்தகம் ஒன்று அவர் கையில் இருந்தது. “சார், நம்ம கதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்சனையும் சேர்த்…
-
- 6 replies
- 1.8k views
-
-
விஷால் எப்போதெல்லாம் தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கலில் இருக்கின்றாரோ அப்போதெல்லாம் புதிய முயற்சிகளை கையில் எடுப்பார். யாரும் எதிர்ப்பாராத கூட்டணியை அமைத்து ஹிட் கொடுப்பார். அப்படித்தான் அவன் இவன், பாண்டியநாடு படங்கள் அமைந்தது, அதேபோல் தற்போது யாரும் எதிர்ப்பாராத விதமாக மிஷ்கினுடன் கூட்டணி அமைத்து துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவர, துப்பறிவாளன் மூலம் விஷால் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினாரா? பார்ப்போம். கதைக்களம் விஷால் ஒரு தனியார் துப்பறிவாளர். போலிஸே முடிக்க முடியாத வழக்குகளை விஷால் மிக எளிதாக முடிக்கின்றார். அப்படியிருக்கு ஒரு கஷ்டமான வழக்கை தேடி அலைகின்றார். அந்த நேரத்தில் ஒரு பள்ளி மா…
-
- 6 replies
- 1.8k views
-
-
தொழில் போட்டிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் ‘வாரிசு’ வாய்க்கப்பெற்றால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (பிரகாஷ்ராஜ்), ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (சரத்குமார்) இடையே தொழில் போட்டி வலுத்து வருகிறது. இதனிடையே, தொழிலதிபர் ராஜேந்திரன் தனக்குப் பிறகு தனது தொழிலை ஏற்று நடத்த தனது மகன்களில் திறமையான ஒருவரை அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் விஜய் ராஜேந்திரன் (விஜய்) தனது பெற்றொரின் 60ஆம் கல்யாணத்திற்காக மீண்டும் வீட்டின் படியேற, அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறுதியில் ராஜேந்திரன் தனது அடுத்த தொழில் வாரிசை கண்டறிந்தாரா…
-
- 14 replies
- 1.8k views
-
-
டைரக்டர் பாலா தொடர்பாக அடிபடும் கதை ஒன்றால் மிரண்டு போயிருக்கிறது, கோடம்பாக்கம். பொதுவாகவே தனது படங்களில் மிரள வைக்கும் டாபிக்குகளில் கதை சொல்லும் பாலாவே மிரண்டு போன கதை இது. பாலாவையே மிரள வைக்க ஒருவர் பிறந்து வந்திருக்கிறாரா? பிறந்து வரலிங்க.. (தூக்கத்திலிருந்து) எழுந்து வந்திருக்கிறார்! வேறு யாரும் இல்லிங்க.. நம்ம நவரச நாயகன் கார்த்திக்! விவகாரம் என்ன? பாலாவின் அடுத்த படத்தில் ஹீரோ சசிகுமார். அண்ணன் தம்பி கதை அது. அண்ணன் கேரக்டரில் சசி. தம்பிக்கும் பவர்ஃபுல் ரோல். இந்த தம்பி ரோலில் விக்ரம் பிரபுவை நடிக்க வைப்பதுதான் முதலில் சமீபத்தில் விக்ரம் பிரபுவின் போட்டோவையும், சசிகுமார் போட்டோவையும் அருகருகில் வைத்து பார்த்த பாலா, “ஏலே.. இவன் சசிக்கு அண்ணன் மாதிரியில்ல இருக்கா…
-
- 4 replies
- 1.8k views
-
-
தற்போது இணையத்தை கலக்கி வருகிறது சிம்பு, நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்து இருக்கும் புகைப்படம் தான். "பிரிந்த காதலர்கள் இணைந்து விட்டார்களா, பிரபுதேவாவை வெறுப்பு ஏற்றவா?" என்று இணையத்தில் ஆளாளுக்கு செய்தி உலவி வருகிறது. 'வல்லவன்' படத்தில் இருவரிடையே ஏற்பட்ட காதல், அப்படம் வெளிவருவதற்குள் முற்றுப் பெற்றது. அதன் பின்னர், பிரபுதேவா இயக்கத்தில் 'வில்லு' படத்தில் இணைந்தார் நயன். அங்கு அவருடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலும் முறிந்து போனது. இந்நிலையில், நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு, நயன்தாரா இருவரும் கலந்து கொண்டார்கள். பல்வேறு நடிகர்கள், நடிகைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நயன்தாராவும், சிம்புவும் திடீரென சந்தித்து பேசிக் க…
-
- 0 replies
- 1.8k views
-
-
அடுத்த சூப்பர் ஸ்டார் “கருத்துக்கணிப்பில்” வென்றது விஜய் இல்லையாமே, அஜீத்தாமே!! சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு வார பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உண்மையில் அஜீத் தான் வெற்றி பெற்றாராம். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வாரப் பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மக்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. கருத்துக்கணிப்பின் முடிவில் இளையதளபதி விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜீத். கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர் அஜீத்துக்கு தான் வாக்களித்தார்களாம். குறைவானவர்களே விஜய்க்கு வாக்களித்தார்களாம். விஜ…
-
- 2 replies
- 1.8k views
-