வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஒரு தலை ராகம் .......................... ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்... 1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்... கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்... அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு... கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ. இந்தத் திரைப்படம் வெளி வந்த உ…
-
-
- 4 replies
- 357 views
- 1 follower
-
-
"என் வலியை அழுது காட்ட விரும்பவில்லை!" சமஸ் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள நெரிசல் மிக்க காமராஜர் தெருவில், வரிசையாக விரிக்கப்பட்டு இருக்கும் மீன் கடைகளை ஒட்டி இருக்கிறது, 'பாலுமகேந்திரா சினிமா பட்டறை.’ ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதைத் தாண்டி, தமிழ் சினிமாவுக்கு பாலு மகேந்திராவின் முக்கியமான பங்களிப்பு இது. ''ஒரு வருஷத்துக்கு 12 மாணவர்கள். இது மூன்றாவது அணி. தமிழ்தான் பயிற்றுமொழி. வெளி மாநில மாணவர்களும் புரிந்துகொள்கிறார்கள்'' என்கிறார். வீட்டுக் கூடம்போல் இருக்கிறது வகுப்பறை. கீழே அமர்ந்துதான் படிக்கிறார்கள். மாணவர்களோடு மாணவராக சிறுகதைகள், கவிதைகள் படிக்கிறார், படங்கள் பார்க்கிறார், விவாதிக்கிறார். வாத்தியார் வேலையின் சந்தோஷம் முகத்தில் தெறிக்கிறத…
-
- 4 replies
- 1.5k views
-
-
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.! சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் தயக்கம் காட்டக்கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விவேக். இன்று காலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்…
-
- 4 replies
- 797 views
-
-
’யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை’ ஸ்ருதிஹாசன் ‘சங்கமித்ரா’ திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து ‘சபாஷ்நாயுடு’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஹிந்தியில் நடித்துள்ள ‘பெஹன் ஹோகி தேரி’ திரைப்படம் 9ஆம் திகதி வெளியாகிறது. இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், “என் உடம்பு, என் முகம், என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. சமூக வலைத்தளங்களில் யார் என்னைப்பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில…
-
- 4 replies
- 594 views
-
-
அமரன் : விமர்சனம்! christopherNov 01, 2024 19:28PM மேஜர் முகுந்த் ஆக மிளிர்கிறாரா எஸ்கே?! தீபாவளி பண்டிகையையொட்டி தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ரசிகர்களால் முதன்மையாக நோக்கப்படும் படம் ‘அமரன்’. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடி மட்டுமல்லாமல், ‘ரங்கூன்’ தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இரண்டாவது படம் இது என்பது அதற்கான காரணங்களில் ஒன்று. அதனைக் காட்டிலும் பெரியது, காஷ்மீரில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பொதுமக்களைக் காக்கும் முயற்சியின்போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை என்பது. தமிழில் ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘ரத்த திலகம்’ காலம் முதல் அதற்குச் சி…
-
-
- 4 replies
- 777 views
-
-
[size=3][size=4]சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன், என்று நடிகை .தேவி கூறினார்.[/size][/size] [size=3][size=4]14 ஆண்டுகளுக்கு முன் இந்திப் படத் தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை நாயகியாக்கும் முயற்சியிலும் உள்ளார் ஸ்ரீதேவி.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் 14 வருடங்களுக்குப்பின் அவர், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் 'இங்கிலீஷ்-விங்கிலீஷ்' என்ற படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்து இருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]இந்த படத்தின் `டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை பி.வி.ஆர். தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.…
