ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
மண்டபம் முகாமில் பாணுக்குள் பல்லி சாப்பிட்ட 10 அகதிகள் வாந்தி, மயக்கம் 3/14/2008 6:59:06 PM வீரகேசரி இணையம் - மண்டபம் அகதிகள் முகாம் கடையில் பல்லி இருந்த பாணை சாப்பிட்ட குழந்தை உட்பட 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள கடையில் அகதியொருவர் வாங்கிய பாணிலே பல்லி இருந்துள்ளது. அந்த பாணை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே அவர் அதில் பல்லியொன்று இருப்பதை கண்டடுள்ளார். அப்போது அந்த பாணை இரண்டு வயது குழந்தை ஹரினி உட்பட 10 பேர் சாப்பிட்டிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக இவர்கள் அகதிகள் முகாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை ஹரினியின் தாய்…
-
- 0 replies
- 795 views
-
-
சட்ட விரோத ஆயுதங்களின் பயன்பாட்டினை கட்டுபடுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்விடின் குற்றச்செயல்கள் இடம் பெறுவதை தவிர்க்க முடியாது. சட்ட விரோத ஆயுதங்கள் மூலமாக இலங்கையில் எட்டு விநாடிக்கு ஒரு பாராதூரமான குற்றச் செயல் இடம் பெறுகின்றன, என்று தெற்காசியாவிற்குள் சட்ட விரோதமான ஆயுதங்களில் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வலையமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் குற்றச்செயலை செய்வதற்கு மக்கள் தயக்கம் காட்டினர். எனினும் இன்று வலுவான சட்டங்கள் இருக்கின்ற போதிலும் சிறு வயதிலேயே குற்றச் செயல்களை அச்சமின்றி செய்கின்றனர் என்று தெற்காசியாவிற்குள் சட்ட விரோதமான ஆயுதங்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வலையமைப்பின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் பொறுப்பாளர் தொடங்வத்தை தெரிவித்தார். …
-
- 0 replies
- 663 views
-
-
பிரித்தானிய காலனித்துவத்தின் விலகலோடு.. எமது இனத்தின் அடிமை வாழ்வுக்கு காரணமாகவும்.. அதன் பின்னரான அழிவுகளின் போதும் மெளனமாக இருந்து அவற்றை சிங்கள.. இந்திய ஆதிக்க சக்திகளோடு சேர்ந்து நின்று ரசித்த.. வெள்ளை வேட்டி.. வெள்ளாட்டு மந்தைகள்.. தந்தை செல்வாவின் நாமத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை ஆதாரமாக வைத்துக் கொண்டு.. அரசியல் வியாபாரக் கடைவிரிக்க ஊர் திரும்பியுள்ளன..! இவர்கள்.. குறித்து தாயக.. மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் தகுந்த விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்..! Indian embassy, Chandrahasan, Rajadurai, conspicuous at Chelva memorial in Jaffna [TamilNet, Friday, 27 April 2012, 07:10 GMT] Indian embassy officials, SJV Chelvanayakam’s son, SC Chandrahasan…
-
- 11 replies
- 1.1k views
-
-
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 209.91 புள்ளிகள் அதிகரித்து புதிய வரலாற்றை பதிவு செய்திருப்பதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,020.61 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.44 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 15,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314071
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் முன்னர் பணியாற்றிய இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமான பென்ரகனின் உயர்நிலைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இனத்துவக் கற்கைகளுக்கான அனைத்துலக நிலையத்தின், தெற்காசிய சிறுபான்மையினர் உரிமைகள் என்ற திட்டத்தின் பணிப்பாளராகவும், பின்னர் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் கொழும்பு செய்தியாளராகவும் பணியாற்றிய விக்ரம் சிங் என்பவரே பென்ரகனில் உயர் பதவியைப் பெற்றுள்ளார். பென்ரகனில் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு மற்றும் தென்கிழக்காசியா தொடர்பான கொள்கைகளின் அபிவிருத்தி தொடர்பாக மேற்பார்வை செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம…
-
- 0 replies
- 454 views
-
-
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் க…
-
- 46 replies
- 3.5k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் புலனாய்வுப் பிரிவினரால் பரவலாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் தொடர்பாக திங்கட்கிழமை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவிருக்கின்றது. கோதாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலே அவரை திங்கட்கிழமை சம்பந்தன் சந்தித்து உரையாடவிருப்பதாக திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். கடந்த மாத இறுதி வாரத்திலிருந்து கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளியிலிருந்து வெருகல் வரையான பகுதிகளில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை கைது செய்தனர். ஆரம்பத்தில் இக்கைதுகள் தொட…
-
- 0 replies
- 708 views
-
-
யாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா? – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம் யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் விமான நிலையம் ஒன்றை அமைக்கத் தொடங்கி விட்டார். இதன் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முடியும். அவர்கள் ஏற்கனவே நாட்டைப் பிரித்துவிட்டார்களோ என்ற தீவிரமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. …
-
- 23 replies
- 2k views
-
-
2025ஆம் ஆண்டில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடு 2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவால் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச செலவுகள் குறித்து இதில் கணிப்பிடப்பட்டுள்ளதுடன், மொத்த செலவு 4,691 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதியின் கீழ் இயங்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார …
-
- 0 replies
- 117 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு அதற்கான கருமங்கள் தொடர்கின்றன… இரா.சம்பந்தன் October 27, 2019 எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையில் தமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிக்க உள்ளதாக என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும் அதற்கான தபால் மூலமான வாக்களிப்பு 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய முடிவினை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பில் …
-
- 3 replies
- 710 views
-
-
20 Jan, 2025 | 03:23 PM யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் - பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் நானும் அதி…
-
- 0 replies
- 212 views
-
-
‘அப்பே ஸ்ரீ’ கட்சியின் கூட்டம் இன்று – உறுப்பினர்களுக்கு சந்திரிகா அழைப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘அப்பே ஸ்ரீ’ அமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. அத்தனகலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உட்பட தம்முடன் இணைந்து பயணிக்க விரும்பும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறுகின்ற மாநாடு குறித்தும் ஆராயப்படவுள்ளது. அத்துடன் சந்திரிகா தலைமையேற்றுள்ள அப்பே ஸ்ரீ …
-
- 2 replies
- 246 views
-
-
சிறிலங்கா அரசாங்கத் தரப்புத் தகவல்களின்படி வடபோர் அரங்கில் நாளொன்றுக்கு 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்படுவதாகவும் 25 பேர் படுகாயமடைவதாகவும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 644 views
-
-
யாழ்ப்பாணத்தில் இரண்டு யுவதிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர் இன்று சனிக்கிழமை மாலை யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். ஆரியாலை ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் ஜெயசுகந்தினி மற்றும் யாழ். கொட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய தம்பிரத்தினம் சுவர்ணநந்தின ஆகிய இரு யுவதிகளே காணமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்ட்டள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேர தெரிவித்தார். குறித்த இரு யுவதிகளும் நேற்று தொடக்கம் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. காணமற்போன யுவதிகளில் ஒருவரான நாகேந்திரன் ஜெயசுகந்தினி பத்து பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் …
-
- 4 replies
- 1.2k views
-
-
மீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் வர வேண்டும்- கருணா கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையானை, மீண்டும் கொண்டுவரவேண்டுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். பெரியபோரதீவில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்கள் இந்த நாட்டில் நிம்மதியாகவும் பொருளாதாரத்துடனும் பாதுகாப்புடனும் வாழமுடியும். இன்று வட, கிழக்க…
-
- 0 replies
- 302 views
-
-
இந்தியாவின் முன்னர்ள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் அனைவரையும் சோனியா குடும்பம் மன்னித்திருப்பதாக நளினியின் வழக்கறிஞர் துரைசாமி nதிரிவித்துள்ளார். பிரியங்கா-நளினி சந்திப்பு குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் நளினியின் சர்ர்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கேசரி வாரவெளியீட்டிற்கு பிரத்தியோக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளர்ர். அதில் பிரியங்காவால் விடுதலைப்புலிகளை நேரில் சந்தித்து , உங்கள் மீது கோபமோ விரோதமோ வெறுப்போ கிடையாது என்று சொல்ல முடியாது. அதானல் தான் அவர் நளினியைப் பயன்படுத்திக்கொண்டார். நளினியிடம் தன் கருத்துக்களைச் சொன்னதன் மூலம் பிரியங்கா தனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தேடி கொண்டிருப்பதுடன், தன் மனனதில் உள்ள மனித நேயத்தையும்…
-
- 29 replies
- 3.8k views
-
-