-
- 4 replies
- 646 views
-
-
சென்னையில் 15 இடங்களில் வருது அம்மா ஏ.சி தியேட்டர்கள்: ரூ.25க்கு டிக்கெட். சென்னை: சென்னையில் முதற்கட்டமாக 15 இடங்களில் அம்மா தியேட்டர்கள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு குளு குளு வசதியுடன் தியேட்டர்கள் கட்டப்பட உள்ளன. அம்மா தியேட்டர்களில் ரூ.25 க்கு டிக்கெட் விற்பனை செய்யப் பட உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள இடங்களில் ‘அம்மா திரையரங்கம்' அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். பயன்பாடு இல்லாத மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த திரையரங்குகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கண்ணைக் கட்டும் கட்டணங்கள். பெரும்பாலான தி…
-
- 4 replies
- 770 views
-
-
நடிகையர் திலகம் - திரை விமர்சனம் நடிகையர் திலகம் - திரை விமர்சனம் சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது. அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது. என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம் பக்கம் நாமும் போகலாம்.. கதைக்களம் ஒரு காலகட்டத்தில் சினிமா வட்டாரமே கர்ஜித்த பெயர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகமாக நடிகை கீர்த்தி சுரேஷ். ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்…
-
- 4 replies
- 3.5k views
-
-
திரையுலகில் பொங்கும் உற்சாகத்துடன் தொடங்கிய 2014 எஸ். கோபாலன் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ் வணிக சினிமாவின் இருபெரும் நாயகர்களாக நிலைபெற்றுவிட்ட நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகின. கடந்த 20 ஆண்டுகளில் வெற்றி தோல்விகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் உழைத்து முன்னேறி இன்று வணிக சினிமா சூழலை தீர்மானிக்கும் ஆளுமைகளாக உயர்ந்துவிட்ட இவ்விருவரின் படம் வெளியானதால் மற்றவர்கள் பொங்கல் விடுமுறைக்குப் படத்தை வெளியிட்டுப் பணம் பார்க்கும் யோசனையைக் கைவிட்டனர். தர அளவுகோல்களின்படி ஜில்லா, வீரம் ஆகிய இரு படங்களுமே சுமாரான படங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விஜய், அஜித் ஆகியோரின் தீவிர ரசிகர்களிடமிருந்துகூட தங்கள் நடிகரின் படம் அத்தனை மோசமில்லை என்ற…
-
- 4 replies
- 3.9k views
-
-
‘பத்மஸ்ரீ விருது’ கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் விவேக். ஆனால், அதைவிட Vadiveluபெரிய சந்தோஷத்திலிருக்கிறார் வடிவேலு. ‘யாருக்கும் கிடைக்காத பெரும் பேறுய்யா இது, பெரும் பேறுய்யா…’ என்று வாய்விட்டு சந்தோஷப்படுகிறாராம். ஆனாலும் இந்த மகிழ்ச்சி, கொள்ளையடிக்க போன இடத்திலே கோஹினூர் வைரம் கிடைச்ச மாதிரிதான்! ஊருக்கெல்லாம் கேட்கிற மாதிரி ஆர்ப்பாட்டமாகவா கொண்டாட முடியும்? தமிழகத்தை சேர்ந்த இளம் இயக்குனரும், இனப்போராளியுமான ஒருவர், புலிகளின் தலைவரான ‘தம்பியுடன்’ பேசிக் கொண்டிருந்தாராம். (ஃபோனிலா? நேரிலா?) அப்போது தமிழ் வளர்ச்சி குறித்து பேச்சு வந்ததாம். எனக்கு தமிழ் அழிந்துவிடும் என்ற கவலையில்லை என்று கூறிய தம்பி, அந்த நம்பிக்கையை தந்திருப்பது இரண்டு பேர் என்றாராம். ‘தமிழ…
-
- 4 replies
- 3.5k views
-
-
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து! சென்னை: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ரஜினிகாந்தின் புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது.நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உ…
-
-
- 4 replies
- 305 views
-
-