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி! யாழ்ப்பாணத் தம்பி:- 09 ஜனவரி 2016 எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. கூட்டு எதிர்கட்சிக்குள்ள குழப்பமாம். அதுவும் உவர் உதயகம்பன்பிலவாலைதானாம். பிறகென்ன? நாட்டிலை ஓரளவு அமைதி திரும்பி சனங்கள் மூச்சு விடுகிற ஒரு சூழல் இப்ப இருக்குதுதானே. அது இவைக்குப் பிடிக்காதே? ஏனெண்டால் அறுப்புக் காலத்திலைதானே எலி ஐஞ்து பெண்சாதியை வைச்சிருக்கலாம். ஆட்டையப் போடலாம். இதாலை பெரிய பாடு படுறினம். அரசாங்கத்தை உவையள் விமர்சிக்கட்டும். ஜனநாயக ரீதியாய் செய்யிற வேலைகளை செய்யட்டும். ஆனால் மகிந்த அரசாட்சி எண்டுற கொடிய சர்வாதிகார, இன ஒடுக்கல், இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த நாள் நல்ல திருநாள். ஆனால் இவையள் அந்த நாளிலை கறுப்புக் கொடி ப…
-
- 0 replies
- 507 views
-
-
ராஜபக்ச தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தேர்தல் மேடைகளில் அடுக்கியிருந்தது தற்போது ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். குறிப்பாக முன்னைய ஆட்சி காலத்தில் ராஜபக்சர்கள் பல்வேறு நிதி மோசடிகளை செய்திருந்ததாகவும், இதனை தாம் ஆட்சிக்கு வந்தால் பகிரங்கப்படுத்துவோம் எனவும் சூளுரைத்திருந்தது தேசிய மக்கள் சக்தி தரப்பு. ஆனால் தற்போது அவர்களின் ஆட்சி நடவடிக்கைகள் தொடர்பில் சமூக மட்டத்தில் எதிர்மறையான கருத்துக்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. அநுர அரசு ராஜபக்சர்களை கைது செய்து நீதி வழங்குவோம் என தெரிவித்தவர்கள். எனினும் தற்போது அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதன் காரணம் யாது என எதிர் தரப்புக்கள் கேள்விகளை முன்வைக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான சர்ச்சைகள…
-
- 0 replies
- 545 views
-
-
http://naathamnews.com/?p=6484 தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘த இன்டிபென்டன்ட்’ ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 17 replies
- 3.1k views
-
-
புலிகளின் தங்கத்தை பீகொக் மாளிகையில் மறைத்து வைத்தாரா மகிந்த? மகிந்த ராஜபக்ச மோசடி செய்து பெற்றுக்கொண்ட பெருந்தொகையிலான தங்கம் பீகொக் மாளிகையில் நீச்சல் தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து அவர் அலரிமாளிகையினை விட்டு வெளியேறியிருந்தார். கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சுகபோக வாழ்க்கை நடாத்திவந்த மகிந்த குடும்பம் அதன் பின்னர் சிறிய வீடு ஒன்றில் வசித்து வருவதாகவும், இதன் காரணமாக பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி லிய…
-
- 5 replies
- 995 views
-
-
ரணில் பதவி விலகியதும் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த? பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கமைய இந்த அரசாங்கம் இன்று (புதன்கிழமை) மாலை அல்லது நாளை காலை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, கம்மன்பில, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்கள் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், பிரதமர் பதவியை துறக்க ரணில் விக்கிரமசிங்க நேற்று முடிவு செய்தார். நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து தன…
-
- 20 replies
- 1.3k views
-
-
மேற்குலகத்துடன் மிகவும் ஆபத்தான விளையாட்டுக்களில் சிறிலங்கா ஈடுபடுகின்றது என்று சிங்களப் பத்தி எழுத்தாளர் சோனாலி சமரசிங்க சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 936 views
-
-
மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த போது கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களையும், வன்னி இறுதி யுத்தத்தில் இருந்து இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மீள்குடியேற்றினேன். இவ்வாறு மனித நேயத்துடன் தமிழ் மக்களுக்கு நான் இனம், மதம், மொழி கடந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில வங்குரோத்து நிலைக் கொண்ட ஆயுதக் குழுக்களில் இருந்து வந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றவர்களும், அவருக்கு துணைபோகும் சிலரும் என்னை தமிழ் மக்களின் விரோதிகளாக காட்ட முயலுகின்றார்கள் என தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,…
-
- 2 replies
- 694 views
- 1 follower
-
-
Posted on : 2008-05-08 தீவிர யுத்தத்துக்குக் கட்டியமே நாடாளுமன்ற இடைநிறுத்தம் இலங்கையின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருக்கின்ற
-
- 0 replies
- 1k views
-
-
[size=4]'கியூபெக்கில் மனிதவுரிமைகளைப் பேணாத கனேடிய அரசு, ஏனைய நாடுகளை குற்றம் சுமத்தக் கூடாது! - சிறிலங்கா எச்சரிக்கை!![/size] [size=4] [/size] [size=4]கியூபெக்கில் மனிதவுரிமைகளைப் பேணாத கனேடிய அரசு, மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பில் ஏனைய நாடுகளை குற்றம் சுமத்தக் கூடாது என சிறிலங்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 20வது அமர்வில் ஆரம்ப உரை நிகழ்த்திய மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறாத நாடுகளின் பட்டியலில் கியூபெக் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பிலும் உள்ளடக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.[/size] [size=4] [/size] [size=4]நவநீதம்பிள்…
-
- 2 replies
- 840 views
-