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார் - சமூக வலைதளங்களில் இரங்கல் சென்னை ’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜுடன் சேர்ந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ என்ற வசனம் மிகவும் பிரபலம். …
-
- 4 replies
- 322 views
-
-
ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள் Getty Images தலைமுறைகள் கடந்தும் ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்கிறார் "பலரும் அற்புதங்களை நம்புவதில்லை, ஆனால் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் மிகப்பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது ஓர் அற்புதம் தான்." கடந்த 2013ஆம் ஆண்டு என்டிடிவி ஊடக விருது (Greatest Global Living Indian Legends) வழங்கும் விழாவில், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கிய பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. கடந்த 1975ஆம் ஆண்டில், 'அபூர்வ ராகங்கள்' எனும் திரைப்பட…
-
- 4 replies
- 372 views
-
-
தனுஷை பாலிவுட் கொண்டாடுவதன் இரகசியம் தெரியுமா? தனுஷின் முதல் ஹிந்தி படமான ராஞ்ஹனாவைப் பார்த்த வட இந்திய மக்கள் அவரின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகின்றனராம். தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்ஹனா திரைப்படம் கடந்த 21ம் திகதி வெளியானது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பில் அசந்துவிட்டனர். அடடா என்ன அருமையாக நடித்திருக்கிறார், படத்தை தனுஷுக்காக பார்க்கலாம் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். என்னடா, நம்ம தனுஷை நமக்கு தெரியாதா, இவர்கள் என்ன இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? காரணம் இருக்கிறது. பாலிவுட்டில் இளம் கதாநாயகர்கள் தொடங்கி வயதாகியும் கதாநாயகனாகவே நடிப்பவர்கள் வரை அனைவரும் 6 பேக்கை காட்டுவதில் தான் குறியாக…
-
- 4 replies
- 1.1k views
-
-
வடிவேலுவின் காமெடி கேரியரில் சிகரம் என்றால் அது வின்னர் கைப்புள்ளயும், தலைநகரம் நாய் சேகரும்தான். நாய் சேகர் தொட்டாபெட்டா என்றால் கைப்புள்ள எவரெஸ்ட். இந்த இரண்டு சிகரங்களுக்கு காரணமானவர்கள் தலையிலேயே கரகம் ஆடியிருக்கிறார் வடிவேலு. வின்னர் படத்தை இயக்கிய சுந்தர் சி.யுடன் வடிவேலுவுக்கு ஈ.கோ மோதல். தலைநகரத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதேபோல் தலைநகரம் படத்தை இய்ககிய சுராஜூடன் படிக்காதவன் படத்தில் மோதல். நானா, நீயா மோதலில் புயல் கோபித்துக் கொண்டு சென்னை புறப்பட்டது. இந்த மோதலை படத்தின் நாயகன் கண்டு கொள்ளவில்லை. சென்னை வந்த வடிவேலு உடனடியாக அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார். தயாரிப்பாளர்கள் சங்கம், புகார் என்று அலட்டிக்கொள்ளாமல் வடிவேலுக்கு பதில்…
-
- 4 replies
- 1.3k views
-
-
கமல் ஹாசனுக்குக் கொடுக்கப்பட்ட நம்மவர் என்கிற பெயர், வெறும் சாதாரண சொல்லோ பெயரோ அல்ல. அது ஓர் உணர்வு. பொதுவாக சினிமாவில் 'ஹீரோ' என்பவருக்கு ஓர் அங்கீகாரமும், பிம்பமும் உண்டு. படத்துடைய கதாநாயகனுக்கு முக்கியமான குணாதிசியமாகக் கருதப்படுவது, 'தப்பை தட்டிக் கேட்கும் ஒருவர்'. இதுதான் கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் உச்சக்கட்ட அங்கீகாரம். ஆனால் அதைத் தகர்தெறிந்து நம்மவரானவர், கமல். அந்தச் சொல்லுக்கான அர்த்தம் அந்த வார்தையிலே உள்ளது. 'உலக நாயகன்' என்ற பட்டத்தைவிட 'நம்மவர்' என்பதுதான் அவருக்கான சரியான அடையாளம். கதாநாயகனுடைய பிம்பத்தை உடைத்து நம்மில் ஒருவனாக சினிமாவில் இவர் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன! நம்மைத் திரையில் காணும்போது எந்தளவிற்கு ஒரு சந்தோ…
-
- 4 replies
- 1.5k views
-
-
இந்தப் பதிவு இந்த ஆண்டு நான் பார்த்த சிறந்த 10 படங்களைப் பற்றியது. முன்பே சொன்னது போல் இது என் ரசனைக்கு உட்பட்டது மட்டுமே. 10) அட்டக்கத்தி விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் படத்தை யாரும் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் (ஆனாலும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை). சரியான நேரத்தில் சரியான ஆட்களின் கண்களில் பட்டதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்திருக்கிறது. கதை என்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், படம் ஒரு அக்மார்க் என்டர்டெய்ன்மென்ட். சென்னைப் பக்கம் இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனது (காதல்) வாழ்க்கையை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருந்தனர்.அதிலும் ஹீரோ ரியாக்ஷங்கள் பல இடங்களில் அற்புதம். தெத்துப்பல் ஹீரோயினும் அழகாகவே இருந்தார். எழுதி இ…
-
- 4 replies
- 1.9k views
-
-
தமன்னாவுக்கு பிடித்த 10 . தமிழில் அறிமுகமான முதல் படத்தில் வில்லி வேடம். இரண்டாவது படத்தில் நெஞ்சை உருக்கும் பாத்திரம். இப்படி எந்த வேடத்திலும் பாந்தமாக பொருந்துகிற கதாநாயகியாக தமிழுக்கு கிடைத்திருப்பவர் தான் தமன்னா. . பொங்கல் மலருக்கு சிறப்பு பேட்டி என்று அவரிடம் கேட்டதும், அய்யோ! எனக்கு கோர்வையாக பேச வராது. ஒருவரி பதிலாக கேளுங்கள் என்று கொஞ்சும் மொழியில் அவர் கூற, மறுத்து பேச மனமில்லாமல் நாம் கேட்ட கேள்விகளும் அவர் கூறிய பதில்களும். "கல்லூரி' படத்தில் நடித்தீர்களே உங்கள் கல்லூரி அனுபவம்... அய்யோ! நான் கல்லூரிக்கே சென்றதில்லை. தமிழா? தெலுங்கா எதற்கு முன்னுரிமை? நல்ல படம், நல்ல கதை எதுவோ அதற்கே முன்னுரிமை. காதல் படம் பார்த்துவிட்டு த…
-
- 4 replies
- 1.9k views
-
-
சினிமாவில் யாரிடமும் ஆலோசனை கேட்க மாட்டேன் என்றார் நயன்தாரா. இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்கிறேன். யாருடைய ஆலோசனைகளையும் கேட்பதில்லை. என் மானேஜரிடம் மட்டுமே கலந்தாலோசிப்பேன். இந்த கேரக்டர் செய்யவேண்டாம், கிளாமராக நடிக்காதே போன்ற அட்வைஸ்களை மற்றவர்கள் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். அது என் தனிப்பட்ட பிரச்னை. தொடர்ந்து கிளாமருக்குத்தான் முக்கியத்துவமா என்கிறார்கள். அப்படியில்லை. கதையையும், உடன் நடிக்கும் ஹீரோ மற்றும் நிறுவனத்தை பொருத்தது அது. நான் நடிக்க வேண்டும் என்று நினைக்கிற போது நல்ல கேரக்டர்கள் கிடைப்பதில்லை. பெரிய ஹீரோ, பேனரிலிருந்து கிளாமராக நடிக்கச் சொல்லி கேட்கும் போது, அதை எப்படி மறுப்பது?…
-
- 4 replies
- 1.3k views
-
-
பாலு மகேந்திரா சொக்கலிங்க பாகவதர் ஆனபோது வீ.எம்.எஸ். சுபகுணராஜன் எழுபதுகளின் நடுவில், தமிழ் சினிமாவிற்கான புதிய பரிமாணத்தை உருவாக்கிய படைப்பாளிகளின் பட்டியலில் பிரதானமான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. தமிழ் சினிமாவின் இயங்கு தளத்தை விரிவாக்குவதில் அவர்கள் செய்த பங்களிப்பு மகத்தானது. ஆனாலும், அக்காலகட்ட படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமக்கேயான பிரத்யேக முறைமைகளில் அந்தத் தளத்தில் வினையாற்றினர். அந்த வினையாற்றலுக்கான பயிற்சிகளும் அறிதல்களும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையிலும் நேர்ந்தது. பாரதிராஜாவும் மகேந்திரனும் தமிழ் சினிமா உருவாக்க வெளியிலிருந்தே தமக்கான முறைமைகளைக் கற்றனர். ஆனால், முற்றிலும் கல்விப்புலம் சார்ந்த திரைக்கலைக் கல்வியை அதன் பிரதான கேந்திரமா…
-
- 4 replies
- 4.6k views
-
-
தமிழ் சினிமாவில் கலை: பாலுமகேந்திரா என்றொரு ஆளுமை ஆனந்த் அண்ணாமலை கண் முன் திரை இருக்கிறது. ஒலி காதில் கேட்கிறது. ஆக, சினிமா பார்த்துவிட்டோம் என்று நம்பிக்கை கொண்டு மேற்பேச்சுக்கு செல்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது; அவர்களே பெரும்பான்மையாக இருந்துகொண்டும் இருப்பார்கள். மற்றபடி மிகக் குறைந்த எண்ணிக்கையில் என்றாலும் சினிமாவின் அழகியல் புரிந்து ரசனை உணர்வு கொள்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையவர்களில் தமிழ் சினிமாவில் தவிர்த்து விட முடியாத பெயர் பாலுமகேந்திரா. 1946- ல் இலங்கையில் பிறந்த பாலுமகேந்திரா, 1969- ல் வட இந்தியாவின் புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவுத் துறையில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவராக வெளிவந்தார். முதலில் மலையாளப் படமான ‘நெல்லு’…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜீவா, ஆர்யா, சிம்பு, அஜீத், அர்ஜூன், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடித்துள்ள 7 புதிய படங்கள் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றன. மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் இதனால் சந்தோஷ மிகுதியில், இந்த தீபாவளியை தங்களது தலை தீபாவளி போன்று கொண்டாடும் உற்சாகத்தில் உள்ளனர். விஜய், விக்ரம், கமல், ரஜினி உள்பட இன்னும் பல நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாக வில்லை... என்பதால் அவர்களது ரசிக்ரகள் சற்றே வருத்தத்திலும் உள்ளனர். இனி, இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள அந்த 7 படங்களின் பட்டியல் வருமாறு;- தலைமகன் சரத்குமார் கதாநாயகனாக நடித்து, இயக்கியப் படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். தண்ணீர் பிரச்சனைதான் இந்தப் படத்தின் மையக் கரு. படத்தில் சரத்குமார் ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
யாரும் வெளிய வராதீங்க.. கண் கலங்கிய வடிவேலு.. கொரோனாவிற்கு உருக்கமான விழிப்புணர்வு.! சென்னை: கொரோனா பாதிப்பில் பல மக்கள் பாதிக்கபட்டு வருவதையும் அவதிபட்டு வருவதையும் கண்டு மிகவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு வருந்தி ஒரு வீடியோ பதிவை பகிர்ந்து உள்ளார் . இந்த வீடியோவில் வடிவேலு மக்களை கெஞ்சி கேட்டுக்கொண்டார். தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கண் கலங்கி கேட்டு கொண்டுள்ளார். இதில் உலகம் சந்திக்காத பேரழிவை சந்தித்து வருகிறது மருத்துவர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து போராடி வருகிறார்கள் .இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் வெளியே வராதீர்கள். இதனால் யாருக்காக இல்லையோ நமது சங்கதிக்காக இதை செய்யுங்கள். வெளியே வராதீர்கள் என்று க…
-
- 4 replies
- 1.2k views
-
-
சூர்யா நடாத்தும் போட்டியில் வெற்றிபெற்றால் படப்பிடிப்பில் சூர்யாவுடன் ஒருநாள் முழுக்க இருக்கலாம்! [Thursday, 2013-04-18 16:58:16] ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் சிங்கம்-2. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து கெளதம் மேனன், லிங்குசாமி இயக்கும் படங்களில் நடிக்கிறார். முன்னதாக, சிங்கம்-2 படத்திற்கான பப்ளிசிட்டியையும் தொடங்குகிறார் சூர்யா. அது என்ன பப்ளிசிட்டி என்றால்? சிங்கம் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியுமாம். அது எந்த மாதிரியான போட்டி என்பதை விரைவிலேயே தெரிவிக்கிறாராம் சூர்யா. அப்படி நடக்கும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், சூர்யா நடிக்கும் படப்பிடிப்பில் ஒருநாள் முழுக்க அவருடன் இருக…
-
- 4 replies
- 498 views
-
-
ரஜினியின் அடுத்த படம் ராணா... மூன்று வேடங்களில் நடிக்கிறார்! சனிக்கிழமை, ஜனவரி 29, 2011, 10:19[iST] சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர், ராணா. இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தில் கைகோர்க்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் மற்றொரு செய்தி, இந்த ராணா, அனிமேஷன் படம் அல்ல… 100 சதவீத பொழுதுபோக்குகள் நிறைந்த பக்கா ரஜினி படம்! தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளியாகிறது. எந்திரன் தயாரிப்பு வாய்ப்பை நழுவவிட்ட ஈராஸ் என்டர்டெயின்மெண்ட், இந்த முறை பெரும் பொர…
-
- 4 replies
- 2.1k views
-